All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வாழ்க்கை வாழ்வதற்கே !

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்க்கை வாழ்வதற்கே.......


உன் வாழ்க்கை உன் கையில்!


வாழும் காலம் போடும் கோலம் சரியாக அமைந்தால் நம் வாழ்க்கை பாடமாகும்.

காலம் அதன் கோலம்.....


காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்று அறிவோம். கடந்த கால நினைவுகளும், நிகழ்கால் நடப்புகளும், எதிர்கால நிகழ்வுகளும் கலந்த கோலம் தான் நம் வாழ்க்கை.

கோலம் அழகு,
புள்ளிக் கோலம் பின்னலில் அழகு!
கோட்டுக் கோலம் இணைப்பதில் அழகு!
வண்ணக் கோலம் வர்ணஜாலத்தில் அழகு!

வாழ்க்கை கோலம் வாழும் விதத்தில் அழகு!


வாழ்க்கையின் தேவைகளை வரையறுக்க முடியாது. அது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டே இருக்கும். அதை அதன் போக்கில் வாழ கற்றுக் கொண்டால் ஜெயிப்பது மட்டுமல்ல அதை அனுபவித்து வாழவும் அதில் உள்ள நிறை குறைகளை தெளிந்து சந்தோசமாக வாழலாம்.


தண் நிலவின் குளிர்ச்சி சொல்லும்

வாழ்க்கை அழகானது என்று!

வெண் பனியின் மென்மை சொல்லும்

வாழ்க்கை சுகமானது என்று!

கண் மனியின் கனவு சொல்லும்

வாழ்க்கை அழகானது என்று!

மண் பார்க்கும் மகவு சொல்லும்

வாழ்க்கை சுகமானது என்று!

ஆனால்

பெண் வாழும் வாழ்வு சொல்லும்


வாழ்க்கை என்றால் என்ன என்று!


வாழ்க்கை

நீ ரசிக்கும் போது


நந்தவனம்!

நீ உணரும் போது

தென்றல்!

நீ கேட்கும் போது

இசை!

நீ படிக்கும் போது


கவிதை!


நிலவுக்கு ஒரு வானம்
குழலுக்கு ஒரு கானம்

பகலுக்கு ஒரு சூரியன்
இரவுக்கு ஒரு சந்திரன்

கண்ணுக்கு ஒரு காட்சி
மண்ணுக்கு ஒரு ஆட்சி

தாய்க்கு ஒரு சேய்
வாய்க்கு ஒரு மெய்

பெண்ணூக்கு ஒரு ஆண்
ஆணுக்கு ஒரு பெண்

இதுவே வாழ்க்கையின்


அழகிய நிஜங்கள்!


வாழ்வின் நிஜங்கள் புரிந்தவன் வாழ்க்கையை வெல்வான்.

உன் வாழ்வின் வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்படி!

அதை உணர்ந்த மனிதன் வாழ்வை அனுபவித்து ரசித்து வாழ்வான்.

வாழ்வின் மகத்துவம் புரிந்து வாழத் தொடங்குவோமா...?


வாழ்ந்தவனுக்கு அனுபவம் பதில் சொல்லும்

வாழ்பவனுக்கு காலம் பதில் சொல்லும்

வாழப் போறவனுக்கு மனம் பதில் சொல்லும்.



1522850268197.png


அன்புடன்

செல்வி சிவானந்தம் @ மித்ரவருணா
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஊக்கம் ஆக்கம் தருமா?

இன்றைய இளைய சமுதாயம் என்ன எதிர்பார்க்கிறது?


இன்றைய சிட்டி லைப்பில், ஆண்களும் சரி, பெண்களும் சரி சிலர் தனக்கென தனிப் பாதை வகுத்துக் கொண்டு ஒரு நேர் கோட்டில் முன்னேற நினைக்கிறார்கள்.


பலர், தங்கள் பாதையில் தெளிவில்லாமல் சுக போகமே வாழ்வென்று நினைக்கிறார்கள்.

