sivanayani
விஜயமலர்
வணக்கம் மக்கா
வேல் வழியாள்மறவன்
தலைவன் - அநபாயன்
தலைவி – பூங்கோதை
இந்தக் கதை 2012 ஆம் ஆண்டு எழுதி நானே வெளியிட்டேன். அதை இப்போது உங்கள் பார்வைக்கு விடப்போகிறேன்.
கி.பி இரண்டாம் நூற்றாண்டில் உறையூரை ஆட்சிசெய்த கரிகாலன் என்ற சோழ மன்னன் அப்போது அனுராத புரத்தை ஆட்சிசெய்த வங்கநாசிகதிஸ்ஸன் என்கின்ற மன்னனுடன் போர் புரிந்து அவனை வென்று, பன்னிரண் டாயிரம் வீரர்களைத் தன்னுடன் உறையூருக்கு அழைத்துச் சென்று காவிரி ஆற்றுக்கு அணைகட்டினான் என்பது வரலாற்றுச் செய்தி. அவனால் கட்டப்பட்ட கல்லணை ஏறத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்த நிலை யிலும், இன்றுவரை பாவனையில் இருக்கின்றது என்பது வியப்புக்குரியது மட்டுமல்ல பெருமைக்கும் உரியது. கரிகாலனால் கட்டப்பட்ட கல் ணையால் நீர் வளம் உயர்ந்தது. அதனால் அவனுடைய நாடும் உயர்ந்தது. சிற்றரசாக இருந்த சோழ அரசு, பேரரசாக மாறியதற்குக் கரிகாலனால் கட்டப்பட்ட காவிரி யணையே பிள்ளையார் சுழி போட்டது என்பதை யாராலும் மறுக்கமுடியாத உண்மை.
சோழ மன்னன் கரிகாலன் எதற்காக ஈழத்திற்குச் சென்றான்? அதன் பின்னணி என்ன? என்கிற கேள்விகளுக்கு இதுவரை பதிலில்லாததால், இக் கேள்விகளுக்கு விடையாக என் கற்பனையைப் புகுதத்தியிருக்கிறேன். இந்த வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்டதே ‘வேல் விழியாள் மறவன்’ என்கின்ற சரித்திர நீள்கதை. இக்;கதையைச் சுவைப்படுத்துவதற்கு அநபாயன், பூங்கோதை, தமிழரசி. நரசிம்மவரையர், ஜெயபாலசிங்கன், சோதையன், மைத்திரேய தேரர் முதலிய பல கற்பனைப் பாத்திரங்களை உருவாக்கி இக்கதைக்குள் நடமாட விட்டிருக்கிறேன். சரித்திரத்தில் கரிகாலனும், வங்கநாசிகதிஸ்ஸனும், இரும்பிடர்த்தலையனும் இடம்பெற்றிருந்தாலும் கற்பனைப் பாத்திரங்களாக வரும் அநபாயனும் பூங்கோதையுமே முக்கிய கதாபாத்திரங்களாகத் திகழ்கின்றனர்.

Last edited: