All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷம்லாவின் "என் விழியை நீங்கி நீ விலகாதே" - கதை திரி

Status
Not open for further replies.

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் எல்லாருக்கும்....

நீங்க எல்லாரும் என் மேல செம்ம காண்டுல இருப்பீங்கன்னு எனக்கு தெரியும்....

இருந்தாலும் நான் இதை சொல்லியே ஆகணும்.... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் டு எவ்ரிஒன்....

இந்த கதைக்கு இவ்வளவு சப்போர்ட் இருக்கும்னு நான் நினச்சு கூட பார்க்கல.... அது எல்லாம் உங்களால் தான் சாத்தியம்... அகைன் தேங்க்ஸ்....

சொந்த வேலைகள் காரணமா என்னால இந்தப் பக்கம் வரவே முடியல... இடையில் என்னோட லாப் ரிபைர் ஆகிடிச்சு...

கதை போல்டர் அழிஞ்சிடிச்சு.... நான் இருந்த நிலைமையில் என்னால அதில் கவனம் செலுத்த முடியல....

இப்போத்தான் இங்கிருந்து கோப்பி பேஸ்ட் பண்ணி மறுபடியும் எழுதிட்டு இருக்கேன்...

எழுதி முடிய முடிய அப்டேட் பண்ணிறேன்....

யாரும் என்னைய திட்டாதீங்க ஒகே....

அடுத்த அத்தியாயம் போட்டாச்சு இப்போ படிச்சிட்டு சொல்லுங்க பிரெண்ட்ஸ்.....
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் விழியை நீங்கி நீ விலகாதே!


அத்தியாயம் 07


காதல் பேரலைகள் வந்த வழி திரும்பிச்செல்ல உற்பத்தியாகியது பாசத்தின் வற்றாத ஊற்று.

என்னதான் தினமும் செல்போனின் அளவளாவினாலும் பல மாதங்களின் பின் தந்தையை நேரில் கண்டதுமே அவளின் கண்கள் கண்ணீரை விடாமல் சொறிந்தது.

“ப்பா....” கூவலுடன் பாய்ந்தோடியவள் அவர் தோளில் தஞ்சமாக, கதிர்வேலனும் மகளின் நிலைக்கு சற்றும் குறைவில்லாத ஆனந்தக்கண்ணீரோடு வாஞ்சையாக அவள் முகம் வருடி பாசத்தோடு நெற்றியில் முத்தமிட்டார்.

பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையர்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்த்தியல்லவென்று!

ஊருக்குள் கதிர்வேலனை கண்டு அஞ்சி நடுங்குபவர்கள் அதிகம். செல்வாக்கும், ஆதி தொட்டே ஊரை ஆண்டு வருவார்கள் அவர்கள் வம்சாவளியினர் என்பதாலும் சுத்துப்பட்டு ஊருக்குள் அவர்கள் குடும்பத்தவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம்.

வெளியே புலியானாலும் வீட்டினுள் எலி தான் என்பதாகவிருக்கும் அவரின் நடவடிக்கைகள்.

தாயை மதிக்கும் தனயன். சராசரி கணவன். பொறுப்பான அண்ணன். பாசமான தந்தை. குடும்பத்தை பொறுத்தவரை கதிர்வேலனின் அவதாரங்கள் இவை மட்டுமே!

அதற்கேற்றாற்போல் தான் அனைவரும் நடப்பர்.

என்னதான் அனிகா விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும் தந்தையின் சொல்லை ஒரு போதும் மீறாதவள். அவர் சொன்னால் சரியாகவிருக்கும் எனும் நம்பிக்கை அவளுக்குள் அதிகமாகவே உண்டு.

அதனால்தான் பிடிக்கவில்லை என்றாலும் கூட அவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.

“என்ன கண்ணம்மா இப்பிடி இளச்சி போய்ட்ட? வேளாவேளைக்கு சாப்பிடுதியா இல்லையா...?” பாசத்துடன் கூடிய அதட்டல் குரலில் அவர்.

“போங்கப்பா, முன்னாடி இருந்தத விட இப்போ வெயிட் போட்டுட்டேன் தெரியுமா... இப்பிடியே போச்சுன்னா அப்புறம் என்னாலேயே என்னைய அடையாளம் காண முடியாம போய்டும்....” சிணுங்கிச் சிரித்தாள்.

மகளின் பேச்சில் வாய்விட்டு நகைத்தவர் “அதுக்காவ பட்டினி கிடக்கிறதா கண்ணம்மா... காலேஜுக்கு போற புள்ள நல்லா சாப்பிட்டு தெம்பா இருந்தா தானே படிக்கிறது மண்டையில ஏறும்...”

“சந்தடி சாக்கில எனக்கு படிப்பு ஏறாதுங்கிறத சொல்லிப்புட்டீங்கல்ல... போங்கப்பா உங்க கூட நானு கா...” முறைப்புடன் தரை அதிர அவள் முன்னேறிச்செல்ல, அவர் சிரிப்பு குறையவேயில்லை.

பல மாதங்கள்... இத்தனை நாட்கள் எல்லாம் மகளை விட்டு பிரிந்திருப்பது இது முதல் தடவை அல்லவா? அவளின் ஒவ்வொரு செய்கையையும் கண்ணாரக்கண்டு ரசித்தவர் பொக்கிஷமாகச் சேமிக்கவும் மறக்கவில்லை.

அன்றைய தினம் அவரைக் கேளாமலே நினைவில் எழுந்து வந்தது.

வீட்டின் ஞாபகமும் ஊரின் நினைவும் ஒன்றாக வாட்டியதில் அனிகா வீட்டுக்கு அழைத்த அத்தினம் தான்.

மகளைப் பாராமலிருக்கும் ஏக்கம் வானளவு உயர்ந்து தாக்க, என்றுமில்லாத வண்ணம் நேரத்தோடு வயக்காட்டில் இருந்து வீடு திரும்பியவர்.... மனைவியின் கலங்கிய குரல் கேட்டு மகளாக இருக்குமோ என்றெண்ணியவராக உள்ளே நுழைய, அவர் எண்ணியது போல மகளே தான் அழைத்திருந்தாள்.

பரவசமாக பேசியவருக்கு ஒருநிலைக்கு மேல் தாள முடியவில்லை.

படிப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் வீட்டுக்கு அழைத்து விடலாம் என்று கூட ஒரு நொடியில் எண்ணிவிட்டார்.

அந்தளவுக்கு அவளில்லாத வீடு மழையின்றி வறண்டுபோன பூமி போலவே இருந்தது அவரை பொறுத்தவரையில்!

உயிர்ப்பின்றி போன இடம் அவளால் மட்டுமே உயிர்ப்படையும்!

மகள் குரல் கேட்டு தாளமுடியாமல் இணைப்பை துண்டித்து அறைக்குள் முடங்கியவருக்கு மனைவியின் அழுகையும் அவளை சமாதனம் செய்யும் தாயின் பேச்சும் தெளிவாகவே கேட்க, நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.

இதை எப்படி யோசியாமல் போனார்?? படிப்பதற்காக ஊர் விட்டு ஊர் போனதையே தாங்க முடியாமல் இருக்கும் தான், ‘எப்படி திருமணம் செய்து கொடுத்து அவளை அனுப்பி வைப்பேன்? அதற்காக காலம்பூராவும் தன் சிறகுக்கடியிலேயே வைத்திருக்கவும் முடியாதே!’

காலாகாலத்தில் அவளுக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும் அல்லவா?

இந்த எண்ணம் வந்த பிறகு ஓரளவுக்கு தன்னை சமாதனம் செய்து கொண்டாலும் இடையிடையே ‘வீட்டோடு மாப்பிள்ளை பார்த்து கட்டிக்கொடுத்தால் தான் என்ன!’ என்ற எண்ணம் தோன்றாமலுமில்லை.

காலத்தின் கரங்களில் கவலைகளை ஒப்படைத்தவர் அது செல்லும் வழியிலே பயணிக்க முடிவெடுத்து விட்டார்.

அப்படியே நாட்களைக் கடத்தியவர் மகள் ஊருக்கு வரும் செய்தி கேட்டு அடைந்த மகிழ்விற்கு வார்த்தைகள் இல்லை.

இளந்தாரிப்பிள்ளை போல் நடையில் துள்ளல் அகத்தில் மகிழ்வு என்று நாட்களை எண்ணிக் கொண்டு இருந்தவர், இதோ அவளை அழைத்துக்கொண்டு வீடு நோக்கி செல்கிறார்.

அவரின் மகளோ பார்த்திட ஏங்கிய பச்சைக் கம்பளம் போர்த்திய வயல்வெளிகள் ஆதவன் வருகையில் பரவிய இளவெயிலில் தங்கம் போலே தகதகத்து கண்ணுக்கு குளிர்ச்சி அளித்ததில் தன்னையும் மறந்து இயற்கை அன்னையின் எழிலின் பால் உறைந்து நின்றாள்.

‘ஏய் பச்சை பெண்ணே! உன்னைய பார்க்காம எம்புட்டு வெசனப்பட்டேன் தெரியுமா? இதுக்குத்தேன் எனக்கெல்லாம் படிப்பு ஒத்துவராது நான் இங்கிட்டே இருக்கேன்னு அப்பா கிட்ட எவ்ளோ எடுத்து சொன்னேன்... சரி விடு, நடந்தத மாத்தவா முடியும்? இந்த வாரம் முழுசும் உன்னையே தெனமும் பார்த்து என் கவலையெல்லாம் ஆத்திக்கிறேன்....’

வெயிலோடு விளையாடிய வயல் வரப்பில் லாவகமாக நடைபயின்றவள் அறுவடைக்கு தயாரான கதிர்களை தொட்டு தடவிக் கொடுக்க, “ஏய், யாருல அது? வெளச்சளுக்கு ஆயத்தமான கதிர தொட்டு தடவுறது...?” கோபம் வந்தவராக முறுக்கு மீசைக்காரர் ஒருவர் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு அவளை நோக்கி வந்தார்.

“அடி ஆத்தி! இத நானும் எங்கிட்டு போய் சொல்றது ஊரு விட்டு ஊரு போன பிள்ள பலநாள் கழிச்சு ஊருக்கு வந்து, வயக்காட்ட பார்க்க வந்தா நீங்க இப்பிடித்தான் வெரட்டுவீகளோ?”