ஒரு படித்த/டிகிரி முடித்த ஆண் எதிர்பார்ப்பது,

எடுத்தவுடன் 15000 முதல் 20000 சம்பளம்
உடல் உழைப்பு இல்லாத வேலை.
ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க வேண்டும்
ஐ. டி அல்லது அதே போல் ஒரு வேலை
வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை
இஷ்டம் போல் சுற்றி, குடித்து கும்மாளம்.
எதிர் பார்ப்பது அழகான, குடும்ப பொறுப்பு உள்ள பெண்

ஒரு படித்த/டிகிரி முடித்த பெண் எதிர்பார்ப்பது,

பொழுது போக்குவதற்கு நல்ல வேலை, நல்ல சம்பளம்
தன் சம்பளத்தில் ஒரு பகுதி கட்டாயம் தனக்குத்தான்
ஐ. டி அல்லது அதே போல் ஒரு வேலை
வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை
இஷ்டம் போல் மால்மாலாக சுற்றி, குடித்து கும்மாளம்.
எதிர் பார்ப்பது அழகான, நல்ல சம்பளம் வாங்கும் ஒரு ஆண்


இவர்களே, பல பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். வழி தவறுகிறார்கள். பல தீமைகளை பயமில்லாமல் செய்கிறார்கள்.

இதற்கு காரணம் யார்?
பெற்றோர்களே, கவனத்தில் கொள்ளுங்கள்.
நீங்கள் சொல்லிக் கொடுப்பதைத் தான் உங்கள் பிள்ளைகள் தங்கள் வாழ்வில் மேற்கொள்கிறார்கள் என்பதை மறவாதீர்.

நல்ல வழிகளையும், நல்ல சிந்தனைகளையும், உண்மையான வாழ்க்கையின் நிஜங்களையும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.


ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு!

இன்றைய நிலையில் முயற்சி செய்ய வேண்டும், முயன்றால் முடியாதது இல்லை என்பதை எத்தனை பேர் உணர்ந்து கொண்டு இருக்கிறோம்.


சமீபத்தில் வந்த ஒரு திரைப் படத்தில், தன் pass port'ல் இருந்து ஒரு பெயரை நீக்க வேண்டும் என்பதற்க்காக கதா நாயகன் எவ்வளவோ போராடி, முடிவில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரை சந்தித்து பேசும் போது தான் தெரிகிறது அது வெறும் 15 நாட்களில் , 2000 ரூபாய்க்குள் முடியும் வேலை என்பது.

முதலிலேயே ஒரு முயற்சி செய்து பார்த்திருந்தால் இவ்வளவு கஷ்டம் இல்லை.

புரிந்து கொள்ளுங்கள் பெற்றோர்களே,
நம்மில் எத்தனை பேர் நம் குழந்தைகளுக்கு வெளி உலகத்தை பழக்கப் படுத்துகிறோம்.
நாளை அவர்கள் அவர்களுடைய தேவைகளை அவர்களே உணர்ந்து பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
இன்றே வழி நடத்துங்கள் உங்கள் பிள்ளைகளை.

நமக்குத் தேவையான அனைத்தையும் ஆன் லைன் முலம் அல்லது ஏஜெண்டுகளின் முலம் முடித்துக் கொள்கிறோம்.

கடைகளில் சென்று வாங்கும் போது கிடைப்பது பொருள் மட்டுமல்ல, வாழ்க்கை வாழ தேவையான அறிவும் கிடைக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.
படிப்பது ஒன்றே நம் பிள்ளைகளின் வேலை என்று நினைக்கின்றோம். வெளி உலக அறிவு மிக மிக அவசியம்.


நம் பிள்ளைகளுக்கு நாளை நேர் காணல் இருக்கிறது.
உத்யோகத்திற்கு மட்டுமல்ல, எதை செய்வதற்கும் மற்றவர்களிடம் நேரடியாக பேச வேண்டும் என்பதை மறந்து விட்டோமா?
அவர்கள் எதையும், யாரையும் எதிர் கொள்ளப் பழக வேண்டும்.

அதற்கு தயார் செய்யுங்கள் நம் குழந்தைகளை.
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதுகுக்குப் பின்னால்......

சிலர் சொல்வார்கள் நான் முகத்துக்கு நேரே பேசிவிடுவேன். தப்போ, சரியோ எனக்கு நேராகச் சொல்லித்தான் பழக்கம்.

இப்படி பேசும் போது அதை கேட்பவர்கள் மன நிலை என்னவாகும் என்று யோசிக்க வேண்டுமா?

ஆம், யோசிக்க வேண்டும். ஒருமுறை அல்ல பல முறை யோசிக்க வேண்டும்.

அதுவும் குழந்தைகளிடமும், பதின் வருட பிள்ளைகளிடமும் பேசும் போது கட்டாயம் யோசிக்க வேண்டும்.

