All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷார்ம்ஜெவின் "ஒன்றுபட்ட இதயமே" - கதை திரி

Status
Not open for further replies.

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!!!

நாங்காவது அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்
கொடுத்த தோழமைக்கு என் மனமார்ந்த நன்றி...

:smiley36::smiley36::smiley36:

சாரி ஃப்ரெண்ட்ஸ்...
சின்ன பதிவேற்றம் தான் கொடுத்திருக்கிறேன்.... படித்து பார்த்து கருத்துக்களை பதிவிடுங்கள்...

சிதைக்காமல் சீர்த்தூக்க சிற்பியின் சிகரங்களை எதிர் நோக்கும்

உங்கள் தோழி

SJ
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!!!

ஐந்தாவது அத்தியாயத்தை திருத்தி பதிவேற்றி உள்ளேன், சாரி ஃபார் தெ இங்கண்வீணியன்ஸ்... படித்து பார்த்து கருத்துக்களை பதிவிடுங்கள்...

சிதைக்காமல் சீர்த்தூக்க சிற்பியின் சிகரங்களை எதிர் நோக்கும்

உங்கள் தோழி

SJ
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley12 "ஒன்றுபட்ட இதயமே -6":smiley12

<வலியுடன் கூடிய பார்வை ஒன்றை அவள் மீது வீசி சென்றான்…

அதிகாலை பொழுது, முகில் மறைத்த சூரியன் எழில் பொங்க அமைதியாய் புலர்ந்தெழ
எல்லோருடைய அமைதியையும் ஆழத்தில் அமிழ்தியவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

அவளுக்கு என்ன! அவள் பெயருக்கு ஏற்ற வாறு மகாராணி தான், யாரும் அவளிடம் வாய்
கொடுத்து மீட்டெடுக்க முடியாது. இது ஒரு புறம் என்றால்; பாசத்தை எல்லாம் ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்தவள், அதற்கு ஏற்றார் போல் கடைக்குட்டியாக போய் விட்டாள்; ஆக மொத்தத்துல அவள அசச்சிக்க அங்க ஒருத்தரும் இல்ல.

இரவிரவாய் தன் குறும்புகளினால் விறுவிறுப்பாய் வைத்து கொண்டவள் போட்ட வெடியில்
வலியுடன் வெளியே வந்தவன், விடிய விடிய விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.

அவர்களுக்கு அசதியினால் விடியா இரவாகியது என்றால், அவனுக்கு தன் மனதின் பாரத்தினால்
விடியா இரவாகி போனது.

தன்னவளை நினைத்து நொடிக்கொரு தரம் தன் நிலையை அறவே வெறுத்தான்; அவனவள்
கண்களில் கண்ட வெறுப்பினால், தன் நலனுக்கே ஆனாலும் தன்னிடம் உதவி கேட்காமல் தானே எல்லாம் செய்வதும், தான் விலகி இருக்கும் இந்த நிலையில் இப்படி ஆனதே எனவும்; தன்னவளை அனைத்து அனைத்துமாக நானிருக்க உனக்கு என்ன பயம் என்று ஆறுதல் கூற இயலாமல் இருக்கும் தன்னையும், கைகள் கட்ட பட்டிருக்கும் தன் நிலையையும் வெறுத்தான்.

எப்போதடா விடியும் என்று காத்திருந்தவன் விடிந்ததும் விடியாததுமாக விறைந்து சென்றான்
தன்னில் உயிராய் நினைப்பவளை பார்க்க வேண்டி.

தலை களைந்து பொருத்த மற்ற உடையணிந்து தவிப்புடன் வெளிவந்த ராமனை கண்டு அவனின்
பதற்றம் உணர்ந்த பாரதியும் "குட்டிமாவ தேடுறியா கண்ணா" என்றார்.

அவனும் கவலையுடன் காணப்படும் அன்னையை பார்த்து "ஹ்ம்ம்" என்னும் விதமாகவும்
இல்லாமல் இல்லை என்னும் விதமாகவும் இல்லாமல் தலையை உருட்டினான்.

அதை ரசித்தவர் "அப்பாடா இப்ப இப்ப தான் இது ராமன்னு தெரிது" என்றவாரே, "குட்டிமா
ட்ராயிங்க் ரூமுலேயே தான் தூங்குறா" என்றார்.

அதற்கு பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு "வர வர இந்த வீட்டு சிங்க குட்டி யாருன்னே
தெரியாம போயிருச்சு" என்று குறும்பு குரலில் இயம்ப, "போடா போடா போக்கிரி" என்றவர் அவனை அடிப்பது போல் பாவனை செய்து கொண்டே "எப்படினாலும் நீ இளைய சிங்க குட்டி தான்" என்று வம்பிழுத்தார். "அம்மா ஆ ஆ ஆ" என்று சினுங்கினான் உடனே என் கண்ணே நீங்க தான் டா என்றவர் அவன் நெற்றியில் முத்தமிட்டார். அதில் கன்னம் குழிய சிரித்தவன் அவர் கடந்து சென்ற பின். தன் அலைபேசியிலிருந்து ஒரு எண்ணிற்கு அழைப்பு விடுத்தவன் அது எடுக்கப்படாததினால் வலி நிறைந்த முகத்துடன் வெறித்தவன் முகம் பிரகாசமாக, ராணி உறங்கிக் கொண்டிருக்கும் அறையை நோக்கித் திரும்பினான்.

"குட்டிமா!!! குட்டிமா!!!"

-----

"கெட் அப்…."

………

"கம் ஆன்…"

…………..

"இட்ஸ் டைம் டூ கோ"

………

"உன்…ன…. வாயால சொன்னா கேட்க மாட்டியே", என்றவன் உலுக்க ஆரம்பித்து விட்டான்.

பின்ன தண்ணிய ஊத்தினா அடித்து பிடித்து எழுந்திருக்கறவங்கள பார்த்திருப்பீங்க; அப்போ இவ எழுந்தரிக்க மாட்டாளானு கேட்காதீங்க, இவளும்
எழுந்தரிப்பாள்!!
ஆனால் தண்ணீர் ஊற்றப்பட்டதற்கு பிறகு எந்த சமாதானத்திற்கும் கட்டுப்படாமல் ஐஸ்கிரீம்
வேண்டும் என்பாள்; ஐஸ்கிரீம் தானே என்று நினைக்க முடியாத படி தொண்டை கட்டி படுத்தாள் என்றாள், கையை பிடிக்க ஒருவர், காலை பிடிக்க ஒருவர், பச்சிளங்குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல் உணவு ஊட்ட ஒருவர் என்று சேவகம் செய்ய வைப்பாள், அன்பு உள்ளங்கள் அன்பினால் தான் செய்கிறார்கள் இல்லை என்பதற்கு இல்லை ஆனால் அதிலும் ஆப்பு என்னவோ அப்புக்குத் தான்; ஏனெனில் தலை கீழே நின்றாலும் கூட வீட்டில் வேறு யாரும் ஐஸ்கிரீம் வாங்கி தரமாட்டர்கள் அது மட்டும் அல்லாமல் ஐஸ்கிரீமின் மேல் பேராவல் கொண்டிருந்தாலும் தானாக சென்று வாங்கி உண்ண மாட்டாள்; உடனே நல்ல பிள்ளைனு நினைக்க வேண்டாம், பிகாஸ் ச்சான்ஸ் கிடைச்சா கிடா வெட்டிருவா. ஐஸ்கிரீமுக்கு ஐஸ்கிரீமும் ஆச்சு திட்டும் அவளுக்கு இல்லை.