‘தெரிஞ்ச குரலாட்டம் இருக்கே!’ யோசனையுடன் வந்த முறுக்கு மீசைக்காரர் அனிகாவை எதிர்பார்க்கவில்லை என்பதை ஆச்சரியத்தில் மலர்ந்த அவர் முகமே எடுத்துக்காட்டியது.

“அடடா அனி கண்ணு!! எப்போ கண்ணு ஊருக்கு வந்த? வரத சொல்லவுமில்ல... உன் அப்பங்காரன் வரட்டும் அவனுக்கு இருக்கு!” பொய்க்கோபம் பூண்டு மீசையை முறுக்கி விட்டவர் கனிவும் மகிழ்வுமாக அனிகாவின் சிரம் வருடிக்கொடுக்க, அவர் பாசத்தில் நனைந்தவள், “எப்படி இருக்கிய மாமா? ரங்கத்தை, மஞ்சு எல்லாரும் எப்பிடி இருக்காங்க?” அவர் மனைவி மகளான தன் தோழியினதும் அம்மாவினதும் நலம் விசாரித்தாள்.

“அவுகளுக்கு என்ன எல்லாரும் நல்ல சௌக்கியமா இருக்காக கண்ணு. நீதான் வெளியூர் போனதும் இளச்சி தெரியிற!”

“அததாம்ல பாண்டி நானும் கண்ணம்மா கிட்ட சொன்னேன்.” என்றபடி அவர்களோடு ஐக்கியமானார் கதிர்வேலன்.

மனதில் மகள் உடல் ஆரோக்கியம் குறித்த் கவலை மலையளவு எழுந்து அவரை வாட்டியது. தம்பி குடும்பத்தை அவர் என்றைக்கும் குறை சொல்ல மாட்டார். அவர்களுக்கு அனிகா மீது எந்தளவு பாசம் என்பதை அவரும் அறிவாரே!

அவர் கவலை எல்லாம் மகளின் விளையாட்டுத்தனம் குறித்தே! இங்கென்றால் வாசுமதி அவள் பின்னால் அலைந்து திரிந்து எப்படியும் உணவை ஊட்டி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாள். அங்கு படிக்க போகும் பிள்ளை அவசரத்துக்கு அறையும் குறையுமாக உண்டு விட்டு சென்றிடுவாள். இதற்கேதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டார்.

“அப்பா! மாமா தான் சும்மா சொல்லுறாருன்னா நீங்க வேற... இப்பொல்லாம் முன்னைய விட அதிகமாத்தேன் சாப்புடுதேன். நீங்க கவலைப்பட்டு உடம்புக்கு இழுத்து விட்டுக்காதீங்க.” தகப்பன்சாமியாக மாறி தந்தையை அதட்டியவள்,

“சரி மாமா, சாயங்காலம் மஞ்சுவ பார்க்க வீட்டுக்கு வரேன்னு அவளுக்கிட்ட சொல்லிடுங்க. ஒரே கசகசன்னு இருக்கு நான் வீட்டுக்கு போறேன். அப்பா நீங்களும் சீக்கிரம் வந்திருங்க அம்ஸு காத்துக்கிட்டு இருக்கும்...” வம்படியாக கதிரின் கையிலிருந்த பையை வாங்கிக்கொண்டு ஒரே ஓட்டமாக வீடு நோக்கி ஓடிவிட்டாள் அனிகா.

“பார்த்து போ கண்ணு...” கதிர்வேலனின் காட்டுக்கத்தல் காத்தோடு கரைந்து போனது.

“அவளுக்கு தெரியாதா அதெல்லாம் புள்ள போய்க்கும்... நீ அவள நெனச்சு வெசனப்படுறத நிறுத்து முதல்ல. உடம்பு எதாவது இழுத்துக்கு விட்டுக்க போற?” சிநேகிதனாய் அதட்டியவர், “நல்ல வரன் ஒன்னு கைவசம் இருக்கு புள்ளக்கு பேசி முடிக்கிறியா?”

“இப்போத்தானேடா படிக்க போயிருக்கு... கொஞ்ச காலம் போவட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்.” என்றவர் நேரம் ஆகியமையால் சரி பாண்டி நான் கிளம்புதேன் கண்ணம்மா நான் பசியோட இருக்கும்.” என்றவர் நண்பனிடம் விடைபெற்று நடையை எட்டிப்போட்டார்.

“ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டிப்பென் இந்த பூமியிலா
செ செ செ செவ்வந்தி
என் தோழி சாமந்தி
வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி

ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டிப்பென் இந்த பூமியிலா”


கருநாகம் போல் நீண்டிருந்த கருங்கூந்தல் அவள் அசைவுகளுக்கேற்ப கதகளி ஆட, பாடலும் ஆடலுமாக வீட்டுக்கு ஓடி வந்த அனிகா முற்றத்தில் அமர்ந்து வெத்திலை குதப்பிக்கொண்டிருந்த தன் கிழவியைக் கண்டு கண்கள் கலங்கிய போதும் காட்டிக்கொள்ளாமல் காத்து அவர் முன் குதித்தவள், “ஏய் கிழவி!” கூவினாள்.

திடீரென கேட்ட குரலில் உள்ளூர அதிர்ந்தாலும் மாதங்கள் பல கழித்து பேத்தியை கண்ணாரக் கண்டதிலும் அவள் குரல் கேட்டதிலும் கண்கள் உடைப்பெடுக்க, அதை அவள் முன் வெளிக்காட்டாமல் முறைப்பெண்ணை முறைப்பது போல முறைத்தவர் “எந்த எடுபட்ட சிறுக்கிடி அது என்னைய கெழவிங்கறது?” வழக்கம்போல் எகிறினார்.

‘அட கிழவிக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் போல... அது அழுறத நான் கண்டுபிடிச்சிடக் கூடாதுன்னு என்னம்மா நடிக்குது பாரேன்!’

‘உன்னை நான் அறிவேன்!’ எனும் ரீதியில் பாட்டியை குறுகுறுவென பார்த்தாள்.

பேத்தியின் பார்வையில் அவள் தன்னை கண்டு கொண்டதை அறிந்து கொண்டவர், உள்ளூர அசடு வழிந்தாலும் அவள் முன் காட்டிக்கொள்ளாமலும் “மருமவளே! உன் மவ வந்திருக்கா சீக்கிரம் வாடிம்மா...” வாசுமதிக்கு ஏவல் விடுத்தார்.

மகளுக்கென்று அவளுக்கு பிரியமான உணவுகளை எல்லாம் ஒத்தாசைக்கு கூட யாரையும் அனுமதியாமல் ஒத்தை ஆளாய் சமைத்துக்கொண்டிருந்த வாசுமதி, மாமியாரின் குரல் கேட்டு நெஞ்சம் விம்மித்தணிய மகளைக் காண பாய்ந்தோடி வந்தார்.

அத்தனை துடிப்பும் தவிப்பும் அவரில்!

அவருக்கு சளைக்காத உணர்வுகளின் கலவை அவள் பெறாத மகளிலும்!

கண்கள் நான்கும் கட்டுகடங்கா பல கதைகள் பேச... கன்னம், தாடை, தலை தடவி... வருடி... பாச முத்தங்கள் சில பதித்து, பார்வையால் அவளை அளந்து, நெஞ்சத்தின் கட்டுக்கடங்கா தவிப்பை போக்கியவர் அவளை உள்ளார அழைத்துச்சென்று, “போய் குளிச்சிட்டு வா கண்ணம்மா... சாப்பாடு எடுத்து வைக்கேன், சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழு, களைப்பெல்லாம் பறந்து போய்டும்!” பரிவாகக் கூறினார்.

தாயின் கரிசனையில் கண்ணீரில் கண்கள் நனைய, “ம்மா!” கதறலோடு கட்டியணைத்தவள் காணாத ஏக்கத்தை எல்லாம் கண்ணீரில் கரைத்தாள்.

“என்ன கண்ணம்மா இது சின்ன குழந்தையாட்டம்! அழுறத நிறுத்துடா.” முதுகை வருடி சமாதனம் செய்தவர் “போ... போய்க் குளிச்சிட்டு வாடாம்மா.” என்றவர் சமையல் கட்டுக்குள் நுழைந்து கொண்டார்.

அவருக்கும் தனிமை தேவைப்பட்டது. சமையல்கட்டுக்குள் நுழைந்தவர் கண்கள் விடாமல் கண்ணீர் சொறிய, சேலை தலைப்பால் துடைத்தும் அது நிற்க மறுத்தது.

அப்போது தான் கதிர்வேலன் வீட்டினுள் நுழைந்திருந்தார். வாசலில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்த தாயைக் கண்டு பதறினாலும் காரணம் அறிந்தமையால் அவரை சமாதானப்படுத்தி கையோடு தன் வசுவையும் தேற்றவே உள்ளே வந்தவர் தான் எண்ணியது போலே கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கும் மனைவியைக் கண்டு ஆறுதலுடன் கண்ணீர்க்கரை துடைத்து விட்டார்.

“என்ன வசு, நீ இப்பிடி அழுதா கண்ணம்மா வெசனப்படுமா இல்லயா? பிள்ள பல நாளைக்கு பொறகு ஊருக்கு வந்திருக்கு, சந்தோஷமா இருந்திட்டு போவட்டுமே! அம்மாகிட்டயும் இதேதான் சொல்லிட்டு வந்திருக்கேன்.” எனவும் தன் தவறு புரிந்து வலியப் புன்னகையை பூசிக்கொண்டது அவர் முகம்.

“போ! போயி சாப்பாடு எடுத்து வை கண்ணம்மா வரட்டும் சேர்ந்து சாப்பிட்டலாம்.” என்றவர் கைகால் அலம்பச் செல்ல, அவர் முன் ஓர் கை செம்பை நீட்டிக்கொண்டிருந்தது.

வேறு யார் நம் அனிகாவே தான்! தந்தை வரும் நேரத்தை கணித்து அவசர அவசரமாக குளித்து ஓடி வந்திருந்தாள்.

என்னதான் மற்றவர்களை சமாதானம் செய்திருந்தாலும் அவருக்குள்ளும் கவலைகள் உண்டல்லவா...? அக்கைகளுக்கு சொந்தக்காரியான தன் மகளை ஆதூரத்துடன் பார்த்தவர், வழமைபோல் அவள் கையாலே கொடுத்த செம்பிலிருந்த தண்ணீரைக் கொண்டு முகம், கைகால் அலும்பியவர் சாப்பாடு கூடத்திற்கு மகளோடு நுழைந்தார்.

