All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிளாணிஸ்ரீ காதலன் கதை திரி

Status
Not open for further replies.

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9:

மயக்கம் தீருமா....

தயக்கம் மாறுமா....

என் தாபம் குறையுமா......

என் நெருப்பை அணைக்கும் நீரே
உனக்கு என் நேசம் புரியுமா..,?

கல்லாய் சமைந்தேன்...
கரையாத உன் நினைவால்...

நாட்காட்டி காட்டும் நேரங்கள் போதவில்லை...

போதைததரும் உன் மேல் பித்துகொள்ள...

அலுவலிலும் அலுப்பே இல்லாமல் மடிணினியை மறைத்து மத்தாப்பாய் சிரிக்கிறாய்...

விரலும் தேய்ந்தது...
விழியும் தேய்ந்தது..
உன் நிழலை வருடி வருடியே...

சூரியனை பூமி சுற்ற..
பூமியை நிலவு சுற்ற..
என் நிலவுமகளை நித்தம் நான் சுற்ற...

சுற்றி சுற்றியே சுயம் தொலைதேனடி....

என் மூளையின் முழு ஆக்ரமிப்பே...

முள்ளாய் குத்தினாலும்..
முல்லை வாசமடி நீ எனக்கு...


கல்லாய் இருந்தாலும் .
கள் கொடுக்கும் போதையடி நீ எனக்கு...

அபச்சாரமாய் இருந்தாலும் அச்சாரமாய் முத்தம் தாரேன்...

இவன் தரிசு மனையில்..
மனைவியாய் ஒரு மாளிகை காட்டேன்....




சில வருடங்களுக்கு முன்பு.....

“ ஏய் கிழவி நீ இப்ப மட்டும் கதவை திறக்கல நான் என்ன பண்ணுவே ன்ணு எனக்கே தெரியாது சொல்லிட்டேன்

உனக்கு எத்தனை தடவை சொல்றது என் விஷயத்துல தலையிடாத தலையிடாதன்னு “
என்று தன் பெரியப்பாவின் வீடே அதிரும் அளவு கத்தி கொண்டடிருந்தது தாச்சாத் நம்ம அகலி தான்.

உள்ளே இருந்த காமாட்சிக்கே நன்றாக தெரிந்தது இன்று அவள் நினைத்ததை செய்யாமல் விடமாட்டாள் என்று.

அவளின் அடாவடித்தனம் தெரிந்தும் தான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் இப்படி மாட்டிகொண்டேமே
என்று உள்ள அழாத குறையாக நின்று கொண்டிருந்தார்.

வெளியே அகலியும் ராஜாவும் அந்த தேக்கு மரத்தால் ஆனா ரூமின் கதவை உடைத்து விடும் அளவுக்கு கத்தி
கொண்டிருந்தனர்.

"இங்க பாரு காமாட்சி கிழவி நீயா வெளில வந்தா சேதாரம் கம்மி இல்ல அப்பறம் நானா சொல்லமாட்டேன்
பாத்துகோ என்று அந்த 50 வயது மூதாட்டியை மிரட்டி கொண்டிருந்தாள் ஒன்பதாவது படிக்கும் நம் கதையின் குட்டி
தேவதை அகலி.

அகலி சார்ட்ஷும் டீசேர்ட்டும் போட்டு கொண்டு தெருவில் நின்று பசங்களோட கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாள் அதை பார்த்து அவளை திட்ட முடியாமல் நேராக சந்தோஷிடம் சென்று

“ஏன்டா பேராண்டி உன் தேனு குட்டி அடங்கவே மாட்டாளா எப்ப பாரு அர டவுசரை போட்டுக்கிட்டு இப்படி ஆம்பள பசங்களோட கிரிக்கெட் விளையாடி கொண்டு இருக்கிறாளே....

இன்னும் ஒரு மாசத்துக்குள்ள பெரிய மனிசி ஆயிடுவா போல அவளையும் நீ கூப்பிட்டுகிட்டு சுத்திக்கிட்டு இருக்க ஒழுங்கா அவள அடக்கமா இருக்க சொல்லு டா” என்று சென்று விட்டார்.

அதை அவனே சாதரணமாக எடுத்துக்கொண்டு சென்று விட்டான்.

ஆனால் கதாநாயகியின் உளவாளிகள் அதை கண் காது மூக்கு வைத்து திரித்து கூறவே சிலிர்த்துக்கொண்டு வந்துவிட்டாள் காமாட்சியை தேடி ...

அங்கே சத்தம் கேட்டு வந்த அம்சவல்லி "பாப்பா என்ன சத்தம் ஏன் இப்படி கத்துக்கிட்டு இருக்க" என கேட்க தன் பெரியம்மாவின் பக்கம் திரும்பியவள் "பின்ன என்ன அம்மா இந்த கிழவி என்ன பத்தி பேசணும்னா என்னிடம்
வந்து பேசவேண்டியதுதான?...

(சொன்ன மட்டும் கேட்கவா போற )

சந்தோஷ போய் திட்டிருக்கு அவன் ஸ்கூல்ல படிக்கிற பொண்ணுகளுக்கு முன்னாடி அவனுக்கு ஒரே பப்பி ஷேமா
போயிட்டு என மீண்டும் கதவை வேகமாக தட்டியவள் " இங்க பாரு கிழவி நான் பத்து எண்ணுறதுக்குள்ள நீ வந்தன்னு வச்சிக்க உனக்கு இந்த ஸ்கேர்ட் இந்த டெஷிர்ட்டும் தான்.....20 எண்ணும் பொது வந்த அப்பறம் சார்ட் ஷார்ட்ஷூம் ஸ்லீவ்
டீஷிர்ட் தான்.


இப்படி கவுண்ட் என்கிரீஷ் (increase) ஆனதுனா உன் ட்ரெஸ் சைஸ் டிக்கரீஷ்(decrease)ஆகும் பாத்துக்கோ"

1 2 3 என எண்ண ஆரம்பித்ததும் உள்ளே இருந்து வேகமாக கதவை திறந்த காமாட்சி அவள் கையில் உள்ள ஆடையை பிடிங்கி கொண்டு மீண்டும் கதவை அடைத்து விட்டார்.

பின்னே அந்த அடங்காபிடாரி சொன்னதை செய்யும் ரகம் ஆயிற்றே.

டவுசர்க்கும் கை இல்லாத பனியனுக்கும் இந்த பாவாடை சட்டை எவ்வளவோ பரவாயில்லை என்று அதை உடுத்த சென்று விட்டார் .

இதை எதிர் பார்த்த அகலி "அந்த பயம் இருக்கணும்" என்று சத்தமாக சொன்னவள் அங்கு உள்ள சோபாவில் அமர்ந்து தன் பெரியம்மா கொடுத்த டீயை குடிக்க ஆரம்பித்துவிட்டாள்.

அம்சவள்ளியும் ,தான் கல்யாணமான புதிதில் கண்டு நடுங்கிய தன் மாமியாரை ஒரு குட்டி பெண் இவளோ எளிதாக
மிரட்டிக்கொண்டு இருக்கிறாளே என யோசித்தபடி சிரித்துக்கொண்டே சென்று விட்டார்.


ராஜாவும்,அகலியும் அறைக்கதவை ஆர்வமாக பார்த்த படியே நிற்க அவர்களின் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் அரக்கு நிறத்தில் லாங் ஸ்கேர்ட் மற்றும் தங்க கலரில் டீஷர்ட்டும் போட்டுக்கொண்டு பாட்டி லுக் மாறி கிரானி
லுக்கில் வந்தார் காமாட்சி.


அதை பார்த்த ராஜாவும் அகலியும் வேகமாக சென்று அவரின் இரு புறமும் கட்டிக்கொண்டு ஒரே நேரத்தில் இரு கன்னத்திலும் முத்தம் வைத்தனர்.

அகலி வந்த சிரிப்பை அடக்கிய படி "கிழவி நான் இப்ப போயிட்டு 2 மணி நேரம் கழிச்சி வருவேன் அது வரை நீ இந்த டிரஸ்லதான் இருக்கணும் இல்ல அவ்ளோதான்" என்று சொல்லி ராஜாவை இழுத்து கொண்டு தன் வீட்டை நோக்கி
அடுத்த பஞ்சாயத்துக்கு சென்று விட்டாள் .


அந்த சிமெண்ட் பாலத்தை தாண்டி ராஜாவை இழுத்துக்கொண்டு செல்பவளின் கண்ணில் தன் வீட்டின் வெளியில் நடுத்தர வயதில் இரு ஆண்களும் ஒரு 17 வயதுள்ள ஒரு பெண்ணும் ரத்தினத்திடமும் மூர்த்தியுடனும்
பேசிக்கொண்டிருப்பது பட்டது .

அதை பார்த்ததும் அவளுக்கும் ராஜாவுக்கும் புரிந்தது இது அவள் செய்த ஆபிரேசன் காஸ் அண்ட் ஆப்கட்(operation cause and effect ) ன் அடுத்த கட்டம் என்று.


ராஜா அகலியை நோக்கி" உன்னால மட்டும் எப்படி டி இத்தனை பஞ்சாயத்தை அசால்ட்டா சமாளிக்க முடியுது"
என்றான் .

அவனை பார்த்து கோணல் சிரிப்பு சிரித்த அகலி "சண்டைனா நாலு சட்டை கிழிய தாண்ட தம்பி செய்யும்" என்றாள்.

"ஏய் குட்டி பிசாசே என்ன தம்பி சொல்லாதனு எத்தனை தடவை சொல்றது நான் உனக்கு அண்ணண் டி" என
அவளிடம் சண்டை போட்டான்.

அகலி "போ டா சந்தோசுக்கு தம்பினா எனக்கு தம்பிதான்"என அவளும் வழமையாய் அவனிடம் சண்டை போட்டாள்.

ராஜா "உனக்கு நான் ஒரு வருஷம் முன்னடி பொறந்தவன் அகலி தயவு செய்து என் பிரிண்ட்ஸ்க்கு முன்னடியாவது
சொல்லாத டி"என கெஞ்சிக்கொண்டிருந்தான் .

அகலி "கொஞ்சம் செலவாகும் டா தம்பி நீ என பண்ற டவுன்க்கு போயி அப்பா ஹோட்டல்கு பக்கத்துல ஒரு பாணி பூரி
கடை இருக்குல்ல அதுல பாணி பூரி வாங்கி கொடு நான் உன்னை தம்பி னு கூப்பிட மாட்டேன் "என்றாள்.

ராஜா கோபமாய் "எதுக்கு வீட்ல உள்ள எல்லாரும் மொத்தமா என்னை ஸ்டோர் ரூமில வச்சி குமுறு குமுரு
குமுறுறதுக்கா ?. நீ என்னை தம்பினு சொல்லியே கூப்பிட்டுக்க" என்றான் .

அவளுக்கு அல்சர் பிரச்சனை இருப்பதால் அவள் காரமாக எதையும் சாப்பிட கூடாது என்று டாக்டர் கண்டிப்பாய்
சொல்லிவிட்டதால் அவளால் அவளுடைய பேவரீட் (favorite ) பானி பூரியை சாப்பிட முடியவில்லை .அதனால்தான்
ராஜாவிடம் கேட்டாள் அவனும் முடியாது என்று சொல்லவே கோபமாக வீட்டுக்குள் சென்றுவிட்டாள் அங்கு உள்ள
யாரையும் கண்டு கொள்ளாமல்.


அங்கு ரத்தினத்திடமும் மூர்த்தியுடனும் தலையில் கட்டுடன் பேசிக்கொண்டிருந்தார் சந்தோஷின் வகுப்பு ஆசிரியர்.
"ஐயா சந்தோஷு நல்லா படிக்கிற புள்ள தாங்க ஆனா நேத்து வகுப்புல பாடம் எடுக்கும் போது கவனிக்காம பக்கத்துல
பேசிக்கிட்டு இருந்தான்ங்க ,அதுனால கோபத்துல கம்பாலா லேசா அடிச்சிட்டேன்...

அதுக்கு நம்ப பாப்பா வீட்டுக்கு போகும் போது மரத்துல ஏறி தலையில கல்ல போட்டுடுங்க 4 தையல் போட்டுருக்கேன்....என்று அழாத குறையாக கூறினார்.


அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே இடையே வந்த அகலி
"பொய் சொல்லாதீங்க நீங்க லேசாவா அடிசீங்க நீங்க அடிச்சதுல அவன் கையில கிழிச்சி ரத்தமே வந்துட்டு"என கோப
பட


அவர் அடித்துவிட்டார் எனும் போதே கோபம் வந்த ரத்தினம் கோபத்தை அடக்க வலி தெரியாமல் நின்று
கொண்டிருந்தார். மூர்த்தியோ பள்ளிகூடம் என்றால் இதெல்லாம் சாதாரணம் என்பது போல நின்று கொண்டிருக்க அகலி சொன்ன ரத்தம் என்ற சொல்லில் இருவருக்குமே மிகவும் அதிர்ச்சிதான் .


ரத்தினம் கோபத்தோடு ஆசிரியரை நோக்கவே அதில் பயந்த அவர் "அய்யா வேணுன்னு பண்ணல அய்யா தெரியாம
நடந்துடுச்சி இனி இப்படி நடக்காது என்று கெஞ்சும் குரலில் சொல்லவே "இதுவே கடைசி முறை இனி இப்படி நடக்க
கூடாது "என்று கண்டித்து அனுப்பினார்கள்.

அடுத்த பஞ்சாயத்தும் சந்தோஷ் சம்பந்தப்பட்டது என தெரிந்தே அவர்களிடம் திரும்பிய மூர்த்தியிடம் அகலி
"அப்பா வாங்க அதை அந்த அப்பா பாத்துப்பாங்க அம்மா குழி பணியாரம் செஞ்சிருக்கருக்காங்க கருவாயனுக்கு இது ரொம்ப பிடிக்கும் அவனுக்கு கொடுக்கலாம் அப்படியே எனக்கும் மாக்ஸ்ல டவுட்டு இருக்கு அதையும் க்ளீயர் பண்ணிக்கிறேன்"என்று அவரை இழுத்துக்கொண்டு அவள் கையில் உள்ள புத்தகம், நோட், பனியாரம் உள்ள வாலி, என அனைத்தையும் அவர் கையில் கொடுத்தவள் அவரின் இடது கையை பிடித்து தொங்கிய படியே அவரிடம் கதை பேசிக்கொண்டே சென்றாள் சந்தோஷின் வீட்டை
நோக்கி.


இயற்கை முறை விவசயாத்தில் கடந்த மூன்று வருடங்களாக மகசூல் சாதனை படைத்து “தமிநாட்டின் சிறந்த விவசாயி”
என்று விருதை வாங்கியவர் ,
தமிழ்நாட்டு விவசாய சங்க தலைவர் கொஞ்சம் கூட மமதை இல்லாமல் ஒரு பதின் வயது பெண்ணின் சொல்லுக்கு
இணங்கி அவளின் புத்தகத்தை சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்தார் மூர்த்தி.


மூர்த்தி ” பாப்பா அடுத்த பஞ்சாயத்து என்னடா அந்த பொண்ணு உன்னை அப்படி மொறைக்குது “ என அகலியிடம்
கேட்டார்.

அகலி “ அதுவா அப்பா அந்த கொரங்கு மூஞ்சி குமுதா நம்மா சந்தோஷோடதான் படிக்கிறா..... நேத்து வந்து சந்தோஷுக்கு லவ் லெட்டர் கொடுத்துருக்கா “,
என் கருப்ப தங்கம் அதுக்கு ” இது படிக்கிற வயசு படிக்கிற வயசுல ஒழுங்கா படி இது காதலிக்கிற வயசு இல்ல இனி
இப்படிலாம் பண்ணா நான் டீச்சர்ட சொல்லிடுவேன்னு சொல்லிருகான் ”


உடனே அந்த குமுதா இருகால அவ சொல்லிருக்கா “இவளோ கருப்பா இருகையிலையே உனக்கு இவளோ கொழுப்பா கொஞ்சம் கலரா இருந்தா இன்னும் எப்படில்லாம் சீன போடுவா ,உன்னையலாம் யாரு லவ் பண்ணுவான்னு சிரிச்சிருக்கா
அப்பா”


(அப்ப நீ மட்டும் ஏம்மா லவ் பண்ண ,உங்கள ரிஜெக்ட் பண்ண உடனே அவங்கல அசிங்கபடுத்துரமாறி பேசிடனும், )

கேஸு பெருசா இருக்கே என மனதில் நினைத்து கொண்டே மூர்த்தி அகலியிடம் “அதுக்கு நீ என்ன டா பாப்பா பண்ண" என இதழில் வழிந்த சிரிப்பை அடக்கிக்கொண்டே கேட்டார்.

அகலி”ஒன்னும் பெருசாலாம் பண்ணலப்பா நேத்து கிளாஸ் ரூம்ல அவ தூங்கிட்டு இருந்தா நான் ராஜாவ அழைச்சிகிட்டு போய் அவள் ஒரு பக்க முடியை கட் பண்ணிட்டேன்" என்று அசால்டாக சொன்னாள்.

“அட பாவமே என மூர்த்தியால் வருத்தபட மட்டுமே முடிந்தது “எல்லா விசயங்களிலும் அன்பாகவும், இரக்கத்தோடும்
இருப்பவள் சந்தோஷ் விசயத்தில் மட்டும் எப்பொழுதும் செய்யும் தவறுக்கு தாண்டிய தண்டனை தான்.

அதன்பின் அவள் பேசியதுக்கெல்லாம் ம்ம் போட்டுக்கொண்டே வாய் வலியோடு ஒரு வழியாக சந்தோஷின் வீட்டை வந்து சேர்ந்தனர்.

அங்கே ஹாலில் பதினெட்டு வயதிற்கே உரிய வளர்ச்சியுடனும் கருப்பாக இருந்தாலும் மிகவும் கலையாக புதிதாக
அரும்பிய மீசையுடனும் ஒரு முறை பார்த்தால் மறுமுறை பார்க்க தோன்றும் வசீகர முகத்துடன் சோபாவில் தூங்கி கொண்டிருந்தான் இவ்வளவு நேரம் அகலி செய்த கலாட்டகளின் நாயகன் சந்தோஷ்.

வேகமாக உள்ளே வந்தவள் “அங்கே தூங்கி கொண்டிருந்தவனை ஒரு தாயின் வாஞ்சையோடு ஒரு நொடி பார்த்தவள் அடுத்த நொடி “டேய் தடியா கருவாய எழுந்தரி டா எனக்கு கணக்கு சொல்லிதரேன்னு சொல்லிடு இப்டி தூங்குற
எழுந்திரிடா" என அவனை சரமாரியாக அடிக்க தொடங்கினாள்.

அவள் அடிப்பதை எல்லாம் அவனுக்கு தாலாட்டு போல இருக்க சிறு அசைவு கூட இல்லாமல் தூக்கத்தை தொடர்ந்தான்.

“கருவாயா” என பல்லை கடித்தவள் சுற்றி முற்றும் ஏதும் கைக்கு கிடைக்குமா என்று சற்று துலாவியவள் ஏதும் இல்லாமல் போகவே....கால்களை மடக்கி முட்டி போட்டு சோபாவின் அருகில் அமர்ந்தவள் அவன் கையில் நறுக்கென பல் பதிய கடித்துவிட்டாள்.


(நறுக்குனு..... நீ..... அவன நம்பிட்டோம் நம்பிட்டோம்)


அவனுக்கு அது ஏதோ கையால் லேசாக சொரண்டுவது போல இருக்க “தேனு குட்டி 5 மின்ட்ஸ் டா”, என்று அவன் தூக்கத்தை தொடர்ந்தான்.

அடுத்த சில நிமிடத்துக்கு எந்த சத்தமும் இல்லாமல் போகவே மெதுவே கண்களை விரித்து பார்க்கும் போது அங்கே
அகலி பெரிய வாலி தண்ணீரை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வரேவே அதை பார்த்தவன் பொங்கி வந்த சிரிப்பை
அடக்கியபடி

“ஏய் வெள்ளலேலி நான் எழுந்துட்டேன் டி ,நீ அதை தூக்கிட்டு வந்து என் மேல ஊத்தி எழுப்புரதுக்குள்ள விடிஞ்சிடும்”
என்றான்,

“அரக்காபடி சைஸ்ல இருந்துட்டு உனக்கு ஏன் இந்த வேலை” என வாலியை பிடுங்கி கீழே வைத்தவன் அவள் கையை
பிடித்து வாலி தூக்கியதால் சிவந்த அவள் கைக்கு எண்ணெய் தடவி விட்டான்.

அந்த நேரம் மூர்த்தி சந்தோஷின் வாத்தியார் அவனை அடித்ததை செல்விடம் சொல்லவே அவர் வேகமாக அவனிடம் வந்தவர்
“சந்தோஷு கையை காட்டுயா எதோ உன் வாத்தியார் அடிச்சு உன் கையில ரத்தம் வந்துடட்டாமே "என கையை பார்த்தார். அவன் உள்ளங்கையில ஒரு இன்ச் அளவு லேசாக கீறி ஒரு சொட்டு ரத்தம் வந்திருந்தது.

(அடிப்பாவி இதுக்க 4 தையல் போடுற அளவு அந்த வாத்தியார் மண்டைய ஒடச்சி வச்சிருக்க..டேய் விஷ்வா நீ ரொம்ப
பாவம் டா)

செல்வி “ஏன் பாப்பா இதுக்கா இவளோ அளப்பர பண்ணிருக்க,, பாவம் அந்த வாத்தியார் ஏதோ இவன் கையில கடபாறய குத்துன மாறி....

இபொழுதுதான் காயத்தை கவனித்த மூர்த்திக்கும் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை....
அகலி “அம்மா உங்களுக்கு வேணும்னா அது சின்ன காயமா இருக்கலாம் ஆனால் எனக்கு அப்படி..இல்லை என அவன்
காயப்பட்ட இடத்தை வருடிவிட்டபடி சொன்னாள்.

சந்தோசோ தன் நண்பர்களின் மூலம் விஷயம் அறிந்ததால் இது வழக்கம் என்பது போல சின்ன சிரிப்புடன் அவள் கைக்கு மருந்திடும் வேலையை செவ்வனே தொடர்ந்தான்.

அங்கே அவர்கள் அருகே வந்த செல்வி....சந்தோஷின் கையை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு அகலியை ஒரு முறை
முறைத்துவிட்டு ,

அகலியின் சிவந்த உள்ளங்கையை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு சந்தோசை ஒரு முறை முறைத்துவிட்டு
“ஏங்க நான் அண்ணன்( ரத்தினம் ) வீட்டுக்கு போறேன். இந்த பாசலமலர் சீன் முடிஞ்சத்துக்கு அப்பறம் என்னை கூப்டுங்க,
தினம் இதுங்க 2 தொல்லையும் தாங்கல டா சாமி” என மூர்த்தியிடம் சொன்னவள்,

“டேய் நல்லவனே அங்க குழி பணியாரம் இருக்கு அத எடுத்து சாப்டுட்டு உன் மருந்து போடுற வேலையை பாரு இல்ல
அதுக்கும் என் தலையில கல்லை தூக்கி போட்டாலும் போட்டுருவா உன் தேனுகுட்டி” என நொடித்து கொண்டு சென்றார்.

மூர்த்தியோ சிரித்தபடி “ புள்ளைங்களா கண்ணு வைக்காத டி “ என்றார்.

“ஆமா ஆமா கண்ணு வைக்குறாங்க.....கண்ணு... உங்க புள்ளைங்க மேல காலைதான் வைக்கணும் “ என அவர் குரலில்
விரக்தி போல இருந்தாலும் மனம் முழுவதும் சந்தோசமே இப்படியே ஒருவர் சிறிதாக மனம் சுணங்கினாலும் மற்றவர் அதற்கு காரணமானவர்களை உண்டு இல்லை என்று ஆக்கிகொண்டிருந்தனர்..


நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க ஒரு நாள் அகலி மிகவும் கலைந்த தோற்றத்துடனும்,மிகவும் சோர்வாக வயிற்றை ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறுகையால் சுவற்றை பிடித்திக்கொண்டு மெதுவாக சந்தோஷின்
வகுப்பிற்கு வந்தவள் “ மேம் சந்தோஷ்” என்று மெதுவாக முனகினாள்.

அந்த குரல் வகுப்பாசிரியருக்கு காதில் விழுந்து அவர் திரும்புவதற்குள் சந்தோஷ் புயல் போல வெளியே வந்தவன்
அவளை அணைத்துக்கொண்டு ‘தேனு குட்டி என்னடா பண்ணுது ,ஏன் இப்டி இருக்கா” என கண்கள் குளமாக கேட்டான்..


“அவன் அணைப்பில் சேயாய் ஒன்றியவள் “சந்தோஷ் சந்தோஷ் நான்.. நான்......பெரிய மனிசி ஆயிடன்னா என்னை
வீட்டுக்கு போன் பண்ண சொன்னாங்க”, என்னால நடக்க முடியலடா ,வயிறு ரொம்ப வலிக்குது” என அழுது தீர்த்துவிட்டாள்.


பதின் வயதில் ஏற்படும் திடீர் பருவ மாற்றம் உடலில் ஏற்படும் ஹார்மேன் மாற்றம் என எதையும் தாங்கமுடியாமல் பயத்தின் பிடியில் இருந்தாள் அந்த குழந்தை.

சந்தோஷும் அவளை விட மூன்று வயதேதான் பெரியவன் என்பதால் அவனுக்கும் பாதி புரிந்து மீதி புரியாத நிலையே

வருவாள்...
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10 :

காதலிப்பதால் கவிதை எழுத்துகிறேனா....
இல்லை கவிதை எழுதுவதால் காதலிக்கிறேனா....
தெரியவில்லை....

பிடித்து போய் காதலிக்கிறேனா....
இல்லை பிடித்தத்திற்காக காதலிக்கிறேனா
தெரியவில்லை.....

ஏதோ காரணத்திற்காக பிடித்த
உன்னை எந்த காரணத்திற்காகவும்
விலக்கமுடியவில்லை.....

அடர்ந்து பரந்த பாலைவனத்தில் தேடும் ஒரு துளி நீரைப்போல்......!

உன்னில் ஒளிந்துகிடக்கும் என் காதலை தேடி தேடியே
சோர்ந்து போகிறேன்....

இனிப்பில் இருக்கும் உப்பளவு கூட உறவில்லை
என உரக்க சொல்கிறாய்..

என் உயிரை அறுத்தாவது என் மேலான உன் நேசத்தை நிரூபித்தே தீருவேன்....


அதன்பின் சந்தோஷ் வீட்டிற்கு தொலைபேசியில் இருந்து தொடர்பு கொண்டு, அவர்கள் காரில் வந்து அகலியை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அவர்கள் ஊரின் வழக்கபடி அந்த ஊரில் வாழும் வன்னான் வீட்டில் உள்ள எவரேனும் அவள் தலைக்கு தண்ணீர் ஊற்றி முறை செய்த பிறகே தாய்மாமன் முறை செய்யும் பழக்கம்.

மல்லிகாவுடன் உடன்பிறந்த சகோதரர்கள் யாரும் இல்லாததால் அம்சவள்ளியின் அண்ணன் கணேசன்தான் தாய்மாமன் முறை செய்யவேண்டும் என முடிவு செய்யப்பட்டு,.


30 ஆம் நாள் சடங்கு வைத்துகொள்ளலாம் என அதற்கான வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதற்குள்ளாகவே அகலியை ஒரு இடத்தில் அமர வைப்பது என்பது முடியாத காரியமாகிவிட்டது.


எல்லோரும் அவளிடம் கெஞ்சி , கொஞ்சி ஒரு வழியாக அவள் எங்கும் போகாமல் வீட்டிலையே இருப்பதாக ஒத்துக்கொண்டாள், ஒரு சில நிபந்தனைகளோடு.

அதாகப்பட்டது என்னவென்றால் அவள் சந்தோசை பார்க்காமல் இருக்க முடியாது என்பதால் சந்தோஷ் தன் வீட்டிலேயே இருக்க வேண்டும்.மூர்த்தி அப்பா,செல்வி அம்மா ,அம்சா அம்மா ,மருது அப்பா இவங்க எல்லாரும் நம்ம வீட்டில்தான் இருக்க வேண்டும்.

மேலும் சந்தோஷிற்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இருப்பதால் அவனால் தன்னோடு விளையாட முடியாது அதனால் ராஜாவும் தன வீட்டில முப்பது நாள் தங்கவேண்டும் என்றும்,

ராஜாவும் தானும் ஒரு திருடன் போலீஸ் கூட விளையாட முடியாது,

அதனால் கவி,பவநீஷ்,யோகித்,ரித்தி, (பக்கத்துக்கு வீட்டு குட்டி பசங்க) உப்புக்கு சப்பாணியாய் விளையாட அவர்களும் இங்கவே தங்க வேண்டும் என்ற சாதாரண நிபந்தனைகளோடு மலை இறங்கியது அகலி சாமி,


இதை எல்லாவற்றையும் தாங்கி கொண்ட அவள் வீட்டாரால் அவள் கடைசியாக சொன்னதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அது என்னவென்றால் அவள் சாப்பிடும் நாட்டுக்கோழி பச்சை முட்டை,குடிக்கும் நல்லஎண்ணெய், கேப்பக்களி,அரிசி புட்டு என அனைத்தும் அவர்கள் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டால்தான் தான் சாப்பிடுவேன் என்பதாகும்.


(பயபுள்ள எப்படி பழி வாங்குது)

இதில் அந்த உணவு வகைகளை சந்தோஷ் மட்டுமே முகம் சுழிக்காமல் சாப்பிட்டது.மற்றவர்கள் அனைவரும் “தேமே” என்றே சாப்பிட்டார்கள்.

அன்று காலையிலேயே தலைக்கு குளித்து அதை சந்தோஷிடம் துடைக்க சொல்லி கொடுத்துவிட்டு விடாமல் தும்மி கொண்டே உட்கார்ந்திருந்தாள் நம் நாயகி அகலி.

தலையை துவட்டிக்கொண்டு வீட்டில் உள்ளவர்களை சத்தம் போட்டு கொண்டிருந்தான்.

“இவளோ முடி எதுக்கு ? இவளுக்கு வெட்டி விடுங்க வெட்டி விடுங்கன்னு சொன்னா கேட்கிறீங்களா, வைக்கோல் தறி மாறி எவளோ அடர்த்தி,எவளோ நீளம், ஒவ்வொரு தட தலைக்கு குளிச்சிட்டு இவ படுற அவஸ்தை தாங்க முடியல.


தொடர்ந்து ஐம்பது தடவையாவது தும்மிட்டே இருக்கா அடிவயிரெல்லாம் வலிச்சி மயக்கமே வர நிலைமைக்கு போய்டுறா” என சாதாரண தும்மலுக்கு மிகபெரிய விளக்கம் கொடுத்து கொண்டிருந்தான் அந்த பாசக்கார நண்பன்.


(டிசைன் டிசைனா யோசிக்கிற டா நீ...பாவம் ஸ்டோரி படிக்கிற என் உடன்பிறப்புகள் எல்லாம்)


அதை பார்த்த அனைவரும் சிரிப்பதா,அழுவதா என்ற மனநிலமையோடு பார்த்துக்கொண்டு இருக்க,,,,


செல்வி மட்டும் “ டேய் சந்தோஷ் உன் தொல்லை தாங்கல,நீளமா இருக்குனுதான் முடியை கட் பண்ணியாச்சி,அடர்த்திய என்ன டா பண்றது எழுந்து ஒழுங்கா ஓடிடு” என கத்தினார்.

ராஜாவோ “ டேய் கருவாயா பேசாம குரங்கு மூஞ்சி குமுதாவுக்கு நானும் இந்த குட்டி பிசாசும் ஒரு சைடு முடிய கட் பண்ணிவிட்ட மாறி நீயும் இவளுக்கு பண்ணிவிட்டுறேன்,

அடர்த்தி கம்மியான மாறியும் இருக்கும் புது ஹேர்ஸ்டைலாவும் இருக்கும்” என்று கூறியவன் அவன் செல்ல அண்ணன் பார்த்த அன்பு பார்வையில் வாயை மூடிக்கொண்டான்.

இப்படி இவர்கள் ரெண்டுபோரோட அலம்பலோடும் முப்பது நாட்களை கடப்பதுற்குள் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் ஒரு வழியாகிவிட்டார்கள்.


அதிலும் பக்கத்து வீட்டில் உள்ள நல்லம்மா என்ற வயதான பெண்மனிதான் அகலியிடம் அதிக நேரம் மாட்டிக்கொண்டது.

(நல்லம்மா என்ற பெயரை பாத்து ஏமாந்துவிடாதீர்கள் மக்களே , எப்பொழும் எல்லோரையும் குறை சொல்லிக்கொண்டும்,வார்த்திகளால் காயப்படுத்திக்கொண்டும்,
கொச்சை வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டும்தான் இருப்பார்.தப்பி தவறி யாரவது ஒரு வார்த்தை எதிர்த்து பேசிவிட்டால் அன்று முழுவதும் அவர்களை திட்டுவதையே முழுநேர வேலையாக பார்ப்பார்.அதனால் அவரிடம் யாரும் வாய் கொடுப்பது இல்லை)



ஒரு நாள் அகலி சந்தோஷின் அருகில் அமர்ந்திருப்பதை பார்த்து “ஏன் டி அகலி அது என்ன எப்ப பாரு அவன ஓரசிகிட்டே உட்கார்ந்துருக்க,உனக்கு ஏன் டி இப்பவே இந்த புத்தி....”என வார்த்தைகளால் நெருப்பை அள்ளி கொட்டினார்.

அகலிக்கே “திக்” என்ற போதிலும் அவருக்கு பதில் அடி கொடுக்கும் பொருட்டு

“அப்படியா பாட்டி நீங்க சொல்லி நான் கேட்காம இருப்பேனா ?”, என்று வேண்டும் என்றே சந்தோஷின் கையை இறுக்கி பிடித்துக்கொண்டு அவரிடம் பேச்சு கொடுத்தாள்.

இப்படி அவர் தன் வீட்டிற்கோ தன் வீட்டின் வழியோ சென்றாலோ வேண்டும் என்றே சந்தோஷின் மடியில் உட்கார்ந்து கொள்வது,அவனை உப்பு மூட்டை தூக்க சொல்வது என அவரை காண்டாக்கி கொண்டிருந்தாள்.


அவர் யாரையாவது ஏதாவது சொன்னால் ஒன்று அவர்கள் அவரின் முன் வர மாட்டார்கள் இல்லை அவரிடம் சண்டை போடுவார்கள்.இது இரண்டில் அவர்கள் எது செய்தாலும் அவரின் வாய்க்கு அது தீனியே....

ஆனால் அதற்கு மாறாக அகலி இவ்வாறு செய்ததில் அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை.
இப்படியாக அவளின் சடங்கு நாளுக்கு இன்னும் 3 நாட்களே இருக்க கைகள் இரண்டிலும் மருதானியுடன் இருப்பதால் ஒரு விளையாட்டும் விளையாட முடியாததால் உணவு உண்ணலாம் என தன் வீட்டில் உள்ள பெருசுகளை தேடிக்கொண்டிருந்தாள்.



எல்லாரும் எங்க போய்ட்டாங்க , என அந்த ஒற்றை படுக்கை அறை கொண்ட வீட்டை தலைக்கீழாக தேடிப்பார்த்தாள்.

ஒருவரும் கண்ணில் படவில்லை...”என்ன டா சூனா பாணாக்கு வந்த சோதனை,இதுக எல்லாம் ஒன்னு சேர்ந்த ஹெவியா ஏதாவது பிளான் பண்ணுவாங்களே “என யோசித்தக்கொண்டே
சென்று கொள்ளை புறம் போகவே அங்கு உள்ள கிணற்றின் பக்கத்தில் உள்ள மோட்டர் ரூமின் மேடையில் அமர்ந்து கையில் ஒரு நோட்டுடன் பேசிக்கொண்டிருந்தனர்.


“அதானே பார்த்தேன்” என்று அவர்கள் அருகில் வந்தவள் “ ஆல் அப்பாஸ் இங்க பாருங்க சடங்கு பங்க்ஷன்ல என்னை சோகேஷ் பொம்மை மாறி நிற்க வச்சி ஏதாவது காமெடி பண்ணீங்க “, அவ்ளோதான்

ஒழுங்கா இதுக்கு செலவு பண்ற பணத்தை கீழத்தெருல இருக்குற அண்ணாங்களாம் நம்ம ஊரு கவர்மெண்ட் ஸ்கூல்ல பசங்களுக்கு நல்ல படிப்பு சொல்லி கொடுக்கவும் ,
அதை விரிவுபடுத்தவும் நிதி திரட்டிக்கிட்டு இருக்கங்களாம் அதுக்கான முழுச்செலவையும் நீங்களே கொடுத்துடுங்க சரியா”,
அகற்கு அவளின் ஆல் அப்பாஸ் “ சரி “ சொல்லித்தான் ஆக வேண்டும்,அவளிடம் பேசி அவர்கள் யாரலையும் ஜெயிக்க முடியாது என்பதால் அவர்கள் தலை சரி என்றே சொன்னது.


செல்வியின் பக்கம் திரும்பியவள் “அம்மா பசிக்குது சாப்பாட்டு போட்டு ஊட்டிவிடுங்கள் “என்றார்.

செல்வியும் சரி என்று அவளுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டே “ பாப்பா எங்கடா உன் டச்சப் பாய் என்னை சாப்பாடு கொடுக்க சொல்ற” என்று கேட்டார்”
“மம்மி நீங்க என் சூர்யாவை ரொம்ப கிண்டல் பண்றீங்க இது நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன்”,


( நீங்க தேவாவாக்கும் கருமம்....)


அவனுக்கு நாளைக்கு கடைசி பரிட்சை இருக்குல்லஅவனை படிக்க சொல்லிட்டு வந்திருக்கேன்” என்றாள்.

*†*†******÷÷

அவளின் சடங்கு நிகழ்ச்சிகள் முடிந்து அவளின் முழு ஆண்டு தேர்வும் இனிதே முடிய கோடை விடுமுறையை முடிப்பதற்குள் பயங்கர கருப்பாய் இருந்த சந்தோஷை கருப்பாய் பயங்கரமாய் மாற்றிவிட்டு..

வீட்டில் உள்ள அனைத்து பெரியவர்களையும் எல்லா விளையாட்டிலும் சேர்த்து குழந்தைகளாக்கிவிட்டு,காமாட்சியை அனைத்து விளையாட்டுகளின் முதன்மை அம்பயாராக மாற்றிவிட்டு
சந்தோஷின் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்ப்பதற்கு வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் தலையை நுழைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

11 மணிக்கு தான் தேர்வு முடிவு என சந்தோஷ் சொல்லியும் கேட்காமல் “எனக்கு தெரியும் போடா பிளாக்கி” என காலையில் 8 மணியிலுருந்து பிரஷும் கையுமாக அமர்ந்துவிட்டாள்.


ரிசலட் அறிவிக்கப்பட்டு சந்தோஷ் பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றான்...

அகலியை தான் கையில் பிடிக்க முடியவில்லை சந்தோசத்தில், ரத்தினம் சொல்லும் அந்த வார்த்தையை கேட்கும் வரை..


“சந்தோஷ் எந்த காலேஜ்லபா ஜாயின் பண்ண போற, சிவில் என்ஜினீயரிங் வேற படிக்கணும்ன்னு சொன்ன” என்று கேட்டார்.


அவன் சொன்ன காலேஜின் பெயரை கேட்டவர் “ நீ அங்க படிக்கிறதுக்கு படிக்காமலே இருக்கலாமே “ என்றார்.

“ இல்லப்பா அதுதான் நம்ம வீட்டிலிருந்து பக்கமா இருக்கு தினமும் போய்ட்டு போய்ட்டு வரலாம் , தேனுகுட்டி நான் இல்லாம இருக்க மாட்டா .அத்தோட எனக்கும் அவளை பார்க்காமல் இருக்க முடியாதுப்பா,
விளையாடுறேன்னு எங்கையாவது விழுந்து வைப்பா அப்பா அவளை பாரத்துகணும் ” என்றான்.

“ நல்ல பிள்ளை போ நீ.. இதுக்கு எதுக்கு நீ ஸ்கூல் பர்ஸ்ட் வரணும்,.நீ சென்னையில உள்ள NIT காலேஜ்ல தான் படிக்கிற, பாப்பாவ உன் அளவுக்கு இல்லனாலும் ஓரளவு பத்திரமா பாத்துக்க,நாங்க 3 குடும்பம் இருக்கோம்,

அத்தோட உன் தேனுக்குட்டியே நாலு பேர பாத்துப்பா...நீ கவலை படாம இரு , பாப்பாட நான் பேசிக்கிறேன் “என்றார்.

ரத்தினம் வந்து அகலியிடம் சொன்னதுதான் தாமதம் அவள் தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்துவிட்டாள்...அதற்கு ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பே இல்லை என்றும் படிக்கிற புள்ளை எங்கு இருந்தாலும் படிக்கும் என்று சொல்லிவிட்டாள்.


சந்தோஷோ “ தேனுகுட்டி சொன்னா மட்டும் போறேன் இல்லன வேண்டாம் என்பதோடு முடித்துவிட்டான்.

அவர்கள் வீட்டில உள்ளவர்கள் தான் தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டார்கள்.
மல்லிகா” ஏன் பாப்பா சந்தோஷ் எவளோ பெருந்தன்மையா அவனோட நல்ல படிப்பை கூட உனக்காக வேண்டாம்னு சொல்றான்,


அதே மாறி நீயும் அவனுக்காக பார்க்க வேண்டாமா , அவன் இங்க உள்ள காலேஜ்ல பஸ்டா(First) இருந்த கூட அந்த காலேஜ் ல 10வது உள்ளவனுக்கு தெரிஞ்சதுதான் தெரியும் “

“முடியவே முடியாது “என்று சொன்னவள் 10 நாட்கள் தேயோ தேய் என்று விலக்கி ஒத்துக்கொள்ளவைத்தார்கள்.
ஒரு வழியாக அவன் சென்னை செல்லும் நாளும் வரவே அகலி கீழே புரண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.


அவளை சமாதானம் செய்து வார இறுதிகளில் வருவதாகவும் தினமும் போன் செய்கிறேன்,என்று சொல்லி அவளிடம் 1000 பத்திரம் சொல்லி அனைவரிடமும் கனத்த மனதுடனும் கண்களில் கண்ணீரோடும் சென்னை சென்றான்..

( ரொம்ப ஓவரா பண்றீங்க டா ரெண்டு பேரும்)



அத்தியாயம் 11 :

இம்மையும் நீ...
மறுமையும் நீ..
இன்பமும் நீ..
துன்பமும் நீ...
காயங்கள் தந்தாலும் .
களிம்புகள் நீயாவாய்...
கண்ணீர் தந்தாலும்
கைகூட்டை நீயாவாய்..
நரகமே என்றாலும்
என்னோடே நீ வருவாய்...

அம்மா “ஏன் உனக்கு லவ் மேரேஜ்ல இவ்ளோ வெறுப்பு என்று எப்பொழுதும் கேட்கும் கேள்வியை தன் அம்மாவை நோக்கி தன் தந்தையின் மடியில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள் ஜனனி .


தன் மடியில் தலை வைத்துப்படுத்திருக்கும் தன் இரண்டாவது மகன் விஸ்வாவின் தலையை வருடிய படி அமர்ந்து இருந்த சுந்தரியின் முகம் ஜனனியின் கேள்வியில் தானாகவே சோகத்தை கடன் வாங்கி கொண்டது..

தன் லாப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டே தன் குட்டி தங்கை கேட்கும் கேள்விக்கு மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு தனக்கு தெரிந்த தன் அம்மா சொல்லும் அந்த அருத பழைய கதையை கேட்க தயாரானான்,அந்த வீட்டின் மூத்தபையன் கண்ணன்.

விஸ்வாவும் ,முருகனும் கண்ணனை போல் அல்லாமல் ஒரு கவலையுடன் அந்த கதையை கேட்க தயாரானார்கள்.

“ பாப்பு, என் தாத்தாவோட அப்பா இருக்காருல அவருக்கு ரெண்டு பசங்க ஒன்னு என் அப்பாவோட அப்பா,இன்னொருத்தவங்க என் சின்னதாத்தா .

என் சின்னதாத்தா அவங்க அப்பாவோட 55 வது வயசிலதான் பொறந்தாங்க. அதனால அவங்க மேல என் கொள்ளு தாத்தாக்கு ரொம்ப இஷ்டம்.

( 55 வது வயசில ரொமான்ஸ் பண்ணிட்டு திரிஞ்சிருக்க, பெருசு நல்ல வேலை செத்துட்ட இல்ல நானே கருணை கொலைப்பண்ணிருப்பேன்.,கடுப்புகல கிளப்பிக்கிட்டு)

அவரு அந்த ஊருல உள்ள ஒரு பெண்ணை காதலிச்சிருக்காரு ஆனால் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க என் கொள்ளு தாத்தா ஒத்துக்கவே இல்லை..

ஆனால் சின்னதாத்தா அவங்க சொல்ற எதையுமே கேட்காம அந்த பொண்ண யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துட்டாங்க..

தான் செல்லமா வளர்த்த பையன் தன் சொல்பேச்சி கேட்காம இப்படி கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு வந்துட்டானேன்னு வேதனையில அவங்க உள்ளே நுழையும் போதே ஹார்ட் அட்டாக் வந்து அப்பவே இறந்துட்டாங்க..

கண்ணன் இடையில் “அம்மா உன் கொள்ளு தாத்தா அட்டாக்ல சாகும் போது 80 வயதுதானா” என்றான்.

சுந்தரியும் “ ஆமா டா கண்ணா “ என்றார்.

“நீ மேல சொல்லு” என்ற சொன்ன கண்ணன் தலையை லாப்டாப்பில் விட்டுக்கொண்டான்.

அவர் தன் கண்களை தொடைத்த படி “ அது மட்டும் இல்ல டா பாப்பு”
என் அப்பாவோட அண்ணனும் அதே மாறி வீட்டுல சொல்ல சொல்ல கேட்காம தான் காதலித்த பெண்ணையே கல்யாணம் பண்ணி கூப்பிட்டு வந்துட்டாங்க..

ஆரம்பத்துல எதும் பிரச்சனை இல்லனாலும் கொஞ்ச நாட்களுக்கு அப்பறம் என் தாத்தாக்கு ரொம்ப உடம்பும் முடியாம ஆகி அவங்களும் பெரியப்பாக்கு கல்யாண ஆன கொஞ்ச நாட்களிலேயே இறந்துட்டாங்க...

கண்ணன் “ அம்மா உன் தாத்தாக்கு லிவர் பெயிலியர் அப்படினு தான டாக்டர் சர்டிபிகேட் கொடுத்தாங்க” என்றான்.

அவரும் முழுவதும் சோகத்தில் இருப்பதால் கண்ணன் கிண்டல் செய்கிறான் என்பதை உணராமல் அழுத்துகொண்டே ஆமாம் என்றார்.

ஜனனியும் ,கண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
ஜனனி “ அதுக்கு அப்பறம் என்ன அம்மா ஆச்சி” என்றாள்.

அதுக்கு அப்பறம் நாங்க எல்லோரும் ஒரு சாமியார்ட்ட கேட்டபோது அவர் ஏதோ ஒரு ஜென்மத்தில் எங்க குடும்பத்துல உள்ள ஆம்பிளைங்க ,ஒரு காதல் ஜோடியை சேர விடாம கொடுமைப்படுத்திருக்காங்க.

அவங்களோட சாபம்தான் உங்க குடும்பத்தை பழி வாங்குது.முடிந்த வரை யாரும் காதல் கல்யாணம் பண்ணிக்காதிங்க ...அப்படி மீறி பண்ணா உங்க குடும்பத்துல உள்ள ஆண்களுக்கு நல்லது இல்லை அப்படின்னு சொன்னார்.

கண்ணன் ” அந்த சாமியார் கூட புழல் ஜெயில்ல இருக்காரு டா பாப்பு குட்டி” என்றான்.

சுந்தரி கண்ணன் சொல்வதை காதில் வாங்காமல் அதனால “ என் புள்ளைங்க உங்க மூணுபேருக்கும் நான் தான் பொண்ணு, மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன்.

அப்படி என் பேச்சை மீறி ஏதாவது பண்ணீங்க அவ்வளவுதான்”. என்று கோபமாக எழுந்து சென்றுவிட்டார்.

எந்த படிப்பறிவும் இல்லாமல் ..தாய் தந்தையின் சொல்லை கேட்டு வீட்டிலையே வளர்ந்த சுந்தரிக்கு இது முழுக்க முழுக்க உண்மை என்றே தோன்றியது.

அதுவும் தன் உயிர்க்கு ஏதும் ஆபத்து என்றால் தன் பிள்ளைகளின் விருப்பமே பிராதானம் என்றுபிருப்பார்.

ஆனால் இதில் கேள்வி குறியாக இருப்பது தன் கணவனின் உயிர் அல்லவா,அதனால் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

கண்ணன் தன் அன்னையின் வார்த்தைகளை அசட்டையாக எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.அதற்கு காரணமும் இருக்கிறது

தன் அம்மா சொல்வதில் எதுவும் உண்மை இருக்குமோ என்று தன் குடும்ப வரலாறை திருப்பி பார்க்கும் போது தெரிந்து கொண்டதுதான் சுந்தரியின் கொள்ளு தாத்தா 80 வயதில் இறந்தது,அவரின் தாத்தா லிவர் பெயிலியரால் இருந்தது...

பின் அவர்களுக்கு குறி சொன்ன சாமியார் ஜெயிலில் இருப்பது எல்லாம்.

அதனால் சுந்தரி இந்த கதையை சொல்லும் போது இவனுக்கு ஏதோ காசியம் கேட்பது போல் தான் இருக்கும்.

விஸ்வா கண்ணனை விட சின்னவனாக இருந்தாலும் அவனுக்கு அனைத்திலும் ஒரு தொலைநோக்கி பார்வை உண்டு.

என்னதான் அம்மா சொல்வதில் பெரிதான காரணம் ஒன்றும் இல்லை என்றாலும் அவர் கண்களில் தெரியும் அவருக்கான நம்பிக்கை என்றாவது ஒரு நாள் ஆபத்தை தரும் என்று முழுதாக நம்பினான்.

ஏதோ யோசனையில் இருந்த விஸ்வாவை கலைத்தது ஜனனியின் குரல்

“ விச்சு அண்ணா நாளைக்கு நானும் உன் காலேஜ்க்கு வரேன் பிளீஸ் அண்ணா,நான் வந்து ஜஸ்ட் பாத்துட்டு அப்பா கூட திரும்பி வந்துடுறேன் அண்ணா “ கூறி கெஞ்சலுடன் அவனை பார்த்தாள்.

தன் ஆசை தங்கை இவ்வளோ கெஞ்சும் போது அவனாலும் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை

“ சரி டா பாப்பு “ என்று அனுமதி வழங்கவே, சுகமாய் தன் தந்தையின் தோளில் உறங்கி போனாள் ஜனனி.

முருகன் ஒன்றை பத்தாக்கும் வல்லமை பொருந்தியவர்.தன் சிறு வயதிலையே தொட முடியாத அனைத்து உயரங்களையும் தொட்டவர் யாரின் உதவியும் இல்லாமல்.

அவரின் தொழில் இதுதான் என்று யாரலையும் கணித்து கூற முடியாது அனைத்து துறைகளிலும் முதன்மையாக விளங்குபவர்.

ஒரு ஊரின் சிறப்பு என்னவோ அதை சார்ந்து கண்டிப்பாக முருகன் ஏதாவது ஒரு தொழிலை செய்வார்.

உதரணாமக புதுக்கோட்டை என்றால் கண்டிப்பாக அவருக்கு அங்கே ஏக்கர் கணக்கில் முந்திரி தோப்பு இருக்கும், சேலம் என்றால் ஏக்கர் கணக்கில் மாந்ததோப்பு இருக்கும், மதுரை என்றால் மல்லிபூதோட்டம் இருக்கும்.

சென்னையில் இரண்டு லெதர் பாக்ஃடிரியும், முன்று மென்பெருள் நிறுவனமும் உள்ளது.இது எதையும் தேவை என்றால் ஒழிய அவர் நேரில் பார்வை இட்டது இல்லை.

நம்பிக்கையான ஆட்களை வைத்து மிகவும் திறம்பட நடத்துவார்.
ஆனால் வீட்டில் எப்பொழுதுமே தன் பொண்டாட்டியின் பேச்சை கேட்கும் சாதரண கணவன்தான்.

தன் பெரியபுள்ளை மட்டுமே தன் தொழிலுக்கு துணையாக வைத்துக்கொண்டு அதுவும் கண்ணன் விருப்பட்டதால் மட்டுமே,

மாநிலத்திலே முதல் மாணவனாக வந்திருக்கும் தன் இளைய மகனை சிவில் என்ஜினியராகவும் , பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்த தன் மகளை டாக்டராகவும் அவர்கள் விருப்ப படியே ஆக்க முடிவெடுத்துவிட்டார்.

மறுநாள் காலையில் முருகன்,விஸ்வா,ஜனனி மூவரும் விஷ்வாவின் கல்லூரிக்கு கிளம்பினார்கள்.விஷ்வாவின் கல்லூரி நகரத்தின் மையப்பகுதியில் இருக்கிறது,

இவர்களின் வீடு மிகவும் தூரமாக இருப்பதால் கல்லூரிக்கு அருகே உள்ள அபார்மென்டில் ஒன்றை சொந்தமாக வாங்கிகொடுத்தார் முருகன்.

(குட் அப்பா)

தங்கள் காரில் வந்து காலேஜ் வாசலில் இறங்கிகொண்டிருக்கும் போது அவ்வழியே தன் தேனுகுட்டியிடம் காலை அடனேன்ஷை போனில் போட்டபடி வந்த சந்தோஷ் அவர்களை கவனித்துவிட்டான்.

ஏற்கனவே அட்மிசன் போட வரும்போது விஷ்வாவை சிலமுறை பார்த்து பேசி இருக்கிறான்.அவர்கள் இடையில் ஒரு நல்ல நட்பும் அப்போதே இருந்தது ,அதனால் அவர்கள் அருகில் சென்று “ ஹாய் விஸ்வா” என்க.

“வாடா சந்தோஷ்” என்று திரும்பிய போதுதான் விஸ்வாவின் கையை பிடித்தபடி பட்டுப்பாவடை சட்டையில் நல்ல கொழு கொழுவென்று சிவந்த நிறத்தில் ,கழுத்திலும் ,கையிலும் வைர நகைகள் மின்ன நின்ற அந்த கொலுபொம்மயையை பார்த்தான்.

பார்த்தவன் மனதில் பசக்கென்று ஒட்டியது அவளின் பால் முகம் அதை கவனித்த ஜனனி “இந்த பிளாக் டாக்(dog) எதுக்கு நம்மல இப்படி பாக்குறான்” என்று ,அனிச்சை செயலாய் தன் அண்ணனின் பின்னால் ஒழிந்துகொண்டாள்.

அது வெட்கத்தாலா ,இல்லை பயத்தாலா என்று அந்து சிறு பெண்ணால் பிரித்து பார்க்க முடியவில்லை.

அவள் பின்னே மறைந்ததும் தன்னிலை திரும்பியவன் “சின்ன புள்ளையை போய் இப்படி பாக்குறியே டா”,என மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு விஷ்வாவின் பக்கம் தன் கவனத்தை திருப்பினான்.

விஸ்வா “முருகனை அறிமுகப்படுத்த சந்தோஷ் அங்கேயே அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகொண்டான்.

முருகன் பெருமையுடன் அவனை அணைத்துக்கொண்டு “ நல்ல மரியாதை தெரிஞ்ச பிள்ளை “ என்றார்.

பின் ஜனனியை அறிமுகப்படுத்திவிட்டு ஜனனியின்புறம் திரும்பி “பாப்பு இது சந்தோஷ் அண்ணன், என் கூட தான் இன்னும் நான்கு வருசத்துக்கு படிக்க போறான்” என்றான்.

சந்தோஷ் “ அய்யோ கடவுளே அண்ணனா,ஏய் குண்டு என்ன கெட்டவார்த்தையில கூட திட்டுடி ,தயவு செய்து அண்ணனு மட்டும் கூப்பிடாத என்று சிரிப்பை இழுத்து பிடித்தபடி அவளை பார்த்து இருந்தான்.

ஏன் என்று தெரியாவிட்டாலும் அவள் வாயிலிருந்து அண்ணன் என்று வருவது அவனுக்கு பிடிக்கவில்லை.

ஜனனி “ அண்ணனா,இவனா ,இங்கு பாரு விச்சு ,நான் உன்னையே அண்ணன்னு மூடு இருந்தாதான் கூப்பிடுவேன்,இவனையெல்லாம் முடியவே முடியாது,பேரு சந்தோஷ்தான ,சந்து, பொந்து அப்படின்னு கூப்பிட்டு கொள்கிறேன்”

என்றவள் தான் வரும்போது வாங்கி வந்த ஐஸ்கிரீமை காரில் இருந்து எடுத்து சாப்பிட ஆரம்பித்துவிட்டாள்.

(இந்த கதையில எந்த பொம்பள பிள்ளையும் அடக்கமாவே இருக்க மாட்டாங்க போலப்பா)

முருகன்” பாப்பு” என்று அதட்டவே ,சந்தோஷ் “பரவாயில்ல அப்பா, சந்து எனக்கு ஓகேதான் என்றவனுக்கு உள்ளுக்குள் “அப்பாடா” என்று இருந்தது.

அதன்பின் நாட்கள் ரெக்கை கட்டி பறக்கவே,விஸ்வா சந்தோஷின் நெருங்கிய நண்பன் ஆனான்.

அவர்கள் இருவரும் படிக்கும் கல்லூரி மிகவும் பணகாரர்கள் படிக்கும் கல்லூரி,
தங்கள் பெயருக்கு பின்னால் ஒரு பட்டம் வேண்டும் என்பதால்

படிப்பவர்களும்,கல்லூரி வாழ்கையில் இருக்கும் சந்தோசங்களை அனுபவிக்க படிப்பவர்களும் அதிகம் உள்ள அந்த கல்லூரியில் அவர்களுக்கு இணையாக வசதி,அழகு, என அனைத்து இருந்த போதும் எப்பொழுதும் அடக்கமாக எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல்,பெண்களை திரும்பியும் பார்க்காமல் நல்ல கலரில் ஹிந்தி பட ஹீரோ மாதிரி இருக்கும் தன் நண்பன் விஷ்வாவை அவ்வளவு பிடித்துவிட்டது சந்தோஷிற்கு

(விஷ்வாவை மட்டுமா)

விஷ்வாவை பார்த்ததும்தான் அவனுக்கு சென்னையின் மேலுள்ள தவறான அபிப்பிராயம் மாறியது.நாம் எங்கு இருந்தாலும் நம் குணத்தை தீர்மானிப்பது நம்

வளர்ப்புமுறையும்,தங்கள் சுயஅறிவு மற்றும் சுயகட்டுபாடு என்று .

சந்தோஷ் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவன் காலை பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு தன் அபார்ட்மென்ட்க்கு வந்துவிட்டான்.

எல்லோரிடமும் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகும் விஸ்வா தன்னிடம் மட்டும் அதிக உரிமை எடுத்துக்கொள்வதால் அவனாலும் மறுக்க முடியாமல் ஒத்துக்கொண்டான்,தனக்கு ஆகும் செலவை கொடுத்துவிடுவேன் என்ற நிபத்தனையோடு.

சந்தோஷிற்கு அகலியை சமாளிப்பதுதான் பேரும் பாடாகிப்போனது,காலையில் 2 மணி நேரம்,மாலை நான்கு மணி நேரம் பேசி ,வார விடுமுறைகளில் நேரே சென்று பார்த்து வந்தாலும் அவளின் அழுகையை மாற்ற முடியவில்லை.

“யாரு எனக்கு சாப்பாடு ஊட்டிவிடுவா,யாரு என்னை ஸ்கூல்க்கு அழைச்சிட்டு போவா,யாரு என்கூட கிரிக்கெட் விளையாடுவா ,யாரு எனக்கு பாடம் சொல்லி கொடுப்பா என்று ஒரு நாளைக்கு ஆயிரம் யாரை கேட்டு அவனை கதறவிட்டாள்.

பிறந்தது முதலே இவனோடவே ஒட்டுண்ணியாய் வாழ்ந்தவளுக்கு அவனின் பிரிவு சாமாளிக்க கூடியதாக இல்லை.

சந்தோஷிற்கு அப்படிதான் என்றாலும் அவனின் வயது அவனை கொஞ்சம் முதிர்வுடன் யோசிக்க வைத்தது . அவளோ குழந்தையாகவே யோசித்தாள்.

தான் போனில் பேசும் நேரத்தை அதிகப்படுதியவன் காலையில் எழுவது முதல் எல்லாவற்றையும் அவளிடம் பேசினான் ,அவன் வகுப்பில் நடக்கும் பாடமும் அதில் அடக்கம்.எவ்வளவு பேசினாலும் அவள் பழையபடி “மிஸ் யூ”,புராணத்திலே வந்தாள்.

அப்படி அவன் பேசும் போது விஷ்வாவை பற்றியும் பேசுவான்.அவனை பற்றி பேசும் போது மட்டும் அவளிடம் ஒரு அமைதி வந்து ,சுவாரசியமாக கேட்க ஆரம்பிப்பாள்.அதனால் அவனும் அவனை பற்றி அதிகமாக பேசினான்.

அவனின் நல்ல குணங்கள் என அனைத்தையும் சொன்னான்.

(ஜனனிய பத்தி மட்டும் சொல்ல மாட்டியே ...அதுலெல்லாம் நீ விவரம்டா கருவாயா)

அவன் பேசவிட்டாலும் அவளே “ஏய் அந்த வளர்ந்து கெட்டவன் இன்னைக்கு என்ன பண்ணான்”,எத்தன பேரோட ப்ரோபோசல வேண்டாம் சொன்னான்” என்று கேட்பாள்.

நாட்கள் அதன் போக்கில் போய் கொண்டிருக்க,விஷ்வாவும் ,சந்தோஷும் கடைசி வருடம் படித்துக்கொண்டு இருக்க,ஜனனி இரண்டாம் ஆண்டு மெடிசினும், அகலி முதல் வருட இளநிலையும் படித்துக்கொண்டிருந்தார்கள்.

அதன் பின் சந்தோஷ் ஜனனியை பார்க்கவில்லை என்றாலும் அவளின் முகம் அவன் இதயத்தில் அழகாக பதிந்து போனது.

விதி அவர்களின் வாழ்கையில் விளையாட முதல் காயயை நகர்த்தும் வேலைக்காக கண்கொத்தி பாம்பாக காத்திருந்தது.

வருவாள்....
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12

உன் கடைவிழி காதல் வேண்டும்......
காலம் என்னை கடக்கும் முன்.......

என் நாசி உணரும் உன் வாசம் வேண்டும்.....
வாழ்க்கை என்னை வழுக்கும் முன்....

என் ஊன் உடையும் உன் அணைப்பு வேண்டும்....
எதார்த்தம் என்னை எதிர்கொள்ளும் முன்...

என் இதழ் உணரும் உன் முத்தம் வேண்டும்...
என்னவன் என்று எவனோ வரும்முன்....

என் உச்சம் அடையும் உன் ஸ்பரிசம் வேண்டும்...
என் உறவுகள் என்னை நெறுக்கும் முன்...

தன்னலம் இல்லா உன் தவிப்பு வேண்டும்...
என் தந்தையின் தற்கொலை மிரட்டலுக்கு முன்...

தாசி போலானாலும் உன் தாரம் ஆகவேண்டும் ஒரு நொடி....
என் தாயின் தந்திரத்துக்கு முன்......

ஆம்....

தயாராகிட்டேன்...

இல்லை....இல்லை... தயார் படுத்திவிட்டார்கள்.....

யாருக்கோ...
என்னை தாரைவார்க்க...

இறுதியாக

என் இறுதியாத்திரைக்கு முன்...
இவையனைத்தும் தந்துவிடு.......

வருகிறேன்.....

இல்லை போகிறேன்...

உயிர் உள்ள பிணமாக....

விழி கொண்ட குருடாக.....

வார்த்தைகள் கொண்ட ஊமையாக...

உணர்ச்சி கொண்ட உணர்வாக.......

மல்லிகா அந்த வீடு முழுவதும் சுற்றி சுற்றி ஓட முடியாமல் ஒடிக்கொண்டிருக்க அவரை துரத்திக்கொண்டிருந்தாள் அகலி.

வேலை முடித்துக்கொண்டு காரில் வந்து இறங்கிய முருகன்” பாப்பா ஏன் டா அவளை இப்படி துரத்துற “ என்றார்.

“அப்பா நீங்க அம்மாவை பிடிங்க” என்று அவருக்கு கட்டளை விடுத்தவள் மீண்டும் துரத்த ஆரம்பித்து விட்டாள்.

“இந்த சின்ன புள்ளையோட இதே வேலையா போய்ட்டு, எல்லோரையும் விளையாட்டு புள்ளையா ஆக்கிட்டும்” என்றவர் தன் மனையாளை ஒரு வழியாக பிடித்து அகலியின் கையில் ஒப்படைத்தார்.

காரணம் இதுதான் அகலி பெரிய மனுஷி ஆனதும் அவர் தாம் அணிந்திருந்த கொழுசை கலட்டிவிட்டார்.

இன்னும் சில கிராமங்களில் இந்த முறை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பெண் வயதிற்கு வந்துவிட்டாள் அவர்களின் தாயார் கொலுசு அணிய மாட்டார்கள்,தொங்கும் தோடு அதாவது ஜிமிக்கி , தொங்கல் போன்ற தோடு அணிய மாட்டார்கள், காதோடு இருக்கும் தோடுகளையே அணிவார்கள்.

மேலும் பெண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டாள், தலைமுடியை பின்னி தொங்க விடாமல் கொண்டையாக போட்டு கொள்வது,புடவையை பின் செய்யாமல் வெறும் கொசுவம் மட்டும் வைத்து போட்டுக்கொள்வது என்ற வழக்கம் உள்ளது.

இந்த அநியாயம் அகலிக்கு தெரியவே பொங்கி கொண்டுவந்துவிட்டாள்.அவர் சத்தம் இல்லாத கொலுசு அணிவதால் அவளுக்கு இனம் கண்டுக்கொள்ள முடியவில்லை.

இன்று அவளுக்கு தலைக்கு எண்ணெய் வைத்து தேய்த்து விடும் போது அவள் கண்ணில் படவே போட்டே ஆகவேண்டும் என்று டார்ச்சர் செய்ய கிளம்பிவிட்டாள்.

( எருமமாடு வயசாகுது இன்னும் குழுப்பாட்டிவிட்டுகிட்டு, மூக்கு சிந்திவிட்டுகிட்டு இருங்க)

ஒரு வழியாக மல்லிகாவை மிரட்டி ,உருட்டி, போட வைத்த பின்னே அவரை விட்டார்.

பின் தன் அறைக்கு வந்தவள் சந்தோஷ் தனக்கு புதிதாக வாங்கி கொடுத்த அந்த சாம்சங் j7 மொபைலை எடுத்து அதில உள்ள விஸ்வாவின் போட்டாவை எடுத்து ,மெதுவாக அதை வருடி பார்த்துக்கொண்டிருந்தாள்.

( இது எப்பலேந்து தேனு....சரி இல்லையே)

“ வீர் ஒரு சில மாசத்துலையே ஒருந்தவங்களால இப்படி அவங்கதான் மற்றவங்களோட உலகமா மாற்ற வைக்க முடியுமா? அதுவும் ஒரு வார்த்தை பேசாம....?

ஆனால் நீ என்னை மாத்திவச்சிட்டியே எப்படி,சாதரண ஸைச விட கொஞ்சம் பெருசா இருக்குற உன் முட்ட கண்ணா?

இல்லை ஓங்கு தங்கானா உன் உயரமா,இல்லை தும்ப பூ மாறி இருக்குற உன் நிறமா, இல்லை இப்ப கொஞ்ச நாளா வச்சிருக்குற இந்த அழகான மீசையும், இந்த தாடியுமா....?

இல்லை நீ எந்த பொண்ணுங்களையும், நிமிர்ந்து கூட பார்க்க மாட்டியாமே அதனாலயா?

(ஹா ஹா கவலை படாத பாப்பா அவன் உன்னையுமே பார்க்க மாட்டான்.....)

இல்லை எனக்கு பிடிக்கிற பானி பூரி உனக்கும் ரொம்ப புடிக்குமே அதனாலயா?

( கண்டிப்பா இந்த காரணமாதான் இருக்கும், மேலே நீ சொன்ன மத்த காரணத்திருக்கும் உனக்கும் சம்மந்தமே இல்லை,10th படிக்கும் போதே பானி பூரி கடை வச்சிருக்கவன கல்யாணம் பண்ணி கேட்டவ தான நீ)

அவன் தன்னவனை உணர்ந்து கொண்ட தருணத்தை நோக்கி பயணம் ஆனது அவள் நினைவுகள்.

( உனக்கு இப்படி இப்படி கவிதை தனமால்லாம் பிளஷபக் கிடையாது ஓடி போ..)

அந்த கேவலமான தருணத்தை நோக்கி பயணமானது அவள் நினைவுகள்...

தங்கள் பக்கத்து வீட்டு வசந்தி அக்கா 2 மாதங்களுக்கு முன்தான் திருமணம் ஆனவள் ,தன் பிறந்த வீட்டிற்கு வந்தவள் திரும்பி போகவே இல்லை.

அவர்கள் வீட்டு குட்டி பசங்களோடு விளையாட சென்று இருந்த அகலி அழுதுக்கொண்டிருந்த வசந்தியின் அருகில் அமர்ந்து கொண்டு

“ ஏன் அக்கா அழுகுற” என்று தட்டாங்காய் விளையாண்டு கொண்டே கேட்டுக்கொண்டிருந்தாள்,

வசந்தி” அதை ஏன் டி கேட்கிற நான் கட்டிக்கிட்டு போனவன் சரியான சந்தேக பிராணியா இருக்கான், எந்த ஆம்பிளை கூட பேசுனாலும் சந்தேகப்பட்டு அவங்க கூட சேர்த்து வைத்து பேசுறான்.

என் வீட்டுக்கு வந்த ஒண்ணுவிட்ட அண்ணன்ட பேசுனத்துக்கு சண்டை போட்டு ,என் மண்டைய ஓடச்சி அனுப்பிட்டான்,

எனக்கே இந்த நிலமைனா உன்னையும் சந்தோசையும் யோசிச்சி பாரு,நீ அவன் இல்லாம அரை நிமிஷம் கூட இருக்க மாட்ட,என்னதான் உன் குடும்பத்துக்கு நீங்க ஒண்ணுனாலும் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நீங்க சொந்தம் பந்தம் கூட இல்லாதவங்கதான , நீ சந்தோஷிடம் பேசுவதை குறைத்து கொள் “

(உன் புருஷன் மாறி எல்லோருமே கேவலமா இருப்பங்காளா, அதும் இந்த மெண்டல்ட போய் சொல்றியே, அவள் ஹெவியா யோசித்து ரொம்ப கேவலமா ஏதும் செய்ய போறாள்)

என்று அட்வைஸ் செய்கிறேன் பேர்வழி என்று அந்த அரை லூசை ,முழு லூசாக்கிவிட்டு சென்றாள் வசந்தி.

சந்தோஷிடம் பேசுவதை குறைத்துக்கொள் என்றதுமே இவளுக்கு கண்களில் கண்ணீர் குளமாக வந்து விட

இதுவரை அப்படி யோசிக்காத அகலிக்கு என்ன செய்யவதென்று புரியாமல் “ என் சந்தோஷிடம் பேச வேண்டாம்னு சொல்ற யாரும் எனக்கு வேண்டாம்,எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று முருக்கிக்கொண்டிருக்க

“உன் வீட்டார்கள் கண்டிப்பாக உன்னை அப்படியே விட மாட்டார்கள் “ என்று அவளை விட கொஞ்சம் மெச்சுரிட்டு அதிகம் உள்ள அவள் மனசாட்சி அவளுக்கு அறிவுரை செய்ய ,மீண்டும் உட்கார்ந்து பலமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

சந்தோஷிடம் ஒரு போன் செய்து கேட்டால் அவன் ஒரே வரியில் “ என் தேனுக்குட்டியை உள்ளங்கையில் வைத்து தாங்கும் குணத்திலும்,அழகிலும் என எல்லாவற்றிலும் உயர்ந்தவன்தான் வருவான்” என்றும் ,

அதற்கு நடமாடும் எடுத்துக்காட்ட்டாய் விளங்கும் தன் நண்பன் விஸ்வாவை பரிந்துரை செய்வதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் வீட்டில் பேசி அதை பெரியவர்கள் நிச்சயிக்க பட்ட திருமணமாகவும் மாற்றி இருப்பான்.

( அது நடந்திருந்தால் விதிக்கும் எனக்கும் வேலை இல்லாமல் போய்விடும் என்பதால் இந்த அகலி லூசை வைத்து ஏதாவது வித்தியாசமாய் ட்ரை பண்ணலாம்னு இருக்கோம்)

ஆனால் அகலியோ ” நாமே இவளோ கஷ்டப்படுறோம் கருவாயன் இன்னும் ரொம்ப கஷ்டப்படுவான்” என்று இவளை போலவே அந்த தெளிந்த அறிவுடைய சந்தோஷையும் அரை லூசாக நினைத்து அவனிடம் சொல்லவில்லை.

ஒரு வாரம் சாப்பிடாமல் தூங்காமல் அவள் இதற்கு கண்டுபிடித்த வழிதான் தன்னையும் சந்தோசையும் புரிந்து கொண்ட தங்கள் உறவில் உள்ள தூய்மையான பாசத்தை புரிந்து கொள்பவனை தான் கல்யாணம் செய்து கொண்டாள் எதுவும் பிரச்சனை இல்லை என்பதுதான்.

