All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Subasini

Well-known member
அமரஞ்சலி...

ஆரம்பமே ஹீரோவுக்கு பொங்கல் wholesale குடுக்குற அளவுக்கு இருக்கு அவனோட செயல்...

வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று நன்றாகவே தெரியுது ஹீரோயின் குடும்பத்தை பார்த்தால்...

இப்படி பொறுப்பில்லாமல் இருக்கும் பெற்றோர். இதுவே பல கதைகள் சொல்லும் போலையே...

கடந்து வந்த காலங்களில் என்ன இருந்தாலும் சரி, நேர்மையாக வாழ போராடும் ஜீவனை சதி வலையில் வீழ்த்திய ஆண் என நினைப்பது சரியல்ல அது ஹீரோவே ஆனாலும் அந்த மாமா (அச்சோ அந்த ஆள் பெயர் மறந்துட்டேன் கெட்ட செயல் பண்ணறவங்க பெயர் நினைவில் வருவது இல்லை 😂😂😂) பையனுக்கும் இவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருச்சு...

அடேய் நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி ஸ்ரீ மா இருக்க வரை உனக்கு பொங்கல் வைக்க கன்டென்ட் இருந்துட்டே இருக்கும்...

அவன் வீட்டில் உள்ள பெண்கள் தாய் போன்றவள் மற்ற பெண்கள் எல்லாம் சரியில்லை என்னடா நியாயம் இது...

உன்னை சுத்தி தவறு இருக்கிறது என்றால் நீ தவறான இடத்தில் இருக்க என்று அர்த்தம்...

மாடலிங் அவள் உன்னை தவறாக பயணபடுத்துறா என்று எள்ளி நகையாடும் உனக்கு தெரியுமா அந்த பெண் கடந்து வந்த பாதைகள் தான் அவளை மாற்றி இருக்கும் என்று... சரி விடு சைடு ஆக்ட் குடுத்த பெண்ணுக்கு இவ்வளவு சப்போர்ட் போதும்...

விறுவிறுப்பான ஆரம்பம் ஸ்ரீ மா...

அஞ்சலி திமிறும் கூட இவளிடம் அழகு தான்...
சூப்பர் சூப்பர் உங்க வேகம் வேற லெவல்....

அமர் எப்படி எல்லாம் செதுக்க போறீங்க படிக்க ரொம்ப ஆர்வமாக இருக்கேன்...

என்ன இவனுக்கு தான் சேதாரம் அதிகம் இருக்கும் போல 😂😂😂

இந்த கதையை படிச்சு பொங்க வரும் ஹீரோ ஆர்மீஸ் கவனத்திற்கு....

சிம்மூ மாமு, அர்ஜுன்,பிராஹான் கதைகளை நன்றாக படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்...
முக்கியமாக அர்ஜுன் தான் அல்டி ஆக இருக்கும் சொல்லிட்டேன் 😂😂 அவந்தி மாமி சாஃப்ட் ஆக இருந்தே அவனுக்கு சேதாரம் அதிகம் இவ வேற சிங்க பெண்ணே போல இருக்கா அதனால் கவுண்ட் டவுன் ஸ்டார்ட் 😂😂😂😂
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,


தலைவன் அவன் தரம் பார்த்தால்
நட்பில் நவனீதன்
நடிப்பில் மாயவன்
கற்பில் தேவர்களின் தலைவனோ!

தலைவி அவள் தரம் பார்த்தால்
தடுக்கில் தாடகை
துடிப்பில் தூயவள்
கற்பில் கண்ணகியின் பரம்பரையோ!

தாய் அவள் தற்குறி,
தந்தை அவன் குடிகேடி
தமையன் அவன் துக்கிரி
தராதரம் பார்க்கும் தரணியதில்
தனியாய் தவிக்கின்ற ஓர் குயில்!
ஓய்யாரமாய் திரிந்தாலும்
ஒப்புமையில்லா சின்னக்குயில்!
ஓங்காரமாய் நிமிர்ந்தாலும்
தன்னகங்காரம் காட்டும் வண்ணக்குயிலே!

பகட்டின் மிடுக்கில்
படோடாபம் காட்டுபவன்!
நட்பின் மிடுக்கில்
நவரசம் கூட்டுபவன்!
நடத்தையில் சிரத்தையில்
நன்னடத்தை இல்லாதவன்!
நங்கையர் நளினம்
நாளும் ரசிப்பவன்!
ஒய்யாரமாய் திரிந்தாலும்
ஒப்புமையில்லா கந்தர்வனோ!
ஓங்காரமாய் நிமிர்ந்தாலும்
தன்னகங்காரம் காட்டும் இந்திரனே!