பிரயாணம் செய்த களைப்போடு இருந்தவள் காலையுணவை அளவோடு உண்டு விட்டு உறங்கச் சென்று விட்டாள்.

மகளோடு பல கதைகள் பேச ஆசையிருந்தும் அவள் களைப்பை உணர்ந்து மதியவுணவுக்கான வேலையில் ஈடுபட ஆரம்பித்து விட்டார் வாசுமதி.

கதிர்வேலன் இடையில் ஒரு தரம் வெளியில் சென்று வந்தவர் அதற்கு பின் வீட்டை விட்டு அங்கிங்கு அசையவில்லை.

ரெங்கநாயகி ஆட்களுக்கு வேலை ஏவுவதும் வெத்திலை குதப்புவதும் அடிக்கடி அனிகாவின் அறையை நோட்டம் விடுவதாகவும் பொழுதை போக்கிக் கொண்டிருந்தார்.

இடையில் அனிகா பத்திரமாக வந்து விட்டாளாவென அழைப்பெடுத்த கார்த்திக்கிடம் அவள் பத்திரமாக வந்து விட்டதாகவும் களைப்பில் உறங்குவதாகவும் கூறியவர்கள் பார்வதிக்கும் அழைத்துப் பேச தவறவில்லை.

சும்மாவே கும்பகர்ணியாக உறங்கும் அனிகா, பயணக்களைப்பில் பலமணி நேரம் படுக்கையை விட்டும் எழப் பிரியப்படாமல் படுத்துறங்கியவள், ஒருவழியாக மதியச்சாப்பாட்டு நேரத்துக்கே உறக்கம் களைந்து எழுந்தமர்ந்தாள்.

என்னதான் காலேஜ் செல்ல வேண்டும் என்பதற்காக காயுவின் வற்புறுத்தலின் பேரில் ஆடை அணிகளை மாற்றியிருந்தாலும் ஊருக்கு வந்ததும் தன் ஆஸ்தான தாவணியையே அணிந்து கொண்டாள்.

அதிலெல்லாம் அவள் என்றுமே பெற்றோர் போற்றும் பிள்ளையே!

சோர்வுடன் எழுந்தவள் செல்போனில் நேரம் பார்க்க ஒன்றை தொட ஐந்து நிமிடங்கள் இருந்தது.

‘இவ்வளவு நேரமா தூங்கிட்டேனா? வர வர கும்பகர்ணனுக்கு போட்டியா மாறிக்கிட்டு இருக்கேன்.’ சோம்பல் முறித்த வண்ணம் எண்ணிக்கொண்டவள், காயுவின் ஞாபகம் எழவே உடனே அவளுக்கு அழைப்பெடுத்தாள்.

இவள் அழைப்பிற்காக நெடுநேரமாக காத்திருந்திருப்பாள் போலும்!

முதல் ரிங்கிலே எடுத்தவள், காச்மூச்சென காத்த ஆரம்பித்து விட்டாள்.

‘தொடங்கிட்டா... இது தொல்ல தாங்க முடில!’ காதை தேய்த்துக் கொண்ட அனிகா “எதுக்குடி இந்த கத்து கத்துற?” தாங்கமுடியாமல் கேட்டாள்.

“கத்துறேனா?? உனக்கு இப்போ அப்பிடித்தான்டி இருக்கும். ஊருக்கு போனதும் என்னையும் மறுந்துட்ட, நான் சொன்னதையும் மறந்துட்ட!”

‘அய்யோ என்ன சொன்னா இவ? ஞாபகம் வரமாட்டேங்குதே!’ தலை பிய்க்காத குறையாக யோசித்தும் நினைவுக்கு வரமாட்டேனென்று அதுவேறு அடம்பிடிக்க, இருந்தும் அவளை சமாளிக்க வேண்டி,

“யாரு சொன்னா நான் மறந்துட்டேன்னு, அதெல்லாம் எனக்கு நன்னா ஞாபகம் இருக்கே!” வான்டட்டாக வசமாக சிக்கிக்கொண்டாள் அனிகா.

“அப்போ சொல்லு. நான் என்ன சொன்னேன்?” கிடுக்கிப்பிடி போட்டாள் காயு.

“அது வந்து... அதான்... நீ சொன்னியே. அதாவது...”

“நீ இன்னமும் சொல்லல செல்லம். சொல்லு சொல்லு...”

“ஹிஹி பேபி, என்னைய பத்தி உனக்கு தெரியும்ல. நான்தான் எல்லாத்தையும் மறந்துடுவேனே... ஞாபக படுத்தேன் பேபி.”

“போனா போகுதுன்னு சொல்றேன்! ஊருக்கு போனதும் போன் பண்ணுன்னு சொன்னேன்ல... சரி சரின்னு மண்டைய மண்டைய ஆட்டிட்டு போன் பண்ணியாடி? நல்லா சாப்ட்டு தூங்கி இருப்ப?”

“ஓ... இதானா? நான்கூட என்னவோ ஏதோவொன்னு பயந்துட்டேன்.” என்றவள் சிறு இடைவெளி விட்டு, “ஆமா, அது எப்பிடி உனக்கு தெரியும்? பக்கத்திலிருந்து பார்த்தவளாட்டம் அப்பிடியே சொல்ற?”

“எத?”

“அதான்டி, இப்போ சொன்னியே... நல்லா சாப்ட்டு தூங்கின்னேனு. அத பத்தி கேக்குறேன்.”

“இதுக்கு பேர் தான் போட்டு வாங்குறது.”

‘ச்சே...’ பல்லைக் கடித்தவள், “அப்போ நானாவே உன்கிட்ட உளறிட்டேனா?” சிணுங்கியவள், “ஆனாலும் பேபி, நீ அநியாத்திற்கு என்கூட சேர்ந்து கேட்டுப்போய்ட்ட...” கடுப்படித்தாள்.

“ஏய்! ச்சீ... அசிங்கமா பேசாதடி.”

“அடிங்...” அதட்டியவளுக்கு சிரிப்பு வர, அந்தப்பக்கம் காயுவின் வெடிச்சிரிப்பும் கேட்டது இவளுக்கு!

ஒருவழியாக இணைப்பை துண்டித்த அனிகா வெளியே செல்ல எத்தனிக்கும் போது, அவளை அழைக்கவென்று உள்ளே வந்தார் வாசுமதி.

“நல்லா தூங்கினியா கண்ணம்மா? அப்போவே வந்தேன் அசந்து தூங்கிட்டு இருந்த அதான் எழும்போது எழட்டுன்னு போயிட்டேன்.” கூறியவரின் தோளில் வாகாய் சாய்ந்து கொண்டவள், “ராத்திரி முழுசும் தூக்கம் வரமாட்டேன்ச்சா அதான் நல்லா தூங்கிட்டேன்...” சலுகையாய்க் கூறினாள்.

மகளிற்காக கதிர்வேலனும் கூடத்தில் காத்திருந்தார்.

அவருடன் இணைந்து கொண்டவள் தயங்கிய தாயையும் அருகமர்த்திக் கொண்டாள். ரெங்கநாயகி நேரத்தோடு சாப்பிட்டு முடித்திடுவார் என்பதால் மூவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணத் துவங்கினர்.

பறப்பன, நடப்பன, நீந்துவன எல்லாமும் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

“அம்ஸ், என்ன நினச்சிட்டிருக்க நீ? என்னைய பார்த்தா உனக்கு எப்பிடி தெரிது?” அயிட்டங்களை அலசியவள் கடுப்புடன் கேட்டாள்.

மகள் திடீர் கோபத்தின் காரணம் புரியாத வாசுமதி அவளுக்கு பிடித்த வாத்துக்கறி சமைக்காததாலே கோபம் கொண்டிருக்கிறாள் என்றெண்ணி,

“என்னடா? வாத்துக்கறி வறுவல் இல்லன்னு கோபப்படுதியா? அப்பாகிட்ட எம்புட்டு தூரம் சொன்னேன், மறந்துட்டாரு. நாளைக்கு மொத வேலையா நம்ம வேலுக்கிட்ட சொல்லி வாத்தை வாங்கியாற சொல்லிறேன்.”

தாயின் பேச்சில் அழமாட்டாத குறையாக அமர்ந்திருந்தவள், அடக்கப்பட்ட சிரிப்பில் மீசை துடிக்க தட்டை எடுத்துக் கொண்டிருந்த கதிர்வேலனைக் கண்டதும் பொய்க்கோபம் பூண்டு “அப்பா!!!” அலறியவள் அடுத்த நொடியே தன்னையும் மறந்து பக்கென்று சிரிக்க, இணைந்து கொண்டார் கதிர்வேலன்.

தந்தை மகள் சிரிப்பின் காரணம் அறியாத போதும் வாசுமதியின் முகத்திலும் புன்னகை அரும்பி விரிந்தது.

அப்போது தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்த ரெங்கநாயகியின் முகத்தில் இவர்கள் மகிழ்வான முகம் தெளிவாக விழ ‘என் குடும்பம் என்னிக்கும் இதே சந்தோஷத்தோட இருக்கனும். எந்த கஷ்டத்தையும் கொடுத்துறாதே கடவுளே!’ இறைவனிடம் வேண்டுதல் வைத்தாலும் அவர் முகமும் சிரிப்பை வாங்கி அணிந்து கொண்டது.

சிரித்த சிரிப்பின் விளைவில் வயிறு வலியெடுக்க இரும தொடங்கியவளுக்கு தண்ணீரை புகட்டி காரணம் கேட்ட வாசுமதியிடம் காலை வரும் போது நடந்த சம்பாஷணைகளை கூற, வாசுமதியும் தன் மடத்தனம் புரிந்து அசட்டு சிரிப்பை உதிர்க்க... கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் ஒருவழியாக அவர்கள் மதியவுணவு இனிதே முடிந்தது.

அன்று மாலை வாசுமதியுடன் அமர்ந்து காலேஜில் நடந்த விஷயங்களை சுவாரஸ்யம் பொங்க கூறி மகிழ்ந்தவள், காயுவுடனும் அவரை பேச வைத்தாள். தன் கிழவியையும் மறக்கவில்லை அவள்.

