K.Venigovind
Well-known member
Very nice....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Unga kavithai - Outstandingநயனி மா.. இன்னும் ஒரு யூடில முடிக்க போறீங்க..
கருவைத் தாங்கி.. சில மாதம் மசக்கை படுத்தும்.. அடுத்து.. துடிப்பு தொடங்கியதும்.. மனம் மகிழ்ச்சியில் நிறையும்.. சுகமான சுமையாய்.. படுத்தலும் இனிமையுமாய் நாட்கள் நகரும்.. கடைசி சில நாட்கள்.. அழுத்தமும் ஆர்வமும்.. துவள வைத்து நிமிர வைக்கும்..
அவ் எப்போதடா சுமை இறங்கும் னு.. தோண ஆரம்பிச்சுடும்..
முடித்த தருணம்..
புது உயிர் பிறந்த தருணம்... சுகவலியும்... ஆனந்த கண்ணீருமாய்..
கடவுளறிந்த தருணம்.. வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாது..அதே அதே.
இந்த கதை எனக்கு மிக ஸ்பெஷல்.. ஆன்ட்டி ஹீரோ கதையா... ஏற இறங்கப் பார்த்து ஒதுங்கும் நான்.. உள்ளே வந்து விட்டேன் உங்கள் மீதான நம்பிக்கையில்...
உண்மையா சொல்றேன்.. அபயன் ம்ளிர் ஆட்டி வச்சுட்டாங்க.. என் வேலைகளை தள்ளி வைக்கும் அளவு.. அதனைப் பற்றி துளியும் கவலைப் படாத அளவு.. ஆக்ரமிச்சுட்டாங்க..
உயிரும் உணர்வுமா.. உங்களின் கதைப் பாத்திரங்கள்..
இரத்தமும் சதையுமா.. எதிரில் நடமாடும் உணர்வு..
டோட்டல் அவுட் நான்..
உங்க ஆளுமை.. தமிழின் புதிய பரிணாமம்.. KKPM..
உங்களின் வெற்றி மகுடத்தின் மிளிரும் ..
வைரம்..
அடுத்துடுத்து.. ரத்தினங்கள் வெயிட்டிங்.. ஸே ஓய்வெடுத்துட்டு.. அடுத்த கல் எடுத்து.. பட்டை தீட்ட ஆரம்பிங்க.. வேடிக்கை பார்த்து கருத்து சொல்ல இப்போவே.. துண்டை போட்டு வச்சுடுறேன்....
அபய் ஆர்மிக்கு.. அதன் தலைவிக்கு.. அபயின் மம்மீஸ் கு.. இவ்வரிகள் சமர்ப்பணம்..
View attachment 9753
நெருப்புக் கோளமென தகித்திருந்தேன்...
நீராக நீ வந்தாய்....
தகிப்பை அடக்கிடுவாயோ என தள்ளிச்சென்றேன்..
காதல் மேகமாய் எனைச் சூழ்ந்தாய்...
கண்களைக் கட்டிக் கொண்டேன்..
கருமேகமாய் மாறி வெய்யோனைப் பொய்யோனாக்கினாய்..
பின்புதான் உணர்ந்தேன்...
வெறும் நீரல்ல நீ...
ஒளிரும் பூமி.. என்னிலிருந்து ..
என் விலாவினின்று படைக்கப் பட்ட.. ஆவி நீ..
தகிக்கும் சூரியனடி நான்...
சுட்டெரிப்பது என் கடனென..
கொதிக்கும் கோடையாய்..
உனை தாக்கினேன்....
சுடப் பொறுத்தாய்...
ஆவியது ஆவியாக..
அங்கமெல்லாம் பிளவுற..
வெடித்து நின்று.. மௌன மொழியால்.. எனைக் கொன்றாய்..
உன்
காலம் முடிந்தததென வானின் மறு கோணம் சென்றேன்.. முடியாமல்..
மறு பகலாய் உன் அருகினில் வந்தேன்..
இரு நிலவுகள் சுற்றி வர என் பூமி..
இருக்கக் கண்டு அதிர்ந்தேன்.. என் உயிரின் பிம்பமென் கண்டு கொண்டேன்.. உயிரே நீதான் என உணர்ந்து நின்றேன்..
கோடை தாண்டிச் சென்றிருந்தவள்..கோட்டைத் தாண்ட விடவில்லை..கொதித்தாய்.. தகித்தாய்.... சுழற்றியடிக்கும் காற்றைக் கிளப்பி.. தூசிப் புயலானாய்..
எனை மறைத்தாய்.. புழுக்கம் கொடுத்தாய்.... இயலுமா..
ஆதவனடி நான்..
புயலை புறமுதுகிட்டோடச் செய்பவனடி நான்..
உன் பகலும் நானே உன் இரவும் நானே.. புரியவைக்க வேளை வந்தது.. புதிதாய் மாறினேன்..
