#அமரஞ்சலி
ஒருவழியாக ஷர்மி திருந்திட்டா
. ஏனோ அஞ்சலி மீது பொறாமை பட்டு லூசு மாதிரி அவ பண்ணிட்டு இருந்தப்போ கூட எனக்கு ஷர்மி மேல கோபம் வரல. அதாவது அவ கேரக்டர் நெகட்டிவ் ஷேடா தெரியல. பட், அமரைப் பழிவாங்க தான் சூர்யா தன்னைப் பயன்படுத்தியிருக்கான்னு தெரிஞ்சும் பின்னாடி போனது தான் எனக்குப் பிடிக்கல. சரி அதான் காதல் வந்தால் மூளை ஒழுங்கா வேலை செய்யுதுன்னு சொல்வாங்களே. சோ, அதை மன்னிச்சுடலாம். ஆனால், ஷர்மியின் காதலும் உண்மையா அவ்வளவு அழகு
. வசதி குறைவான இடத்தில் இருந்த அம்மாவையே பார்க்க போகாதவள் சூர்யாவை ஏத்துக்கிட்டதுலயே அவ எந்த அளவுக்கு சூர்யாவை காதலிக்கிறான்னு புரிஞ்சுக்க முடிஞ்சது. அஞ்சலியின் மீதான பொறாமையை விட்டுட்டு இப்படி மாறியிருக்க ஷர்மியைப் பார்க்கவும் அழகா தான் இருக்கு இல்ல
. அமரின் ஃப்ளாஷ்பேக்
. இதைப் பத்தி என்ன சொல்ல? அமரின் வலியை முழுசா உணர முடிஞ்சது. அஞ்சலி அமரின் காதலை நான் ரொம்பவே ரசிக்கிறேன். அவர்களின் காதல் ஆரம்பமாகும் போது நான் போட்ட பதிவில் "இப்போவும் என்னால் அமரின் சில செய்கைகளை ஏத்துக்க முடியல தான்.. ஆனால் அதையும் மீறி அவனை நான் ரசிக்கிறேன்னு" மென்ஷன் பண்ணியிருப்பேன். அது அவனுடைய பெண் சகவாசம் பத்தி தான். ஆனால் இன்னைக்கு எபி படிக்கிறப்போ அமரோட வலி அது எல்லாத்தையும் இருந்த இடம் தெரியாமல் போக வைச்சிடுச்சு. அதிலும் 'இங்கு அவன் ஆண் விபச்சாரனாகி போனானே'- இந்த லைன்ல ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன். அவன் 'ம்மா'னு தரையில் விழுந்து கதறினப்போ எனக்குள்ளேயும் அத்தனை வலி. என்ன சொல்றது? நமக்கு பிடிச்ச ஒருவரின் கண்ணீரைப் பார்த்து எதுவுமே செய்ய முடியாத ஒருவித கையாலாகாத நிலை இருக்குமே அந்த மாதிரியான நிலை தான். கடவுள் அமர் விஷயத்தில் எல்லாத்தையும் ரொம்ப அதிகமாவே கொடுக்கிறார். காதலும் வலியும் அவனுக்கு அதிகமாகவே தான் கிடைச்சிருக்கு. ஆக்சுவலா இப்போ நான் கடவுளை எல்லாம் எதுக்கு இழுக்குறேன்னு சத்தியமா தெரியல
. இப்படித்தான் கதை என்பதையே மறந்து உள்ளே போக வைச்சுடுறாங்க மேம்
. லாஸ்ட் எபி படிச்சப்போ எப்போவோ நான் எழுதுன வரிகள் தான் ஞாபகத்துக்கு வந்துச்சு.
"வலியில்லா வாழ்வெதற்கு!?
வலி தீர்க்கும் வரமாக
நீ இருக்கும் வாழ்வு போதாதா?"
அமருக்கு பொருத்தமான வரிகள்னு நினைக்கிறேன். நல்லவேளை அஞ்சலி அவன் வாழ்வில் வந்தாள்னு தான் நினைக்கத் தோனுது. இல்லைன்னா அமரோட வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியல. இப்படி நான் நினைச்சுட்டு இருந்தா அவ "அப்பாவை நல்லா பார்த்துக்கோ பாப்பா"னு ஆத்மி கிட்ட சொல்லிட்டு இருக்கா
. இதுவரைக்கும் அவன் பட்டதெல்லாம் ரொம்ப கம்மின்னு நினைக்க வைக்கிற மாதிரி அடுத்த அத்தியாயம் இருக்க போகுது. அஞ்சலியின் உடல் உபாதையும் அவ படுத்த படுக்கையா இருப்பதையும் பார்த்து அமர் எப்படி கஷ்டப்பட போறானோ
.. உடம்பு முடியாத அஞ்சலிக்காக வருத்தப்படாமல் அமருக்காக தான் நாம எல்லோரும் வருத்தப்பட்டுட்டு இருக்கோம். இதை நினைச்சு சிரிப்பு வந்தாலும் இதுக்கு உண்மையான காரணம் நம்ம அமரஞ்சலியின் காதல் தான்
.
வீர்தேவ் நீ சிம்ப்ளி வேஸ்ட் மெட்டீரியல். அந்த அமருக்கு உன்மேல மரியாதை இருக்குன்றதுக்காக நானும் உன்மேல மரியாதை வைச்சிருந்தேன் பார்த்தியா.. என் புத்தியை எதைக் கொண்டு அடிக்கன்னு தெரியல