அத்தியாயம் :1.1
அழகூர் பெயரைப்போலவே அந்த ஊரும் மிக அழகு வாய்ந்த ஊர், கண்டிப்பாக இந்த ஊரின் அழகிற்காகதான் இந்த பெயர் வந்திருக்கும்.
நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூரின் அருகில் இருக்கும் ஒரு பசுமை வாய்ந்த விவசாய கிராமம்தான் நம் அழகூர்.
எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென அழகாக மழை நீரை சேமிக்க ஆங்காங்கே குளங்களும், குட்டைகளும் தூரம் தூரமாய் தனி தனி வீடுகளும் வீடுகளை சுற்றி மரங்களும் பார்ப்பதற்கே மிகவும் ரம்மியமாக இருக்கும்.
அந்த ஊர் மக்களால் சின்ன கேரளா என்று அழைக்கப்படும் அளவுக்கு இயற்கை அழகை உடையது.
20 அடி உள்ள சிறிய ஆறு அந்த ஊரின் விவசாய நிலங்களையும் குடியிருப்பு பகுதியையும் பிரிக்கும் கோடாக அமைய ,ஆற்றின் இடதுபக்கம் ஒரு தோப்பு போல நிறைய தென்னை மரங்களும்,மாமரங்களும்.வாழை மரங்களும் இருக்க அதற்கு நடுவே சின்னதாய் ஒரு ஓட்டு வீடு.
அந்த வீட்டின் இளவரசியின் ஆசைக்கிணங்க பெரிதாய் வீடு கட்ட பணவசதி இருந்தும் அந்த ஒற்றை படுக்கையறை கொண்ட வீட்டையே நிரந்தர இருப்பிடமாக்கி இருந்தார் அந்தவீட்டின் தலைவர் ரத்தினமூர்த்தி.
“மல்லி மல்லி “என்று தன் மனையாளை அழைத்த வண்ணமே வீட்டினுள் உள்ள சோஃபா வில் அமர்ந்தார் ரத்தினம்..
சொல்லுங்க என்று வந்த தன் மனைவி மல்லிகாவிடம்” பொழுது நல்லா இறங்கிடிச்சி மல்லி அம்மாவை போய் சின்ன பாப்பாவ அழைச்சிட்டு வர சொல்லு”என்று சொல்லும் போதே அவர் குரல் வேதனையை கக்கியது.
இது தினமும் நடக்கும் ஒன்றைபோல் மல்லிகாவும் தன் துயரத்தை மறைத்தபடி அத்தையிடம் போய் சொன்னாள்.
தன் பேத்தியை அழைக்க தன் பெரியமகன் மருதுவின் வீட்டை நோக்கி நடந்தார் காமாட்சி .
அங்கே ஆற்றிற்கு வலதுபுறம் உள்ள தன் வீட்டிற்கு செல்லவும் மற்றும் தன் விளைநிநிலத்திற்கும்,தன் தம்பியின் விளைநிலத்திற்கும் செல்ல ஏதுவாக மருது கட்டிய சிமெண்ட் பாலத்தில் காலை ஆற்றின் உள்புறம் தொங்கபோட்டு கொண்டு தன் கையில் உள்ள டைரியை இறுக்கி பிடித்தபடி எப்பொழுதும் கலங்கிய விழிகளுடனும் நழுங்கிய தோற்றத்தோடும் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அந்த வீட்டின் இளவரசி அகலிகை தப்பு செய்யாமலே சாபம் பெற்றவள்.
கொஞ்சும் போது பாப்பா, தங்கம்,சாமி,கண்ணு, எனவும் திட்டும் போது வாலு,குரங்கு, கழுதை,குட்டி என தன் பாசத்தாலும், சேட்டையாலும் அந்த வீட்டையே உயிர்ப்புடன் வைத்திருந்த அகலி இன்று உயிர்பில்லாமல் அமர்ந்திருந்தாள்.
அதை எல்லாம் யோசித்தபடியே அவள் அருகில் அமர்ந்தார் காமாட்சி.
ஓடக்கரையோரம் ஓரீருவர் நிக்கயாலே...
குத்தவச்ச பொண்ணெல்லாம் குடிசைக்குள்ள போகயிலே..
என் குலசாமி கருப்பன் கூட காவலுக்கு கிளம்பயிலே.
பாவி நான் மட்டும் பைத்தியமா நிற்கிறேனே....
வருஷம் ரெண்டாச்சி வஞ்சி இவ உன்னை பாத்து....
அழுகத்தான் தெம்பில்ல....
ஆறுதலுக்கு ஆளில்ல....
ரகசியமாய் நான் விடும் கண்ணீரை காற்றாவது கடல் கடந்து வந்து உன்னிடம் வந்து சேர்குமா......?
காத்திருந்து
காத்திருந்து
காலுல வேர் முளைச்சி விரிட்சமாச்சி.....
கனவெல்லாம் கண்ணீர்விட்டு
காய்ந்த சருகாச்சி....
உண்ணாமல்
உறங்காமல்
உன் நினைவில் நானிருக்க...
எப்படி ஆனாய்….
தன் மனநிலையை அப்படியே சொல்லும் தன் டைரியில் தான் எழுதிய கவிதையை பார்த்த கொண்டிருந்த அகலி அருகில் அரவம் கேட்டு திரும்பி பார்க்க அருகில் அமர்ந்த அப்பத்தாவை பார்த்த அகலிகை உதட்டிற்கும்,கண்ணிற்கும் எட்டாத ஒரு சிரிப்பை உதிர்த்து “அப்பத்தா என்று அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
காமாட்சி தன் கரங்களால் அவள் தலையை கோதியபடி ”ஆத்தா அகலி இருட்டிடுச்சியா வீட்டுக்கு போகலாம் “ என்றார்.
.ம்ம்ம்ம் என்று சொன்னவள்
(இதுவே 1 வருடத்திற்குமுன் என்றால்” ஏட்டி அகலி விளக்கு வைக்கிற நேரத்துல வயசு புள்ளைக்கு ஆத்தங்கரையில என்னடி வேல”என வீட்டிலிருந்த படியே அழகூரே அதிரும் படி கத்தி இருப்பார் ஆனால் இன்றோ?) .
”ஏன் அப்பத்தா முன்னலாம் நான் அமைதியா இல்லனு திட்டுவல இப்பலாம் நான் ரொம்ப அமைதியா இருக்கன்ல உன்ன கிழவினு கூட சொல்றது இல்லல. இப்ப உனக்கு சந்தோஷம் தானே” என்று கேட்டாள்.
“உன்ன கிழவில உள்ள உயிர்ப்பு உன் அப்பத்தாவில் இல்ல என் சாமி" என பொங்கி வந்த அழுகையை அடக்கி கொண்டு தன் வீட்டின் மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து சென்றார் .
காதலன் 1.2
புதைக்கவே உன் நினைவுகளை என்னுள் மூடினேன்
ஆனால் அதுவோ விதைக்கப்பட்டு விரிட்சமாகிவிட்டது.
சென்னையில் பணக்காரர்கள் வசிக்கும் அந்த அபார்ட்மெண்டின் நிசப்தத்தை கலைத்தபடி வந்தது ஒரு ஷூ வின் தள்ளாடிய சத்தம்.
தன் இரு கைகளையும் பேன்ட் பாக்கெட்டில் விட்டபபடி கால்கள் தடுமாற அலட்சியமாக வாயில் சிகரெட்டை வைத்தபடியே சிகெரெட் புகையை உள்ளிழுத்து மூக்கின் வழியே வெளிவயிட்டபடியே தன் வெளிர் நீள நிற முழு கை சட்டையை முழங்கை வரை மடக்கி விட்டு டார்க் புளூ ஃபார்மல் பேண்டில் நான்காவது மாடியில் உள்ள தன் அபார்மெண்டை நோக்கி தள்ளாடிய படியே சென்றான் .
விஷ்வேந்திரன்..காலிங் பெல்லை அழுத்திவிட்டு அதைத்திறக்கும் வரை கூட நிதானம் இல்லாமல் கால்கள் தள்ளாட அறைக்கதவிலையே சாய்ந்து விட்டான்.
மணி 12 ஐ காட்ட கதவை திறந்து ஐனனி வெளியில் வர கதவின் சப்போர்டில் நின்ற விஷ்வேந் ஜனனியின் மேல் விழுந்தான்.