இடையிடையே அவரையும் வம்பி பண்ணி திரிந்தவள், மஞ்சுவின் வீட்டுக்கு சென்று ரங்கத்தை, மஞ்சுவின் ஊரிலிருந்த வந்திருந்த அண்ணனுடன் அமர்ந்து பேசிவிட்டு தோழியுடன் ஆத்தங்கரைக்கு செல்ல... பல நாட்களுக்கு பின்னர் அவள் வருகையை கொண்டாடும் விதமாக மழை தன் அச்சாரத்தை மண்ணை நோக்கி வீசியது.

இருவருக்கும் அந்நொடி தங்கள் பால்ய காலம் நினைவில் எழ, சொல்லவும் வேண்டுமோ...? மழைப்பாடல்கள் எல்லாம் அவர்கள் வாயில் விழுந்து அரைபட, ஆட்டம் போட்டவர்களை அன்றுபோல் இன்றும் வாசுமதியின் தான் இழுத்துச்செல்லாத அழைத்துச்செல்ல வேண்டி இருந்தது.

“என்ன அனிம்மா? ஊருக்கு வந்த பிள்ளயோட கலகலப்பா இருக்கலாம்னு பார்த்தா நீ ஜூரத்த இழுத்து விட்டுருவ போல...? ஆதங்கமாகக் கூறினார் வாசுமதி.

கதிர்வேலனும் ‘என்ன கண்ணம்மா இது!’ என்பது போல பார்த்துச்செல்ல, அவளுக்குத்தான் கவலையாகி விட்டது.

ரெங்கநாயகியும் “இன்னும் என்ன சின்ன குழந்தையாட்டம்!” அதட்டிச்செல்ல, உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டாள் அவள்.

அதன்பின் அவளை சமாதானம் செய்வதற்குள் அவர்களுக்கு போதும் போதுமென்றாகி விட்டது.

அன்று மட்டுமல்ல அதன்பின் வந்த நாட்களும் கலகலப்பிற்கும் மகிழ்விற்கும் குறைவில்லாமல் மின்னல் வேகத்தில் கடந்து செல்ல, அவள் கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது.

இன்றும் ரெயிலில் செல்லவேண்டும் என்று அனிகா அடம்பிடிக்க, பர்ஸ்ட் கிளாஸ் கோச்சில் டிக்கெட்டை எடுத்திருந்தார் கதிர்வேலன்.

தானும் உடன்வந்து விட்டுச்செல்வதாக அவர் எவ்வளவு கூறியும் அவரின் உடல்நலத்தை கருத்தில்கொண்டு அலைச்சல் வேண்டாம் என்று ஒரேயடியாக மறுத்தவள், தான் தனியாகவே சென்று விடுவதாகவும் கார்த்திக் ஸ்டேஷனில் காத்திருப்பான் என்றும் தனக்கு பயம் இல்லை என்றும் கூறி, தன் முடிவை ஸ்திரமாக்கிக் கொண்டாள்.

ஆளாளுக்கு ஆயிரம் பத்திரம் கூற, போதாதற்கு வீட்டு வேலையாட்களும் தங்கள் பங்கிற்கு ‘கவனமாக போய்ட்டு வாங்க சின்னம்மா!’ என்று விடைகொடுத்திருக்க, அனைவரிடமும் கண்கள் கலங்க விடைபெற்று தந்தையுடன் வந்து ரெயிலேறினாள் அனிகா.

இந்த ஐந்து நாட்களும் எப்படிப் போனதென்று கேட்டால் என்ன சொல்வதென யோசித்துப்பார்க்க வேண்டி இருக்கும் அவளுக்கு!

இனிப்போடு காரத்தை உண்ட காலம் இது அவளுக்கு!

இன்பமும் துன்பமும் கலந்துகட்டி அவளை பந்தாடியது!

‘எப்போதடா தன் கல்லூரிக்காலம் முடிவுக்கு வரும்?’ என்ற ஏக்கம் அவளில்!

பெரும் விசில் சத்தம் காதை அடைக்க... வண்டி கிளம்பும் நேரம் வந்ததும் தன்னையே பார்த்து நின்ற தந்தையை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்துக்கொண்டே கையாட்டி விடை பெற்றவள், ஜன்னல் கண்ணாடியில் தலை சாய்த்துக் கொண்டாள்.

முடிகளின் சில கற்றைகள் கன்னத்தை மறைக்க கண்ணீரின் ஓர் துளி கன்னம் தொட்டு, கழுத்தின் வழி பயணிக்க... கவலையை களவாடிக்கொண்ட அவள் முகம் சோர்ந்து போயிருந்தது.

என்னதான் வெளியில் கலகலப்பாக தைரியசாலியாக காட்டிக்கொண்டாலும் உறவுகளின் மீதான இளக்கம் சொல்லும் அவள் கோழையென்று!

கண்ணீரின் பெருவெள்ளத்தை துடைக்கக்கூட தோன்றாமல் தொலைவானை வெறித்திருந்தாள்!

“செர்ரி!! உன் சோகம் சூறாவளியா என்னையும் தாக்குது! இந்த கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினாலும் என்னால தாங்க முடியாது செர்ரி!” ஆத்மார்த்தமாக அகம் உரைக்கும் சன்னக்குரல் கண்மூடி அமர்ந்திருந்த பாவை காதில்!

சோகத்தின் தாக்கம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய் அவள் இதயத்தில் காதல் தன் ஸ்வரம் மீட்டியது!

இதே ரெயிலில் அன்று தன் கனவில் வந்த மன்னவன் சொல்லி அழைத்த பேர் செவி தன்னிலே விழுந்த கணம், இவ்வைந்து நாட்களும் இரவுகளின் இனிமையில் நித்தம் தோன்றி தன் இதயத்தை வதைக்கும் வில்லனின் நினைவுகள் எம்பி எழுந்து அவள் நெஞ்சத்தை தாலாட்ட, “என்னால அவங்கள பிரிஞ்சு இருக்க முடியிறதில்ல... நான் அவங்கள ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன், வில்லன்!” அதே சன்னக்குரலில் தன் மனதிள்ளோனிடம் மனதை வெளிப்படுத்தினாள் அவன் மனதிற்கினியவள்!

“வில்லன்!?!” அதிசய ஆர்ப்பரிப்புடனான ஓர் குரல் மீண்டும் அவள் காதுகளில்!

அதே நேரத்தில்...

“வில்லன்!?!” தன் அகத்தில் இருப்பவன் குரல் நிஜத்தில் செவியில் ஒலித்தது கண்டு, கனவென்று எண்ணி கவலை மொழிந்தவள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் நிமிர்ந்து நோக்க... அங்கு அவளுக்கெதிரே ஆறடி ஆண்மகன் அவன் அலட்டலின்றி அமர்ந்திருந்தான்!

அவளின் வில்லன்!

அதிர்ந்தே போனாள் அவள்!

அவனொருவன் உள்ளே வந்ததைக் கூட கவனத்தில் கொள்ளாமல் கவலையில் அமர்ந்திருந்தேனே!

உண்மையிலே இங்கு இருக்கிறானா? அல்லது அன்று நிஜம் போலவே கண்ட கனவா?

தான் வில்லன் என்றது செவியில் விழுந்திருக்குமா? என்ன நினைத்திருப்பான்? என்ன சொல்வான்? திட்டுவானோ? சும்மாவே தன்னைக் கண்டால் எடக்குமடக்காக எதையாவது செய்து என்னை குழப்புவான். இன்று என்னோடு ஒரே கோச்சில்!! என்ன நடக்க போகிறதோ?

ஏகப்பட்ட எண்ணங்கள் ஓர் நொடியில்!

அதிர்ச்சி, ஆச்சரியம், ஆசை, ஆவல், காதல், குறுகுறுப்பு, குழப்பம், பயம், பதட்டம், படபடப்பு, எதிர்பார்ப்பு!

இத்தனை உணர்வுகளும் அவள் ஒருத்தியில்!

அதேசமயம், ‘செர்ரி!’ என்று அழைத்ததும் இவனே தானா? இவனுக்கு எப்படி தன் கனவில் வந்த, தான் மட்டுமே அறிந்த பேர் தெரிந்தது? என்ற எண்ணமும் மூளையை வண்டாகக் குடைந்தது.

சொல்லில் வடிக்க முடியாத உணர்வுகள் சொக்கனின் மீனாட்சியை சொட்டு சொட்டாகத் தாக்க சோர்ந்தே போனாள் அனிகா.

“ம்ம்... டேக் இட்!” வாட்டர் பாட்டால் ஒன்றை அவள் புறமாக நீட்டினான் அவன்!

தயங்கித் தயங்கித்தான் வாங்கினாள்.

இப்போதைய அவள் நிலைக்கு இந்த தண்ணீர் அவசியமாகப்பட மறுப்பு தெரிவிக்காமல் தொண்டைக்குள் சரித்தாள்.

நீரின் நுழைவு அகம் நுழைந்த உணர்வுகளை சற்றே போக்க, கனவல்ல நிஜமென்று உணர்ந்து கொண்டவள் குறுகுறுவென பார்வை அவனில் நிலைக்க அறிந்துகொள்ள வேண்டி, “என்னை என்னவோ சொல்லி கூப்ட்டியே? உனக்கு எப்பிடி அந்த பேர் தெரியும்?” அவன் முகத்தை அளந்தபடி கேட்டாள்.

உள்ளத்து படபடப்பை வெளிக்காட்டாமல் மறைத்து அவள் கேட்டாலும் அவளின் அவன் கண்களுக்கு தப்பவில்லை அது!

கருமணிகள் அலைபாயும் அழகும் இதழோரம் துளிர்த்த வியர்வையின் எழிலும் விரல் நகங்கள் ஆராயும் கைகளின் பதட்டமும் ஆண்மை பொருந்தியவன் அவன் கண்களில் விழாமலில்லை.

அவளின் அச்செயல்கள் ஆணின் அகத்தை ஈர்த்துச்செல்ல ரசனையுடன் அளவிட்டான் அவளை!

அவன் முதன் முதலில் பார்த்தது போலே பட்டிக்காட்டின் மொத்த உருவமாக அவள்!

அவள் உடுத்திருந்த உடையின் நிறம் அத்தனை பொருத்தமாகவும் எடுப்பாகவும் அவளின் அழகை தூக்கிக் காட்டியது!

பின்னலிட்ட கூந்தல்! ஒப்பனையற்ற முகம்! இருந்தும் பட்டிக்காட்டு மைனாவின் ஒப்பில்லாத எழிலில் மொத்தமாய் வீழ்ந்து போனான் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த ஒப்பில்லாதவன்!

