நயனிமா இப்படி ஒரு அருமையான கதையையும், முடிவையும் அந்த முடிவின் தொடக்கத்தில் அபய - மிளிர் வாழ்க்கையின் இன்பத்தையும் வைத்த உங்கள் அழகிய சிந்தனைக்கு எத்தனை பேர் சேர்ந்து எத்தனை கோடி முறை பாராட்டினாலும் அதற்கு ஈடாகாது.
கதையை பாராட்ட வேண்டுமா இல்லை கதை வடித்த சிற்பியைப் புகழ வேண்டுமா இல்லை கதையின் வாயிலாக நான் அறிந்துக் கொண்ட தாமரை மா மற்றும் பல தோழியரின் நட்பை ஆராதிக்க வேண்டுமா என்று சொல்லத் தெரியாத இன்பக் குழப்பத்தில் உள்ளது என் மனது...
குழப்பக் குட்டையில் நான் பிடித்த கவிதை மீன் உங்கள் பார்வைக்கு.. (யாரும் என்னை திட்டக் கூடாது சொல்லிட்டேன்... தாமரை மா தான் என் கவிதைக்கு பொருப்பேத்துக்கறேன் னு சொல்லியிருக்காங்க ஞாபகத்தில வைச்சுக்கங்க...)
கொல்லாமல் கொன்று
புதைக்கும் கதைக் கடல்
என்றுத் தெரிந்தே குதித்தேன்
என்ன என் தேடல்??
கடந்த கால புயல் அடிக்க,
கதை கடலும் கொந்தளிக்க;
வாழ்க்கையெனும் படகு கவிழ்ந்து அபய-மிளிர் தத்தளிக்க...
திசைக்கொன்றாய் கணவன்-மனைவியினை பிரித்தது விதியின் கோர அதிர்வலை
பிரிந்தே தவித்தவரை மீண்டும் ஒருங்கிணைத்தது காலச் சுனாமியென்ற ஆழிப் பேரலை..🌪🌪
ஊழிக்காலமது உலகினை நெருங்கும் தருணம்...
பெரும் பிரளயமது வாழ்வினையேச் சூழந்திட நேரும்....
கலியுகத்து தீமையெல்லாம் நீரில் அமிழ்ந்தொழிய...
உண்மையான நன்மை மட்டுமே மறுயுகத்தை அடைந்திட இயலும்...
உலகமென்பதுவோ வாழ்க்கை போடும் நாடகத்தின் ஒரு பெரிய மேடை..
நடிக்கும் அனைவருமே விதியின் கை நூலின் பாவை...
பல கோடி உயிர்கள் ஒரு சேர நடிப்பது விந்தை...
இயக்குபவன் இறைவன் எனும் ஒரே தந்தை...
ஒரு யுகத்தில் நடந்த கதை
மறு யுகத்தில் மாறும்...
சத்தியமும் அன்பும் மட்டுமே
யுகாந்தத்திலும் வாழும்..
மனக் கோபங்களும் பழி துவேஷங்களும் அன்பு வெள்ளத்தில் அழிந்தேப் போக...
மிதக்கின்றது வாழ்க்கைப் படகு அலைக்கடலில் சிறு துறும்பை போல🌬
இருவரின் தவப் பயனாய் மண்ணில் அவதரித்த சிறு தச்சர்களும்
தடுமாறும் கப்பலதை
நேர்த்தியாகவே பழுது பார்த்திடினும்...
கண்ணுக்குத் தெரியாதச் சிறு ஓட்டைகளோ ஆயிரம் உண்டு படகதனில் - வஞ்சியவள் மனச் சஞ்சலங்களோ??
அன்பென்னும் களிம்பை அள்ளி அபயனவன் பயமின்றி தானே பூச
மறைந்தன படகில் உள்ள ஓட்டைகளும் மன-சஞ்சலங்களும்
ஒளிர்கின்ற (காந்தி)மதியன்னை தன்னொளி தான் தந்தருள
சூழ்ந்து நின்ற இருளோடு பாவை மனக்குழப்பங்களுமே விட்டகல
குடும்பமாய் மகிழ்வுடனே படகில் பயணிப்போரை ரசித்து விட்டு
கரையேற நினைக்கின்றேன்
கடலை விட்டு🌫🌫
கரையேற முடியாமல் என்னை தடுப்பதென்ன?
பல வலைகள் ஒரு சேர என்னை இழுப்பதென்ன?
சாதாரண வலைகள் அல்ல அவை சுலபத்தில் அறுத்தெரிய
கதை கடலில் சேர்ந்தே பயணித்த தோழியரின் கவி வலைகள் என்றறிய ✍✍
அறுத்தெரிய மனமின்றி தானே நானும் - மகிழ்வுடனே
மூழ்குகிறேன் கதை கடலில் மீண்டும் மீண்டும்...
புயலது கதையில் மட்டும் அல்ல
நிஜத்திலும் வீசும்...
எதிர்த்து நின்று ஜெயித்தாலே
வரலாறு பேசும்...