அமரஞ்சலி...
முதல் பாகம் முடிவுற்றது... நெஞ்சம் பொறுக்குதில்லையே... இந்த வார்த்தை அர்த்தம் நன்றாக உணர முடிந்தது ஸ்ரீ மா...
இந்த உலகில் பல முறையற்ற செயல் நடந்தேறியதை படித்திருக்கோம்... அதை படிக்க நேரும் போது அந்த வார்த்தையில் அப்படியே உணர முடியும்...
ஆனால் இங்கே இவ்வளவு நாகரீகமாக ஒரு முறையற்ற உறவை எழுத முடியும் என காட்டியிருக்கும் அழகு வாவ் சூப்பர்...
நான் இதை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் என்றால் எழுத்தில் எல்லாம் நல்லதாக கொண்டு வர முயலும் விதம் தான் இங்கே... அருமை...
இப்படி தான் உங்க எழுத்துக்களில் என்னை கட்டி போட்டு இருக்கீங்க
ஆணின் இலக்கணம்
தவறிய தந்தையாக இந்த மனிதனை நம்பி அந்த பத்மினி எப்படி தன் குடும்பத்தை விட்டு சென்றார்...
அவர் நல்ல குடும்ப தலைவியாக தவறி விட்டாரே என்ற ஆதங்கம் மட்டுமே மனதில்...
மறுவித்த மனிதனை புனரஜென்மம் தரும் தேவதையாய் அஞ்சலி...
கற்பாறையாக உலவினேன்
கரமெனும் உளிக்கொண்டு
உணர்வுகளை செதுக்கினாள்...
காமத்தால் வென்றிட துடித்தேன்
காதலெனும் சாமரம் வீசி
மனதை வீழ்த்தினாள்...
இதழனைத்து சீண்டினேன்
முத்தமிட்டு எனை அவளுள்
கணவனாய் வாங்கினாள்...
பெண்ணை பழி வாங்கினேன்
இன்று அவள் விழியசைவிற்கு
பலியா கிடக்கிறேன்...
பெண் பதுமைகள் தேடினேன்
பாவையவள் பாதங்களில்
பாவங்களை தீர்த்தேன்...
உண்மையில் இந்த கடைசி எபியில் அமரை பார்த்து ஐயோ என்றாகி போச்சு ஸ்ரீ மா...
உண்மையில் இந்த இடத்தில் அவன் பாவம் தான் கொடுமையான ஒரு ரங்கத்தில் அவன் யாருக்குமே வர கூடாத ஒரு தோல்வி அவன் வாழ்வில் சந்தித்து விட்டான் தொழில் துரோகம், காதலில் துரோகம் கூட கடந்து வர முடியும் ஆனால் இந்த துரோகம் எந்த இடத்திலும் மறக்க முடியாத கடந்து வரவும் முடியாது இது மகா பாவம் இந்த ஆளுக்கு மிகப்பெரிய தண்டனை எதிர்பார்த்து சுபி வெயிட்டிங் ஸ்ரீ மா....
உண்மையில் அருமையான கதை களம் இது பல இடங்களில் நடந்தேறும் முறையற்ற செயல் என்ற போதும் நாம் விரும்பி படிக்கும் கதையின் நாயகனுக்கு நடக்கும் போது வலிக்குது ஸ்ரீ மா (இந்த இடத்தில் பாவமாக போய்டான் இந்த அமரு பையன்
)
அதனால் அவனை எதுவும் இந்த கடைசி எபியல் சொல்லல விட்டுட்டேன்...
ஆனால் அஞ்சலி தான் அவனின் எல்லாம் என் உணர அவன் இழந்தது எது என அவனுக்கு புரிந்து இருக்கும்... எப்படியோ எங்க தலைவி அப்பாவி என்று உங்க ஹீரோவே ஒத்துக்கிட்டான் என்ற கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்...
அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங் ஸ்ரீ மா