அதில ப்யூட்டி என்னன்னா ஏமாந்த சோனகிரி என்னவோ , அந்த அப்பாவி ராமன் தான்.

இதனால் கனகாரியமா நண்டு சிண்டு கூட எல்லாம் கூட்டணி அமைத்து பிரத்தியேக ஆய்வு
மேற்கொண்டு கண்டு பிடித்த அடுத்த வழி, உலுக்கி எழுப்புவது. உலுக்கினாள் உறக்கம் பிடிக்காமல் உலகிற்கு வந்து விடுவாள் விராலி.

அவன் உலுக்கிய உலுக்களில் இரண்டு உலுக்கலுக்கு கூட பொறுக்க முடியாமல் 'உலுக்கியவரை
உலுக்கிற உலுக்குல உடலிலுள்ள எலும்பெல்லாம் உதிர்ந்திடனும்' என்று சூல் கொண்டாள்.

கண் திறந்து சின்னுவை பார்த்தவளின் சூல் தூள் தூள் ஆனது தான் மிச்சம்; "ஹாய் மச்சி நீதானா…
ஹூம் நல்ல கனவு.. கலச்சிட்ட போ என்று சினுங்கியவளை",

"குட்டிமா ஃபிளீஸ் சீக்கிரம் கிளம்பி வா" என்று கெஞ்சல் பார்வை பார்த்தான். எதையும் எளிதில்
சமாளிக்க தெரிந்தவன்; நிலை தடுமாறாதவன், யாரிடமும் கெஞ்சி கொண்டு இருந்தது இல்லை.

'தான் எவ்வளவு குறும்பு பண்ணாலும் தன்னையும் தன் குறும்புகளையும் சகித்துக்
கொள்ளுவதோடு, தனக்கு எந்தவொரு தீங்கும் நொருங்கா வண்ணம் தன்னை சுற்றி அரண் அமைத்து காக்கும் தன் நிகரற்றவன் இவன்' என்று இருமாப்பு கொண்டவள், "ஃபிஃப்டீன் மினிட்ஸ்" என்றாள்.

தலையை சம்மதமாக ஆட்டியவன் அவள் சுத்திகரித்துக் கொண்டு வருவதற்குள் பதினைந்து
யுகங்களை கடந்தவனைப் போல் ஓய்ந்திருந்தான்.

கருப்போ, சிவப்போ; பகையோ, நட்போ; பிறந்த குழந்தை எப்படி எல்லோரையும் ஈர்க்குமோ அது
போல் தன்னை சுற்றி உள்ளவர்களை எல்லாம் தன் வெள்ளை சிரிப்பினால் ஈர்ப்பவள் அதே வெள்ளை சிரிப்புடன் "மச்சி ஸ்டார்ட் தி ஜெர்னி" கூவளுடன் வெளிப்பட்டாள்.

வந்தவள் சின்னுவை கவனிக்கவில்லை; சின்னுவும் குட்டிமாவை கவனிக்கவில்லை. இவர்கள் தான்
மற்றவரை கவனிக்கவில்லையே தவிற தவறாமல் பார்க்க வேண்டிய விதி ஒரு வித குதூகலத்துடன் அவர்களையே கூர்ந்தது.

வந்தால் போதும் என்றிருந்தவனும் அவளின் குரல் கேட்டவுடன் பைக்கை மிதித்து ஸ்டார்ட் செய்ய
குரங்கு ஷேஷ்டைகளை செய்தவாறு தாவி குதித்தமர்ந்தாள் ராமனை இறுக்கி பிடித்தவாறே; அவளின் பிடிமானத்தின் உறுதியை பாதுகாப்பானதாக நிர்ணயித்தவன், வாகனக்கடலில் கலந்து சாலையில் விறைந்து மறைந்தான்.

எவ்வளவுக்கு எவ்வளவு விரைந்து மறைந்தானோ! அவ்வளவுக்கு அவ்வளவு அதிருப்தியுடன்
காணப்பட்டது அவ்விரு கண்களுக்கும்…

---------*********------------************----------

ரெண்டுபடும் ......
 
Last edited:

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!!!

ஐந்தாவது அத்தியாயதிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த தோழிய, தோழர்களுக்கு எனது மன்மார்ந்த நன்றிகள் பல.....
ஆறாவது அத்தியாயத்தை பதிவேற்றியுள்ளேன்... உங்கள் மேலான கருத்துக்களுக்கு திறந்த விழியும், செவியுமாய் காத்திருக்கிறேன்.

சிதைக்காமல் சீர்த்தூக்க சிற்பியின் சிகரங்களை எதிர் நோக்கும்

உங்கள் தோழி

SJ
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley12 "ஒன்றுபட்ட இதயமே -7" :smiley12