( இதை கண்டுபிடிக்க உனக்கு ஒரு வாரம் ஆகி இருக்கு....உன்னை லூசு லிஸ்டில் சேர்க்குறதா,இல்லை வளர்ந்த குழந்தை லிஸ்ட்ல சேர்க்குறதா எனக்கு தெரியல, என் ரீடர்ஸ்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்)

இந்த முடிவை எடுத்தவுடன் அவள் மனதில் மின்னலென வந்து போனது தாடி மீசை இல்லாமல் சந்தோஷின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் விஸ்வாதான்.

எந்த மறுபருசீலனையும் இல்லாமல் அவனை தான் கல்யாணம் செய்து கொள்ள போகிறோம் என்று முடிவு செய்தவள் அவன் போட்டாவை எடுத்து ஆராய ஆரம்பித்தாள்.

( டேய் விஸ்வா உன் லவ் பிளாஷ்பேக் இவளோ கேவலமா இருக்கு.....)

எப்பொழுதும் அவனை பற்றி சந்தோஷிடம் பேசும் போதும்,கேட்கும் போதும் நேரம் கடப்பதே தெரியாமல் இருப்பதும், ஜாலியாக இருப்பதற்கும் ஏனோ அவளின் மனம் வேறு ஒரு பெயரை கொடுத்தது அதுதான் நிறைவு,இனம் புரியாது இன்பம் என்று....

ஒருவேளை சந்தோஷக்காக இல்லாமல் வேறு யாரோ ஒருவன் தன் வாழ்வில் என்று யோசிக்கும் போது கூட தான் வீரை தான் டிக் செய்திருப்போமோ என்று அவள் மனம் யோசிக்க அதற்கு அவள் பதில் ஆமென்று இருக்க,
அவள் இன்பமாக அவனை தனக்குள் நிரப்ப ஆரம்பித்தாள்.

எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல் தன் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை என்று ஒரு ஒரு அடையாளத்தோடு நிச்சயம் முடிந்ததும் “ மாப்பிள்ளையிடம் பேசு மா” என்று

தன் தந்தை கொடுக்கும் போன் நம்பரை “இது வேற இம்சயா இருக்கே “ என்று கடமைக்கு பேச ஆரம்பிக்கும் பெண்கள் கல்யாணத்திற்குள் அவன் தான் தன் உலகம், என்று காலம் மாற்றுவதை போல

அகலியின் மனதில் ஒவ்வொரு நாள் கடக்க கடக்க விஸ்வாவின் மேலான காதல் இருக்க இடம் இல்லாமல் நிரம்பி வழிந்தது.

அதுவும் சந்தோஷ் அன்று சொன்ன ஒரு விஷயத்தில் மழைக்காலத்தில் ஏறும் தக்காளி விலை போல் ஏறிப்போனது அவன் மீதான காதல்.

அது என்னவென்றால் “ அவனின் கல்லூரியில் படிக்கும் பெண் தன் காதலனுடன் சற்று எல்லை மீறி பழகி இருக்க அதை அவன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்ததோடு மட்டும் இல்லாமல் அதை காட்டி தன் நண்பர்களோடும் அவளை தவறாக இருக்க வேண்டும் என்று மிரட்டவே

விஸ்வாவின் நல்ல குணம் தப்பை தட்டி கேட்க்கும் தைரியம் அனைவருக்கும் தெரியும் என்பதால் அந்த பாதிக்க பட்ட பெண் அவனிடம் கூறவே

விஸ்வா “உங்க காதலன் மேல நீங்க வச்சிருக்குற காதல,நம்பிக்கையை இப்படித்தான் நீங்க காட்டனும்ன்ற அவசியம் இல்லை உங்கள் பெண்மை நீங்க உங்க கணவனுக்கு கொடுக்க வேண்டிய உன்னதமான பரிசு,அது உங்கள் உயிரை விட மேலான காதலனா இருந்தாலும் அவன் கணவனா ஆனதும் தான் கொடுக்கணும் “ என்று அந்த பெண்ணுக்கும் ஒரு கொட்டு வைத்தவன்

அந்த பையனை பிடித்து அவனிடம் உள்ள ஆதாரங்களை அழித்துவிட்டு இன்னும் 2 வருடங்களுக்கு அவனால் எழுந்த நடமாட முடியாத அளவிற்கு அவனை ஹாஸ்பிட்டலில் படுக்க போட்டுவிட்டு தான் ஓய்ந்தான்.

அடிப்பட்ட பையனின் பெற்றோர்கள் போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்கவே விஸ்வா கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டான்.

உண்மையான காரணத்தை சொன்னால் உடனே பெயில் கிடைத்து விடும் என்று வக்கீல் எவ்வளவு எடுத்து சொல்லியும் அவன் மறுத்து 20 நாட்கள் கழித்தே வெளியே வந்தான் என்பதாகவும்.

அதை கேட்டதும் அகலி ஏதோ அவளே செய்தது போல் பூரித்து போனாள்.

தனக்கு பிடித்தவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட நமக்கு மலையளவு பெரிதாக தெரிய ,

பெரிய பெரிய விஷயங்களை அசால்ட்டாக செய்யும் தன்னவனை நிரம்ப பிடித்துவிட்டது அகலிக்கு.

இவை அனைத்தையும் நினைத்து பார்த்துக்கொண்டு அவன் போட்டாவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அகலி அவன் நிழலிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

இன்னும் 2 வருஷம் தான் வீர் அதுக்கு அப்பறம் இந்த அகலியோட ஆக்சன் பார்ப்ப, எல்லோரோட லவ்வையும் மாறி என் காதலையும் அசால்டா வேண்டாம் சொல்லலாம்னு நினைக்காத
என் காதல் ஆக்டொபஸ் மாதிரி நாலு பக்கமும் உன்னை நகர விடாம இழுத்து எனக்குள்ள சுருட்டு வச்சிக்கும் என வீர வசனம் பேசியவள்.

பூஜை அறையில் உள்ள சிவனிடம் வந்து கெஞ்சிக்கொண்டிருந்தால்” எப்படியாவது வீருக்கு என்னை பிடிக்க வச்சிடு பிளீஸ், நீ இருக்குற தைரியத்தில் அவன்கிட்ட நான் ரொம்ப வீராப்ப பேசிட்டு வந்துட்டேன்” ,

( அதானே பார்த்தேன் அகலி பாப்பா இவளோ சீரியஸா பேசுற ஆள் இல்லையே இவரை நம்பிய நீ இருக்க இவரு நல்ல சோதி சோதின்னு சோதிச்சிட்டுதான நல்லது செய்வாரு)

நான் வேணுன்னா எங்க ஊருல இருக்க உன் வீட்டுக்கு

(அது வீடாம்மா உனக்கு அது கோவில் எங்க சொல்லு பார்ப்போம் கோவில்)

வந்து டெய்லி சுத்தம் பண்ணி வைக்கிறேன்,அப்பறம் அங்க உள்ள சிவனடியார்களுக்கு சாப்பாடு கொடுக்கிறேன் என்றவள் சிவனிடம் எந்த ரிஃப்ளெயும் இல்லாமல் போகவே

அவள் சோகத்துடன் முகத்தை வைத்துக்கொண்டு “ சரி உன் பசங்க விநாயகர், முருகன் வீட்டுக்கும் அதே மாறி பன்றேன் “ என்றாள்.

இந்த டீல் அவருக்கு பிடித்து போகவே அவர் குஷியாகி தன் மாலையில் உள்ள ஒரு மலரை சம்மதம் போல் கீழே உதிர்த்தார்

( இவள் கும்பிடும் கடவுளும் இவளை மாறியே பப்பியா இருக்கே)

அதில் சந்தோசம் அடைந்த அகலி சிவனின் போட்டாவை தூக்கி இரண்டு சுற்று சுற்றியவள் காமாட்சியின் “ பாப்பா சாமி போட்டாவை அப்படியெல்லாம் பண்ண கூடாது” என்ற குரலில்

“ அப்படியா அப்பத்தா “என்றவள் போட்டாவை கீழே வைத்துவிட்டு அவரின் கையை பிடித்துக்கொண்டு அவருக்கு மயக்கம் வரும் வரை சுற்றி விட்டு டோராவிற்கு உதவி செய்ய டோராவின் பயணங்கள் பார்க்க சென்றதோடு மட்டும் இல்லாமல்

டீவியை பரர்ப்பவள் “குள்ளநரி திருடக்கூடாது, குள்ளநரி திருடக்கூடாது என்றும், டோராவுடன் சேர்ந்து ஒன்று, இரண்டு என்று எண்ணிக்கொண்டிருந்தாள் பக்கத்துவீட்டு குட்டி பசங்களோடு சேர்ந்து

( இந்த ஜென்மத்தில நீ விஸ்வாவை நீ கரெக்ட் பண்ண முடியாது சோ.... சேட், )

சென்னையில்

ஒரு முக்கியமான வேலை விஷயமாக கண்ணன், விஸ்வா,முருகன் அனைவரும் அவர்களின் பூர்வீக ஊருக்கு சென்று இருக்க
விஸ்வா இல்லாமல் சந்தோஸ் மட்டும் இருக்க தன் தேனுக்குட்டியிடம் பேசி முடித்துவிட்டு அசதியாக ஹாலில் டிவி பார்த்தித்துக்கொண்டிருக்க ஹாலிங் பெல் அடிக்க சென்று கதவை திறந்தவன் அதிர்ந்து விட்டான்.

அங்கே அவனின் குண்டு தக்காளி ஆலிவ் பச்சை நிற டாப், வெள்ளை நிற சால் மற்றும் ,பேண்ட் அணிந்து கொண்டு பெரிய படிப்பாளி என்பதற்கு அடையாளமாய் கண்ணில் ஒரு பவர் கிளாசுடன் தென்பட்டாள்.

3 வருட இடைவெளியில் நன்று பொசு பொசுவென்று வளர்ந்து தன் காதலுக்கும் தன் இளமைக்கும் பெரிய சோதனையாக வந்து எதிரில் நின்றவளை விழி அகலாமல் பார்த்துக்கொண்டிருந்தான்

( mr. காருவாயன் நீங்க விடுற ஜொள்ளு மழையில் இங்க முட்டிக்கால் வரை ஒரே தண்ணீர்)

அவளை உள்ளே அழைக்க கூட தோன்றாமல் நின்றவனை இடித்து கொண்டே உள்ளே நுழைந்தவள் “ ஹாய் சந்து எப்படி இருக்க” என்று பல நாள் பழகியவள் போல் பேச

அதில் தன்னுணர்வு அடைந்தவன் “ ஹாய் குண்டு என்று சொல்ல வந்தவன் அப்படியே அதை முழுங்கி ஜனனி எப்படி இருக்க ,விச்சு இல்லையே” அவள் தன் அண்ணனை தான் பார்க்க வந்திருப்பாள் என்று நினைத்துக்கொண்டு சொன்னான்.

தெரியும் என்று சொன்னனவள் “ நான் உன்னை பார்க்க தான் வந்தேன்,என்றவள் மேலும்

“ இன்னும் 4 வருஷம் டைம் தான் உனக்கு அதுக்குள்ள நான் மெடிஸின் முடிச்சிட்டி 1 வருஷம் பிராக்டிசும் முடிச்சிடுவேன்..

அதுக்குள்ள உனக்குன்னு ஏதும் எய்ம்,கடமை இருந்த அதையெல்லாம் முடிச்சிக்கோ,அதுக்கு அப்புறம் நான் விச்சுகிட்ட சொல்லி எங்க வீட்ல பேர்மிஸ்ஸன் வாங்கிக்கிறேன்,அதுக்கு அப்பறம் நீ அத்தை மாமாலாம் அழைச்சிட்டு வந்து எங்க வீட்டுல பேசு.

கல்யாணத்துக்கு அப்பறம் சென்னைனாலும் எனக்கு பிரச்சனை இல்லை,உங்க ஊருனாலும் எனக்கு பிரச்சனை இல்லை ஊருல இருக்கணும்னா எனக்கு அடிப்படை வசதியுள்ள ஒரு குட்டி ஹாஸ்பிடல் கட்டி கொடுத்துடு,

அப்பறம் ஹாஸ்பிடல் எதும் வருமானம்லாம் என்னிடம் எதிர்பார்க்க கூடாது ஏன்னா அங்க இலவச மருத்துவம்தான் நான் பண்ண போறேன்,

அப்பறம் எனக்கு 2 பையன் அதுவும் உன்னை மாறி கருப்பாதான் வேண்டும்” என்று முடித்தவள்

( அட கொக்க மக்க என்ன ஒரு கோணங்கி தனம் )

ஒரே சாட்டில் அவனை அதிர வைத்து தன்னை சில வருடங்களாக இரவில் தூங்க விடாமல் செய்யும் அன்று அவன் பார்த்த ஆழப்பார்வைக்கு தண்டனை கொடுத்து நியாயம் செய்துவிட்டவள் போல நிம்மதியுடன்

“நான் வருகிறேன்” கிளம்பிவிட்டாள்,அவள் பேச்சில் ஆடிபோய் இருந்தவன்

( பாவம் இந்த கதையில வர பசங்க 2 பேரும்)

அவள் கதவை திறக்கும் சத்தத்தில் வேகமாக அவள் கையை பிடித்து நிறுத்தி

“ நான்...நான் உன்னை லவ் பன்றேன்னு உனக்கு எப்படி தெரியும்” என்றான்.

அவளுக்கும் இது வரை இருந்த தைரியம் காணாமல் போக மெதுவாக “ அது நீ அன்னைக்கு பார்த்த பார்வையிலே வித்தியாசம் எனக்கு தெரிஞ்சது ,அப்ப எனக்கு புரியலனாலும் தினம் தூங்கும் போது நீ பார்த்த பார்வை தான் என்னை அதை செல்லும் செய்தியை ஆராய சொன்னது,

அதை பத்தி அதிகமா யோசித்து என்னை அறியாமல் உன்னை அதிகமா நினைக்க ஆரம்பிச்சிட்டேன் ,,நான் பர்ஸ்ட் இயர் முடிக்கும் போதுதான் அந்த பார்வைக்கான அர்த்தம் புரிந்தது” என்று சொன்னவளின் முகம் சிவக்க

அப்பறம் இந்த ஒரு வருஷமும் நீ வருவ வருவ வந்து என்னை மீட் பண்ணி பேசுவ அப்படின்னு வைட் பண்ணேன் ஆனால் நீ வரல,நான்தான் தப்பா புரிஞ்சிகிட்டனோன்னு உன்னை நேரில பார்த்த ஒரு தெளிவு கிடைக்கும்னு வந்தேன்,

நீ கதவை திறக்கும் போது பார்த்த பார்வையில தைரியம் வந்து என் மனசுல உள்ளதை எல்லாத்தையும் சொல்லிட்டேன் “ என்று தலையை குனிந்து கொண்டே சொன்னவள்

கடைசியாக “உடனே நான் உன்னை லவ் பன்றேன்னு நினைக்காத பிளாக் அண்ட் வைட் காம்பினேஷன் நல்லா இருக்கும்னு என் பிரண்ட்ஸ் சொன்னாங்க,அதனால தான் போனா போகுதுன்னு உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கிறேன்” என்றாள்.

சந்தோஷின் நிலையே சொல்ல முடியாத சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தது. தான் ஒரு துரும்பை கூட கிள்ளி போடாமல் தான் அன்று பார்த்த ஒரு பார்வையை அடிப்படையாய் வைத்துக்கொண்டு தன்னை தன் காதலை க்வுரவ படுத்திய தன் குண்டு தக்காளியை அப்படியே ஜுஸ் போட்டு குடிக்கும் அளவிற்க்கு ஆசையும் காதலும் போட்டி போட

ஏதேதோ வேண்ட வேண்டும் என்று கோவிலுக்குள் செல்லும் போது அங்கே உள்ள அமைதியும் ,அந்த வாசைனையும் ,அலங்கரிக்கப்பட்ட சாமி சிலையையும் பார்த்து மெய் மறந்து கைகளை மட்டும் கூப்பிக்கொண்டே மணிக்கணக்கில் சாமியை பார்த்துவிட்டு அந்த சொல்ல முடியாத உணர்வை அனுபவித்து விட்டு வருவோமே அதுபோல

அவள் காதல் கொடுத்த நிரம்ப சந்தோசத்தில் அவனுக்கு எதுவும் தோன்றவில்லை..

அவள் கைகளை அவன் பிடித்த அழுத்தமே அவள் வார்த்தைகளால் சொன்ன அத்தனை வார்த்தைகளை விட அதிக செய்திகளை அவளுக்கு நொடியில் உணர்த்த அது கொடுத்த சுகத்தில் அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டாள்.

அவனும் அவளின் காலுக்கு கீழே அமர்ந்து அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

நேரம் ஆக ஆக அவனிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே அவன் பார்வை வேறு புது அவஸ்தயை கொடுக்க “ சந்தோஷ் நான் போகணும்” என்றாள்.

“ம்ம்ம் சரி “ என்று சொன்னவனின் குரலில் அப்படி ஒரு கரகரப்பு

அவன் பிடித்து கொண்டிருந்த அந்த கையை பார்த்தவள் “ ஒரு முத்தம் கூட கொடுக்க மாட்டான் போலவே” என்று நினைத்து கைய உருவிக்கொள்ள

( ஜானு நீ இந்த விஷயத்துல கொஞ்சம் வீக் டா, இதே அகலினா பச்சக்குன்னு முத்தம் கொடுத்துட்டு பத்தடி தள்ளி போய் பளிப்பு காட்டிருப்பாள்).

அவளின் எண்ணம் உணர்ந்து சிறு சிரிப்புடன் அவள் உருவிய கையை பிடித்து அழுத்தி முத்தம் கொடுத்தவன்,

“மீதம் எல்லாம் என் தகுதியை நான் உயர்த்திகிட்டதுக்கு அப்பறம், நான் இப்ப உங்க அண்ணன்ட கேட்ட அவனோட நண்பன் அப்படிங்கிற காரணத்துக்காக உடனே எனக்கு உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்க சரி சொல்லிடுவான்.

ஆனால்” சந்தோஷ்ன்ற தனிமனிதன் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் என் தனி அடையயாளத்தோடு வந்து கேட்டாலும் எனக்காக மட்டும் உன்னை கொடுக்கணும் ,அதனால நானா சொல்ற வரை நீ உங்க அண்ணனிடம் சொல்லிகாத” என்றான்.

என்னதான் தானும் வசதி என்றாலும் ஜனனி அளவிற்க்கா என்றால் நிச்சயமாக இல்லை, அதனால் தான் தன் சுய தகுதியை உயர்த்திக்கொள்ள கொஞ்சம் கால அவகாசம் கேட்டான்.

தன்னவனின் தன்மானம் கண்டு கலங்கிய கண்களுடன் சரி என்று சொன்னாள் ஜனனி.
ஜனனியிடம் பேசும் போதெல்லாம் தன் நண்பனுக்கு துரோகம் செய்கிறோமோ என்று அவனுக்கு உருத்த

அவர்கள் இருவரும் பார்த்துக்கொள்வது , பேசிக்கொள்வது எல்லாமே மிக மிக கம்மி என்ற போதும் அவர்கள் காதல்,நம்பிக்கை,நேசம் எல்லாம் மலையளவு உயர்ந்தே இருந்தது.

அகலி அங்கே விஸ்வாவின் நிழலோடு காதல் செய்ய தன்னவள் அருகில் இருந்தும் கனவோடு காதல் செய்து கொண்டிருந்தான் சந்தோஷ்.

நாட்கள் அதன் போக்கில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்க இன்னும் இரண்டு நாட்களில் வைவா என்ற நிலையில்
ஓங்கி அடித்த அதிர்வின் காரணமாக உதடு கிழிந்து ரத்தம் வர ரீனா அவமானத்தோடு கீழே விழுந்து கிடக்க

கோபத்தால் உடம்பெல்லாம் செந்தனாலக கொதிக்க தன் நெற்றிக்கண்ணை திறந்த படி நின்று இருந்தான் விஷவேந்திரன்.


வருவாள்
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12

உன் கடைவிழி காதல் வேண்டும்......
காலம் என்னை கடக்கும் முன்.......

என் நாசி உணரும் உன் வாசம் வேண்டும்.....
வாழ்க்கை என்னை வழுக்கும் முன்....

என் ஊன் உடையும் உன் அணைப்பு வேண்டும்....
எதார்த்தம் என்னை எதிர்கொள்ளும் முன்...

என் இதழ் உணரும் உன் முத்தம் வேண்டும்...
என்னவன் என்று எவனோ வரும்முன்....

என் உச்சம் அடையும் உன் ஸ்பரிசம் வேண்டும்...
என் உறவுகள் என்னை நெறுக்கும் முன்...

தன்னலம் இல்லா உன் தவிப்பு வேண்டும்...
என் தந்தையின் தற்கொலை மிரட்டலுக்கு முன்...

தாசி போலானாலும் உன் தாரம் ஆகவேண்டும் ஒரு நொடி....
என் தாயின் தந்திரத்துக்கு முன்......

ஆம்....

தயாராகிட்டேன்...

இல்லை....இல்லை... தயார் படுத்திவிட்டார்கள்.....

யாருக்கோ...
என்னை தாரைவார்க்க...

இறுதியாக

என் இறுதியாத்திரைக்கு முன்...
இவையனைத்தும் தந்துவிடு.......

வருகிறேன்.....

இல்லை போகிறேன்...

உயிர் உள்ள பிணமாக....

விழி கொண்ட குருடாக.....

வார்த்தைகள் கொண்ட ஊமையாக...

உணர்ச்சி கொண்ட உணர்வாக.......

மல்லிகா அந்த வீடு முழுவதும் சுற்றி சுற்றி ஓட முடியாமல் ஒடிக்கொண்டிருக்க அவரை துரத்திக்கொண்டிருந்தாள் அகலி.

வேலை முடித்துக்கொண்டு காரில் வந்து இறங்கிய முருகன்” பாப்பா ஏன் டா அவளை இப்படி துரத்துற “ என்றார்.

“அப்பா நீங்க அம்மாவை பிடிங்க” என்று அவருக்கு கட்டளை விடுத்தவள் மீண்டும் துரத்த ஆரம்பித்து விட்டாள்.

“இந்த சின்ன புள்ளையோட இதே வேலையா போய்ட்டு, எல்லோரையும் விளையாட்டு புள்ளையா ஆக்கிட்டும்” என்றவர் தன் மனையாளை ஒரு வழியாக பிடித்து அகலியின் கையில் ஒப்படைத்தார்.

காரணம் இதுதான் அகலி பெரிய மனுஷி ஆனதும் அவர் தாம் அணிந்திருந்த கொழுசை கலட்டிவிட்டார்.

இன்னும் சில கிராமங்களில் இந்த முறை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பெண் வயதிற்கு வந்துவிட்டாள் அவர்களின் தாயார் கொலுசு அணிய மாட்டார்கள்,தொங்கும் தோடு அதாவது ஜிமிக்கி , தொங்கல் போன்ற தோடு அணிய மாட்டார்கள், காதோடு இருக்கும் தோடுகளையே அணிவார்கள்.

மேலும் பெண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டாள், தலைமுடியை பின்னி தொங்க விடாமல் கொண்டையாக போட்டு கொள்வது,புடவையை பின் செய்யாமல் வெறும் கொசுவம் மட்டும் வைத்து போட்டுக்கொள்வது என்ற வழக்கம் உள்ளது.

இந்த அநியாயம் அகலிக்கு தெரியவே பொங்கி கொண்டுவந்துவிட்டாள்.அவர் சத்தம் இல்லாத கொலுசு அணிவதால் அவளுக்கு இனம் கண்டுக்கொள்ள முடியவில்லை.

இன்று அவளுக்கு தலைக்கு எண்ணெய் வைத்து தேய்த்து விடும் போது அவள் கண்ணில் படவே போட்டே ஆகவேண்டும் என்று டார்ச்சர் செய்ய கிளம்பிவிட்டாள்.

( எருமமாடு வயசாகுது இன்னும் குழுப்பாட்டிவிட்டுகிட்டு, மூக்கு சிந்திவிட்டுகிட்டு இருங்க)

ஒரு வழியாக மல்லிகாவை மிரட்டி ,உருட்டி, போட வைத்த பின்னே அவரை விட்டார்.

பின் தன் அறைக்கு வந்தவள் சந்தோஷ் தனக்கு புதிதாக வாங்கி கொடுத்த அந்த சாம்சங் j7 மொபைலை எடுத்து அதில உள்ள விஸ்வாவின் போட்டாவை எடுத்து ,மெதுவாக அதை வருடி பார்த்துக்கொண்டிருந்தாள்.

( இது எப்பலேந்து தேனு....சரி இல்லையே)

“ வீர் ஒரு சில மாசத்துலையே ஒருந்தவங்களால இப்படி அவங்கதான் மற்றவங்களோட உலகமா மாற்ற வைக்க முடியுமா? அதுவும் ஒரு வார்த்தை பேசாம....?

ஆனால் நீ என்னை மாத்திவச்சிட்டியே எப்படி,சாதரண ஸைச விட கொஞ்சம் பெருசா இருக்குற உன் முட்ட கண்ணா?

இல்லை ஓங்கு தங்கானா உன் உயரமா,இல்லை தும்ப பூ மாறி இருக்குற உன் நிறமா, இல்லை இப்ப கொஞ்ச நாளா வச்சிருக்குற இந்த அழகான மீசையும், இந்த தாடியுமா....?

இல்லை நீ எந்த பொண்ணுங்களையும், நிமிர்ந்து கூட பார்க்க மாட்டியாமே அதனாலயா?

(ஹா ஹா கவலை படாத பாப்பா அவன் உன்னையுமே பார்க்க மாட்டான்.....)

இல்லை எனக்கு பிடிக்கிற பானி பூரி உனக்கும் ரொம்ப புடிக்குமே அதனாலயா?

( கண்டிப்பா இந்த காரணமாதான் இருக்கும், மேலே நீ சொன்ன மத்த காரணத்திருக்கும் உனக்கும் சம்மந்தமே இல்லை,10th படிக்கும் போதே பானி பூரி கடை வச்சிருக்கவன கல்யாணம் பண்ணி கேட்டவ தான நீ)

அவன் தன்னவனை உணர்ந்து கொண்ட தருணத்தை நோக்கி பயணம் ஆனது அவள் நினைவுகள்.

( உனக்கு இப்படி இப்படி கவிதை தனமால்லாம் பிளஷபக் கிடையாது ஓடி போ..)

அந்த கேவலமான தருணத்தை நோக்கி பயணமானது அவள் நினைவுகள்...

தங்கள் பக்கத்து வீட்டு வசந்தி அக்கா 2 மாதங்களுக்கு முன்தான் திருமணம் ஆனவள் ,தன் பிறந்த வீட்டிற்கு வந்தவள் திரும்பி போகவே இல்லை.

அவர்கள் வீட்டு குட்டி பசங்களோடு விளையாட சென்று இருந்த அகலி அழுதுக்கொண்டிருந்த வசந்தியின் அருகில் அமர்ந்து கொண்டு

“ ஏன் அக்கா அழுகுற” என்று தட்டாங்காய் விளையாண்டு கொண்டே கேட்டுக்கொண்டிருந்தாள்,

வசந்தி” அதை ஏன் டி கேட்கிற நான் கட்டிக்கிட்டு போனவன் சரியான சந்தேக பிராணியா இருக்கான், எந்த ஆம்பிளை கூட பேசுனாலும் சந்தேகப்பட்டு அவங்க கூட சேர்த்து வைத்து பேசுறான்.

என் வீட்டுக்கு வந்த ஒண்ணுவிட்ட அண்ணன்ட பேசுனத்துக்கு சண்டை போட்டு ,என் மண்டைய ஓடச்சி அனுப்பிட்டான்,

எனக்கே இந்த நிலமைனா உன்னையும் சந்தோசையும் யோசிச்சி பாரு,நீ அவன் இல்லாம அரை நிமிஷம் கூட இருக்க மாட்ட,என்னதான் உன் குடும்பத்துக்கு நீங்க ஒண்ணுனாலும் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு நீங்க சொந்தம் பந்தம் கூட இல்லாதவங்கதான , நீ சந்தோஷிடம் பேசுவதை குறைத்து கொள் “

(உன் புருஷன் மாறி எல்லோருமே கேவலமா இருப்பங்காளா, அதும் இந்த மெண்டல்ட போய் சொல்றியே, அவள் ஹெவியா யோசித்து ரொம்ப கேவலமா ஏதும் செய்ய போறாள்)

என்று அட்வைஸ் செய்கிறேன் பேர்வழி என்று அந்த அரை லூசை ,முழு லூசாக்கிவிட்டு சென்றாள் வசந்தி.

சந்தோஷிடம் பேசுவதை குறைத்துக்கொள் என்றதுமே இவளுக்கு கண்களில் கண்ணீர் குளமாக வந்து விட

இதுவரை அப்படி யோசிக்காத அகலிக்கு என்ன செய்யவதென்று புரியாமல் “ என் சந்தோஷிடம் பேச வேண்டாம்னு சொல்ற யாரும் எனக்கு வேண்டாம்,எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று முருக்கிக்கொண்டிருக்க

“உன் வீட்டார்கள் கண்டிப்பாக உன்னை அப்படியே விட மாட்டார்கள் “ என்று அவளை விட கொஞ்சம் மெச்சுரிட்டு அதிகம் உள்ள அவள் மனசாட்சி அவளுக்கு அறிவுரை செய்ய ,மீண்டும் உட்கார்ந்து பலமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

சந்தோஷிடம் ஒரு போன் செய்து கேட்டால் அவன் ஒரே வரியில் “ என் தேனுக்குட்டியை உள்ளங்கையில் வைத்து தாங்கும் குணத்திலும்,அழகிலும் என எல்லாவற்றிலும் உயர்ந்தவன்தான் வருவான்” என்றும் ,

அதற்கு நடமாடும் எடுத்துக்காட்ட்டாய் விளங்கும் தன் நண்பன் விஸ்வாவை பரிந்துரை செய்வதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் வீட்டில் பேசி அதை பெரியவர்கள் நிச்சயிக்க பட்ட திருமணமாகவும் மாற்றி இருப்பான்.

( அது நடந்திருந்தால் விதிக்கும் எனக்கும் வேலை இல்லாமல் போய்விடும் என்பதால் இந்த அகலி லூசை வைத்து ஏதாவது வித்தியாசமாய் ட்ரை பண்ணலாம்னு இருக்கோம்)

ஆனால் அகலியோ ” நாமே இவளோ கஷ்டப்படுறோம் கருவாயன் இன்னும் ரொம்ப கஷ்டப்படுவான்” என்று இவளை போலவே அந்த தெளிந்த அறிவுடைய சந்தோஷையும் அரை லூசாக நினைத்து அவனிடம் சொல்லவில்லை.

ஒரு வாரம் சாப்பிடாமல் தூங்காமல் அவள் இதற்கு கண்டுபிடித்த வழிதான் தன்னையும் சந்தோசையும் புரிந்து கொண்ட தங்கள் உறவில் உள்ள தூய்மையான பாசத்தை புரிந்து கொள்பவனை தான் கல்யாணம் செய்து கொண்டாள் எதுவும் பிரச்சனை இல்லை என்பதுதான்.

( இதை கண்டுபிடிக்க உனக்கு ஒரு வாரம் ஆகி இருக்கு....உன்னை லூசு லிஸ்டில் சேர்க்குறதா,இல்லை வளர்ந்த குழந்தை லிஸ்ட்ல சேர்க்குறதா எனக்கு தெரியல, என் ரீடர்ஸ்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றேன்)

இந்த முடிவை எடுத்தவுடன் அவள் மனதில் மின்னலென வந்து போனது தாடி மீசை இல்லாமல் சந்தோஷின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் விஸ்வாதான்.

எந்த மறுபருசீலனையும் இல்லாமல் அவனை தான் கல்யாணம் செய்து கொள்ள போகிறோம் என்று முடிவு செய்தவள் அவன் போட்டாவை எடுத்து ஆராய ஆரம்பித்தாள்.

( டேய் விஸ்வா உன் லவ் பிளாஷ்பேக் இவளோ கேவலமா இருக்கு.....)

எப்பொழுதும் அவனை பற்றி சந்தோஷிடம் பேசும் போதும்,கேட்கும் போதும் நேரம் கடப்பதே தெரியாமல் இருப்பதும், ஜாலியாக இருப்பதற்கும் ஏனோ அவளின் மனம் வேறு ஒரு பெயரை கொடுத்தது அதுதான் நிறைவு,இனம் புரியாது இன்பம் என்று....

ஒருவேளை சந்தோஷக்காக இல்லாமல் வேறு யாரோ ஒருவன் தன் வாழ்வில் என்று யோசிக்கும் போது கூட தான் வீரை தான் டிக் செய்திருப்போமோ என்று அவள் மனம் யோசிக்க அதற்கு அவள் பதில் ஆமென்று இருக்க,
அவள் இன்பமாக அவனை தனக்குள் நிரப்ப ஆரம்பித்தாள்.

எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல் தன் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை என்று ஒரு ஒரு அடையாளத்தோடு நிச்சயம் முடிந்ததும் “ மாப்பிள்ளையிடம் பேசு மா” என்று

தன் தந்தை கொடுக்கும் போன் நம்பரை “இது வேற இம்சயா இருக்கே “ என்று கடமைக்கு பேச ஆரம்பிக்கும் பெண்கள் கல்யாணத்திற்குள் அவன் தான் தன் உலகம், என்று காலம் மாற்றுவதை போல

அகலியின் மனதில் ஒவ்வொரு நாள் கடக்க கடக்க விஸ்வாவின் மேலான காதல் இருக்க இடம் இல்லாமல் நிரம்பி வழிந்தது.

அதுவும் சந்தோஷ் அன்று சொன்ன ஒரு விஷயத்தில் மழைக்காலத்தில் ஏறும் தக்காளி விலை போல் ஏறிப்போனது அவன் மீதான காதல்.

அது என்னவென்றால் “ அவனின் கல்லூரியில் படிக்கும் பெண் தன் காதலனுடன் சற்று எல்லை மீறி பழகி இருக்க அதை அவன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்ததோடு மட்டும் இல்லாமல் அதை காட்டி தன் நண்பர்களோடும் அவளை தவறாக இருக்க வேண்டும் என்று மிரட்டவே

விஸ்வாவின் நல்ல குணம் தப்பை தட்டி கேட்க்கும் தைரியம் அனைவருக்கும் தெரியும் என்பதால் அந்த பாதிக்க பட்ட பெண் அவனிடம் கூறவே

விஸ்வா “உங்க காதலன் மேல நீங்க வச்சிருக்குற காதல,நம்பிக்கையை இப்படித்தான் நீங்க காட்டனும்ன்ற அவசியம் இல்லை உங்கள் பெண்மை நீங்க உங்க கணவனுக்கு கொடுக்க வேண்டிய உன்னதமான பரிசு,அது உங்கள் உயிரை விட மேலான காதலனா இருந்தாலும் அவன் கணவனா ஆனதும் தான் கொடுக்கணும் “ என்று அந்த பெண்ணுக்கும் ஒரு கொட்டு வைத்தவன்

அந்த பையனை பிடித்து அவனிடம் உள்ள ஆதாரங்களை அழித்துவிட்டு இன்னும் 2 வருடங்களுக்கு அவனால் எழுந்த நடமாட முடியாத அளவிற்கு அவனை ஹாஸ்பிட்டலில் படுக்க போட்டுவிட்டு தான் ஓய்ந்தான்.

அடிப்பட்ட பையனின் பெற்றோர்கள் போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்கவே விஸ்வா கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டான்.

உண்மையான காரணத்தை சொன்னால் உடனே பெயில் கிடைத்து விடும் என்று வக்கீல் எவ்வளவு எடுத்து சொல்லியும் அவன் மறுத்து 20 நாட்கள் கழித்தே வெளியே வந்தான் என்பதாகவும்.

அதை கேட்டதும் அகலி ஏதோ அவளே செய்தது போல் பூரித்து போனாள்.

தனக்கு பிடித்தவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட நமக்கு மலையளவு பெரிதாக தெரிய ,

பெரிய பெரிய விஷயங்களை அசால்ட்டாக செய்யும் தன்னவனை நிரம்ப பிடித்துவிட்டது அகலிக்கு.

இவை அனைத்தையும் நினைத்து பார்த்துக்கொண்டு அவன் போட்டாவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அகலி அவன் நிழலிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

இன்னும் 2 வருஷம் தான் வீர் அதுக்கு அப்பறம் இந்த அகலியோட ஆக்சன் பார்ப்ப, எல்லோரோட லவ்வையும் மாறி என் காதலையும் அசால்டா வேண்டாம் சொல்லலாம்னு நினைக்காத
என் காதல் ஆக்டொபஸ் மாதிரி நாலு பக்கமும் உன்னை நகர விடாம இழுத்து எனக்குள்ள சுருட்டு வச்சிக்கும் என வீர வசனம் பேசியவள்.

