Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!
இனிய தோழி,
கனவுகளின் சுழற்சி - அது
நனவுகளின் எழுச்சி!
உணர்வுகளின் சுழற்சி - அது
ஆழ் மனதின் எழுச்சி!
சுழலும் வாழ்வில்
சுழலும் மனதில்
சுழலாய் சுழற்றும்
ஆசை சுழல்கள்!
சுழலும் வாழ்வில்
சுழலும் மனதில்
சுழியாய் இழுக்கும்
காதல் சுழல்கள்!
ஆசையோ காதலோ
சுழலாய் மாறி
சுழற்றும் வேளை
வீழ்ந்தவர் கோழை!
தாழ்ந்தவர் மோழை!
சூழ்ந்திடும் சுழலில்
ஆழ்ந்தவர் எல்லாம்
எழுந்திடும் வேளை
எழுச்சியின் வேகம்
விவேகத்தின் யோகம்!
துரோகியால் அழிந்தான் அவன்!
ஆசையால் அழிந்தாள் அவள்!
காதல் கணக்கு புரியா வயதில்
அன்பின் பிணைப்பு அறியா வயதில்
வம்பின் இலக்கு விதியாய்ப் போக
வீழ்ந்திட்ட மனங்கள் திக்கற்றுப் போக...
கரை ஏற வந்தால் விதி சிரித்ததோ...?
கறை கொண்ட பெண்மை
கரை சேர்த்த நேரம்...
திரை கடல் ஓடி
திரவியம் தேட...
நிறை இல்லா வாழ்வில்
கறை கொண்ட மன்னன்...
துரோகத்தின் தீயில்
தீக்குளித்தானே!
மறை கண்ட பெண்மை
கரை சேர்ந்த நேரம்...
வரைமுறை தேடி...
உறவிடம் கூட...
நிறை இல்லா வாழ்வில்
திரை போட்ட மங்கை...
நேர்மையின் நெருப்பில்
முக்குளித்தாளே...!
காலத்தின் கணக்கில்
துரோகத்தின் பிணக்கில்
விதியின் மதியால்
சேர்ந்திட்ட இருவர்...
காதலின் உயிர்ப்பில்
கரை கண்ட நேரம்...
உரிமையில்லா உறவில்
பெருமையில்லா உறவில்
காதல் ஒன்றே துணையாய்...
துரோகியை அழிக்க...
விரோதியை ஒழிக்க...
ஓற்றையாய் நின்ற
ஓயாத கணங்கள்....
காட்டியது என்ன?
நாட்டியது என்ன?
தேடும் மனதில்
ஓயாத அலைகள்
காதல் ஒன்றே
ஆற்றும் நிலைகள்!
வாழ்த்துக்கள் தோழி நன்றி.
இனிய தோழி,
கனவுகளின் சுழற்சி - அது
நனவுகளின் எழுச்சி!
உணர்வுகளின் சுழற்சி - அது
ஆழ் மனதின் எழுச்சி!
சுழலும் வாழ்வில்
சுழலும் மனதில்
சுழலாய் சுழற்றும்
ஆசை சுழல்கள்!
சுழலும் வாழ்வில்
சுழலும் மனதில்
சுழியாய் இழுக்கும்
காதல் சுழல்கள்!
ஆசையோ காதலோ
சுழலாய் மாறி
சுழற்றும் வேளை
வீழ்ந்தவர் கோழை!
தாழ்ந்தவர் மோழை!
சூழ்ந்திடும் சுழலில்
ஆழ்ந்தவர் எல்லாம்
எழுந்திடும் வேளை
எழுச்சியின் வேகம்
விவேகத்தின் யோகம்!
துரோகியால் அழிந்தான் அவன்!
ஆசையால் அழிந்தாள் அவள்!
காதல் கணக்கு புரியா வயதில்
அன்பின் பிணைப்பு அறியா வயதில்
வம்பின் இலக்கு விதியாய்ப் போக
வீழ்ந்திட்ட மனங்கள் திக்கற்றுப் போக...
கரை ஏற வந்தால் விதி சிரித்ததோ...?
கறை கொண்ட பெண்மை
கரை சேர்த்த நேரம்...
திரை கடல் ஓடி
திரவியம் தேட...
நிறை இல்லா வாழ்வில்
கறை கொண்ட மன்னன்...
துரோகத்தின் தீயில்
தீக்குளித்தானே!
மறை கண்ட பெண்மை
கரை சேர்ந்த நேரம்...
வரைமுறை தேடி...
உறவிடம் கூட...
நிறை இல்லா வாழ்வில்
திரை போட்ட மங்கை...
நேர்மையின் நெருப்பில்
முக்குளித்தாளே...!
காலத்தின் கணக்கில்
துரோகத்தின் பிணக்கில்
விதியின் மதியால்
சேர்ந்திட்ட இருவர்...
காதலின் உயிர்ப்பில்
கரை கண்ட நேரம்...
உரிமையில்லா உறவில்
பெருமையில்லா உறவில்
காதல் ஒன்றே துணையாய்...
துரோகியை அழிக்க...
விரோதியை ஒழிக்க...
ஓற்றையாய் நின்ற
ஓயாத கணங்கள்....
காட்டியது என்ன?
நாட்டியது என்ன?
தேடும் மனதில்
ஓயாத அலைகள்
காதல் ஒன்றே
ஆற்றும் நிலைகள்!
வாழ்த்துக்கள் தோழி நன்றி.