<<அவசர அவசரமாக அந்த புடவையை அள்ளி முடிந்தாள், தீர்க்கமான முடிவுடன்>>



உரென்று முகத்தை வைத்துக் கொண்டு, "இப்பத்தான் இணைஞ்சேன் பொறுக்காதே.... உடனே பிரிக்காட்டி தான் என்னவாம் வசந்த்" நொடித்துக் கொண்டே வார்த்தைகளை இயலாமையில் கடித்து துப்பினான். பின்னே தனக்காய் பெரிய கரியங்களை செய்திருக்கும் வசந்த்தையா கடித்து துப்ப முடியும்
பிடித்ததை பறித்துக் கொண்டாள் பரிதவிக்குமே நெஞ்சம் அதுப்போல் பரிதவிக்கும் ராஜனை பார்த்து "ரொம்ப சிலிர்த்துக்காதடா", என்று முதுகில் செல்லமாக தட்டியவன்; "இப்போதைய பிரிவு இடைவிடா இணைவிற்குத்தான் மச்சான்", விஷமமாக கண் சிமிட்டினான்.
அதில் ஒரு நொடி திகைத்தவன், மறுநொடி வெட்கம் கொண்டு முகம் சிவந்தான்.
இதை கண்டு கொண்ட வசந்த் 'காதல் படுத்தும் பாட்ட பாரு சிம்மமாய் சுற்றி திரிந்தவனையும் சுண்டெலி ஆக்கிவிட்டது', என வியந்து போனான்.
'இவங்கள அ.. பேச விட்டா நாள் பூரா பேசிட்டிருப்பாங்க போல, ஹூஹும் இது வேலைக்காகாது நீயே களத்துல குதிச்சுரு', தனக்கு தானே பேசிக்கொண்ட ஃபேஷனிஸ்ட், "இந்தாங்க ஸ்சர் இந்த ரேமண்ட் ஸ்சியூட் மாட்டுங்க" என்றவுடன்,
அதன் அழகில் இப்பொழுதும் மயங்கி அணிய முற்பட்டவன், 'சோள கொள்ள பொம்மையை பாருங்கடின்ன' ஒலி காதுகளில் மோத அதை அணிந்து கொள்ளாமல் வேக வேகமாய் அங்கிருந்த பொருட்களுள் எதையோ தேட ஆரம்பித்தான்.
'கொடுத்தத போடாம இவன் எதை தேடுகிறான்' என்று குழப்பத்துடன் ஒருவனும், "என்னடா!! என்ன தேடுற டா மச்சான்" என்று உதவும் நோக்கத்துடன் ஒருவனும் அவனை பார்த்திருக்க;
குவிந்து கிடந்த பொருட்களுள் வெகு நேரம் தேடி ஒரு பையை எடுத்து அதிலிருந்த பச்சைகற இட்ட பட்டு வேட்டியையும், அதற்கு மேட்சிங்காய் சின்ன கட்டங்கள் கொண்ட பட்டுச் சட்டையையும் அணிந்தான்.
அழகு படுத்துகிறேன் பேர்வழி என்று தன்னிடிடத்திற்கு வரும் எல்லோரையும் படுத்தும் ஒப்பனையாளனை இதற்கு ஏற்றவாறு ஒப்பனையை மாற்றி அமைக்குமாறு படுத்திக்கொண்டிருந்தான் ராஜன்.
விளக்கெண்ணை குடித்தவனைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு ராஜனுக்காய் வரவழைக்க பட்டிருந்த ஒப்பனையாளன் சிகையளங்காரத்தை மேற்கொண்டிருந்தான்.
தேடி தேடி ரேமண்ட் சூட் எடுத்ததென்ன உடுத்தி இருக்குற உடுப்பு என்ன என்னும் விதமாக ஒரு பார்வையை வீசினான் மணமகன் அறைக்குள் நுழைந்த சரவணன் (இவன பத்தி பின்னாடி பார்ப்போம்).
அந்த பார்வையை கிடப்பில் போட்டுவிட்டு, படுத்த முடிந்தவரை எல்லோரையும் படுத்தியும் விட்டு வரவேற்பு மேடையை நோக்கி சென்றான்.
---------******-------******-------******--------
அங்கே அள்ளி முடிந்தவள் சொல்லி முடியா துயரத்துடன் கதவின் தாழ்ப்பாள் விலக்கி வந்தவர் வர வழிவிட. உள்ளே நுழைந்த சரசுவும் அரசியும் அவளின் அழகில் பெருமை பொங்க திருஷ்டி கழித்து சரசு உச்சி முகர்ந்தார் என்றால், அரசி அனைத்து விடுவித்தாள்.
அதன் பின்பே வந்த காரியம் நினைவுக்கு வர வா ராணி மேடைக்கு போவோம் என்று அழைக்க ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றியவளின் மனதின் ஓலம் மனதினுள் உலவ

'ஊனும் உயிரும் நீயே என்று இருந்தேன்
ஊனும் உடைந்து உயிரும் உறைந்து - ஜடமாகி போனேன்
என்னை உன்னில் இணைத்து
உன்னையும் வருத்த துணிந்தே னில்லை
விடைகொடு மன்னவா
என்னுயிர் காக்க வேண்டியவை - செய்து
மீளா உறக்கம் கொள்ள என்னையும் தூண்டினாயே
நீயே நான் என்றிருந்தேன் - நானோ
நீ என்றில்லாமல் போன போதே
மாய்ந்திருப்பேன் கண்ணா
மாளாமல் இருக்க வைத்தவனே
மறைவிற்கு மனம் செலுத்த செய்தவனே
மறு ஜென்மம் என்றிருந்தால்
மனமொடியா மனைவியாக
மணம் பறப்ப மன்றாடும் - ராஜன் விழையா ராணி'
தன் கரத்தில் இருந்த விஷத்தை விழுங்கிய பின் மேடையை நோக்கி வந்தாள்.

--------*****-------******--------****

வலப்புறம் ராஜன் நுழைய, இடப்புறம் ராணி நுழைந்தாள், நுழைந்தவர் கண்கள் கட்டுண்டு நின்றது சிலநொடிகளே,

'இருமனம் சேர்ந்து ஒருமனம் ஆக திருமணம் செய்ய விழைந்த போது விருப்பம் அற்று போனாயே' என வருத்தத்துடன் அவளும்

'ஒருமனம் சிதைந்து மறுமனம் புலர்ந்து இருமனம் ஆகிவிட்டதை - உணராமல் காலம் சென்று உணர்ந்த தன்னவளின் காதலுக்காய் கல்லரையில் புதைத்த காவியத்தை கவிநயத்தோடு' - மீட்டெடுக்க முனைப்புடன் முயன்று கொண்டிருந்தான்- ராஜன்.
பார்வையின் பரிபாஷை புரிபாடாமல் அவரவர், அவரவர் நினைவுகளுடன் இருக்க

திடீரென எழும்பிய வெடி சத்தத்தில் தன்னுணர்வு பெற்றவர்கள்,

அந்நிலையை புறம் தள்ளி ஜோடி சேர்ந்தனர்.

ராணியோ சமூகத்துக்காய், ஆம் தன் குடுப்பம் என்னும் சமூகத்துக்காய்.

ராஜனோ இனியவளுக்காய் ஆம் தன் இனியவளின் அளபறியா இதயத்துக்காய்.

விரும்பி சென்றும் விலகி போகும் தன்னுயிரை மீட்க....

விலகும் இதயத்தை விரும்ப செய்ய என்ன செய்வானோ….

ஒன்றுபடும்.......
 
Last edited:

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!!!

ஆறாவது அத்தியாயதிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த தோழிய, தோழர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.....

காலம் தாழ்ந்து பதிவேற்றி உள்ளேன், மண்ணிக்கவும் தவிர்க்க முடியா சூழல் ....

ஏழாவது அத்தியாயத்தை பதிவேற்றியுள்ளேன்... உங்கள் மேலான கருத்துக்களுக்கு திறந்த விழியும், செவியுமாய் காத்திருக்கிறேன்.

சிதைக்காமல் சீர்த்தூக்க சிற்பியின் சிகரங்களை எதிர் நோக்கும்

உங்கள் தோழி

SJ
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!!!

ஏழாவது அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த தோழியர்களுக்கு (சுகன்யா, கவிதா, மது, செல்வி, சித்ரா, ஸ்டெல்லா, இந்து & தமயேந்தி) எனது மனமார்ந்த நன்றிகள்.....

காலம் தாழ்ந்து பதிவேற்றி உள்ளேன், மண்ணிக்கவும் தவிர்க்க முடியா சூழல் ....