பூஜை அறையில் உள்ள சிவனிடம் வந்து கெஞ்சிக்கொண்டிருந்தால்” எப்படியாவது வீருக்கு என்னை பிடிக்க வச்சிடு பிளீஸ், நீ இருக்குற தைரியத்தில் அவன்கிட்ட நான் ரொம்ப வீராப்ப பேசிட்டு வந்துட்டேன்” ,

( அதானே பார்த்தேன் அகலி பாப்பா இவளோ சீரியஸா பேசுற ஆள் இல்லையே இவரை நம்பிய நீ இருக்க இவரு நல்ல சோதி சோதின்னு சோதிச்சிட்டுதான நல்லது செய்வாரு)

நான் வேணுன்னா எங்க ஊருல இருக்க உன் வீட்டுக்கு

(அது வீடாம்மா உனக்கு அது கோவில் எங்க சொல்லு பார்ப்போம் கோவில்)

வந்து டெய்லி சுத்தம் பண்ணி வைக்கிறேன்,அப்பறம் அங்க உள்ள சிவனடியார்களுக்கு சாப்பாடு கொடுக்கிறேன் என்றவள் சிவனிடம் எந்த ரிஃப்ளெயும் இல்லாமல் போகவே

அவள் சோகத்துடன் முகத்தை வைத்துக்கொண்டு “ சரி உன் பசங்க விநாயகர், முருகன் வீட்டுக்கும் அதே மாறி பன்றேன் “ என்றாள்.

இந்த டீல் அவருக்கு பிடித்து போகவே அவர் குஷியாகி தன் மாலையில் உள்ள ஒரு மலரை சம்மதம் போல் கீழே உதிர்த்தார்

( இவள் கும்பிடும் கடவுளும் இவளை மாறியே பப்பியா இருக்கே)

அதில் சந்தோசம் அடைந்த அகலி சிவனின் போட்டாவை தூக்கி இரண்டு சுற்று சுற்றியவள் காமாட்சியின் “ பாப்பா சாமி போட்டாவை அப்படியெல்லாம் பண்ண கூடாது” என்ற குரலில்

“ அப்படியா அப்பத்தா “என்றவள் போட்டாவை கீழே வைத்துவிட்டு அவரின் கையை பிடித்துக்கொண்டு அவருக்கு மயக்கம் வரும் வரை சுற்றி விட்டு டோராவிற்கு உதவி செய்ய டோராவின் பயணங்கள் பார்க்க சென்றதோடு மட்டும் இல்லாமல்

டீவியை பரர்ப்பவள் “குள்ளநரி திருடக்கூடாது, குள்ளநரி திருடக்கூடாது என்றும், டோராவுடன் சேர்ந்து ஒன்று, இரண்டு என்று எண்ணிக்கொண்டிருந்தாள் பக்கத்துவீட்டு குட்டி பசங்களோடு சேர்ந்து

( இந்த ஜென்மத்தில நீ விஸ்வாவை நீ கரெக்ட் பண்ண முடியாது சோ.... சேட், )

சென்னையில்

ஒரு முக்கியமான வேலை விஷயமாக கண்ணன், விஸ்வா,முருகன் அனைவரும் அவர்களின் பூர்வீக ஊருக்கு சென்று இருக்க
விஸ்வா இல்லாமல் சந்தோஸ் மட்டும் இருக்க தன் தேனுக்குட்டியிடம் பேசி முடித்துவிட்டு அசதியாக ஹாலில் டிவி பார்த்தித்துக்கொண்டிருக்க ஹாலிங் பெல் அடிக்க சென்று கதவை திறந்தவன் அதிர்ந்து விட்டான்.

அங்கே அவனின் குண்டு தக்காளி ஆலிவ் பச்சை நிற டாப், வெள்ளை நிற சால் மற்றும் ,பேண்ட் அணிந்து கொண்டு பெரிய படிப்பாளி என்பதற்கு அடையாளமாய் கண்ணில் ஒரு பவர் கிளாசுடன் தென்பட்டாள்.

3 வருட இடைவெளியில் நன்று பொசு பொசுவென்று வளர்ந்து தன் காதலுக்கும் தன் இளமைக்கும் பெரிய சோதனையாக வந்து எதிரில் நின்றவளை விழி அகலாமல் பார்த்துக்கொண்டிருந்தான்

( mr. காருவாயன் நீங்க விடுற ஜொள்ளு மழையில் இங்க முட்டிக்கால் வரை ஒரே தண்ணீர்)

அவளை உள்ளே அழைக்க கூட தோன்றாமல் நின்றவனை இடித்து கொண்டே உள்ளே நுழைந்தவள் “ ஹாய் சந்து எப்படி இருக்க” என்று பல நாள் பழகியவள் போல் பேச

அதில் தன்னுணர்வு அடைந்தவன் “ ஹாய் குண்டு என்று சொல்ல வந்தவன் அப்படியே அதை முழுங்கி ஜனனி எப்படி இருக்க ,விச்சு இல்லையே” அவள் தன் அண்ணனை தான் பார்க்க வந்திருப்பாள் என்று நினைத்துக்கொண்டு சொன்னான்.

தெரியும் என்று சொன்னனவள் “ நான் உன்னை பார்க்க தான் வந்தேன்,என்றவள் மேலும்

“ இன்னும் 4 வருஷம் டைம் தான் உனக்கு அதுக்குள்ள நான் மெடிஸின் முடிச்சிட்டி 1 வருஷம் பிராக்டிசும் முடிச்சிடுவேன்..

அதுக்குள்ள உனக்குன்னு ஏதும் எய்ம்,கடமை இருந்த அதையெல்லாம் முடிச்சிக்கோ,அதுக்கு அப்புறம் நான் விச்சுகிட்ட சொல்லி எங்க வீட்ல பேர்மிஸ்ஸன் வாங்கிக்கிறேன்,அதுக்கு அப்பறம் நீ அத்தை மாமாலாம் அழைச்சிட்டு வந்து எங்க வீட்டுல பேசு.

கல்யாணத்துக்கு அப்பறம் சென்னைனாலும் எனக்கு பிரச்சனை இல்லை,உங்க ஊருனாலும் எனக்கு பிரச்சனை இல்லை ஊருல இருக்கணும்னா எனக்கு அடிப்படை வசதியுள்ள ஒரு குட்டி ஹாஸ்பிடல் கட்டி கொடுத்துடு,

அப்பறம் ஹாஸ்பிடல் எதும் வருமானம்லாம் என்னிடம் எதிர்பார்க்க கூடாது ஏன்னா அங்க இலவச மருத்துவம்தான் நான் பண்ண போறேன்,

அப்பறம் எனக்கு 2 பையன் அதுவும் உன்னை மாறி கருப்பாதான் வேண்டும்” என்று முடித்தவள்

( அட கொக்க மக்க என்ன ஒரு கோணங்கி தனம் )

ஒரே சாட்டில் அவனை அதிர வைத்து தன்னை சில வருடங்களாக இரவில் தூங்க விடாமல் செய்யும் அன்று அவன் பார்த்த ஆழப்பார்வைக்கு தண்டனை கொடுத்து நியாயம் செய்துவிட்டவள் போல நிம்மதியுடன்

“நான் வருகிறேன்” கிளம்பிவிட்டாள்,அவள் பேச்சில் ஆடிபோய் இருந்தவன்

( பாவம் இந்த கதையில வர பசங்க 2 பேரும்)

அவள் கதவை திறக்கும் சத்தத்தில் வேகமாக அவள் கையை பிடித்து நிறுத்தி

“ நான்...நான் உன்னை லவ் பன்றேன்னு உனக்கு எப்படி தெரியும்” என்றான்.

அவளுக்கும் இது வரை இருந்த தைரியம் காணாமல் போக மெதுவாக “ அது நீ அன்னைக்கு பார்த்த பார்வையிலே வித்தியாசம் எனக்கு தெரிஞ்சது ,அப்ப எனக்கு புரியலனாலும் தினம் தூங்கும் போது நீ பார்த்த பார்வை தான் என்னை அதை செல்லும் செய்தியை ஆராய சொன்னது,

அதை பத்தி அதிகமா யோசித்து என்னை அறியாமல் உன்னை அதிகமா நினைக்க ஆரம்பிச்சிட்டேன் ,,நான் பர்ஸ்ட் இயர் முடிக்கும் போதுதான் அந்த பார்வைக்கான அர்த்தம் புரிந்தது” என்று சொன்னவளின் முகம் சிவக்க

அப்பறம் இந்த ஒரு வருஷமும் நீ வருவ வருவ வந்து என்னை மீட் பண்ணி பேசுவ அப்படின்னு வைட் பண்ணேன் ஆனால் நீ வரல,நான்தான் தப்பா புரிஞ்சிகிட்டனோன்னு உன்னை நேரில பார்த்த ஒரு தெளிவு கிடைக்கும்னு வந்தேன்,

நீ கதவை திறக்கும் போது பார்த்த பார்வையில தைரியம் வந்து என் மனசுல உள்ளதை எல்லாத்தையும் சொல்லிட்டேன் “ என்று தலையை குனிந்து கொண்டே சொன்னவள்

கடைசியாக “உடனே நான் உன்னை லவ் பன்றேன்னு நினைக்காத பிளாக் அண்ட் வைட் காம்பினேஷன் நல்லா இருக்கும்னு என் பிரண்ட்ஸ் சொன்னாங்க,அதனால தான் போனா போகுதுன்னு உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கிறேன்” என்றாள்.

சந்தோஷின் நிலையே சொல்ல முடியாத சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தது. தான் ஒரு துரும்பை கூட கிள்ளி போடாமல் தான் அன்று பார்த்த ஒரு பார்வையை அடிப்படையாய் வைத்துக்கொண்டு தன்னை தன் காதலை க்வுரவ படுத்திய தன் குண்டு தக்காளியை அப்படியே ஜுஸ் போட்டு குடிக்கும் அளவிற்க்கு ஆசையும் காதலும் போட்டி போட

ஏதேதோ வேண்ட வேண்டும் என்று கோவிலுக்குள் செல்லும் போது அங்கே உள்ள அமைதியும் ,அந்த வாசைனையும் ,அலங்கரிக்கப்பட்ட சாமி சிலையையும் பார்த்து மெய் மறந்து கைகளை மட்டும் கூப்பிக்கொண்டே மணிக்கணக்கில் சாமியை பார்த்துவிட்டு அந்த சொல்ல முடியாத உணர்வை அனுபவித்து விட்டு வருவோமே அதுபோல

அவள் காதல் கொடுத்த நிரம்ப சந்தோசத்தில் அவனுக்கு எதுவும் தோன்றவில்லை..

அவள் கைகளை அவன் பிடித்த அழுத்தமே அவள் வார்த்தைகளால் சொன்ன அத்தனை வார்த்தைகளை விட அதிக செய்திகளை அவளுக்கு நொடியில் உணர்த்த அது கொடுத்த சுகத்தில் அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டாள்.

அவனும் அவளின் காலுக்கு கீழே அமர்ந்து அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

நேரம் ஆக ஆக அவனிடம் எந்த அசைவும் இல்லாமல் போகவே அவன் பார்வை வேறு புது அவஸ்தயை கொடுக்க “ சந்தோஷ் நான் போகணும்” என்றாள்.

“ம்ம்ம் சரி “ என்று சொன்னவனின் குரலில் அப்படி ஒரு கரகரப்பு

அவன் பிடித்து கொண்டிருந்த அந்த கையை பார்த்தவள் “ ஒரு முத்தம் கூட கொடுக்க மாட்டான் போலவே” என்று நினைத்து கைய உருவிக்கொள்ள

( ஜானு நீ இந்த விஷயத்துல கொஞ்சம் வீக் டா, இதே அகலினா பச்சக்குன்னு முத்தம் கொடுத்துட்டு பத்தடி தள்ளி போய் பளிப்பு காட்டிருப்பாள்).

அவளின் எண்ணம் உணர்ந்து சிறு சிரிப்புடன் அவள் உருவிய கையை பிடித்து அழுத்தி முத்தம் கொடுத்தவன்,

“மீதம் எல்லாம் என் தகுதியை நான் உயர்த்திகிட்டதுக்கு அப்பறம், நான் இப்ப உங்க அண்ணன்ட கேட்ட அவனோட நண்பன் அப்படிங்கிற காரணத்துக்காக உடனே எனக்கு உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்க சரி சொல்லிடுவான்.

ஆனால்” சந்தோஷ்ன்ற தனிமனிதன் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் என் தனி அடையயாளத்தோடு வந்து கேட்டாலும் எனக்காக மட்டும் உன்னை கொடுக்கணும் ,அதனால நானா சொல்ற வரை நீ உங்க அண்ணனிடம் சொல்லிகாத” என்றான்.

என்னதான் தானும் வசதி என்றாலும் ஜனனி அளவிற்க்கா என்றால் நிச்சயமாக இல்லை, அதனால் தான் தன் சுய தகுதியை உயர்த்திக்கொள்ள கொஞ்சம் கால அவகாசம் கேட்டான்.

தன்னவனின் தன்மானம் கண்டு கலங்கிய கண்களுடன் சரி என்று சொன்னாள் ஜனனி.
ஜனனியிடம் பேசும் போதெல்லாம் தன் நண்பனுக்கு துரோகம் செய்கிறோமோ என்று அவனுக்கு உருத்த

அவர்கள் இருவரும் பார்த்துக்கொள்வது , பேசிக்கொள்வது எல்லாமே மிக மிக கம்மி என்ற போதும் அவர்கள் காதல்,நம்பிக்கை,நேசம் எல்லாம் மலையளவு உயர்ந்தே இருந்தது.

அகலி அங்கே விஸ்வாவின் நிழலோடு காதல் செய்ய தன்னவள் அருகில் இருந்தும் கனவோடு காதல் செய்து கொண்டிருந்தான் சந்தோஷ்.

நாட்கள் அதன் போக்கில் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்க இன்னும் இரண்டு நாட்களில் வைவா என்ற நிலையில்
ஓங்கி அடித்த அதிர்வின் காரணமாக உதடு கிழிந்து ரத்தம் வர ரீனா அவமானத்தோடு கீழே விழுந்து கிடக்க

கோபத்தால் உடம்பெல்லாம் செந்தனாலக கொதிக்க தன் நெற்றிக்கண்ணை திறந்த படி நின்று இருந்தான் விஷவேந்திரன்.


வருவாள்
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயமம் 13

மரணம் தேவை படுகிறது...
மலிவான விலையில்....

உன்னை நினைத்த மனம் சுக்கு நூறாக

உன்னை ரசித்த விழி ரணமாகி போக..

மரணம் தேவை படுகிறது மலிவான விலையில் ...

உன் ஸ்பரிசம் உணர்ந்த உணர்வுகள் மறத்து போக...

உன் குறுகுறுப்பு உணர்ந்த கன்னங்கள் கருக..

உன் விரல் கோர்த்த கரம் கழண்டு விழா..
மரணம் தேவைபடுகிறது..

மலிவான விலையில் ..
மறக்க சொல்லி மூளை சொல்லியும் மறக்க மறுக்கும் மனம் வேண்டாம் எனக்கு..

இல்லை என்ற இதயத்திடமே..
இறைஞ்சி நிற்கும் குணம் வேண்டாம் எனக்கு..

என் குணம் மாறி..என் கர்வம் குறைந்து..

எதை கொடுத்துவிட்டாய் என உன்னிடமே..

இறைஞ்சி நிற்கிறது என் மனம்...
வேண்டாம் ...இறைவா...

என் உணர்வுகளுக்காவது உயிரை பரித்துவிடு..



இன்னும் நான்கு நாட்களில் வைவா என்று இருக்க விஸ்வாவும் ,சந்தோஷும் கேன்டீன் வராண்டாவில் நின்று பேசிக்கொண்டிருந்தனர் .

அப்பொழுது அந்த வழியே நம் கதையின் காண்டா விளக்கு கண்ணை உறுத்தும் நிறத்தில் ,உடலில் இருக்கா இல்லையா என்று அனைவரும் தேடும் வகையில் ஒரு உடை அணிந்து , சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே தன் படைகளுடன் அங்கு வந்து கொண்டிருந்தது .

அதற்கு முன் அவள் இந்த கல்லூரிக்கு வந்ததற்கான, அவள் கூறிய காரணம் அங்கு படித்து போர் அடித்துவிட்டது என்பதாகும் .

ஆனால் உண்மையான காரணம் அங்கு உள்ளவர்களின் வாழ்க்கையில் விளையாடி விளையாடி போர் அடித்துவிட்டது என்பதே .

ரீனா மற்ற விஷயங்களில் எப்படியோ படிப்பில் நல்ல சுட்டி , அவளின் எந்த முயற்சியும் இல்லாமலே சரஸ்வதி தன் அருளை வாரி வரி வழங்கி இருந்தாள்.

(ஏன் மா சரசு உனக்கு ஏன் இந்த வேலை..... )

அது அவள் இயல்பிலே இருந்ததாலோ என்னவோ அவளும் அதன் படி பள்ளி ,கல்லூரி என அனைத்திலும் முதன்மையாக விளங்கினாள் .

ஆனால் அவள் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருக்கும் போது ஒரு செமஸ்டரில் ரீனாவின் சக வகுப்பு மாணவி 4 % வித்தியாசத்தில் முதலாக வந்துவிட்டாள் .

அதற்கு ரீனாவின் நீதிமன்றத்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது எவ்வித மறுபரிசீலனையும் இன்றி .

KR க்கு எந்த ஒரு கொலைக்கும் தகுந்த ஆதாயம் இருக்க வேண்டும். அதிகபட்சம் அவன் தன் சொந்த விசயங்களுக்காக கொலை செய்யும் வரை போகமாட்டான் .

ஆனால் ரீனா அவனுக்கு நேர் எதிர் ,அவளின் எல்லா அநியாயங்களும் அவளின் சுயநலத்திற்காகவே இருக்கும்

அதனால் KR அந்த பெண்ணை தொழிலின் பங்குதாரர்களுக்கு உடல் பசிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம், இல்லை எங்கேனும் சிகப்பு விளக்கு பகுதியில் விற்றுவிடலாம் என்று சொல்ல,

(அதற்கு அவளுக்கு மரணமே மேல். )

..,ரீனா எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் கல்லூரியில் உள்ள அனைவருக்கும் அந்த அவலை பெண்ணின் மரணத்திற்கான காரணம் உரக்க கூறப்பட்டு செவ்வனே தண்டனை நிறைவேற்றபட்டது .

அன்றிலிருந்து ரீனாவை அந்த கல்லூரி முழுவதும் ஒரு மரணபயத்தோடு பார்த்தது . அவளின் தேவைகள் அனைத்தும் அவள் கேட்காமலே நிறைவேற்றபட்டது...

அதனால் அவளுக்கு அங்கே இருக்க போர் அடித்துவிட்டதால் கடைசி வருடம் படிப்பை முடிக்க இந்த கல்லூரிக்கு வந்துவிட்டாள் .

வந்த இந்த 8 மாதங்களில் அந்த கல்லூரியின் அனைவருக்கும் கொடூரங்களின் அடையாளமாக அறிமுகமும் ஆகிவிட்டாள் . நம் இரண்டு ஹீரோக்களை தவிர

சந்தோஷின் பாதி நேரத்தை அவளின் தேனுகுட்டியும் மீதி நேரத்தை தன் உயிர் நண்பனுக்கு தெரியாமல் அவனின் தங்கையை காதலிக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியும் ஆக்கரமித்துக்கொள்ள அவனிற்கு ரீனாவின் வரவு தெரியவில்லை .

அதேபோல் விஷ்வாவிற்கும் வார நாட்களில் கல்லூரி, வார இறுதிகளில் தன் தந்தையின் தொழில் என பிசியாக இருந்ததால் அவனுக்கும் தெரியவில்லை..

(" my master plan" என்று விதி கேக்க பிக்கே என்று சிரிக்க , நம் வாசகர்கள் அனைவரும் எச்சில் துப்பும் போட்டியில் தங்க பதக்கம் வாங்கும் அளவிற்கு காரி துப்பியது வேறுகதை .)


அவள் அந்த வழியே சென்று கொண்டிருக்கும் போதே ப்ளூ கலர் ஜீன் மற்றும் வைட் கலர் புல் (full ) ஹாண்ட் சேர்ட்டில் தன் பவர் கிளாஸை தன் சேர்ட்டின் நுனியில் துடைத்துக்கொண்டு கிரேக்க சிலை போல் நின்று கொண்டிருந்த நம் விஷ்வா கண்ணில் விழுந்தான் . கண்ணில் வேட்டையாடும் ஓநாயின் பளபளப்புடன் அவனை நெருங்கினாள் .

( இவ்வளவு பெரிய விளையாட்டு தேவையா என மூன்று உலக தெய்வங்களும் விதியை பார்த்து கேட்க ,விதி அவர்களை நோக்கி ஒரு விரக்தி புன்னகை சிந்திவிட்டு தன் வேலையை தொடர்ந்தது . )

அவளின் கண்ணில் விழுந்தது அவனின் ஆறடி அழகு மட்டுமே.அவளுக்கு இதுவரை காதல், கல்யாணம் ,அன்பு பாசம் இதில் ஏதாவது ஒன்றாவது இருந்ததா என்றால் கண்டிப்பாக இல்லை தான். அவளின் வாழ்க்கையில் உணர்வுகளை விட உணர்ச்சிகளுக்கே அதிக பங்கு..

அவள் அண்ணன் மீதாவது பாசம் இருக்கிறதா என்ற அவளிடம் கேட்டால் "யோசித்து சொல்கிறேன்" என்பது மட்டுமே அவளின் பதிலாக இருக்கும்.

( " அதுக்கும் என்னிடம் ஒரு பிளான் இருக்கு " என்று விதி வாலண்டியராக வாயை கொடுக்க , இவளுக்கு லவ்வு ரொம்ப முக்கியம் என்ற நாமெல்லாம் முறைத்த முறைப்பில் வாயை மூடிக்கொண்டு "ப்ராஜெக்ட் excute" என்ற பட்டனை அழுத்திவிட்டு 1 வாரம் விடுப்பில் சென்றுவிட்டது .)

விஷ்வாவின் முன்வந்து நின்று அவனை அலட்சியமாக மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவள் "ம்ம்ம்ம் அழகா இருக்க....! நல்ல அழகு,நல்ல கலர், நல்ல உயரம் , "why dont you try with gigoles or kalvai " ,என்று கூறியவள் ,

( கிகோலஸ் - ஆண் பாலியல் தொழிளார்கள் , மேலை நாடுகளில் பெண் பாலியல் தொழிலுக்கு இணையாக அதிகமாக நடக்கும் வியாபாரம் , இன்றளவில் சென்னை,கோயம்புத்தூர் என்று நம் தமிழ்நாடு வரை பரவி இருக்கும் கேடுகெட்ட கலாச்சாரம் , பணக்கார இளம் பெண்களும் , கல்யாணமான பெண்களும்தான் இவர்களின் வாடிக்கையாளர்கள் )

நானே உன்னை ரெஃபர் பண்றேன் ஒரு நாளைக்கு 3 லட்சம் வரைக்கும் உனக்கு பே ( pay ) பண்ணுவாங்க அவனின் அழகை ரசித்தபடி கூறியவள் பின், ஆனால் அதுக்கு முன்னாடி " i need to check you something " என்று கிறக்கமாக கூறி அவன் கையை பிடித்து இழுக்க,

அவளின் கையை வெடுக்கென்று உதறிவிட்டு அவள் நிதானம் ஆவதற்கு முன்பே தன் முழு பலத்தையும் கைக்கு கொண்டுவந்தவன் ரீனாவின் வலது கையை தன இடது கையால் பிடித்துக்கொண்டு

அவளது இடது கன்னத்தில் "பளார் ", பளார்" அவளை நிதானிக்கவே விடாமல் அறைந்துக்கொண்டே கடைசி அறையில் இன்னும் கொஞ்சம் பலம் கூட்டி அறையவே உதடு கிழிந்து ரத்தம் கொட்ட 2 அடி கீழே போய் விழுந்தாள் ,

அவளின் எடுபிடிகள் அருகில் வருவதற்குள் அனைத்தும் நொடி பொழுதில் நடந்து முடிந்தது .

ரீனா அருகில் வந்து விஷ்வாவின் அழகை பற்றி பேச ஆரம்பிக்கவும் இது எப்பொழுதும் நடக்கும் ப்ரோபோசல் படலம் என்று நினைத்து அசால்ட்டாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் சந்தோஷ்.என்னதான் அவன் படித்தவன் என்றாலும் கிகோலஸ் போன்ற வார்த்தைகளின் அர்த்தம் தெரியவில்லை அவன் கிராமத்தில் வளர்ந்ததால்.

விஷ்வாவும் அதே மாதிரி நினைத்து கொண்டு சலிப்புடன் நிற்க..

அவள் கிகோலஸ் என்ற வார்த்தை அவளின் செய்கைகளுக்கான அர்த்தத்தை அவனுக்கு உணர்த்த கழுத்து நரம்புகள் புடைக்க தன் கோபத்தை இழுத்து பிடித்துக்கொண்டு நின்றான் சுழ்நிலை கருதி ,

ஆனாலும் அவள் விடாமலோ மேலே பேசிக்கொண்டே அவனின் கையை பிடிக்கவுமே அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அடித்து நொறுக்கி விட்டான்.

யாரை...யாரை பார்த்து என்ன கூறிவிட்டாள் ஒழுக்கமே உயிராக நினைப்பவன், பெண்களை அதிகமாக மதிப்பவன், பெண்களை பார்த்தாலே காத தூரம் நிற்பவன் ,தாய் , தங்கை தவிர யாரிடமும் பேசக்கூட முயலாதவன் ,

அவனின் கோபம் கட்டுப்படுத்த முடியாமல் போகவே வேகா வேகமாக மூச்சைவிட்டுக்கொண்டு அருவருப்பாக பார்த்து அவளை நோக்கி தன் ஆள்காட்டி விரலால் " தொலைச்சிடுவேன் " என்று ஒற்றை வார்த்தையில் கர்ஜித்தவன் நெற்றியில் ஒழுகிய வேர்வையை ஆள்காட்டி விரலால் துடைத்துவிட்டு சந்தோசை இழுத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டு சென்றான் .

ரீனா கீழே விழுந்த நொடி அவளின் எடுபிடிகள் விஷ்வாவை அடிக்க நெருங்க அதை தன் பார்வையால் தடுத்துவிட்டாள் ,

அவன் சென்றதும் எழுந்து சுற்றி பார்க்கவே அங்கு உள்ள அனைவரும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தனர் சிலரின் கண்களில் நிறைவும்,சிலரின் கண்களில் கோபமும், இன்னும் சிலரின் கண்களில் சந்தோஷமும், என ஒவ்வொன்றை பிரதிபலிக்க அவளின் தான் என்ற அகங்கார ஆணவத்திற்கு பேர் இடியாகி போனது .

அவள் ஆக்கோரோஷத்துடன் விஷ்வா சென்ற திசையை திரும்பி பார்த்தவள் ,தன் காரை நோக்கி சென்றுவிட்டாள் .

அங்கு வேடிக்கை பார்த்தவர்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு வர்களுக்கு தண்டனைகள் கொடூரமாய் நிறைவேற்றபட்டது செவ்வனே..

ஒருமாதம் அதன் போக்கில் சென்று கொண்டிருக்க இது எதுவும் தெரியாமல் அன்று காலையில் தன் சகாக்களோடு தன் சென்னை செல்லும் பிளான் பற்றி விவாதித்து கொண்டிருந்தாள் நம் அகலி.

(அப்பா ஒரு வழியா முடிவு பண்ணிட்டியா.... முடியல... இப்பவே கண்ணா கட்டுது )

தன் பெரிய தம்பி சின்னுவின் மடியில் படுத்துக்கொண்டு தன் குட்டி தம்பி மியானிடம் அவன் பொசு பொசு முடியை வருடியபடி பேசிக்கொண்டிருந்தாள் .

(ரத்தினம் அங்கிளுக்கு ஒரு பொண்ணு தான....? இவள் என்ன குழப்புறாள்)

"மியான் குட்டி நாளைக்கு சந்தோஷ் அண்ணன் வர்றான் நான் சென்னை போய் மாமாவா பார்த்துட்டு 2,3 நாள்ல வந்துடுவேன்,அதுவரைக்கும் நீ அண்ணன்ட சண்டை போடமா.... முக்கியமா அப்பத்தாட வம்பு வழக்காமல் இருக்கணும் சரியா " என்றவள்.


மியானின் குறு குறு பார்வை போகும் திசையை நோக்கியவளின் கண்ணில் இவர்கள் மூவரையும் கோபமாக பார்த்துக்கொண்ண்டிருக்கும் காமாட்சி பட்டார்.


“ஏய் அகலி உன் மியான்ட சொல்லிவை...அவன் எதுக்கு இந்த வீட்டுல இருக்கான் நேத்து என் புது புடவைய எலி எப்படி நார் நாரா கடிச்சி வச்சிருக்கு பாரு,அந்த எலியை புடிச்சி கடிச்சி வைக்காம இவன் என்னனா நேர நேரத்துக்கு பால குடிச்சிட்டு சின்னுக்கு வைக்கிற pedigire சேர்த்து சாப்பிட்டு நல்லா மினிக்கு கணக்கா இங்கயும் அங்கேயும் அலையுறான்.”..

( அடங்கொய்யாலே அவன் அவன் என்ன பிரச்சனையில இருக்கான் நீ என்னனா நாய்க்கும் பூனைக்கும் பேர வச்சிக்கிட்டு திரியுற...அதுமட்டும் இல்லாம பேசிக்கிட்டு வேற இருக்கா)


ஆம் சின்னு என்பது அவள் ஆசையாய் வளர்க்கும் நாய்.மியான் என்பது அவள் வளர்க்கும் பூனைக்குட்டியின் பெயர் அவள் சின்சான் ரசிகை என்பதால் அவள் வீட்டு நாயிலிருந்து அவளின் செல்போன் வரை அனைத்திற்கும் பெயர் உண்டு

,சின்னு பொறுப்பாக வீட்டை பாதுகாப்பது ,காமாட்சி வாக்கிங் செல்லும் போது துணைக்கு செல்வது என சமத்தாக நடந்து கொள்ளும்.

நம்ப மியானுக்கும் காமாட்சிக்கும் தான் ஏழாம் பொருத்தம் அகலியை தாண்டி அவரிடம் வம்பு வளர்க்கும்.

அவர் காட்டு கத்து கத்தவதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அது இன்னும் சொகுசாக அகலியின் மேல் சாய்ந்து கொண்டு அவரை தெனாவட்டாக பார்த்துக்கொண்டிருந்தது
அதை பார்த்து அகலி பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி தன் மாமனை சைட் அடிக்க கிளம்பிவிட்டாள்.

(போன்ல உள்ள போட்டவ சைட் அடிக்க உனக்கு இவளோ சீனா)

ஆனால் சொன்ன படி சந்தோஷால் அகலியை அழைத்து செல்ல வர முடியாததால்..


காரில் அகலி ,ராஜா மற்றும் அவர்களின் நம்பிக்கைக்கு உரிய ட்ரைவர் மாரி அண்ணனுடன் அவளின் மாமாவை நோக்கிய தேடல் இனிதே ஆரம்பம் ஆனது.


ராஜாதான் அவளை திட்டிகிக்கொண்டே சென்றான்.” ஏய் குட்டி பிசாசே இந்த உலகத்தையே முழுங்கி ஏப்பம் விட்டுட்டு “உலகம் காணும் உலகம் காணும்னு “ தேடுவ,உனக்கு நான் துணையா..? வரதுதான் வர எனக்கு லீவு இருக்கும் போது வந்தா என்ன இப்ப உன்னை விட்டுட்டு உடனே கிளம்பனும் ,அப்படி கிளம்புனாதான் நான் நாளை மறுநாள் எக்ஸாம் அட்டெண்ட் பண்ண முடியும்”
அவன் பேச பேச அவளிடம் எந்த பதிலும் இல்லாமல் போக வாய் வலியோடு அவன் காரின் ஒரு பக்கம் தூங்க ஆரம்பித்துவிட்டான்.


காரில் ஏறி அமர்ந்ததும் அவள் மனதில் ஒரு இனிய படபடப்பு ,அவள் குழந்தை தனைத்தை தாண்டி சொல்ல முடியாத ஒரு உணர்வு...

முதல் முதலாக அவளின் விஷ்வாவை அவளின் என்னவனை,
கடந்த சில நாட்களின் தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு கல்யாணம் செய்து கொள்ளும் ஆண்களை அழைக்கும் அழகிய முறை...வார்தைகளிலே தேன் ஒழுகும் அவளின் மாமனை காண செல்கிறாள்.


அவளின் பயம் எல்லாம் அவனை பார்க்க போது மயங்கி ஏதும் விழுந்து விடுவோமோ என்பதுதான் அந்த அளவிற்கு அவளின் மனம் படப்படக்கிறது...

அவளின் தூங்க இரவோடு அவளின் சென்னை பயணம் அதிகாலை 3 மணிக்கு விஸ்வாவின் அபார்ட்மெண்ட் வாசலில் முடிந்தது.ராஜா கதவை தட்டிவிட்டு காத்திருக்க படபடக்கும் இதயத்துடன் அகலி நின்று இருந்தாள் அவளை ரொம்ப நேரம் சோதிக்காமல் சந்தோஷ் கதவை திறக்க ஒரு. நொடி மலங்க மலங்க முழித்தவள் ஓடி சென்று “ சந்தோஷ் என்று அவனைக அழுதுகொண்டே கட்டிக்கொண்டாள்.


சந்தோஷ் வார விடுமுறையில் ஊருக்கு செல்லும் போது எப்போதும் இப்படி தான் கட்டிக்கொள்வாள்..ஆனால் இந்த அழுகை ஏன் என்று தெரியாத போதும் அவளை அணைத்து ஆறுதல் சொன்னான் நல்ல நண்பனாய்.


அவளின் கூத்தை பார்த்த ராஜா அவளை முறைத்துவிட்டு சந்தோஷிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

சோபாவில் அமர்ந்து “ தேனுக்குட்டி ஏன் அழகுற இங்க பாரு சின்னுவையும், மியானையும் விட்டுட்டு வந்ததால அழுகிறியா நீதான சென்னையை சுத்தி பார்க்கணும்னு சொன்ன 3 நாள் தான் அதுக்கு அப்பறம் வீட்டுக்கு போயிடலாம்” என அவளை சமாதானபடுத்தினான்


( எடு அந்த கட்டைய இந்த கதையில வர கேரக்டரையே எங்கலாள நியாபகம் வச்சிக முடியல இதுல நாய் ,பூனைக்கெல்லாம் பேரு ....மம்ம்ம்ம்ம்)


ஒரு வழியாக நன்கு அழுது முடித்து நிமிர்ந்தவளுக்கு தான் அழுத்துக்கான காரணம்தான் இன்னும் பிடி படவில்லை...


அதிகம் யோசிக்காமல் சந்தோஷின் மடியிலையே உடலை குறுக்கிக்கொண்டு படுத்து தூங்காவும் செய்துவிட்டாள்.
சந்தோஷும் சிரிப்புடன் போர்வையால் அவளுக்கு போர்த்திவிட்டு அமர்ந்த வாக்குலையே தூங்கியும் விட்டான்.

எல்லா எக்ஸாமும் முடிந்து தேர்வு முடிவுக்காக காத்துக்கொண்டிருந்தனர் விஷுவாவும் சந்தோஷும்..அவர்களின் கல்லூரியிலையே கேம்பஷில் செலக்டாகி இருவரும் ஒரே கம்பெனியில் 1 மாதமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் இருவரும் நன்றாக படிக்கும் மாணவர்கள் என்பதால் அந்த நிர்வாகமும் சர்டிபிகேட் கிடைக்கும் போது கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டது...


நாளை காலை 8 மணிக்கெல்லாம் விஷ்வாவிற்கு அவனின் அப்பாவின் கம்பெனியில் முக்கியமான மீட்டிங் இருப்பதால் அவனை சீக்கிரம் தூங்க அனுப்பிவிட்டு தன் தேனுக்குட்டிக்காக ஹாலிலே காத்திருந்தான் சந்தோஷ்...


காலை 7 மணிக்கே விஷ்வா கிளம்பி தயாராகி வெளியில் வந்தால் அங்கே ஹாலில் உள்ள சோபாவில் கால் முதல் தலை வரை போர்வையால் போர்த்திய ஒரு சின்ன உருவம் தன் நண்பனின் மடியில்படுத்திருப்பதை கண்டான்.


( அடியேய் அகலி உன் மாமன் என்ன சோக்கா கிளம்பி நிற்கிறான்...நீ இப்படி தூங்குறியே.. எழுந்திரி.....அஞ்சலி எழுந்தரி.. எழுந்தரி அஞ்சலி ...)


