All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்ராவின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" - கதை திரி

Status
Not open for further replies.

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு

இது இக்கதையின் தலைப்பு. இது ஒரு ரொமாண்டிக் காதல் கதை.....

சந்தர்ப்பவதத்தால் இணைந்த இருவரும் எவ்வாறு தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்குகிறார்கள் என்பதை இக்கதையின் வாயிலாக அறியலாம். தங்கள் ஆதரவை தருமாறு அனைத்து வாசகர்களையும் அன்போடுக் கேட்டுக் கொள்கிறேன்....

நாயகன் : ஆதித்யா
நாயகி : மதுமிதா
 
Last edited:

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - ௦1
தெத்துபட்டு கிராமம் அங்குள்ள பெரிய வீட்டின் முன் அனைத்து உறவினர்களும் அந்த வீட்டைச் சார்ந்தவர்களும் கவலையே முகமாக அமர்ந்திருக்க, அப்பொழுது அங்கே படுக்கையில் அமர்ந்திருந்த பெரிய ஐயாவிடம் அமர்ந்திருந்தார் மிகப்பெரிய தொழிலதிபதி அமரேந்தரன்.


பெரியவருக்கு நினைவு திரும்பும்போது அங்கிருந்தவரைப் பார்த்து மிகவும் சந்தோஷமடைந்தார். அந்தப் பெரியவர் பெயர் துரைசாமி.


“எப்படி இருக்க அமரா, நல்லா இருக்கியாய.. வீட்ல புள்ளக் குட்டிங்க சௌக்கியமா....” என்று அவருக்கு உடம்பு முடியாமல் இருக்கும் சமயத்திலும் அவரை நலம் விசாரித்தார்.


“நாங்க எல்லாம் நல்லாயிருக்கோம் ஐயா...உங்களுக்கு உடம்புக்கு முடியாம இருக்குன்னு தகவல் சொல்லவும்.. ரொம்ப வருத்தப்பட்டேன்.. ஆனால் என்னைப் பார்க்கனும் சொன்னிங்கன்னு கேள்விப்படவும் வெரசா வந்துட்டேன்யா.....” என்றார் அதுரமாக.


அதைக் கேட்டு சிறு முறுவல் செய்தவர்.. இருமல் வரவும் சிறிது கஷ்டப்பட்டார். பின் அமரேந்தரனிடம், “உங்கப்பாவும் நானும் சிநேகிதங்கன்னு உனக்கு நல்லவே தெரியும்... உங்க அத்தைய கல்யாணம் பண்ணிக்கிடவும் சொந்தக்காரங்க ஆயிட்டோம். காலப் போக்குல வேலை குடும்பமன்னு வரவும்.. கொஞ்சம் இடைவெளி வந்துச்சு.. உனக்கு குழந்தைப் பொறந்தப்பிறகு ஒரு நாள் இங்கன வந்தான்.”


“என்ன அய்யா, சொல்றிங்க. அப்பா இங்க வந்தாரா? ஆனா எனக்கு தெரிஞ்சு அவரு என் பையன் எட்டு வயசு ஆகற வரைக்கும் அவர் அவன விட்டு எங்கயும் நகரவில்லையே !!!”


“உண்மைதான்பா, அதுக்கு அப்பறம் வந்தான். அப்போ உங்க குடும்பத்துல கொஞ்சம் பிரச்சனை வரவும். மனசு உடைஞ்சி வந்தான். அப்போ என்கிட்ட ஒரு பெட்டிய கொடுத்தான்.”


அப்போ அவன் சொன்னான், “நான் எவ்வளவு நாள் உயிரோட இருப்பனு தெரியல. எனக்கு எப்போ வேணும் நாளும் எதுவும் நடக்கலாம். 18 வருஷம் கழிச்சு என்னோட பையன வரச்சொல்லி அவன்கிட்ட இதக் கொடுத்துடு. அப்பறம் அத உன் முன்னாடி திறக்கச் சொல்லி சொல்லு. ஏன்னா? அதோட சாவி அவன்கிட்டதான் இருக்கும் எப்பவும்.”


“ஆமா !! ஐயா அது என்கிட்டதான் இருக்கு” என்று அவர் கையில் உள்ள ப்ரசெலேடில் உள்ள சாவியை காண்பித்தார்.


அப்பறம் “அவன அத திறந்து படிக்க சொல்லு... அதில் நான் எழுதிருக்கிறதா அவனும் சரி, நீயும் சரி ஒதுக்கணுமுன்னு. என் கையில் சத்தியத்த வாங்கிட்டு போயிட்டான்.”


“இப்போ நான் முடியாம கிடக்கிறேன், நான் சாகறத்துக்குல இத உன்கிட்ட குடுக்கணுமன்னு இருந்தேன். அதுதான்பா உன்னைய வர சொன்னேன்” என்றவர்.


அங்கிருந்த தன் பேரனை வரச் சொல்லி அந்த பெட்டியை எடுத்துவர சொன்னார். அவனும் எடுத்துவரவும் அமரேந்தரனிடம் தந்து,


“இந்தாய உங்க அப்பா குடுத்த பெட்டி, இதை திறந்து பார்த்து சொல்லுய்யா. அவன் எனக்கு என்ன சொல்ல ஆசைப்பட்டான்னு தெரிஞ்சுகிடரேன்” என்றார் ஆசையாக.