எட்டாவது அத்தியாயத்தை பதிவேற்றியுள்ளேன்... உங்கள் மேலான கருத்துக்களுக்கு கூர்ந்த விழியும், திறந்த செவியுமாய் காத்திருக்கிறேன்.

சிதைக்காமல் சீர்த்தூக்க சிற்பியின் சிகரங்களை எதிர் நோக்கும்

உங்கள் தோழி

SJ



:smiley12 "ஒன்றுபட்ட இதயமே -8" :smiley12


சிலர் முதலாம் ஆண்டு மாணவர்களை வம்பிழுத்துக் கொண்டும், சிலர் என்னானதோ ஏதானதோ என்றும், காத்துக் கொண்டு இருக்க,

கல்லூரிக்குள் நுழைந்தவர்களைப் பார்த்தவர்களுடைய கண் பார்த்தபடியே நின்றுவிட்டது;

வம்பிழுத்தவர்களுக்கு ஆச்சரியத்திலும், பதைத்தவர்களுக்கு பூரிப்பிலும்.

ஆனால் யாருக்காக இந்த பந்தயம் ஏற்கப்பட்டதோ அவளின் தடமும் அங்கு இல்லை, யாரால் பந்தயம் கொடுக்கப் பட்டதோ அவனின் அமர்வும் அங்கு இல்லை;

உள்ளே நுழைந்ததிலிருந்து அக்கல்லூரியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் தன் எண்ணத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்த இருவரும் மகிழ்ச்சி கடலில் குளிக்க வேண்டியது, எனவே இலக்கை அடைய நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை பகிர்ந்து கொள்ள ராமனை நோக்கினாள்!!!

இவளின் முன்னேற்றத்துக்கும், சந்தோஷத்துக்கும் இணையான பின்னடைவிலும், துன்பத்திலும் இருந்தான் ராமன். (எ...ன்...னடா... இது? என்ன ஆச்சு??, “ஹூம் குழந்த அழுவுது வுட்வேர்ட்ஸ் கிரேப் வாட்டர் கொடுங்கோ!! ஏன்னா நீங்க குழந்தையா இருக்கறச்சே அதத்தான் கொடுத்தாங்களாம்).

ஒவ்வொரு முறையும் தான் மேற்கொள்ளும் முயற்சியால் தன் இடம் சேர்ந்தேன் என்று எண்ணும் நேரம்; நொடியில் சுழற்றப்பட்ட காலச் சக்கரத்தில் காலம் என்னும் சுழலில் சிக்கி ஆரம்ப புள்ளியிலே வந்தது போல ஆனது ராமனுக்கு. (ஒரு மனுஷன் எவ்வளவு தான் தாங்குவான், போட்டு படுத்தாதீங்கப்பா அவன).

சேர வேண்டிய இடத்திற்கு சரியாக வந்தும்; தவித்துக் கொண்டு இருந்தவனை கண்டு யோசனையில் ஆழ்ந்தாள் ராணி. (மை டியர்!! செல்...லாக்...குட்டி… ரொம்ப எல்லாம் யோசிக்காதடா!! நீ யோசிச்சிட்டா நான் எப்படி விளையாட: விளையாடி பார்க்க ஆவல் கொண்டது விதி – விதியா? நீயா?(SJ) னு கேட்(க்)கிறது கேட்டுச்சு; ஹ்ம் ஹூ… ஹூஹ்ம் மதர் ப்ராமீஸ் விதி தான்)

யோசனையில் ஆழ்ந்தவளை கலைத்தது விண்ணை முட்டும் அளவுக்கு எதிரொலித்த கரகோஷ ஒலி.

“எவ…அவ..”

“கைத்தட்டலுக்கு!! சொந்தக்காரி??”- என தன் குழப்பங்களில் இருந்து நடப்புக்கு வந்தவள்,

ஆர்பரிப்புக்கு தான் தான் காரணம் என்று அறிந்து வெட்கம் பாதி, கூச்சம் மீதி என உள்ளுக்குள் உருகினாள் - ராணி.

உருகினாலும், ஆடி பெருக்கைப் போல் ஆர்ப்பரிக்கும் மாணவர்களின் உற்சாகத்தை உச்சம் தொட வைக்க ஆரவாரமாய் குதித்தெழுந்து ஸ்டாண்ட் போட்டிருந்த பைக்கின் மீது நின்றாள். (குரங்கு சேட்டை நிறைய செய்வாளோ??)

கண்ணிமைக்கும் பொழுதில் சாகசம் செய்பவளை பார்த்து கரகோஷத்தோடு, குரலொலியும் எழுப்ப

வாகை சூடி வந்தால் வாகை மலர் கொண்டு வீரத்தை பறைசாற்றுபவர்களை உப்பரிக்கை மேல் இருந்து குடிமக்களின் ஆர்பரிப்பையும் ஆரவாரத்தையும் ஆதூரத்துடன் கண்டு மகிழும் ராணிக்கு ஒத்த தேஜஸுடன் காணப்பட்டாள் நம்ப ராணி.

அவளின் சாகசத்திலும், பொலிவிலும் மயங்கிய மாணவ மாணவியர்கள் தம்! தம்!! கைப்பேசியை எடுத்து காட்சிகளை பதிவு செய்ய ஆரம்பித்தனர். (இத ஒன்ன கண்டு பிடிச்சிட்டாய்ங்கய்யா!! ஆனா ஊனா பளிச் பளிச் னு க்ளிக்கிக்குக்கிட்டு).

பைக்கின் மீது நின்றிருந்தவள் வலக் கையை உயர்த்தியும் இடக்கையை இடுப்பு பகுதி அருகில் மடக்கியும் என்று மாறி மாறி ஒரு முறை செய்தவள்; கைகளை மடக்கி ஒற்றை காலை உயர்த்தி க்ரண்ச்சஸ் செய்வது போல் செய்து மறுபடியும் வலது கையை உயர்த்தி வெற்றி பெற்றதற்கான போஸ் கொடுக்க

மாணவர்களின் கைகளில் பளிச்சிட்ட மின்னல் ஒளியில் கனகாரியமாய் க்ளிக்கப் பட்ட நிழல் படத்தை கவனிப்பார் அற்று போனது, விதியின் செயல் அன்றி வேறென்று கூறிடத்தான் முடியுமா?


"நிழல் நிஜம் பேசுமாயின்

நிஜம் பேசும் நரரின்

மெய்யும் பொய் யென தாழ்ந்து

மைய் யும் மேடை கட்டி உயர்ந்து

நிஜம் நிழலுக்குள் வீழ்ந்தது

வாழ்வு விழலுக்குள் மாய்ந்தது!!!"


நிகழ் காலத்தில் இல்லாமல், தன்னுள் தொலைந்தவனை எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவளின் துடிப்பும், துணிவும் அதற்கும் குறையாத குறும்பும் கட்டி இழுக்க, அவளால் பெருமை கொண்டான் ராமன். (பெருமை கொண்டவன் அனைவரின் பொறுமை அற்று போக செய்யப் போவதேனோ?).