சந்தோஷ் நேற்று சொன்னதன் படி அது அவனின் தேனுக்குட்டி என்று தெரிந்து கொண்டான்.சத்தம் செய்யாமல் சந்தோஷின் அருகில் வந்து அவனை எழுப்பி சொல்லிவிட்டு சென்றுவிட்டான்
10 மணிக்கு ஆடி அசைந்து எழுந்தவள் கிட்சனில் சந்தோஷ் இருக்கிறான் என தெரிந்துகொண்டு வீடு முழுக்க தன் தேடுதல் வேட்டையை தொடங்கிவிட்டாள்.


( என்ன டக்கு அவன் இந்நேரம் அம்பத்தூர் தாண்டி ஆவடி போய்ட்டு இருப்பான்...இப்படியே மெயின்டன் பண்ணு.... அடச்சீ)


தன் தேடுதலின் பலன் பூஜ்ஜியம் என்று தெரிந்து கொண்டு வந்த அழுகை கோபமாக மாற“ சந்தோஷ் சந்தோஷ்” என்று வீடே அலறும் படி கத்தியவளின் குரலில் அடித்து பிடித்து கொண்டு கிட்சனில் இருந்து “ வெள்ளெலி ஏன் டி இப்படி கத்துற “ என்ற படியே வந்தான்..


“எங்க அந்த வளர்ந்து கெட்டவன் விஷ்வா “ என்றாள். அவள் விளையாட்டுத்தனமாய் கேட்கிறாள் என்று நினைத்து கொண்டு அவன் ஆபிஸ் சென்று இருப்பதாகவும் நாளை தான் வருவான் “என்றான்..


“நாளைக்கு தான் வருவானா....வரட்டும் வரட்டும் டேய் மாமா உனக்கு இருக்கு நாளைக்கு” என்று கருவியவள் குளித்து கிளம்பி.சந்தோஷிற்கு குளிக்க கூட நேரம் கொடுக்காமல் அவனின் நைட் பேண்டுடன் ஊர் சுத்த அழைத்து சென்றுவிட்டாள்...


சென்னைக்கு அவள் முதல் முறை என்பதால் லோக்கல் ட்ரைனை கூட ஏதோ காணாததை காண்பது போல் பார்த்துவைத்தாள் .அங்கு உள்ள மெரினா கடற்கரையில் இரண்டு கையிலும் இரண்டு கோன் ஐஸ் வைத்துக்கொண்டு இரண்டயும் மாற்றி மாற்றி நக்கிக்கொண்டு சந்தோஷ் தன் காதில் வைத்து பிடித்து கொண்டிருக்கும் போனில் தன் இரு தம்பிகளுடனும் பேசிக்கொண்டிருந்தாள்.


அதுகளும் அதற்கு தெரிந்த பாஷையில்” லோள்” “லொள்ளு” என்றும் “மியாவ்”,” மியாவ்” என்று தனக்கு பேசிக் கொண்டிருந்தனர்..இங்கே சந்தோஷும் அங்கே வீட்டில் உள்ளவர்களும் தலையிலயே அடித்து கொண்டிருந்தனர்..


அன்று விடுமுறை என்பதால் ஜனனியும் அவள் தோழிகளுமே அன்று கடற்கரை வந்திருந்தனர்...நன்றாக வானம் இருட்டிக்கொண்டிருக்க கடலோடு கலந்திருக்கும் அந்த கார்மேகத்தில் தன் பிளாக் டாக்கின் சாயல் தெரிகிறதா என்று தேடிக்கொண்டிருந்தாள் ஜனனி.

“நைஸ் பேர்” ல என்ற தன் தோழியின் குரலில் திரும்பி அவர்கள் பார்வை செல்லும் திசையை பார்த்தவள் கண்கள் சந்தோசத்தில் விரிந்தது...


இவர்களை பார்த்தால் காதலர்கள் போலவா இவர்களுக்கு தெரிகிறது என்று அகலியையும், சந்தோஷையும் பார்த்தாள்.


ஐஸ்கிரிம் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று முகம் முழுவதும் ஈசி கொண்டு நின்றவளை பிடித்து நிறுத்தி தன் கைகுட்டையால் துடைத்துவிடும் காட்சி விழுந்தது.அது ஒரு தகப்பன் மகளின் சம்பாசனையாகவே அவளுக்கு தெரிந்தது..

அவளின் புரிதல் கொண்ட காதல் மனமும் , நம்பிக்கையும் அவளுக்கு அவள் கண்கள் வேற எதையும் காட்டவில்லை...அத்துடன் அகலியின் குழந்தை தனம் மாறாத அந்த முகமும்..


வேகமாக அவர்களை நெருங்கியவள் “ சந்தோஷ்” என்று அழைக்க தன்னவளின் பரிட்சிய குரலில் திரும்பி பார்த்தான்...

பார்வையால் அவளை ஒரு முழு நிமிடம் ஆலிங்கனம் செய்தவன் அவளின் முறைப்பில் பார்வையை திருப்பி கொண்டான்.

ஏற்கனவே அவளிடம் தேனுக்குட்டியை பற்றி அதிகம் சொல்லி இருப்பதால் ஜனனியே “ ஹாய் தேனுக்குட்டி எப்படி இருக்க, நான் ஜனனி சந்தோஷ் பிரண்ட்” என அறிமுக படுத்திக்கொண்டாள்.


புசு புசுன்னு தனக்கு முருகன் அப்பா வாங்கி கொடுத்த டெட்டி மாறி இருக்கும் ஜனனியை நிரம்ப பிடித்துவிட்டது அகலிக்கு..

ஏனோ அவளிடம் உன் கருவாயனின் காதலி என்று அறிமுகம் செய்ய அவளின் வெட்கம் தடுத்துவிட்டது.. சந்தோஷும் தான் ஒரு நல்ல நிலமைக்கு வந்ததுக்கு அப்பறம் தேனுவிடம் தான் முதலில் சொல்ல வேண்டும் என தற்காலிகமாக சொல்லாமல் விட்டுவிட்டான்.

( அட போ தம்பி அதுக்கு முன்ன அவள் காதலை அவள் உன்னிடம் சொல்ல போறாள்)

அதன் பின் மூவரும் சிறிது இடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர்.. ஜனனியை அவள் காரில் ஏற்றி விடும் போது கண்களில் முழு காதலையும் வைத்துக்கொண்டு அவளின் கைகளை அழுந்த ஒரு நிமிடம் பிடித்துவிட்டான்..

அவர்கள் எப்பொழுதாவது பார்க்கும் போதும் இதே மாதிரிதான் செய்கிறான் ..அவன் ஒவ்வொரு முறை அவள் கையை அழுந்த பிடிக்கும் போது அவன் வார்த்தையால் சொல்லாத அவன் காதல்...அவன் செய்கையால் உணரத்தாத அந்த நேசம் எல்லாம் அவளுக்கு புரிந்துவிடுகிறது..

அவளும் சிரிப்புடன் விடைபெற்று சென்றாள் மாறுநாளில் இருந்து அகலி அடை வைத்த கோழி போல் வீட்டிலேயே அடைந்துவிட்டாள்.சந்தோஷ் எவ்வளவு வற்புறுத்தியும் அவள் எங்கும் செல்லவில்லை..

அவள் வீட்டில் இல்லாத நேரம் விஷ்வா வீட்டிற்கு வந்துவிட்டாள் அதுதான் அவளின் பயம்.சந்தோஷும் அவளிடம் கேட்டுப்பார்த்து ஓய்ந்து அவளை பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டான்.


இரண்டு நாட்கள் முடிந்த நிலையில் நாளை தான் ஊருக்கு செல்லவேண்டும் ஷ்டேடி ஹாலிடேஸ் முடிந்து எக்ஸாம் இருக்கும் பட்சத்தில் அவளின் மாமா வந்தபாடாய் இல்லை..

எக்ஸாமை கட் அடிக்கலாம் தான்.... எல்லோரையும் ஏமாற்றி விடலாம் ஆனால் அவளின் அம்மா மல்லிகா இவளை அடித்து விடுவார்களே..எல்லோருக்கும் செல்லம் என்பதால் மல்லிகா மட்டும் படிப்பு விஷயத்தில் கொஞ்சம் கெடுபிடி..


பச்சிலை நோய் வந்து சுருண்டு சுருண்டு படுத்துக்கொண்டாள்..குளம் கட்டிய கண்ணீரை அடக்க வலி தெரியாமல் சுற்றிக்கொண்டிருந்தாள்..

சந்தோஷ் கேட்ட கேள்விக்கு தலைவலி என்ற ஒற்றை பதிலோடு அவன் தோளோடு சாய்ந்து சாய்ந்து நின்று கொண்டாள்..

இன்று ஊருக்கு செல்லவேண்டும் என்ற நிலமையில் அழுகை உடைப்பெடுக்க லீவ் போடுகிறேன் என்று சொன்னவனை “ என்னை ஊரில் வந்து விட வேற லீவு எடுக்கணும்” என்று அவனை வற்புறுத்தி ஆபிஸ் அனுப்பியவள் குளிக்கிறேன் பேர்வழி என்று பாத்ரூமில் சென்று அழ ஆரம்பித்துவிட்டாள்..

குளித்து விட்டு உடை மாற்றும் போது கதவை திறக்கும் சத்தம் கேட்கவே அடுத்த 5 நிமிடத்தில் வேகா வேகமாக உடை மாற்றியவள் ஹாலில் வந்து பார்த்தாள்..யாரும் வந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை..மெதுவாக நடந்து விஷ்வாவின் அறைக்கு சென்றாள்.
2 நாட்கள் அதிக அளவு வேலை பழுவால் சோர்வுடன் வந்து படுத்திருக்கும் தன் மாமனை பார்த்தாள்..


அழுகையெல்லாம் பஞ்சாய் பறக்க வேகமாக சென்று பெட்டிற்கு கீழே அவனின் முகத்திற்கு அருகில் சென்று அமர்ந்துவிட்டாள்..


அசந்து தூங்கும் அவனின் பிம்பத்தை ஏதோ வேற்று உலகத்தில் தான் இதுவரை காணாததை காண்பது போல் கண் சிமிட்டாமல் பார்த்தாள்..


எங்கே மாமனை காணாமல் சென்று விடுவோமோ என்று பயத்தில் அவளின் குமரி மனம் வெளிப்பட்டது அழுகையாக.. ஆனால் இப்பொழுதோ அவளின் குழந்தை குணம் திரும்பிவிட்டது.


லைட் ப்ளூ ஜீன்ஸ் மற்றும் மெரூன் அண்ட் நேவி ப்ளூ செக்குடு சேர்ட்டில் இரண்டு கையையும், காலையும் அகல விரித்து அசதியாக தூங்கும் தன் மாமனை உயிரில் பதித்து கொள்ளும் அளவிற்கு அழுத்தமான பார்வையில் பார்த்தாள்..


அவன் அடர்ந்த சிகையை கோதிவிட்டாள்..அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்..அவன் கன்னத்தை வருடினாள்...

அவளுக்கு இதில் கூச்சமோ தயக்கமோ எதுவும் இல்லை.. தனக்கு மட்டுமே உரிமையான இடம்.. தன் 11 வது படித்ததிலிருந்தே தான் அதிகமாக சிந்தித்த ஒருவன்...அதுவும் கடந்த ஒன்றரை வருடமாக போட்டாவில் மட்டுமே பார்த்த...தன் மாமனின் முகம் ...


ஆசை தீர அவனை பார்த்துவிட்டு அவனின் விரிந்த உள்ளங்கையில் தன் கன்னத்தை வைத்து படுத்துக்கொண்டாள்...

உடல் முழு அசதியிலும் அகலியின் அனைத்து செய்கைகளையும் கனவில் நடப்பது போல் உணர்ந்து கொண்டிருந்தான் விஷ்வா...அப்பொழுது கிடைக்கும் ஒரு இதம் ஒரு கத கதப்பு... நாசியை நனைக்கும் ஒரு வாசம் அந்த வாசம் வரும் போது வரும் ஒரு மங்கிய முகம்...இந்த கனவு முடியவே கூடாது என்று வேண்டிக்கொண்டான்...


தன் விரிந்திருக்கும் உள்ளங்கையில் உணரும் அந்த உஷ்ணம்... அதை உணரும் போது அவன் உதட்டில் ஒரு இளநகை.... அந்த கையை அவன் தன் நெஞ்சோடு அழுத்திக்கொண்டான்..

அப்பொழுது நிஜத்தில் அகலியின் முகமும் அவனின் செய்கையால் அவனின் நெஞ்சிற்கு இடம் மாறியது...

அவளும் நல்ல சொகுசாக விஷ்வாவின் இடுப்பில் கை போட்டுக்கொண்டு அவனின் மார்பின் மேலே கண் மூடி தூங்கிவிட்டாள்...

( உன்னை போய் எல்லாம் பச்சை புள்ளை சொல்றாங்க அதைத்தான் என்னால தாங்க முடியல)

வருவாள்....
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 14

உயிரே....
உன் பிரிவு என்னை நடை பிணமாக்குகிறது...

உன் நினைவுகள்...
என்னை நிலைகுழைய செய்கிறது...

உன் சுவாசம் கலக்காமல்...
காற்றையும் ஏற்க மறுக்கிறது என் நாசி....

உன் தீண்டலின் தீந்தளிர்கள் மட்டுமே....
என்னை உயிர் வாழவைக்கிறது....

உன் நினைவுபரிசுகள்...
உன்னை என் நெஞ்சுக்கு நெருக்கமாக்குகிறது.......

உன் காதல் கடிதங்கள்....
என்னை காப்பாற்றும் காகிதங்கள் ஆகிறது....

உன் வார்த்தைகள்...
என் மரணத்தையும் ஜனிக்க செய்கிறது....

இதுவரை கிடைக்காத அனுபவம்...
உன் பிரிவு....

இதுவரை சிந்தாத கண்ணீர்....
உன் பிரிவு....

இதுவரை மறந்த மகிழ்ச்சி...
உன் பிரிவு..

இதுவரை மறுக்கப்பட்ட உண்மை...
உன் பிரிவு....

இனியும் தாங்க முடியாத ஒன்று...
உன் பிரிவு...

என் இத்துணை இன்னல்களுக்கும்....
உன் நினைவு ஒன்றே மருந்தாக....

காத்திருக்கிறேன்...
காட்டாயம் காண்பேன் என்று கண்ணுக்குள் மட்டும் உயிர் கொண்டு........


ஒரு மணி நேரம் கழித்து முழித்தவள் விஷ்வாவை பார்த்தாள் . அவன் இன்னும் படுத்த நிலையிலிருந்து ஒரு இன்ஜி கூட நகராமல் அசந்து தூங்கி கொண்டிருந்தான்.

அவன் கைகள் மட்டும் அகலியின் தலைய தன் நெஞ்சோடு அழுத்தி பிடித்திருந்தது..

(பயபுள்ள அவளை தாண்டின கேடிய இருப்பான் போல ..தூக்கத்திலே ரொமான்ஸ் பண்ணிகிட்டு திரியுது)

மெதுவாக அவன் கையிலிருந்து தன்னை உறுவிக்கொண்டவள் அவன் நெற்றில் அழுந்த முத்தம் கொடுத்துவிட்டு

அவன் மல்லிகை உதடுகள் பிடிக்கும்....
அவன் மார்பின் முடிகள் பிடிக்கும்...
ஐயோ சந்தன நிறமோ பிடிக்கும்...
அவன் சாய்கின்ற நடையும் பிடிக்கும்....
என் அவனுக்கு மட்டும் யானை பலத்தில் நூறு மடங்காச்சி.....
அவன் ஒருவிரல் பட்டு நொறுங்கிடவே என் உயிரை வளர்த்தேனே........

என்று அவன் உதடு , மார்பு, அவன் கன்னம் என்று வருடிக்கொண்டே அவனை காதலிக்க ஆரம்பித்த நாள் முதலாய் தான் விரும்பி கேட்கும் பாடலை மென்மையாக பாடினாள் .

(டேய் கும்பகர்ண அவள் விட்ட உன்னை ரேப் பண்ணிடுவாள் போல ...நீ இன்னும் தூங்கிட்டு இருக்க ,மாறி மாறி தூங்கி ஏன் என் உயிரை வாங்கி என்னை டபுள் ட்யூட்டி பார்க்க வைக்கிறீங்க என்று விதி காண்டாயி கத்திக்கொண்டிருந்தது)

அகலி ஊரிலிருந்து வந்ததே அவனிடம் தன் காதலை சந்தோஷை வைத்துக்கொண்டே சொல்லத்தான்...ஆனால் அவன் இல்லாத இந்த இரண்டு நாட்கள் அவனின் STD யை திருப்பி பார்த்ததில் அவள் உணர்ந்தது விஷ்வா அவனிடம் ப்ரொபோஸ் செய்த எந்த பெண்களையும் அசட்டை கூட செய்யாததைதான்...

அதிலும் நம்ம இந்த விஷயத்தில் ரொம்ப வீக்காக இருப்பதால் என்ன செய்வது , எப்படி செய்வது என்ற தீவிர யோசனைக்கு பின்

மாமாவை அவ்வளவு ஈசியாக ஒத்துக்கொள்ள வைக்க முடியாது என்றும் அவனை டார்ச்சர் செய்தே காதலை ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும் என்று பிளானை ரெடி செய்தும் விட்டாள் .

( உண்மையெல்லாம் நீ செய்ய போறேதேல்லாம் டார்ச்சர்தான்மா பாவம் விச்சிக்குட்டி)

ஆனால் அவளுக்கு தெரியவில்லை அவள் காதல் மற்றவர்களை போல் அல்ல என்பது..அது அவளின் மனம் போல் தூய்மையானது என்றும் ,தாய் பால் போல் கலப்படம் இல்லாதது என்றும் ,இனக்கவர்ச்சி,கார்மோன் பிரச்சனை ,பணம் ,அழகு , ஏன் காதலை கூட அடிப்படையாக கொள்ளாமல் அன்பை மட்டுமே அடிப்படையாக கொண்ட அதிசயம் என்று..அவளை பார்த்த முதல் நாளே விஷ்வா தலை குப்பற விழப்போகிறான் என்றும்.

அவளுக்கு தெரியவில்லை எதையும் எதிர் பார்க்காமல் கண்களில் காதலையும் ,அன்பையும் ,உண்மையையும் நிரம்ப கொண்டு கூறப்படும் காதல் கல்மனம் கொண்டவனை கூட கரைத்துவிடும் என..

விஷ்வாவின் ரூமை விட்டு வெளியே வந்தவள் ஹாலில் அமர்ந்து கொண்டாள் .அதன் பின் சந்தோஷ் வந்து ஊருக்கு இருவரும் கிளம்பும் வரை அவன் தூங்கி விழித்தபாடாய் இல்லை....

சந்தோஷ் அவனை எழுப்பி உனக்கு அறிமுகம் கொடுக்கிறேன் என அவன் விஷ்வாவின் அறையை நோக்கி செல்லும் போதுகூட

அவனை தடுத்து "அந்த நெட்ட கொக்கை அடுத்த முறை பார்த்துக்கிறேன் , பாவம் ரொம்ப டையர்டா வந்ததுலிருந்து தூங்கிறான் ,ரொம்ப வேலை போல " என்று அவனை தடுத்துவிட்டாள்..

சந்தோஷ் குளிக்க போன கேப்பில் மீண்டும் தன் மாமனை கண்களில் நிரப்பி கொண்டு வந்துவிட்டாள்..ஏனென்றால் அவளின் பிளான் படி மீண்டும் விஷ்வாவை காண ஒருவருடம் ஆகுமே

( அப்ப இப்ப பார்க்க மாட்டாங்களா..... ஏன் மா ரைட்டர் என்ன மா நீ....இப்படி பண்ற )

நீ இவளோ சீரியஸலாம் யோசிக்காத அகலி எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது என அவள் மனசாட்சி அவளை கிண்டல் செய்தது...

( நாங்களும் தான் ...ஹா ஹா ஹா )

அவளின் மனசாட்சியை " நீ மூடப்பா " என்று அடக்கிவிட்டு ,கார் புக் செய்கிறேன் என்றவனை "நான் பஸ்லதான் போவேன்" என்று அழுது அடம்பிடுத்து இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள் கோயபேடிற்கு.

வீட்டிலையே அவள் ஈஸியா ஏமாற்றும் ஒரே நபர் நம்ம சந்தோஷ்தான்
அவள் லேசாக கலங்கி கொண்டு எதையாவது சொன்னால் தன் தலைமேல் கொண்டு அதை செய்து முடிப்பவன் ...

அவர்கள் சென்று 2 மணிநேரம் கழித்து எழுந்த விஷ்வாவிற்கு மனதெல்லாம் விவரிக்க முடியாத ஒரு புத்துணர்ச்ச்சி , நிறைவு அந்த மச மச கனவும், உள்ளங்கை கத கதப்பும் தந்த உவகையில் மிதந்து கொண்டிருந்தான் என்றால் மிகை இல்லை.

அந்த கனவு மீண்டும் வேண்டும் என்று சாப்பிட்டு சந்தோஷின் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பிவிட்டு தூங்க சென்றுவிட்டான். அதோ பரிதாபம் அவன் கனவு அழகூரை நோக்கி சென்று கொண்டிருந்தது..

( அடக்கிறுக்கு பயலே அதுக்கு தான் காலையிலிருந்து சாய்ங்காலம் வரை தூங்கினியாக்கும்... முழிச்சி இருந்தாலே உனக்கு அது நினைவாவே ஆகிருக்குமே )

***********************************************************
கண்ணன் (விச்சுவின் அண்ணன் ) தான் ஒரு வருடமாக ஓடாய் உழைத்து
கரெக்ட் செய்த தன் மாமியை தன் புல்லட்டில் வைத்துகொண்டு காபாலீஸ்வரர் கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

"ஏன் டி மாமி லவ் பண்ற பையனை எங்கையாவது பீச் ,பார்க்குன்னு அழைச்சிட்டு போகாம எப்ப பாரு கோவிலுக்கு அழைச்சிட்டு போறா", என்று புலம்பிக்கொண்டே வந்தான்.

"ஏன்னா சித்த பேசாம போறேளா , இன்னைக்கு பிரதோஷம் கோவிலுக்குதான் போகணும் , நானே யாரவது பார்த்துடுவாங்களோனு பயந்துகிட்டே வரேன்", என்றாள் கண்ணனின் காதலி ருக்கு , ருக்மணி அக்மார்க் ஐய்யராத்து மாமி .

பேசிக்கொண்டே செல்லும்போது பின்னாடி வந்த தண்ணீர் லாரி சத்தமாக ஹாரன் அடிக்க , தீடீரென்று கேட்ட சத்தத்தில் ருக்கு பயந்து பைக்கை ஒரு ஆட்டு ஆட்டி கண்ணனின் தோளையும் , இடுப்பையும் இறுக்கி பிடிக்க ,பைக் ஆடியதால் கண்ணன் தடுமாறி போய் பிளாட்பார்மில் பைக்கை மோதி நிறுத்தினான் .

வேகமாக இறங்கி "உனக்கு எத்தனை தட சொல்றது இப்படி சின்ன சத்தத்துக்கெல்லாம் பயப்படாதான்னு இந்நேரம் எவன் மேலாவது மோதி பரலோகத்திற்கோ, போலிஷ் ஷ்டேசனுக்கோ போயிருக்க வேண்டியது ஜஸ்ட் மிஸ் " என்று அவளை திட்ட அப்பொழுதுதான் கவனித்தான் அவள் இன்னும் நடுங்கி கொண்டிருந்ததை.

அவள் கையை பிடித்து அருகே அருகில் இழுத்தவன் " சாரி டா நீ இப்படி பயந்தாகொல்லியா இருந்தா ,எங்க அம்மாவை வீட்ல உள்ளவங்களை எல்லாம் எப்படி சமாளிப்ப , நீதான குடும்பத்துக்கு மூத்த மருமகள்,தைரியமா இருக்கணும் சரியா " என்று வருடத்தின் நூறாவது முறையாக அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தான் , சிரிப்புடன்

"இல்லைண்ணா இந்த ஹாரன் சவுண்ட் கொஞ்சம் ஹெவியா இருந்தது, சாரி " என்றாள் இன்னும் பயம் குறையாமல்...

( அப்பா இப்பதான் கதையில முதலா ஒரு பொண்ணு அடக்க ஒடக்கமா இருக்குப்பா ,),

" என் மண்டு மாமி தண்ணீர் லாரி சவுண்ட் அப்படித்தான் இருக்கும் ,எல்லாம் கொப்பன சொல்லணும் வீட்டுக்குள்ளயே வளர்த்து ,வளர்த்து ஸ்கூல், காலேஜ் , இப்ப வேலை பாக்குற ஸ்கூல் வர எல்லாம் அடி வாசலிலேயே சேர்த்துவிட்டுருக்கான்,அப்பறம் இப்படித்தான் இருப்ப ".....

( ஆனா ஊன இந்த ஆம்பிளைங்களுகெல்லாம் மாமனாரை திட்டலைனா தூக்கம் வராதே ")

"உன் பயத்துல இருக்குற ஒரே ஒரு நல்ல விஷயம் நான் உன்னை முதல் முதல் பார்த்தது நீ பயந்து கத்தும் போதுதான்"என்று கூறி அவளை அணைத்து கொண்டான் .

ஆம் ஒரு முறை அவன் கோவில் செல்லும் போது கோவிலுக்கு வந்திருக்கும் ஒரு பெண்மணியின் கையில் உள்ள வெங்கல அர்ச்சனை கூடை தவறி கீழே விழுந்த போது பயத்தில் அவள் "அம்மா " என்று போட்ட சத்தத்தில்தான் முதல் முதலில் அவளை பார்த்தான்.

பார்த்தது முதல் காதலில் விழுந்தவன் தான் இன்று வரை விழாமல் அவளையும் துரத்தி துரத்தி விழவும் செய்துவிட்டான்....

(விதி தன் கோரைப்பற்களை காட்டி அவர்களை நோக்கி சிரித்ததை பாவம் அவர்கள் அறியவில்லை )

நாட்கள் மாத முதல் 5 நாட்களில் சர சரவென்று காலியாகும் சம்பள பணம்போல் சர சரவென்று காலியாக ,ஒரு வருடம் முடிந்த நிலையில் ஜனனி மெடிசின் முடித்துவிட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் ப்ராக்டிஸ் செய்துகொண்டிருக்க ,

விஷ்வா 6 மாதம் ஒரு பிராஜெக்ட் விஷயமாக பெங்களூர் செல்ல வேண்டும் என்று கம்பெனி நிருவாகம் சொல்ல ,விஷ்வா தன் தந்தை தொழிலையும் பார்த்து கொள்ள அடிக்கடி செல்வதால் அவன் சென்னையில் இருப்பதுதான் சரி என்று சந்தோஷ் அந்த பிராஜெக்ட்டிற்காக செல்வதாக விஷ்வாவிடம் சொல்லிவிட்டான் .

தன் நண்பனின் புரிந்துணர்வை நினைத்து மகிழ்ச்சியுடன் அணைத்துக்கொண்டான் விஷ்வா..

இரண்டு மாதம் முடிந்த நிலையில் நான்கு நாட்கள் விடுமுறையில் 3 நாட்கள் ஊருக்கு சென்று தன் தேனுக்குட்டியின் டார்ச்சரை அனுபவித்துவிட்டு கடைசி நாள் தான் நண்பனை காண சென்னை வந்திருந்தான் .

சந்தோஷ் " விஷ்வா லவ்வை பற்றி என்ன நினைக்குற", என்றவன் விஷ்வா பார்த்த பார்வையில் “இல்லை பொண்ணுங்கள பார்த்தாலே இப்படி ஒதுக்கும் காட்டுறியே உனக்கு காதல் ,கல்யாணம் இதெல்லாம் எப்படி " என்று கேட்டான் தன் குண்டு தக்காளியை நினைத்த படி...

லவ் என்றதும் அவனுக்கு அந்த கனவு நியாபகம் வர கூடவே அந்த இதம் ,கத கதப்பு எல்லாமே நியாபகம் வந்தது.ஒரு வேலை இதுக்கு பெயர்தான் காதலா? ...ஆனால் எதன் மீது அந்த கத கதப்பின் மீத ,இல்லை அந்த கனவின் மீதா அவனுக்கு தெரியவில்லை

(அட பக்கி அது கனவு இல்ல நிஜம் )

அவனும் இந்த ஒரு வருடமாக அந்த கனவிற்க்காக ஏங்கி கொண்டிருக்கிறான் ஆனால் அந்த கனவு வந்தபாடாய் இல்லை..

விஷ்வா தன் எண்ணத்தை மறைத்தபடி " லவ்வெல்லாம் என் அம்மாவுக்கு பிடிக்காதுனு உனக்கு தெரியுமே டா ,அதனால அம்மா பார்க்குற பொண்ணுதான் லவ்வெல்லாம் என்று யோசித்தவன் நோ கமெண்ட்ஸ் " என்று நிறுத்தி கொண்டான் .

சந்தோஷ் " நான் அம்மாவை பற்றி கேட்கல உன்னை பற்றி கேட்குறேன் " என்றவனை அதை இதை பேசி பெங்களூருக்கு பிளைட்டும் ஏற்றிவிட்டான் "

ஒருவாரம் கடந்த நிலையில் சந்தோஷிடம் சில பல கெஞ்சல்களை போட்டு சில அனுமதிகளை வாங்கிக்கொண்டு தன் தம்பிகளை அழைத்துக்கொண்டு

"அம்மா மியான்கு பால் , சின்னுக்கு pedigire ,அப்பறம் எனக்கு மாதுளை ஜூஸ் " என்று ஆர்டர் கொடுத்தபடியே மூர்த்தியின்( சந்தோஷ் அப்பா ) வீட்டுக்குள் நுழைந்தாள் நம் அகலி .

அங்கு சோபாவில் உட்கார்ந்து நியூஸ் பேப்பர் படித்துகொண்டு இருந்த மூர்த்தியின் அருகில் சென்று தோளில் சாய்ந்து கொண்டாள் சின்னு மறு ஓரத்திலும் ,மியான் அவரின் மடியிலும் அவைகளுக்கான இடங்களை ஆக்கிரமித்து கொண்டது .

மூர்த்தி " என்னடா காலையிலேயே மூணு பேரும் சேர்ந்து வந்துருக்கீங்க ,பிளான் பெருசா “ என்றார்.

“ஆகா கண்டுபிடிச்சிட்டாரே” என்று அசட்டு சிரிப்பு சிரித்தவள் அவரின் கடா மீசையை இருபுறமும் பிடித்து முறுக்கி விட்டுக்கொண்டே " ஆமா அப்பா நான் எம்.பி,எ படிக்க சென்னை போகணும் அப்பாட்ட பேசுங்க " என்றதுதான் தாமதம் ...

கையில் ஜூஸுடன் வந்து கொண்டிருந்த செல்வி " அதெல்லாம் முடியாது. ஒரே ஒரு பொம்பள புள்ளைய மெட்ராசுக்கு படிக்க அனுப்பிச்சிட்டு நாங்க வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்க முடியாது " என்றார் .

அகலி அவரை முறைத்துவிட்டு மூர்த்தியை நோக்கி " அப்பா பிளீஸ்பா" என்றாள்

மூர்த்தி " அம்மா சொல்றதும் சரிதானாடா நாங்க இங்க உயிர்ப்போடு இருக்குறதுக்கு காரணமே நீதானாடா உன்னை விட்டுட்டு நாங்க எப்படி இருப்போம் ,

அத்தோட கல்யாணம் வரைக்கும் தான் எங்க கூட இருப்ப அதுவரை எங்க கூட இருடா பாப்பா "

( ம்க்கும் அவள் போறதே கல்யாணம் பண்றதுக்கு உங்க மருமகனை கரெக்ட் பண்றதுக்குத்தான் )


அகலி " அப்பா ப்ளீஸ்பா 2 வருஷம்தான் ,அப்பறம் குடு குடுனு இங்க வந்துறோம் "

(ஓம்ம்மா..... அவன் பஸ்ட் உன்னை லவ் பண்ணறானான்னு பாரு பக்கி.)

அவள் கெஞ்சலை தாங்க முடியாமல் மூர்த்தி " சரி பாப்பா என்ன காலேஜ் என்ன யூனிவர்சிட்டி " என்றார் .

( ம்க்கும் நல்லமாட்டிக்கோ “என்ன காலேஜாம் “,அப்பறம்”என்ன யூனிவெர்சிட்டியாம்” ஹா ஹா )

அவள் தலையை சொறிந்த படி "அண்ணாமலை யூனிவர்சிட்டி , டிஸ்டன்ஸ் ஸ்டெடிஷ்பா " என்றாள்.

செல்விக்கு வந்ததே கோபம் வேகமாக அவள் அருகில் வந்து மண்டையில் ஒரு கொட்டு வைத்து " அந்த இத்து போன யூனிவெர்சிட்டில படிக்கிறதுக்கு இங்க இருந்தே படிக்குறத்துக்கு என்ன " .

மூர்த்தி " ஆமா பாப்பா டிஸ்டன்ஸ் எடுக்கேஷன்(education ) தானா வீட்லேருந்தே படி டா " என்றார் .

(அது எங்க படிக்க போகுது அங்கிள் நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு )

இவங்கல ஈஸியா சாமாளிச்சி வீட்ல பேசலாம்னு பார்த்தா இதுவே இவளோ கஷ்டமா இருக்கே ,அப்பறம் அப்பா , அப்பத்தா , மருது அப்பா ,மல்லிகா அம்மா ஐயோ கடவுளே முடியல....

" டேய் மாமா " என்று மனதுக்குள் கருவியவள்

அவர் அடித்த தலையை தடவிக்கொண்டே முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு " அம்மா நான் இங்கவே இருந்து இருந்து எனக்கு உலக அறிவே இல்லம்மா " என்று ராஜாவை தேடிக்கொண்டே சொன்னாள்

(அடேங்கப்பா உலக நடிப்புடா சாமி , ராஜ இருந்தான் உன் மண்டைய பொலந்துருப்பான் )

அதனால நான் நான் உலகத்தை எதிர்கொள்ள நீங்க இதுக்கு ஒத்துக்கிவிட்டே ஆகனும்,அப்பதான் அப்பா நான் சொந்த கால்ல நின்னு நம்ம பிஸினஸை பார்த்துக்கு முடியும்.

,அப்பறம் நான் 3 கிளாஸ் வேற போகணும்னு முடிவு பண்ணிருக்கேன் , யோகா கிளாஸ் ,டைலரிங் கிளாஸ் ,கம்ப்யூட்டர் கிளாஸ் " என்று உலகத்தில உள்ள மொக்கையான 3 கிளாஸை தேர்வு செய்திருந்ததை சொன்னாள்.

மியானும் ,சின்னுவும் அது பங்குக்கு "லொள்" என்றும் "மியா" என்றும் கத்திக்கொண்டிருந்ததுகள் .

( சப்போர்ட் பண்றாங்கலாமா மா மா ) "

ஒருவழியாக அவர்களை ஏறக்கட்டி கையோடு தன் வீட்டில் உள்ளவர்களிடமும் தலையால் தண்ணிகுடித்துவிட்டு சம்மதமும் வாங்க ஒரு வாரம் பிடித்துவிட்டது ..

சந்தோஷ் 4 நாட்கள் விடுமுறை ஏற்கனவே எடுத்துவிட்டதால் ஒரு நாள் விடுமுறை மட்டுமே நிர்வாகம் எடுத்துக்கொள்ள அனுமதித்தது .

அதன் படி விஷ்வாவின் அப்பார்மென்டிலேயே ஒரு வயதான தம்பதிகள் வீட்டை வாடைகைக்கு கொடுத்துவிட்டு US ல் தங்கள் மகனுடன் சென்று செட்டில் ஆகப்போவாதல் அந்த வீட்டை அட்வான்ஸ் கொடுத்து புக் செய்துவிட்டு நாளை காலை சென்னை செல்லும் பேருந்தில் ஏறியும் அமர்ந்த்துவிட்டான்..

ஊரில் அதே மாரி அண்ணன் , மாரியின் மனைவி அவரின் வீட்டு வேலை செய்யும் ராணி அக்கா.

அவர்களின் ஒரே பொண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டதால் அவர்கள் வீட்டோடு தங்க ஒத்துக்கொண்டுவிட்டார்கள்,

வீட்டிற்கு தேவையான பொருட்கள் பின்னே ஒரு டெம்போ வேனில் , கூட துணைக்கு ராஜா என அனைவருடன் சென்னைக்கு மறுவீடு செல்வது போல் கிளம்பிவிட்டாள் நம் செல்ல ராட்சசி
( போல் என்ன ஆல்மோஸ்ட் அப்படித்தான் போகுது அந்த பக்கி..)

கூடவே அவன் தம்பிகளும் , அப்பார்ட்மென்டில் பெட்ஸ் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை என்று கூறியவர்களிடம் கெஞ்சி கூத்தாடி அனுமதியும் வாங்க வைத்துவிட்டாள்

வழக்கம் போல் ராஜா கத்திக்கொண்டிருந்ததை காதில் வாங்காமல் காரில் படுத்து தூங்கிவிட்டாள்.