அவனின் அவளுமே கேள்விக்கான பதிலை எதிர்பார்த்தபடி கடைக்கண் பார்வையால் ஆளுமையின் அம்சமாய் அமர்ந்திருந்தோன் அழகினை விழிகளினால் இதயம் அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தவள் தன்னை மறந்து அவனில் மூழ்கிப்போய் அகத்தை அடகு வைத்து விட்டாள்.

என்றும் பார்மல் கோட்சூட்டில் ஒபீசியல் லுக் கொடுப்பவன் இன்று அதிசயத்திலும் அதிசயமாக காஸுவல் உடையில் இன்னம் சற்று கவர்ச்சி கூடித்தெரிய தறிகெட்டுத்தான் போனாள் அவளும்!

ஒருவருக்கு ஒருவர் பொருத்தமில்லாத இருவர் மற்றவர் அறியாமல் ஒருவரை ஒருவர் ஒப்பீடு செய்தவர்கள் தங்களின் இதயத்தை தத்தம் இணைகளுக்கு தாரைவார்த்துக் கொண்டிருந்தனர்.

“எதுக்கு இப்போ இப்பிடி பார்க்குற?” உடல் பூராவும் ஊடுருவிச்செல்லும் அவன் பார்வையில் நடுங்கிச் சிலிர்த்த உடலை அடக்கிக்கொண்டு அதட்டலாக கேட்டாள்.

“நீயும் தானே பார்த்த?”

‘நான் பார்த்ததை பார்த்துவிட்டானா? என்ன சொல்லி சமாளிக்கிறது?’ யோசனையுடன், “நீ பார்த்தீல்ல அதத்தான் நான் பார்த்தேன்!”

“அதே தான் நானும் பண்ணேன்! நீ பார்த்த... பதிலுக்கு நானும் பார்த்தேன்!”

‘இதற்கு என்ன சொல்வது?’ தெளிந்திருந்த தன்னை குழப்பி விட்டவனை குழம்பிப்போய் பார்த்தாள் அனிகா.

மங்கையின் மான்விழிப் பார்வையில் மயங்கியவன் மயக்கத்தோடு மாதுவை நோக்கினான்!

காளையின் காதல் பார்வையில் காரிகை காதலாகி காதலோடு காதலனை நோக்கினாள்!


ஒரு நொடி ஒரே நொடி
உன் பார்வை பார்த்தேன்!
அதே கணம் அதே ஷணம்
அடி உயிர் வரை வேர்த்ததே!
அடடா இரு இதயம் இங்கே தடம் புரண்டதே!
மனசுக்குள் கைக்கலப்பு நடக்கின்றதே!
கண்ணுக்குள் சம்திங் சம்திங் நடக்கின்றதே!
ஐயோ இனி ஆரம்பம் ஆச்சு
காதல் சடுகுடு சடுகுடு...!



தொடரும்...


 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் விழியை நீங்கி நீ விலகாதே!


அத்தியாயம் 08


அவளைக் காணாது அவன் உடல் மெலியவில்லை! உணவை தவிர்க்கவில்லை! உறக்கத்தை கெடுக்கவில்லை! ஆதிக்கமும் அகம்பாவமும் கொண்டோன் அவனின் நெஞ்சத்திலே மொத்தமும் அடைக்கலமாகி ஆடவனை ஆட்டிப்படைத்தது.

ஆடவன் அவன் நெஞ்சம் தாம் தவித்த தவிப்பில் அண்ட சராசரமும் ஆட்டம் காணததொன்றே குறை!

அவள் குறித்த தகவல்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பவன் அவள் ஊருக்குச் சென்றதை அறியாது போயிருப்பானா என்ன?

தன் இயல்புகள் எதையும் இயல்புப்படி எவர் ஒருவரிடமும் வெளிப்படுத்தாத அழுத்தக்காரனான அவன், அகத்தில் இருப்பவள் அவளிடம் அடிதடியில் இறங்கினான்.

‘யாரைக் கேட்டு ஊருக்குச் செல்ல முடிவெடுத்தாய்?’ அவளுடனான அவன் வாதம் இதுவே!

அவள்பால் கரைந்து கொண்டிருக்கும் மென்மையை தத்தெடுத்த அவன் இதயம் அவளின் பிரிவினை தாங்காது வன்மையாக மாறி வார் தொடுக்க, அவனாக அவனில்லை அவளில்லாமல்!

பாட்டல் பாட்டலாக உள்ளிறங்கும் மதுவின் போதை கூட மாதுவின் ஆதிக்கத்தை போக்கவில்லை.

கோபத்தில் கொதித்துப் போனான்.

இப்போதே அவளைக் கண்ணாரக் கண்டு கவர்ந்தெடுத்து வந்து தன்னிடத்தில் தக்க வைத்துகொள்ள வேண்டும் போல் வெறியே கிளம்பியது.

நினைத்ததை நினைத்த மாத்திரத்திலே செய்து முடிப்பவன் அவன் அன்றோ?

அதையும் செய்திடவே துணிந்தான்.

தகுதி, தராதரம், அந்தஸ்து ரத்தத்தில் ஊறப்பிறந்தவன் அவளுக்காக அனைத்தையும் தூக்கி தூர எறிந்து தன் பட்டிக்காட்டு மைனாவைக் காண திப்பம்பட்டி செல்லவும் துணிந்தான். அதை செயல் படுத்தியும் விட்டான்.

அவளைக் காண்பது ஒன்றே குறியாக தான் யாரென்பதையும் மறந்து போனான்.

இது எத்தகைய உணர்வு? என்ன மாதிரியான காதல்?

அவனால் இன்னமும் கூட தன் சிந்தை சிதைந்து போனதை நம்ப முடியவில்லை.

அவனொன்றும் விடலைப்பருவப் பையன் அல்ல. எல்லாமும் கற்றுத்தேர்ந்து விரல் நுனியில் சகலதையும் வைத்திருந்து ஒரு ஊரையே ஆட்டிப்படைக்கும் முழு ஆண்மகன்.

மூன்றெழுத்து மாயம் அவன் நிலையை மொத்தமாக புரட்டிப்போட்டு விட்டது.

அல்பத்தனமாக அவள் செய்யும் ஒவ்வொன்றும் ஆடவனை அடித்துச் சாய்த்தது.

மழையில் அவள் ஆட்டம் போட்ட அழகு! தானும் அவளோடு இணைய மாட்டோமாவென ஆறடி அவனை அணுவணுவாக ஏங்க வைத்தது.

வயலோடு அவள் உறவாடும் அழகு! அதற்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி பொறாமை கொள்ளச் செய்தது.

குடும்பத்துடனான அவள் பாசப்பிணைப்பு! தானும் அதிலொரு அங்கத்தவனாக மாறிட மாட்டோமா என்று ஆசைகொள்ள வைத்தது.

ஆகமொத்தத்தில் அவளைக் காணாதும் அவன் அவனாக இல்லை! அவளைக் கண்டும் அவன் அவனாக இல்லை!

அவன் நினைத்தால் அந்நொடியே அவளை தன்னிடத்தில் சிறை வைத்திருக்க முடியம். ஏனோ அவளாக அவளிருக்கும் அக்கணங்களை ரகசியமாக ரசித்துக் கொண்டிருந்தவன் அதைச் செய்ய முனையவில்லை.

காத்திருந்த வேடன் வலையில் வசமாக சிக்கிக்கொண்ட மானைப் போல் இதோ அவன் முன் அவள்!

இந்நொடி ஒன்றிற்காகவல்லவா அவனும் காத்திருந்தது.

காத்திருப்பு நிறைவேறியதில் காளையின் மனதில் தான் எத்தனை ஆனந்தம்!

அதுவும் பெண் அவளால் வில்லனென அழைக்கப்பட்ட அத்தருணம் அகலாமல் நிறுத்தி வைத்திட அவா கொண்டது ஆடவன் மனம்!

வருந்திய வருத்தமெல்லாம் வந்த வழி திரும்பிச்செல்ல, அன்று முழுக்க அவளையே பார்த்துக் கிடந்தான்.

“நான் கேட்டதுக்கு இன்னமும் நீ பதில் சொல்லல?” தெரிந்து கொண்டிடும் ஆவலில் அவள் எத்தனை தூரம் கேட்டும் அவன் பதில் சொல்லவில்லை.

தான் எதற்காக அப்படி அழைத்தோம் என்பது அவனுக்கே தெரியாத போது என்னவென்று அவன் அவளிடம் சொல்வான்?

கண்ணீர் கசிந்தோடும் அவள் முகங்கண்டதும் தானாகவே அவனையும் மீறி வந்த விட்டவார்த்தை அது.

எத்தனை கேட்டும் பதில் சொல்லாமல் மழுப்பியவனைக் கண்டு எரிச்சலில் பல்லை நறநறக்க மட்டுமே அவளால் முடிந்தது.

தனக்கும் இதுபோல் ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் முடிந்த மட்டும் அவனைக் கடுப்பேற்ற வேண்டும் என்றெண்ணிக் கொண்டவளுக்கு அடுத்த சில நொடிகளே அச்சந்தர்ப்பமும் அமைந்தது.

அவள் கேட்டது போல அவனும் கேட்டான்!

“ஐ லைக் தட் சவுண்ட்... வில்லன்!!”

முகத்தில் எவ்வித உணர்வினையும் பிரதிபலிக்காது இறுக்கத்துடன் அவன் கேட்ட போது பயந்தே போனாள் அனிகா.

‘திட்டப் போறான்... திட்ட போறான்...’ இருக்கையோடு ஒன்றியவள் ஓரக்கண்ணால் அவனை நோட்டம் விட்டு உள்ளூர அரும்பிய பயத்துடனே அவனைப் பார்த்திருந்தாள்.

‘ஓடுற ரெயின்ல அவனோட நீ இருக்கே!! ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணிப்புட்டாலும் கேக்க நாதியில்ல... வாயக்கொடுத்து வசமா மாட்டிக்கிட்டியே அனிக்குட்டி!’

அவள் எண்ணமெல்லாம் இதுவாகத்தான் இருந்தது.

அவனை முதன் முதலில் பார்த்ததே அடிதடி பஞ்சாயத்தில் அல்லவா!!

