அமரஞ்சலி...
நல்லா ஒரு பெண்ணை manipulate பண்ணறாங்க இந்த கதையில்...
அவளை துரோகி என்றாள்... தோழனிடம் அவள் சின்ன பெண் என்றால்... ம்ம் அவளுக்கேனும் இருக்கே இன்னும் அவள் சின்ன பெண் தான் என்று...
அத்து மீறும் ஹீரோ..எந்த உரிமையியல் அத்து மீறுகிறான்.. அவளுக்கு கேட்க யாருமே இல்லை என்ற ஆணவம் தானே அவனை இந்த நிலையில் நிறுத்தி இருக்கு...
என்ன ஒரு அநியாயம் அவன் மஹிமா என்று நினைத்து விட்டான் அவளை...
அவன் சுற்றி நல்ல பெண் யாரையும் அவனுக்கு தெரியவில்லை போல... அவன் தாய்,கனி தங்கை மட்டுமே பெண் நினைச்சுட்டான்...
உடனே அவள் துரோகி வராதீங்க அதை கடந்து அவன் வந்து வருஷ மாச்சு...
ஆண் என்ற அகங்காரம் இவள் என்ன செய்வாள் என்ற ஏளனம் இதோ அவள் கண்ணீர் உன்னை திருப்தி படுத்தவில்லை எனில் உன் முன் உதிரம் உதிர்க் உயிர் விடும் நாள் புரியும் அன்று இதோ போல் நிற்க உன் காலுக்கு பலம் சேர்த்திகொள்...(அப்படி இருக்கா சீன் தெரியலை ஒரு ப்ளோல எழுதி இருக்கேன் படிச்ச போது நல்லா இருக்கு விட்டுட்டேன்
)
துரோகி நீ என்றாய்
அதற்கு அர்த்தம்
காலத்திடம் கற்றேன்....
பத்ததினியா நீயென கேட்டாய்
பெண்மையை காக்க இந்த சமூகத்திடம் போராடினேன்...
அழகியா என்றாய்
அதை ஆராதிக்காமல்
கண்ணாடியில் முகம் பார்க்க தவிர்த்தேன்
காதலை கொன்றேன் உன் பொளுக்காய் பரத்தையாய்
நின்றேன்
உன் மனம் திருப்திக்கு
உணர்விழந்து உயிரை
கையில் பிடித்து தலை
தாழ்ந்து கிடக்கிறேன்
அறியா வயதில்
புரியா மொழி கேட்டு
கிட்டா பாசத்திற்காய்
பாசறையில் வீழ்ந்த தவறுக்காய்
தினம் தினம் நெருப்பில்
குளிக்க இதோ நான்
உன் வார்த்தை எனும்
தீயின் முன் பத்தினாய்...
ஸ்ரீ மா...
இவன் இன்னும் இன்னும் பழி வாங்குவான் போல...
பழி என்றவன் அவளிடம் பலியா கிடக்கும் காலம் வரும் போது இந்த கடற்கரை மண் அவனை பார்த்து ஏளனமாய் ஏசாதோ...
இதே இந்த சூழலில் அவளை வதைக்கும் அவன் குற்றவாளியா அவள் முன் தலை தாழ்த்தி நிற்க அவன் ஏன் இந்த போராட்டம் செய்கிறான்...
இந்த இரண்டு எபியும் சூப்பர் அவளை படிக்க பாவமாக இருக்கிறது....
இந்த துரோகம் என்ற சம்பவம் ஆரம்பத்தில் இருந்தே படித்ததால் எனக்கு அது தான் முடிஞ்சு போச்சே ஏன்டா திரும்ப அதையே யோசிக்கற அவன் மண்டையில் கொட்டி கேள்வி கேட்ட தோனுது...
அடுத்த எபிக்கு வெயிட்டிங் ஸ்ரீ மா...
இப்படி அநியாயமாக தொடரும் போட்டுட்டிங்களே அவள் என்ன பண்ண போறான்...
அவ கூட அமர்ந்து அவனும் நிலாவா வெறிக்க பார்ப்பான் என்றால் பரவாயில்லை.
ஆனால் ... என்ற???
காத்திருக்கேன்