மறுநாள் காலை அனைவருக்கும் பரபரப்புடன் விடிய அவளை காலேஜில் சேர்ப்பது,கிளாசில் சேர்ப்பது என அண்ணன் தம்பி இருவரும் அலைந்து கொண்டிருக்க யாருக்கோ வந்த விருந்தென்று அவளை அழைத்து சென்ற இடமெல்லாம் சந்தோஷ் வாங்கி கொடுத்த சாக்கிலேட்டை மொக்கி கொண்டிருந்தாள் நம் நாயகி..

( அவள் படிக்கவே வரலனு சொல்லிக்கிட்டு இருக்கேன்...இவனுங்க வேற)

ஒரு வழியாக எல்லா வேலையும் முடித்துவிட்டு விஷ்வாவிற்கும், ஜனனிக்கும் போனில் மட்டும் தகவல் சொல்லிவிட்டு , அழும் அகலியிடம் 100 பத்திரம் சொல்லி, பிராஜேக்ட் முடிந்ததும் சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று மனமே இல்லாமல் பெங்களூர் கிளம்பினான்..ராஜாவும் ஊருக்கு கிளம்பினான்.

மறுநாள் அவளின் ஸ்வப்பன சுந்தரியின் அத்தை மகனுக்கு கல்யாணம் என்பதால் அவனின் குடும்பம் முழுவதும் அங்கே சென்று விட்டது...அதனால் தான் அகலியை சென்னையில் விட அவர்களால் வர முடியவில்லை.அவனும் அங்கு செல்ல கிளம்பிவிட்டான்....

( ஸ்ஸ்...ப்பா.. ஒரு ஒரு சீன்லயும் ஒரு ஒருத்தவங்களையும் கட் பண்றதுக்குள்ள எனக்கு கண்ண கட்டுதுடா சாமி...பாவம் இந்த ரைட்டர்ஸ்லாம்)

மறுநாள் காலையிலேயே அகலி விஷ்வாவிற்கு கால்பண்ணி காதில் வைத்திருந்தாள்.. அழைப்பு போக அவன் எடுத்தபாடாய் இல்லை.அடுத்த முறை அடிக்கும் போது கடுமையுடன் ஒரு குரல் “ஹலோ” என்றது..

முதல் முதலில் தன்னவனின் குரலை கேட்டதில் கண் மூடி அதை ரசித்துக்கொண்டே நின்றுவிட்டாள்.அவன் மீண்டும் ஹாலோ சொல்லவே தன் தொண்டையை செருமிக்கொண்டே “ ஹலோ ,ஐம் அகலி அலைஸ் தேனுக்குட்டி” என்றாள்.

( மெஷின் ஸ்டார்ட்ஸ்....)

அகலி வித்யாசமான அழகான தமிழ் பெயர் சொல்லும் போதே தித்திப்பாய் இருந்தது விஷ்வாவிற்கு..சந்தோஷும் எப்பொழுதும் தேனு, தேனுக்குட்டி என்பதால் இந்த பெயரை அவன் கேட்டிருக்க வாய்ப்பில்லை

நேற்று சந்தோஷ் கால் பண்ணி அவளை பார்த்துக்கொள்ளவும் ,அவள் எங்கும் தனியாக சென்றது இல்லை என்பதால் கொஞ்ச பழக்கப்படும் வரை துணைக்கு செல்லுமாறும் சொல்லி இருந்தது அவனுக்கு நியாபகம் வந்து அவன் குரல் இதமாக “ சொல்லுங்க அகலி .எங்க போகணும் “ என்றான்.

பின்னே தன் நண்பனின் உயிர் ஆயிற்றே அவள் ,அவன் மூச்சு விடுவதைவிட தேனுக்குட்டி , வெள்ளெளி என்றதே அதிகம் அவனுக்கு தெரிந்த வரை...

அவன் பன்மையில் அழைத்ததில் கடுப்பாக்கியவள்.. “ நான் திநகர் போகணும் ,பக்கத்துல உள்ள பஸ்ஸ்டாப்ல வெயிட்பண்றேன், வந்துடுங்க “ என்று அவன் பதிலை எதிர்பார்க்காமல் கட் செய்துவிட்டாள்.

அவன் “கார் பார்க்கிங்கில் வைட் பண்ணுங்க” என்று சொன்னதெல்லாம் வெறும் காற்றுக்கு மட்டும்தான்..

சுள்ளுன்னு மண்டைக்கு ஏறுன கோபத்தை தன் நண்பனுக்காக அடக்கிக்கொண்டவன் ரெடி ஆகி அவள் சொன்ன பாஸ்டாப்பிற்க்கு தன் டுகாட்டி பைக்குடன் சென்றுவிட்டான்.ஆனால் அவள் வந்த பாடாய் இல்லை..

நம்ம தேனுக்குட்டி ஆடி அசைந்து தன் தம்பிகளுடெல்லாம் விளையாடிவிட்டு கையில் ஒரு குட்டி பையுடன் கிளம்பிவிட்டாள்.

அரைமணிநேரமாக காத்திருந்தவன் “ come soon” என்று மெசேஜ் அனுப்பிவிட்டு வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டான்.

அடுத்த 10 நிமிடமும் அவள் வாராமல் போகவே கடுப்புடன் தன் அப்பர்ட்மெண்ட் வாசலை நோக்கியவன் அப்படியே உறைந்தான், உருகினான், உயிர்தெழுந்தான் என எந்த வார்த்தைகளும் போட்டு கொள்ளலாம்.

சுற்றி உள்ள எல்லா பொருள்களும் மங்கலாக அவனிற்கு 10 அடி தூரத்தில் சாதரண பெண்களை விட சற்று அல்ல கொஞ்சம் அதிகமாகவே குள்ளமான, ஒல்லியாக ஒரு பெண் ப்ளூ கலர் முட்டியை விட 10 இஞ்ச் கீழே உள்ள ஒரு ட்ராக் பேண்ட், தொழ தொழவென்று கருப்பு கலர் புல் ஸ்லீவ் செமி பட்டன் வைத்த டீசேர்ட் போட்டுக்கொண்டு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

( ஏன் அகலி முத தடவை மாமாவை பார்க்க போற நல்ல புடவையாய் கடிக்கலாம்ல ,இப்படி குப்பை அள்ளுறவ மாறி அரை டவுசரை போட்டுறுக்கியே )

பொட்டு அளவுக்கு கூட மேக்கப் இல்லை குளித்து முடித்து அப்படியே உடை மாற்றி வந்திருப்பாள் போல ஏனென்றால் தூக்கி போட்ட கொண்டை இன்னும் அவிழ்க்கவில்லை கழுத்தில் ஒரு சின்ன செயின், ஒரு குட்டி தோடு..நல்ல மல்லிப்பூ போல் மாசு மறுவற்ற பால் போன்ற நிறத்தில் குழந்தை தன்மை மாறாத முகத்தோடு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள் அவனின் செல்லமா...

கண்களை வேறு எங்கும் அசைக்க கூட முடியவில்லை விஸ்வவால் .

ரொம்ப சின்ன பொண்ணா இருக்கா ஒரு 12th படிப்பாள என்ற தன் மனசாட்சியின் கேள்விக்கு அவனின் பதிலும் ஆமாம் என்றே இருந்தது.ஏனென்றால் அவள் 50 கிலோ என்று சொல்வதே அதிகமதான், 46 லிருந்து 48 வரைதான் இருப்பாள்.

அவள் அருகில் வர வர அவன் இதயம் துடிப்பது அவனுக்கே பெரிறைச்சலாய் இருந்தது...

என்ன கருமம் உணர்வு இது என்றே அவனுக்கு தெரியவில்லை..

( இதுக்கு பேருதான் “love at first sight” நாங்கனாப்புல யாரு ஆளாளப்பட்ட விஷ்வாமுத்திர முனிவரையே பொண்ண வச்சி கரெக்ட் பண்ண பிளான் போட்டவங்க, சுண்டக்க விச்சுலாம் எம்மாத்திரம் என்று விதி வேற நேரம் காலம் தெரியாம கவுண்டர் விட்டது)

அவளும் அபார்ட்மெண்ட் வாசல் வரும் போதே அவள் மாமனை பார்த்துவிட்டாள். அவன் மேல் உள்ள கோபம் எல்லாம் பறந்து போக ஆ என்று அவனை பார்த்தபடியே அருகில் வந்தாள்.அவள் அருகில் வரும் வரை அவனிடம் எந்த அசைவும் இல்லை.

அவள் அருகில் வந்து “வீர் “, வீர் என்று இரண்டு முறை அழைத்தாள்.. மாமா மாமா என்று இரண்டு முறை அழைத்தாள் அவன் அசையவே இல்லை மீண்டும் அவன் கையை பிடித்து வீர் என்று கூறினாள்..

எங்கே அவன் அதற்கும் அசையவில்லை. அவள் கையை பிடித்த நொடி. அந்த கத கதப்பு, அந்த இதம்...நடு நெஞ்சில் சுளீரென்ற ஒரு சுகம் ஒரு வருடம் முன் தான் தூங்கும் போது வந்த கனவில் உணர்ந்த அனைத்தையுமே அனுபவித்து கண்களை மூடிக்கொண்டான் விஷ்வா...

வருவாள்
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 15:

வெறுக்கிறாய் நீ என்னை.....
வெறுக்கிறது காலமும் என்னை.....

காயப்பட்டு காயப்பட்டு கந்தல் துணியாகிவிட்டது என் இதயம்.....

இதயம் கிழிந்தவளே இருந்தது போதும்......

வந்துவிடு ஏதோ ஒரு அழைப்பு...

செதுக்கி வைத்த காதலும்....
உருகி நேசித்த காதலனும்.....
உதறிய நிலையில்.....

ஊன் இழந்த உடலும்.....
தவணை முறையில் சுவாசமும்....

நீடிக்குமோ நெடுநாள்....

கட்டுக்குள் வந்தனயாவும்...
என் காதல்....
என் வாய்க்கு உள்பூட்டு போட்டுவிட்டது.......

எழுத்தையும் இயக்கத்தையும் நிறுத்திவிட்டது....
என் கைகள்....

அனலை மட்டுமே வீசுகிறது அனைவரின் வார்த்தையும்...

விரட்டிக்கொண்டே இருக்கிறார்கள் சுடுகாடு வரை...
இருப்பினும்.......
இயலும் வரை....
என் இமை மூடும்வரை...
என் காதலையும், காதலனையும் மட்டுமே நேசிப்பேன்.....

உறைந்து நின்றவன் இடத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் போகவே “ அய்யோ மாமா ஒரு வேலை லூசா ஆகிட்டிச்சோ, வாயிப்பில்லையே நாம நம்ம வேலையை இன்னும் ஷ்டார்ட் பண்ணவே இல்லையே “என்று யோசித்தவள் அவனை அப்படியே பிடித்து பஸ்டாப்பில் உட்கார வைத்துவிட்டு தானும் அருகிலே உட்காரும் போது தான் நியாபகம் வந்தது .

தலையில் அடித்துக்கொண்டே வேகமாக அவள் கொண்டு வந்த பையில் உள்ள கப் ஐஸ் கிரீமை எடுத்து பார்த்தாள். அது உருகி கூழாக ஆகி இருந்தது

( கொய்யாலே......முடியல.....ஐஸ் கிரீம்க்கு இவளோ சீனா)

அதை எடுத்து குடித்துக்கொண்டே வேடிக்கை பார்க்க கிளம்பிவிட்டாள். எங்கே ஒலித்த ஹாரன் சவுண்டில் தன்னிலை அடைந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான்.

அவன் அருகில் ஐஸ் கிரீமை குடித்துக்கொண்டிருந்த அவனின் பிரகஸ்பதியை ஒரு நொடி ரசித்தவன் ,பின் தன் அம்மாவின் சபதம், தனக்கான பெண்களின் நிலை, அவனது ஈகோ எல்லாம் நியாபகம் வர

முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு “ ஹாலோ யாரு நீங்க கொஞ்சம் தள்ளி உட்காருங்க” என்றான்
அவனிடம்” ஒரு நிமிடம்” என்று கண்களை சுருக்கி கேட்டவள் மீதி உள்ள கூழையும் குடித்து விட்டு அவனை நோக்கி “ வீர் நான்தான் அகலி , வாங்க போகலாம் “ என்று அவனின் கடுமையான முகத்தை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் சிரிப்புடன் கூறினாள்.

அவனோ “ அய்யோ இவதான் அகலியா என் மானம் போச்சி, இவளை இப்படி ஆன்னு சைட் அடிச்சத பார்த்துட்டு என்ன நினைக்க போறாளோ” என்று தன்னையே மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டவன் அவளிடம் எதுவும் சொல்லாமல் கோபமாக தலையை மட்டும் சம்மதாமாக ஆட்டினான்.

( வாய்ப்பில்லை ராஜா.....வாய்ப்பில்லை....அந்த லூசுக்கு அந்த அளவுக்கெல்லாம் அறிவில்லை.. நீ பிரீஷ்(freeze)
ஆகி நிற்கும் போது அது உன்னை தான் லூஸுனு நினைச்சது... சோ நீ அது கண்ணு முன்னாடியே தாராளமா சைட் அடிக்கலாம்..அதுக்கு தெரியாது..)

“ம்ம்ம்’ என்று சொன்னவளிடம் “ரோட கிராஸ் பண்ணனும் “ என்று அறிவிப்பு போல சொல்லவிட்டு அவன் முன்னே செல்ல நம்ம அகலியோ “ரோட கிராஸ் பண்ணனுமா நமக்கு அரை அடி ரோட கிராஸ் பண்றதுக்கு ஆறு ஆளு துணைக்கு வேணும் இது வேற 100 அடி ரோடா இருக்கே” என்று

யோசித்தவள் விஷ்வா ரோடை கிராஸ் செய்ய போகும் போது அவன் கை சந்துக்குள் கையை விட்டு அவன் கையை இறுக்கி கட்டிக்கொண்டவள் “ வீர் ரோட கிராஸ் பண்ண பயமா இருந்தா நான் உங்க கையை பிடிச்சிக்கிறேன், பயப்படாதிங்க “ என்ற சொன்னவளின் கை அவனின் கையை இன்னும் இறுக்க பிடித்துக்கொண்டு கண்கள் இரண்டும் பீதியுடன் இருபக்கமும் ரோட்டை பார்த்தது..

அவன் கையை பிடித்ததும் மீண்டும் ஒரு முறை ஒரு நொடி அந்த உணர்வை உணர்ந்த நம்ப விஷ்வா ஒரு நொடியில் தன் முகத்தை மாற்றிக்கொண்டு “ தொட்டு பேசாதிங்க அகலி ,எனக்கு பிடிக்காது” என அவள் கையை உதறிவிட்டான்.

அவள் அதை எல்லாம் கொஞ்சம் கூட அசட்டை செய்யாமல் “ ரொம்ப சீன போடாதீங்க,எல்லாம் உங்களோட சேப்டிக்குதான், நான் எல்லாம் ரோடு கிராஸ் பண்ற போட்டி வச்ச கோல்ட் மெடல் வாங்குற ஆளு ,அப்பறம் என்னை இந்த வாங்க போங்கன்னு இனி கூப்பிடாதிங்க, நான் உங்களை விட சின்ன பொண்னுதான்” என்று அவன் உருவிய கையை மீண்டும் பிடித்துக்கொண்டாள்.

அவள் அவனுடன் ஒட்டிய விதத்திலையே அவனுக்கு தெரிந்தது அவளின் பயத்தை தன் கையை பிடித்ததற்கு அவள் சொன்ன காரணத்தை கேட்டவன் சிரிப்புடனயே “ சரியான வாலா இருப்பா போல” என்று நினைத்துக்கொண்டே அவளின் கையை விலக்காமலே மறுபுறம் அழைத்துச்சென்று விட்டவன் அப்பொழுதுதான் கவனித்தான்.

அவள் சாப்பிட்ட இல்லை... இல்லை... அவள் குடித்த கூழ் அவள் கன்னத்தில் கோடாக இழுப்பி இருந்ததை அதை பார்த்து “ உன் கன்னத்தில நீ சாப்பிட ஐஸ் கிரீம் ஒட்டிருக்கு” என்றான்.


“ஓ” என்றவள் அவனின் பிடித்த கையை விடாமல் அவளின் கன்னத்தை அவனின் இடது மார்பில் வைத்து வலதுபுறமும் இடதுபுறமும் தேய்த்தவள் “ ஓகே வாங்க போகலாம்” என்று அவனை இழுத்துக்கொண்டு சென்றாள்.

அவன் தான் அவளின் தொடர் தாக்குதலில் நிலைகுலைந்து நிராயுதபாணி ஆனான்.

அவள் தீண்டகள் எதிலும் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை அது அவனின் உணர்வுகளை துண்டுவதற்காகவோ, இல்லை தான் காதலிப்பதை அவனுக்கு உணர்த்துவதற்காகவோ,இல்லை அவனை மயக்குவதற்க்காவோ இதில் எதுவுமே இல்லாமல் அவள் செய்கைகள் அனைத்தும் இயல்பாக மிக இயல்பாக, உரிமையாக ,ஏதோ ஜென்மம் ஜென்மமாய் பழகியது போல் இருந்தது.

அவனும் அன்னையை தங்கையை தொட்டுருக்கிறான்தான் ,அணைத்து இருக்கிறான்தான் ஆனால் இந்த உணர்வு தான் பொத்தி வைத்த ,தான் பாதுகாத்து வைத்த ,தான் விலக்கிவைத்த அனைத்தையும் ஆழி பேரலையாய் பொங்க செய்தது...

அவள் எதுவும் செய்யாமலே அவன் உணர்வுகளை தூண்டிவிட்டாள், அவனை அவள்பால் காதல் கொள்ள செய்துவிட்டாள் இதோ அவனை மயக்கவும் செய்துவிட்டாள்.அவளை அறியாலேயே...

“அய்யோ அரைமணி நேரத்துலையே நம்மல மூச்சி முட்ட வச்சிட்டாலே குள்ளச்சி” என்று மனசுக்குள்ளே பெருமூச்சு விட்டான்.

அவன் இதை எதையும் பார்வையால் கூட வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஏனோ அவனுக்கு அது தோன்றவும் இல்லை

அவள் இழுத்த இழுப்புக்கு சென்றவன் “ பைக் இங்க இருக்கு” என்றான் ,

“ஐயோ வீர் பைக்லாம் ரொம்ப போர் வாங்க பஸ்ல” என்று அவன் பதில் சொல்லும் முன் தி.நகர் என்று போர்ட் போட்டு வந்த பஸ்ஸில் ஏற்றியும் விட்டாள்.

நம்மை இப்படி நிலைகுலைய செய்கிறாளே என்ற கடுப்பில் “ கால் மீ விஷ்வா, விஷ்வேந்திரன், அப்பறம் என்னை தொட்டு பேசாத எனக்கு பிடிக்கல “ என்றான்

அவனின் பின் பாதியை காற்றில் விட்டவள் “ அது ரொம்ப பெருசா இருக்கு, அப்படில்லாம் என்னால கூப்பிட முடியாது , வேணுனா மாமானு கூப்பிடவா”என்றாள் கண்களில் அன்பு , காதல் என இது எல்லாவற்றையும் தாண்டிய ஒரு உணர்ச்சியை தாங்கிக்கொண்டு.

“ இல்லை இல்லை நீ .. நீ... வீர்னே கூப்பிடு” என்று ஆளாலப்பட்ட நம்ம விஷ்வாவையே வார்த்தைகளை தந்தி அடிக்க செய்துவிட்டாள் நம்ம தேனுக்குட்டி...

“ டேய் விஷ்வா இவள் உன்னை கவுக்குற பிளனோடதான் வந்துருக்கா போல ஸ்டேடி ஸ்டேடி “ என்று மனதுக்குள்ளே அவன் மல்லுக்கட்டிக் கொண்டிருத்தான் ....

அவனை கடைத்தெருவில் அழைத்துக்கொண்டு “இது பக்கத்து வீட்டு சோனுக்கு, இது மீனு குட்டிக்கு, இது மாரி அண்ணனுக்கு இது ராணி அக்காக்கு , இது சின்னுக்கு, இது மியான்கு “ என எல்லாருக்கும் வாங்கி குவியோ குவி என்று குவித்துவிட்டாள் விஷ்வாவின் பணத்தில்.

“பர்சேஸ் பண்ண வரும்போது பணம் எடுத்துக்கிட்டு வர தெரியாத என்று பணத்தை கொடுத்த படி “ வார்த்தைகளை கடித்து குதறினான் விஷ்வா..

(அவள் ஐஸ்கிரீம் கவரை மட்டும் எடுத்துக்கிட்டு ஆட்டிகிட்டு வரும் போதே எங்களுக்கு தெரியும்.. )

“ அதான் நீங்க வரீங்களே வீர் “ என்று ஒரு வார்த்தையில் மீண்டும் நம்ம ஆளை கிளீன் போல்ட் ஆக்கிவிட்டாள் நம் அகலி.அவளுக்கெல்லாம் தன் மாமா ,தன் காதலன் , தன் கணவன் என்ற உணர்வே சில வருடங்களாக இருப்பதால் இது பெரிதாக தெரியவில்லை.

அவன்தான் பார்த்த முதல் நாளிலே என்ன மாதிரியான உணர்வு,உறவு என்று புரியாமல் குழம்பி போனான். அவளிடம் தான் ஏன் கோபம் கொள்ளவில்லை என்ற கேள்விக்கு தன் நண்பனுக்காக என்று சமாதானமும் செய்து கொண்டான்.

ஆனால் அந்த சமாதனத்தை அரை நாழிகை கூட அவன் மனசாட்சியிடம் ஒத்துக்கொள்ள வைக்க முடியவில்லை..ஆனாலும் அவனும் விடாமல் அதே காரணத்தை சொல்லிக்கொண்டே இருந்தான்.

ஒரு வழியாக நான்கு மணிநேரமாக அவனைபடுத்தி எடுத்து லிஃட்டில் ஏற்றி 5 வது மாடியை நோக்கி சென்று கொண்டிருத்தாள்.அவன் 4 வது மாடியிலேயே இறங்கிக்கொண்டான்.

வீட்டிற்கு வந்தவன் சந்தோஷிடம் சிறிது நேரம் போன் பேசிவிட்டு பிரஸாகி ஹாலில் உட்கார்ந்து கடந்து போன 4 மணி நேர சுனாமியை சிரிப்புடன் நினைத்து கொண்டிருந்தான்.

இவள் சந்தோஷின் உயிராக இருப்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை ஒரு நாளில் என்னையே இந்த அளவிற்கு மாற்றிவிட்டாளே எந்த ஒரு கல்மிஷமும் இல்லாமல் , இயல்பாக இப்படி ஒட்டிக்கொள்கிறாளே கெட்டவர்களின் வாடையே இல்லாமல் வளர்ந்து இருப்பாள் போல....என நினைத்துக்கொண்டிருக்க அவனின் எண்ணத்தின் நாயகியே ஹாலிங் பெல்லை அழுத்தினாள்.

இந்த நேரத்தில் யார் என்ற யோசைனையோடு சென்று திறந்ததுதான் தாமதம் தன் தம்பிகள் சகிதமாய் உள்ளே நுழைந்துவிட்டாள் .


அவள் வந்தது அவனுக்கு பிடித்திருந்தாலும் “ ஏய் இங்க ஏன் வந்த உன் வீட்டுக்கு போ” என்றான்.
“ போர் அடிக்குது வீர் மாரி அண்ணனும், ராணி அக்காவும் மார்க்கெட் போய் இருக்காங்க,மீனுவும், சோனுவும் ஸ்குல்க்கு போய்ட்டாங்க ,இது சின்னு, இது மியான் என் பிரதர்ஸ் என பெருமை பொங்க இருவரையும் அறிமுகபடுத்திவிட்டு,அதுகளும் அவனுக்கு சமத்தாக “ஹேண்ட்ஷேக் “ கொடுத்தது

“டேய் விஷ்வா உன் கேலிபர் என்ன.. படிக்கும் போதே கம்பெனி ரன் பண்ண உன்னை இப்படி ஆக்கிட்டாளே இந்த குள்ளவாத்து என்று அவனும் அதுகளுக்கு கை கொடுத்தான்.

“எங்களுக்கு தனியா இருக்க பயமா இருக்கு நாங்க இங்க கொஞ்ச நேரம் விளையாடிட்டு போறோம்” என்றவள் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் “ hide and seek” விளையாட தாயார் ஆகிவிட்டாள்.

அவள் கையை பிடித்து தடுத்தவன்“எருமை மாடு வயசாகுது, இன்னும் என்ன விளையாட்டு” என்றான் கடுமையாக .

“வயசுக்கும் விளையாடுறத்துக்கும் என்ன சம்மந்தம்” என்று அவனை எதிர் கேள்வி கேட்டவள் விளையாட சென்று விட்டாள்.

“ஆமாம் என்ன சம்மந்தம்” என்று விஷ்வாவையே யோசிக்க வைத்துவிட்டு அவள் விளையாட சென்றுவிட்டாள்.

ஆம் வயசு அதிகம் எல்லாம் உடலுக்கு மட்டும் தானே....மனதிற்கு எங்கே இருந்து வந்தது இந்த கட்டுப்பாடுகள் எல்லாம்.மனதால் இளமையானவர்கள் அனைவரும் உடலாலும் இளமையே..


அடுத்த ஒரு மணிநேரங்கள் மூவரும் அவனின் வீட்டை ஒரு வழி செய்துவிட்டு அங்கு இருந்து கிளம்பினதுகள்..

இன்று இரவு விஷ்வா அவனின் செல்ல குள்ளவாத்துவின் குஷியான கொடுமைகளை நினைத்தபடியே தூங்க


(அவனின் செல்ல குள்ளவாத்தா ...அதுவும்.....ஒரு நாளுளையேவா விஷ்வா “ we r very dispoinment you da”...)

நம்ம தேனுக்குட்டி சந்தோஷிடம் இரண்டு மணி நேரங்கள் இன்று நடந்த அனைத்தையும் அறு அறுவென்று அறுத்துவிட்டு படுக்கையில் வந்துபடுத்து தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

“ அகலி விளையாட்டெல்லாம் போதும் இப்ப தீவிரமா யோசி, சந்தோஷ்ட வேற மாமா விஷயத்தை சொல்லணும் ,பிளான் பண்ணு மாமாட எப்படி லவ் ப்ரபோஸ் பண்றது,அவனை எப்படி ஒத்துக்கவைக்குறதுனு.

( அட போம்ம நீ காலையில பண்ண பெர்பாமென்ஸ் பய அங்க காலி இதுல நீ புதுசா வேற பண்ண போறியா)

இந்த முசுடு மாமா வேற எப்ப பார்த்தாலும் உர்ராங்கொட்டான் மாறி முகத்தை வச்சிருக்கு என்ன பண்ணலாம்....என்ன பண்ணலாம் ...என்று 5 நிமிடம் யோசித்தவள் 6வது நிமிடம் தூங்கி போனாள்.

( அட தூங்குமூஞ்சி கழுத,திங்கிறது,தூங்குறது இதை மட்டும் சரியா பண்ணு...)

மறுநாள் காலையிலேயே வழக்கம் போல் விடிய இன்று அகலி கல்லூரி செல்லும் நாள் வாரத்தில் இரண்டு நாட்கள் அவளுக்கு பாடவகுப்புகள் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் வார இறுதி நாட்களை தேர்ந்தெடுக்க அந்த நாட்களில் அகலிக்கு விஷ்வாவை தொல்லை செய்யும் அரும்பெரும் வேலை இருப்பதால் வாரத்தின் இடையில் இரண்டு நாட்களை தேர்வு செய்ந்திருந்தாள்.

அதில் இன்று முதல்நாள் கிளம்பி வெளியே வந்தவளின் கால் நேராக விஷ்வா அபார்ட்மென்டின் முன் நின்றது.நேற்று அகலிக்காக விடுமுறை எடுத்தவன் இன்று அவசர அவசரமாக கிளம்பி கொண்டிருக்க ஹாலிங் பெல் சத்தத்தில் வந்து கதவை திறந்தான்.

அங்கே அவனின் நேற்றைய இரவின் கனவின் இளவரசி பிளாக் கலர் லாங் ஸ்கெர்ட் ,வைட் கலர் டீசேர்ட், கருப்பும் வெள்ளையும் கலந்த ஒரு ஸ்டோலை கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டு வந்து நின்றாள்.

“காலையிலேயே ஆரம்பிச்சிட்டாலே” என்று அவளை உள்ளுக்குள் ரசித்தவன் வெளியே முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு “ என்ன” என்றான்

( அதுக்கெல்லாம் மசியிரவல்லா நம்ம தேனுக்குட்டி)

“ வீர் நான் வைட் பன்றேன்,கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வாங்க போகும் போது என்னை கிளாஸ்ல விட்டுட்டு போங்க” என்று கூறிவிட்டு சோபாவில் சென்று அமர்ந்து டிவி பார்க்க தொடங்கிவிட்டாள்.

எதையும் செய்றீங்களா,முடியுமா அப்படி எதும் கேட்குறது இல்லை , செஞ்சிடுங்க, பண்ணிடுங்கனு என்னவோ வீட்ல உள்ளவங்கள்ட கேட்குறமாறிதான் பேசுவாள் குள்ளவாத்து “ என்ற மனசுக்குள்ளேயே செல்லமாக முணுமுணுத்தவன்

“எனக்கு வேலை இருக்கு நீ பஸ்ல போய்க்கொள் “ என்று கோபமாக கூறிவிட்டான்.

அதுக்கும் அவள் “ ஓ சரி வீர் எந்த பஸ்ல எப்படி போகணும்னு சொல்லுங்க எனக்கு தெரியாது நான் யார்ட்டையாவது கேட்டு போய்க்கிறேன்” என்றாள் அதையும் இயல்பு போல..

நம்ம விச்சுக்குதான் பாவமாக போய்விட்டது “ என் கோபம் ,முகதிருப்பல் எதுமே இவளை பாதிக்க மாட்டேன் என்கிறதே ,எப்படி இவளால் இப்படி இயல்பாக என்னிடம் வளைய வர முடிகிறது” என்று அவன்தான் மறுபடி குழம்பிபோனான்.

“ இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கொண்டுவந்து விடுகிறேன் அதுவும் பைக்கில்தான்,பஸ்ஸெல்லாம் நோ” என்றான்.

“ ஐயா ,தேங்யூ வீர் “ என்று அவன் இரு கன்னத்தையும் கிள்ளியவள் அவன் “தொட்டு பேசாத அகலி” என்பதை கேட்க அங்கே இல்லை போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டாள்.

“வாலு “ என்று சிரித்து கொண்டே அவளை அழைத்துக்கொண்டு கிளாசில் விட்டுவிட்டு அவன் அலுவலகம் சென்றான்.இன்று ஒரு நாள் மட்டும் இன்று ஒரு நாள் மட்டும் என்று கடந்த ஒரு வாரமாக அவளின் 3 கிளாஸ்,MBA கோச்சிங் என அனைத்திற்கும் காலையில் அவன்தான் அழைத்து செல்வது வரும் போது அவனே கேப் புக் செய்து வீட்டிற்கு வரும் வரை அவளை கண்காணிக்கவும் செய்தான்.

இவை எல்லாவற்றையும் அவளுக்கு செய்வது தனக்காக பெங்களூர் சென்றிருக்கும் தன் நண்பனுக்காக என்று அவனுக்கு அவனே ஒரு நாளைக்கு 100 முறை சொல்லிக்கொண்டான்.


( அட போப்பா அதை உன் மனசாட்சியே ஒத்துக்க மாட்டேங்குது...நாங்க எப்படி நம்புவோம்)


அன்று விடுமுறை என்பதால் விஷ்வா வீட்டில் இருந்தான் மாலை 5 மணிக்கு அகலி அவளின் சகாக்கள்( சின்னு, மியான்,மீனுக்குட்டி,சோனு) அனைவருடன் வீட்டுக்குள் நுழைந்தவள் “ வீர் ஒரு 1 அவர் அக்காவும், மாரி அண்ணனும் கோவிலுக்கு போயிருக்காங்க எங்களுக்கு அங்க பயமா இருக்கு” என்று தீவிர முக பாவத்தோடு சொன்னவள்..

கையில் உள்ள சாட்டை கீழே விரித்து ஏதோ கட்டம் கட்டமாக பென்சிலால் வரைந்து இருந்த அந்த சாட்டை பார்த்து எல்லோரிடமும் சீரியஸான முக பாவத்தோடு விலக்கிக்கொண்டிருந்தாள்.

இந்த காமெடிபீஸ் சீரியஸா எதையோ டிஸ்கேஸ் பண்ணிக்கிட்டு இருக்கே “என்று துரத்திலிருந்த ரசித்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்தான் விஷ்வா...



வருவாள்...
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 16 :

இருள் தொடரும் பொழுதில்....
இமைக்காமல் உன் நியாபகம்....
பௌர்ணமி வெளிச்சத்தில் பனிப்பூபோல் உன் புன்னைகை....

காற்றுவந்து என் காதோடு பேசும்போது .....
உன் காந்தபார்வை....
தேவதைகள் பொறாமைப்பட....
மாறிப்போகிறேன் உன் பாதம்படும் நிலமாக...
விரிந்துகிடக்கிறேன்....
ஒரு முறை உன் விரல்களாலே தீண்டு.....
மாய்ந்து போகிறேன் மறுநொடி....

“டேய் சோனு உங்க அக்கா என்னடா ஏதோ ஹெவியா பிளான் பண்ணிட்டு இருக்கா என்ன விஷயம்” என்றான்

“மாமா அது சஸ்பென்ஸ் அக்கா உங்களுக்கு நாளைக்கு செல்லும்” என்றவன் அகலி முறைத்த முறைப்பில் பிரஜெக்ட்டில் கவனமாகிவிட்டான்.

இவனுக்கு இவனெல்லாம் மாமானு கூப்பிட ஒன்னும் பண்ணாது, நான் கூப்பிட மட்டும் நெற்றி கண்ணை துறந்துகிட்டு கண்ணாலேயே எரிக்க வேண்டியது, இனி உன் பேச்செல்லாம் எவன் கேட்பான்” என்ற மனசுக்குள்ளேயே பேசிக்கொண்டவள் எல்லாம் பேசி பிளான் செய்துவிட்டு

“ எங்களுக்கு பிரட் ஆம்லேட் செஞ்சி கொடுங்க பசிக்குது , நாங்க போய் பால்கெனில உள்ள மணி பிளாண்ட் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வர்றோம்” என்று எழுந்தவளை

உனக்கு உன் கருவாயன் ஒரு வீடு புடிச்சி குடுத்துருக்கானுதான் பேரு சாப்பிடுறதுக்கும் தூங்குறதுக்கும்தான் அங்க போற , இதுல முக்கால்வாசி நேரம் கொட்டிக்கிறதும் இங்கதான் பொம்பள புள்ளையா என்னைக்காவது ஒரு நாளாவது சமைக்க முயற்சி பண்ணிருக்கியா,

ஒரு வாரமா கிளாஸ் போற ஒரு நாள் கூட புக்கோ எடுத்து படிச்சோ , இல்லை எதேதோ கிளாஸ் போறியே அது சமந்தமா நீ எது பண்ணியும் நான் பார்த்தது இல்லை. எப்ப பாரு கால் டிக்கெட்ல கூட சேராத இதுகளோடையே சுத்திக்கிட்டி இருக்க”

என்று அவள் கேட்ட பிரட் அம்பலேட்டை செய்து கொடுத்து கேள்விகளை கேட்டிக்கொண்டிருந்தான்.

அவளோ “ யாரு இங்க படிக்கிறதுக்கு வந்த நான் உன்னை உஷார் பண்றதுக்குதான வந்தேன் என்று மனசுக்குள் நினைத்தவள்

( உன் பேச்செல்லம் பெரிய மனுசதனமாதான் இருக்கு செயல்ல முட்டையால பாப்பா இருக்க நீ...)


“ சும்ம திட்டாதிங்க வீர் கிளாஸ்ல கவனிகாம இருக்குறவங்கதான் வீட்ல வந்து படிப்பாங்க நானெல்லாம் “சிட்டி ரோபோ “ மாதிரி கண்ணாலையே ஸ்கேன் பண்ணிடுவேன்” என்றாள்.


“ இந்த பேச்சிக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை சாப்பிட்டுட்டு இடத்தை காலிபண்ணுங்க எல்லாம் நான் வெளிய கிளம்பனும்” என்றான்.

“ எப்ப பார்த்தாலும் துரத்திகிட்டே இரு” என்று முணுமுணுத்தவளை “ என்ன அங்க சத்தம் “ என்று அதட்டவே “ ஒன்னும் இல்லை மாமோய்” என்று அவன் பதில் சொல்வதற்குள் ஒரே ஒட்டமா ஓடிவிட்டாள்.

