All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரேணுகாதேவியின் "மனதோடுதான் நான் பேசுவேன்" - கதை திரி

Status
Not open for further replies.

Devi Anand

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனதோடுதான் நான் பேசுவேன் அத்தியாயம் 17


அவசரப்பட்டு விட்டோமோ நூறாவது முறையாக யோசித்தபடி பைக்கில் சென்று கொண்டிருந்தாள் ஆர்த்தி


பெரிய கடைவீதியில் பிரபலமான துணிக்கடை அருகே நின்று கொண்டிருந்தவளின் அருகில் உரசுவது போல் ஒரு பைக் வந்து நின்றது

யார்ரா இவன் ஹெல்மெட் போட்டுகிட்டு எரும மாடு மாதிரி வந்து மோத பாக்குறானே
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பயந்தபடியே பின்னடைந்தாள்

இதை கவனித்த துணிக்கடையின் செக்யூரிட்டி அவள் அருகே வந்து

"சார் பைக் ஸ்டாண்ட் அந்த பக்கம் போங்க "

அப்பவும் அவன் ஆர்த்தியை பார்த்தபடியே இருக்க

"உங்கள பிக்கப்பண்ண வந்துருக்கிறாரா "

ஆர்த்தியிடம் விசாரித்தார்

இல்லை என்று அவள் வாயைத் திறப்பதற்குள்

" உன்ன கூட்டிட்டு போகத்தான் வந்திருக்கேன் " என்று
ஹெல்மட்டை கழட்டினான்

அவன் குரலை வைத்தே அவனை யார் என்று உணர்ந்து விட்டவள்

' லூசு எப்படி பயமுறுத்திடான் '

அவனை பார்த்து மகிழ்வுடன் புன்னகைத்தாள்

ஆர்த்தியின் புன்னகையால் அதை உறுதி செய்து கொண்ட செக்யூரிட்டி தன் வேலையை தொடர்ந்தார்

"இப்படியா வந்து பயமுறுத்துறது லூசு "

" அப்பயாச்சும் நீ பயப்படுவன்னு பார்த்தேன் , பரவால்ல கொஞ்சம் பயந்துட்ட வா போலாம் "

" எங்கே "

" இப்புடி நடு ரோட்டுல நின்னே பேச முடியுமா, அந்த செக்யூரிட்டி வேற இங்கேயே பாத்துக்கிட்டு இருக்கான்
வா போலாம் "

ஆர்த்தியும் அதை கவனித்தாள் , செக்யூரிட்டியின் பார்வை அவர்களை நோக்கியே இருந்தது

'இவனோட பைக்ல போலாமா,, '
அவள் யோசித்துக் கொண்டிருக்க

" ஏறு ஆர்த்தி "

சிவா பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிட்டான்

கடவுளே என்று நினைத்தபடி சிவாவுடன் பைக்கில் அமர்ந்தாள்

அவள் தோழிகளுடன் செல்லும் ரெஸ்டாரண்ட்தான் அது , அங்கேயே அழைத்து வந்திருந்தான்

" அப்பா,,,,
ஒரு வழியா வெளியில வந்துட்ட,
என்ன சாப்பிடுற "

" எனக்கு எதுவும் வேண்டாம் "

" என்னடி விளையாடுறியா
ரொம்ப சீன் போடாம என்ன வேணும்னு சொல்லு "

" நீங்களே சொல்லுங்க "

" சரிடி என்ன கிப்ட் கொண்டுவந்திருக்க"

புன்னகையுடன் அவன் முன் அழகிய கிப்ட் பாக்ஸ் வைத்தாள்

அதை ஆவலோடு பிரித்தவனுக்கு
சப்பென்று ஆகிவிட்டது

கிப்ட் பாக்சை திறந்தவனை அழகாக ஆசீர்வதித்தார் சாய்பாபா

"என்னடி இது "

" சாய்பாபா சிவா, அவரோட ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கும், அதான் வாங்கினேன் "

" அடி கஞ்சப்பிசுனாரி இந்த சாய்பாபா எனக்கு வேண்டாம் "

" ஏன் , அப்படியெல்லாம் சொல்லாதீங்க தயவு செஞ்சு எடுத்துக்கோங்க சிவா ப்ளீஸ் நான் உனக்காக பார்த்து பார்த்து வாங்கினேன் , இவரு உனக்கு எப்பவுமே துணையா இருப்பார்
இக்கட்டான சூழ்நிலையில் கூட பாபா உங்களுக்கு கை கொடுப்பார் ப்ளீஸ் சிவா, எனக்காக வாங்கிக்கோங்க

" ஏண்டி இப்படி அலும்பு பண்ற
உன்னய வச்சுகிட்டு ஒரு கொலை கூட பண்ணமுடியாது,,,,, எடுத்துக்கிறேன்
போதுமா நீ மூக்க சிந்தாத "

அன்றோடு அந்த நிகழ்வுடன் அவனுக்கு டாட்டா காட்டிவிட்டு வேகமாகவே அந்த சந்திப்பை முடித்துக் கொண்டு போய் விட்டாள்

அவனது வற்புறுத்தலின் பேரில் இரண்டாவது முறையாக அவனோடு வெளியே சென்றபோதுதான் அவளுக்கு சற்று திகில் பிடிக்க ஆரம்பித்தது


' எங்க கூட்டிட்டு போறான் '

யோசித்துக்கொண்டே வந்தவளுக்கு அவன் வண்டியை நிறுத்திய இடத்தை கண்டு சற்று பயம் உண்டானது

தார்சாலை சாலையின் இருபுறமும் இருபுறமும் சுற்றி அடர்ந்த காடுகள்

" இறங்கு "

" இங்கே எதுக்கு நடு ரோட்டுல
நின்னுபேசவா இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்த அடப்பாவி,,,, "

" இறங்குடி இங்கயே கொஞ்சம் நேரம் பேசிட்டு போலாம் "

" ஏய் என்ன விளையாடுறியா "

" விளையாட ஆசைதான் அத அப்புறம் பார்ப்போம் இப்ப சும்மா பேசிட்டு போவோம் "

" என்ன பேசப்போறோம் , வாங்க போவோம் எனக்கு பயமா இருக்கு "

" நான் இருக்கும்போது என்னடி பயம் உனக்கு "

' நீதான்டா என் பயமே, உன்னோட செகன்டைம் பைக்ல வந்ததே ஏதோ
பட படப்பா இருக்கு , இப்படி யாரும்
ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில அதுவும் நடு ரோட்டுல பைக் நிறுத்திட்டு பேசலாங்குறானே இவனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு '

" பயம்லாம் இல்ல , நீ என்ன பேசணும் சொல்லு சீக்கிரம் பேசிட்டு
கிளம்புவோம் "

" எப்ப பாத்தாலும் வீட்டுக்குள்ள தானே இருக்க கொஞ்ச நேரம், வெளியே கூட்டிட்டு வந்து பேசலான்னு நெனச்சா ஓவரா பண்றடி "

" சரி என்ன விஷயம் சொல்லுங்க "

" உனக்கு எப்போடி மாப்பிள பாக்க போறாங்க "


" இதைக் கேட்கத்தான் இவ்வளவு தூரம் கூட்டிகிட்டு வந்தீங்களா "

" கேள்வி கேட்ட முதல்ல பதில் சொல்லுடி என்னைய திரும்ப கேள்வி கேட்காத "

" எனக்கு இப்போலாம் ஒன்னும் பாக்க மாட்டாங்க அதெல்லாம் லேட் ஆகும் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம் நானே ஒரு பேபி எனக்கு ஒரு பேபியா "

" கல்யாணம் ஆன பத்து மாசத்தில பிள்ளை பெத்துருவ , நீ பேபியா "

