வணக்கம் மேடம்,
உங்கள் போட்டிக் கதையைப் படித்த பிறகு நீங்கள் இந்தக் கதை ஆரம்பித்த போதே நானும் படிக்க ஆரம்பிக்க வேண்டும் எனத் துறுதுறுவென்று இருந்தது. ஆனால் இயல்பில் எனக்குக் கொஞ்சம் பொறுமை குறைவு. அதனால் முடிந்த கதைகளையே பெரும்பாலும் படிப்பேன். ஆனால் சில நேரங்களில் கதை முடிந்த பின் படிக்க நேரமில்லாமல் போய் லிங்க் நீக்கப்பட்டு விடுவதால் உங்கள் கதை முடியும் நிலையில் படிக்க ஆரம்பித்து விட வேண்டும் என நினைத்து ஐம்பதாவது அத்தியாயம் நீங்கள் போட்ட பின் படிக்க ஆரம்பித்தேன். எப்படியும் சில அத்தியாயங்களில் முடிந்து விடும் என்ற நம்பிக்கையில்...ஆனால் அதற்குப் பிறகு இத்தனை அத்தியாயங்கள் போட்டு என் ரத்த அழுத்தத்தை எக்கச்சக்கமாக எகிற வைத்து விட்டீர்கள்.
வாழ்கையிலேயே காலை ஏழு மணிக்கு கணவர் வாகிங்கும் பிள்ளைகள் பள்ளிக்கும் கிளம்பிய பிறகு முதல் வேலையாக நெட்டை ஆன் செய்து அப்டேட் போட்டிருக்கிறீர்களா எனப் பார்த்து அவசரமாகப் படித்து முடித்து பின் நிதானமாக ஒன்பது மணிக்கு மேல் ஒரு தடவை படித்தது புது அனுபவம்.
கதையைப் பற்றி,
மிக மிக அருமை. உங்கள் எழுத்தின் ஆழம்...ஒரு காட்சியை நீங்கள் விவரிக்கும் தெளிவான விதம்...அந்தக் காட்சி கண் முன் விரிவதற்கு உதவும் உங்கள் வர்ணனை என எல்லாமே அற்புதமாக இருந்தது.
கதைக் கரு... அதை நீங்கள் கொண்டு சென்ற விதம்...என்னதான் காதல் மனதில் இருந்தாலும் ஒரு கசப்பான உணர்வு ஏற்பட்ட பின் அதை முற்றாக மறக்க முடியாது என்பதே உண்மை.அதை மிக அழகாகப் பதிவு செய்து இருந்தீர்கள்.
எபிலாக் என்று இல்லாமல் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட அந்தக் கசப்புணர்வை அவர்கள் வாழ்க்கையின் இனி ஏற்படும் இனிமையான நினைவுகளால் மிளிர் மறந்து... அபயனுடன் மனமும் உடலும் ஒன்றி வாழ ஆரம்பித்து விட்டாள் என முடிப்பீர்கள் என மிகவும் எதிர்பார்த்தேன்.
மேலும் மேலும் இதைப் போல் பல கதைகள் எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டும் என்ற விண்ணப்பத்துடன்
தூரிகா .