All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்ராவின் "சுயம்புமானவள்" - கதை திரி

Status
Not open for further replies.

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது என்னுடைய முதல் கதை. இந்த கதையின் மூலம் என் எழுத்தாற்றலை நிரூபிக்க உள்ளேன். இக்கதையின் நாயகி தன் வாழ்க்கையின் அனைத்து இன்னல்களையும் ஒரேநேரத்தில் பெற்று, தனக்கென யாரும் இல்ல இச்சமுகத்தை எவ்வாறு எதிர் கொள்கிறாள். சுயம்புவாக தன்னை மெருகேற்றுக் கொண்டவளின் வாழ்க்கையில் தனக்கு எனக் கிடைக்கும் ஒருவரை, அவளால் தன்னுடைய வாழ்க்கைத் துணையாக ஏற்று கொள்கிறாளா? இல்லையா? என்பதை இக்கதையின் வாயிலாக கூற உள்ளேன்.

இக்கதையின் நாயகியின் பெயர் மித்ரா. நாயகனின் பெயர் ஹரிஷ்கிருஷ்ணா.

அன்புடன்,
மித்ரா.
 
Last edited:

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 1


பிருந்தாவனம் இல்லம் – கோவை மாநகரம்



பெயருக்கேற்ப எந்தவிதமான அறிகுறியும் இல்லை அந்த வீட்டில். ஏனெனில் எந்த விதமான சந்தோசங்களையும் உயிர்ப்பையும் பெற்றிருக்கவில்லை. இவை அனைத்தும் இருந்தகாலமும் உண்டு, ஆனால் இப்பொழுது தனி ஒருத்தி வாழும் இருப்பிடமாக மட்டுமே உள்ளது.


அங்கே அவள் தனியாக இருக்கிறாள் என்று கருத வேண்டாம். வீட்டில் வேலை செய்யும் ஆட்களும் அவளுக்கான பிஏ மதுமிதாவும் அவளுடன் தங்கியிருக்கிறார்கள். அனைத்துவிதமான வெற்றிகளையும் பெற்று யாரும் எதிர்க்க முடியாத இடத்தை அவள் அடைவாள் என அவளே நினைத்திருக்கமாட்டாள்.


“மது” என அழைத்துக்கொண்டே மாடிப்படிகளில் இருந்து அவசரமாக நடந்து வந்து கொண்டிருக்கும் தனது முதலாளியைப் பார்த்து கொன்டிருந்தாள் அவளது பிஏ.


‘சொல்லுங்க மேடம்’ என்றாள் பவியமாக.

“இன்றைக்கு என்ன அப்பாயிண்மாண்ட் இருக்கு” என்று கேட்டு கொண்டே டைனிங் டேபிள்க்கு சென்றாள் மித்ரா.

“மேடம் இன்னிக்கு ஒரு ப்ராஜெக்ட் பைனல் பண்ணி சைன் செய்யணும். அப்புறம் மும்பை கிளையிண்ட்ஸ் கூட லஞ்ச் இருக்கு. evening ஒரு charity function இருக்கு மேடம் அதுக்கு நீங்க cheif கெஸ்ட் ஆக போகனும்” என்றாள்.


“சரி” என்று ஒற்றை வரியோடு சாப்பிட ஆயத்தமானாள். அவள் டைனிங் டேபிளை அடைந்ததும் அனைத்து உணவுகளையும் வைத்துவிட்டு அவளுக்கு பரிமாற ஆயத்தமாக பார்வதி அம்மாள் காத்திருந்தார்கள். அவர் இந்த வீட்டு சமையல் முதல் அனைத்து வகையான பணிகளையும் மேற்பார்வைசெய்பவர், மித்ரா மீது மிகுந்த பாசத்தை வைத்திருப்பவர். அவளை எல்லா வித இன்னல்களில் இருந்து பேணிக்காப்பவர். ஆனால் அவர்ளையும் தனக்கு அருகில் வைத்துக் கொள்ளமாட்டாள் மித்ரா. அதற்கும் ஒரு காரணம் உள்ளது மித்ராவிடம்.


சாப்பிட்டு முடித்தவுடன் நேராக அவளது இல்லபூஜை அறையில் இறைவனை வணங்கி விட்டு, திரும்புகையில் அந்த அறையில் இருந்த மற்ற புகைப்படங்களைப் பார்த்து விட்டு தன் கண்களை அழுந்த முடி தன்னை சமநிலை படுத்தி விட்டு தன்னுடைய அலுவலுக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு தனது பிஏ உடன் அலுவலகம் செல்ல தனது BMW காரை நோக்கி சென்றாள். டிரைவர் வண்டியை திறந்து அவள் உள்ளே சென்றதும் எந்தவிதமான தாமதமும் இன்றி கார் பறந்தது. ஏனெனில் அவளுக்கு time management மிகவும் முக்கியமானது.


அவள் சென்ற பாதையை மிகுந்த வேதனை உடன் பார்த்துக் கொண்டிருந்தார் பார்வதி அம்மாள். எப்படி இருந்த பெண் இப்படி மாறி விட்டாளே !! என்று பெருமூச்சை விட்டார். அப்படி என்னத்தான் நடந்தது நீங்கள் கேட்க விரும்புகிறிர்கள் அல்லவா !! அதை கதைகளத்தில் கூறுகிறேன்.



கோகுலம் இல்லம் கோவை மாநகரம்


மித்ராவின் வீட்டிற்கு நேர்மாறாக இருந்தது, ஹரி என்று நண்பர்களாலும், கிருஷ்ணா என்று வீட்டிலுள்ளவர்களாலும் அழைக்கப்படும் நமது நாயகன் ஹரிஷ்கிருஷ்ணாவின் இல்லம்.


“ஏங்க நம்ம பசங்கள காணோம்ங்க ரூம்ல தா தூங்கிட்டு இருந்தாங்க” என்று கேட்டபடி வந்தார் மீரா கிருஷ்ணாவின் அண்ணி.


“அவங்க சித்தப்பா ரூம்ல இருப்பாங்க மீரா, ஏன் டென்ஷனாகற?” என்றான் கூலாக ப்ரித்வி.


“அதுதான் பயமாயிருக்கு ப்ரித்வி, கிருஷ்ணாவும் அவங்களும் பண்ற அட்டகாசம் இருக்கே முடியலபா, வீட்டையே தலைகீழா மாத்திடறாங்க”


“கிருஷ்ணா கொடுக்கற செல்லத்தால தா இவங்க எல்லாம் என்னோட பேச்சையே கேட்க மாட்டன்றாங்க” என்றால் சற்று சலிப்பாக மீரா.


சிரிப்புடன் அவளருகே வந்த அவனது கணவன் “உனக்கே தெரியும் தான மீரா அவனுட சந்தோசமே பசங்க கூட தா, அவன என்னவிட உனக்கு தா நல்லா தெரியும். அவன் என்ன தா வெளிய ஆபீஸ்ல எவ்வளவு RUDE ஆ இருந்தாலும், அவன் இன்னும் பழைய கிருஷ்ணாவ இருக்கறது நம்ம குட்டிஸ்கிட்ட மட்டும் தான்.”


“அவன பழைய மாதிரி எல்லார்கிட்டயும் பழகறத பாக்கணும்னு ஆசையா இருக்கு மீரா” என்றான் உணர்ச்சிபெருக்கோடு ப்ரித்வி.


“நீங்க நினைக்கறது கண்டிப்பா நடக்கும்ங்க என்றாள்” அவன் துணைவி ஒருவித நம்பிக்கையுடன்.
அங்கே இவர்கள் யாரை பற்றி பேசி கொண்டிருக்கிறார்களோ, அவனைச் சுற்றி அவர்களது பிள்ளைகள் அவனை எழுப்ப முயன்று கொண்டிருக்கிறார்கள்.



அப்படியே அவனுடைய அறையை பார்வையிடலாம். அது ஒரு KINGSUIT அறை, தானே அந்த அறையயை வடிவமைத்து இருந்தான். அந்த அறையில் இல்லாத வசதிகளே இல்லை, அனைத்து வசதிகளையும் பெற்று உள்ளது. அந்த அறையில் இல்லாத ஒன்று ஒரு மனைவி மட்டுமே.