" நா மட்டும் இல்ல எல்லா பொண்ணுங்களுக்கும் பத்து மாசத்துல தான் குழந்தை பிறக்கும், எதையோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி இத பேசத்தான் கூட்டிட்டு வந்தீங்களாக்கும் "

" அப்பா,,,,,,, இந்த வாய் இருக்கே உனக்கு இந்த வாய் இல்லன்னா நீ பொழைக்கமாட்டடி இந்த வாய்க்கலாம் பின்னாடி நிறைய வாங்க போற "
அவள் கன்னத்தை பிடித்து கிள்ளினான்


" ஆஆஆஆ,,,,,ஏய் வலிக்குது விடுங்க " அவன் கையைப் பிடித்து இழுத்தாள்

அவள் தோளை பற்றி தன் புறம் திருப்பி அவன் கண்களால் அவளை கைது செய்ய முயற்சித்தான், அவள் கண்களோ உன் பார்வைக்கு நான் மயங்க மாட்டேன் என்று சவால் போட்டு சொன்னது

அவள் தோளில் அவன் கைகள் திடீரென படிந்ததும் , ஆர்த்திக்கு படபடப்பும்,
கோபமும் வந்துவிட்டது

" என்ன பண்றீங்க நீங்க
கையை எடுங்க "

வேகமாக அவன் கையைத் தட்டிவிட்டாள்

அதில் அவனுக்கும் கோபம் வந்துவிட்டது

" ஏய் என்ன, கைய தட்டி விடுற, எந்த பொன்னையும் பைக்ல ஏத்தமாட்டேன், நீயும் விருப்பப்பட்டு தானே என் கூட வந்த , என்னமோ உன்னை கடத்திட்டு வந்த மாதிரி தட்டி விடுற,
இப்ப தொட்டு பேசுனதுல என்ன ஆயிடுச்சு , பிரண்ட்ஸ்குள்ள தொட்டு பேசுறது சகஜம்தானே, உன் பிரெண்ட்ஸ் கூட எல்லாம் நீ தொட்டு பேசினது இல்லையா "

" பிரிண்ட்ஸ்குள்ள தொட்டுப் பேசுகிறது சகஜம்தான், நீங்க,,,,நீங்க தொட்டப்ப ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கு, சாதாரணமான என்னால அத ஏத்துக்க முடியல அதான் எனக்கு கோவம் வந்துருச்சு "

" ரிலாக்ஸ் ,,,ரிலாக்ஸ்,,,,, கண்டபடி போட்டு மனச குழப்பிக்காத எதுக்கு கோபப்படுற ரிலாக்ஸ் "

அவளின் வென்மையான , மென்கரத்தை வருடியபடி
அவளை சமாதானப்படுத்தினான்

ஆர்த்தி எதையும் உணரும் நிலையில் இல்லை அவளது இதயம் எம்பி எம்பி குதித்துக் கொண்டு இருந்தது

" ப்ளீஸ் இங்கிருந்து போயிடலாம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு "

" போலாம்,,, போலாம்,, உன்னை கூட்டிட்டு வந்தேன் பாருடி என்னை சொல்லணும் , வீட்டுக்குள்ளேயே இருந்து முட்டை போடு, அட கோழி மாதிரி "

" போலாம்,,,,,,,,,,"

அவனை அணத்தி எடுத்து ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள்

ஆர்த்திக்கு பதின் பருவம் தாண்டி ஒரு வருடம் ஆகி இருந்த நிலையில்
இளம் பருவத்தில் வரும் தடுமாற்றத்தால் , அதை உணர்ந்து கொள்ள முடியாத நிலையிலேயே இருந்தாள்

அவனிடம் பேச வேண்டும் என்ற ஆவல் ஆர்த்திக்கு இருக்கத்தான் செய்தது, அவன் தவறாக பேசும் இடத்தில் எல்லாம் கோபப்பட்டாள்

" நான் தான் தப்பா பேசுறேன் ,பொறுக்கினெல்லாம் திட்டுற அப்பறம் ஏண்டி என் கிட்ட பேசுற "

" தெரியல,,, பட் நீங்க ரியலா அப்படி பேசுற கேரக்டர் கிடையாது, எனக்கு அது தெரியும் , என்னைய வம்பிழுக்கணும்னு தானே இப்படியெல்லாம் பேசுறீங்க "

ஆர்த்தியின் சிறுபிள்ளைத்தனமும் அவளது குழந்தை மனமும் சிவாவை மிகவும் ஈர்த்தது
தன்னை அறியாமல் தன் மீது ஒரு ஈர்ப்பை சிவாவிற்குள் ஏற்படுத்தி விட்டால் ஆர்த்தி

இதை உணராமல் அவனுடன் பேசிய நாட்களிலிருந்து அவனது மெசேஜ் வந்துவிட்டதா என்று தன்னையறியாமல் தேடத் துவங்கினாள்

அவன் மெசேஜ் பண்ணவில்லை என்றால்,
என்ன பண்றீங்க எப்படி இருக்கீங்க என்று அவளாகவே கேட்கத் துவங்கி விட்டாள்

சிவாவிற்கோ தன்னையும் தேட ஒருவள் இருக்கிறாள் என்ற எண்ணம் , ஆர்த்தியால் விதைக்கப்பட்டு மலை என வளர்ந்து நின்றது,

ஆனால் அவளாக தன்னை தேடி வர வேண்டும் அவளாகவே,
அவள் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தான்

அவன் நினைத்ததற்கு மாறாக,
அவனது எல்லை மீறிய தீண்டல் ஆர்த்திக்கு காதலை உணர்த்துவதற்கு பதிலாக பயத்தை
கொடுக்க ஆரம்பித்து விட்டது

வாழ்க்கையில் பொறுமை என்பது மிக மிக அவசியம்
பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சும்மாவா சொன்னார்கள் அன்று

பொறுமையாக அவனது காதலை எடுத்துச் சொல்லி
அவளது அன்பை பெற வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை

ஆர்த்தியின் மனதில் சிவாவின் மீதான அன்பு - நட்புக்கும் காதலுக்கும் இடைப்பட்ட உறவில் இருந்தது
அதை உணர்ந்து அவனது காதலை பொறுமையாகவே வெளிப்படுத்தி இருந்தால் ஆர்த்தியும் அவனது காதலை உணர்ந்து இருப்பாள்

வீடு வந்து சேர்ந்தவளுக்கு, அவனது தொடுதலின் பயமும் படபடப்பும் இன்னும் குறையவில்லை இது எங்கே போய் முடியுமோ என்ற பய உணர்வு
கடவுளே என்றபடி கட்டிலில்
சாய்ந்தவளுக்கு
பலவித எண்ணங்கள்,
பலவித குழப்பங்கள்
எங்கே தீர்வு காண்பது
அவனிடமே கேட்போம் அவனுக்கு போன் செய்தால்

" வீட்டுக்கு போயிட்டியா "

"ம்,,, வந்துட்டேன் "

" என்னடி "

" எனக்கு ரொம்ப பயமா இருக்கு
நம்ம இனிமே இப்படி பார்த்துக்க வேண்டாம் சிவா "

" ஏன்டி "

"எனக்கு சொல்ல தெரியல "

" என்ன லவ் பண்ணிடுவோம்னு பயமா இருக்கா உனக்கு "


" லவ்வா உங்களையா அதெல்லாம் இல்ல "

" என்ன லவ் பண்ணாம வேற யாரை லவ் பண்ண போற "

" எனக்கு லவ் மேரேஜ் எல்லாம் செட்டாகாது சிவா, ப்ளீஸ் இனி நாம ரொம்ப பேசிக்க வேண்டாம் நினைக்கிறேன் "

" என்ன லவ் பண்ணிடுவோம்ங்குற பயம் உன் மனசுல வந்துடுச்சுடி அதான் பேச வேணாம்னு சொல்ற"