“ வாலு” என்று தன் தலையை அழுத்திக்கோதியவனின் நினைவில் நேற்று லிஃப்ட்டில் நடந்தது நியாபகம் வந்தது.வழக்கம் போல் அவளை அவளை கிளாசில் விடுவதற்கு லிஃப்ட்டில் சென்று கொண்டிருக்கும் போது 2வது மாடியில் கரண்ட் நின்று லிப்ட் நின்று போக விஷ்வா சில வருடங்களாக இங்கே இருப்பதால் 2 நிமிடத்தில் வந்துவிடும் என்று விஷ்வா நிற்க

லிப்ட் நின்ற அடுத்த நொடி அகலி பாய்ந்து வந்து இவனை கட்டிக்கொண்டவள் பயத்தில் “மாமா, மாமா என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க , ஐயோ லிப்ட் இப்ப அனேகன் படத்துல அறுந்து விழுந்த மாறி விலப்போகுது நம்ம சாகப்போறோம் என்று உச்ச ஸ்தாதியில் அழுதுக்கொண்டிருக்க

அவன்தான் லிஃப்ட்டின் புழுக்கத்திலும் காஷ்மீர் குளிரை உணர்ந்தான் அதுவும் அவள் நேராக அவனை அணைத்திருக்க மூச்சி நின்று செத்தே போகும் நிலைக்கே சென்றுவிட்டான் . தன் நெஞ்சின் வரையே உயரம் இருப்பவள் அவன் மார்பில் தலையை அழுத்தி புதைத்திருந்த அவளை இறுக்கி அணைக்க துடித்த கைகளை பெரும்பாடுப்பட்டு அடக்கிக்கொண்டு நின்று கொண்டிருந்தான்.

அடுத்த ஒரு நிமிடத்தில் கரண்ட் வந்து லிஃப்ட் தரைத்தளத்திற்கு வந்தும் அவள் அவனை விட்ட பாடாய் இல்லை.

முதல் முறை பயம் வரும்தான் அதெற்கென்று இப்படியா என்று நினைத்து சிரித்தவன் அவளை வலுக்கட்டாயமாக தன்னிடமுருந்து பிரித்து “ அகலி நம்ம கீழ வந்து 10 நிமிஷம் ஆகுது, உன்னிடம் எத்தனை தடவை சொல்றது தொட்டு பேச கூடாதுனு

அவள் தொட்டால் அவன் உருகி பனிக்கட்டி ஆகிவிடுகிறான் அவனும் எத்தனை நாள்தான் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொள்ளமுடியும், எதுவும் விபரீதமாக நடந்துவிட்டாள் சந்தோஷின் முகத்தில் எப்படி முழிப்பது, அவனின் நம்பிக்கைக்கு எப்படி துரோகம் செய்வது என்று அவளிடம் கடுமையாக சொல்லலாம் என்று நினைத்து கூறினான்

அப்பறம் மாமாலாம் சொல்ல கூடாது சரியா “என்றான் உறுமலாக.

அவளுக்கு வந்ததே கோபம் “ டேய் தடியா, வளர்ந்து கெட்டவனே, நெட்டை கொக்கு,நெட்லிங் மரம் , பனைமரம் என்று அவன் உயரத்தை முடிந்த வரை டேமேஜ் செய்தவள் நானே என் உயிர் போகப்போதுன்னு பயந்துட்டு இருந்தா உனக்கு இதெல்லாம் ரொம்ப முக்கியமா ,போடா..... என்று அவனை ஏக வசனத்தில் பேசியவள் அழுகையும் ஆத்திரத்துடன் பக்கத்தில் உள்ள பார்க்கிற்கு சென்றுவிட்டாள்.

“அடிப்பாவி கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் இப்படி பேசுறாளே ” என்று அவனால் யோசிக்க மட்டுமே முடிந்தது.

விஷ்வா பெண்களிடம் பேசுவான் என்று சொன்னாலே சொன்னவர்களை வேற்று கிரகவாசியை பார்ப்பதுபோல் பார்ப்பார்கள் அவனின் குடுப்பத்தார்களும், அவனை சார்ந்தவர்களும்.

இவ்வளவு கேவலமாக திட்டுவங்கினான் என்று சொன்னால் சொன்னவர்களுக்கு கண்டிப்பாக்க கட்டையால் அடிதான்.

அவள் சென்ற திசையை பார்த்து சிறுதுநேரம் பார்த்து கொண்டு நின்றவனை “ அவள் பயத்துலதான அப்படி பண்ணாள், நீ இவளோ சீன் போட்டுருக்க தேவை இல்லை” என்று அவன் மனசாட்சி காரித்துப்ப அவளை காண அவள் சென்ற திசை பக்கம் சென்றான்.

அங்கு பார்க்கில் போட பட்ட சிமெண்ட் பெஞ்சில் நின்று கொண்டு பக்கத்தில் உள்ள செம்பருத்தி செடியில் உள்ள பூவை எட்டி எட்டி பறித்து கொண்டிருந்தாள் நம் நாயகி.

அவளை எப்படி சமாதானம் செய்ய போகிறோம் இன்னும் அழுதுக்கொண்டே இருக்கப்போகிறாள் என்று நினைத்து கொண்டு வந்தவனுக்கு அங்க கண்ட காட்சி சிரிப்பை வர வைத்தது.அவன் நின்று கொண்டே பறித்துவிடும் செடியில் அவளால் பெஞ்சில் ஏறி கூட பறிக்க முடியவில்லை...

“ அகலி” என்று கூப்பிட்ட உடன் திரும்பி பார்த்தவள் “வீர் ஆபிஸ் போகலையா நீங்களும் இன்னைக்கு லீவா என்று தான் இன்று லீவு என்று மறைமுகமாக சொல்லிவிட்டாள்.

( உன் வேலை எங்களுக்கு தெரியுமே பிராடு)..

அவளிடம் மன்னிப்பு கேட்கவந்தவன் சற்று நேரதிதிற்கு முன்பு அபார்ட்மெண்ட்டே அதிரும் படி அழுத்திற்கான எந்த சுவடும் இல்லாமல் இருந்தவளை மகிழ்ச்சி பொங்க பார்த்தவன் எல்லாமே இவளுக்கு 5 நிமிஷம்தான் போல என்று நினைத்துக்கொண்டு .

வயசு மட்டும்தான் ஆகிருக்கு இன்னும் பாப்பாதான் என்று நினைத்தவன் அவளின் வார்த்தையில் “எதுக்கு கிளாஸ் போகல” என்றான்.

“இல்லை வீர் நான் லிஃப்ட்டில ரொம்ப பயந்துட்டேன்ல அதான்” என்று பாவம் போல சொன்னவளை மிரட்டி கொண்டு கிளாசில் விட்டுவிட்டு வந்ததை நினைத்துப்பார்த்துக்கொண்டே சென்னைக்கு அவுட்டரில் இருக்கும் தன் குடும்பத்தை காண சென்றான் விஷ்வா...

அன்று இரவு ஜனனியிடம் போனில் பேசிக்கொண்டிருந்த சந்தோஷிற்கு விடாமல் கால் செய்து டார்ச்சர் செய்து கொண்டிருந்தாள் அகலி...

பயந்துகொண்டு அவளிடம் “அப்பறம் பேசுகிறேன்” என்று சொல்லிவிட்டு இவளுக்கு கால் செய்தால் “வீடியோ கால் பண்ணு “ என்று கட் செய்துவிட்டாள்.

அவன் வீடியோ கால் செய்யும் போது லாப்டாப்பை சோஃபாவின் மீது வைத்துவிட்டு காலை இரண்டையும் தூக்கி மேலே வைத்து இரண்டு கைகளால் காலை கட்டிக்கொண்டு முகத்தை முட்டிக்காலின் மீது வைத்துக்கொண்டு கண்களை விடாமல் நான்கு முறை விடாமல் சிமிட்டிவிட்டு சந்தோஷையே பாவமாக பார்த்தாள்.

அவனிடம் எதுவும் காரியம் ஆகவேண்டும் என்றால் இப்படித்தான் பாவமாக செய்வாள் என்பதை உணர்ந்த சந்தோஷ் சிரிப்புடன் “தேனுக்குட்டிக்கு என்ன வேணும், இல்லை என்ன சொல்லனும் “ என்றான்.

“ சந்தோஷ் “....
“மம்ம்ம்ம்ம்”

“சந்தோஷ்”
“ சொல்லுடா தேனுக்குட்டி”

“ நான் வந்து உன்கிட்ட ஒன்னு சொல்லணும் “

“சொல்லு பாப்பா”..

“ நான் வந்து ம்ம்ம்ம் மம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் “ என்று தலையை மேலும் கீழுமாக ஒவ்வொரு ம்ம்ம்ம் க்கும் இடைவெளி விட்டு ஏதோ சொல்வது போல் கூறினாள்.

பாவம் சந்தோஷிற்கு தான் எதுவும் புரியவில்லை அவள் சொன்ன பாவனைவயில் அவனுக்கு சிரிப்பு வர சிரிதித்துக்கொண்டே “ ஏய் வெள்ளெளி ஒன்னும் புரியல டி தெளிவா சொல்லு “ என்றான்.

( எங்களுக்கும் ஒன்னும் புரியலபா சரியான அறைவேக்காடு உன் தேனுக்குட்டி)

அவள் மறுபடி “ ம்ம் ம்ம்ம்ம்” என்க “ தேனு புரியுற மாறி சொல்லு டா அப்பத்தான் நான் ஊருக்கு வரும் போது உனக்கு பானிபூரி வாங்கி தருவேன்” என்றான்.

( இத நீ முதலயே சொல்ல வேண்மாப்பா இப்ப எப்படி விஷயம் வருதுன்னு மட்டும் பாரு...).

“ அதுவந்து அதுவந்து நான் நான் விஷ்வா மாமாவை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுகிறேன்” என்று சொல்லிவிட்டு கைகளால் கட்டி இருந்த கால்களுக்குள் தலையை மறைத்துக்கொண்டு கண்கள் மட்டும் லேசாக தெரியும்படி அவனை வெட்கத்தோடு பார்த்தாள்.

அவள் சொன்ன விஷயத்தை விட அவளின் வெட்கம்தான் அவனுக்கு சுவாரசியமாக இருந்தது. அவள் எவ்வளவு வளர்ந்தாலும் அவனுக்கு எப்போதுமே குழந்தைதான்.

அவளின் வெட்கம் அவனுக்கு சிரிப்பை வர வைக்க சிரிப்புடனே “ ஒரு வாரத்துல என்ன ,எப்படி லவ்வு , அதுவும் வெட்கம்னா என்னனு தெரியாத நீ எல்லாம் வெட்கபடுற அளவிற்கு “ என்றான்.

அவனுக்கு இருவரையும் தெரியுமே அகலி குழந்தை என்றாள் , அவன் நண்பன் அவன் நம்பிக்கைக்கு உரிய தளபதி ஆயிற்றே...

“ ஓ இதுக்கு பெயர்தான் வெட்கமா என்று மனதுக்குள் நினைத்து கொண்டவள்...

( நீ வெட்கபட்டது எங்களுக்கே ஆச்சிரியம்தான் இப்பதான் தெரியுது நீ தெரியாம பட்டுடன்னு...அதனால பரவாயில்லை விடு விடு..)

அவளோ இன்னும் தன் முகத்தை காட்டாமலே தன் காதலின் வரலாறை ஆதி முதல் அந்தம் வரை சொல்லிமுடித்தவள் இப்பொழுது விஷ்வா தன் வாழ்க்கையில் இன்றியமையாமை என்பதையும் சொல்லிமுடித்தாள்.

இந்த காதலின் ஆரம்பமே ,தான் தனக்காகதான் விஷ்வாவை காதலிக்க ஆரம்பித்து இருக்கிறாள் என்று கேட்க கேட்க அவனின் கண்கள் கண்ணீரை சிந்த அதை அவளுக்கு காண்பிக்காமல் மறைத்தவன், பின்னே அவளுக்கு தெரிந்தால் கதறி கதறி ஊரை கூட்டிவிடுவாளே அவளின் தேனுக்குட்டி.

என்னதான் தனக்காக என்றாலும் அப்படி வரும் காதல் சரி இல்லையே என்று அவளிடம் “ தேனுக்குட்டி இந்த மாறி காரணத்கெல்லாம் லவ் பண்ண கூடாது என்று பேச ஆரம்பித்தவனை தடுத்து

( அதானே யாரையும் பேசவிடாத ...லொட லொடனு நீயே பேசு)

“ இல்லை இல்லை சந்தோஷ் இந்த காரணம் இல்லாமல் போனாலும் எனக்கு மாமா மட்டும்தான் , அவங்க தவிர எனக்கு வேற யாரும் இல்லை... அவங்க எனக்கு எப்போதுமே யாரோ மாறி தெரிஞ்சது இல்லை , நம்ம குடும்பத்துல ஒருத்தவங்களாதான் தெரியிறாங்க, நம்ப குடும்பத்தை தவிர எனக்கு மாமா கூட இருக்க மட்டும்தான் பிடிச்சிருக்கு” என்று தனக்கு தெரிந்த வகையில் தனக்குள் முளைவிட்ட தன் காதலை நேசத்தை விளக்கிவிட்டாள்.

சந்தோஷிற்கும் சந்தோசம்தான் தன் நண்பனை தவிர வேறு யார் நம் தேனுக்குட்டிக்கு சரியாக இருக்க போகிறார்கள்,அதேபோல் விஷ்வாவை போல் தன் தேனுக்குட்டிக்கு யார் சரியாக இருக்க போகிறார்கள்.

அகலி பால் நிலா என்றால் விஷ்வா செப்பு கலக்காத தங்கம் ஆயிற்றே இருந்தாலும் அவன் அம்மா , அவனுக்கு காதலுக்கும் ஒத்துவராதே என்று யோசித்தவன்

“தேனும்மா எல்லாம் சரிதான் டா, நான் வேணுனா அவங்க வீட்ல பேசி உனக்கு அவனையே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் “ என்றவனிடம்

“ ஏன் சந்தோஷ் மாமாவுக்கு என்ன பிடிக்காத , அவங்க வீட்ல சொன்னதான் கட்டிக்குமா “ என்றாள்

“ உன்னை போய் யாருக்காவது பிடிக்காம போகுமாடா தேனு இருந்தாலும் அவனுக்கு லவ்வேல்லாம் செட்டாகதுடா”

( செட்டாகுது ஐஸு......)

“ஹா ஹா “என்று சிரித்தவள் “ ஏய் பிளாக்கி இன்னும் கொஞ்ச நாலுள்ள மாமவே வந்து உன்னுகிட்ட வந்து எனக்கு என் அகலியை கொடுத்துடுனு நான் கேட்க வைக்கல, நான் உன் தேனுக்குட்டியே இல்லை என்று சபதம் போல் உரைத்தவள் அதுவரை நீ மாமாட்ட எதும் சொல்லாதே என்று உறுதி வாங்கியவள் நிம்மதியாய் தூங்கி போனாள்.

( கண்டிப்பாக சொல்வான்தான் ஆனால் அதற்கு முன் என் சித்துவிளையாட்டுகள் சில இருக்கிறதே என்று விதி விகாரமாய் சிரித்தது)

சந்தோஷும் “செத்தான் சேகர்” என தன் நண்பனை நினைத்து சிரித்தவன் தூங்க சென்றான்.பின்னே அவளின் அட்டகாசங்கள் தெரிந்தவனாயிற்றே...

மறுநாள் காலையில் பார்த்தசாரதி கோவிலின் புலியோதரையை சாப்பிட்டு கொண்டு தன்னவளை சைட் அடித்துக்கொண்டிருந்தான் கண்ணன்.

அவன் பார்வையில் லஜ்ஜையுற்றவள் “ ஏன்னா எங்கயாவது ஒரு பெரிய கம்பெனியை நிர்வகிக்கிறவங்க மாறி நடந்துகிறீங்களா எப்ப பாரு” என்று செல்லமாய் சலித்துக்கொண்டாள் ருக்கு.

“ என் பொண்டாட்டியை நான் பாக்குறேன் உனக்கென்ன “ என்று கூறிவிட்டு அவன் வேலைய விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தான்.

அவனை திசை திருப்பும் பொருட்டு “ மாமி ரொம்ப கோபபடுவாங்ளா நீங்க பண்றது எல்லாம் சரி வருமா , ஒரு வேளை அவங்க நினைக்குறது உண்மையா இருந்தா என்னணா பண்றது” என்று பயத்துடன் கூரினாள்.

“ ரொம்ப இல்லை கொஞ்சம் கோபபடுவாங்க தான் உன் மாமி , ஆனா ரொம்ப நல்லவங்க எங்க எல்லாரு மேலையும் ரொம்ப பாசம், கண்டிப்பா நாமா 2 பேரும் எங்க வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்க முன்னாடி போய் வாழ்ந்து அவங்க இன்னைக்கும் நம்பிட்டு இருக்குற விஷயம் பொய்னு நிரூப்பிக்கிறோம்.

அப்பறம் என் தேவதை பொண்ண போய் யாராவது ராசி இல்லன்னு சொல்லுவாங்களா உன் தெருவில் கடைசியில் ஆரம்பித்து முனை வரை எல்லா நல்ல காரியத்திற்கும் உன் முகத்துலதான முழிச்சிட்டு போறாங்க” என்றான் .

ஆம் ருக்கு அப்படி ஒரு முகராசிகாரி.அதை இதை பேசி அவளை சிரிக்க வைத்து கொண்டு அவளின் வேலை செய்யும் பள்ளி வாசலில் விட்டுவிட்டு அவன் பேக்டரி சென்றான்.

( விதி அந்த பெண்ணின் மரணத்திற்கான அபாய்ண்மெண்டை மரண தேவனிடம் கொடுத்து அனுப்பிவிட்டது )

*******†**********************
அன்று மாலை வேலை முடித்து வீட்டிற்கு வந்த விஷ்வாவை அரைமணிநேரத்தில் பார்க்கிற்கு வருமாறு அகலி மெசேஜ் அனுப்ப அவனும் வந்து சேரவே

“மாமா” என்று ஆரம்பித்தவள் அவன் முறைத்த முறைப்பில் “ வீர் நான் ஒன்னு கொடுப்பேன் ஆனால் நான் சொன்னதுக்கு அப்பறம்தான் நீங்க வாங்கிக்கணும் என்று பெரும் பீடிகையிடன் ஆரம்பித்தாள்

“ குள்ளவாத்து அப்படி என்ன கொடுக்க போகுது வழக்கமா நம்மடேர்ந்துதான புடுங்குவாள் என்று அவன் மனம் 1000 யோசித்தாலும் அவளின் வார்த்தைக்கு உப்பு புளி என எதுவும் சொல்லாமல் தன் சார்ட்ஸின் பாக்கெட்டில் இரண்டு கைகளையும் விட்டுக்கொண்டு அசையாமல் நின்றான்.

சாண்டில் கலர் ஷார்ட்ஸ் , ரெட் கலர் டீஷர்ட்டில் 6 அடியில் பாரின் ரிட்டர்ன் மாறி நிற்கும் தன் மாமனை வந்த வேலையை மறந்து சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டாள் அகலி.

முழுதாக 5 நிமிடம் பொறுத்து பார்த்தவன் எதுவும் சொல்லாமல் திரும்பி நடந்த போது தன்னிலை அடைந்தவள் “ உனக்கு அறிவே இல்லை அகலி “ என்று தலையிலேயே அடித்துக்கொண்டு அவன் பின்னே சென்று அவனை பிடித்து நிறுத்தினாள்.

( உனக்கு இப்பதான் தெரியுமா எங்களுக்கு கதை ஷ்டார்ட் ஆகும் போதே தெரியும் உனக்கு அறிவு மட்டும் இல்லை அச்சம் மடம்,நாணம், பயிற்பு இப்படி எதுமே இல்லைனு)

பின் அவன் முன் மண்டியிட்டு தான் வாங்கியிருந்த கார்டை அவன் முன் நீட்டியவள்

“ மாமா ஐ லவ் யூ வில் யூ மெரி மீ , என்று மொத்த பார்க்கும் வேடிக்கை பார்க்க தன் காதலை தன் மாமாவிடம் கூறிவிட்டாள்.


வருவாள்....
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 17 :


நான் உன்னை காதலிக்கிறேன் என்று.....
நீயும் என்னை காதலித்துவிடாதே...

என் கொடிய காதலை உன் பிஞ்சி இதயத்தால் தாங்க முடியாது........

அற்புதமான காதலை மட்டும் அல்ல.....

அதை உன்னிடம் சொல்ல முடியாத ....
அதி அற்புதமான மௌனத்தையும் நீயே தந்தாய்......

என் செய்கைகளில் இருக்கும் காதலை மட்டும் எடுத்துக்கொண்டு....
காமத்தை உதறிவிடும் அதிசய அன்னம் நீ....

என்னை எங்கு பார்த்தாலும் ஏன் உடனே நின்று விடுகிறாய் என்றா கேட்கிறாய்......

நீ கூடாத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும் நின்றுவிடுகிறாய்.....

உன்னை பார்க்க உனக்கே
இவ்வளவு ஆசை இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும்....

பார்த்தது போதும் கண்பட்டு போகிறது என்றாய்...

ச்சீ.. ச்சீ...உன்னை பார்த்து என் கண்ணாவது கெட்டுப்போவதா...
துளிர்த்து கொண்டல்லவா..
இருக்கிறது...


பிங்க் கலர் முக்கால் கால் பேண்ட், டார்க் ப்ளூ தொழ தொழ டீசேர்ட் போட்டுக்கொண்டு
யாராவது தெரியாதவர்கள் பார்த்தால் கண்டிப்பாக அவனை ஜெயிலில் போடுவது உறுதி மைனர் பெண் மனதை கெடுத்ததற்காக , அவ்வளவு குட்டி உருவம் அவனவளுக்கு.

எப்பொழுதும் தூக்கி கட்டியிருக்கும் அவள் கருங்கூந்தல் இன்று சின்ன கிளிப்ல் அடக்கி விரித்து விடபட்டிருக்க முட்டி போட்டிருப்பதால் அதை தரையில் தவழ்ந்து கொண்டிருந்தது .கோவிலுக்கு சென்று இருப்பாள் போல திருநீறு அவளின் முழு நெற்றியையும் இடபுறமிலிருந்து வலபுறமாக கோடாக ஆக்ரமித்து இருந்தது.

கண்களில் முழு நேசத்தையும் தாங்கி தன்னை நோக்கி காதலை யோசிக்கும் தன்னவளை மனம்முழுக்க போராட்டத்துடன் பார்த்தான் விஷ்வா.

எப்படி இது நடந்தது ,இது சாத்தியமா ,எப்பொழுது என்னவள் என் மீது காதலை கொண்டாள்
இந்த சமானியாயனுக்கு இந்த கள்ள கபடம் தெரியாத, துன்பத்தின் சுவடே தெரியாமல் வாழும் இந்த தேவதை பெண்ணை அடையும் தகுதி இருக்கிறதா என்று எது ஏதோ யோசித்தவனின் கைகள் தானாக அந்த கார்டை வாங்க உயர...

“ மாமா நான் என்ன சொன்னேன் ஒரு நிமிஷம் “ என்றவளின் குரலில் தன் சிந்தனை அறுந்து வெடுக்கென்று கைகளை பின்னோக்கி இழுத்துக்கொண்டு கோபமாக அவளை பார்க்க அவளோ

முட்டி போட்டு இருப்பதால் பார்க்கில் உள்ள மண் காலை குத்த முகத்தை வலியில் சுருக்கிக்கொண்டு அவளின் தலைக்கு மேலேயும் அங்கே உள்ள சிமெண்ட் பெஞ்சின் பின்னேயும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தாள் அவஸ்தையுடன்.

அவள் பார்வை சென்ற திசையை தானும் நோக்கியவன் அங்கே கண்ட காட்சியில் இறுக்கம் தளர்ந்து வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.


அவர்கள் இருவரும் நின்ற தலைக்கு மேல் உள்ள பெரிய மரத்தின் தழைவான கிளையில் ஒருவன் கையில் ஒரு கூடை நிறைய பூவுடன் அமர்ந்து இருக்க யார் இந்த கால் டிக்கெட் என்ற அவனின் நியாபக அடுக்கில் தேடும் போது கிடைத்தது அவன் ரோஷன் 9 வது படிக்கும் அடுத்த பிளாக் சிறுவன்.

அவன் மேலே உட்கார்ந்து கேம் விளையாடிக்கொண்டு இருந்தான்.

இவனோட எப்ப கூட்டாளி சேர்த்தா என்று யோசனையுடன் சிமெண்ட் பெஞ்சி பின்னே பார்க்க அவளின் மீதி சகாக்கள் கையில் மொபைல் போனை பிடித்துக்கொண்டு சாக்லேட்டை சாப்பிட்டு கொண்டு இருக்க, அந்த மொபைலை பார்க்கும் போதே தெரிந்தது அது பிளே லிஸ்டில் ஏதோ ஒரு குறிப்பிட்ட பாட்டு எடுத்து பிளே பட்டனை மட்டும் அழுத்தும் நிலையில் இருந்தது..

அவளின் செல்ல தம்பி சின்னு பக்கத்து வீட்டு ஜூலி ( டாக்) சைட் அடித்தக்கொண்டு இருக்க மியான் அதை பார்த்து ரசித்து கொண்டிருந்தது.

இதுலயே தெரிந்திருக்கும் அகலியின் பிளான்.2 நாட்களாக அந்த வானராக் கும்பலுடன் சேர்ந்து சாட்டை தூக்கிக்கொண்டு மொட்டை மாடியில் சில மணிநேரம், பால்கெனியில் சில மணி நேரம், அவளின் அபார்ட்மெண்டில், இவனின் அப்பார்ட்மென்டில் சில மணி நேரம் என போட்ட அத்தனை பிளான்களும் இதுதான்.

சரியாக அவள் காதலை சொல்லும் நேரம் ரோஷன் மரத்திலிருந்து பூக்களை கொட்ட வேண்டும் , மீனுவும், சோனுவும் ஒரு காதல் பாடலை போட வேண்டும் என்பதுதான்.


ஆனால் அந்த வானாரக்கூட்டங்களோ அவள் அந்த செயல்களை செய்வதற்காக லஞ்சமாக கொடுத்த சாக்லேட்டை சாப்பிட்டு கொண்டும், அவள் 3 மணி நேரம் வாடகையாக கொடுத்த மொபைலில் கேம் விளையாடிக்கொண்டும் தனக்கு கொடுத்த டாஸ்க்கை மொத்தமாக கெடுத்ததுகள்.

அவன் பார்த்ததும் அதை தானும் பார்த்தவள் அங்கே அவர்கள் பண்ணிக்கொண்டு இருப்பதை பார்த்து மேலும் கீழுமாக மூச்சை வாங்க முறைத்தாள்.


அவன் மனசுக்குள் விழுந்த பிரண்டு சிரித்தாலும் வெளியில் மெதுவாக சிரித்துக்கொண்டு “ அகலி வேற விளையாட்டு விளையாடு” என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர

“ என்னது விளையாட்டா” என்று காண்டாகியவள் அந்த மொத்த சொதப்பல் கேஸ்குகளையும் எறிப்பதுபோல் முறைத்துவிட்டு “ யோவ் மாமா விளையாட்டுக்கும் இல்ல, நிஜமாவே “ என்று அவன் பின்னே கூறிக்கொண்டே ஓட அவள் கூறியதால் நின்றவன்

அவளை நோக்கி திரும்பி முகத்தை சீராயஸாக வைத்துக்கொண்டு அவளை நெருங்கி அவள் தாடையை பிடிக்கவே அவளுக்கு ஒரு மாறி ஆகிவிட்டது.

இது என்ன மாறியான உணர்வு என்று யோசிப்பதற்குள் விஷ்வா நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே “ அகலிமா இந்த விளையாட்டுக்கு நீ அண்டர் எலிஜிபிள்” என்றானே பார்க்கலாம்.

அவளுக்கு வந்ததே கோபம் அவன் கையை வேகமாக தட்டிவிட்டவள் “ போடா தடியா என்றவள் அவன் “மரியாதையா பேசு” என்று அதட்டி முடிப்பதற்குள் “ நீ நான் சொன்ன பேச்சி கேட்குறியா, நான் ஏன் நீ சொல்றத கேட்கணும் நான் இப்படிதான் பேசுவேன் டா டா, டபுள் டா” என்றவள்

“ உங்க யார் கூடையும் இனி பேசமாட்டேன்” என்று அவளின் நட்பு வட்டாரங்களை நோக்கி சென்றவள் விஷ்வாவை மூச்சி வாங்க முறைத்துவிட்டு” உன்னோடையம் தான்” அவள் கையில் வைத்திருந்த கார்டை கீழே போட்டுவிட்டு டங்கு டங்கு அன்று போக அவளின் எடுபிடிகளும் சமாதானம் செய்து கொண்டே பின்னே சென்றார்கள்.

அவள் கீழே போட்டு சென்ற கார்டை எடுத்து பார்த்தான். அதில்

எனக்கென வாழ ஒருபோதும் நினைத்தது இல்லை....
எனக்கென அழ ஒரு போதும் நினைத்தது இல்லை.....
என்னவோ தெரியவில்லை உனக்கென வாழவும் அழவும் ஆசைபடுகிறேன்... என்றும்

“ Knowing you is my fate
Becoming your friend was my wish
But...Fall in love with you i cant control over...

என்றும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அழகாக எழுதிருந்தது. “பரவாயில்லையே குள்ளவாத்து கவிதையெல்லாம் அழகா எழுத்திருக்காளே எங்கு திருட்டிருப்பாள் ” என்று யோசித்துக்கொண்டே அந்த கார்டை எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டான்.

( விச்சு என்டேர்ந்துதான் திருடுனாள் அந்த குள்ளக்கொரங்கு...என் கவிதை....)

அவள் கூறிய காதலையும் சொன்ன விதத்தையுமே அந்த இரண்டு மணிநேரத்தில் இரண்டாயிரம் முறை நினைத்து பார்த்துக்கொண்டு வீடு திரும்ப அகலி அவளின் வானரக் கூட்டங்களோடு அவனின் வீட்டை ஆக்ரமித்துக்கொண்டிருந்தாள்.

காலையில் அவர்களோடு சண்டை போட்டது என்ன இப்பொழுது இப்படி உரசிக்கொண்டு திரிவது என்ன என்றும் இவள் எல்லா விஷயத்திலும் இப்படித்தான் மெச்சுரிட்டி இல்லாமல் இருப்பாளோ ,அப்படியென்றால் தன்னிடம் காலையில் காதலை சொன்னது கூட இவளுக்கு “time being” தானோ..? தான் அவள் சொன்னதை நினைத்து நினைத்து பூரித்துக்கொண்டிருக்க அவள் சொன்னது தான் நிராகரித்தது என்ற எந்த சுவடும் இல்லாமல் விளையாடிக்கொண்டு இருக்கிறாளே என்று யோசித்துக்கொண்டே முக இறுக கோபமாக உள்ளே சென்றான்.

ஆனால் அவனுக்கு தெரியவில்லை காதல், அன்பு எல்லா நிலையிலும் உண்மையானதா இருக்கும் என்றும் அவனின் குள்ளச்சியின் காதல் அவனின் மறுப்பை எல்லாம் சட்டை செய்யாது ஒரே நிலையில் இருக்கும் என்று..


மனவளர்ச்சி இல்லாதவர்கள், மனநிலை குன்றியவர்கள் கூட வீட்டில் உள்ள யாரோ ஒருவரிடம் மட்டும் அதிக பாசத்தோடு இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம் .

அதே போல் 10 , 15 வருஷம் காதலித்து அதாவது 10 வது 9 வது படித்ததிலிருந்து காதலித்து கல்யாணம் செய்தவர்களை பார்த்திருக்கிறோம் .

உண்மையான காதல் ,அன்பு எல்லாம் எந்த நிலையிலும் மாறாது..

மேலும் அது காலத்திற்கு ஏற்ப , ஹாரமோன்களுக்கு ஏற்ப பாசம், நேசம் , காதல், ஆசை காமம் , அரவணைப்பு , ஆறுதல் என வேற்று வடிவம் பெரும் என்பது..

உள்ளே போய் எல்லாத்தையும் ஏன் ஏதற்கென்று தெரியாமலே தூக்கி போட்டு உடைக்க “அவள் நிஜமாக உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் அதை நீ என்னவோ உடனே ஏத்துக்குற மாறி சீன போடத “என்று அவன் மனசாட்சி காரி துப்ப அதனுடன் மல்லுக்கட்டு கொண்டு நின்றவனை வெளியில் அகலியின் “ மாமா” என்ற குரல் கலைக்க “இவளை “ என்று பல்லைக்கடித்துக்கொண்டே வெளியில் வர அவனின் மல்லி பூ மட்டும் சோலோவாக நின்று கொண்டிருந்தது..


அவனும் வழக்கம் போல் வந்த அவளை வார்த்தையால் டின்னு கட்ட எப்பொழுதும் அவனை பேச விடாமல் பதிலுக்கு பதில் பேசுபவள் இன்று அவனை அண்ணாந்து பார்த்துக்கொண்டு எதையோ யோசித்துக்கொண்டும் சுற்றி எதையும் தேடிக்கொண்டே இருக்க

சிறுது நேரத்தில் வேகமாக சென்று பக்கத்தில் உள்ளே சோபாவில் ஏறி நின்றவள் “ மாமா சீக்கிரம் இங்க வா , சீக்கிரம் இங்க வா “ என்று அவனை நச்சரிக்க அவனும் கோபத்தை மறந்து என்னவோ ஏதோ என்று அவள் அருகில் செல்ல நொடி கூட தாமதிக்காமல் அவனின் இரு கன்னத்திலும் அழுத்தமாக முத்தத்தை கொடுத்து அவன் அதிர்ந்து நின்றதை பொருட்படுத்தாமல்

“ மாமா 2 ல ஒன்ன தொடுன்னு உனக்கு நான் “ஒரு” ஆப்ஷன்தான் கொடுத்துருக்கேன் அது நீ என்னைதான் காதலிக்கணும், என்னை மட்டும்தான் காதலிக்கணும், என்னை தான் கல்யாணம் பண்ணனும் என்பதே...அவன் மூக்கை பிடித்து திருகி அவன் தலையை செல்லமாக கலைத்துவிட்டு இறங்கியவள் “ அப்பறம் லவ் பண்ணா இப்படித்தான் அடிக்கடி கிஸ் கொடுக்கணுமாம் ரோஸன் சொன்னான் “என்றவள் துள்ளி குதித்து கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

( பெரிய கேடியா இருப்பான் போல அகலிமா நீ அவன்கிட்ட நீ பேசாத)

விஷ்வாதான் இரண்டு கன்னத்திலும் கைவைத்துக்கொண்டே 100 டிகிரி செல்சியசில் கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீராகவும், அதே 100 டிகிரி செல்சியசில் உறைய வைத்த பனிக்கட்டிபோல் இரு வேறு நிலையில் நிதானிக்க முடியாமல் இருந்தான்.

இங்கே ரீனா அவனிடமிருந்து அடி வாங்கியத்திலிருந்து கொதிக்கும் எரிமலையாக எரிந்து கொண்டிருந்தால்.அவள் தன்னனங்காரம் அதலபாதாளத்தில் விழுந்து கிடந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

என்ன செய்யலாம் என்ன செய்யலாம் அவனை கொன்றுவிடலாமா அது அவனுக்கு ஒரு நொடி வலி, அவனின் குடும்பத்தை அழிக்கலாமா இல்லை இல்லை அதை தாண்டி அதை தாண்டி நொடிக்கு 100 முறை அவன் இறக்க வேண்டும், ஆறுதல் கூட கேட்க முடியாத அளவிற்கு புழுங்கி சாக வேண்டும் வருத்தபட்டு வருத்தப்பட்டு மறத்து போன நிலையில் இன்பம்,துன்பம்,எல்லாமே ஒரு மாதிரி உணர வேண்டும் என நினைத்தாள்.

ஏனோ குடும்ப அமைப்பில் வாழாத அவளுக்கு எப்படி அவனை அதுபோல் பழி வாங்குவது என்று தெரியவில்லை.காத்திருக்கிறாள் கடந்த ஒரு வருடமாக சரியான சந்தர்பத்திற்காக கூடிய சீக்கிரம் அதுவே வரப்போகிறது என்பதை அறியாமல்.

********†*******
மூன்று மாதங்கள் சென்ற நிலையில் எப்பொழுதும் வார விடுமுறைகளில் சனிக்கிழமை காலையில் வரும் சந்தோஷ் வந்து அகலியை பார்த்துவிட்டு அவளை எங்கேயாவது வெளியில் அழைத்து சென்று விட்டு அன்று மாலையே கிளம்பியும் விடுவான்.அவன் அந்த பிராஜெக்ட் விஷயமாக அதிகமாக உழைக்க வேண்டியது இருப்பதால் அவன் விடுமுறை கூட பாராது உழைத்துக்கொண்டிருந்தான்.

அவள் அகலியை பார்க்க வருவது கூட அகலியின் பிடிவாதம்தான்.சில வார இறுதியில் அவன் வருவதும் இல்லை தன் நண்பன் பார்த்துக்கொள்வான் என்று. அன்று அகலி காதலை சொன்னதை விஷ்வா அவனிடம் சொல்லவில்லை.