உன் கோபம் தணிக்க காதல் மேகங்களை தூதனுப்பினேன்..
அன்பினை மழையாக பொழியச் செய்து உனையடைந்தேன்..
குளிர்ந்த நீ... குமுறும் வெள்ளமானாய்...
ஆர்ப்பரித்து விலகி ஓடினாய்..
எனை மறைக்கும் பனி சூடினாய்..
பனிசிற்பமென உறைந்தவளை.. என் காதல் கரங்களால்..
உயிர் தீண்டும் நெருப்பில் இட்டு இளக்க முயற்சித்தேன்..
உருகியவள்.. பன்னீராய் மணக்கவில்லை..
வெந்நீராய் விசிறியடித்தாய்..
வீறு கொண்டாய்..
என் வேரிலே.. பழுதென்றாய்..
ஆதவனடி நான்.. அடங்கிப் பழக்கமில்லை..
எட்டாத் தொலைவில் சென்று மறைந்தேன்..மற்றவருக்கு..
ஆயினும்...
என் மிளிரும் பூமிக்கு.. தொடுவானச் சூரியனே நான்..
பனியின் உறைவினின்று வெளிவந்தவள்.. என் கதிர்க்கரங்களின் வெம்மை தேடுகிறாள்..
அறிகிறேன்.. தொலைதூர வெளிச்சமாய்.. உனை
நினைவினால் ஈர்க்கிறேன்..
ஒளிரும் அழகியே..
என் கரங்கள் உனை தழுவ..
வசந்தமடி உனக்கும் எனக்கும்...
உன் மனம்.. உடல் மலர்களால் நிறைப்பேன்...
என் வெம்மையை.. தன்மையாய் தருவேன்...
வருவாயா... இனி என் கோடை அன்பெனும் வெப்பமாய்..உனை சீராட்டும்..
இடி முழங்கும் கார்.. என் மிருதை மீது கொண்ட ஊடலாய்..உனைத் தாலாட்டும்..
பனியினை.. நமக்குள் உறையும் காலமாய்.. மாறச் செய்வேன்..
ஆதவனடி நான்.. என்னில் இருந்து எனக்காக வந்த பூமகளடி நீ...
வா.. வசந்தத்தை.. வாழ்ந்து பார்க்க....
காதலால் காலத்தையும் நிறுத்தி வைப்பேன்.. இனி வசந்தம் மட்டுமே....
உனக்கான
ஆதவனடி.
உனை
ஆளப்பிறந்தவனடி..
அபய விதுலனடி நான்...
நயனிமா அப்படியா சொல்லவேயில்ல... யோவ் யாருய்யா இந்த கோரிக்கைய நயனிமாகிட்ட வச்சது...யாரா இருந்தா நமக்கென்ன...நம்ம காரிய நடக்கப்போகுதுViji mam next Friday story mudiyuma
Super news conforma
நன்றி நன்றி நன்றி அனு மாUnga kavithai - Outstanding
Excellence to the superlative degree .
No more words to express the feel that I experienced after reading this
நம் நட்பை வார்த்தைகளில் உணர வைக்க முடியாது நாயகிமா..நயனிமா உண்மையில் இப்படி ஓர் தோழி கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். லோட்டஸ் யூ ஆர் கிரேட்.. எனக்கு உண்மையில் கண்ணில் நீர் கோர்கிறது...அருமையான வரிகள்... உங்களின் நயனிமா மீதான உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடு அருமை... உங்களில் நானும் ஒருத்தி என்பதில் எனக்கு பேரானந்தம்
வாவ் சூப்பர் மீனா மா..என் அடங்கா மடங்கா திமிரே,
உன்னை அடக்க வருது இந்த புயலே,
நீ வானில் நீலமாக கரைந்தால்,
உன்னில் ஆழமாக உறைவேன்.
கடலின் ஆழம் சென்று புதைந்தால்,
உன் நீளம் காண நான் வருவேன்.
நீராய் நீ ஓடினால் வேராய் உன்னை நாடுவேன்.
போவென்றால் வா என்னும் பெண் மனதை அறியாத படவா, உன்னை நான் விடவா?
உன் பாவத்தை கங்கையாம் இந்த மங்கையில் கரைத்தாய்.
என்னை பிளந்து உன்னை கண்டேன். உண்மை கண்டேன்.
உன் அன்மை தேட, நீ அண்டம் தாண்ட, உனைக் கண்ட வேளையில் காதலால் உண்பேனடா உன்னை.
வல்லினமே மெல்லினத்தை, இடையினம் இல்லாமல் இறுக்கி விடு. இலக்கணத்தை உடைத்து விடு.
வெள்ளத்தின் பாதையில்,
உள்ளத்தின் போதையில்,
காதலின் கள்ளத்தில்,
களவாட போகிறேன்,
கள்வனே காத்திரு!
thanks thamaraiசெல்விமா.. கலக்கல்..