" சரி சாப்பிட்டு தூங்குங்க பாய் " போனை வைத்துவிட்டாள்

' சாப்பிட்டு தூங்குங்கன்னு அன்பா சொல்ற, அந்த அன்ப காதலா
மாத்திகாட்றேன்டி'

சிவாவின் நினைவு தனக்கு வரக்கூடாது என்று அவனுடன் பேசும் நேரத்தில் தன்னை வேறு ஒரு பணியில் திணித்துக் கொண்டாள்

எப்படியோ பத்துநாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது

திடீரென்று சிவாவின் போன் காலை பார்த்ததும், ஆர்த்திக்கு அடிவயிற்றில் பய உணர்வு ஏற்பட்டு தொண்டைக்கு வந்து நின்றது

" சொல்லுங்க என்னடி எப்படி இருக்க, ரொம்ப பெரிய ஆள் ஆகிட்ட
பேசக்கூட மாட்ற "

" அப்படியெல்லாம் இல்ல சிவா
கொஞ்சம் பிசியா இருந்தேன் அவ்வளவுதான் "

" நான் ஒன்னு கேப்பேன் முடியுமா, முடியாதா மட்டும் சொல் வேறு எதுவும் பேசக்கூடாது "

" என்னன்னு சொல்லுங்க "

" உன்ன உடனே பாக்கணும் வர முடியுமா "

" என்ன, போன்ல சொல்லுங்க சிவா "

" நேர்ல தான் பேசணும் "

" என்ன விஷயமா பேசணும் அதையாவது சொல்லுங்க "

" எல்லாமே நேர்ல தான் பேசணும் உடனே நீ வா நான் வைக்கிறேன் "

போகலாமா வேண்டாமா ஆர்த்தியின் மனது பட்டிமன்றமே நடத்தியது
அவன் அழைப்பை பார்த்தவுடன் மனம் சிறு துள்ளல் போட்டாலும்
அதையும் மீறி, பயம் அவள் வயிற்றில் புளியைத்தான் கரைத்தது

தேவையில்லாம ஏன் அவன் கிட்ட இப்ப பேசின, போன கட் பண்ண வேண்டியதுதானே , ஓவரா சீன்
போடாதன்னு சொல்லுவான்,
வாண்ணா வரணும் போன்னா போபகனும், எதிர்கேள்வி கேட்காதன்னு சொல்லுவான் அவன போய் நீ இப்ப பார்க்க போறியா , உனக்கு சூடு சொரணை இல்லையா என்று அவளது மூளையே அவளைக் காறித் துப்பியது,,

ஆனால் மனமோ துப்புனா, துப்பிக்க அவன்கிட்ட பேசதான் தான் செய்வேன் மனம் சற்று திமிராக நினைத்தாலும் அந்த நினைப்பையும் மீறி அந்த இது தப்புதான் என்ற பயத்தையும் எச்சரிக்கையையும்
அதே மனம் தான் தந்தது

இந்த முறை அவன் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைவோடு அவனை சந்திக்க சென்றாள்

மூன்றாவது முறையாக
ஒரு அழகான குகை கோவில்
ஆள் நடமாட்டம் மிகவும் கம்மி
அந்த கோவிலை ஒட்டிய படியே பூங்காவும், மலையும் இருந்தது

கோவிலில் இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு , மலைமேல் மலைமேல் உள்ள கோவிலுக்கு சென்றார்கள்

" இங்க கூட்டிட்டு வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல சிவா,
ரொம்ப தேங்க்ஸ்,
நான் இங்க வந்ததே இல்லை "
மனநிறைவுடன் சொன்னாள்

அவனது அமைதி,
அவளுக்குள் திக் திக் என்று தான் இருந்தது

' எந்த நேரத்தில் என்ன செய்வானோ இவனோட வந்த்து சரியா , தப்பா '
மனம் குரங்கு போல் தாவிக் கொண்டே இருந்தது

" ஏன் ஆர்த்தி இத்தனை வருஷமா இங்க வந்தது இல்லையா "
அப்போதுதான் வாயைத் திறந்தான்

" இல்ல சிவா "

" அந்த காலத்து ராஜாக்கள் கட்டினது எப்படி இருக்கு பார்த்தியா"

" இப்ப எல்லாம் இந்த மாதிரி
கட்ட முடியாது சிவா "

" இதுக்குள்ள பார் மூனு சாமி இருக்கு "
ஒரு குகைபோல் சென்றது அந்த இடம்
ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது
அதற்குள் அழைத்துச் சென்றான்

அங்கே இருந்த தெய்வத்தை கண்மூடி ஆர்த்தி வேண்டிக் கொண்டிருக்க
அவள் பின்னாலிருந்து அவளை ஒரே தூக்காக தூக்கிவிட்டான்

" என்ன பண்றீங்க நீங்க,
இறக்கி விடுங்க "
ஆர்த்திக்கு கண்களில் நீர் சூழ்ந்து விட்டது

"இறக்கிவிடுங்க ,,,,"

" முடியாதுடி "

" இறக்கி விடுங்க ப்ளீஸ் சிவா "

உள்ளே, யாரோ வரும் அரவம் கேட்டதும் சட்டென அவளை இறக்கி விட்டான்

தன் கண்களிலிருந்து தாரை தாரையாக வடிந்த கண்ணீரை கூட துடைக்காமல்
அங்கே இருந்து இறைவனை பார்த்தால் அவரை பார்க்க பார்க்க அழுகை அவளுக்கு வெடித்து கொண்டு தான்

என்ன சோதனை இது, இதுக்குத்தான் இங்க வந்தேனா, இவன பத்தி தெரிஞ்சுக்கத்தான் என்ன இங்க கூட்டிட்டு வந்தியாப்பா, போதும்பா
இவன் கிட்ட இருந்து என்னை எப்படியாவது காப்பாத்து
அந்த இறைவனை மனமார வேண்டினால்

அந்த இறைவன் என்ன
சாமானிய பட்டவரா
வள்ளி - தெய்வானையின்
மணாளன் அல்லவா
அவளது எதிர்காலத்தை அன்றே உணர்ந்தது போல் அவர் முகத்தில் ஒரு புன்சிரிப்பு மட்டுமே இருந்தது

உள்ளே வந்த பூஜகர் முருகனுக்கு தீபாராதனை காட்டினார்

" எதுக்கும் கவலைப்படாதம்மா,
இந்த முருகன் பாத்துக்குவார்,
தைரியமா இருங்கோ "
அவள் கண்ணீரை பார்த்துவிட்டு வீடு ஆறுதலாக கூறினார் அர்ச்சகர்

அந்த முருகனே அவர் மூலம் அந்த வார்த்தையை கூறிய ஆறுதல்படுத்தியதாக
நம்பிக்கை கொண்டாள் ஆர்த்தி

ஒரு பெண்ணின் மனதை , ஆயிரம் முறை ஒரு ஆண் வென்றிருந்தாலும் அவள் மனதிற்கு பிடித்தவனாக இருந்தாலும் கூட, உரிமையோடு தான் அவன் கை தன்னை பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்


ஆர்த்தி தைரியமாக பேசினாலும் சற்று பயந்த சுபாவம் கொண்டவள்
அவளுக்கு சிவாவைப் பிடித்திருந்தது ஆனால் அவன் தொடுகையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருந்தாள் நட்புக்கும் , காதலுக்கும் இடைப்பட்ட உறவில் நாம் சிவாவோடு பழகுகிறோம் இது காதலில் போய் முடிந்து விடுமோ என்ற பயம் மட்டுமே அவளுக்குள் இருந்தது


காதலித்தால் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், காதலிப்பவர்கள் கரம் பற்ற வேண்டும் இல்லையேல் அந்த காதல் அர்த்தமற்றதாக போய்விடும்

ஒரு மனிதனின் சூழ்நிலை அவனை பலவிதமாக மாற்றிவிடும் , எந்த சூழ்நிலையிலும் எவ்வளவு தடைகள் வந்தாலும் அவர்கள் கரம்பற்றி திருமணத்துக்கு பின்னும், வாழ்நாள் முழுவதும் அந்த காதல் துளி அளவு கூட குறையாமல் வாழும் அவர்களது அன்பான குடும்ப வாழ்வில்தான் அந்த காதல் வெற்றி பெறுகிறது



வேறு ஒருவன் ஆர்த்தியின் கையைப் பிடித்து இருந்தால் சட்டென்று அவன் கண்ணத்தில் அடித்திருப்பாள்

ஒரு ஆண், ஒரு பெண்ணை அவனது உடல் பலத்தால் வெல்ல முடியுமே தவிர அவள் மனதை அவ்வளவு எளிதில் வெல்ல முடியாது

" இப்ப எதுக்குடி அழுவுற அவளிடம் மேலும் சீறினான் "

" இதுக்குதான் என்னை கூட்டிட்டு வந்தீங்களா "

" இப்ப என்னடி செஞ்சிட்டேன் உன்னை தூக்கணும்னு நினைச்சு தூக்கினேன் இது ஒரு தப்பா "

" வேற எது தப்பு, உங்கள நம்பி வந்தேன் பாருங்க என்ன சொல்லணும் "

" ஓவரா சீன் போடாதடி "


" முதல்ல இந்த பாட்டை நிறுத்துங்க, நான் இப்போ, ஓப்பனாவே ஒன்னு சொல்றேன் சிவா,
உங்களை எனக்கு பிடிக்கும் ஆனா நீங்க தொடுறது எனக்கு பிடிக்கல,
இதுவே வேற ஒருத்தன் எண்ணத் தொட்டுருந்தா, அறஞ்சுருப்பேன் , தயவு செஞ்சு இனிமே நம்ம ரெண்டு பேரும் பேசிக்க வேணாம், பாத்துக்க வேண்டாம் இதோடு நிறுத்திக்கலாம் "
அவனிடம் பொரிந்து தள்ளிவிட்டு , அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள்

" ஏய் நில்லுடி, நான் தொட்டா பிடிக்கல ஆனா என்கிட்ட பேச மட்டும் புடிக்குது கேட்டா, நட்புக்கும் காதலுக்கும்
நடுவுலன்னு சொல்ற இதுக்கு என்னடி அர்த்தம் பதில் சொல்லிட்டு போ "

" என்ன பொறுத்த வரைக்கும்
காதல்னா - உங்க மேல முதல்ல எனக்கு நல்ல எண்ணத்தை கொடுக்கணும்
எனக்கு எல்லாமே நீங்க தான், நான் நினைக்கணும்,
உங்களோட பலகுறப்ப நான் பயப்படக்கூடாது ,
உரிமையோட நீங்க என் கைய புடிக்கணும்,
உரிமையோடு நான் உங்க கூட வரனும்
உங்க மேல ஒரு நம்பிக்கை, இருந்துச்சு நீங்க நல்ல மனுஷன் , அந்த நம்பிக்கைதான் நீங்க கூப்பிட்ட என்னைய வர வச்சுது ,
இன்னைக்கு அந்த நம்பிக்கையை நீங்க பொய்யாக்கிடீங்க ,
இதுவரைக்கும் என்கிட்ட உங்க காதலை நீங்க சொன்னது கிடையாது ,
நீங்க சொல்லி இருந்தாலும் , உங்க மேல எனக்கு காதல் வர போறது கிடையாது
ஏன்னா காதல் - முதல்ல நேசிக்கதான்வைக்கும், யோசிச்சு நேசம் வந்தா அது காதலே கிடையாது

நீங்களும் நல்லா இருக்கணும், நானும் நல்லா இருக்கணும் ,
நம்ம ரெண்டு பேரோட குடும்பமும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன் நம்ம பிரண்ட்ஷிப் இதோட
முடிச்சுகுறதுதான் நல்லது
இதுக்கு மேல நாம பேசவேண்டாம்
நான் வர்றேன் "

சிவாவுடன் பேசிய நேரங்களை தனது படிப்பு, தையல் கிளாஸ் என
தன் அன்றாட வாழ்க்கையை
மாற்றிக் கொண்டால் ஆர்த்தி

மூன்று மாதத்திற்குப் பின்
ஒரு திருமண நிகழ்ச்சியில் ஆர்த்தி தன் தோழிகளுடன் சென்றிருந்தாள்
அதே திருமணத்தில் சிவா ஆர்த்தியை பார்த்ததுதான் விதியின் சதி

மணமகள் அறையில் தோழிகளோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தவளின் மொபைல் சிணுங்கியது, அங்கே பேச முடியாமல் வெளியே வந்து முதல் மாடி பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்தாள்

பேசிவிட்டு திரும்பிய வேகத்தில் யார் மீதோ மோதி நின்றாள்

" சாரி,,, சாரி ,,,,"
என்றபடி நிமிர்ந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி கலந்த ஒரு மகிழ்ச்சி
சிவாவை அங்கு சற்றும் எதிர்பாராதவள் அவனை பார்த்தவுடன் வெள்ளை மனதுடன்

" எப்படி இருக்கீங்க "

" எனக்கு என்ன டீ நல்லா இருக்கேன்,
நீ,,,நீ ,,எப்படி இருப்ப, சந்தோஷமா தானே இருப்ப "
பொடி வைத்துப் பேசினான்

" புரியல "

" இல்ல மூணு மாசத்துல சதை போட்ட மாதிரி இருக்கியே அதான் சந்தோஷமா இருக்கியான்னு கேட்டேன் "
உச்சி முதல் பாதம் வரை அவனது நேரடிப் பார்வையில் ஒரு கள்ளத்தனம் இருந்தது அதை உணர்ந்த ஆர்த்திக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது

" நீங்க மாறவே மாட்டீங்க " அவனை தாண்டி செல்ல முயன்றாள்

அவள் கையை பிடித்து கொண்டான் " எங்கடிபோற, இப்பதானே பாத்தோம் அதுக்குள்ள கிளம்புற "

" கையை விடுங்க , யாராவது பாக்க போறாங்க ப்ளீஸ் கைய விடுங்க சிவா"

" அதான் உன் பிரச்சனையா வாடி " விருட்டென்று அருகிலிருந்த ஒரு ரூமுக்குள் அவளை இழுத்து தள்ளி கதவை சாத்திவிட்டான் "

" ஏய் என்ன பண்றீங்க, கதவ திறங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க தயவு செஞ்சு கதவைத் திறங்க "

" முதல்ல இருடி ரொம்ப தான் கத்துற, வாய ஒடச்சிடுவேன் சொல்லிட்டேன் "

" பர்ஸ்ட் கதவ திறங்க அப்புறம் பேசிக்கலாம் "

" கதவ துறக்கலாம், உன் முதுகுல
என்ன "

" என் முதுகலையா "

"ஆமாண்டி "

" தன் கையையும் தலையும் வளைத்து பின்புறம் பார்த்தால் ஒன்றும் அவளுக்கு தெரியவில்லை "

என்னவென்று அவனையே புரியாமல் பார்க்க

" ஸாரில செம்மையா இருக்க, சூப்பர் இன்னைக்கு ஃபுல்லா சைட் அடிச்சிகிட்டே இருக்கலாம் , உன் முதுகுல என்னடி அவ்வளவு பெரிய ஓட்டை "

"ஓட்டையா,,,"

தன் கைகளை வளைத்து தன் முதுகை தொட்டுப் பார்த்துவிட்டு, அவன் தன் பிளவுசை சொல்கிறான் என்பதை உணர்ந்து தன் சேலை முந்தானையை எடுத்து முன்புறம் இழுத்து பிடித்துக்கொண்டாள்

" நான் ஒரு மாடல் சொன்னேன், அவங்க,,, அவங்க மாத்தி தச்சுட்டாங்க அதான் முந்திய விடாம பிடிச்சுகிட்டே இருந்தேன் "


" கல்யாணத்துக்கு வர்றவன் எல்லாம் உன்னைய பாக்கணும் தானே இப்படி போட்டுகிட்டு வந்திருக்க "


அமிலத்தை எடுத்து முகத்தில் ஊற்றியது போல் கோபத்தில் ஆர்த்தியின் முகம் சிவந்து விட்டது இதுபோன்ற பேச்சுக்களை கேட்டிராதவள் , அவள் வளர்ந்த சூழ்நிலை அப்படி,
தன்னை போய் இப்படி பேசி விட்டானே அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கண்களிலிருந்து வரவா, வரவா கேட்டுக்கொண்டிருந்த கண்ணீர் அவளையும் மீறி வெளியே எட்டி பார்த்து விட்டது
அவனிடம் எதுவும் பேசப் பிடிக்காமல் வேகமாக அவனை கடந்து கதவின் தாழ்ப்பாளை நீக்கி விட்டு வெளியே செல்ல அடி எடுத்து வைத்தாள்

புலியென பாய்ந்து , அவள் கையைப் பற்றி உள்ளே இழுத்தான்

" எங்கடி போற, திமிர்பிடிச்சவளே உனக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்கலாமே "

" என்ன உளர்றீங்க "

" நான் ஒன்னும் உளறல, உங்க வீட்டில உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க "


' எனக்கு தெரியாம எங்க வீட்ல எப்படி டா மாப்ள பாப்பாங்க, லூசாடா நீ ' மனதுக்குள் அவனை வசவு விட்டு

" சரி, பார்த்துட்டு போகட்டும் இப்போ என்ன அதுக்கு "

" அதான பார்த்தேன் ஏன்டி இப்பவே கல்யாணத்துக்கு அலையுற "

" இதுக்கு மேல பேசின மரியாதை கெட்டுரும் , வழியை விடு "

" அதையும் பார்த்துடலாம்டி , வீட்ல பாக்குறவன கல்யாணம் பண்ணிக்க என்ன கள்ளபுருஷன் வச்சுக்கடி, என் கள்ள பொண்டாட்டி "

சிவாவின் அளவுக்கு மீறிய அந்த வார்த்தை சீண்டலை ஆர்த்தியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை

எங்கிருந்துதான் அவளுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ தன் கண்களை இறுக மூடிக்கொண்டு தனது கோபத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோற்றுப் போய்விட்டால்

அவனது கை, அவளது இடது கரத்தை பிடித்து இருந்தது அதை வேகமாக ஒரு உதறு உதறி விட்டு, ஓங்கி அவன் கன்னத்தில் ஓர் அறை விட்டாள்
அவள் அறையவும் , அந்த அறைக்குள் சிவாவின் நண்பர்கள் இருவர் வரவும் சரியாக அமைந்து விட்டது

கோபத்தின் உச்சியில் இருந்த ஆர்த்தியும் , அவளது அரையை எதிர்பார்த்திராத சிவாவும்
அவர்கள் இருவரையும் கவனிக்கவில்லை

" இவ்வளவு தான் உனக்கு மரியாதை இனிமே என் விஷயத்துல தலையிட்ட அவ்வளவுதான் , நீயெல்லாம் ஒரு மனுஷன் த்தூ,,,,, "

புயலென அங்கிருந்து வெளியேறி விட்டாள்

" என்னடா இதெல்லாம் "
சிவாவின் நண்பர்கள் புரியாமல் விழிக்க

" அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சி "

" ஒரு பொம்பள புள்ள உன்ன கைநீட்டி அடிச்சிட்டு போற நீ ஒன்னும் இல்லைங்கிற, யார்ரா அவ,எதுக்கு உன்ன அடிச்சுட்டு போறா, சொல்லுடா இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பார்த்தறேன் "

" ப்ளீஸ் சொன்னா புரிஞ்சுக்கோங்கடா என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க "

அதற்கு மேல் பேசினால் சிவாவிடம் எடுபடாது என்று உணர்ந்தவர்கள் அவனை தனிமையில் விட்டுச்சென்றார்கள்

நான் மனுஷனா- மிருகமா கண்டிப்பா உனக்கு ஒரு நாள் தெரியவரும்,,
தயாரா,,, இருடி
அந்த நாள் கண்டிப்பா வரும்
அப்ப நீ தெரிஞ்சுக்குவ
நான் மனுசனா , மிருகமான்னு,,,,
 

Devi Anand

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனதோடுதான் நான் பேசுவேன் அத்தியாயம் 18


கெட்டி மேளம் ,,,,கெட்டி மேளம் ,,,, நாள் நட்சத்திரம் பார்த்து , முறைப்படி தன் சொந்தபந்தங்களை அழைத்து பஞ்சபூதங்களை சாட்சியாக வைத்து

ஆர்த்தி என்றழைக்கப்படும் ,,,,
ராஜி,,,, ஆகிய ,,,,, ராஜேஸ்வரியின்
சங்குக்கழுத்தில் ,

சிவா,,, ஆகிய,,,,, சிவசங்கர் திருமாங்கல்யத்தை பூட்டினான்

அவள் உணராதபோது தாலிகட்டிய
அதே மண்டபத்தில்
இன்று ,,,,,,
உனக்கு இனி எல்லாம் நான்தான் என்று கூறுவதைப் போல்,
அவன் கை நீட்ட
விரும்பியோ, விரும்பாமலோ இனி
என் தலையெழுத்து இவனோடுதானா என்ற வேதனையுடன், அவன் கை மேல் தன் கை படாதவாறு வைத்திருந்தாள் அந்த விடாக்கண்டன் விடுவானோ , என்ன விட்டு எங்கடி போவ ,
தன் முரட்டு பிடிக்குள் அவளது மென்கரத்தை அடக்கிக் கொண்டு,
அக்னியை சுற்றி வலம் வந்து,
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து
தன்னவளை தன் வீட்டிற்கு
அழைத்துச் சென்றான்

பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது
அவள் கண்களை முதலில் கவர்ந்த அழகிய விநாயகர் சிலையை கண்டு கண் மூடி கரம் குவித்து
வேண்ட துவங்கினாள்
தன்னையும் மீறி கண்கள் நீரை வெளியேற்றியது
யாருக்கும் தெரியாமல் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்

தன் அசைவை வைத்தே , தன் கணவன் தன்னை அறிந்து கொள்வான்னென்றும்,
அவனது கழுகுக் கண்களுக்கு எதுவும் தப்பாது என்றும்,
இனி என்றென்றும் அவனது சிறைக்குள் வந்த கூண்டுக்கிளி தான் என்றும் , பாவம்,,,,, அந்தப் பேதைக்கு தெரியவில்லை

மறு வீடு, அழைப்பில் மாமனார் வீட்டில் உரிமையோடு அன்றுதான்
கை நனைத்தான்,

தன் ரசனைக்கேற்ப, வீடு கட்டி இருந்தான், அவனது உழைப்பால் வந்த முன்னேற்றத்தை, மற்றவர்களுக்கு செல்லாமல் சொல்லிவிட்டது

வீட்டுக்கு பின் இருந்த நுப்பது சென்ட் இடத்தில் வீடு கட்டி வாடகைக்கு விடலாம் முத்துசாமி யோசனை கூறியிருந்தார்

அதை மறுத்து விட்டு , தோட்டம்
போடபோறேன் அப்பா,
என்ற கையோடு வீட்டுக்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் பயிர் செய்தான்

ஒரு பக்கம் மூலிகைச்செடிகள் ,
ஒரு பக்கம் பூந்தோட்டம்
என இடத்தையே பசுமையாக்கியிருந்தான்
தோட்டத்தைச் சுற்றி வாக்கிங் போவதற்கு நடைபாதை அமைத்திருந்தான் அதன் நடுவே பத்து பேர் அமர்ந்து பேசக்கூடிய அளவிற்கு லான் (திண்ணை போல் என்று கூறலாம்) அமைத்து இருந்தான்