அழகான டிரஸிங் டேபிள், வாட்ரோப்கள், சிறிய பால்கனி , ஊஞ்சல் , king size bed, டிரஸிங் ரூம் மற்றும் குழந்தைகளுக்கான சிறிய அறை என சீராக வடிவமைக்கப்பட்டுள்ளது.


அவன் ஒரு மிகச்சிறந்த கட்டட வடிவமைப்பாளர் என்று ஒவ்வொரு முறையும் நிருபிக்க படுகிறது. கிருஷ்ணா கட்டடவியல் துறையில் முதுநிலை படிப்பு முடித்தவுடன், தனது குடும்பத் தொழிலான கன்ஸ்டராக்ஷன் தொழிலைத் திறம்பட நிர்வகிக்கிறான்.


"சித்து!! எழுந்திரி எங்களுக்கு ஸ்கூலுக்கு லேட் ஆகுது" என்று தன்னால் முடித்த வரை கத்திக் கொண்டிருந்தான் பிரவீன். அவன் தங்கை மிருதுளாவோ தனது கிருஷ் சித்தப்பாவிற்கு தூங்குவதில் கம்பெனி கொடுத்து கொண்டிருந்தாள்.
அவனுக்கு இவர்கள் தூங்குவதுப்போல் நடிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன், உடனே தன்னுடைய டெக்னிக்கை பயன்படுத்தி அவர்களை எழுப்பினான்.



"அய்யோ!! அம்மா!! " எனக் கூறிக்கொண்டே கீழே விழுந்த மாதிரி நடித்தான். அவனது அழறலில் தூங்குவதுப்போல நடித்துக் கொண்டிருந்தவர்கள் அடித்துப்பிடித்துக் கொண்டு எழுந்தனர்.


"என்னாச்சு பிரவீ ! அடிப்பட்டிடுச்ச இங்கே காட்டு" என்றான் அவர்களின் கிருஷ்ணா.


"அண்ணா!! ரொம்ப வலிக்குதா!" டாக்டர்கிட்ட போகலாமா? என்றாள் பாவமாக மிருதுளா.


"ஹாஹா!! எப்படி எழுப்பின பாத்திங்களா! " அவர்கள் இருவரும் இடுப்பில் கை வைத்தப்படி முறைத்தனர்.


"சாரி சித்து!! இன்னைக்கி பிராஜக்ட் இருக்கு லேட்ட போனா பெஞ்ச் மேலே நிக்க வைச்சிடுவாங்க!" அதுதான் சீக்கிரம் எழுப்பிட்டேன்.


அவன் சொன்ன முகபாவங்களில் கோபம் மறந்து பாசத்துடன் பார்த்தான். அவனை தூக்கிச் சுற்றி கீழே விட்டவுடன்." நானு நானு!! எனக் குதித்தாள். அவளையும் தூக்கிச் சுற்றி விட்டு, சீக்கிரம் ரெடி ஆகுங்கள். நானே உங்களை ஸ்கூலில் டிராப் பண்ணிடரேன்" , என்றான்.


அவன் சொன்னவுடன் "அம்மா எனக் கத்திக்கொண்டே ஓடினார்கள்". அவர்கள் சென்றவுடன் தன்னுடைய முகத்தை கடினமாக வைத்துக்கொண்டான். தானும் தன் ஆபிஸ்க்கு செல்ல தயாரானன்.
 
Last edited:

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 2


பிரவீ, மிருதுளா ரெடி ஆயிட்டிங்களா? “ எனக் கேட்ட படியே மாடிப்படிகளிலிருந்து கீழே இறங்கி கொண்டிருந்தவனை அதுரமாக அவன் தாய் கோதை பார்த்து கொண்டிருந்தார்.


அவர்களை பார்த்தும் பார்க்காததை போல முகம் திருப்பிச் சென்றான். முகம் வாடினாலும் அதை மறைத்து மீராவிற்கு கண் காட்டினர்.


அதை புரிந்தவளாக, “ கிருஷ்ணா !! வா, சாப்பிடலாம்” என்றழைத்தாள்.


“அண்ணி !! பசங்க சாப்பிடங்களா! “ எங்கே காணோம் என்றான். அவன் அண்ணி என்று அழைத்ததும் நெஞ்சில் சுருக்கென்றது.


அதை மறைத்து, “சாப்பிட்டாங்க, நீ சாப்பிடு “ என்றாள்.


அவள் முகபாவனை வைத்தே கண்டு கொள்பவன் அவள் வருத்தத்தையும் அறிந்தான். இருந்தும் நீ என்னை ஏமாற்றியதற்கு உனக்கு தேவைத்தான் என எண்ணிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். அவன் சாப்பிட ஆரம்பித்ததும் அவனிடம் மறைத்த ஒரு உண்மைக்காக மானசிகமாக மன்னிப்பை கேட்டாள்.


ஆபீஸ் கிளம்பி ரெடியாக வந்த கணவனை கண்டவள், மதிய உணவை அளித்தாள்.


“கிருஷ்ணா!! பசங்களை நீ கூப்பிட்டு போறாய்! இல்ல நா விடனுமா?” என்று பேச்சை ஆரம்பித்தான்.


“ இல்லை அண்ணா !! நானே விடுறன் “ , என்றான்.


அப்புறம் ஆபீஸ்ல வொர்க்ல எப்படி போகுது? எந்த ப்ரப்ளமமும் இல்லையே? என்று வினவினான்.


நல்லாதான் இருக்கு அண்ணா, ஒரு பிரச்சனையும் இல்ல! நீங்க வரலாம்தான ஆபீஸ்க்கு என்றான்.


உனக்கு தான் எல்லாமே தெரியும் இல்ல எனக்கு flight-ல pilot ஆ இருக்கறதல தான் இஷ்டம், என்னோட ambition கூட அதுதான், எனக்கு இதுல தா ஆத்மத்திருப்தி கிடைக்குது. ஆனால் உனக்கு எப்பவும் நான் சப்போர்டதான் இருப்பேன்.
அவன் கூறியதை அமைதியாக கேட்டவன், நாம எவ்வளவுதான் கேட்டாலும் இதைதான சொல்லுவாங்க ! என்று பெருமூச்சை விட்டவன்.



“அண்ணா !! இன்னிக்கு உங்களுக்கு வொர்க் இல்ல தான அப்புறம் என்ன லஞ்ச் எடுத்துட்டு கிளம்பரிங்க?. அதுவும் எப்பவும் எடுத்துட்டு போகமாட்டிங்களே? , என்று வினவினான்.


அது ஒன்னும் இல்ல கிருஷ்ணா ஒரு சின்ன technical conference ப்ரோக்ராம் இருக்கு பத்து நாளைக்கு. அதுக்குதா மீரா கொடுத்து அனுப்புற என்றான்.


“ ஒஹ் ஒஹ்!! அப்படியா, சரி அண்ணா, இன்னைக்கு லேட்டதா வருவேன் ! friend ஓட charity function போக வேண்டிருக்கு என்று கூறியவன் சாப்பிட்ட கை கழுவ சென்றான்.


சரி கிருஷ்ணா, நீ போய்ட்டு வா என்றவன். மீரா பசங்களைத் தயார் செய்து அழைத்து வரவும் சரியாக இருந்தது.


“ மீரா!! நீ பசங்களை சாயந்திரம் கூட்டிட்டு வந்துடு. நான் வந்ததுக்கு அப்புறம் அம்மாவ ஆஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போலாம் “ என்று கூறியவன்.


“அம்மா!! அப்பா எங்க இருக்காரு” , என்று கேட்டுகொண்டே சென்றவனை பார்த்து அதிர்ந்து நின்றான். அதை பார்த்ததும் அவன் அருகில் வந்த மீரா, அத்தைக்கு ஒன்றும் இல்லை ஜஸ்ட் bp raise ஆயிருக்கு பயப்பட எதுவும் இல்லை என்று கூறினாள்.