விஸ்வாவால் அவள் இல்லாமல் ஏதும் இல்லை என்ற நிலையில் நெஞ்சம் முழுக்க நேசத்தோடுதான் இருக்கிறான்.

ஆனால் அவள் விளையாட்டு பிள்ளை என்றும் முழுமையாக நம்பி இருக்க இன்னும் கொஞ்சம் நாட்களில் அவளே மாறிவிடுவாள் அதை ஏன் அவனிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்து விட்டுவிட்டான்.

அவனும் விஷ்வாவை தர்ம சங்கடப்படுத்த வேண்டும் என்று கேட்காமல் விட்டுவிட்டான்

அதே போல அந்த சனிக்கிழமை சந்தோஷ் வராமல் போகவே காலையிலேயே “வரவே வரமாட்டேன்” என்றவனை அழுது புரண்டு சென்னையில் உள்ள “ தீம் பார்க்”கிற்கு கூட்டி சென்றுவிட்டாள் அகலி .

டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தவள் சென்றது எல்லாமே குழந்தைகள் விளையாடும் குட்டி குட்டி ரைடுகளும், வாட்டர் கேம்களும் மட்டுமே,

“அதிலெல்லாம் செல்லவில்லையா” என்று பெரிய ரைடுகளளையெல்லாம் காட்டி கேட்டவனுக்கு “ அது எல்லாம் எனக்கு பிடிக்காது மாமா “ என்று குரலில் அலட்சியத்தை பூசி சொன்னாலும் அவளின் கண்கள் பயத்துடன் அந்த ரைடையெல்லாம் பார்க்க அவனின் கைகளை இறுக்கி பிடித்துக்கொண்டது அவள் கைகள்...

“ சரியான காமெடி பீசு டி “ என்று நினைத்து அவளை சாப்பிட அழைத்துக்கொண்டு சென்றான்.

சாப்பிட சென்ற இடத்தில் ஒரு பையனை அவள் விடாமல் பார்த்துக்கொண்டிருக்க “இவளின் காதலின் ஆழம் இவ்வளவுதான் என்று கொந்தளித்தவன் “ என்ன லவ் பன்றேன் லவ் பன்றேன்னு சொல்லிட்டு அவனை ஆன்னு பாக்குற “ என்றான்.

“ மாமா அது சைட் அடிக்குறது வேற டிபார்ட்மெண்ட் பூ அழகா இருந்தா பார்க்க மாட்டோமா ஒரு குழந்தை அழகா இருந்தா பார்க்க மாட்டோமா...”என்று விளக்கமளித்தாள்.

( பரவாயில்லையே குழந்தை கொஞ்சம் பெரிய பிள்ளை மாதிரியெல்லாம் பேசுது).

அவள் பேசுவது சரி என்றாலும் தான் பார்த்த முதல் மற்றும் கடைசி பெண்ணாக இவள் இருக்க இதை இவனால் எளிதாக எடுத்து கொள்ளமுடியவில்லை

வீட்டிற்கு வரும் போது அன்று லிப்டில் நடந்த பவர் காட்டிற்கு பிறகு “ஏறுவாளா நம்ம அகலி இனி லிப்ட்டில்”அதனால் அவளுடன் செல்லும் போது மட்டும் படிவழியே அழைத்து செல்வான்

( அப்ப நீ மாக்சிமம் படியிலதான் போற)

நான்காவது மாடி வரை வந்தவள் அவனுக்கு இரண்டு படிகள் மேலே நின்று கொண்டு திரும்ப அவள் எதுக்கு திரும்பி நிற்கிறாள் என்று யோசித்து அவன் நகர்வதற்குள் அவனின் கன்னத்தில் முத்தம் கொடுத்து விலக்கியவள் “குட் நைட் மாமா”என்றவள் ஓடி விட்டாள் அவன் திட்டுவதற்குள் .

“ வாலு “என்று சிரிப்புடன் சொன்னவன் “அடுத்த தட கிட்ட வரட்டும்” என்று தான் வீட்டை நோக்கி சென்றான்.



அன்று ஆபிசில் சீக்கிரம் வேலை முடிந்ததால் தானே வந்து கிளாசில் அழைத்து செல்லலாம் என்று அவள் தையல் கிளாஸ் சென்றான்.

அவன் செல்லும் நேரம் சரியாக நம் செல்லம்மா அங்கே தையல் கத்துக்கொடுக்கும் பெண்மணியிடம் திட்டுவாங்கிக் கொண்டிருந்தாள்.

“கிளாஸ் வந்து 3 மாசம் ஆகுது இன்னும் ஒரு கர்சீப் தைக்க கத்துகல எப்ப பார்த்தாலும் மறு வீட்டுக்கு வந்த மாப்பிள்ள மாறி வந்து வந்து எந்திரிச்சு போற “ என்க

விஷ்வாவின் மண்டையில் முட்டை முட்டையாக வந்து அவள் சொன்ன “ சிட்டி ரோபோ” என்பதும் “நான் போன ஒரு வாரத்துலையே ஒரு பெரிய” ப்ரிடைல் கவுன் “ தைக்க கத்துகிட்டேன் மாமா மேம் ஒரே பாராட்டு” என்பதும் நியாபகம் வந்து சிரித்துக்கொண்டான்.

( ஒண்ணுக்கு உதவாம இருக்காளே எதுக்கு இப்ப சிரிக்கிற நீ....)

விஷ்வாவை பார்த்துவிட்டவள் “ மேம் நீங்க முடிச்சிடீங்கனா நான் போறேன் என் மாமா வந்துட்டாங்க” என்று கூறிவிட்டு “ மாமா” என்று கத்திக்கொண்டே அவனை நோக்கி ஓடியவள் அவன் கைகளில் தொங்கிக்கொண்டாள்.

“ அவங்க பேசுனது நான் கேட்டுட்டேன் “என்றவனை அசட்டையாக பார்த்தவள் “ ஐயோ மாமா என்னோடு முழு நேர பிராஜெக்ட்டே நீ தான் அதெல்லாம் சும்மா சைடுபிட்டு” என்றவள் அவனை இழுத்துக்கொண்டு சென்றாள்.

அன்றும் அவனுடன் வம்ப வளர்த்துக்கொண்டு நின்றவள்.

“ மாமா என்னை ஏன் லவ் பண்ண மாற்ற ஒழுங்க எனக்கு 3 காரணம் சொல்லு “ பிடித்துக்கொண்டாள்.

“ 3 என்ன 30 காரணம் சொல்றேன் என்றவன் முதல் உன் உயரம் என் நெஞ்சு வர கூட இல்லை பார்த்த 11 வது படிக்கிற மாதிரி இருக்க,
2 வது நீ ரொம்ப இன்மெச்சுரா இருக்க 3 வது ஒன்ன பார்த்த ஒரு பொண்ணு பீல் வரல , சின்ன குழந்தை மாதிரிதான் இருக்க 4 வது என்று கூறியவனின் வார்த்தையை அவனின் போன் தடை செய்ய அதில் சொன்ன செய்தியில் முகம்மாற அவளிடம் சொல்லாமல் கூட சென்று விட்டான்.


வருவாள்
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 18 :

அணைக்கின்ற கைகள் எல்லாம் அணைக்குமா....
என்று தெரியவில்லை....
ஆனால் நீ அடிப்பதே அணைப்பது போல்தான் இருக்கிறது....

காற்றோடு விளையாடிய கொண்டிருந்த உன் சேலைதலைப்பை எடுத்து இடுப்பில் சொருகினாய்
அவ்வளவுதான் நின்றுவிட்டது காற்று......

உன் பிறந்த நாளை பார்த்த...
மற்ற நாட்கள்....
புலம்பிக்கொண்டிருக்கின்றன...
பிறந்தால் உன் பிறந்த நாளாய் பிறக்க வேண்டும் என்று.....

புதிய புடவையில் வந்து
“ நல்லா இருக்கிறதா” என்று கேட்டாய் என்னிடம்....
“ நல்லா இல்லன்னு” சொல்லு என்று கெஞ்சியது....
சற்று முன் நீ களைந்து ..
கொடியில் போட்டிருந்த புடவை....


தன் தங்கை சொன்ன செய்தியில் அடித்து பிடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தான் விஷ்வா.வந்தவன் தன் அண்ணனை பார்த்து அதிர்ந்து போய் நின்றான்.

மணக்கோலத்தில் அண்ணனும் அவனின் அருகில் மணப்பெண் கோலத்தில் தாலியுடன் ஒரு பெண்ணும் நிற்க நொடியில் விளங்கியது எல்லாம் அவனுக்கு அம்மாவின் நம்பிக்கையை பொய்யென நிரூபிக்க தான் ஒரு பெண்ணை காதல் கல்யாணம் செய்ய போகிறேன் செய்ய போகிறேன் என்று தன் அண்ணன் சொன்ன போதெல்லாம் அலட்சியம் செய்திருக்கிறான்.

ஆனால் அவன் அண்ணன் அத்தனையும் உண்மையாக்கி வைத்துவிட்டானே.அவன் தோற்றத்தை பார்க்கையிலேயே தெரிந்தது அம்மா அடித்திருப்பார்கள் போல உடையெல்லாம் கசங்கி முகம் எல்லாம் கன்றி போய் நின்றிருக்க

ஆனால் முகத்தில் எந்த ஒரு கவலையும் இல்லை மாறாக அம்மாவிடம் எப்படியும் நிரூபிக்க வேண்டும் என்ற நிதானம் மட்டுமே இருந்தது.

எவ்வளவோ தெளிவாக யோசிக்கும் விஷ்வா கூட அந்த பிரச்சனையை தள்ளி போட்டானே தவிர வேற ஒன்றும் செய்யவில்லை.ஆனால் கண்ணனோ அதை சரி செய்ய கிளம்பிவிட்டானே.
எல்லாம் சரியாகி நூற்றில் ஒரு வாய்ப்பாக அம்மா புரிந்துகொண்டால் தன்னவளை தன் மல்லிப்பூவை தானும் கட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்குமா என்று அவன் மனம் ஆசை படாமல் இல்லை.

விஷ்வாவை அங்கு கண்டதும் சுந்தரி அவனை அணைத்துக்கொண்டு “ பாத்தியா விச்சு உன் அண்ணனை நான் எவளோ படிச்சி படிச்சி சொன்னேன் அவன் கேட்காம இப்படி என் தாலிக்கு உலை வைக்க ஒருத்திய கட்டி கூட்டிட்டு வந்து இருக்கானே ,

என் புள்ளை இப்படி சுயநலமா ஆகிட்டானே நான் என்ன பண்ணுவேன் ,

அவன் ஒழுங்காதான் இருந்துருப்பான் இந்த நிக்கிறாளே இவள் தான் என் புள்ளையே மயக்கி இருப்பாள் என்று கதற , ஜனனி ஒரு புறம் சோகமாக நிற்க விஷ்வாவதான் பரிதவித்து போனான்.தன் அண்ணன் சுயநலவாதியா ஒரு யோசனைக்கு கூட அவனால் யோசிக்க முடியவில்லை .

படித்து முடித்த நாளிலிருந்து தொழிலில் இறங்கி தன் அப்பாவிற்கு மூளையாக செயல்படுபவன்.

அப்பாவுக்கும் சரி அண்ணனுக்கும் சரி வீட்டில் உள்ள அனைவரையும் விட அதிக ஓட்டுதல் இவனே கிண்டல் செய்து இருக்கிறான் “ உங்களுக்கு உங்க பெரிய புள்ளைதான் முக்கியம்” என்று அந்த அளவிற்கு அவனை நாடுபவர்.

அப்படியாபத்த அப்பாவை சரிக்க தன் அண்ணன் முயற்சி செய்யவானா வாய்ப்பே இல்லை” அதே போல் அந்த பெண்ணும் நடுங்கி தன் அண்ணனுடன் ஒன்றிய விதத்திலேயே புரிந்தது அந்த பெண்ணை பற்றி..

தன் தம்பியும் தன்னை பற்றி தவறாக எடுத்துக்கொள்வானோ என்று “ விச்சு” என்று ஆரம்பிக்க “ உன்னை பற்றி எனக்கு தெரியும்” என்று கண்களால் ஆறுதல் சொல்ல நிம்மதியாக இருந்தது கண்ணனுக்கு.

தன் மேல் கதறி விழும் தாயை ஒன்றும் சொல்ல முடியவில்லை அவர் அறிவிற்கு அவர் அப்படியே நடந்து கொள்ள முடியும் உலகம் தெரியாது தன் குடும்பமே பிரதானம் அவருக்கு, அவரிடம் “அம்மா நடந்தது நடந்துட்டு விடுங்க எல்லாம் சரி ஆகிடும் உங்க குடும்பத்துல நடந்த மாறி நம்ப குடும்பத்திலையும் நடக்காது” என்று சமாதானம் செய்ய

சுந்தரியோ சாமி அறைக்கு சென்று “ அவன் என் பிள்ளையே இல்லை என் தாலியை நீ பறிச்சிராத கடவுளே” என்று முறையிட அவரோ இந்த விளையாட்டில் நான் வெறும் பார்வையாளரே எல்லாம் விதி பயன் என்பது போல் அவரை பார்த்து வைத்தது

கண்ணனோ தன் பக்க நியாயங்களை எவ்வளவு எடுத்து சொல்லியும் பலன் பூஜ்ஜியமே .” பாப்பு அண்ணனையும் , அண்ணியையும் ரூம்க்கு அழைச்சிட்டு போ” என்று சுந்தரியின் முறைப்பை பொருட்படுத்தாமல் விஷ்வா சொல்ல அவர்கள் அழைத்துக்கொண்டு சென்றாள் ஜனனி.

ஜனனி போன் பண்ணி சொன்னவுடன் முருகனும் வீடு வந்து சேர்ந்தார்.அவருக்கும் கண்ணனின் மேல் வருத்தமே அது அவன் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக அல்ல தன்னிடம் சொல்ல வில்லையே அவன் தன்னை பற்றி இவன் புரிந்து கொண்டது அவ்வளவுதானா என்பதே..


அன்று முழுவதும் வீடே மயான அமைதியாக கழிந்தது. ருக்குவின் வீட்டிலேயும் பலத்த எதிர்பே முதலில் கண்ணன் அவர்கள் வீட்டிலாவது தெரிந்தே திருமணம் செய்யலாம் என்றுதான் அவர்கள் வீட்டிற்கு சென்று பேசினான் .

பூஜை , புனஸ்காரம் , ஆச்சாரம் என்று பேசிய ருக்கு வின் அப்பா அவனை உள்ளே கூட அழைத்து பேசவில்லை .என்னதான் காசு , பணம் என்று வசதி படைத்து இருந்தாலும் வேறு இனம் என்றால் இன்றளவும் அருவருப்பாகதான் பார்ப்பார்கள் சில இனத்தவர்கள்.

இத்தனைக்கும் கண்ணன் குடும்பம் தென்னகமே ஆளும் தேவர் இனத்தை சேர்ந்தவர்கள். ருக்குவின் அப்பா அவனை உள்ளே அழைக்காது மட்டும் அல்லாது அவனை வெளியே நிற்க வைத்தே பேச ருக்குக்குதான் தாங்க முடியவில்லை

“அப்பா அவர் இண்டஸ்ட்ரியலிஸ்ட் முருகன் அவங்களோட மூத்த பையன் அப்பா என்ன பேசுறதா இருந்தாலும் உள்ளே அழைச்சு பேசுங்கோ” என்க

“ என்னது உள்ளே அழைச்சி பேசுறதா,அவன் போனதுக்கு அப்பறம் அவன் போன இடத்தை என்ன ஊற்றி கழுவுறதுனு நான் யோசிச்சிட்டு இருக்கேன்” என்க

இது எல்லாவற்றையும் தாங்கி தனக்காக தன் தந்தையின் சம்மதத்தை எதிர் பார்த்து நிற்கும் தன் காதலனை பொங்கும் காதலுடன் நெருங்க.. அப்பொழுது ருக்குவின் அப்பாவின் குரல் “ அவன் நின்ன இடத்துக்கோ அந்த கதியென்றால் யோசித்து கொள்” என ஒலிக்க.

அவரை திரும்பி ஏலனமாக பார்த்து சிரித்தவள் “ என் கண்ணனை அசிங்கபடுத்தும் யாரும் , எதுவும் எனக்கு தேவை இல்லை அது என் அப்பாவை ஆனாலும்” என்றவள் அவனின் காதலுக்கு நியாயம் செய்து அவனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றவள் திருமணம் செய்து கொண்டு அவன் வீட்டிற்கு வந்து விட்டாள்.

வெளியூர் சென்று இருக்கும் ருக்குவின் அம்மாவிடமும் , தம்பியிடமும் சொல்லலாம் தான். இருந்தாலும் அவர்களின் எதிரொலி எப்படி இருக்கும் என்று அவளால் அனுமானிக்க .தன் தந்தை இப்படி பேசுவதையே அவளுக்கு இன்றுதான் தெரியும் எனவே நடப்பது நடக்கட்டும் என்று வந்துட்டாள்.

மறுநாள் காலையிலேயே ஜனனியின் வழிகாட்டித்தலின் படி பூஜை செய்து சமையலறையில் காலை உணவை ருக்கு செய்து கொண்டிருக்க அவளை எந்த உணர்வும் இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தார் சுந்தரி.

அவரும் கெட்டவர் இல்லையே இந்த நிகழ்வை அவரின் ஒரு மனம் ஏற்றுக்கொள்ள சொல்ல இன்னொரு மனமோ அவரிடம் தாலி பயத்தை காட்டியது.

அதற்கு மகுடம் சேர்ப்பது போல அன்று மதியமே முருகன் காலில் பெரிய கட்டுடன் வந்து சேர்ந்தார்.படிகளில் ஏறிக்கொண்டிருக்கும் போது கால் இடறி விழுந்துவிட்டார் அதில் முழுக்க முழுக்க கவனகுறைவு அவர் மேல் இருந்தாலும் பழி அத்தனையும் பல கிலோ மீட்டர் தூரம் இருக்கும் அந்த அப்பாவி பெண்ணின் மேல் விழுந்தது.

அதை பார்த்தவுடன் சுந்தரி மயக்கம் போட்டு விழ வீடே கலையிழந்து நின்றது.அன்றிலிருந்து வார்தைகளாலும் , செயல்களாலும் ருக்குவை காயப்படுத்த அத்தனையும் அமைதியாக ஏற்றுக்கொண்டாள்.

அவள் மாமனாரின் விபத்து அவளுக்கும் மாமியாரின் எண்ணம் உண்மையோ என்று யோசிக்க வைத்துவிட்டது.அன்றும் அப்படித்தான் அவளை நோக்கி “ என் பையன் உனக்கு எத்துனாவது, எத்துணை பேரை மயக்க ட்ரை பண்ணி இவனை மயக்குன “ என்று அவர் அவளை பார்த்து கேட்க

“ அய்யோ இல்லை மாமி, நான் அப்படி இல்லை” எனஅவளால் கதறத்தான் முடிந்தது ஏற்கனவே கணவனுக்கு மாமியாருக்கு ஆகாது இதில் இவர் இப்படி பேசுவதையெல்லாம் கண்ணனிடம் சொல்லவில்லை சொல்லி இன்னும் உறவை சிக்கலாக்கி கொள்ள முயலவில்லை.

காலையில் எல்லாம் எல்லாரும் அலுவல் வேலையாக வெளியில் செல்ல ஜனனியும் மருத்துவமனை செல்ல அவரின் வாய்க்கு அவுள் ஆகிபோனாள் ருக்கு.

ருக்குமணி சொல்லவில்லை என்றாலும் கண்ணனுக்கு சுந்தரியை பற்றி தெரியும் என்பதால் இரவில் அவனின் அணைப்பாலும் , ஆலிங்கனத்தாலும் , இதழோற்றலாலும் ஆறுதல் சொன்னான்.அதே ஒன்றே மருந்தாகி போக அவனும் கணவனுடன் அன்பாக,அதிகமாக ஒன்றினாள்.

ருக்கு பயந்த சுபாபம்தான் என்றாலும் நல்லா பொறுமைசாலி ,திறமையானவள் சுந்தரியே “ நீ பொறுப்பா, பொறுமையா இருக்குற மாதிரி நடிச்சா உன்னை நான் மருமகளாக ஏத்துக்க முடியாது , சரியான பசப்புக்காரி நீ ஒழுங்கா வீட்டைவிட்டு வெளியில் போ “ என்பதிலே குறியாக இருந்தார்.

“ நான் அவளை மருமகளாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவள் எங்கள் மருமகள் , அதனால என் புருஷன ஏதும் பண்ணிடாத சாமி” என்று புருஷன் மேலே உள்ள நேசத்தில் குழந்தையாக கடவுளிடம் வேண்டினார்.

விஷ்வாவிற்கோ “இவ்வளவு பொறுப்பான அண்ணியே அம்மாவின் வார்த்தைகளில் காயப்பட்டு தனியாக கதறி அழ தன் மல்லிப்பூவை இந்த இடத்தில் பொறுத்தி பார்க்கவே பயமாக இருந்தது.

சின்ன சின்ன விஷயங்களுக்கு அதிகமாக சந்தோசப்படுவது அதேபோல் சின்ன சின்ன கஷ்டங்களுக்கு கூட அதிகமாக வருத்தப்படுவது என அவனவளுக்கு சந்தோசம்,சிரிப்பு, அழுகை, கோபம், எல்லாம் அளவுக்கு அதிகம்தான்.

அவன் எடுத்த முடிவில் இன்னும் உறுதியாக இருக்க வைத்தது அவனின் குடும்பத்தில் நடந்த விஷயங்கள்.

பாவம் அவனுக்கு தெரியாமல் போனது இது எல்லாவற்றையும் விட இவன் மேல் உள்ள காதல் அதிகம் என்றும், அவள் அழுகை கஷ்டம் எல்லாம் 5 நிமிடம் என்பதை.

ஒரு வாரத்தில் நிலைமை ஓரளவு சரியான நிலையில் தன் அபார்ட்மென்டிருக்கு வந்தான்.அந்த ஒரு வாரத்தில் அகலி தான் தவியாய் தவித்து போனாள்.

சந்தோஷிடம் கேட்டதற்கு விஷ்வா சென்னையில்தான் இருக்கிறான் என்று சொன்னால் உடனே அவன் வீட்டிற்கு குதித்து கொண்டு ஓடி விடுவாள் என்பதற்காக அவன் வேலை விஷயமாக ஹைதிராபாத் சென்று இருப்பதாக சொல்லிவிட்டான் அவர்கள் வீடு இருக்கும் நிலையில் இவள் வேறு அங்கு சென்று எதுவும் குட்டி கலாட்டா செய்துவிட்டாள்.

அப்படி ஏதாவது செய்தாலும் எல்லாம் சரி ஆகி இருக்குமோ என்னவோ.சந்தோஷோ கண்ணனின் காதலுக்கு இந்த நிலைமை இதில் தன் காதல், தன் தேனுக்குட்டியின் காதல் என யோசிக்கவே முடியவில்லை.

ஜனனியிடமோ, அகலியிடமோ நிலைமையை சொல்லி அவர்களை கஷ்டபடுத்த அவன் விரும்பவில்லை .முடிந்த வரை தானே சரி செய்யலாம் என்று நினைத்தான் ஆனால் கடைசி வரை அவனால் சரி செய்யவே முடியாது என்று அவன் அறியவில்லை.

என்னதான் தெய்வமாக இருந்தாலும் அவர்களின் மனுதர்ம விதிகளுக்கு உட்பட்டு என்னதான் வேண்டினாலும் சில உதவிகளை நேரிடையாக அவர்கள் செய்ய முடியாது போலும்..

அப்படி மறைமுகமாக செய்ய முயன்றாலும் விதி அதை விடுவதும் இல்லை போல அனைவரின் மூளைகளையும் அழகாக மழுங்க அடித்து விடுகிறது அந்த நேரத்தில் சரியாக.

நம் துன்பத்தில் இருக்கும் போது நம் மூளை பாசிடிவாக வேலை செய்வதை விட நெகடிவாக வேலை செய்வதே அதிகம் .

விஷ்வா இல்லாத ஒருவாரமும் அகலி சிரித்தாள், விளையாடினாள் மாரி அண்ணனுடனும் , ராணி அக்காவுடன் சுற்றி திருந்தாள்தான், அவள் வீட்டில் உள்ள அனைவரும் கூடவந்து இரண்டு நாள் அவளுடன் இருந்து சென்றார்கள்.ஆனால் அவளுக்குதான் எதிலும் ஒரு உயிர்ப்பு இல்லாமல் இருந்தது.

அவன் வரும் அன்று காலையில் மாடியில் நின்றவள் பதினோராவது மாடியிலிருந்து அவன் கார் உள்ளே வருவதை கரெக்ட்டாக கண்டுகொண்டாள். அவன் கார் பார்க்கிங்ல் காரை நிறுத்தி விட்டு அவன் புளோரில் லிஃட்டில் வந்து இறங்கும் நேரத்திற்குள் 5 ,6 மாடி ஓடி வந்தவள் அவன் வெளிவந்து இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் பின் வழியே வந்து “மாமா” என்ற கூவளுடன் பின்னே அவன் கழுத்தை உப்பு மூட்டை கட்டிக்கொண்டாள்.

அவள் தன் மீது சாய்ந்த ஒரு நொடிக்குள் உடல் முழுவதும் உள்ள நரம்புகள் நாண் ஏற்றிய அம்பாக விரைத்துக்கொள்ள முதுகில் பற்றிய தீ கடும்காட்டு தீ போல் நொடிக்குள் உடல் முழுவதும் பரவ உணர்ச்சிகளுக்கு இடையில் போராடி அவன் உடல் சோர்ந்து போக “ அப்படியே அவளை தூக்கி கொண்டுபோய்” என்று அவன் எண்ணம் போகும் போக்கை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தன்னவாளால் தூண்டப்படும் புது புது பெயர் தெரியாத உணர்வுகள் அவனை பரவசப்படுத்தியது என்றால் மிகை இல்லை.மிகுந்த போராட்டத்த்துடன் பல்லை கடித்து உணர்வுகளை அடக்கியவன்

அவளை இறக்க அவன் செய்த அத்தனை முயற்சிகளையும் அசால்ட்டாக முறித்துவிட்டாள். அவன் தான் வேறு வழி இல்லாமல் “வாலு” என்று மனதில் நினைத்தவன் வெளியில் திட்டிக்கொண்டே அவளை சுமந்து சென்றான்.

அவள் எங்கே அவன் திட்டியதெல்லாம் காதில் வாங்கினாள். அவன் பின்னே தொங்கிக்கொண்டவள்..

“ மாமனே உன்னை பார்க்காமல் ஒத்தையில் சோறும் உன்ங்காம....
பாவி நான் பருத்தி நாரா போனேனே....
காகம்தான் கத்தி போனாலும் கதவுதான் சத்தம் போட்டாலும் உன் முகம் காண ஓடிவந்தேனே...
ஒத்தையில் ஒட்டகரயோயோரம் கத்தியே உன் பேர் சொன்னேனே...
சத்தமாய் ஓடும் ராயிலோரம் சத்தமாய் உன் பேர் சொன்னேனே....
என் விச்சு மாமா என்னைவிட்டு போகாதே...
என் ஒத்த உசுரு போனால் மீண்டும் வராதே...
என்று பாடினாள்.

இவளும் இவனிடம் இப்படி கொஞ்சினால் அவனும் என்னதான் செய்வான்.அவளை பார்க்கும் வரையில் இன்றுடன் அவளுடன் பேச கூடாது பார்க்க கூடாது என்று 1000 முறை நினைக்கிறேன்.ஆனால் அவளை பார்க்கும் போது அத்தனையும் வெயிலில் மறையும் பனியாக மாற

இந்த பேச்சையும்,இந்த கொஞ்சலையும் முடியும் வரை , தன் காலம் முடியும் வரை கேட்டுக்கொண்டே இருந்துவிடலாம் என்ற நிலைக்கு தள்ளிவிடுகிறாள் அவளின் மல்லிபூ.
அவளை தூக்கிக்கொண்டே வந்து தன் அபார்ட்மெண்டை திறந்தவன் அவளை சோஃபாவில் கொண்டுவந்து அவளை தொப்பென்று போட்டவன் அப்படியே சரிந்து அவள் அருகில் அமர்ந்தான்.

அருகில் அமர்ந்து விஷ்வாவை பார்த்த அகலிக்கு ஆச்சர்யம்தான் “நம்ம மாமா இப்படியெல்லாம் பண்ற ஆள் இல்லையே நம்ப இங்க இருந்து அது 10 அடி தள்ளிதானே அலர்ட இருக்கும் “ என்று யோசித்தவள் “ என்ன ஆச்சி மாமா “ என்றாள்.

அவனோ “ அகலிமா தலையை வலிக்குது கொஞ்சம் அழுத்தமா பிடிச்சிவிடேன் “ என்றான்.அவன் சொல்லாமலே அவனுக்காக உயிரை விடுபவள் அவன் இப்படி சொல்லவும் அவன் தன் கையால் சொன்னதை தலையால் செய்ய புறப்பட்டுவிட்டாள்.

அவன் அழுத்தமாக பிடித்துவிட சொன்னதால் அவள் அழுத்தமாக பிடிக்க முயற்சி செய்ய அவள் முகம் மட்டுமே அழுத்தத்திற்கான அறிகுறியை காட்டியது ,

ஆனால் அவனுக்கு அவள் பிடித்துவிட்டது என்னவோ மல்லிப்பூ ஒத்தடம் கொடுப்பது போல்தான் இதமாக இருந்தது.அவள் முகத்தை பார்த்தே சிரிப்புடன் கண்களை மூடிக்கொண்டான்.

( எப்படி முகம் மட்டும்தான் வேலை செய்து மத்ததெல்லாம் அப்படியே இருக்கு அப்படியா...)

அவன் சோகமாக இருப்பது தெரிந்து உலகத்தில் உள்ள எல்லா குரங்கு சேட்டையும் செய்து அவனை விழுந்து விழுந்து சிரிக்கவைத்து விட்டே வீடு சென்றாள்.அவன் எண்ணிக்கொண்டு வந்ததெல்லாம் ஒன்னும் இல்லாமல் ஆக்கிக்கிவிட்டாள் அவனின் குள்ளகத்தரிக்காய்.

மறுநாள் வழக்கம் போல் விடிய ஆபிஷிற்கு சென்று தன் அபார்ட்மெண்டிற்கு திரும்பியவன் திறந்துகிடந்த தன் வீட்டில் அவசரமாக நுழைய அங்கே அவனின் மல்லிப்பூ பால்கெனியை ஆக்கிரமித்திருந்தாள்.

அவளின் கெட்டப்பை பார்த்தவன் “ இருக்கு இன்னைக்குப் பெரிய பெர்பாமென்ஸ் இருக்கு” என்று நினைத்துக்கொண்டு முகத்தை கடு கடுவென்று “ ஏய் வீட்டை எப்படி திறந்த,எதுக்கு என் ட்ரெஸ்ஸ எடுத்து போட்டுருக்க” என்று கத்த

அவன் சத்தத்தில் திரும்பியவள் “ ஹாய் மாமா வந்துட்டிய இன்னைக்கு ஒரு முக்கியமான விளக்கம் உனக்கு கொடுக்கனும் , அப்பறம் இந்த இத்து போன லாக்குக்கு காந்தி காலத்திலையே சாவி கண்டுபுடிச்சிடாங்க” என்று தன் ஹேர்பின்னை கண்ணை சுருக்கி காட்டியவள்,

“அன்னைக்கு நீ என்ன சொன்ன நியாபகம் இருக்கா” , என்றவளை

“என்னைக்கு என்ன சொன்னேன்,நான் சொல்றதெல்லாம் இவள் என்னைக்கு கேட்டிருக்கிறாள்” என்று மனசுக்குள் யோசித்தவன் நியாபகம் இல்லை என்று மறுப்பாக தலை அசைத்துவிட்டு

கையை கட்டிக்கொண்டு தன் முழுக்கை சட்டையும், தன் சார்ட்ஸையும் போட்டு நிற்கும் அவள் சொல்வதை கேட்க தயார் ஆனான்.

அவன் நெஞ்சுவரையே இருக்கும் அவனின் குள்ளக்கத்தரிக்காய்க்கு அந்த ஷார்ட்ஸ் முழு பேண்ட் ஆகவும், அவனின் சட்டை முட்டிக்கு கொஞ்சம் மேல் வரை பரவி இருந்தது.

“ சரியான நியாபக மறதி மாமா உனக்கு யாருதான் உனக்கெல்லாம் வேலை கொடுத்தாங்களோ “ என்றவளை “ விஷயத்தை சொல்லு டி” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டவன் மௌனமாக நகரப்போக

“ஆன்னா ஊன்னா ஒடிடு “ என்று அவனை பிடித்து நிறுத்தியவள் , அன்னைக்கு நீ சொன்ன என்னை கல்யாண பண்ணிக்க மாட்டேன்னு சொல்றதுக்கு நான் ரொம்ப குள்ளமா இருக்கிறது ஒரு காரணம் சொன்னேல அதனால நான் குள்ளமா இருக்குறதால உள்ள நன்மைகள் சொல்ல போறேன்” என்றவள் “no 1”

“நான் குள்ளமா இருக்கறதால உன்னோட ட்ரெஸ் எல்லாமே எனக்கு லூசா தொழ தொழனு தான் இருக்கும் அதனால உனக்கு எனக்கு நைட் ட்ரெஸ் வாங்குற செலவு இல்லை”

( என்ன ஒரு அறிவாளித்தனம்).

“No 2” நான் லிப்டில் வராததுனால என்னாலே எப்பவுமே படியில நடந்து வர முடியாது, எனக்கு கால் வேற வலிக்குமா என்று பாவம் போல் சொல்லி , நான் குள்ளமா வெய்ட் கம்மியா “ user friendly ய “ இருக்கறதால உனக்கு என்ன இப்படி தூக்க ஈஸியா இருக்கும்” என்றவள் அவன் கழுத்தை இரு கைகளாலும் பிடித்து கொண்டு ஜம்ப் பண்ண “ஐயோ விழுந்துட போறா“ அவன் இரு கைகளாலும் அள்ளிக்கொண்டன்.

“ம்ம்ம்” இப்படிதான் என்று சொகுசாக அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள அவளை தொப்பென்று அங்கு உள்ள டீபாயில் நமட்டு சிரிப்புடன் போட

முகத்தை சுருக்கிக்கொண்டு இடுப்பை ஒரு கையால் தேய்த்து கொண்டு “ முசுடு “ என்று மனதுக்குள் திட்டியவள்

“ no 3 “ நான் மீனுக்குட்டி சோனுவோட “ hide and seek” விளையாடும் போதே உன் பின்னாடியே ஒளிஞ்சிக்குவேன் யாரும் கண்டுபிடிக்க முடியாது “ என்று அவன் அகன்ற முதுகின் பின்னே நின்று கொண்டே சொல்லியவள் இன்னும் அதேபோல் உப்பு சப்பு இல்லாத காரணங்களை அடுக்கினாள், பின்

“அதனால மாமா இதனால உனக்கு எந்த நஷ்டமும் இல்லை மாற வசதியா இருக்கு இனி இந்த ரீசனை சொல்லாத” என்றாள்.

( அட பக்கி இதெல்லாம் அவனுக்கு என்ன வசதி உனக்கு தான எல்லாம்)

“ என்னை நல்லா உரசி தீ மூட்டுற எல்லா வேலையும் நல்லா பண்ணுவடி நீ” என்று நினைத்துகொண்டவன் “ பெர்பாமென்ஸ் முடிஞ்சா இடத்தை காலி பண்ணு, எனக்கு வேலை இருக்கு என்று நகர்ந்தவனை “ போடா தடிமாடு” என்று அவன் கையை விழுந்து கடித்து வைத்துட்டு கோபமாக வெளியே சென்றுவிட்டாள்.

கோபமாக வீட்டிற்கு சென்றவள் சந்தோஷிடம் நடந்ததை போனில் கடுப்புடன் சொன்னாள். இவள் சொல்வதை கேட்டு அவன் சத்தம் இல்லாமல் சிரித்தவன் போனில் “ அப்படியா பண்ணுனா அந்த தடி மாடு “ என்று அவளுக்கு ஒத்து ஊதினான்.

பின்னே இவன் சிரிப்பது தெரிந்தால் கட்டைய எடுத்துக்கொண்டு அடிக்க வந்துவிடுவாளே அவனின் தேனுக்குட்டி..

அகலி சென்ற உடன் “ எப்படியும் இன்னும் அரை மணி நேரத்துல இங்க தான் வந்து என்னை டார்ச்சர் பண்ண போறாள், அதுக்கு இவ்வளோ ஸீனு” என்றவன் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டான்.

மாறாக மறுநாள் மாலை வரை அவள் வரப்போவது இல்லை,இல்லை இவன்தான் அங்கு போகப்போகிறான் என்றும் அவன் அங்கு கண்ட காட்சியில் தான் எடுத்த முடிவில் இன்னும் உறுதியாகப் போகிறான் என்றும்.


வருவாள்
 
Status
Not open for further replies.
Top