அவனை தாங்கியபடியே “ ஏன் அண்ணா உன் உடம்ப இப்படி கெடுத்துகிற” என்ற படி அவன் ரூமிற்கு அழைத்து சென்றாள்.
விஷ்வேந்தோ” பகல் முழுசும் என் சிந்தனையை என் வேலையில் மூழ்கடித்துகிறேன் டா பாப்பு ஆனால் இந்த இரவு... இரவு என்னால முடியல டா பாப்பு “
என அழும் குரலில் சொல்லும் தன் அண்ணனை பார்க்கும் போது சில வருடங்களுக்கு முன் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் நிமிர்ந்த நடையுடனும் தெளிவான சிந்தனையோடும் இருந்த தன் அண்ணனா இது என்று ஆச்சரியமாக பார்த்தாள்.
காதல் இப்படியெல்லாம் ஒருவனை மாற்றுமா?
அங்கே ஹாலில் இறுக்கமாக அமர்ந்திருக்கும் தன் அன்னையையோ, தன்னயே ஏக்கத்துடன் பார்க்கும் தன் தந்தையையோ அந்த போதையிலும் துளியும் கண்டு கொள்ளாமல் தன் ரூமிற்கு சென்றுவிட்டான்.
அவனை ரூமில் படுக்கவைத்து விட்டு ஹாலிற்கு வந்த ஜனனியை பிழு பிழுவென பிடித்து கொண்டார் அவளின் தாய் ஞானசுந்தரி.
“ என்னடி அவன் கல்யாணத்தபத்தி இன்னைக்கும் பேசலயா? ஒன்னுக்கு மூனு பிள்ளைகள பெத்து வச்சிருக்கேனு தான் பேறு ஆனால் ஒன்னுக்கு கூட என் விருப்பப்படி கல்யாணம் பண்ணி வைக்க முடியல” எல்லாம் அவளால் வந்தது என அந்த அப்பாவி பெண் ருக்குவை திட்டினார்.
தன் பிள்ளைகளின் வாழ்க்கை இப்படி இருக்கிறதே என்ற வருத்தத்தை விட , அமைந்தால் தன் விருப்பப்படி தான் அமைய வேண்டும் என்ற எண்ணம் தான் சுந்தரிக்கு அதிகம் இருந்தது.
ஜனனி” அண்ணாணோட மனசு தெரிஞ்சும் இந்த கேள்வியை இப்ப மட்டும் இல்லம்மா எப்பொழுதும் என்னால கேக்க முடியாது.அதே மாறி அண்ணன் லைஃப்ல ஒரு தெளிவு கிடைக்காம எனக்கும் எதுவும் கிடையாது” என சொல்லும்போதே சந்தோஷின் முகம் அவள் மனக் கண்ணில் மின்னி மறைந்தது.
சுந்தரி” உங்க உங்க இஷ்டம் படி நீங்க இருக்குறத்துக்கு நான் ஏன் உயிரோட நான் சாகு...” என்று சொல்லி முடிக்கும் முன்பே ஜனனி சுந்தரயின் தோளை ஆவேசமாக பற்றி ஏன் மா ஏன் இப்படி சொல்லி சொல்லிதான் ஒருத்தியை எமனுக்கு தூக்கி கொடுத்தாச்சி ,
இதோ ஒருத்தன ( தனக்கு வலப்புறம் உள்ளரூமை கைகாட்டி ) பைத்தியமாக்கியாச்சி, இன்னொருத்தன் உயிருடன் உணர்வு இருந்தாலும் பிணமாறி இருக்கான்.இன்னும் என்னதான் வேனும் உனக்கு?
ஏன்பா இப்ப கூட அம்மாக்கு எதிரா ஒரு வார்த்தை பேச மாட்டிங்கல? பொண்டாட்டி மேல் அவளோ காதல் இல்லை?
