இரண்டு நாளா எங்க வயித்துல புளிய கரைய விட்ட புரளியாளர்களே, எழுத்துலகின் இளவரசிய வசைபாடியவர்களே, ரொமான்ஸ் பிரியர்களே அனைவரும் இக்கட வரவும்.
மருமகளோ என்ற பையன் மேல இம்புட்டு லைவ்வா... ராசாத்தி என்னமா அவனுக்காக உருகற, தாங்கற, உன்னுடய தவறை உணர்ந்து நீயா போய் அவனை கட்டிப்பிடிக்கற (இத்தன நாளா உன்ன ஈகோ புடுச்சவனு சொன்னவங்க மண்டையிலேல்லாம் போய் குட்டிட்டு வாடி என்ற ராசாத்தி... )அதுவும் அவனுடைய காயங்களை வருடும் போது நீ படும் வேதனை, என்னமோ நீயே அந்த தீக்கு இறையானது போல தவித்தாய்.. தவறை மன்னித்து மறக்க முயற்சிக்கிறேன் எனும் போதே நீ அபயன் மீதான உன்னுடைய காதலை நிருபித்துவிட்டாய். நீ உடலால் நெருங்க தயங்குவது கூட அபயனை காயப்படுத்த கூடாது என்பதாலே!
மகனே அபயா இது கனவு இல்லடா நம்பு ராசா நம்பு..உன்ற காதல் ஜெயிச்சிரிச்சுடா. இந்த மிளிர் ஆர்மிக சொல்லற மாதிரி நீ ஓர டம்மி பீஸ்டா, பொண்டாட்டி காதலை உணர்ந்து வந்துட்டாலே அதை அவளோடு கொண்டாடுவானா அத கூட்டு புட்டு கேக்கறாப்பாரு நீ எப்படி வந்தேனு.. ரொம்ப முக்கியம் இப்ப..ஆனாலு பாரு என்ற மருமக அவ அம்மா மாதிரி புத்திசாலியாக்கும், நைசா கிடச்ச கேப்ல பாஸ்போர்ட்ட சுட்டுட்டா.. சமத்து மருமோளே நீ. அபயா தப்பு செய்த மனம் எதையும் அவ்வளவு எளிதில் ஏற்காது, அதுபோல தான் நீயும் அவள் காதலால் வந்தாளா பரிதாபத்தால் வந்தாலா என அறியும் வரை தவித்தாய். உன் காதலிய கண்ட பேராணந்திலும் உன்னுடைய குழந்தைகளை மிஸ் பண்ணுமிடம் உண்மையில நான் ஆனந்த கண்ணீர் விட்டேன்... நீ அருமை அபயா..
உன்னிடம் வார்த்தையால் கேட்கமுடியாமல் அவள் தவிக்கும் தவிப்பிற்கு செயலால் உணர்த்தி, பதிலும் அவள் வாயால் பெற்றாயே சூப்பர்... யூ ஆர் கிரேட் அபயா.