அதற்காகத்தானே அவள் அவனுக்கு வில்லன் என்ற பெயரையும் சூட்டினாள். இப்பிடியாக அவள் யோசனைகளை ஓடிக்கொண்டிருக்க, தன் பட்டிக்காட்டு மைனாவின் முகம் பூத்த பயப்பூக்களைக் கண்டு அவள் தைரியத்தின் அளவை மெச்சி கேலியாகச் சிரித்துக்கொண்டவன் அவனின் செதுக்கிய அதரங்கள் மென்புன்னகை பூத்ததிலே, தன் பயம் அகன்று ஆசுவாசப் பெருமூச்சொன்றை இழுத்துவிட்டாள் அனிகா.

அத்தோடு நிறுத்தி இருக்கலாம்!! அவள் வாய் எங்கே அவள் சொல் பேச்சைக் கேட்டு நடக்கிறது?

“ஹப்பாடா!!!! உன் கோபம் போய்டிச்சில்ல...?” முப்பத்திரெண்டு பல்லையும் காட்டி இளித்துக்கொண்டு அவள் கேட்ட அழகில், தன்னைத் தொலைத்தவன் அவளை சீண்டவென்றே முறைத்த முறைப்பில் அவளுக்கு குளிர் ஜுரமே வந்துவிட்டது.

எச்சிலை விழுங்கிக்கொண்டு திருதிருவென அவள் முழிக்கக் கண்டதும் கோப்பாவத்தை கைவிட்டவன், தன்னியல்பு துறந்து பக்கென்று சிரித்து விட்டான்.

‘என்னை என்ன பண்ணுது இந்தப் பட்டிக்காட்டு மைனா!?!’ அவன் அகத்தில் ஓடிய எண்ணம் இதுவாகத்தான் இருந்தது!

“நீ சிரிக்கிற!?!!” அப்போதும் சும்மா இருக்கவில்லை அவள். அது அவளால் முடியும் காரியமா என்ன?

அர்த்தமற்ற வார்த்தையாடல்கள். கிண்கிணி சிரிப்புச் சத்தங்கள். பார்வை பரிமாற்றங்கள். செல்லச் சிணுங்கல்கள்.

அந்த ஒரு நாள் இரவு அவர்கள் உறவுக்கான உரிமையை அழுத்தமாக நிலைநாட்டியது!

நினைவுச் சின்னமாக அவர்களாலும் போற்றப்படும் அழகியதோர் இரவது!

அந்த இரவினில் நடந்தேறிய அர்த்தமற்ற வார்த்தையாடல்களை மனதிலே படமாக ஓடவிட்டு, ரசித்து மகிழ்ந்து வெட்கத்தின் சாரலில் சுகமாக நனைந்து கொண்டிருந்தாள் அனிகா.

‘மை ஸ்வீடெஸ்ட் வில்லன்!’ காதல் போதையில் மிழற்றியது பேதையின் செவ்வதரங்கள்!

அவ்விரவு கடந்து இன்றுடன் வாரம் ஒன்றாகி விட்டது. வழமைக்கு திரும்பி விட்டனர் இருவரும்.

பாதியில் விட்ட வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்!

படிக்க வேண்டிய பாடங்களை எல்லாம் படித்துக் கொண்டிருந்தாள் அவள்!

இருந்தும் அவ்வப்போது எழும் அந்நாளின் தாக்கம் இருவரையும் இன்னம் கொஞ்சம் காதல் கொள்ளச் செய்தது!

அன்று மிக முக்கியமான டெஸ்ட் இருப்பதால் மாலதியை பாடாய்படுத்தி அரைகுறை உணவோடு கல்லூரிக்குச் சென்றவள் காயுவுடன் அரட்டை அடித்துக்கொண்டே ஒருவழியாக டெஸ்ட் முடிந்து வெளியில் வந்து தான் வழக்கமாக அமரும் அரசமரத்தின் கீழ் அமர்ந்து வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்தாள்.

“படிக்கல படிக்கலன்னு சொல்லி பக்கம் பக்கமா எழுட்டிருந்தியே அனி பேபி! என்கிட்ட பொய் சொல்லிருக்கேல்ல?” தொடங்கினாள் காயு.

“நீ வேற! வாத்தி என்னையவே உர்ருன்னு உத்து உத்து பார்த்திட்டிருந்தாரா, அங்கிட்டு இங்கிட்டு அசைய முடியாம கடுப்போட கண்டதையும் கிறுக்கிக்கிட்டு இருந்தேன்!” அசால்டாக கூறினாள் அனிகா.

“அப்போ நீ படிக்கலயாடி? இத முன்னாடியே சொல்றதில்ல? ச்சே... அப்போ என்ன மண்ணுக்குடி பெரிய படிப்பாளி மாதிரி எழுதிட்டு இருந்த? உன் பின்னாடி இருந்த நானு உன்னோடத அப்பிடியே காப்பி பண்ணிட்டேன்டி.” – அழுகுரலில் காயு.

“ஹஹா... அனிகாவை நம்பினோர் கைவிடப்படார் பேபி. யு டோன்ட் வொரி... படிச்சதையும் சேர்த்து கலந்துகட்டி தான் எழுதிருக்கேன். பாஸ் மார்க் இல்லன்னாலும் என்னைக்கும் இந்த அனிகா பெயில் ஆகமாட்டேன்.”

“அப்போ படிக்கலன்ன?”

“சேச்சேச்சே!! இப்போ அதுவாடி முக்கியம்? எப்பிடியோ ஒருவழியா டெஸ்ட் முடிச்சிட்டோம்னு நானே சந்தோஷமா இருக்கேன். நீ என்னடான்னா அதையே திரும்பத் திரும்ப நியாபக படுத்திட்டு இருக்க? உன்னோட பெரிய ரோதனையா போச்சுடி.” சலித்துக்கொண்டவள் நொடிநேர யோசனையின் பின்னர், “பேபி! டெஸ்ட் முடிஞ்சத செலப்ரேட் பண்ணுவோமா?”

“அப்பிடிங்கற?”

“அதே!”

அடுத்த சில நொடிகளில் இருவரும் கல்லூரியை விட்டுத் தள்ளியிருந்த ரெஸ்டாரன்ட் ஒன்றிற்குள் நுழைய, கடும் பசியிலிருந்த அனிகா மெனு கார்டில் பார்வையோட்டிக்கொண்டே பேரரிடம் தேவையானதை எல்லாம் ஆர்டர் செய்து கொண்டிருந்தாள்.

பேரர் அந்தப்பக்கம் நகர்வதற்காகவே காத்திருந்தாற்போல் பேச்சை துவங்கி வைத்தாள் காயு.

“அனி பேபி! கேக்கணும்னு இருந்தேன் மறந்துட்டேன்.”

பலத்த பீடிகையுடன் ஆரம்பித்தவளை ஏற இறங்கப் பார்த்த அனிகா, “நீ தலையை சுத்தி மூக்க தொடமாட்டியே பேபி? ஸ்ட்ரைட்டா விஷயத்த வா.”

“அது வந்து... அதான்... நீ அன்னிக்கு சொன்னியே... ஒரு கதை... ஆங்... இல்ல லவ் ஸ்டோரி... அது இப்போவும் அப்படியே இருக்கா இல்ல மறந்துட்டியா?” ஆவலை அடக்க முடியா ஆர்வத்துடன் கேட்டாள்.

அவள் எதைக் கேட்கிறாள் என்பதை கண்டுகொண்ட அனிகாவின் முகம் குப்பென்று குங்கும நிறம் பூசிக்கொள்ள அரும்பும் வெட்கத்தை அரும்பாடுபட்டு அடக்கியவள் “எத... எதப்பத்தி... எந்த லவ் ஸ்டோரி பத்தி கேக்குற?” தெரியாதவளாய் மழுப்பினாள்.

முகத்தில் படிந்த வெட்கமும் வார்த்தையில் இருந்த தடுமாற்றமும் பெண்ணின் மனதை தெள்ளத்தெளிவாகக் கூற, தோழியின் காதலை ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட காயு, “அனி பேபி! கங்கிராட்ஸ் பேபி... சரி, சொல்லு, அண்ணா எப்பிடி இருப்பாரு?” என்றாள் படபடவென்று!

தெரிந்து கொள்ளும் ஆர்வம் மலையளவு அவளில்!

அதைக் கேட்டவள் மனக்கண்ணிலோ காதலன் கல்மிஷத்துடன் கள்ளப்புன்னகை பூத்துச் சென்றான்.

நாணம் வந்து நங்கையைத் தழுவிட விரல் நகங்களை ஆராயும் பாவனையில் தலை குனிந்தவள் இருதயம், வழமைக்கு மாறாக படபடவென்று அடித்துக்கொள்ள அவளுக்குப் புரிந்துபோனது.

தன்னவன் இங்கு எங்கோ தான் இருக்கிறான்! அவள் கயல் விழிகள் காதலனைத் தேடி அலைபாய... சிக்கத்தான் இல்லை அவள் சிங்காரவேலன்!

வாயாடிப்பெண் வாயிருந்தும் ஊமையாகி விட்டாள்!

“அனி பேபி, உனக்கு வெட்கப்பட கூட தெரியுமா?” ஓட்டினாள் காயு.

“காயு ப்ளீஸ்...” கவலை படிந்த பேதையின் உள்ளம் தோழியின் கேலியில் நாணத்தில் முனகியது.

இது போல் ஒரு நிகழ்வு தன் வாழ்வில் நடைபெறும் என்பதை கற்பனையில் கூட எண்ணியிறாதவள் அவள்!

இன்று நிஜத்திலே நடந்தேறிவிட்டது!

அன்றைக்கு இருந்த குழப்பம் இன்று அவளில் இல்லை.

ரெயிலில் ஒன்றாகப் பயணம் செய்த போது கண்ணியத்தோடு அவன் நடந்து கொண்ட செயல் பெண்ணை மென்மேலும் அவன்பால் வசீகரித்தது.

தன்னைப்போல் அவனும் உணருகிறானா? அவன் மனதிலும் தான் இருக்கிறோமா? என்ற சந்தேகமும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது.

சந்தேகம் நிவர்த்திக்க பெண்ணின் இயல்பான கூச்ச சுபாவம் தடை விதித்தது.

நான் எங்ஙனம் வெட்கத்தை துறந்து அவனிடம் காதலைச் சொல்வது?

“எப்பிடி கன்பார்ம் பண்ணிக்கிட்ட பேபி? சொல்லேன்...?”

காயுவின் குரலே, அனிகாவின் யோசனை கலைத்து நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது.

“என்ன!! என்ன கேட்ட?”