ஆனால் என் அண்ணன் மட்டும்..... பாப்பு என தன் தந்தை சொல்ல வந்ததை கை நீட்டி தடுத்தவள் “ ஒரு கணவனா ,
ஒரு வியாபாரியாய் நீங்க சிறந்து விளங்கினாலும் நல்ல குடும்ப தலைவனா நல்ல அப்பாவாக நீங்க தோத்துடீங்க அதுவும் மோசமா” என்று கோபமாக சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
அதன் பின் முருகன் பேசியதெல்லாம் காற்றுக்கு மட்டுமே.அவள் பேசியதெல்லாம் யாரையோ என்பது போல் சுந்தரி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் தூங்க சென்று விட்டார்.
முருகன் மட்டுமே பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கவலை பட்டபடி சோஃபாவிலயே அமர்ந்துவிட்டார்..
காலையிலே 5 மணிக்கே விழித்து பழக்கம் உடைய விஷ்வேந் விழித்தபடியே தன் பெட்டிலேயே படுத்திருந்தான் .
படுத்ததிற்க்கும் தூக்கத்திற்கும் இடையே உள்ள 5 நிமிடமும், காலையில் விழிப்பிற்க்கும் எழுவதற்கும் இடையில் உள்ள 5 நிமிடமும் தன் இனிமையான , தன் கொடுமையான,இனி வரவே கூடாத,ஒரு முறையாவது வந்து விடாதா என ஏங்கும் அந்த ஒரு வருடத்தை சந்தோசமும், இயலாமையும், காதலும் சரிவிகிதத்தில் இருக்க அதையே நினைத்து பார்த்து கொண்டிருந்தான் (கொண்டிருப்பான்)...
தன் மொபைலில் உள்ள அகலியின் போட்டோவை” என் குட்டிமா”என ரசனையாக பார்த்து கொண்டிருந்தான்.
அவன் மூளையோ அவள் மிஸ்ஸஸ் அகலிகை யாக கூட இருக்கலாம் விஷ்வேந் என அவனை எச்சரிக்க அவன் மனமோ அவனே ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் சிரிக்கிறான் அது உனக்கு பொருக்கலயா? அவன் ஒன்னும் மிஸ்ஸஸ் அகலிகைய பார்க்கல அவனோட அம்முகுட்டி தான் பாக்குறான் என்றது.
மிஸ்ஸஸ் அகலிகையிலயே முகம் இறுகிய விஷ்வேந் கோபமாக அருகில் உள்ள பார்க்கிற்கு ஜாக்கிங் சென்று விட்டான்
தன் மனசு சொல்லும் உண்மையை கேட்கும் பொறுமை அவனிடம் இல்லை. .ஜாக்கிங் முடித்து குளித்துவிட்டு இடுப்பில் துண்டுடன் தன் அறையில் உள்ள கண்ணாடியில் தெரியும் தன் உடற்பயிற்சியால் முறுக்கேறிய உடம்பை பார்க்கும் போது தன் குட்டிமாவின் தேன் குரல் அவன் அனுமதி இல்லாமலே ஞாபகம் வந்தது.
“மாமா உனக்கு மட்டும் எப்படி உடம்பு இவளோ ஸ்ட்ராங்கா கல்லு மாறி ஜிம் பாடியா இருக்கு.என் அண்ணனும் இந்த சந்தோஷும் சுத்த வேஸ்ட் .மாமா மாமா உங்கள ஒரு பன்ஞ்ச் பன்னிக்கவ? ப்ளீஸ்
என குழந்தையின் குதுகலத்தோடும் தன் பூஞ்சை உடலில் உள்ள பூ போன்ற மென்மையான கைகளில் தன் மொத்த பலத்தையும் கொண்டு வந்து அவன் வயிற்றை நோக்கி கை ஒங்கவும் அவன் நகரவும் சரியாக இருக்க அந்த பார்க்கில் வேலைக்காக கொட்டி வைத்திருந்த மணலில் தொப்பென்று விழுந்தாள்.
இல்லாத காயத்தை பார்த்து வலிப்பது போல் அழுபவளை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் அவள் முன் வந்தவன் உதடோரம் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “ தொட்டு பேசாத அகலி” என்றான்.