மீராவிற்கு தெரியும் என்ன தான் கோபமாக இருந்தாலும் பெற்றவர்களின் மேல் அதிகமான பாசம் கொண்டவன். அவர்களின் மீது மதிப்பு மரியாதையை வைத்து இருப்பவன். இருந்தாலும் அவர்களுடன் பேச தோன்றவில்லை அதற்கு காரணமும் உண்டு. கிருஷ்ணாவின் பெற்றவர்கள் அவனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ரணத்தை அளித்துவிட்டார்கள்.


ப்ரித்விக்கும் மீராவிற்கும் அது தெரிந்தும், கிருஷ்ணாவின் கோபம் நியாயமானதாகவே தோன்றியது. இவர்களுக்கும் அவர்களின் மீது வருத்தம் இருந்தாலும், அவர்களே தங்களின் தவற்றை எண்ணி வருந்துவதை பார்க்க முடியாமல், மன்னித்து குடும்பம் நிலைகுலையாமல் இருக்க எல்லோரையும் ஒன்றிணைத்து ஒரே வீட்டில் இருக்க வைத்திருந்தார்கள். ஆனால் கிருஷ்ணாவையும் அவனது பெற்றோர்களையும் ஒருவரிடம் மற்றவர் பேசுமாறு வற்புறுத்தவில்லை. ஏனெனில் தவறு பெற்றவர்களிடம் உள்ளது என நன்கு அறிந்திருந்தனர்.


மீரா கூறி சென்றவுடன் முகத்தை மாற்றிக் கொண்டு பிள்ளைகளை அழைத்தான்.


“சித்து, 2 நிமிஷம் தாத்தா, பாட்டி கிட்ட சொல்லிட்டு வரோம்” என்றான் பிரவின்.


தாத்தா பாட்டி நாங்க ஸ்கூல்க்கு போய்ட்டு வரோம் என்று கூறி விட்டு சிட்டாக பறந்தார்கள்.


கிருஷ்ணா அவர்கள் இருவர்களையும் காரில் பத்திரமாக உட்கார வைத்துவிட்டு வண்டியை கிளப்பினான்.


கார் கிளம்பியதும் தன் அறை ஜன்னலில் இருந்து பார்வையை விளக்கி தன் அறையில் இருந்தவர்களைப் பார்வையிட்டார் நந்தகோபால் கிருஷ்ணாவின் தந்தை. இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த சிறை வாசம் என்பது போல இருந்தது அனைவரின் பார்வையும் அவர் மேல்.மேலும் அவரை எந்த கேள்வியும் கேட்காமல் தான் வேலைக்கு போய் வருவதாக சொல்லி கிளம்பினான் பிரித்வி.


போனவன் திரும்பி வந்து எல்லாம் சரியாகிடும் என்று கூறி மாலையில் தயாராக இருக்குமாறு தன் தாயிடம் கூறினான். அதற்கு தலையை மட்டும் ஆட்டினார்.


ப்ரித்வியும் இயலாமையால் பெருமூச்சை விட்டு சென்றான். மீராவிடம் அவர்களை பார்த்துகொள்ளுமாறு தலையை அசைத்து தன் காரில் பயணத்தை தொடங்கினான். என்ன தான் எல்லாருக்கும் தைரியம் கூறினாலும் அவன் மிகுந்த வேதனையில் இருந்தான். அதை அவள் மனையாள் மட்டுமே அறிவாள்.


அன்பாக இருந்த குடும்பம் இப்பொழுது சிதறி இருப்பதை ஒரு கையாலகாத தனத்தால் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிகிறது அவனால். தந்தை தன் அறையில் மட்டுமே இருந்து தான் செய்த தவறுக்கு சிறை வாசமிருக்கிறார். தாயோ ஒரு படி மேலே போய் மௌனத்தை கடைபிடிக்கிறார் அதுவும் இரண்டு ஆண்டுகளாக. இதற்கு எப்பொழுது விடிவுகாலம் பிறக்கும் என்ற ஏக்கத்தோடு அவன் அலுவலகத்துக்கு சென்றான்.


கிருஷ்ணா பிள்ளைகளைப் பள்ளியில்விட்டு விட்டு தன் construction கம்பெனிக்கு செல்ல பயணித்தான்.
 
Last edited:

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 3


https://drive.google.com/file/d/10s7QzoUmn9t22f9fuazjnax52rGxU_37/view


அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ள கருத்து திரியை பயன்படுத்தவும்.

இப்படிக்கு,

உங்கள்

மித்ரா.
 
Last edited:

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 4

next update link :

சுயம்புமானவள் – 04.pdf


அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ள கருத்து திரியை பயன்படுத்தவும்.

இப்படிக்கு,

உங்கள்

மித்ரா.
 
Last edited:

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 5

next update link :

சுயம்புமானவள் - ௦5.pdf

அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ள கருத்து திரியை பயன்படுத்தவும்.

இப்படிக்கு,

உங்கள்

மித்ரா.
 
Last edited:

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் - 6


ek.jpg

கோவிலிருந்து அதிவேகமாக சென்ற இரு கார்களும், அந்த அம்மாவுடைய வீட்டை 1௦ நிமிடங்களில் வந்தடைந்தது. அதற்குள் டாக்டரின் காரும் வர, அனைவரும் சேர்ந்து மித்ராவை அவர்களின் வீட்டில் உள்ள ஒரு ரூமிற்கு அழைத்துச் சென்றனர்.


அவர்கள் அறையின் வெளியே டாக்டர்காக வெயிட் செய்துக்கொண்டு இருந்தனர். மதுவோ பதட்டத்தில் வினோத்திற்கு அழைத்தாள்.


அவன் அலைபேசியை எடுத்ததும், “ஹேய்! மது, என்னடா லவ் சொல்லி half டே கூட ஆகல, அதுக்குள்ள என் நியாபகமா டார்லிங்...” என்றுக் குலைந்துக் கொண்டிருந்தவன் பேச்சில் கோபமானாள்.


“டேய் !! லூசாடா நீ, நான் என்ன சொல்ல வறேன்னு கூட புரிஞ்சுக்காமா பேசிட்டே இருக்க, மேடம்க்கு அக்சிடேன்ட் ஆயிடுச்சு..”

“ஏய் !! என்ன டி சொல்ற? எப்போ ஆச்சு? எங்க இருக்கீங்க? ஹாஸ்பிட்டல் பேர் என்ன?” என்று பதறினான்.

“நான் சொல்றது முழுசா கேளு, நானும் மேடமும் கோவிலுக்கு போய்ட்டு வெளியே வரும்போது, ஒரு சின்ன பொண்ணு மேல கார் இடிக்கற மாதிரி வரவும் மேம் அவள காப்பாத்திட்டாங்க, ஆனா கார் மேடம் மேல லைட்டா இடிச்சிடுச்சு.. அதுல மார்னிங் அவங்களுக்கு அடிபட்ட இடத்துலயே திரும்ப பட்டு மயக்கமாயிட்டாங்க.. அந்த குழந்தையோட பாமிலி தான் அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. டாக்டர் செக் பண்ணிட்டு இருக்காங்க... நீ வரியா இங்க ப்ளீஸ்.. எனக்கு பயமா இருக்கு...”

“வரேன் இரு... எனக்கு அட்ரஸ் சொல்லு.. நான் எழுதிக்கறேன்”

“எனக்கு தெரியாது... நான் இந்த வீட்டுல இருக்கறவங்ககிட்ட கேட்டு சொல்றேன்... 2 மினிட்ஸ்...”

அப்பொழுது அங்கிருந்த அம்மாவிடம், “அம்மா!! இந்த வீட்டு அட்ரஸ் சொல்லுங்கமா... ரொம்ப அவசரம்...” என்றாள்.

அவரும் முகவரியை கூறவும் அவனிடம் சொன்னாள்.. அவன் முகவரியை கூறியதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்தான். அந்த அம்மா மதுவிடம் அட்ரஸ் கூறியதும் அவரது மருமகளும் அந்த வீட்டில் வேலை செய்பவர்களும் அவரை ஆச்சரியமாக பார்த்தனர்.

வினோத், “ஏய்!! நீ யாரு வீட்ல இருக்கத் தெரியுமா, நாம இன்னைக்கு காலைல மீட் பண்ணனும் இல்ல ஹரி, அவனோட வீட்லதான் இருக்கீங்க... ஒன்னும் பிரச்சனையில்லை நான் வரேன்.. பார்த்துக்கோ மித்ராவா...” என்று போனை வைத்துவிட்டு ஹரியின் வீட்டிற்கு பறந்தான் தன் காரில்.