ராஜியின் பெரியப்பா- பெரியம்மா
நடராஜன் - கலாவதி , தம்பதியருக்கும்

பெற்றோரான ஆனந்தன் - சித்ரா தம்பதியருக்கும்

ராஜியின் அண்ணன் அண்ணி
வாசு - நந்தினி தம்பதிக்கும்

சங்கரின் வீட்டையும், அழகிய தோட்டத்தையும் மிகவும் பிடித்துவிட்டது

தங்கள் பெண் இந்த வீட்டில் வாழ போகிறாள் என்ற சந்தோஷம்
வாழப்போறவளை தவிர அனைவருக்கும் இருந்தது

" ஆர்த்தி ஒழுங்கா கிளம்பு மணி ஆயிடுச்சு பாரு "

" ப்ளீஸ் நந்தினி நீ என் பிரண்டு தானே"

" என் பிரெண்டு தாண்டி , அதுக்கு மேல உனக்கு அண்ணி ஆகி இப்ப ஏழு வருஷமாச்சு ஞாபகம் இருக்கா,
உன்ன விட நான்கு வயது மூத்தவ எனக்கு கல்யாணமாகி ஏழு வயசுல பையனும் அஞ்சு வயசுல பொண்ணும் இருக்காங்க , உனக்கு கல்யாணம் ஆகி இன்னையோட பதினஞ்சு நாள் ஆச்சு உன் மனசு கொஞ்சமாவது
மாறனும்தான் இந்த பதினஞ்சு நாள் டைம்மே,
உங்க அம்மாவும், பெரியம்மாவும்
அவர் கிட்ட இதபத்தி பேச வெக்கபட்டுகிட்டு என்னைய பேச விட்டுட்டாங்க,

இத அவர்கிட்ட பேசுறதுகுள்ள நான் படாதபாடு பட்டேன் தெரியுமா, அவர் ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொல்லிட்டாருடி எனக்கு என்னமோ அவர் அதிரடியா
உன் கழுத்துல தாலி கட்டியிருந்தாலும் உன்னை நல்லா பாத்துக்குவார்னுதான் எனக்கு தோணுது "

' ஓஹோ,,, ஓஹோ,,,, பாத்துக்குவார் பாத்துக்குவார் அந்த பேய் கிட்ட அடி வாங்குறது நான் தானே, எனக்கு தானே தெரியும் அவன் வண்டவாளம் '


ராஜிக்கு அந்த அறைக்குள் இருக்கவே முடியவில்லை மூச்சு முட்டுவது போலிருந்தது கதவை திறந்துகொண்டு பால்கனிக்கு வந்து விட்டாள்

அவன் வந்தால் என்ன செய்வானோ என்ற பயமும் படபடப்பும் மட்டுமே அவளிடம் நிறைந்திருந்த்து, முழு பௌர்ணமியான அன்று அவளுக்கு மட்டும் அமாவாசையாக தெரிந்தது

" என்னடி பௌர்ணமி நிலவு செமையா இருக்கா "

'ஐயையோ வந்துட்டானா'

நிதானமாக அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை ரசித்துக்கொண்டிருந்தான்
அளவான உயரம் , சற்று பூசினார் போன்ற உடல்வாகு இல்லை இல்லை கொலு கொலு குண்டு பொண்டாட்டி,,, மனதிற்குள் செல்லமாக அவளை
திட்டிக் கொண்டான்
அகன்ற விழிகள் அவனையே விழுங்கி விடும் அளவிற்கு இருந்தது ( அந்தளவிற்கு கோபம் )

லட்டு கண்ணங்கள் அவனை மிகவும் இம்சை செய்தது

நிமிர்ந்து நின்று என்னவென்று கேட்கும் கூர்மையான நாசி
அவனை மிரட்ட தான் செய்தது

அதுக்கெல்லாம் பயப்படாத நான் இருக்கேன் அவளது செர்ரிப்பழ இதழ்கள் அவனை வா வா என்று அழைத்தது

காற்றில் அவளது சேலை அசைந்தாடியதில் அவளது இடுப்பு மடிப்பு நான் இங்க இருக்கேன் வா என்று மேலும் மேலும் அவனை
வெறிஏற்றிக் கொண்டிருந்தது

மெதுவாக அவள் தோளை
தொட சென்றான் அதற்குள் அவள் திரும்பவும் சரியாக அமைந்தது
அவனை முறைத்துவிட்டு வேகமாக ரூமிற்குள் சென்று கதவை அடைக்க முயன்றாள்,

நொடிப்பொழுதில் அவளை உள்ளே தள்ளிவிட்டு கதவை அடைத்து விட்டான்

' காட்டுமிராண்டி '

" என்னடி ரொம்ப ஓவரா பண்ற,
ரொம்ப பொறுமையா இருக்கேன் அவ்வளவுதான் சொல்லிட்டேன் ஆர்த்தி"

" என்ன சொன்ன, என்ன சொன்ன " நக்கலாக சிரித்து விட்டு

" என் பேர், உனக்கு ஞாபகம் இருக்கா "

" இத்தனை நாள் இருந்தது வேற ஒருத்தனுக்கு நிச்சயம் பண்ண ராஜி ஆகிய ராஜேஸ்வரி நீங்க,
உங்க கழுத்துல திருட்டுத்தனமாக தாலி கட்டி இருந்தாலும் நீங்க ராஜியாவே தான் இருந்தீங்க இருப்பீங்க , அதனாலதான் உங்களை முறைப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னோட ஆர்த்தியா மாத்திக்கலாம் முடிவு பண்ணி கல்யாணமும் பண்ணிட்டேன் ஆர் யு ஹாப்பி பேபி, என் ஆர்த்தி கொஞ்சம் பாவம், ரொம்ப திமிர் புடிச்சவ, ஈகோ புடிச்சவ இருந்தாலும் அவகிட்ட எனக்கு பிடிச்சதே அந்த திமிருதான், கல்யாணத்துக்கு அப்புறம் என் ஆர்த்திய என்னால பனிஷ் பண்ண முடியாது

"ஏன் முடியாது திருட்டுத்தனமா
என் கழுத்துல தாலி கட்டி மண்டபத்துல எல்லாரும் முன்னாடியும் என்னைய அசிங்கப்படுத்துனீங்களே அன்னைக்கு நான் உன் ஆர்த்தியா தெரியலையா "


" அடியே லூசு விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன் சொல்லுவாங்களே அந்த கணக்குக்கே ஏண்டி போற , உன்னை ஏன் ஆர்த்தியை மாத்திக்கணும் தாண்டி தாலியை கட்டினேன் "

" ரெண்டு வருஷம் என்ன பண்ணிங்க நீங்க, என்கிட்ட பேசி இருக்கலாமே, என்ன பழி
வாங்கணும்தானே இப்படி செஞ்சீங்க "


" ஒத்துக்குறேன்டி உனக்கு கொஞ்சம் மூளை வேலை செஞ்சுருக்கு ஒத்துக்குறேன், கிணத்து தண்ணியை யார் தூக்கிட்டுப் போகபோறான் , கொஞ்சம் அசால்டா இருந்துட்டேன், நீயா என்னை தேடி வரணும்னு நினைச்சேன்,
என் காதல் உன்னை கொண்டு வந்துரும் நினைச்சேன்,
ஆனா உன் மரமண்டைக்கு என் மனசும் புரியாது, என் பேச்சும் புரியாது, என் காதலும் புரியாமயேபோச்சு, அதான் அதிரடியா இறங்கினேன் ,
மாப்பிள்ளையோட அப்பா போன்ல பேசுனத கேட்டேன், அவர் தங்கச்சி பொண்ணு விஷம் குடிச்சு ஹாஸ்பிடல்ல இருக்கா, அதுக்கு காரணம் நடக்கப்போற இந்த கல்யாணம்தான் தெரிஞ்சது, அழகா வளைய விரிச்சேன் நாலு பேருக்கு பணம் கொடுத்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள அடிக்க சொன்னேன், லைட்டா கொளுத்திப்போட்டேன் , அவ்வளவுதான் அது தானாவே பத்திக்கிச்சு ,
நமக்கு சான்ஸ் கிடைச்சதுன்னு , நானும் தாலியை கட்டிட்டேன் "

