All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Meenalochini

Well-known member
விஜிமா!
காதலுக்கு புது பரிமாணம் கொடுத்தவரே!
சாதலிலும் காதல்,
மோதலிலும் காதல்,
வாழ்தலிலும் காதல்,
வீழ்தலிலும் காதல்,
விழியில் காதல்,
பழியில் காதல்,
பலியில் காதல்,
வலியில் காதல்,
காமம் தாண்டியும் காதல்,
சோகம் தாண்டியும் காதல்.,
சதியில் காதல்,
விதியில் காதல்,
சண்டையிலும் காதல்,
மண்டை உடைந்தாலும் காதல்,
கண்டியிலும் காதல்,
கனடாவிலும் காதல்,
காதலிலும் காதல்!
இனிப்பு என்று எழுதினால் சுவைக்க முடியாது.
ஆனால் நீர் எழுதும் காதலை சுவைக்க முடிகின்றதே!
நெஞ்சம் வஞ்சம் மறந்து,
கொஞ்சம் அபயன் பால்,
லஞ்சம் கொண்டு,
தஞ்சம் அடைந்ததே!
அடடே ஆச்சரியக்குறி!

காந்திமதியின் சோகம் காணும்போது, மிளிரின் சோகம் பின் தள்ளப்பட்டு விட்டது.
மிளிரின் வாழ்வை அபயன் மலரச் செய்வான் என்பதால்,
மிளிர் மகள் மீது பாவம் தோன்றவில்லை. பரிகாரம் செய்ய அவன் இருப்பதால்....
ஆனால் காந்திமதிக்கு?
கேள்விக்குறியை நிமிர்த்த யார் வருவார்?
கேள்விக்குறியை நிமிர்த்த ஆயுதம் எடுத்தவன், இன்றோ நிராயுதபாணியாய்..
காந்திமதிக்கு ஒளிர், தருவாளா மிளிர்?
ஆராதனாவை ஆராதிப்பாளா?
சோதனை மேல் சோதனை!
 

தாமரை

தாமரை
9353
ஒரு கதை சொல்லட்டா சார்...!!!

ஒரு காட்டில ஒரு.. கிளட்டு சிங்கம் இருந்ததுதாம்.. அது.. சீராட்டி பாராட்டி ஒரு.. குட்டி சிங்கத்தை வளர்த்துச்சாம்...

ஒரு நாள் .. அந்த குட்டி சிங்கம் மரண காயத்தோட வந்துச்சாம்..

என்னன்னதுக்கு.. அப்பா சிங்கம் செஞ்ச பாவத்தினால எனக்கு அடிபட்ருச்சு ....
இந்த காட்டு ராஜா.. எனக்கு தண்டனை கொடுத்திட்டாரு சொல்லிச்சாம்.


ஓ.. ஆமா.. நான் எவ்ளோ மான்களை வேட்டையாடி இருப்பேன்.. அதனால என் குட்டி உனக்கு அந்தப் பாவம் சேரட்டும்னு சொல்லிட்டு அந்த கிளட்டு சிங்கம் செத்து போச்சாம்.

சரிதான்னுட்டு.. அந்த குட்டி சிங்கம்.. தனக்குன்னு ஒரு வழி தேடி அமைதியா போயிடுச்சாம்.

வழில.. ஒரு எரிஞ்ச வனத்தை பார்த்தாம்.....

அதுல ஊனப்பட்ட.. ஒரு பெண் சிங்கமும்.. தன் தந்தை மாதிரியே இருக்குற குட்டி சிங்கத்தை பார்த்து திகைச்சுபோனதாம்...

'டேய் தகப்பா... இன்னும் நீ பற்ற வைத்த நெருப்பு அடங்கலியா..' ன்னு திரும்பி பார்த்தா..

காட்டூ ராஜா சிங்கம் எதிர்ல வந்தததாம்..

உன் தந்தை இட்ட நெருப்பு.. என் வனத்தை.. என் இனத்தைஅழித்த கோபத்தில உன்னை.. காயப்படுத்திட்டேன்..

மன்னிக்க வேண்டாம் ..முடியாது.. எனில் மறந்திருன்னு சொன்னதாம்..

வனத்தை சீரமைக்க..... அந்த சிங்கம் பட்ட பாடை அறிந்த.. பெண்சிங்கம்.. மறுகி நின்றதாம்... கண்ணீர் விட்டதாம்..

உடலை வருத்தி ... மனதை இறுக்கி.. அதுபட்ட பாடு அறிந்து..

தன் வலி.. கோபம் தொலைத்து.. உருகி நின்னதாம்..

இப்போ......!!!!

மன்னிப்பு கேட்டதனால் அது பெரிதா..

மன்னித்து.. மற்றவர் நிலையில் இருந்து யோசிக்கும் இது பெரிதா....

சொல்லுங்க விக்ரம் சார்....
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice and emotional epi. Abayan romba pawem pa. Akka mele ewlo anbu irundha iwlo care eduthu pathupan. Abayan really great hero .😊 milir abayan koode happy a vaalredhe pake waiting.
 
Top