ராணி!

அப்!! அப்!!,

சரவணன்!

டவுன்!! டவுன்!!!

ராணி!

அப்!! அப்!!,

சரவணன்!

டவுன்!! டவுன்!!!

இளவட்டங்களின் காட்டு கத்தலில், கூச்சல் வானை பிளக்க

விரைந்து வந்த ராமனுடைய சகாக்களின் சமிக்ஞையை புரிந்து, ராமன் சரவணனை அழைத்து வர சொல்ல எத்தனிக்க; ராமனின் உடல் மொழியை கவனித்த ராணி,

“ஹலோ ஃப்ரெண்ட்ஸ்!!!

'ஆஹா ப்ளான மாத்திட்டாளா??'- ராமன்.

இந்த மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணம் சரவணன்னு சொன்னா அது மிகை இல்லை!” (யம்மாம் பெரிய பொய்ய, இன்னா சுலுவா சொல்லுது பாத்தீங்களா!!).

--------

இடைவெளி விட்டவள், மீண்டும் தொடர்ந்தாள்.

“ஏன்னா அவர் சீனியர்னு கெத்து காட்டாம, எனக்கு இணையா, என் தோழனா, ஒரு நலம் விரும்பியா, இந்த கல்லூரியில இருந்ததுனால தான் இது முடிஞ்சது”. சொன்னவளின் பார்வை நிலை பெற்றிருந்தது சரவணின் வழி தடத்தை பார்த்து, ஏன்னா எனும் போது சின்னுவின் பார்வை ஆவலாய் ராணியின் முகம் பார்த்து, சரவணின் பெயரை சொல்லும் போது கூம்பிப் போனது.

சோ!

எனக்காக இணைந்த உங்கள் கரங்கள் இன்னும் வேகமாக இணையட்டும், நம் சரவணனுக்காய்”.

“விண்வெளியில் இருந்து புறப்படும் இடி முழக்கத்துக்கும் மேலாக இருக்கட்டும்… உங்கள் கரவொலி"

டக் டக்... டக் டக் டக்...,டக் டக்... டக் டக் டக்..., டக் டக்... டக் டக் டக்...,

அறிய நிகழ்வு! அரியணை ஏறியவரும், அறிய முற்படா தீர்வு!!

எளிய முடிவு! ரேகிங்க்கு ஏற்படுத்திய, மட்டற்ற மடிவு”

டக் டக்... டக் டக் டக்..., டக் டக்... டக் டக் டக்..., டக் டக்... டக் டக் டக்..., பிச்சுக்கிச்சு, க்ளாஃப்ஸ்….

“இடி, மழைதுளியும் மண்பூமியும்

இணையும் போது மத்தளம் வாசிக்க வருவது - அது

எப்பேர் பட்டவரையும் திரும்பி பார்க்க வைப்பது

புரிந்தவர்களும் (சீனியர்ஸ்) புதியவர்களும் (ஃப்ரெஸ்ஷர்ஸ்)

இணையும் போது கைத்தாளம் வாசிக்க வரட்டும் - நம் கரங்கள்..

– இது மாணவ சமுதாயத்தையே திரும்பி பார்க்க வைத்த சரவணனுக்காய், அவரின் மேலான ஆலோசனைக்காய்.”

க்ளாஃப்ஸ்…. க்ளாஃப்ஸ்…. (ஹும் ஹூம்... ஹும் ஹூம்... உனக்கில்ல உனக்கில்ல க்ளாஃப்ஸ் உனக்கில்ல..., இங்க லைக்ஸ்கே பஞ்சமாம் இதுல உனக்கு கிளாப்ஸ் கேட்(க்)குதா).

“ஹீ கால்ட் திஸ் ஆஸ் ஃபோஸ்டரிங்க் த யெங்க் ஒன்ஸ்".

வீட்டிலிருக்கும் சகோதர சகோதரியைப் போல் முதலாம் ஆண்டு மாணவர்களை தன் உடன் பிறவா சகோதர சகோதரிகளாய் தெரிவு செய்து அவர்களின் நலம் பேணுவார்களாம்". சொல்லி முடிக்கவும்,

“இத்தகைய உயர்ந்த எண்ணத்தை பகிர்ந்த எங்கள் அண்ணன் சரவணனுக்கு ஜே!!” – கூட்டதிலிருந்த ஒருவனின் குரல் ஓங்கி ஒலிக்க

“சரவணனுக்கு ஜே!!” – பின் பாட்டு பாடினர் கூட்டத்தினர் ( எலேய் திருந்த மாட்டிங்கடா நீங்க!! திருந்த மாட்டிங்க)

“எங்கள் அண்ணன் சரவணனுக்கு ஜே!!”

“சரவணனுக்கு ஜே!!”

புகழாரத்துக்கு மத்தியில் ராணியின் குரல் மீண்டும் ஒலித்தது

“யெஸ் லெட்ஸ் புட் ஆர் ஹண்ட்ஸ் டூ கேதர்…. ஃபார் ஆர் ஒன் அண்ட் ஒன்லி…. சரவணன்!!!”

வார்த்தையின் முடிவில் மந்திரிகள் படை சூழ (சின்னுவின் நண்பர்கள்) மாமன்னர் போல் அழைத்து வரப்பட்டான் சரவணன்

‘நினைச்சது என்ன (அடிச்சு பொலப்பாங்கனு, காரி துப்புவாங்கனு) நடப்பது என்ன னு திகைத்தாலும்’ (சீவி சிங்காரிச்சு கூட்டி போனா உடனே மய..ங்..கிற கூ..டா..து, சீவி சிங்காரிக்கறது எல்லாம் பூச போட்டு வெட்றதுக்கு தான்; பயபுள்ளைக்கு இது தெரியலையே; ச்சு ச்சு ச்சு, சோ ஸேட்), ‘கல்லூரி பட்டாளத்தின் முன் ஸ்டார் ஃபிகராய் திகழ வைத்ததை நம்ப முடியாமல் மலைத்தே போனான்’ சரவணன்.

ஹும் க் ஹூம் க் ஹூம் ஆகட்டும் ஆகட்டும்

உச்சாணி கம்புல நிறுத்தி, உடைக்க போகிறார்களா? உருவாக்கப் போகிறார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!!!

இரண்டுபடும்....
 
Last edited:

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
":smiley12 ஒன்றுபட்ட இதயமே -9 :smiley12"

<விலகும் இதயத்தை விரும்ப செய்ய என்ன செய்வானோ….>



மேடை ஏறிய ஜோடி ரெண்டும் சபை நடுவில் கொளு ஏறினர்.

வந்தவர்களை பொதுவாக வணங்கி நன்றி உரைத்த பிறகு, நடு நாயகமாக நிற்க.

பலர் அன்பையும், மகிழ்ச்சியையும், பகிர வரிசை கட்டி பரிசுடன் வர, சிலர் பகைமையையும், கடனையும் செலுத்த வந்தனர்.