“என்னடி அண்ணா ஞாபகமா? எங்க போய் டூயட் பாடிகிட்டு வர்ற?” குறும்பு கொப்பளித்தது அவளில்!

“காயு இப்பிடிலாம் பேசின பார்த்துக்கோ!! என்னைய ஓட்டுற உன்னைய ஓட்ட எனக்கும் ஒரு காலம் வரும்டி... அப்புறம் நீ வருத்தப்பட கூடாது சொல்லிப்புட்டேன்.”

“நோ வே!! நடக்காது பேபி நடக்காது...” தலை சிலுப்பிக் கூறியவள் குப்புற விழப்போகும் காலம் கைகூடி வரப்போவதை எங்ஙனம் அறியப்போகிறாள்?

“நடக்காது நடக்காதுன்னு நீ சொன்னாலும் நடக்கனும்னு இருந்தா நடந்தே தீரும் பேபி.” தத்துவத்தை அள்ளி விட்டவளை இடைமறித்தாள் காயு.

“எப்போவோ நடக்கப்போற என்னோட கதையை விடு. உன் கதையை சொல்லு பேபி?” விளையாட்டை கைவிட்டவள் சீரியஸாகப் பேசவும், உந்தித்தள்ளிய நாணத்தை இழுத்துப்பிடித்துக் கொண்டு அன்றைய நிகழ்வுகளை மெல்லிய குரலில் அவளிடம் பகிர்ந்து கொண்டாள் அனிகா.

யோசனையுடன் அவள் கூறியதை உள்வாங்கிக் கொண்டவள், “நீ தெளிவா இருக்கெல்ல பேபி?” எனவும் நாணத்துடன் ஆமோதிப்பாகத் தலையசைத்தாள் அனிகா.

“அன்னிக்கு சொன்னதைத் தான் இன்னிக்கும் சொல்றேன் அனி பேபி. ஃப்ரீயா விடு... ஒரு வாரம் ஊரிலிருந்து யோசிச்சு காதல்னு முடிவெடுத்துட்ட. அதை நான் தப்புன்னு சொல்லல... உனக்கு இன்னமும் நிறைய டைம் இருக்கு புரியுதா? ஸ்டடீஸ் கம்ப்ளீட் பண்ற வரைக்கும் யோசி... அதுக்காக படிப்பை கோட்டை விட்டுறாத... அப்புறமும் இதே காதல் இருந்ததுன்னா உன் பேரெண்ட்ஸ் கிட்ட சொல்லி மேரேஜ்க்கே ஏற்பாடு பண்ணிடு சரியா...?”

“கல்யாணத்துக்கு முன்னாடி வரும் காதல் எவ்வளவு அழகோ அதே மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமா வரும் காதலும் அழகு தான்!”

தோழியின் அறிவுரையை கவனமாக செவிமடுத்துக் கொண்ட அனிகாவிற்கும் அதுவே சரியெனப்பட்டது.

தன்னை நம்பி வெளியூர் அனுப்பி படிக்க வைக்கும் தாய், தந்தைக்கு தானும் நேர்மையாக இருக்க வேண்டும் என முழுமனதாக எண்ணிக்கொண்டவள் காதலை அகத்துக்குள் வைத்துப் பூட்டிக்கொள்ள முடிவு செய்தாள்.

அவன் ஒருவன் இருக்கும் வரைக்கும் இது சாத்தியம் ஆகுமா என்ன?

“ஒகே போலாமா?” காயு எழுந்துகொள்ள, “இருடி ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வரேன்.” என்றவளாக வாஷிங் ரூம் நோக்கி சென்றவளை, எதிர்பாராத நேரம் சுண்டியிழுத்து பூமாலையாக தன் மேல் சரிந்தவளை இடையோடு இறுக்கிக்கொண்டது வலிமை மிகு கரங்கள்!

அதிர்ச்சியில் விழிகள் ஆழ்கடலென விரிய, பயம் அப்பிக்கொண்ட முகத்துடன் ஆடவன் ஒருவன் அகன்ற மார்பில் தன் பெண்மை இலக்கணங்கள் நச்சென்று மோதியதில் நெஞ்சத் துடிப்பு ஏகத்துக்கும் எகிற பதறிக்கொண்டு அவள் விலகிட முயல, பெண்ணின் முயற்சியை முறியடித்து தன்னோடு மேலும் இறுக்கிக் கொண்டான் ஷௌர்யா வர்மா.

மென்மையில் குழைத்த மெல்லிடையில் அவன் கரங்கள் மென்மையாக ஊர்ந்து பயணம் செய்தது!

அருவருப்பும் அதிர்வுமாக திமிறி விலகிட முயன்று தோற்று கலக்கத்துடன் அந்த பரந்த மார்பில் இருந்து தலை விலத்தி அண்ணார்ந்து பார்த்தவள், தன் முகம் நோக்கி குனிந்தாற்போல் நின்றவனைக் கண்டு இன்பதிர்ச்சியில் சமைந்து போனாள்.

அவளின் அவன் அல்லவா அது...?

அருவருப்பும் அதிர்வும் அதிர்ச்சியும் பயமும் போன இடம் தெரியவில்லை.

பாவை இதயம் பந்தையக் குதிரை வேகத்தில் துடித்தது!

மங்கை மான்விழிகள் மன்னவனை மயக்கத்துடன் நோக்கியது!

செவ்வரியோடிய அதரங்கள் ரகசிய படபடப்பில் நடுங்கியது!

மாறன் மார்பில் படிந்த கரங்கள் அவன் சட்டைக்காலரை கசக்கிக்கொண்டிருக்க, சொல்லில் வடிக்க முடியாத உணர்வின் பிடியில் அவளும், அவன் அணைப்பில் தன் வசமிழந்து நின்றிருந்தாள்.

எஞ்ஞான்றும் கனல் சிந்தும் காளையின் விழிகள் காரிகையைக் கண்டதும் மாத்திரம் காதல் சொட்டுபவனவாக மாறி காதலோடு காதலியை வருடிக்கொடுத்ததில், அந்திவானச் சிகப்பை அள்ளிப் பூசிக்கொண்டது பெண்ணின் மதிவதனம்!

அவள் அவனை இவ்விடத்தில் கிஞ்சித்தும் எதிர்பார்த்திக்கவில்லை!

எதிர்பாராத சமயங்களில் எல்லாம் ஆச்சரியங்களை பரிசாக அள்ளிக் கொடுப்பவனை, காதல் சுமந்த கன்னிகையின் நெஞ்சம் விழி வழி கசிந்த காதலோடு தழுவியதில், ஆடவன் அவன் இதயம் கர்வத்தில் விம்மித் தணிந்தது!

இடை தழுவிய கரத்தின் இறுக்கம் இன்னம் கொஞ்சம் அதிகரித்தது!

எலும்புகள் நொறுங்கி விடும் போல் அவன் அணைத்த அணைப்பில் வாகாய் பொருந்தி நின்றவள் உள்ளத்தில் காதல் பட்சிகளின் சல்லாபம்!

ஒரு வாரமாய் அவனைக் காணாது உள்ளமங்கு அரும்பிய தவிப்பெல்லாம் காற்றோடு கலந்துவிட்ட உணர்வு!

பார்வை அகற்றவும் தோன்றாமல் பார்த்து நின்றாள் பாவை!

இளங்காற்றின் ஸ்பரிசத்தில் இருபக்கமும் பறந்தோடிய முடிக்கற்றைகள் அவள் முகத்தோடு உறவாடிச் சென்றதில் செல்லக்கோபம் கொண்டு அவைகளை கரங்களால் காதோரம் சொருகி விட்டவன், அவள் கன்னத்துச் சிகப்பை காதலோடு வருடிக்கொடுத்து கன்னத்தில் முத்தமும் வைத்ததில் காரிகையின் நிலை தான் பரிதாபத்திற்குரியதாகி விட்டது.

ஜிவ்வென்று உச்சி முதல் பாதம் வரை பரவிய தித்திப்பான உணர்வு, அவளை செயலிழக்கச் செய்ய போதுமாய்!

அவனின் நெருக்கம்! பிரத்தியேகமான வாசனை! காதல் சொட்டும் பார்வை! கன்னத்தில் படிந்த கரத்தின் குறுகுறுப்பு! முத்தமிட்ட இதழின் காயாத ஈரம்!

மொத்தமாகப் பெண்ணைச் சோதித்துப் பார்த்ததில் அவன் கரங்களில் நெகிழ்ந்தவளை காற்றுக்கூட புகாத வண்ணம் இழுத்தணைத்தவன் “செர்ரி!!!” இதழுரச காதோரம் கிசுகிசுத்தான்.

வாயாடி தான் அவள்! அவனுடனே பல முறை வாய்சவடால்களில் ஈடுபட்டிருக்கிறாள் தான்!

இருந்தும் இந்நொடி!! இதழ்கள் கூட இயம்ப மறுத்து இறுக மூடிக்கொண்டது!

உடல் மொத்தமும் அவனுடளுக்குள் புதைந்து கிடக்க, மேனி எங்கும் பரவிய வெப்பத்தின் வெம்மையை தாளமாட்டாமல் அவன் நெஞ்சில் அழுந்த முகம் புதைத்தவள் குரல், “வில்லன், ப்ளீஸ்!!” பலகீனமாய் முனகியது.

வியாபார ஒப்பந்தம் ஒன்றுக்காக இவ்வுயர்தர உணவு விடுதிக்கு வருகை தந்திருந்தவன் தன்னவளை அங்கு எதிர்பார்க்கவில்லை.

சட்டென்று தொற்றிக்கொண்டது பரபரப்பு அவனை!

நெஞ்சத்தில் தீ மூட்டும் நெஞ்சாத்தியை நெருங்க முடியாமல் பாதியில் விட்ட வேலைகள் எல்லாம் நெருக்கியதில் அதன் பின்னே ஓடிக்கொண்டிருந்தவன், கருத்தில் கண்சிமிட்டிச் செல்லும் இதயம் திருடிய களவானியை கண்முன்னே கண்டதில் தன்னையும் மறந்தான்.

தனிமையில் சந்திக்க சமயம் பார்த்திருந்தவன் தனியே வந்தவளை தன்னோடு இறுக்கிக்கொண்டான்.