அடப்பாவி என்று ஆச்சரியம் காட்டியவள் “ கைகொடுக்குறான பாரு "என்று மனதில் திட்டிய படியே கோபமாக எழுந்தவள் அவன் என்ன ஏது என்று சுதாரிக்கும்முன் ஒரு குதி குதித்து அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவள் 20 அடி ஒடி சென்று திரும்பி அவனை நோக்கி “ டேய் வளந்து கெட்டவனே தொட கூடாத போடா போ இப்ப என்ன பன்னுவ? போ போய் கேஸ் அடுப்பு மேல் கன்னத்த வச்சிக்கோ” ..
என்று தன் நாக்கை நீட்டி பழிப்பு காட்டிவிட்டு துரைய தொடக்கூடாதாமே நான் தொடாம வேறயாரு தொடுவாங்களாம் என்று முனுமுனுத்துக்கொண்டே ஓடி விட்டாள்.
பட்டாம்பூச்சி போல மென்மையான தன்னவளின் இதழ் ஸ்பரிசத்தை இன்றும் தன் கன்னத்தில் உணர்ந்தபடியே சிரித்து கொண்டே இரண்டு இரண்டு படிகளாக தாவி படி வழியாகவே கார் பார்கிங் சென்றான்.
(அவன் மனமோ ஏய் இரு இரு அவன் இப்ப தான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கான் நீ எதையாவது சொல்லி அவன கன்ஃயூஸ் பண்ணிடாத என அவன் மூளையுடன் சண்டை போட்டு கொண்டிருந்தது )
தன் ஸ்வீஃப்ட் டிசைரில்
(அதன் பின் எவ்வளவு விலை உயர்ந்த கார்கள் வாங்கினாலும் இது அவனுக்கு ஸ்பெஷல் தான் ஏன்னா அவன் மல்லிப்பூ க்கு ரொம்ப பிடிச்சகாராச்சே அவளை பேலவே அவள் ஆசைகளும் ரொம்ப குட்டி...)
ஆபிஸ் வந்தவன் வானுயர்ந்த வளர்ந்து நிற்கும் தன் அலுவலக கட்டிடத்தை பார்த்தான்.இந்த இரண்டு வருடங்களில் அசுர வளர்ச்சி அடைந்த VJK கண்ஸ்டரக்ஸனின் வளர்ச்சி, உயரம் எல்லாம் விஸ்வேந் தன் அம்முகுட்டியை குத்தி கிழித்த வார்த்தைகளின் வலிக்கு சமம்.தன் மல்லிப்பூ அன்று கதறிய கண்ணீரின் வேதனைக்கு சமம்.
தன் வேக நடையுடன் அனைவரின் குட் மார்னிங்கையும் சின்ன தலை அசைவுடன் ஏற்றுக்கொண்டு அவன் அறைக்கு சென்றவன் அதற்கு மேல் நினைக்க நேரமில்லாமல் அவன் வேலை அவனை ஆக்கிரமித்தது.
வேலை நடக்கும் சைட், கையிருப்பு மெட்டீரியல், பேமென்ட் பென்டிங் ,என அனைத்தும் தன் காரியதர்சியான பரத்திடம் கேட்டு தெரிந்து கொண்டவன்.
சைட் விசிடிற்கு வெளியில் கிளம்பும் போது பரத் “ சார் தஞ்சாவூரில் நமக்கு கிடைச்சிருக்க மாஃல் கட்டுற ப்ராஜெக்ட் விஷயமா கிளையண்ட் அண்ட் சைட் விசிட்க்காக நீங்க இன்னைக்கு நைட் கிளம்பனும் சார்” என கோர்வையாக சொல்லி முடித்தான்.
“யா ஓகே ரெடி பண்ணிடுங்க ஃப்ளைட். டிக்கெட் புக் பண்ண வேண்டாம் நான் கார்லயே போய்கிறேன் “ என சொல்லி சென்று விட்டான்.
இரவு 8 மணிக்கே மணிக்கே வீட்டிற்கு வந்த அண்ணனை பார்த்ததுமே தெரிந்து கொண்டாள் அண்ணன் எங்கயோ வெளியூர் வேலை விஷயமாக செல்கிறான் என்று.
(இல்லையென்றால் நைட் 12 தான் அதுவும் நிற்க முடியாத போதையில்).
“ பாப்பு ஒரு காஃபி டா ரொம்ப தலைவலிக்குது “ என சிகெரெட்டை பிடித்த படியே கேட்டான்.