பெற்றோர்களே, நமக்கு வீட்டில், அலுவலகத்தில் என்று ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். அதற்காக பிள்ளைகளிடத்தில் எப்போதும் கடுமையாகப் பேசினால் அது அவர்களை தவறான வழியில் தடம் மாற வைத்துவிடும்.

படிக்கவில்லையா? சோம்பேறியாக இருக்கிறார்களா? சொன்ன சொல் கேட்பதில்லையா? தவறு செய்கிறார்களா? கவனிக்க வேண்டிய விசயம் தான். அதற்காக கோபம் கொண்டு அடிப்பதிலோ, திட்டுவதிலோ பயன் இல்லை.

அவர்களுக்காக நேரம் ஒதுக்கி, அவர்கள் குறைகளை கேட்டு சரி செய்ய துணை நில்லுங்கள்.

போராட்டம் தான் வாழ்க்கை.

அன்பை வைத்து போரடுங்கள்!

அரவணைத்து போராடுங்கள்!
"உன்னால் முடியும் படி", என்று நம்பிக்கை ஊட்டுங்கள்!
தவறுகளைத் திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் கொடுங்கள்!
தவறுகளை புரிய வையுங்கள்!
சோம்பேறித்தனம் ஏன்? பிடிக்கவில்லையா? அல்லது புரியவில்லையா என்று கண்டறிய முயலுங்கள்!
எல்லா வற்றையும் நல்ல முறையில் செய்ய, சின்ன சின்ன செயல்களுக்கும் பாராட்ட பழகுங்கள். வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொடுங்கள்.
நிச்சயம் உங்கள் பிள்ளைகள் உங்கள் அருகில் உங்கள் மகிழ்வில் சுகம் காண கற்றுக் கொள்வார்கள்.

bUHmSAaaQjOvJrPXNgdv+download_2.jpg
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்க்கை ஏணி... நீ எந்தப் படியில்.........?

உன் வாழ்க்கை உன் கையில் என்று கேள்விப் பட்டிருப்போம். ஏற்றுக் கொள்ள முடிகிறதோ? இல்லையோ? ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நம் வாழ்க்கையை நாம் மட்டுமே வாழ முடியும்.


பிறர் வாழ வழி ஏது?

நம் கஷ்ட, நஷ்டங்களை நாம் தான் தாங்க வேண்டும். நாமே அதிலிருந்து மீள வழி தேட வேண்டும். பிறர் கூறும் அறிவுரைகளையும், வழிகளையும் நல்ல விதத்தில் எடுத்துக் கொண்டு நாம் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

நாமே எல்லாவற்றையும் அது சரி இல்லை, அது நடக்காது, அது கிடைக்காது, அது நமக்கு ஒத்து வராது என்று எதிர் மறையாக சிந்திக்கத் தொடங்கினால், நம் பிள்ளைகளின் நிலை என்ன?

எதிர் மறை எண்ணங்கள், வாழ்க்கைக்கு உகந்ததல்ல
எதிர் மறை எண்ணங்கள், முன்னேற்றத்திற்கு தகுந்ததல்ல

நமக்கு மட்டுமல்ல, நம் குழந்தைகளுக்கும் நேர் மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
சின்ன சின்ன உதாரணங்கள் காட்டி எதிர்மறை எண்ணங்களை அரவே அகற்றப் பாருங்கள்.

உங்கள் குழந்தை தன்னால் முடியாது என்று சொன்னால் அதை அதட்டி செய்ய வைப்பதை விட, அதன் அருகில் அமர்ந்து, நிதானமாக எங்கே இப்பொழுது செய் நானும் பார்க்கிறேன் என்று சொல்லி ஊக்கப் படுத்தி, அதை செய்ய வைத்து, அவ்வளவுதான், இதை போய் முடியாது என்றாயேடா? இப்போது பார் நீதானே செய்திருக்கிறாய் என்று தட்டிக் கொடுத்து பரிசு கொடுங்கள். அடுத்த தடவை அதுவே செய்து வந்து உங்களிடம் நிற்கும்.

