All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

hani hajira

New member
super super.... epdi sollurathune theriyala.. milir azhum pothu azhuthathu vida abhayan azhum pothu manasu thangala. . unarvuhal ah kottitinga... actually en full support milir ku than. ithan original ah oru human oda nilamai. ellaralaum ellaru idathula irunthum yosikka mudiyathu. thanakku irukka vali than perusa therium. abhay mela full ah hope vachu than padika start pannen. 100 ku 200 % avan correct. aana milir um correct. kandhimathi manasa nirachutanga... aarathana raja character ku salute pannalam. avlo azhagu. evlo kastam vanthalum love nu vanta heroin mannichuduranga nu oru korai. intha kathai la first ava mannichuduva nu nenaichutey padichen. illa mannikala mudinja alavu thiruppi kuduthuta. ithu oru kutty santhosam. nitharsanam ithan. athu kathai la real ah irukku. great 👏 Naan muthalla ye malaiku sanniyasam poha poran nu guess panniten. milir romba late. pesama ni oththiko Naan kothittu poiduren ... aana avan othukka mattane. . intha pidivatha azhu moonji papa than avanukku venum. pona pothu nu abhay kaha my love ah thiyagam pannuren... last episode eppo varum nu ipove wait pannitu irukken... super sis. always unga written style azhaga pathiyuthu manasula. romba naala padikanum nu nenaichu ore moocha padichuten... congratulations ❤❤ kadaisila gammanu padichavalayum comment poda vachitingale 😍😍
 
Sumigopi

Well-known member
Puyal vegathula poittu irukka namma milir...kurukka yethuvum varama kaapathuppa.....

Abaya, puyal thangalai noki vanthu kondirukirathu setharathukku nanga poruppilla.....
 
Manikandan

Active member
வாவ் செம matching Song... என்ன feel...Superb.. அய்யய்யோ எனக்கும் ஏதோ தோணுதே 😂😂😍😍🤗

மிளிரும் பூமியை பயமின்றிச் சுற்றும் காதல் கதிரவனவன்...
தன் நேசக் கிரணங்கள் பூமகளை சுடுவதென நினைத்து விட்டான்..

ஒளிக் கதிர்கள் நிலமகள் மேனி தொடாத் தூரம் செங்கதிரோன் சென்று விட்டான்...
தன் உருவத்தை மறைத்து வைத்து
எங்கோ ஒளிந்துக் கொண்டான்...

நேச வெப்பம் அது மறைந்திட மங்கையவள் மலைத்து நின்றாள்...
காதல் குளிரடிக்க காஞ்சனையோ கதி கலங்கி நின்றாள்...

தன் சூரியனை தரணியவள் மீண்டும் மனத்தில் நினைத்து விட்டாள்..
தலைமறைவான தலைவனவன் இருக்கும் திசையறியாது தவித்து நின்றாள்..

பூமியது சூரியனைச் சுற்றிச் சுழலுதல் இயற்கையன்றி வேறில்லை..
மிளிரும் புவன மகள் விதுலனிடம்
கொண்டதும் மெய்க் காதலே அன்றி வேறில்லை...

பாரிலுள்ள உயிர்கள் சிறக்க பகலவன் வேண்டும்
மிளிரும் பாவையவள் மீண்டு வாழ அபயனவன் கட்டாயம் வேண்டும்.. வேண்டும்...வேண்டும்....🌄🌄🌄
Yaruma ne... Enakkkey unna parkanaum pola irukkey....nice ma
 
தாமரை

தாமரை
நயனி மா.. இன்னும் ஒரு யூடில முடிக்க போறீங்க..

கருவைத் தாங்கி.. சில மாதம் மசக்கை படுத்தும்.. அடுத்து.. துடிப்பு தொடங்கியதும்.. மனம் மகிழ்ச்சியில் நிறையும்.. சுகமான சுமையாய்.. படுத்தலும் இனிமையுமாய் நாட்கள் நகரும்.. கடைசி சில நாட்கள்.. அழுத்தமும் ஆர்வமும்.. துவள வைத்து நிமிர வைக்கும்..

அவ் எப்போதடா சுமை இறங்கும் னு.. தோண ஆரம்பிச்சுடும்..

முடித்த தருணம்..
புது உயிர் பிறந்த தருணம்... சுகவலியும்... ஆனந்த கண்ணீருமாய்..

கடவுளறிந்த தருணம்.. வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாது..அதே அதே.

💖💖💖💖💖💖💖💖

இந்த கதை எனக்கு மிக ஸ்பெஷல்.. ஆன்ட்டி ஹீரோ கதையா... ஏற இறங்கப் பார்த்து ஒதுங்கும் நான்.. உள்ளே வந்து விட்டேன் உங்கள் மீதான நம்பிக்கையில்...

உண்மையா சொல்றேன்.. அபயன் ம்ளிர் ஆட்டி வச்சுட்டாங்க.. என் வேலைகளை தள்ளி வைக்கும் அளவு.. அதனைப் பற்றி துளியும் கவலைப் படாத அளவு.. ஆக்ரமிச்சுட்டாங்க..

உயிரும் உணர்வுமா.. உங்களின் கதைப் பாத்திரங்கள்..
இரத்தமும் சதையுமா.. எதிரில் நடமாடும் உணர்வு..

டோட்டல் அவுட் நான்..🤗🤗🤗🤗

உங்க ஆளுமை.. தமிழின் புதிய பரிணாமம்.. KKPM..
உங்களின் வெற்றி மகுடத்தின் மிளிரும் ..
வைரம்..