ஓடி ஓய்ந்த வேளையில்
தேடி ஆய்ந்த வேலையில்
பாடி நிற்கும் பூங்குயில்
வாடி தேய்ந்து போகுமோ?


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:
ரொம்ப மோசமான அம்மா அப்பா
அண்ணன்
ரெண்டு தம்பி தங்கை
எதுனால இப்படி ஒரு நிலை
அமர் எதுக்கு இவள இப்படி
பழி வாங்க நினைக்கிறான்

அவனுக்க பொண்டாட்டி இருக்காளா
 

Jayanthi Krishna

Active member
வெகு நாட்களுக்கு பின் சைட்டில் கதை படிக்க வந்திருக்கிறேன் மக்களே:love:... எல்லோரும் எப்படி இருக்கீங்க... :)

அருமையான ஆரம்பம் ஸ்ரீ அக்கா....::FlyingKiss:

அஞ்சலி சூப்பர்...:smiley7: யப்பா என்னா அடி... என்னா அடி... பாவம் அவள் இப்படி கஷ்டப்படும் அளவிற்கு அவள் வாழ்வில் என்ன நடந்திருக்கும்:unsure:.

அஞ்சலியின் அப்பா அம்மா அண்ணன் சை என்ன ஜென்மங்கள்டா. இவங்கள விளக்குமாத்தல விளசுரதுல தப்பே இல்லை:mad::mad:.

அமர் என்னடா இப்படி இருக்க:oops:. ஆனாலும் நட்புக்கு நீ கொடுக்கும் மரியாதை வாவ் சொல்ல வைக்குது:love::love:. சரி உன்னை உயிர்ப்போடு வைத்திருப்பது கனி என்றால் உன் வாழ்வில் அப்படியென்ன சோகம்...:unsure::unsure:

கனிஷ்கா நல்ல நட்பின் அடையாளம். நண்பனை அவனின் நிறைகுறைகளோடு என்று கொண்டிருக்கும் மனது செம(y).

அமரா! அஞ்சலிய என்ன பண்ண காத்திருக்கிறாய்....:unsure::unsure:
 

Subasini

Well-known member
அமராஞ்சலி...

எவ்வளவு நெருக்கடி தந்தாலும் உன்னை தேடி வர முயலமாட்டாள் இந்த அஞ்சலி...

மற்ற பெண்களை நேசித்த காரணம் சூர்ய பிரகாஷ் வேண்டாம் என வந்தவள் எப்படி மாற்றாள் மணாளனை ஏறெடுத்து பார்ப்பாள்...

எவ்வளவு போராட்டம் கடந்து வந்திருந்தால் இத்தனை வலியையும் தாங்கி நிமிர்ந்து நிற்பாள்....

ஸ்ரீ மா சூப்பர் எபி அஞ்சலியை நீங்க காட்டிய விதம் அபாரம்...

அவளுக்காய் அவளே போராடும் களம் இது என்பது மட்டும் உறுதி ஸ்ரீ மா...

பெண்ணாய் நான் இரும்பாளவள்...
எனை உருக்கி வளைக்கலாம்
எனை உடைக்க முடியாது...

குளிர்நீரால் துருப்பிடிக்கலாம்,
எனை உருவில்லாமல் அழிக்க முடியாது...

எனை நானே செதுக்கும் கல்கியாய்...
நெருப்பில் உருகி எனை
உருவாக்குவேன்....

Hero Army's attention plsss😂😂
என்ன தான் ஹீரோ அப்படி இப்படி கனிக்கு நண்பனாக ஆகா ஓஹோ என கூவினாலும் மனைவியை கட்டுக்குள் கொண்டு வராம பொறுப்பில்லாமல் எங்க தலைவி பின்னாடி லோ லோ... எப்படி லோகோ என வந்திடட்டு இருக்கான் மை லார்ட்...
So ஒழுங்கா பிள்ளை குட்டியை படிக்க வைக்கிற வழி பார்க்க சொல்லுங்க ஸ்ரீ மா 😂😂😂😂 இவன் சுத்தி இருக்கும் இடியாப்ப சிக்கல சரி பண்ணி ஷப்பாஆ இப்பவே கண்ணை கட்டுது 😂😂😂
 

TM Priya

Well-known member
பாண்டு,ரகு கேடு கெட்ட ஜென்மங்களா இருக்கு:mad:நீ உன் பாய் பிரண்டு கூப போ..நான் என் கேள் பிரண்டு கூட போறேன்...அடே வேற
லெவல் டா அமர்:love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ராதைக்கேற்ற ராவணன் கதையில் அத்தியாயத்தின் இறுதியில் போட்ட கவிதைகள் இந்தக் கதைக்கு மிஸ்ஸிங் மேம்..இந்தக் கதைக்கு இல்லையாங் மேம்.
 
Top