உங்கள் குழந்தைகள் எதை எப்படி செய்யவேண்டும் என்பதை நேர்மறை எண்ணங்களைக் கொண்டு பழக்கப் படுத்துங்கள். அவர்களின் செயல்கள் "அம்மா நாண் முடித்து விட்டேன்", என்று தான் முடிய வேண்டுமே தவிர "என்னால் முடியுமா?" என்றோ, "என்னால் முடியாது" என்றோ முடிந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

அவர்கள் வாழ்க்கை எனும் ஏணியின் படி கீழ் காணும் படி அமைய வழிகாட்டுவோம். வாழ்த்துக்கள்.





life-motivation-life-steps.jpg
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

வாழக் கற்றுக் கொடுப்பவள் உன் தாய்!
வாழ்க்கையை கற்றுக் கொடுப்பவர் உன் தந்தை!


தாயும் தந்தையும் உலகமாகத் தெரியும் 5 வயதில்;
தாயும் தந்தையும் அன்பராகத் தெரியும் 10 வயதில்;
தாயும் தந்தையும் எல்லையாகத் தெரியும் 20 வயதில்;
தாயும் தந்தையும் தொல்லையாகத் தெரியும் 30 வயதில்;
தாயும் தந்தையும் துணையாகத் தெரியும் 40 வயதில்;
தாயும் தந்தையும் மனிதராகத் தெரியும் 50 வயதில்;
தாயும் தந்தையும் தெய்வமாகத் தெரியும் 60 வயதில்;

உலகமாய் இருந்தவர் தெய்வமாய் நிற்கும் நேரம் நீ மனிதனாய் நின்றிருப்பாய் மானுடனே!

உலகம் உருண்டையோ இல்லையோ தெரியாது...

ஆனால் காலச் சக்கரம் வட்டம் தான்.

அதன் சுழற்சியில் எல்லா பகுதியும் எல்லோருக்கும் உண்டு.

இந்தப் புத்தாண்டு உன் தாய் தந்தையரை நமக்கு உணர்த்துவதாய் இருக்கட்டும்.


இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழிகளே!












1523644945996.png
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோல்வியே வெற்றியின் முதல் படி....

நாம் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்க நம் வாழ்க்கை ஒன்றும் திரைப்படம் அல்ல.

வெற்றியும் தோல்வியும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை தன் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டியது ஒவ்வொரு தாய், தந்தையரின் முழு முதற் கடமை.

நாம் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதை முடிவு செய்வது மிகவும் அவசியம்.

ஒரு செயலை முதன் முதலில் செய்யும் போது அதற்கு நாம் முதலில் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.

எல்லோருக்கும் முதல் தடவையே சரியாக வந்து விடும் என்று சொல்ல முடியாது.

ஒரு சிலருக்கு மூன்று நான்கு தடவைகள் முயற்சி செய்தும் சரியாக வராது.

ஆனால் ஒவ்வொரு தடவை செய்யும் போதும் சில சிறு தவறினால் சரியாக வராமல் போகலாம். அடுத்த தடவை செய்யும் போது அதை திருத்திக் கொள்ள முயல்வோம்.

நம் தவறுகள் மூலம் நாம் ஒரு விசயத்தை தெளிவாக கற்றுக் கொள்ள முயல்கிறோம்.

நமக்கே இப்படி என்றால் நம் குழந்தைகளுக்கு தவறுவது இயற்கை.
பெற்றவர்களாகிய நாம் தான் நம் குழந்தைகளுக்கு தவறுகளை திருத்த கற்றுக் கொடுக்க முடியும்.

தவறுகளை உணர்த்துவதோடு மட்டுமில்லாமல் எதனால் அந்த தவறு நடந்தது. இதை இப்படி செய்திருந்தால் இந்த தவறு வந்திருக்காது என்று புரிய வைக்க வேண்டியது நமது கடமை.

அதை விட்டுவிட்டு அவர்களை திட்டுவதிலோ, தண்டிப்பதிலோ அவர்கள் திருந்தி தம் தவறுகளை திருத்திக் கொள்வதில்லை. இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்குத்தான் ஆளாகிறார்கள்.

மன அழுத்தத்தை விட கொடுமையான நோய் வேறில்லை.

நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு படிப்பினையை கொடுக்கிறது என்பதை நாம் நம் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே சொல்லிக் கொடுத்து வளர்த்தோமானால், நம் பிள்ளைகள் தோல்வியைக் கண்டு துவளாமல் அதிலிருந்து எப்படி வெளிவருவது என்று வழி தேடத் தொடங்கிவிடுவார்கள்.

நிச்சயமாக இந்த வழிமுறை எத்தனையோ இளம் வயது பிள்ளைகளின் தற்கொலைகளை தடுப்பதற்கு வழி காணும்.


1523929433128.png
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உனக்குள் தேடு......

