அமரஞ்சலி...
காதல் மனதில் கடலளவு இருக்கு...
அதை உணர்ந்த போது காலம் தான் கடந்து விட்டது... அவள் துரோகத்தின் பின்னனி வேறு கதைகள் இருக்கும் போலையே...
பெண்ணவள் காதலுக்காய்
போராடியது பார்ததது இல்லையே...
இதோ இவள் போராடுவாள் அவனுக்காய்... அவன் காதலுக்காய்...
அஞ்சலி என்ன பண்ண போறா ஸ்ரீ மா...
அவள் பயந்து வாழும் சாமானிய பெண் இல்லை...
கண்டிப்பாக எதிர்த்து போராட முடியும் இல்லை அமரே எல்லாம் சரி பண்ணுவானா என்ற கேள்வியோடு...
தவறி போனேன் நான்
நேற்றைய தவறு
நாளைய வாழ்வை
அழிக்க இன்று இதோ தவிக்கிறேன்...
தவறி போனேன் நான்
இருளை மறைக்கும்
ஆதவனை உணராமல்
மின் மினி பூச்சியின்
மாய வலையில் சிக்கி இதோ
துடிக்கிறேன்...
தவறி தான் போனேன்
காதலை காணாது
காம பார்வையில்
சிறையில் இருந்து இதோ
மீள முயலுகிறேன்...
தவறி தான் போனேன்
பாசத்தின் பார்க்காது
பாசியின் பாசத்தில்
வழுக்கி வீழ்ந்த
வாழ்க்கையை சரி செய்ய
இதோ தடுமாறுகிறேன்...
தவறி போன நான்
அபலையாய் சதி
அறியாத அப்பாவியாய்
வாழ்க்கை சதுரங்கத்தில்
பேதையாய் இதோ
காதலை மட்டுமே
காதலித்து நிற்கிறேன்
நான் பத்தினா என்ற கேள்வியோடு???
ஸ்ரீ மா... மஹிமா... எல்லாமுமாய்...
தயாரிகிய தீவிரவாதியாக முன் நிற்கிறாள்...
ஆம் இன்றைய சமூகத்திற்கு அவள் தீவிரவாதி தான்...
நம் கலாச்சாரத்தை சீரழிக்கும் அவள் தீவிரவாதி தான்...
இந்த மனபோக்கில் வாழ்ந்து பெண்ணியம் பேசும் கயமை மனம் படைத்த அவள் தீவிரவாதி தான்...
ஒரு தீவிரவாதி தான் யாரையும் எந்த உயிரையும் பற்றி கவலை கொள்ளாது தன் லட்சியம் மட்டுமே கண்ணாக செயல் படுவர் இதோ எனக்கு இன்று மஹிமா அப்படி தான் தெரிகிறாள்....
இப்படி பெண் இருக்கின்றாளா என்ற கட்டதை கடந்து இன்றைய சூழல் இப்படி நடக்கும் என்றால் நாம் இழப்பது என்ன என கேட்டாள் பெண் என்ற பண்பு என சொல்லி கொண்டே...
சஞ்சய்... வேவு பார்ப்பவன் எதையும் செய்ய துணியும் துணிவு இருக்கும் என சிந்திக்க தவறிய அமரை தான் காட்டுகிறது....
உளவாளி ஆக இருக்கிறான் என அறிந்தவனுக்கு அவனை தன்னோடு வைத்து அவனை சிறை செய்ய வேண்டாமா தவறிவிட்டான் என்ற குற்றத்தை ஹீரோவை நோக்கி வீசிய படி...
நீங்க தயாராகிட்டீங்க...
ஹீரோயின் துரோக்கத்தை அழிக்க...அதை படிக்க நான் காத்திருந்தேன் ஸ்ரீ மா அந்த எபி படிக்கும் எப்படி இருக்கும் என மிகப் பெரிய எதிர்பார்ப்போடு சுபி
பி.கு. :. அக்ஷ்சய் நினைவுக்கூறுகிறேன் இங்கே ... அவன் காதலை அவள் ஏற்க அவன் அவளிடம் அந்த விபத்தில் தன் உயிரை தருவதாக கூறி கண் மூடும் காட்சி தான் அடிக்கடி வருகிறது இவள் துரோகத்தை நேரி செய்ய என்ன பண்ணுவாள் என்று யோசிக்கும் போது... பெண் உயிர் எது என்று நமக்கே தெரியுமே... எதுவாகினும் அடுத்த எபியை படிக்கும் ஆர்வம் காத்திருப்பு என்ற நிலையை வெறுக்க வைப்பது உண்மை தான்
வாழ்த்துக்கள் ஸ்ரீ மா.. முள் மேல் வாழை இலை போல் இருக்கும் கதையை நீங்க கொண்டு போகும் விதம் எவ்வளவு அழகா விரசமில்லாமல் அருமை அருமை இந்த கதை களம் உங்களால் தான் இவ்வளவு அழகாக தர முடியாது.. வாழ்த்துக்கள்