என்ன சொல்றதுன்னு தெரியல
.. அமரை குற்றவாளி ஆக்கிட்டீங்களே மேம்
.. அன்னைக்கு அமர் ராமுக்கு நான் நியாயம் செய்யலைன்னு யோசிக்கும் போதே நினைச்சேன்.. அமரால் பாதிக்கப்பட்டவனா இருப்பான்னு.. ஆனால், அதை அவன் வாயாலேயே கேட்குறப்போ கஷ்டமா இருக்கு.. என்ன விஷயம்? என்ன நடந்தது? எப்படி சூழ்நிலை இருந்தது அப்படின்னு தெரியுறதுக்கு முன்னாடியே என் மனசு அமருக்கு தான் சப்போர்ட் பண்ணுது.. எனக்குத் தெரிஞ்சு அமரால் நிச்சயம் யாருக்கும் கெடுதல் செய்ய முடியாது. அவன் வேற மாதிரி
.. அவனால் வாழ்ந்தவங்க தான் கண்டிப்பா இருப்பாங்க.. அதிலும் குழந்தைக்கு கெடுதலா..! ம்ஹூம்.. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையில் நிகழக்கூடாதது ஏதும் நிகழ்ந்திருக்கும்.
நிர்மலா அண்ட் அவங்க அம்மா பேசிக்கிறதை பார்த்தா வில்லங்கம் அரவிந்த் கிட்ட இருந்து வந்திருக்கும் போலவே.. ஆல்ரெடி சரித்திரம் திரும்புதோனு சொன்னவரு.. ஒருவேளை ராம் அவரோட பையன் தானோ?? ஸ்டேட்டஸ் காரணமா அம்மாவும் மகளும் சேர்ந்து அரவிந்துக்கே தெரியாம அவங்கள ஏதோ பண்ணிட்டாங்களா?
ராம்.. அவன் பக்கம் நியாயம் இருந்தாலும் கூட, அமர் கூட இத்தனை வருஷம் இருந்திருக்கான்.. அமரின் உண்மை குணம் எதுன்னு தெரியலையா? உன்னை மாதிரியே பழி, வலின்னு சுத்திட்டு இருந்தவன் தான் அமர்.. அவனையே காதல் அழகானவனா மாத்திருச்சு.. உன்னையும் அப்படியே மாத்தும்னு நம்புறேன். உனக்காகவும் என் மனசு கொஞ்சமா வருத்தப்பட தான் செய்யுது. ஆனா, நீ அமரை உடைய வைச்சா கண்டிப்பா வருத்தப்பட மாட்டேன்
.
ஆத்மி.. ராம் இல்லைன்னா ஆத்மி இல்லை.. படிக்கிற எங்களுக்குத் தெரியுது. உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது? ஒருவேளை நேரடியான முறையில் சொல்லியிருந்தா ஆத்மி ராமை அக்செப்ட் பண்ணியிருப்பாளோ என்னவோ? எல்லாத்துக்கும் ராம் தான் காரணம்
எனக்கு என்னவோ ரெண்டு பேருக்குள்ளும் காதல் இருக்கதா தான் தோனுது. பட், ரெண்டு பேருமே புரிஞ்சுக்கல.. புரிந்து கொள்ளப்படாத காதல் ரொம்பவே ஆபத்தானது. மோசமான விளைவுகளை ஏற்படுத்துறதுக்கு முன்னாடியே இருவரும் காதலை உணரந்துட்டா நல்லாயிருக்கும்.