அவருக்கும் அதே தோன்றியது, அதைத்திறக்க பார்க்க அது முடியாமல் திணறினர். பின் துரைசாமி அய்யாவின் பேரன் விக்ரம் அவரிடம் வந்தான்.


“அங்கிள் !! அது ரொம்ப வருஷமா பூட்டிக்கிடந்ததால திறக்க முடியாம இருக்கும். இந்த எண்ணையை தடவி திறங்க...” என்றுக் கூறி அவரிடம் ஒரு எண்ணை கிண்ணத்தை தந்து சென்றான்.


அவரும் அவ்வாறே முயற்சி செய்ய உடனே திறந்தது. அதை திறந்து பார்த்தவர் கண்களில் ஆச்சரியம் அதில் அவர் உபயோகித்த சில பொருட்களும், ரெண்டு பத்திரங்களும் ஒரு கடிதமும் இருந்தது.


அதைப் படிக்க படிக்க அனைவர் முகத்தில் ஆச்சரியமும் குழப்பமும் வந்து சென்றது. அதைக் கேட்ட பெரியவர் மிகவும் மகிழ்ந்து அவரிடம் “உங்க அப்பா சொன்னதை நான் ஏத்துக்கிடறேன்பா.... .உங்க வீட்ல இருக்கறவங்கள கலந்து ஆலோசிச்சிட்டு உன்னோட முடிவ சொல்லுப்பா...” என்றார்.


“ஐயா, உங்க வீட்ல எல்லாரும் ஒத்துக்குவங்களா?...” என்றார் கேள்வியாக.


“என்னோட பேச்சை இதுவரைக்கும் யாரும் மீறினதில்லை.. நீ வேணும்னா எல்லார்கிட்டயும் கேளு...எல்லாரும் இங்கனதான் இருக்காங்க” என்றார்.


அப்போது அங்கிருந்த அவரின் மகன், “அமரேந்தரன்!! அப்பா சொல்றதுதான் எங்க விருப்பம்... நாங்களும் இதுக்கு ஒத்துக்கிறோம். நீங்க உங்க பாமிலிய கேளுங்க.. முடிஞ்ச எல்லாரையும் இன்னைக்கே வர சொல்லிடுங்க. அப்பா முடியாம இருக்காரு.. நாம எடுக்கற முடிவால அவர் சந்தோசமா இருப்பாருன்னு தோணுது”


“எனக்கு புரியுது பாலு... நான் அவங்கள உடனடியா வர சொல்றேன்.. எனக்கு இதுல பரிப்பூரண விருப்பம். அவங்களையும் கேட்டுகிட்டு நல்ல பதிலா சொல்றேன்” என்றுக் கூறி அனைவரிடமும் விடைபெற்று அங்கிருந்த தங்கள் வீட்டிற்கு வந்தார்.


வந்தவர் அக்கடிதத்தை திரும்ப படித்து, அதில் உள்ள பொருட்களைப் பார்த்து கண்ணீர் வடித்தார்.


“அப்பா!! என்ன மன்னிச்சிடுங்க பா...நான் தப்பு பண்ணிட்டேன். அப்போ நீங்க சொல்றத புரிஞ்சுக்காம எடுத்த முடிவால நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனா இப்போ நீங்க சொல்றத கேட்கும் பக்குவம் எனக்கு வந்துடுச்சு.. அதனால நீங்க விருப்பப்பட்டது எல்லாமே நான் நடத்திக் காட்டுவேன் பா...இது உங்க மேல ப்ராமிஸ்” என்றவர்.


தன்னுடைய குடும்பத்திற்கு அழைத்து, அவர்கள் அனைவரையும் எங்கிருந்தாலும் உடனடியாக இங்கே வருமாறு பணிந்தார்.


எல்லோரும் அடித்து பிடித்து மாலை நான்கு மணிக்கு வந்தனர். பின்னர் அவர் கூறியதில் எல்லாரும் முதலில் மறுக்க, பின் அனைவரையும் அதட்டிஉருட்டி, மிரட்டி சம்மதிக்க வைத்தார்.


ஆறு மணிக்கு அவர்கள் வீட்டிற்கு சென்று தங்கள் இல்லத்தில் அனைவரும் ஒத்துக்கொண்டதாக கூறி நாளையே அதை செயல்படுத்த முடிவெடுத்தனர்.


பெரியவருக்கு உடம்பு முடியாமல் இருக்கவும் உடனடியாக இதைசெய்ய, இருவரது மகன்களும் விரும்பி அதற்கான ஏற்பாட்டை செய்தனர்.


எல்லா ஏற்பட்டும் இரவோடு இரவாக நடைபெற்றது. அப்பொழுது அங்கிருந்த விக்ரமிற்கு இது எல்லாம் சரிப்படுமா என்று யோசித்தான். எல்லாம் தாத்தாவிற்காக என்று தன்னை சமாதனம் செய்துக்கொண்டான்.