ஹரியின் அம்மா இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த மௌனத்தை உடைத்துவிட்டார். அதில் மகிழ்ந்தனர் அவரின் மருமகளும் அந்த வீட்டில் உள்ள அனைவரும்.

வீட்டில் நடைபெற்ற இக்களேபரத்தில் என்னாயிற்று என்று முதல் முறையாக தனது அறையில் இருந்து வெளியே வந்த நந்தகோபாலை அவர்கள் கவனிக்கவில்லை.

அப்பொழுது ஹரியின் அறை வாயிலில் அனைவரும் இருப்பதைப் பார்த்து பயந்துப் போனார். திரும்ப என்னோட கிருஷ்ணாவுக்கு எதுவும் ஆயிடுச்சா என்று எண்ணியவர். அங்கு நடக்க ஆரம்பித்தவரின் கண்களில் மிருதுளா அழுந்த முகத்துடன் தென்படவும் அவளை அருகில் அழைத்து விசாரித்தார்.

மிருதுளாவும் நடந்ததை முழுவதுமாக தன்னுடைய மழலை மொழியில் கூறினாள்.

நந்தகோபாலுக்கோ, “கடவுளே என் பேத்திய காப்பத்தனா பொண்ண நல்லபடியா குணபடுத்திடுபா...” என்று மனதில் வேண்டினார். அவர் தன் பேத்தியை அழைத்துக்கொண்டு அங்கு வரவும் டாக்டர் அறையை விட்டு வரவும் சரியாக இருந்தது.

நந்தகோபாலே, “இப்போ எப்படி இருக்காங்க அந்த பொண்ணு டாக்டர்... எந்த பிரச்சனையும் இல்லையே?” என்று கேட்கவும் அவர் உள்பட அனைவரும் அவரை அதிர்ச்சியாக பார்க்க.. இவர்களை எல்லாம் ஒரு புரியாத பார்வைப் பார்த்த மதுமிதா டாக்டரிடம் திரும்ப கேட்கவும் அதில் தெளிந்தவர்.

“அவங்களுக்கு அடிபட்ட இடத்துலேயே அடிபட்டதால தான் மயங்கிட்டாங்க.. வேற ஒன்னும் இல்ல ... நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க.. ஒரு 2 நாளைக்கு...” என்றுக் கூறி அவர் மீராவிடம் மித்ராவுக்கு தேவையான மருந்துகளின் லிஸ்ட்டை தந்தார்.

அவர்களை அனுப்பிவிட்டு வந்த மீரா வேலையாளிடம் டாக்டர் தந்த மருந்துகளை வாங்கிக் கொண்டு வருமாறு பணிந்தாள்.

அப்பொழுது வேகமாக வந்த ப்ரித்வி, “என்னாச்சு மீரா?... மிரு எப்படி இருக்கா? அடி ஒன்றும் படலையே....”

“ரிலாக்ஸ் ப்ரித்வி.... பாப்பா நல்லா இருக்கா.... பாப்பாவ காப்பாத்தன பொண்ணுக்குதான் சின்ன அடி... மயக்கத்துல இருக்காங்க...”

அவன் குழந்தையை தேடி வரவும் அவளைக் கண்டதும் கட்டிக் கொண்டு அழுக ஆரம்பித்தான். பின்பு மிருதுளாவே அவன் கண்களைத் துடைத்துவிட்டு அவனைப் பார்த்து சிரித்தாள்.

மிருதுளா அவனிடம், “டாடி!! பாட்டி பேசிட்டாங்க.... அப்பறம் தாத்தா கூட ரூமா விட்டு வெளியே வந்துட்டாங்க” என்றாள்.

அதில் ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தவன். மீராவைப் பார்க்க அவளும் ஆமாம் என்பதுப் போல தலையசைத்தாள்.

“ரெண்டுபேரும் எங்க இருக்காங்க மீரா?” என்றான்.

அவள், “நம்ம கிருஷ்ணா ரூம்ல தான் அந்த பொண்ணு தங்கியிருக்கு... அங்கதான் இருக்காங்க எல்லாரும்” என்று அவனுடன் சென்றனர் மற்ற இருவரும்.

அந்த பொண்ணைப் பார்க்க வந்தனர் அனைவரும். அவள் மயக்கத்தில் இருக்கவும், அவள் அருகில் கையை பிசைந்துக்கொண்டு நின்றிருந்தாள் மது. அவளின் அருகே சென்ற கோதை “எல்லாம் சரியாயிடுமா !! பயப்படாத... !!” என்று ஆறுதல் அளித்தார்.

நந்தகோபால் அவரிடம் இருவரைப் பற்றி விசாரிக்கவும் அவள் மித்ராவைப்பற்றியும் அவளின் அலுவலகம் பற்றியும் கூறினாள்.

“நீ என்ன வேணுமா இந்த பொண்ணுக்கு?” என்றார்.

அவள், “நான் மேடமோட பி.ஏ சார்” என்றாள்.

அப்பொழுது புயலென வந்த வினோத், “அப்பா !! இவ பி.ஏ மட்டும் இல்ல... மித்ரா இவளோட கார்டியன் கூட.. அப்பறம் நான் கல்யாண பண்ணிக்க போற பொண்ணும் மதுதான்...” என்று கூறினான்.

அதில் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

பின்பு மதுவிடம், “மித்ரா, எப்படி இருக்கா?” என்று விசாரித்தான். பின்பு அவளை அங்கேயே பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு அனைவருடனும் சென்றான் வினோத்.

“எப்படி மித்ராவ தெரியும் வினோத்?” என்றுக் கேட்டான் ப்ரித்வி.

“அண்ணா!! நானும் அவளும் க்ளோஸ் ப்ரிண்ட்ஸ்.... என்னப் பத்தி எல்லாமே தெரியும் அவளுக்கு எனக்கும் அப்படித்தான்.. இன்னைக்கு காலைலதான் என்னையும் மதுவையும் பேச சொல்லி கல்யாணத்துக்கு ஒத்துக்க வைச்சா... நம்ம CONSTUCTION – ல சின்ன அக்சிடன்ட் மார்னிங்... நம்ம ஹரிக்கும் மித்ராவுக்கும் அதுல அடிப்பட்டுச்சு... அதுக்குள்ள இப்பவும் அடிபட்டு படுத்துட்டு இருக்கா...”

எல்லாரும் அதிர்ந்து, “என்னாச்சு? எப்படி? ரொம்ப அடியா? டாக்டர்கிட்ட காட்டனிங்களா?” என்று அனைவரும் கேள்வி கேட்டனர்.

அவர்களை அமைதிபடுத்திவிட்டு காலையில் நடந்தது முதல், CONFERENCE மீட்டிங்கில் CONTRACT சைன் ஆனது உள்பட, அனைத்தும் கூறிவிட்டான்.

“ஒஹ்!! அப்படியா !!” என்றதோடு நிறுத்திக் கொண்டனர்.

பின்பு அவனே, “அவள் மயக்கம் தெளியும்வரை இங்கயே இருக்கட்டும் அம்மா, அதுக்கப்பறம் நான் அவள வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்...” என்றான்.

அதற்கு அவரோ, “மித்ரா, சரியாகற வரைக்கும் இங்கயே இருக்கட்டும்... அவங்க வீட்ல சொல்லிடு..” என்றார் கோதை.

அதில் ஒரு நிமிடம் வருந்தியவன் அவர்களைப் பார்த்து, “அவளுக்கு யாருமில்லை, ரெண்டு வருஷம் முன்னாடி அவங்க எல்லாரும் ஒரு அக்சிடன்ட்ல இறந்துட்டாங்க....” என்றான்.

அதைக்கேட்டு அனைவரும் வருத்தப்பட்டனர்.

அப்பொழுது வேகமாக வந்தான் கிருஷ்ணா. “அண்ணா !! மிருதுளாக்கு என்னாச்சு? அவ எப்படி இருக்கா?” என்றான்.