அப்பொழுது...

யாரென்றே தெரியாதவர்…..,

நன்கு அறிந்தவர் போன்று ஒருவர்…

வந்து மகிழ்ச்சியை தெரிவித்து….,

ராஜனை கட்டி அனைத்து; விடுவித்ததும் அல்லாமல்;

ராணியின் கரத்தையும் ராஜாவின் கரத்தையும் பற்றி மேடையின் ஓரமாய் இருந்த மேசைக்கு அழைத்து சென்றான்(ர்).

'ப்ஸ்ச என்ன பெருசா கேக்கு தானே' என்று இருந்தவள், அருகில் சென்றவுடன் கலங்கிப் போனாள்.

கலங்கியவளின் நிலை உணராமல்...

கேக்காக வைக்கப்பட்டு இருந்த ராஜ கீரிடம் தரித்த R லெட்டரின் நீண்ட வாலில் ராணி கீரீடம் தரித்த R-ரும் இளவரசர் போன்ற R-ரும் இருப்பதை பார்த்து தன் குடும்பக் கனவில் லயித்தவன், தன்னைப் போலவே தன்னவளும் இதைக் கண்டு மலர்ந்திருப்பாள் என நினைத்து காதல் பொங்க தன்னவளை நோக்க (ராசா கனா கண்டுனே இருக்கக் கூடாது அடிக் அடி நெனவுக்கும் வரனும்).

அந்தோ பரிதாபம் அவன் கண்டது என்னவோ கலங்கியவளை தான். (உனக்கு என்னம்மா ஆச்சி)

அதன் பின்பே அவளின் நிலை உணர்ந்தார் போல் அவளின் வலக்கரத்தை தன் இடக்கரம் கொண்டு சிறு அழுத்தம் கொடுத்து பிடித்தான்.

அதில் இதம் பெற்றவள், அன்னாந்து தன் மன்னவனை பார்க்க கரைகட்டி நின்ற விழி நீருடன் திக்கு தெரியாத காட்டில் விடப்பட்டவள் போல தவித்திருக்கும் கண்கள் கண்டு துடித்துத் தான் போனான்.

"ஏனடி கலங்குகிறாய்,

காவலன் நானிருக்க

காயம் பட விடுவேனோ

(அடேய் சண்டாளா! காயத்தை ஏற்படுத்தியவர்களே நீங்கள் தானடா)

ஏந்தல் கொண்ட

கண்கள் கண்டு நீயிருக்கும்

என் இதயம் துடிப்பின்றி போகாதோ…"

(பாதகா ம்ஹுஹூம் உனக்கில்ல உனக்கில்ல இந்த ஜென்மத்தில் ராணி உனக்கில்ல - இந்த ராஜனுக்கு இல்லவே இல்ல)



கொன்றவர்கள் தாங்கள் தாம் என்பதை அறியாமல், என்ன செய்தால் கலக்கத்தை குறைக்கலாம் என்று சிந்தித்தவன் கையில் இருந்த கரத்தை உயர்த்தி முத்தம் பதித்து மொத்தம் கெடுத்தான். (ராசா இன்னைக்கு நல்ல நாளு னு யாரு ராச நாள் குறிச்சு கொடுத்தது; நல்லா நாலு துண்டு போடவே நல்ல நாளுன்னு சொல்லிட்டானு நினைக்குறேன். அப்புடியே குதிச்சு ஓடிடு இல்ல ராணி தான் ராஜனுக்கு இல்ல னே, இப்ப நடக்கிறது எல்லாம் பார்த்தா ராஜனே இல்லாம போயிடுவான் போலயே).

கலங்கி இருந்தவள் இவன் செயலில் காளியாய் மாறி இருந்தாள் என்றால்

கூடி இருந்தவர்கள் கோரஸ் போட்டனர்

“ஓஓஓஓஓஹோ”

அதில் தலை குனிந்து கொள்ள வெட்கம் என்று நினைத்தனர். ( தாயி ஏன் தாயி நீ தலை தலைய குனிஞ்சுகிற)

இது தான் சாக்கு என்று தப்பித்த உணர்வுக்கு வந்தவனை பிடித்த வசந்த்

அவன் கையில் டிஸ்ஷு பேப்பர் கொடுத்து "வழிது தொடச்சிக்கோ" என்றவாறே இடிக்க ராணியின் மேல் விழும் படி இடித்து நிலைபெற்றான்.

அங்கு கூடி இருந்தவர் கண்களுக்கு இது காதலின் சிருங்காரம் போல் தோன்ற ஒருவர் மாற்றி ஒருவர் ஓட்டியே தீர்த்து விட்டனர்.

இவர்களின் கலகலப்பில் புடைசூழ இருந்த ராணியும் சகஜ நிலைக்கு வந்தாள்.

நெருங்கியவர்கள், நொறுங்க நவின்ற அன்பில் திளைத்தது பாதி என்றால், முழித்தது மீதி ஆனது இருவருக்கும்.

இந்த கலாட்டாக்களின் மத்தியில் அழையா விருந்தாளியாய் வந்தவர்கள், அழைப்பை மதித்து வந்தவர்கள், வற்புறுத்தலின் பேரில் வந்தவர்கள், எப்போ எப்போ என்று காத்திருந்து வந்தவர்கள் என கலவையான மக்கள் திரள் வந்தது வந்த வண்ணம் இருக்க வாடி வதங்க தொடங்கினாள் வஞ்சியவள்.

நேரம் செல்ல செல்ல வதங்க தொடங்கிய தளிரில் துவண்டான் ராஜா (விட்டா இவன் கூஜா தூக்குவான், உனக்கெல்லாம் யாருடா ராஜானு பேர் வெச்சது).

துவண்டவன் திரும்புவதற்குள் மாதுளை ஜுஸ் முகத்தின் நேராய் முளைக்க, கண் சிமிட்டி வாங்கியவன், சரிபாதிக்கு பருக கொடுத்தான்.

சோர்வில் குடிக்க வாங்கியவள் உதட்டின் அருகில் கொண்டு சென்று குடிக்காமல் கீழே வைத்துவிட்டு, நிமிர மொத்தமாய் வியர்த்திருந்தாள். (யம்மா இன்னும் இன்னா இன்னா பிரச்சன தான் இருக்கு, ஒன்னொன்னா சொல்லாம மொத்தமா சொல்லேன்).

தள்ளாடியவளை தாங்கி பிடித்தவன், தண்ணீர் கொடுக்க, தவிர்க்காமல் வாங்கி குடித்தாள்.


குடித்த நீர் தனித்தது அவள் செந்நீரின் தேடலை மட்டுமல்ல; கானல் நீராய் போய் விட்டதோ என தவித்தவனின் இதயத்தின் தேடலையும் தான் (ஆத்தா பயபுள்ள வயித்துல பால வார்த்த).

