கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் -30 & 31)
அப்படின்னா... ராகவி விஷயத்துலேயும் எல்லாத்தையும் மாத்தி அமைச்சுட்டானா...? தன்னோட காதல் மனைவியின் மனச்சங்கடத்திற்காக... சூப்பர் !
குட் கீப் இட் அப்...!
அது சரி, அந்த குழந்தை உதியோட குழந்தை மட்டுமா..?
உதியோட குழந்தைன்னா..
அதுல சர்வாக்கும் பங்கிருக்கு தானே..? அதுக்காக அவனை கேட்காமலே.. குழந்தை பாரமாயிடும்ன்னு நினைச்சு..
என்ன முடிவுன்னாலும் எடுத்துடுவாளோ...?
என்னென்னவோ நினைச்சு ஏதேதோ வேண்டாத வேலையெல்லாம் பண்ணப் போயிருக்கா பாருங்களேன்... சரியான கிறுக்குப் புடிச்சவ
இதையேத்தான்ம்மா நாட்களும் சொன்னோம். இந்த சர்வா முதல்லயே தன் காதலை உணர்ந்திருக்கலாம். இப்ப பாருங்க பரமேஸ்வரனோட இளைய மகன் முருகன் கோலமயிலேறி உலகத்தையே சுத்தி வந்து நிருபிக்கிறதுக்குள்ள, அவங்கண்ணன் கணேசன்
அம்மையப்பனையே சுத்தி வந்து இவங்க தான் உலகமேன்னு ஷார்ட் & ஸூவீட்டா சொல்லி ஞானப்பழம் பெற்ற
கதையெல்லாம் இந்த சர்வேஸ்வரனுக்கு ஞாபகம் இல்லை போலேயிருக்கு..! ததான், இந்த சர்வா தலையைச் சுத்தி மூக்கை தொட்ட கதையா... இவன் சுத்தினதும் இல்லாம, மத்தவங்களையும் சுத்தல்ல விட்டு, பொண்டாட்டியையும்
சுத்தி விட்டு, கடைசியில எங்களையும் சுத்த வைச்சிட்டான் இந்த காதல் கிறுக்கன்...!
அவனது அனைத்து தவறுகளுக்கும் அவளே காரணமாக இருக்கும்போது..
அவனை தண்டித்து மன்னிப்பதை விட....
அவனின் தவறுகளை மன்னித்து... அவன் காதலை முழுமையுடன் ஏற்பது தானே
முறை...!
உண்மை தான்..! புற அழகை கண்டு ஈர்க்கப்படும் காதல் கடைசிவரை நிலைக்காது, நீடித்திருப்பதும் அபூர்வமே...!
ஆனால், அகஅழகைக் கண்டு அன்பு கொள்ளும் காதல் என்றென்றும் நிலைத்திருக்கும்
நீடித்தும் இருக்கும் என்பதற்கு
சர்வா & உதயரேகாவே சிறந்த உதாரணம்.
அப்படின்னா... அடுத்தது சக்தீஸ்வரனின் தேவதை பெண் கதையோ...!!!???
CRVS (or) CRVS 2797