All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

பணமும் பகட்டும்
பேசும் உலகில்
நவ நாகரீகம்
கூசும் நிழலில்...
ஆணும் பெண்ணும்
அடிப்படை மறந்த
மரபில்லா மரத்த வாழ்வில்
மாயமாய் போனதோ
அன்பின் அருஞ்சுகம்!
நாசமாய் போனதோ
பண்பின் பரமசுகம்!

எட்டிப் போக நினைத்தாலும்
வெட்டிப் போக நினைத்தாலும்
கட்டி இழுக்கும் பாதாளா உலகில்
பரவசம் ஒன்றே பாழான நரகம்!

அன்பின் அருமையில்
பண்பின் பெருமையில்
உண்மைகள் உணர்ந்த
காதல் மகளோ...?
காதலை தேடி அலையாமல்
கானலை நாடி அழியாமல்
விடிவை நோக்கி ஓடியதோ...!

அன்பின் அருமையில்
பண்பின் பெருமையில்
உண்மைகள் உணர்ந்த
காதல் மகனோ...?
காதல் அதனை அறியாமல்
கானல் அதனை புரியாமல்
துரோகத்தில் வழியை தேடியதோ...!

துரோகத்தில் விடிந்த
காதலின் முன்னே
காதல் ராகம்
பாடிய குயில்கள்...
துரோகத்தின் வலியில்
துவளாமல் நிமிர்ந்து
ஆனந்த யாழை மீட்டியதோ...!

தன்னுயிர் வாழ
தன்னையே கொடுத்த
காதல் மகளின் காருண்யம்
அன்பின் அருஞ்சுவை பாடாதோ!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu mam no Words.... அமர் உண்மை yaave ரொம்ப ரொம்ப paavam..... அவனும் நல்லவனா இருக்கனும் nu evvallavo poradi முடியாமல் thaan அந்த maari பண்ண panna aarambichi இருக்கான்..... ச்சே romba paavam maa.... Avanodaya வலி yum vethanaiyum romba romba athigam.... எல்லாத்துக்கும் காரணம் அஞ்சலி..... Eppadi அழுகிறான் la ஆண் galuku கருப்பு உண்டு அவன் எவ்வளவு ஆசை oda kanavoda irunthu இருப்பான் avanuke avanuku nu oruthiya கல்யாணம் avalukaaga மட்டுமே அவன் vaazhanum nu.... Ellame நாசமா la pochi இப்போ varaikum ethuyume சரி ஆகலையே.... சூர்யா kita pesi கல்யாணத்துக்கு ஒதுக்க vechita.... Super Super Super mam.... Very very emotional episode... அழ vechitinga
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#அமரஞ்சலி

ஒருவழியாக ஷர்மி திருந்திட்டா 😝. ஏனோ அஞ்சலி மீது பொறாமை பட்டு லூசு மாதிரி அவ பண்ணிட்டு இருந்தப்போ கூட எனக்கு ஷர்மி மேல கோபம் வரல. அதாவது அவ கேரக்டர் நெகட்டிவ் ஷேடா தெரியல. பட், அமரைப் பழிவாங்க தான் சூர்யா தன்னைப் பயன்படுத்தியிருக்கான்னு தெரிஞ்சும் பின்னாடி போனது தான் எனக்குப் பிடிக்கல. சரி அதான் காதல் வந்தால் மூளை ஒழுங்கா வேலை செய்யுதுன்னு சொல்வாங்களே. சோ, அதை மன்னிச்சுடலாம். ஆனால், ஷர்மியின் காதலும் உண்மையா அவ்வளவு அழகு 🥰. வசதி குறைவான இடத்தில் இருந்த அம்மாவையே பார்க்க போகாதவள் சூர்யாவை ஏத்துக்கிட்டதுலயே அவ எந்த அளவுக்கு சூர்யாவை காதலிக்கிறான்னு புரிஞ்சுக்க முடிஞ்சது. அஞ்சலியின் மீதான பொறாமையை விட்டுட்டு இப்படி மாறியிருக்க ஷர்மியைப் பார்க்கவும் அழகா தான் இருக்கு இல்ல 😉. அமரின் ஃப்ளாஷ்பேக் 😖. இதைப் பத்தி என்ன சொல்ல? அமரின் வலியை முழுசா உணர முடிஞ்சது. அஞ்சலி அமரின் காதலை நான் ரொம்பவே ரசிக்கிறேன். அவர்களின் காதல் ஆரம்பமாகும் போது நான் போட்ட பதிவில் "இப்போவும் என்னால் அமரின் சில செய்கைகளை ஏத்துக்க முடியல தான்.. ஆனால் அதையும் மீறி அவனை நான் ரசிக்கிறேன்னு" மென்ஷன் பண்ணியிருப்பேன். அது அவனுடைய பெண் சகவாசம் பத்தி தான். ஆனால் இன்னைக்கு எபி படிக்கிறப்போ அமரோட வலி அது எல்லாத்தையும் இருந்த இடம் தெரியாமல் போக வைச்சிடுச்சு. அதிலும் 'இங்கு அவன் ஆண் விபச்சாரனாகி போனானே'- இந்த லைன்ல ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன். அவன் 'ம்மா'னு தரையில் விழுந்து கதறினப்போ எனக்குள்ளேயும் அத்தனை வலி. என்ன சொல்றது? நமக்கு பிடிச்ச ஒருவரின் கண்ணீரைப் பார்த்து எதுவுமே செய்ய முடியாத ஒருவித கையாலாகாத நிலை இருக்குமே அந்த மாதிரியான நிலை தான். கடவுள் அமர் விஷயத்தில் எல்லாத்தையும் ரொம்ப அதிகமாவே கொடுக்கிறார். காதலும் வலியும் அவனுக்கு அதிகமாகவே தான் கிடைச்சிருக்கு. ஆக்சுவலா இப்போ நான் கடவுளை எல்லாம் எதுக்கு இழுக்குறேன்னு சத்தியமா தெரியல 😂. இப்படித்தான் கதை என்பதையே மறந்து உள்ளே போக வைச்சுடுறாங்க மேம் 🤭. லாஸ்ட் எபி படிச்சப்போ எப்போவோ நான் எழுதுன வரிகள் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு.