“அவ நல்லா இருக்க கிருஷ்ணா, ஆமாம், உனக்கு எப்படி தெரியும் நாங்க யாரும் சொல்லவே இல்லையே...”

“பிரவீன் தான் போன் பண்ணி சொன்னான்.. மிருதுளாக்கு அக்சிடன்ட் ஆச்சுனும். யாரோ காப்பாதனாங்கனும் நம்ம வீட்ல இருக்காங்கனும். இப்போ மிரு எங்க?” என்றுக் கேட்டான்.

மீரா, “அவ உன்னோட ரூம்லதான் இருக்கா?” என்று சொன்னாள். அதற்குள் அறைக்கு வெளியே அங்கிருந்த மிருவைப் பார்த்து அணைத்துக் கொண்டவன்.

“என்னாச்சு? எப்படி? எங்க?” என்று கேள்வி கேட்டான்.

“நான் சொல்றேன் அண்ணா!!” என்று கூறினால் மது.

பின்பு அனைத்தையும் கூறினாள். அவளிடம், “தேங்க்ஸ் மா... என்னோட அண்ணன் பொண்ண காப்பாத்தனதுக்கு” என்றான்.

“நான் பண்ணல அண்ணா !!... மித்ரா மேடம் தான் பண்ணாங்க... அவங்களுக்கு தான் அடிபட்டுருக்கு. அவங்க உள்ளதான் மயக்கத்துல இருக்காங்க....” என்றாள்.

அதைக் கேட்டு இனிமையாக அதிர்ந்தான். பின்பு அவளைப் பார்த்ததும் அவளிடம் கடைசியாக விடைபெறும்போது பேசியது நினைவு வந்தது. “சூர், மிஸ். மித்ரா வி வில் மீட் அகைன் வித், வெரி INTERESTING MOMENT....”... இது INTERESTING MOMENT – ஆ தெரியல... பட் MAYBE.... என்று யோசித்தவன்.

அவளை தன்னுடைய அறையில், அதிலும் அவன் படுக்கையில் கண்டதும் தடுமாறித்தான் போனான் அவர்களின் இன்று காலையில் நடந்த நெருக்கத்தை நினைவுகூர்ந்து.

அவளிடம் சென்றபொழுது அதைத் தடுக்க வந்ததுப் போல முன் நின்ற வினோத்தை பார்த்தான்.

“நீ எப்படா வந்த.....?” என்றான் கிருஷ்ணா.

“நல்லா கேட்டடா நீ..... நான் கீழேயே தாண்ட நான் இருந்தேன்... நீ மிருதுளாவ பார்க்கற அவசரத்துல... யாரையும் கண்டுக்கல.... சரி நீதான் பார்க்கலேயேனு நானே வந்தேன்....”

“நீ என்ன பார்க்க வந்தியா.... இல்லை என்னோட சிஸ்டர பார்க்க வந்தியான்னு எனக்கு நல்லா தெரியும்...” என்றான் மதுவைப் பார்த்தவாறு.

“டேய் !! அடங்குடா!! எனக்கும் ஒரு காலம் வரும் அப்போ பார்த்துக்கிறேன் உன்னை !!” என்றவன். மதுவை அழைத்துக்கொண்டு மாடியேறினான்.

அதைப் பார்த்து கிருஷ்ணா முறைக்க, “ப்ளீஸ்டா !! ஒரு பத்து நிமிஷம்தான்...” சரி!! என்பதுப் போல தலையாட்டினான்.

பின்பு கிருஷ்ணா அப்போது மிருதுளாவிடமும் “என்னாச்சு மிரு? எப்படி அக்சிடன்ட் ஆச்சு?” என்று கேட்டான்.

அவளும் எல்லாம் சொல்லவும் அப்போது அங்கு வந்து சேர்ந்தான் பிரவீன். அவனையும் அருகே அழைத்து, “ரெண்டு பேரும் நல்லா கவனிங்க, ரோட்ல இப்படி எல்லாம் குனியக் கூடாது. ரெண்டு பக்கமும் பார்க்காம கிராஸ் பண்ணக் கூடாது. பெரியவங்க கைய புடிச்சிட்டுத்தான் போகணும் புரியுதா?... இனிமேல் பார்த்து நடந்துக்கோங்க....” என்று அறிவுரை கூறியவன் அவர்களை விளையாட போகுமாறு அனுப்பி வைத்தான்.

பின்பு அறையில் நுழைந்தவன் அவளிடம் வந்து, அவள் அருகில் அமர்ந்தான். அவள் கையைப் பற்றி, “தேங்க்ஸ் மித்ரா..... நீ மட்டும் இல்லனா... நான் என்னோட மிருவ மிஸ் பண்ணியிருப்பேன்..... தேங்க் யு சோ மச்...” என்றுக் கூறி கொண்டிருக்கும் போது அவள் கை அசைத்தாள்.

அவள் கண்ணை திறந்து பார்க்க முயற்சிக்கும்போது, அவனைப் பார்த்து முதலில் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் முழித்தாள். அவள் எழ முயற்சி செய்வதை அறிந்து அவளை எழுப்பி உட்கார வைத்து அவள் சாய்வதற்கு தலையணயை வைத்தான்.

அவள் கேட்க நினைப்பதை புரிந்துக் கொண்டவன் போல. “நீ காப்பாற்றின குழந்தை, என்னோட அண்ணா பொண்ணுதான். இப்போ என்னோட வீட்லதான் இருக்க. 2 டேஸ் உன்னை ரெஸ்ட் எடுக்க டாக்டர் சொல்லியிருக்காங்க...” என்றான்.

“குழந்தைக்கு அடி ஏதும் பட்டுச்சா? “ என்றாள்.

“இல்லை, அவ நல்லாத்தான் இருக்கா.... உனக்கு எதாவது வேணுமா? நான் கொண்டு வர சொல்றேன்” என்றான்.

“கொஞ்சம் தண்ணி மட்டும் வேணும்... மது எங்க?... வர சொல்லுங்களேன்..” என்றாள்.

“வினோத் அவக்கிட்ட பேசிட்டு இருக்கான்... ஒரு 5 மினிட்ஸ்ல வந்துடுவா...” என்றவன் கீழே மீராவிற்கு அழைக்க முயலும்முன் அவளே வந்தாள் ஜூஸ் உடன்.

“இப்போ எப்படி இருக்கீங்க மித்ரா.... நான் மிருதுளாவோட அம்மா.. நீங்க பண்ண உதவிய நாங்க என்னைக்கும் மறக்கமாட்டோம்.. தேங்க்ஸ் மித்ரா...” என்றாள்.

“ஐயோ !! இதுல போய் என்ன இருக்குங்க.. கண்ணு முன்னாடி நடக்கற அப்போ பார்த்துட்டு சும்மாவா இருக்க சொல்றிங்க.. நான் உங்க பொண்ண காப்பத்தனதுல எனக்கு ரொம்ப சந்தோசம்.

“அவளுக்கு முதலில் ஜூஸ்சா குடுங்க அண்ணி.....” என்றான்.

அவளிடம் அதனை வாங்கிக் கொண்டவன். “மித்ராவுக்கு எதாவது டேபிலேட் கொடுத்தாங்களா? இருந்த எடுத்துட்டு வந்து கொடுங்க...”

“ஆமா கிருஷ்!!... நான் மறந்துட்டேன்... நான் எடுத்துட்டு வரேன்” என்று சென்றாள்.

அவள் சென்றவுடன் மித்ராவிடம் ஜூஸ் கிளாஸ்சை தரவும் அவள் வாங்க முயன்றாள். ஆனால், தலையில் ஏற்பட்ட வலியால் அவள் தலையை பிடித்துக் கொண்டாள்.

பின்பு அவனே அவளின் கையை பிடித்து அவன் தோளில் சாய்த்து கொண்டவன். அவள் தலையை மென்மையாக வருடினான். பிறகு அவனே அவளுக்கு ஜூஸ்சை குடிக்க வைத்தான்.

அப்பொழுது மீராவுடன் வந்த ப்ரீத்வியும் வினோத்துடன் வந்த மதுவும் ஆச்சரியம் அடைந்தனர்.