ம்ம் என்று சொன்ன வள் வேலைக்காரி லீவ் என்பதால் தானே சென்றாள்.காஃபி எடுத்துக்கொண்டு வருவதற்குள் 4 சிகரெட்டை காலி பன்னியிருந்தான் விஸ்வேந். கலங்கிய கண்ணோடு “விச்சு அண்ணா டிரிங்க்ஸ் கூட பரவாயில்லை இந்த சிகரெட் வேணாமே”.என்றாள்.
“பாப்பு ப்ளீஸ்” என்று சொன்னபடி காஃபியை வாங்கி கொண்டு தன் அறைக்கு சென்று விட்டான்.
ஜனனி அழுதபடியே அப்படியே அமர்ந்து விட்டாள்.ஒரு மணி நேரம் கழித்து கையில் டிராவல் பேக்கோட கிளம்பி வந்தவன்.முருகனும் ஞானசுந்தரியும் ஒரு மேரேஜ் ரிஷப்சன் சென்றிருந்தால் ஜனனி யிடம் 1000 பத்திரம் சொல்லிவிட்டு, கண்ணனை பத்திரமாக பார்த்துக்க சொல்லிட்டு எதாவதுனா? உடனே கால் பண்ண சொல்லி விட்டு கிளம்பிவிட்டான்.
காரில் FM ல் ரேவதி நடிப்பில்
என்ன மானமுள்ள பொண்ணுனு மதுரையில கேட்டாங்க.
மாயவரத்துல கேட்டாங்க
அந்த மன்னார்குடில கேட்டாங்க
சீர்செனத்தியோடு வந்து சீமையில கேட்டாங்க..
அட எல்லாம் உன்னால வேணாம்னு சொன்னே கண்ணால
என் மச்சான் உன் மேல ஆசபட்டு நின்னேன் தன்னால...
கொண்டை முடி அழகபாத்து கோயம்புத்தூரில கேட்டாங்க...
நெத்தியில பொட்ட பாத்து நீஞ்சூருல கேட்டாங்க
இரு புருவ அழகு பார்த்தாங்க புதுக்கோட்டையில் இவள கேட்டாங்க...
கோபமுள்ள பொண்ணுன்னு கோட்டையில கேட்டாங்க..
பாசமுள்ள பொண்ணுன்னு இவள பண்ணபுரத்துல கேட்டாங்க...
இத்தனை பேரு சுத்தி இருந்தும் உத்தமராசா உன்னை நினைக்கும் பத்தினி உள்ளமடா....
என்ற பாட்டு ஓடியது.
தன் காதலை விஸ்வேந் ஏற்கவில்லை என்றதும் , எட்டு கட்டைக்கு அவன் அம்முகுட்டி அவன் அபார்ட்மெண்டே அதிரும் படி பாடியது அவனுக்கு ஞாபகம் வந்து தன்னாலே சிரித்து கொண்டான்.
இந்த குள்ளவாத்த கல்யாணம் பண்ணிக்க இத்தனை பேர் வந்தாங்கன்ரத நாம நம்பனுமாம்.
அழைச்சிட்டு போன அடுத்த அரை மணி நேரத்தில கொண்டாந்து விட்டுட்டு வீட்டில் உள்ள எல்லாரு காலுலயும் விழுந்து கும்பிட்டுட்டு போவாங்க எப்படி இத வச்சி மேய்க்கிறேங்கனு.......
பன்றதெல்லாம் வாலுதனம் சேட்டை இதுல மன்னார்குடியா மாயவரமா........என யோசித்தபடியே தஞ்சாவூரை நோக்கி சென்றான்.
விஷ்வேந்திற்காவது அவன் குட்டிமாவின் சேட்டைகளோடும் அவள் கொடுத்த காதலோடும், ஆல்கஹாலுடனுமா நாட்களை தள்ளினான்.
ஆனால் அகலிகை யோ வார்த்தையால் கூட தன் காதலை கூறாத தன் மாமனின் நினைவுகளோடு எப்படி இருப்பாளோ என அவன் மனம் வருத்தப்பட்டது...
இப்படிக்கு
மிளாணி