எத்தனை நேரமாக இருவரும் தங்கள் இணையின் அருகாமையில் குளிர்காய்ந்திருந்தனரோ? அளவளாவும் அரவம் அருகில் கேட்டதும் மையல் மயக்கம் தெளிந்து ஆடவன் அணைப்பில் இருந்து துள்ளிக்குதித்து விடுபட்ட அனிகா, ஆளை வீழ்த்தும் பார்வையுடன் பேன்ட் பாக்கெட்டில் கைகள் நுழைத்து அசத்தலாக நின்றவனை இயன்ற மட்டும் முறைக்க ஆரம்பித்தாள்.

“யோவ்!! உனக்கு அறிவு இருக்கா இல்ல யாருக்கும் கடன் கொடுத்திட்டியா? இப்பிடித்தான் பொது இடத்தில் பொட்டப்புள்ளய கட்டிப்பிடிச்சு வைப்பியா? யாரும் பார்த்திருந்தா என் மானம் மரியாதை என்னாவும்?”

என்னதான் காதல் கொண்டிருந்தாலும் கூட பலரும் புழங்கும் பொது இடத்தில் இத்தகைய அவன் செயலை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

தன்னையும் மறந்து அவன் அணைப்பில் உருகிக்கரைந்ததை எண்ணி தலையில் குட்டிக்கொண்டாள் பெண்!

‘உனக்கு கொஞ்சமும் அறிவில்ல அனிக்குட்டி! அவந்தான் இடம், பொருள் பார்க்காம கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்கிறான்னா, நீயும் அப்பிடியே உருகி கரைஞ்சு போயி நிற்கிற!! லூசு... லூசு... கூமுட்ட... இப்போத்தானேடி அப்பாம்மா நம்பிக்கையை காப்பாத்தணும், படிக்கணும்னு டைலாக் விட்ட? அதுக்குள்ளார அந்தர்பல்டி அடிச்சிட்டியேடி?’ சந்தர்பத்தை பயன்படுத்தி வசைமாரி பொழிந்தது அவள் மனசாட்சி.

‘நானே அவன் பண்ண காரியத்தை எண்ணி கடுப்பில் இருக்கேன்... நீ வேற என் கோபத்தை கிளறாத!’’ மனசாட்சியை விரட்டி அடித்து கிடப்பில் போட்டவள் நெற்றிக்கண் திறக்காத குறையாக அவனைப் பார்த்தாள்.

பெண்ணின் கோபப்பார்வை கூட ஆணுக்கு காதல் பார்வையாகவே தெரிந்தது போலும்!

பதிலுக்கு அவன் வீசிய காதல் கணைகள் கன்னியின் இதயத்தை சரமாரியாக தாக்கியதில் பொங்கிய கோபமும் நீர்பட்ட நெருப்பாகிப்போனது!

“யாரு சொன்னா அது பொது இடம்னு? ஆ... அது எனக்கு மட்டுமே சொந்தமான ப்ரைவேட் பிளேஸ் செர்ரி!!”

தொடர்ந்த அவன் சரசப்பேச்சில் வாயைப் பிளந்தவள், “நீ... நீ... ஆஆஆ... உன்ன!!! ப்ப்போயா!!!”

இதற்கு மேலும் இங்கிருந்தால் பார்வையாலும் பேச்சாலுமே தன்னை பலகீனமாக்கிடுவான் என்பதை தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்ட வில்லனின் செர்ரி, முறைப்பான பார்வை ஒன்றினை மன்னவன் நோக்கி வீசியவாறே சிட்டுக்குருவியாகப் பறந்து விட்டாள்.

தன் ஒற்றைபார்வைக்கே மெழுகாய் கரையும் பாவையின் செயலிலே தன் மீதான அவள் பிடித்ததை உணர்ந்து கொண்ட மூர்க்கன் அவனுக்கு அவளின் மரியாதையற்ற விளிப்பும் பேச்சும் கோபத்தை மூட்டவில்லை... மாறாக மயக்கத்துடன் கூடிய மையல் புன்னகையை செதுக்கிய அவனிதழோரம் தோற்றுவித்தது.

தன் மாற்றம் குறித்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் மாயக்காரன்!

முதல் முறையாக அவள் கோபக்குரல் கேட்டுத்தான் கோபம் கொண்டதும் நேரங்காலம் பாராது நினைவில் எழுந்து எள்ளி நகையாடியது.

‘அது அவளை பார்க்கும் முன்பு!!’ தனக்குள் கூறிக்கொண்டவனுக்கு தன் செயல் குறித்து ஆச்சரியம் மீதுற, பின்னந்தலையை ஸ்டைலாகக் கோதிக்கொண்டவன் சிரிப்புடனே அங்கிருந்து நகர்ந்தான்.

பெண்ணின் காதலில் கைதாகியவன் அவளுக்கு பொருத்தமானவனாகவும் மாறிக்கொண்டு இருக்கிறான்!

‘இனியொரு வாட்டி அவன் இது மாதிரி பண்ணட்டும் அப்போத் தெரியும் இந்த அனிகா யாருன்னு!!! மொத தடவ முத்தம் வைக்கும் போதே பளார்ன்னு ஒன்னு விட்டிருந்தா, அவனுக்கு இந்த தைரியம் வந்திருக்குமா? எல்லாம் என்னைய சொல்லனும்...’ இதழ்கள் தன் பாட்டுக்கு திட்டித் தீர்த்தது.

முதன் முதலில் அவன் தன் இதழ் தீண்டியது கனவா? நனவா? என்றறியாது பெண் அவள் குழம்பித் தவித்த போதும், அடவடிக்காரன் அவனை காதலிப்பவளுக்கு நிச்சயம் அவன் கொடுத்தாலும் கொடுத்திருப்பான் என்றே தோன்றியது.

ஓட்டமும் நடையுமாக கடுகடுப்புடன் வந்து கொண்டிருக்கும் அனிகாவை குழப்பம் சுமந்த முகத்துடன் பார்த்தபடி எழுந்து நின்ற காயுவின் இதழ்கள் தன்னாலே, “என்னாச்சு அனி பேபி? ஹேன்ட் வாஷ் பண்ணணும் போன கை கழுவாமலே வந்திருக்க...?” குழப்பத்துடன் மொழிந்தது.

அவள் கேள்விக்கு ஏதும் பதில் அளிக்காமல் “ப்ச்!!” இதழை அழகாய் சுழித்துக் கொண்டவள், “போலாம் காயு!!” என்றவளாக காயு அறியாமல் அவன் முகம் எங்கேனும் தென்படுகிறதா? என விழியால் அலசிக்கொண்டே நகர்ந்து சென்றவள் வண்டியைக் கிளப்ப, சாலையில் சீறிக்கொண்டு பறந்தது அவளின் பிங்கி!

எழுந்த கோபத்திலும் தன் முகங்காண முயன்று முடியாமல் தோற்று தன்னை விட்டுத் தூரமாக சென்று கொண்டிருக்கும் தாரகையை இதழோரம் படிந்த வளைவானதோர் புன்னகையுடன் பார்த்தபடி காரில் அமர்ந்திருந்த அவள் வில்லன், வண்டியைக் கிளப்ப புழுதியை வாரியிறைத்துக்கொண்டு புரவியைப் போல் வேகமெடுத்தது அவனின் அஸ்டன் மார்டின் வென்டேஜ் கருப்பு நிறக்கார்!

வீட்டுக்குப்போன பின்பும் கூட விடாமல் தன் அர்ச்சனையை தொடர்ந்து கொண்டிருந்தாள் அனிகா.

‘எம்புட்டு தைரியம் அவனுக்கு? முத்தம் கொடுக்கிறான் முத்தம்...’

கோபத்தில் கொதிக்கிறாளா? இல்லை சொல்லிச்சொல்லி உள்ளூர மகிழ்கிறாளா?

அவள் மனசாட்சிக்கே சந்தேகம் வரும்படி இருந்தது அவள் நடவடிக்கைகள்!

அதையே கேள்வியாகவும் கேட்டது!

‘அவன் முத்தம் கொடுத்தட்டான்னு கடுப்பாவுறியா? இல்ல நிசமா பிரம்மையான்னு டெஸ்ட் பண்ணிக்க சொல்லிக்கிறியா...?’

அதன் கேள்வியில் அதிர்ந்தே போய்விட்டாள் அனிகா.

‘அப்பிடியும் இருக்குமோ!?!’ மனசாட்சியை மனசாட்சியே இன்றி விரட்டியடிப்பவள் அவள்!

இன்று தலைகீழாகிப்போனது அதுவும்!

‘அப்பிடியும் இருக்குமோ...?’ அவ்வெண்ணமே பெண்ணின் மனதை வியாபிக்க விடை தெரியாமல் குழம்பிப்போனாள்.

சங்கரன் நண்பர் ஒருவரைப் பார்க்க வெளியில் சென்றிருந்தார். கார்த்திக்கும் வியாபார ரீதியிலான விருந்துக்கு சென்றிருக்க, வீட்டில் அவளும் சித்தியுமே!

இரவுணவு அருந்தவும் வராமல் வந்ததலிருந்து அறையே கதியெனக் கிடந்தவளை மாலதி தான் வம்படியாக கீழே அழைத்து வந்தார்.

“என்னாச்சு அனிமா? நானும் நீ வந்ததலிருந்து பார்க்கிறேன் ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கிற, என்னாச்சுடா? வீட்டு ஞாபகம் வந்திடிச்சா...?” விடாமல் அவரும் ஏதேதோ கேட்டுக்கொண்டிருக்க, அவள் காதில் எதுவும் விழுந்ததாக இல்லை!

தான் கேட்டும் வாய் திறக்காதிருக்கும் அனிகாக் கண்டு பயந்தே போனவர் பிடித்து உலுக்கியதிலே உலகம் திரும்பியவள் “என்னடா?” என மீண்டும் தொடங்கியவரிடம், சொல்வதறியாமல் திருதிருவென முழித்தவள் “ஆ... ஆமா சித்தி!!” சமாளிப்புடன் இரவுணவை முழுங்கிக்கொண்டு மறுபடியும் சித்தி ஏதேனும் விசாரிக்க முனையும் முன்னம் அறைக்குள் புகுந்து தாழிட்டுக்கொண்டாள்.

‘என்னாச்சு இந்த அனிமாக்கு?? எதுக்கு சம்மந்தமேயில்லாம ஆமான்னு சொல்லிட்டு போறா...?’ குழம்பிய மாலதி, கார்த்திக் வந்ததும் அவனிடம் இது குறித்து பேசவேண்டும் என்றெண்ணிக் கொண்டார்.


தொடரும்....



 
Status
Not open for further replies.
Top