ஹரிஷ்கிருஷ்ணாவின் இந்த புதிய ரூபத்தை மீராவால் ஆச்சரியத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. மதுவுமே எப்படி இவ்வாறு மித்ரா மேடம் அவரை தன் பக்கம் வர அனுமதித்தார் என்று புரியாமல் இருந்தனர். இவர்களின் குழப்பத்திற்கு காரணமான இருவரும் அவர்களின் உலகத்தில் சஞ்சரித்து இருந்தனர்.

மீண்டும் சந்திப்போம் சுயம்புமானவளே !!.....





 
Last edited:

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 07

cover.jpg

அனைவரும் அதிர்ந்த தோற்றத்தை கண்ட ப்ரித்வி தான், கிருஷ்ணாவை நிகழ் உலகத்திற்கு அழைத்து வந்தான். “எப்படி இருக்கீங்க மிஸ். மித்ரா?” என்றான்.



அவளும் அப்பொழுதுதான் ஹரியுடனான நெருக்கத்தை அறிந்து அவனிடமிருந்து விலகி அமர்ந்தால் பின் ப்ரித்வியிடம், “ஐயம் ஒகே... நவ்..” என்றாள்.


பிறகு மதுவிடம், “வீட்டுக்கு போலாமா?” என்றாள்.

அனைவரும் ஒரே பதிலாக “வேண்டாம் !!...” என்று கூறினர். அதை பார்த்த அவள் ஆச்சரியமானாள்.


அவர்களின் பதிலில் சிரித்தவள், “ஏன்?... “ என்றாள்.

அதற்கு கிருஷ்ணா, “மித்ரா !! ஐ நோ யு ஆர் சோ இண்டிபென்டன்ட்... ஆனால், நீ எங்க பாமிலிக்கு பண்ண ஹெல்புக்கு நாங்க உன்ன பார்த்துக்கனும்னு ஆசைப்படறோம்.. அதுவும் இல்லமா டாக்டர் 2 டேஸ் பெட் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்காங்க... அட்லீஸ்ட் ஒரு நாள் ஆவது இங்க இரு ப்ளீஸ்...” என்றான்.

மறுபடியும் மறுக்க தோன்றியது அவளுக்கு அவள் மேலும் எதுவும் கூறும்முன் வினோத், “ஏய் மித்ரா !! ஒரு நாள் தானா இரு இங்க... நானும் இன்னைக்கு இங்கதான் ஸ்டே பண்ண போறேன்... சோ இருடா... கொஞ்சம் ரெஸ்ட் எடு... நான் வந்து மீட் பண்றேன் ஒரு 1 ஹௌர்ல...” என்று கூறி அனைவரையும் அழைத்து சென்றான்.

எங்கே அவளிடம் சிறிது நேரம் பேசினாலும் அவள் தங்களுடைய எண்ணத்தை மாற்றிவிடுவாள் என்று எண்ணி அவன் எல்லோரையும் அழைத்துக்கொண்டு ஓடினான்.

மது மட்டும் அவளுடன் இருந்தாள். கிருஷ்ணாவும் அவனுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கெஸ்ட் ரூமிற்கு வினோத்துடன் சென்றான்.

பின் தயாராகி வந்தவன் அவ்வீட்டில் உள்ள வரவேற்பறையில் அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்பொழுதுதான் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தான். அவர் தந்தையும் தாயும் வெளியே தங்களது குடும்பத்துடன் பேசிக் கொண்டிருப்பதை அதைப் பார்த்து மீரா சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள்.

அனைத்தையும் பார்த்து எப்படி என்று யோசித்தவாறு நடந்தவன் அங்கே இருந்த வேலை ஆளிடம் ஒரு கப் காபி எடுத்துட்டு வர சொல்லி டைனிங் டேபிளில் ஹாலைப் பார்த்தவாறு அமர்ந்தான். ஒருபக்கம் சந்தோஷமும் மறுபுறம் அவர்களால் தன் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியால் ஏற்பட்ட காயமும் அவனுக்கு நினைவு வந்தது.



ஆனால், இரு ஆண்டுகளில் வராத மாற்றம் ஏன் இன்று வந்தது யோசனையில் இருந்தவனிடம் காபியை அவன் கையில் கொடுத்துவிட்டு சென்றான் வேலையாள்.

அப்பொழுது தான் கிருஷ்ணாவை பார்த்த மீரா அவன் பார்வை தன் மாமனார் மாமியாரிடம் வந்து போய் கொண்டிருந்ததை அறிந்தவள் அவனிடம் வந்தாள்.

“இந்த சேஞ்சாஸ் எல்லாம் மித்ராவால தான் வந்தது.” என்றவள். அவனிடம் அனைத்தும் கூறினாள்.

அவன் மீராவுடன் ஹாலில் இருந்த சோபாவில் வினோத்திற்கு அருகில் அமரவும் கிருஷ்ணாவின் தந்தை நந்தகோபால் “மித்ராவ பத்தி எனக்கு தெரிஞ்சுக்கணும்னு தோணுது, உனக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிறேன் வினோத். அந்த பொண்ணு கண்ணுல ஏதோ ஒரு வருத்தமோ வேதனையோ தெரியுது. என்னோட பேத்திய காப்பாத்தி கொடுத்திருக்காங்க. அதுக்கு நம்மால முடிஞ்ச உதவி செய்யனும்னு நினைக்கிறேன். என்னன்னு சொல்லு?” என்று கேட்டார்.

அவர் கேட்டதும் என்னதான் அவர்களை தன் குடும்பமாக இருந்தாலும் தன் தோழியின் வாழ்க்கையை கடைபரப்ப விரும்பவில்லை. “அப்பா !! தப்பா எடுத்துக்காதிங்க. அது அவளோட பர்சனல் லைப்... அத என்னோட பிரெண்டா என்கிட்டே ஷேர் பண்ணியிருக்கா.. என்னால அதை சொல்லமுடியாது. சாரி பா” என்றான்.

அதை கேட்டுக்கொண்டே வந்த மதுமிதா வினோத்திடம், “நீங்க சொல்லலானா என்ன... நான் சொல்றேன் மித்ரா மேடம இப்படி பார்க்க முடியல... நாம இரண்டு பேரும் ஹெல்ப் பண்ண முடியாத மாதிரி அவங்க கண்டிஷன்ஸ் வைச்சிட்டாங்க... எனக்கு இந்த பாமிலி மேல கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கு... சோ அதனால கேட்கலாம் வினோ ப்ளீஸ்....”

அவனும் ஒரு நிமிடம் யோசித்தவன் மது கூறுவதும் சரி என்றே தோன்ற, “சரி மது.. நானே சொல்றேன்” என்றான்.

முதலில் இவர்கள் பேசியதை புரியாது பார்த்த அவன் மித்ராவின் நடவடிக்கையில் அவனுக்கு தோன்றிய சந்தேகம் உறுதியானதாக எண்ணினான். எதுவாக இருந்தாலும் அவளை அதிலிருந்து விடுபட உதவ வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டான்.

வினோத் மித்ராவில் வாழ்வில் நடந்ததை சொல்ல தொடங்கினான்.

மித்ரா ஸ்ரீனிவாசன் – வெண்ணிலா அவர்களின் ஒரே மகள். குழந்தையில் இருந்தே பயந்த சுபாவமும் பெற்றோருக்கு அடங்கி அவள் பேச்சை கேட்கும் குணம் உடையவள். படிப்பில் சுட்டிதான். காலேஜில் படிக்கும்போதுதான் வினோத்துடனான நட்பு ஆரம்பித்தது.

அவளின் தந்தை மிகவும் உழைப்பாளி அதனால் அவரின் சொந்த முயற்சியால் ஒரு கம்பனியை திறம்பட நடத்த தொடங்கினார். அவரின் மனம் போலவே அவர்களின் வளர்ச்சியும் உயரம் கொண்டது.

அதை எல்லாம் கெடுக்கவே வரும்போல ஒரு சம்பந்தம் வந்தது மித்ராவுக்கு. அவரும் நன்கு விசாரித்துதான் வைத்திருந்தார். அனைவருக்கும் திருப்தி என்ற வேளையில் நிச்சயம் மட்டும் வைத்துக்கொள்ளலாம். திருமணம் 6 மாதம் கழித்து செய்யலாம் என்று முடிவெடுத்தனர்.