" தாலி கட்டிட்டா மட்டும் ஒரு பொண்ணு முழுமையா ஒருத்தனுக்கு
மனைவியாகுறது கிடையாது
எனக்கு நீங்க தாலி கட்டிருக்கலாம் ஆனால் நான் என் கணவனாக நினைக்கிறது "
அவ்வளவுதான்,,,,, மறுவார்த்தை அவள் பேசும் முன் அவளது செர்ரிப்பழ இதழ்களை தன் முரட்டு இதழ்களால் சிறை பிடித்துவிட்டான்

எத்தனை நிமிடங்கள் கழிந்ததோ தெரியவில்லை , அவள் மூச்சு விட
சிரமப்படுகிறாள் என்று உணர்ந்து மெதுவாக அவளை விடுவித்து
தீயாக எரிந்த அவள் கண்களை உற்று நோக்கி

" தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோ ஆர்த்தி, எனக்கு காதல
முரட்டுத்தனமாதான் காட்ட தெரியும், நான் உன்னை விரும்புறேன், விரும்புறேன், விரும்புறேன், விரும்புறேன்டி,,,
என்ன நீ அடிச்சதால உன் மேல எனக்கு கோவம் இருந்துச்சு, ஆனா என்ன மீறி போயிடமாட்ட திரும்ப நீயா வந்து என்கிட்ட பேசிடுவன்னு,
ரொம்ப நம்பிக்கையோட இருந்தேன்டி, ஆனா நீ, இன்னொருத்தனோட
நிச்சயம்பண்ணி கல்யாணம் வரைக்கும் போயிட்ட , ,,,அதை என்னால தாங்கிக்கவே முடியலடி,
வெறி பிடிச்ச மாதிரி இருந்தேன் அதோட உச்சக்கட்ட கோபத்தைதான் உன்கிட்ட காட்டினேன் , அத இல்லைன்னு சொல்லலை, ஆனா உன்ன முறைப்படி ஏன் திரும்ப கல்யாணம் பண்ணேன்னு தெரியுமா ,
இன்னொருத்தனோட நீ கல்யாணம் மேடை வரைக்கும் வந்த நிகழ்வே உன் மனசுல இருக்கு கூடாது , உன் மனசுல நான் மட்டும் தான் இருக்கணும் ,

உன் கழுத்துல நான் தாலி கட்டி இருந்தாலும் அதை கூட உன்னால ஏத்துக்க முடியாம அவனதான் என் புருஷனா நினைக்கிறேன் சொல்லி சொல்லி என்ன எவ்வளோ வெறுப்பு ஏத்தின தெரியுமா, அதுனால தாண்டி நான் அந்த அளவுக்கு முரட்டுதனமா நடந்துகிட்டேன் , இனி உன் கிட்ட என்னால ரூடா நடந்துக்க முடியாது ஆர்த்தி தயவு செஞ்சு சொன்னா புரிஞ்சுக்கோ "

அதற்குமேல் பேச ஒன்றுமில்லை என்பதுபோல் கட்டிலில் ஓரமாக சென்று படுத்துக் கொண்டான்

' இவன் நல்லவனா , கெட்டவனா ' என்று மேலும் குழம்பிப்போய் ஆர்த்தி அவனையே முறைத்துக் கொண்டு நின்றாள்,
எவ்வளவு நேரம் நின்றாளோ கால்,
வலி எடுத்தது கட்டிலில் மறுபுறம் சென்று படுத்துக் கொண்டாள்

நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் மீது, ஏதோ பாரமாக அழுத்துவது போல் தோன்ற
சட்டென்று கண் திறந்தவள்

" என்ன பண்ற விடுடா "

" சொன்னா கேளுடி, ஏற்கனவே பதினஞ்சுநாள் வேஸ்டா போச்சுடி, ப்ளீஸ்டி,,, ப்ளீஸ்டி,, நான் உன்னோட சிவா,,,ல,,,,"


" ம்க்கும்,,,, சிவா,,, வா இருந்தப்ப மட்டும் அப்படியே பாசமா பொங்கி வழிஞ்சியாக்கும் ,,, அப்பவும் எரிஞ்சு எரிஞ்சு விழுவ, நீ மாற மாட்ட , நானும் மாற வேண்டாம்,
நீ எப்படி வேணாலும் இரு, ஆனா நான் ராஜியாதான் இருப்பேன் , இப்போ ஒழுங்கா போயிடு அவ்வளவுதான் சொல்லிட்டேன்


அவள் பேசியதை அவன் காதில் வாங்கினானோ என்னவோ,

" நீ ராஜியா இருந்தா நான் சங்கர் டி உனக்கு சிவாவை விட சங்கர் தான் புடிச்சிருக்கு போல, உனக்கு முரட்டுத்தனம்தான் பிடிக்குமா பேபி "

" சீ போடா பொறுக்கி "

" பொறுக்கி தான் உன்கிட்ட மட்டும்"

அவளை ஆக்கிரமிக்க தொடங்கினான்
" வாடி வாடி என் பொண்டாட்டி "
அவள் மறுப்பிற்க்கு எல்லாம் மறுப்பு அளித்துவிட்டு
மேலும் மேலும் முன்னேறி அவளுடைய பெண்மையை தனதாக்கிக் கொண்டான்

பொழுது விடிந்ததும் ஆர்த்தியை விட மனமின்றி அவளை அணைத்துக் கொண்டேன் தூங்கி விட்டான்

ராஜிக்கு அழுகையும் கோபமும், சொல்ல முடியாத அளவிற்கு பொங்கிக் கொண்டு வந்தது, சிவாவை பளார் பளார் என்று அறைய வேண்டும் என்று தோன்றியது, எதுவும் செய்ய இயலாமல், தன் வேதனையும் பொறுக்க முடியாமல் அழுது கொண்டே இருந்தாள்,,,,

அழுது,,,அழுது,,,, தூங்கி விட்டாள் எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை

விழிப்பு வந்த சிவாவிற்கு, இரவில் நடந்ததை நினைத்து இதழோரம் சிரிப்பு வந்தபோதும் ஆர்த்தியை நினைத்து சற்று வருத்தம் கொண்டான் நேற்று இரவு சற்று, என்ன,,, கொஞ்சம் முரட்டுத்தனமா நடந்துட்டோமே, பாவம்
ஆர்த்தி,
இந்த முரட்டுத்தனத்தை விட்டுத் தொலைக்க முடியலையே,
ரொம்ப வலித்திருக்கும் அவளுக்கு என்றபடியே திரும்பி அவளைப் பார்த்தவன் சற்று அதிர்ந்து விட்டான்

அவள் அமர்ந்த நிலையிலேயே தூங்கியிருந்தாள், அழுது,,, அழுது முகமெல்லாம் வீங்கி போய் இருந்தது

"ஆர்த்தி,,,ஆர்த்தி" ,

அவள் கண்ணம் தொட்டு மெதுவாக எழுப்பினான், உடல் அனலாக கொதித்தது, ஜுரம் வந்திருச்சு போலயே கடவுளே, ,,,

என்ன ஏது என்று புரியாமல், பதறியவன்

" ஆர்த்தி,,,, ஆர்த்தி,,,"

