All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Wow... சிம்மாவோட இந்த அதிரடி சூப்பர்... அம்மாவையும் பையனையும் ஓட விட்டது சூப்பர்... இதுவரைக்கும் ராஜேஸ்வரியும், ஜெகாவும் அவனை எவ்வளவு அவமானப்படுத்தி இருப்பாங்க... இனி தான் இருக்கு அவங்களுக்கு...
எனக்கு இந்த ஆதியையும் பிடிக்கல.... உயிர்க்காதல் ன்னு அவ்ளோ காதலோட இருந்துட்டு குடும்பம், கௌரவம் ன்னு பணத்துக்காக கல்யாணம் பண்ண ரெடி ஆயிட்டா.... சிம்மா வரலைன்னா இந்நேரம் கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிருப்பா... இனி என்ன காதல்... சிம்மாவோட ஆக்ஷன் தான்....
"‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இது காதலின் ஆத்மார்த்த லாளிதம்!
சிம்ம சொப்பனமாய்
இருந்த காதல்...
பிரம்ம பிரயத்தனமாய்
இருந்த காதல்...
கை சேரும் காலம் இங்கு...
கைதியாய் நின்றிருக்க...
சம்ஹார மூர்த்தியவன்
சரசமாட அழைத்தானோ...?
அழைப்பில் அன்பில்லை
பிழைப்பில் பண்பில்லை
உழைத்து உழைத்து உயர்ந்த மகன்
வளைந்து வளைந்து கொடுத்த மகன்
நேரிழையாய் நிமிர்ந்தாலும்
பிழையாய் போனானே!
பிரிவினையில் தவித்த மகன்!
ஊருக்காக நீ இல்லை
உனக்காக நீ என்று
சிம்மாவதாரம் எடுத்திங்கு
நரசிம்ம உற்சவத்தில்
சத்திய நாராயணன் இவன்
சத்திய மூர்த்தியே! - ஆனால்
ஆதிசக்தீஸ்வரி விழியில்....?
கை வளைவில்
இருந்த காதல்...
மெய் விழியில்
இருந்த காதல்...
கை சேர வந்த நேரம்
கண் கண்டதெல்லாம் கோரம்!
அவதார மூர்த்தியின்
ஆவேசம் கண்டவள்
ஆடித்தான் போனாளோ!
அரிதார மூர்த்தியின்
ஆரோகணம் கண்டவள்
அதிர்ந்துதான் போனாளோ!
அற்பமாய் அபலையாய்
அனாதரவாய் ஆதிசக்தியவள்...
சக்தியவள் சாபம் நீங்க
வனவாசம் வாஸ்தவமே!
வனத்தின் அதிபதிக்கு
வசமான வஞ்சியிவள்
அஞ்சி அஞ்சி கெஞ்சி நிற்க...
மிஞ்சியவன் சத்தியனோ...?
சத்தியன் இல்லை என்று
சத்தமாய் சொல்பவனே...
நீ...
தேடி மீட்ட சொந்தத்தை
அந்தம் வரை காப்பாயா? - அதன்
பந்தம் தனை கரை சேர்ப்பாயா?
உன் அன்பில் கஞ்சமில்லை
உன் பண்பில் பாசமில்லை
உன் வம்பில் தஞ்சமில்லை
உன் தெம்பில் வேசமில்லை
இல்லை என்று நினைத்தாலும்
கொள்ளை என்று கனைத்தாலும்
எல்லை இல்லா காதலுக்கு
இல்லை ஒரு இலக்கணமே!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.