மித்ரவுக்கோ எப்பொழுதும் போல பெற்றோரின் விருப்பமே தன்னுடைய விருப்பம் என்று கருதி ஒப்புக்கொண்டாள்.

நிச்சயதார்த்தம் அன்று நிச்சய பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. செல்லத்துரை – மீனாட்சி அவர்களின் இளைய மகன் மதனுக்கும் ஸ்ரீனிவாசன் – வெண்ணிலா அவர்களின் ஒரே மகள் மித்ராவுக்கும் பெரியவர்களால் நிச்சயக்கப்படுகிறது என்று இரு வீட்டினரும் தட்டு மாற்றிக் கொண்டனர்

மதனுக்கு ஒரு அக்கா அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டது. அவள் ரம்யா. அவன் கணவன் செந்தில். இவர்களுக்கு ஒரு ஆண் வாரிசு ஒரு வயதான நித்திலனோடு அவர்கள் பெயருக்கு வந்துவிட்டு சென்றுவிட்டனர். அவர்கள் வந்ததிலிருந்து போகும்வரை மதன் வீட்டில் ஒருவரும் அமராமல் அவனின் மாமா செந்திலை சுற்றிசுற்றி கவனித்துக் கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அது ஒரு மாதிரியாகவே தோன்றியது. அவன் அக்கா ரம்யாவோ குனிந்த தலை நிமிராமல் குழந்தையாவே கவனித்துக் கொன்டிருந்தாள். அதை பார்த்த வினோத்கூட “ஏண்டி, உன் நாத்தனார் கீழேயே பார்த்துட்டு இருக்கு. உன்கிட்ட பேசனங்களா?” என்றான்.

“இல்லைடா... !!” என்று அவளும் யோசனையானாள்.

பிறகு நிச்சயம் நடந்த பிறகும் மதன் மித்ரவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளுக்கே ஒரு மாதிரியாக இருந்தது. பின் கல்யாணத்துக்கு அப்பறம் பேசலாமுன்னு நினச்சிட்டாங்க போல என்று நினைத்துக் கொண்டாள்.

அதன் பிறகு அவள் MBA இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தாள். அவள் கவனம் அதில் திரும்பியது.

ஒரு மாதம் கழித்து ஒருநாள் செல்லதுரையும் மதனும் மித்ராவின் தந்தையை பார்க்க வந்தனர். வந்த காரணம் என்ன என்றால், மதன் ஒரு கம்பெனி உருவாக்க உள்ளான் என்றும் அதற்கான ப்ரொஜெக்டை ஸ்ரீனிவாசனிடம் விவரித்தான்.

பின் பேங்க் லோன் வாங்க செக்யூரிட்டி சைன் வேண்டினான். அவரும் ப்ராஜெக்ட் திருப்திகரமாக இருக்கவும் மருமகன் என்ற காரணத்தாலும் ஒத்துக் கொண்டார். அவர்கள் எல்லா FORMALITY –யும் சரிபார்த்துக் கொண்டு PAPERS எடுத்துகொண்டு வருவதாக கூறினர்.

அப்பொழுது மித்ராவின் தந்தை பாப்பா செக்யூரிட்டி தர மாதிரி பேப்பர்ஸ் எடுத்துட்டு வாங்க என்று சொல்லி அனுப்பினார். அதுவே அவர் செய்த மிக பெரிய தவறு.

இருபது நாள் கழித்து வந்தனர் அவர்கள் அப்பொழுது மித்ரா மட்டுமே வீட்டில் இருந்தாள். அவர்கள் விவரம் சொல்ல, அவளுக்கு தெரியும் என்றும் அப்பா முன்பே கூறி விட்டதாக கூறினாள்.

பிறகு தன் தந்தையிடம் இவர்கள் வரவை கூறவும் அவரும் தன் தாயும் வர தாமதமாகும் என்பதால் அவளை படித்து பார்த்துவிட்டு சைன் செய்யுமாறு கூறினார்.

அவளும் சரி என்று அவர்களிடம் விவரம் கூறி படித்து பார்த்தாள். எல்லாம் சரியாக இருப்பதாக அவர்களிடம் கூறி கையெழுத்து போட முனையும்போது, செல்லதுரை இருமல் வரவும் அவள் தண்ணிர் கொண்டுவர போனாள்.

அதற்குள் மதன் அந்த PAPERS உடன் புதிதாக ஒரு தாளை வைத்துவிட்டு அமைதியானான். அவள் கையெழுத்து இட்டு தரவும் அவளிடம் சரி என்பதாக கூறி அவளிடம் விடைபெற்று சென்றான் மதன்.

மித்ரா தன் பெற்றோர்காக காத்துக் கொண்டிருந்தாள். ஆனால், விதியோ அவளுக்கு எதிரியாக ஆனது. அவர்கள் வரும்வழியில் ஒரு விபத்தில் மாட்டி உயிரை விட்டனர். மித்ரா உடைந்து போய் அமர்ந்துவிட்டாள்.

எல்லாம் முடிந்து பார்வதி அம்மாள் துணையில் அவள் வீட்டில் இருந்தாள்.வினோத் அப்போ அப்போ வந்து அவளை கவனித்துக்கொண்டான்.

பின் ஒரு மாதம் கழித்து மதன் அவனுடைய பெற்றோர்களுடன் வந்தான். மித்ராவின் பெற்றோரின் இறப்பிற்கு வந்தவர்கள் இப்பொழுதுதான் வந்தனர்.

அவர்களைப் பார்த்து பார்வதி அவர்களை வரவேற்று அவர்களுக்கு எதுவும் கொடுக்க உள்ளே போனவரை தடுத்தனர் மதனின் பெற்றோர். ஏன்? என்று புரியாமல் மித்ராவும் பார்வதியும் பார்த்தனர்.

அப்போது மதன் மித்ரவிடம் ஒரு பேப்பரைக் காட்டினான். அதைபடித்த அவளுக்கு அதிர்ச்சியாகி இருந்தது. பின் தெளிந்தவள் அவனின் சட்டையை பற்றி ஏன் இப்படி பண்ணிங்க அதுவும் எனக்கு தெரியாமல்? என்று கேட்டாள்.

அவன் அவள் கையை விலக்கி விட்டு கூலாக சோபாவில் சாயிந்துக்கொண்டு, “இந்த பேப்பர்ல இருக்கறது வெளியே போகாமா இருக்கணும்னா உன்னோட சொத்து எல்லாத்தையும் எனக்கு எழுதி வைச்சிட்டு நீ இந்த வீட்டை விட்டு எங்கயாவது போயிடு? அப்படி இல்லை அப்படினா காலம் முழுவதும் என்கூட கல்யாணம் ஆகமாலயே என்னோட மனைவின்ற பேரோட இந்த சமுதாயத்துக்கு முன்னாடி நிக்க வேண்டிவரும். நான் உன்கூட வாழ மாட்டேன்.
எனக்கு உன்னோட சொத்துதான் வேணும். நீ இல்லை. நான் வேற ஒரு பொண்ண விரும்பறேன். அதனால, எல்லாத்தையும் என்கிட்ட கொடுத்திட்டனா, இந்த நடக்காத கல்யாணத்தை நடந்துச்சுனு நான் வாங்கி இருக்கற இந்த marriage CERTIFICATE நான் INVALID பண்ணிடறேன். கோர்ட்ல போய் MUTUAL DIVORCE வாங்கிதரேன் யாருக்கும் தெரியாமா, நமக்குள்ளயே முடிஞ்சிடும்.


இல்லனா நீ காலம் முழுசும் என் மனைவின்ற பேர்ல தான் இருக்கனும். நான் பாட்டுக்கு எனக்கு புடிச்ச பொண்ணோட கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடுவேன். ஆனா, உன்ன யாரையும் கல்யாணம் பண்ண விட மாட்டேன். புரிஞ்சதா?” என்றான்.