"வலியில்லா வாழ்வெதற்கு!?
வலி தீர்க்கும் வரமாக
நீ இருக்கும் வாழ்வு போதாதா?"

அமருக்கு பொருத்தமான வரிகள்னு நினைக்கிறேன். நல்லவேளை அஞ்சலி அவன் வாழ்வில் வந்தாள்னு தான் நினைக்கத் தோனுது. இல்லைன்னா அமரோட வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியல. இப்படி நான் நினைச்சுட்டு இருந்தா அவ "அப்பாவை நல்லா பார்த்துக்கோ பாப்பா"னு ஆத்மி கிட்ட சொல்லிட்டு இருக்கா 😷. இதுவரைக்கும் அவன் பட்டதெல்லாம் ரொம்ப கம்மின்னு நினைக்க வைக்கிற மாதிரி அடுத்த அத்தியாயம் இருக்க போகுது. அஞ்சலியின் உடல் உபாதையும் அவ படுத்த படுக்கையா இருப்பதையும் பார்த்து அமர் எப்படி கஷ்டப்பட போறானோ🙄.. உடம்பு முடியாத அஞ்சலிக்காக வருத்தப்படாமல் அமருக்காக தான் நாம எல்லோரும் வருத்தப்பட்டுட்டு இருக்கோம். இதை நினைச்சு சிரிப்பு வந்தாலும் இதுக்கு உண்மையான காரணம் நம்ம அமரஞ்சலியின் காதல் தான்💜🤩.

வீர்தேவ் நீ சிம்ப்ளி வேஸ்ட் மெட்டீரியல். அந்த அமருக்கு உன்மேல மரியாதை இருக்குன்றதுக்காக நானும் உன்மேல மரியாதை வைச்சிருந்தேன் பார்த்தியா.. என் புத்தியை எதைக் கொண்டு அடிக்கன்னு தெரியல 😷
 

Deebha

Well-known member
அமரின் வலி வேதனைகள் புரிந்தது. அவனுக்கு கிடைத்த தோல்வியிலிருந்தும், நம்பிக்கை துரோகதிலிருந்தும் மீண்டு தொழிலில் வெற்றி பெற்றது great... அஞ்சலி ஏன் அமரக்கு சூர்யாவுடன் இணைந்து துரோகம் செய்தால் என்பதற்கு strong reason என்ன? ஏனெனில் 3 வருடம் யாரும் சாதாரணமாக அவர்களின் பணத்தையும் நேரத்தையும் செலவிட மாட்டார்களே mam?
 

Hanza

Bronze Winner
ayyo intha Mahima 🤢🤢🤢🤢🤢
Ivalukku nalla save vara koodathu...

na oru nimisham kolambitten... Surya Sharmi kku tan baby um vara poguthe appuram marukka sonnathukku serthu vaikka sollura nu... adhukku piragu than nyabagam vandhu ithu fb nu 🤦🤦🤦
 
Top