அவள் கண்ணத்தில் தட்டினான்,
என்ன பாருடி,,, என்னடி ஆச்சு உனக்கு, இனி உன்னை அடிக்க மாட்டேன்டி,
நீ என்ன அடிச்சாலும் நான்
வாங்கிகுறேன்டி , தயவு செஞ்சு கண்ணை முழிச்சு பாருடி, "

தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான்,

சற்று சுய உணர்வு பெற்று , மெல்ல தன் மூடியிருந்த இமைகளை பிரித்தாள் தன்னை உலுக்கிக் கொண்டிருந்த சிவாவை கண்டதும் அவ்வளவுதான்

அவள் நினைத்ததை செய்து விட்டாள் பளார்,,, பளார் ,,,,,என்று
அவன் கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்தாள்

" பாவி, படுபாவி என்ன ரேப் பண்ணிட்டல, உன்ன விடமாட்டேன் என்று கையில் கிடைத்த பொருட்களை கொண்டு அவனை அடித்தாள்,,,,

" ஆர்த்தி, ப்ளீஸ் நீ என்ன அடி, பட் இந்த மாதிரி பிஹேவ் பண்ணாத எனக்கு பயமா இருக்குடி , உனக்கு காய்ச்சலா வேற இருக்கு , உடம்பெல்லாம் கொதிக்கிதுடி அவன் கழுதையாக கத்திய போதும், அதைக் கேட்கும் மனநிலையில் அவள் இருந்தால்தானே

ரூமில் இருந்த அனைத்து பொருட்களையும் போட்டு உடைத்தாள் இதுவே பழைய சங்கர் ஆக இருந்தால் அவளை எப்படி கையாண்டு இருப்பானோ தெரியவில்லை ஆனால் ,


இன்று இருக்கும் ,,,,
சிவா, ( வான) சங்கரால் எதுவும் செய்ய இயலவில்லை, ஆர்த்திக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற பயமும், பதட்டமும், மட்டுமே அவனிடம் நிரம்பி இருந்தது

ஒருகட்டத்தில் ஆர்த்தி சுய நினைவை இழந்து மயங்கி சரிந்து விட்டாள்,

" என்ன ஆச்சுடி உனக்கு,
ஆர்த்தி, என்ன பாருடி "
மயங்கி சாய்ந்தவளின் , கண்ணத்தில் பலமாக தட்டினான் அப்போதும் அவளிடம் எந்த அசைவும் இல்லை என்றவுடன்
பதறியபடி அவளை தூக்கிக்கொண்டு, ஹாஸ்பிடலுக்கு விரைந்தான்

அவ்வளவுதான் ,,,,
சிவாவின் குடும்பமும், ஆர்த்தியின் குடும்பமும், ஹாஸ்பிடலுக்கு வந்துவிட்டது

கல்யாணமான புதுசுல எல்லாத்துக்கும் வர்ற ஃபீவர்தான் மத்தபடி எந்த பிரச்சினையும் இல்லை

" யார் இந்த பொண்ணோட ஹஸ்பெண்ட் "

" என்ன ஆச்சு டாக்டர் "
பயத்துடன் சிவா கேட்க


" நீங்க மட்டும் என்
கேபினுக்கு வாங்க "

" உங்க பேர் என்ன ? "

" சிவா - சிவசங்கர் "
என்ன பண்றீங்க டாக்டரின் பார்வையிலும் குரலிலும் ஏதோ ஒரு அழுத்தத்துடன் அவர் பேசியதே ஏதோ பிரச்சனை என்று யூகித்து விட்டான்

" என்ன டாக்டர் எதுவும் பிரச்சனையா "

" அத நீங்க தான் சொல்லணும் , உங்கள மாதிரி ஆண்களுக்கு
பெண்கள் என்ன விளையாட்டு பொம்மையா , உயிர் , உணர்வு எதுவும் இல்லாத ஜடம்னு நினைச்சிங்களா, "

அவரது அழுத்தமான பார்வையில் இருந்த குற்றச்சாட்டை, அவனால் ஒதுக்க முடியவில்லை


" கல்யாணமான புதுசுல எல்லா பெண்களுக்கும் இந்த மாதிரி பிரச்சனைகள் வருவது உண்டு
இதை ஹனிமூன் ஃபீவர் னு சொல்லுவோம், ஃபர்ஸ்ட் நைட்ல, இவ்வளவு தூரம் முரட்டுத்தனமா அந்த பொண்ணுகிட்ட நடந்திருக்கக் கூடாது ரொம்ப தப்பு , பாக்க டீசண்டா இருக்கீங்க "

" அது இல்ல டாக்டர்,,,,வந்து ,,, "

" இருக்கு மிஸ்டர்,,,"

" சிவா, டாக்டர் "

" யா சிவா, ஹனிமூன் ஃபீவர்தான் இது , பட் அவங்களுக்கு வந்திருக்க மயக்கம்,
ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு, அதனாலதான் உங்க வைஃப் மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க,
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அவங்களால தாங்கிக்கவே முடியாத அளவுக்கு இருந்திருக்கு, எல்லா ஏமோஷனும் ஒன்னா சேர்ந்தனால மயங்கி இருக்காங்க, இப்படியே போனா அவங்க மனநிலை இன்னும் பாதிக்கப்பட்டு மோசமான நிலைக்கு போயிடுவாங்க "

" நான் அந்தளவுக்கு போக விடமாட்டேன் டாக்டர் "
உறுதியாகக் கூறினான், அவன் வார்த்தைகளில் இருந்த உறுதி அவன் கண்களிலும் பிரதிபலித்தது

அதை புரிந்துகொண்ட டாக்டரும்

" வெல், ஒன்னு புரிஞ்சுக்குங்க மிஸ்டர் சிவா, வெறும் அதிகாரத்துக்கும் மட்டும் யாரும் கட்டுப்பட மாட்டாங்க,
ஒருவேளை உங்களோடது அன்பான அதிகாரமாய் இருந்தா அத புரிஞ்சிக்கிற மன நிலைமையில உங்க மனைவி இல்லை, அத பஸ்ட் நீங்க தெரிஞ்சுக்கங்க ,
உங்களோட அன்ப, அவர்களுக்கு புரிய வையுங்கள் வார்த்தையில, செயல்ல கண் ஜாடையில் இப்படி எல்லாவிதத்திலும் கொஞ்சம் கொஞ்சமா நீதாண்டி எனக்கு அப்படிங்கறத அவங்க மனசுல பதிய வைங்க,
விட்டுக் கொடுத்துப்போன யாரும் கெட்டு போனதே கிடையாது சிவா, விட்டுக்கொடுத்து ஜெயிச்சவங்க தான் அதிகம்,
விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுக்க வையுங்க, உங்க லைஃப்ல எப்பவும் சக்சஸ் தான், பெஸ்ட் ஆஃப் லக் "

" தேங்க்யூ சோ மச் டாக்டர், என் லைஃப்ல உங்களை மறக்கவே மாட்டேன், என் முரட்டுத்தனத்தை என்னால விட முடியல இப்போ உங்களோட பேசினதுக்கு அப்புறம் தான், எனக்கு ஒரு தெளிவு கிடைச்சிருக்கு டாக்டர், உங்க பேர் என்ன தெரிஞ்சுக்கலாமா "

அவர் தன் முன் இருந்த பெயர் பலகையை சுட்டிக் காண்பித்தார் சுட்டிக் காண்பித்தார் அதில்
N.ரேணுகாதேவி MBBS, DGO,,,



 

Devi Anand

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்
எல்லாரும் எப்படி இருக்கீங்க,
இன்னும் 2 எபிசோட்தான்
பேலன்ஸ் விரைவில்,,,,,
உங்க கருத்துக்களை மறக்காம சொல்லுங்க ,,,,

தேங்க்யூ ,,,,
 

Devi Anand

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்
 
Status
Not open for further replies.
Top