ஒரு செயலை செய்வதற்கு ஒருவன் தயங்குகிறான் என்றால் அதற்கு என்ன காரணம் என்று யாராவது ஆராய்ந்து பார்த்து இருக்கிறோமா?

ஒரு குழந்தையிடம் ஒரு வேலையை சொல்லும் போது அது செய்யவில்லை என்று கோபப்படும் நாம், ஏன் அது மாட்டேன் என்று சொல்கிறது என்று கவனத்தில் கொண்டோமா?

ஒரு சுறுசுறுப்பான பிள்ளை சில தினங்களாக சோர்ந்து காணப்படுகிறது என்றால், அதற்கு உடல் நலக் குறைவா என்று ஆராயும் நாம் அதன் மன நலத்தைப் பற்றி கவலைப் பட்டோமா?
பெற்றோர்களே மிக, மிக கவனமாக இருங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களிடம் சொல்ல முடியாமல், சொல்லத்தெரியாமல் தனக்குள்ளே மறுகிக் கொண்டு இருக்கலாம்.

பெண் பிள்ளைகளோ இல்லை ஆண் பிள்ளைகளோ இருவருக்கும் வருகிறது மன அழுத்தம். அதிலிருந்து உங்கள் பிள்ளைகள் வெளிவர வேண்டுமானால் மனம் விட்டு பேசுங்கள் உங்கள் பிள்ளைகளிடம்.

அவர்களுக்கு பிரச்சனை பள்ளிகளில் மட்டுமல்ல வீட்டிற்கு அருகிலும் இருக்கலாம். அவர்கள் எங்கு செல்கிறார்கள் எப்போது வருகிறார்கள் என்று கவனியுங்கள். ஒரு கூடா நட்பு ஒர் குழந்தையின் வாழ்வையே அழிக்க வல்லது என்பதை மனதில் நிலை நிறுத்துங்கள்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் கூட உங்கள் பிள்ளைகளிடம் பழகும் முறையை கவனத்தில் கொள்ளுங்கள்.

கவனம் ஒரு பிள்ளை ஒரு பெரியவரிடம் இருந்து ஒதுங்குகிறது என்றால், ஒரு வேளை அவர்கள் உங்கள் பிள்ளைகளிடம் தவறாக நடந்து கொண்டிருக்கலாம் அல்லது தவறான விசயங்களைப் பற்றி பேசி இருக்கலாம்.

உங்கள் பிள்ளைகள் புத்திசாலிகள், அவர்களே தவறுகளைக் கண்டு ஒதுங்கும் போது, நீங்கள் அதை கவனத்தில் கொள்ளாது அவர்கள் உங்களிடம் நன்றாகப் பழகுகிறார்கள் என்பதை மட்டும் எண்ணிக் கொண்டு அதை வாங்கி வா, இதை போய் கேள் என்று இன்னும் ஒரு தவறு நடந்து விட காரணமாகி விடாதீர்கள்.

பெற்றோர்களாகிய நாம் எப்பொழுதும் நம் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசினாலே போதும் அவர்கள் எப்போதும் எதையும் நம்மிடம் சொல்லத் தயங்க மாட்டார்க்ள்.

மனம் வலிக்கிறது மக்களே, சின்னச் சின்னப் பிள்ளைகள் கூட மன அழுத்தம் மற்றும் தாழ்வு மனப்பான்மையால் அவதிப் படுகிறார்கள் என்று கேள்விப் படும் போது.


மன மாற்றத்தை மருந்து மாத்திரைகளிலும், வெளி இடங்களிலும் தேடாமல் உங்களுக்குள் தேடினால் மன அழுத்தம் மனம் விட்டுப் போகும்.

choose-hope-web.jpg
1523929922307.png
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படித்ததில் பிடித்தது.......
கதை - 1
A 24 year old boy seeing out from the train’s window shouted…
“Dad, look the trees are going behind!”
Dad smiled and a young couple sitting nearby, looked at the 24 year old’s childish behavior with pity, suddenly he again exclaimed…
“Dad, look the clouds are running with us!”
The couple couldn’t resist and said to the old man…
“Why don’t you take your son to a good doctor?”The old man smiled and said…“I did and we are just coming from the hospital, my son was blind from birth, he just got his eyes today.
Every single person on the planet has a story. Don’t judge people before you truly know them. The truth might surprise you.