அடுத்துடுத்து.. ரத்தினங்கள் வெயிட்டிங்.. ஸே ஓய்வெடுத்துட்டு.. அடுத்த கல் எடுத்து.. பட்டை தீட்ட ஆரம்பிங்க.. வேடிக்கை பார்த்து கருத்து சொல்ல இப்போவே.. துண்டை போட்டு வச்சுடுறேன்..😁😁😁😁😁😁😁..

அபய் ஆர்மிக்கு.. அதன் தலைவிக்கு.. அபயின் மம்மீஸ் கு.. இவ்வரிகள் சமர்ப்பணம்..

images (25).jpeg

நெருப்புக் கோளமென தகித்திருந்தேன்...

நீராக நீ வந்தாய்....

தகிப்பை அடக்கிடுவாயோ என தள்ளிச்சென்றேன்..

காதல் மேகமாய் எனைச் சூழ்ந்தாய்...
கண்களைக் கட்டிக் கொண்டேன்..

கருமேகமாய் மாறி வெய்யோனைப் பொய்யோனாக்கினாய்..

பின்புதான் உணர்ந்தேன்...
வெறும் நீரல்ல நீ...

ஒளிரும் பூமி.. என்னிலிருந்து ..
என் விலாவினின்று படைக்கப் பட்ட.. ஆவி நீ..

தகிக்கும் சூரியனடி நான்...
சுட்டெரிப்பது என் கடனென..
கொதிக்கும் கோடையாய்..
உனை தாக்கினேன்....

சுடப் பொறுத்தாய்...
ஆவியது ஆவியாக..
அங்கமெல்லாம் பிளவுற..
வெடித்து நின்று.. மௌன மொழியால்.. எனைக் கொன்றாய்..
உன்
காலம் முடிந்தததென வானின் மறு கோணம் சென்றேன்.. முடியாமல்..
மறு பகலாய் உன் அருகினில் வந்தேன்..

இரு நிலவுகள் சுற்றி வர என் பூமி..
இருக்கக் கண்டு அதிர்ந்தேன்.. என் உயிரின் பிம்பமென் கண்டு கொண்டேன்.. உயிரே நீதான் என உணர்ந்து நின்றேன்..

கோடை தாண்டிச் சென்றிருந்தவள்..கோட்டைத் தாண்ட விடவில்லை..கொதித்தாய்.. தகித்தாய்.... சுழற்றியடிக்கும் காற்றைக் கிளப்பி.. தூசிப் புயலானாய்..

எனை மறைத்தாய்.. புழுக்கம் கொடுத்தாய்.... இயலுமா..

ஆதவனடி நான்..

புயலை புறமுதுகிட்டோடச் செய்பவனடி நான்..

உன் பகலும் நானே உன் இரவும் நானே.. புரியவைக்க வேளை வந்தது.. புதிதாய் மாறினேன்..

உன் கோபம் தணிக்க காதல் மேகங்களை தூதனுப்பினேன்..
அன்பினை மழையாக பொழியச் செய்து உனையடைந்தேன்..

குளிர்ந்த நீ... குமுறும் வெள்ளமானாய்...
ஆர்ப்பரித்து விலகி ஓடினாய்..

எனை மறைக்கும் பனி சூடினாய்..

பனிசிற்பமென உறைந்தவளை.. என் காதல் கரங்களால்..
உயிர் தீண்டும் நெருப்பில் இட்டு இளக்க முயற்சித்தேன்..

உருகியவள்.. பன்னீராய் மணக்கவில்லை..
வெந்நீராய் விசிறியடித்தாய்..
வீறு கொண்டாய்..
என் வேரிலே.. பழுதென்றாய்..

ஆதவனடி நான்.. அடங்கிப் பழக்கமில்லை..
எட்டாத் தொலைவில் சென்று மறைந்தேன்..மற்றவருக்கு..

ஆயினும்...
என் மிளிரும் பூமிக்கு.. தொடுவானச் சூரியனே நான்..

பனியின் உறைவினின்று வெளிவந்தவள்.. என் கதிர்க்கரங்களின் வெம்மை தேடுகிறாள்..

அறிகிறேன்.. தொலைதூர வெளிச்சமாய்.. உனை
நினைவினால் ஈர்க்கிறேன்..

ஒளிரும் அழகியே..

என் கரங்கள் உனை தழுவ..
வசந்தமடி உனக்கும் எனக்கும்...

உன் மனம்.. உடல் மலர்களால் நிறைப்பேன்...

என் வெம்மையை.. தன்மையாய் தருவேன்...

வருவாயா... இனி என் கோடை அன்பெனும் வெப்பமாய்..உனை சீராட்டும்..

இடி முழங்கும் கார்.. என் மிருதை மீது கொண்ட ஊடலாய்..உனைத் தாலாட்டும்..

பனியினை.. நமக்குள் உறையும் காலமாய்.. மாறச் செய்வேன்..

ஆதவனடி நான்.. என்னில் இருந்து எனக்காக வந்த பூமகளடி நீ...

வா.. வசந்தத்தை.. வாழ்ந்து பார்க்க....
காதலால் காலத்தையும் நிறுத்தி வைப்பேன்.. இனி வசந்தம் மட்டுமே....

உனக்கான
ஆதவனடி.
உனை
ஆளப்பிறந்தவனடி..
அபய விதுலனடி நான்...
 
Nayaki

Bronze Winner

View attachment 9753

நயனிமா உண்மையில் இப்படி ஓர் தோழி கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். லோட்டஸ் யூ ஆர் கிரேட்.. எனக்கு உண்மையில் கண்ணில் நீர் கோர்கிறது...அருமையான வரிகள்... உங்களின் நயனிமா மீதான உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடு அருமை... உங்களில் நானும் ஒருத்தி என்பதில் எனக்கு பேரானந்தம்
 
Top