இதற்கு மேலும் அவளை நிற்க வைப்பதில் விருப்பம் அற்றவன் சைகை செய்ய, அடுத்த பத்து நிமிடத்தில் வந்தோருக்கு மாற்று ஏற்பாடு செய்தான்.

இசை கருவிகளுக்கு அருகில் சென்றவன் இன்னிசை கச்சேரியில் பாடிக்கொண்டு இருந்தவர்களை நிறுத்தி விட்டு தானே களமிறங்கினான்.

ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும்

வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்,


ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும்

வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்,


ஆ: பூவே செம்பூவே....


ஆ: நிழல் போல நானும்..... ஆ...ஆ...ஆஆஅ.......

நிழல் போல நானும் நடை போட நீயும்

தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்

கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்

மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது

நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே

நாள் தோரும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே

எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்.....


ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும்

வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்,


ஆ: பூவே செம்பூவே உன் வாசம் வரும்

பூவே செம்பூவே....

(உபயம் - சொல்ல துடிக்குது மனசு, இசை இளையராஜா, வாலி - வரிகள்)



தன்னவளின் விருப்பம் உணர்ந்து தன் விருப்பம் தெரிவிக்க ஏற்கும் முயற்சிகள் அனைத்தும் மேலும் மேலும் சிக்கலையே உருவாக்குகின்றது என்பதை அறியாமல், உருக்குகிறேன் பேர்வழி என்று உருவேற்றிக் கொண்டிருந்தான் ராஜன்

சிலருக்கு இத்திருநாள்
மறுநாள் வருநாள் ஆயினும்
பலருக்கு வாழ்வில் ஒருமுறை
வரும் நாள் என்றல்லவா இருக்கிறது.


துவண்ட கொடியை மீட்டெடுப்பானா... அல்லது காவு கொடுப்பானா????

ஒன்றுபடும்.....
 
Last edited:

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே!!!

எட்டாவது அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்த தோழியர்களுக்கு (யுஜீனா, கவிதா, காத்டேவிட், செல்வி, சித்ரா, & இந்து) எனது மனமார்ந்த நன்றிகள்.....

அடுத்த அத்தியாயத்தை பதிவேற்றியுள்ளேன்... உங்கள் மேலான கருத்துக்களுக்கு கூர்ந்த விழியும், திறந்த செவியுமாய் காத்திருக்கிறேன்.

சிதைக்காமல் சீர்த்தூக்க சிற்பியின் சிகரங்களை எதிர் நோக்கும்

உங்கள் தோழி

SJ
 

S J

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
":smiley12 ஒன்றுபட்ட இதயமே -10 :smiley12"​


<மலைத்தே போனான்’ சரவணன்>



ஊரக் கூட்டிக் கூரைல ஏத்தினது பத்தி தெரியாம, பிறர் சூட்டிய பெருமையில் தலை கால் புரியாமல் மிதந்து கொண்டு இருந்தான் சரவணன்.

‘பறந்து கொண்டிருந்தவன் தரை இறங்கி வந்து கேட்கும் போது அவனை பார்த்துக் கொள்ளலாம்’,- நினைத்தவள் தன் பாடத்தை கவனிக்க கிளாஸ்க்கு செல்லலானாள்.

பத்தடி எடுத்து வைத்திருப்பாள், தன்னை நிழல் போல் தொடரும் நண்பன் தொடராமல் போனதில்; நின்று திரும்பியவள், கல்லூரி தோழர்களுடன் பேசியபடி சிரித்திருந்த ராமனின் முகத்தை கண்டு கொஞ்ச நேரத்துல டென்ஷன் ஆக்கிட்டானே.

ஆசுவாசப்பட்டு நிம்மதி நிறைந்த மனதுடன் பாட சாலையை நோக்கி பயனப்பட்டாள்.

தற்காலிக நிம்மதி இது என்று அறியாமல் தன் உள்ளுணர்வை புறம் தள்ளினாள் பேதையவள்.

முன் செல்லும் முல்லைக்கு, தன் மனம் அறிய செய்யாததை நினைந்து தனக்கு ஒரு ஷபாஷ் கொட்டியவன், அவசர அவசரமாய் அலைபேசியின் பொத்தானை அழுத்தினான் கும்பலில் இருந்து விலகியவாறே.

'நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர், தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார், சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்; அல்லது உங்கள் நடப்பு டாரிஃபின் படி வாய்ஸ் மெசெஜ் அனுப்பவும்…'

மறுபடியும், மறுபடியும் முயற்சி செய்தவன் ஓய்ந்த நேரத்தில்,

பயந்து பயந்து ஒரு உருவம் தன் உடைமைகளை இறங்கிக் கொண்டு இருந்தது.

போன உயிர் திரும்பி வந்தது போல் உணர்ந்தவன், துரிதமாய் செயல் பட்டான் அவளின் நிலை அறிய.

"அண்ணா ஒரு நிமிஷம் நீங்க இங்கயே இருங்க,

நான் ஒருதவங்கள பாக்கனும் அவங்கள பார்த்துட்டு வந்திடுறேன்,

வெய்ட்டிங்க் சார்ஞ்சஸ் சேர்த்தே தந்திருவேன் – டேக்ஸி டிரைவரிடம் சொன்னாள் ரட்சன்யா".

"அவ்வளவுக்கு மோசம் இல்ல நம்ம சனு" - ராமன்

'அது எப்படி அவள நீ அப்படி நினைக்கலாம் அவளுக்காக பாடுபட்டவள பார்க்காம போக முடில பார்த்தியா?'

'அதுக்குள்ள ஊர விட்டு ஓடிட்டாளோ-னு ஓடுது உன் எண்ணம் சேச்சா, மை சனு இஸ் ஸ்வீஈஈட்', என்றவன்

'அடேய் முட்டாள் ஒரு நிமிஷத்துல ரட்சிப்பவளை ராட்சஷியா நினைச்சிட்டியே… முட்டாள்… முட்டாள்….'

தன்னை தானே கடிந்து கொண்டவன், தன்னவளை பின் தொடர்ந்தான்.

விடலையினர் போல் கண்டது எல்லாம் தனக்கே சொந்தம் எனும் பாவனையில் விழுந்தான் – எல்லாம் காதல் படுத்தும் பாடு.

கண்டால் எடு கேட்டால் கொடு!!

"கண்ணியை கண்களால் கண்டான்

தன்னவள் என நினைத்து விட்டான்…

கேட்டால் - கொடுத்து விட முடியுமா?? "
– கேட்பவரை பொறுத்து கொடுக்கப் படுவதும் நிராகரிப்படுவதும்.

ரட்சன்யா- ராமனின் சனுவாய் ஆவாளா? அல்லது ராமனையே இல்லாமல் செய்வாளா?

விடை காலனின் கையில்.