படித்ததில் பிடித்தது.......
கதை - 2

A man’s favorite donkey falls into a deep precipice; He can’t pull it out no matter how hard he tries; He therefore decides to bury it alive.
Soil is poured onto the donkey from above. The donkey feels the load, shakes it off, and steps on it; More soil is poured.
It shakes it off and steps up; The more the load was poured, the higher it rose; By noon, the donkey was grazing in green pastures.
After much shaking off (of problems) And stepping up (learning from them), One will graze in GREEN PASTURES.

படித்ததில் பிடித்தது.......
கதை - 3

In the days when an ice cream sundae cost much less, a 10 year old boy entered a hotel coffee shop and sat at a table. A waitress put a glass of water in front of him.
“How much is an ice cream sundae?”
“50 cents,” replied the waitress.
The little boy pulled his hand out of his pocket and studied a number of coins in it.
“How much is a dish of plain ice cream?” he inquired. Some people were now waiting for a table and the waitress was a bit impatient.
“35 cents,” she said brusquely.
The little boy again counted the coins. “I’ll have the plain ice cream,” he said.
The waitress brought the ice cream, put the bill on the table and walked away. The boy finished the ice cream, paid the cashier and departed.
When the waitress came back, she began wiping down the table and then swallowed hard at what she saw.
There, placed neatly beside the empty dish, were 15 cents – her tip.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை சொல்லும் உண்மைகள்.......

கதை சொல்லத் தெரிகிறதோ இல்லையோ, ஆனால் கதை கேட்பது அனைவருக்கும் பிடித்த விஷயம்.


பாட்டி வடை சுட்ட கதை முதல் ராமாயணம், மஹாபாரதம் வரை எல்லா கதைகளையும் கேட்டு விட்டோம்.

ஆனால் அது சொல்லித்தரும் உண்மையான அர்த்தங்களை மனதில் நிலை நிறுத்தினோமா என்றால் அது கேள்விக் குறி தான்.

மேலே உள்ள பதிவுகளில் 3 கதைகள் உள்ளது. மூன்றும் மிகச் சிறிய கதைதான்.

அது சொல்லும் கருத்துக்கள் மிகவும் அற்புதமானவை.

முதல் கதையில் வரும் 24 வயது இளைஞனுக்கு அன்று தான் கண் பார்வை கிடைத்திருக்கிறது. அதனால் அவன் பேருந்தில் செல்லும் போது பின் நோக்கிச் செல்லும் மேகங்களையும், மரங்களையும் கண்டு அதிசயமாக தன் தந்தையிடம் கூறுகிறான்.

அதை பார்த்த மற்றொரு பயணி உங்கள் பையனை மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறுகிறான்.

இதிலிருந்து நமக்கு என்ன அறிவுருத்தப் படுகிறது என்றால் ஒருவரை பற்றி முழுவதும் அறிவதற்கு முன் அவரைப் பற்றி நாமே எதையும் முடிவு செய்ய வேண்டாம். பின் அவரைப் பற்றி அறியும் போது மனம் மிகவும் வேதனைப்படும்.

பெற்றோர்களே! இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் நாம் நம் பிள்ளைகளுக்கு எதை எப்பொழுது எவ்வாறு பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பது மிக அவசியம்.

அவர்கள் இன்றைய சினிமா மற்றும் தொடர் நாடகங்களைப் பார்த்துப் பார்த்து மிகவும் சரளமாக எல்லா கெட்ட வார்த்தைகளையும், பெரியவர்களிடம் மரியாதை இல்லாமலும் பேசுகிறார்கள்.

இதை நாம் கவனிப்பது கூட எங்காவது ஒரு முக்கியமான விஷேசத்திற்கு குடும்பத்துடன் செல்லும் போதுதான்.

அப்போது அது எவ்வளவு பெரிய தலை குனிவு.

பிள்ளைகளின் பேச்சில் கவனம் செலுத்த வேண்டியது நம் முதல் கடமை.

உணர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே, நம் சந்தோஷம் நிரந்தரமாக வேண்டும் என்றால் நம் பிள்ளைகளை முறையாக வளர்த்தாலே போதுமானது மற்றதெல்லாம் தானாகவே சரியாகச் செல்லும்.

எது எதற்கோ நேரம் ஒதுக்கும் நாம் நம் சொந்த பிள்ளைகளுக்காக ஒரு மணி நேரம் செலவு செய்தால் நம் வாழ்க்கை நிச்சயம் ஒரு அழகிய கவிதை தான்.
 
Top