அவள் யோசனையை புரிந்துக் கொண்டவன் போல, “நீ என்ன நினைக்கிற தெரியுமா? என்னையும் யாரோடையும் கல்யாணம் பண்ண முடியாத மாதிரி பண்ணலாம்னு தானா? அதுதான் உன்னால முடியாது. ஏன்னா? நீ என்ன சொல்லுவ என்னை இவன் கல்யாணம் பண்ணிட்டு இப்படி வேற ஒருத்திய கல்யாணம் பண்றானா?
அப்படி, நீ சொன்னைன, நமக்கு கல்யாணம் ஆனதா நீயே எல்லார்க்கும் தெரியபடுத்தற மாதிரி ஆயிடும். அப்பவும் நஷ்டம் உனக்குதான். உன்கூட நான் எப்பவும் வாழ மாட்டேன். உனக்கு வேற OPTION இல்லை. நான் சொல்றதுக்கு நீ ஒத்துக்கிட்டுதான் ஆகணும். இன்னும் ஒரு மாசம் டைம் தரேன். நீ நல்ல முடிவா சொல்லு.” என்றவன் தன் பெற்றோர்களையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.


மித்ராவோ அவன் தந்த ஏமாற்றத்தால் மிகவும் அதிர்ச்சிக்கி உள்ளானாள். அவள் அறைக்கு சென்றவள் ஒரு நாள் முழுவதும் ஆகியும் வெளியே வரவில்லை. பயந்துப் போன பார்வதி வினோத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அவன் வரவும் நேற்று நடந்தது முழுவதும் அவனிடம் விவரித்தார். பின் அவர்கள் காண்பித்த பேப்பரை காட்டவும் அவனும் அவனுக்கு தெரிந்தவர்களிடம் விசாரிக்கவும் எல்லாம் சரியாக இருந்தது.

இப்பொழுது என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தவன் மித்ராவின் நியாபகம் வர அவளின் அறை கதவை தட்டினான். பதினைந்து நிமிடம் தட்டியவன் பிறகு அவனே கதவை உடைக்கலாம் என்று முற்படும்போது மித்ராவே கதவை திறந்து வந்தாள்.

அவளைப் பார்த்து இருவரும் அதிர்ச்சியாகி இருந்தனர். பின் அவர்களை அழைத்துக்கொண்டு போனவள். தனக்கு உணவு அளிக்குமாறு கூறினால் பின் சாப்பிட்டுவிட்டு அவள் தங்களின் அலுவலகம் செல்வதாகவும் இந்த விஷயத்தை என்னிடம் விட்டுவிடுமாறும் யாரும் இதில் தலையிட வேண்டாம். தானே இதை பார்த்துக் கொள்வதாக கூறி அவர்களிடம் விடைபெற்று சென்றாள்.

அதன் பின் அனைவரும் ஆச்சரியபடும் அளவுக்கு ஒரு மாத காலத்தில் எல்லாம் கரைத்துக் குடித்தவளாக இருந்தது அவளது நடவடிக்கைகள். அவள் தொட்ட இடம் எல்லாம் வெற்றியே.

அதற்காக அவள் மதனை விட்டுவிட்டாள் இல்லை. அவன் சொன்ன ஒரு மாத கெடுவில் அவனே தன்னைதேடி வருமாறு செய்துவிட்டாள் மித்ரா.

ஆம், !!... அவள் அவனின் கம்பனிக்கு அளித்த SECURITY யை திரும்ப பெற்றுக்கொண்டாள். அதனால் பேங்க் வந்து அவர்களின் பணத்தை கட்ட சொல்லி அவர்களின் கழுத்தை இறுக்க ஆரம்பித்தது.

முதலில் புரியாத அவர்கள் இதன் பின் மித்ரா உள்ளாள் என்பதை நம்ப முடியாமல் இருந்தனர். அவளை சந்திக்க வந்தபோது அவளின் அதிரடியும் வளர்ச்சியும் அவர்களுக்கு பயத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. இருந்தாலும் அவர்களுக்கு ஒரு துருப்பு சிட்டு உள்ளதாக எண்ணி மனம் திருப்திஅடைந்தனர்.

ஆனால், மித்ரவோ.. அதனை அவர்கள் பக்கமே கூலாக திருப்பிவிட்டாள். “என்ன எனக்கு கல்யாணம் ஆனதாக சொல்ல போறிங்களா... சொல்லுங்க... எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை. எப்படியும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. நீ இப்போ எல்லார்கிட்டயும் நமக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொன்னின்னா.. நான் உன்னையும், வேற பொண்ணோட கல்யாணம் பண்ணனும் நீ நினைக்கிறதா நான் நடக்க விடமாட்டேன். அதே மாதிரி ஒரு பைசா கூட உனக்கு தர மாட்டேன். உன்னால முடிஞ்சதா பார்த்துக்கோ?” என்று அவள் வெளியே அனுப்பி விட்டாள்.

நடந்த எதுவும் அவர்களுக்கு சாதகமாக இல்லாத சூழ்நிலையில் அவர்கள் திணறிக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் திரும்ப ஏழவேவிடாத மாதிரி ஒவ்வொரு அடியாக நகர்த்திக்கொன்டிருந்தாள்.

முதலில் மதனின் தொழிலை முடக்கினால், பின் அவன் விரும்பும் பெண்ணின் பெற்றோருக்கு தொடர்ச்சியாக மாப்பிளையை அனுப்பிக் கொண்டிருந்தாள்.

இவ்வாறு இவள் செய்ய செய்ய ஏன் தான் நான் இவளுக்கு இப்படி ஒரு பாவம் செய்தேனோ? என்று நொந்துபோகும் அளவுக்கு MENTALLY அவனுக்கு TORTURE கொடுத்துக்கொண்டிருந்தாள்.

பிறகு அவள் நோக்கம் புரிந்து அவன் DIVORCE தருவதாக ஒப்புக்கொண்டே விட்டான் ஒரு வருடத்தில். ஆனால், விதி அவளின் அக்கா கணவன் மூலமாக தொடர்ந்தது.

எல்லாம் அவன் காதுக்கு சென்றது. அவன் ஒரு யோசனை சொன்னான். அவளிடம் பணிந்து போவதாகவே கூறி கடைசி நேரத்தில் முடியாது என்று விலகி விடுங்கள்.

இவ்வாறே தொடர்ந்து நடைபெற்றால் அவளிடம் கணிசமாக பெரிய அளவில் ஏதும் இல்லை என்றாலும் அவளிடம் இழந்ததையாவது பெற்று விடலாம் என்று அதனை கடைபிடித்தனர் கண்மூடித்தனமாக.

ஆனால், இப்பொழுது வரை அனைத்தும் தெரிந்தும் மித்ரா அமைதியாக அவர்களை கூப்பிட்டு கேட்காமல் பிடிவாதத்துடன் இருக்கிறாள். அதற்கு ஏற்ற மாதிரி அவள் அழுத்தம் கொடுக்கும் போது எல்லாம் ஒத்துக்கொண்டு விட்டு கடைசி நேரத்தில் வராமல் இருந்துவிடுவார்கள். இதுவரை இரண்டு முறை அவள் கோர்ட் சென்று திரும்பிவிட்டாள்.

அவர்களின் ஒரே மைனஸ் என்றால், செந்திலின் மகன் நித்திலன். அவனை வைத்து மிரட்டியாவது வர வைத்துவிடலாம் என்று பார்த்தால் அதற்கும் ஒத்துகொள்ளவில்லை மித்ரா.

இன்னும் நான்கு நாட்களில் இறுதி ஹியரிங், இந்த முறை என்ன செய்ய காத்து இருக்கிறார்களோ? என்று தெரியவில்லை. நானும் மதுவும் எவ்வளவு சொல்லியும் மித்ரா நித்திலன் விஷயத்தில் மறுக்கிறாள் என்று அனைத்தும் கூறி முடித்தான் வினோத்.

இதை எல்லாம் கேட்ட அனைவரும் அதிர்ச்சி ஒருபுறமும் மித்ராவை எண்ணி சந்தோஷமாகவும் இருந்தது.
ஹரிஷ்கிருஷ்ணாவுக்கோ அவளை நினைத்து பெருமையாகவும் அவளுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்ற யோசனையில் இருந்தான். மித்ராவோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் இதையெல்லாம் அறியாமல்.....!!!


மீண்டும் சந்திப்போம் சுயம்புமானவளே !!.....



 
Status
Not open for further replies.
Top