*****-------******

உள்ளே நுழைந்தவள்; சந்தோஷத்தோடும், ஆரவாரத்தோடும் குதூகளித்து கொண்டிருந்த சீனியர்ஸை கண்டு ஒரு நிமிடம் திகைத்தாள்;

'அவர்கள் சந்தோஷப்படுவதற்கு காரணம் ராணியின் மரணம் தான்' என்று நினைத்து கன்னங்களில் வழியும் கண்ணீரோடு கண்களை மூடி நின்றாள், எல்லாம் இத்துடன் முடிந்து விட்டது என்னும் பாவனையில்.

நின்றவளின் மனவோட்டத்தில் 'ஆசை ஆசையாய் அனுப்பி வைத்த முகம் மிளிர, எனக்கும் என் படிப்புக்கும் கொடுப்பனையில்லை என்று கால்களை பற்றி சொன்னாள் மானசீகமாய்',

'ராட்சஸியா மாறி சூரையாடுவேன் என்று தெரிந்து தான், பிறர் கூப்பிடும் போதாவது நீ ரட்சிக்க வேண்டும் என்று நினைவில் கொள் எனும் சொல்லாய் வைத்தீர்களோ?' கேள்வி கேட்டவள், ஆனா நான் தவறிட்டேன் என்றும் இணைத்துக் கொண்டாள்.

'ஐ ஆம் வெரி சாரி ராணிக்கா, என் வம்பில் உங்களை மாட்டி விட்டுட்டேன்..,'

'எவ்ளோ நல்லவங்க நீங்க..'

'என் கஷ்டதுக்கு உதவ நினைச்சு இப்டி அல்பாயுசுல போயிட்டீங்களே..'

"நான் என்ன கைமாறு செய்வேன்.." 'ஒரு உயிரை காவு வாங்கிய பாவி நான் எனக்கு எல்லாம் மண்ணிப்பே கிடையாது' எனவும் மன அழுத்ததின் வீரியத்தில் “நான் என்ன கைமாறு செய்வேன்..” என்பதை வாய்விட்டே சொல்லியிருந்தாள்.

நினைவுகளில் சுழன்றிருந்தவள், "ஒரு டீ மசால் வட வாங்கி தரர்து…" எனும் சத்தம் கேட்டு கண் திறந்தாள்.

திறந்தவள், இறந்தவள் பேயாக வந்திருக்கிறாள் என்று நினைத்து அலறியபடி திரும்பி ஓட நினைக்க,

நினைக்கத் தான் முடிந்தது எதிலோ முட்டி தட்டி பிடிக்க பட்டிருந்தாள்.

தம் தன நம் தன​

நம் தன நம் தன… ஆ அ அ ஆ அ அ அ​

தம் தன நம் தன தாளம் வரும்..​

புது ராகம் வரும்… பல பாவம் வரும்..​

அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்…​

மணமாலை வரும் சுப வேளை வரும்​

மணநாள் திருநாள் புதுநாள்​

உன்னை அழைத்தது…​

தம் தன நம் தன​

நம் தன நம் தன… ஆ அ அ ஆ அ அ அ​



"ஏய் ரட்சன்யா என்னாச்சு ஏன் இப்படி ஓடுற",

"பந்தயத்துல வாட்ச எடுத்துட்டு வந்திட்டேன்… நீ ஒன்னும் ஓடி எடுத்திட்டு வர வேண்டாம்" என கலாய்த்து சகஜ நிலைக்கு கொண்டு வந்தாள்.

பின்னே இவ்வளவு நேரமா ராமனும் ரட்சன்யாவும் ஓட்டிய படத்தை பார்த்து கொண்டு தானே இருந்தாள்.

காதலர்கள்: இடம் பொருள் ஏவல் மறந்திருந்தாலும்,

தான் தன் நண்பனுக்காய்,

தன் உணர்வுகளை அறிந்தவனுக்காய், என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்ய ஆவல் கொண்டாள்.

அதன் முதல் படியாய் - "இந்தா இது உனக்கு தான், ரொம்ப கெட்டி…"

..........

"எனக்கு பாசமா குடுத்தது.."

..........

"என் ஏற்றதிலையும் என் தாழ்விலையும் என் கூடவே இருந்தது"

........

"என்னையும் என் காலத்தையும் முடுக்கி விட்டது"

........

"இப்போ நானும் உனக்கு பாசமா குடுக்குறேன்- பத்திறமா கட்டி வெச்சிக்கோ!!"

...........

சொன்னவளின் பார்வை ரட்சன்யாவிடமும் இல்லை, வாட்சிடமும் இல்லை ஆனால் நிலைத்திருந்தது என்னவோ சின்னுவின் முகத்தில்…

கட்டி-ல குடுத்த அழுத்தத்த பார்த்தா கட்ட சொன்னது வாட்ச-யா இல்ல வாலிபனையா ??? யோசிக்க வேண்டிய விஷயம்.

சின்னுவும் 'எனக்கு இவளை பிடித்திருக்கிறது' என சொல்லவில்லை

குட்டிமாவும் 'நீ அவள விருப்புறியானு' கேட்கவில்லை….

எல்லாம் பகிர்ந்து கொள்ளும் ஒரு கூட்டு பறவைகள், இதில் மட்டும் பரிபாஷையை உபயோக படுத்தியது ஏனோ? (அட நீ கதைய எழுத தான்).

'தன் கனவுகள் சிதைந்து விட்டது, குடும்பத்தவரின் ஆசை நிராசை ஆக்கிவிட்டேன், ஒரு நல்ல உள்ளத்தை கொன்று விட்டேன்' என தவித்தவளின் காதுகளில் தேன் பாய்ந்தது போல் உணர்ந்தாள்

மகிழ்ச்சியின் மிகுதியில் தன்னை தாங்கியவனை பொருட் படுத்தவில்லை,

ராணியை கட்டி அணைத்து முத்தம் பதிக்க போக…

கருகும் வாசமும், கடுகடுக்கும் முகமும் கண்டு இடையில் கைகளை விட்டு முத்தத்தை மட்டும் தடுத்து விட்டாள்..

"அச்சச்சோ" என கைகளை உதரிக் கொண்டே; பய பார்வை பார்த்தவளின் அழகில் இருவரும் மயங்கி "நோ க்யூட்டி ஐ டோண்ட் எங்கரேஜ் கிஸ்ஸஸ்" எனவும்

தன்னை தொடரும் கண்களுக்கு மட்டும் அல்லாமல், காதுகளுக்கும் வேலை கொடுத்து, அவ்வார்த்தையை கேட்டதும்,

"ஆமா மா இவளுக்கு ஆண்கள் கொடுத்தால் மட்டுமே மொத்தமும் கொடுப்பாள், ஏற்பதாயினும் சரி தருவதாயினும் சரி.. " என வக்கிரமாய் நினைத்தது.

யம்மா உங்க டிஸ்ஸுகஷன அப்புறமா வெச்சிக்கோங்க, லட்டு மாதிரி இந்த விதிக்கு சான்ஸ் குடுக்குறீங்களே … எப்பூடி இப்டி எல்லாம்.



ரெண்டுபடும்
 
Last edited:
Status
Not open for further replies.
Top