மறுநாள் காலை அங்குள்ள ராஜகாளியம்மன் கோவிலில் ஐய்யர் மந்திரம் முழங்க, அமரேந்தரன் – ஜானவியின் முத்த புதல்வனான ஆதித்யாவிற்கும், பாலு – மகேஸ்வரியின் இளைய மகளான மதுமிதாவிற்கும் அங்கு திருமணம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.


பெரியவரான துரைசாமியும் வீல் சாரில் அமர்ந்து அத்திருமணத்தைப் பார்த்து மகிழ்ந்துக் கொண்டிருந்தார். மானசிகமாக தன் நண்பனிடம் உன்னிடம் அளித்த சத்தியத்தை தான் காப்பாற்ற போகிறேன் என்று பேசிக் கொண்டிருந்தார்.


அப்பொழுது ஐயர் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்றுக் கூறி மணமகனின் கையில் திருமாங்கல்யத்தை அளித்தார்.


அவன் தன் தந்தையை பார்த்தவன், பின் திரும்பி அப்போழுதுதான் தன்னருகில் அமர்ந்துள்ள மதுமிதாவைப் பார்த்தான். அவள் பெயரைத் தவிர அவன் வேறொன்றும் அறிந்திருக்கவில்லை.


எல்லாரும் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து அவன் அவள் கழுத்தில் தாலி கட்டினான். பின் அவளுக்கு குங்குமம் வைக்க போகவும் தான் அவனை பார்த்தாள் அவள்.


இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர் ஒரு நிமிடம் மட்டுமே. இப்படி எதிர்பாராத நடைபெற்ற திருமணத்தால் இருவரும் குழம்பி இருந்தனர்.


இதனால் ஏற்பட போகும் விளைவுகளையும் அதனால் ஏற்படப்போகும் பிரச்சனைகளையும் நினைத்து வருந்தப்போகும் வேளையில் யார் யாரை இவர்கள் சமாளிக்க போகிறார்கள்? இவர்கள் இருவரது வாழ்வும் வளப்படுமா? இல்லையா என்பதை வரும் அத்தியாயத்தில் காண்போம்.
 
Last edited:

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 02

logo.jpg
“ நீ யாரோ நான் யாரோ

உன்னை அறியாது நானும்

என்னை அறியாது நீயும்

இணைந்தோம், திருமணம் என்னும்

பந்ததில், மனம் அறியாது,

உணர்வு அறியாது,

காதலும் அறியாமல்,

சந்தர்ப்பத்தால் இணைந்த


உறவு நிலைக்குமா???...... ”

இருவேறு மனநிலைகளில் இருந்த இருவரும் கைத்தலம்பற்றி அக்னிக் குண்டத்தை வலம் வந்தனர். இன்று முதல் இவர்கள் கணவன் மனைவி என்று கூறப்பட்டபின், அவர்களின் இணையைக் கூடக் காணாமல் ஆதித்யா அவனின் தந்தையையும் மதுமிதா அவளின் தாத்தாவையும் பார்த்தனர்.


அவர்கள் இருவரின் முகங்களில் உள்ள மகிழ்ச்சியையும், ஒரு திருப்தியையும் கண்டனர். பின் பெரியவர்களின் ஆசீர்வாதம் வாங்க சொல்ல, முதலில் தாத்தாவிடம் செல்லுமாறு கூறினர் இருவரின் தந்தையரும்.


என்னதான் குழப்பமான மனநிலையில் இருந்தபோதிலும் பெரிவர்களின் மீது மிகுந்த மரியாதையை இருவரும் வைத்திருந்தனர்.


ஆசிர்வாதம் வாங்க குனிந்தவர்களின் தலையில் அச்சதை தூவி தலையின் மேல் கைவைத்து, “நல்லாயிருங்கய்யா, ரெண்டுபேரும்...”என்றார்.


பின் பாலு மகேஸ்வரியின் அருகில் வர அவர்களும் வாழ்த்தினர். அவனின் பெற்றோர்கள் அருகில் வரவும் யாருக்கு வந்த விருந்தோ என்று நின்றிருந்த ஜானவியை அவர் கண்டிப்பு பார்வை பார்க்க அவரின் கணவருக்கு பயந்து அவர் ஆசிர்வதித்தனர்.


அங்கிருந்து அனைவரும் மணமகள் வீட்டிற்கு வந்து விருந்து உண்டு, அவர்களை தங்கள் வீட்டிற்கு முறைக்கு அழைத்துச்சென்று திருப்பி அனுப்பவதாக கூறினார் அமரேந்தரன்.


இவர்களுக்கும் சரி என்று தோன்றியே, மணமக்களுடன் மதுவின் அண்ணன் விக்ரமையும் அவனின் மாமன் மகள் ரஞ்சிதாவையும் அனுப்பினர். ஏனெனில் ரஞ்சிதா மணமானவள் அவளும் இவர்களின் கிராம வழக்கத்தை அறிந்தவள் மதுவிற்கு துணையாக அனுப்பினர்.


இவர்களை வரவேற்பதற்கு முன்பே ஆதித்யாவின் பெற்றோர்கள் முன்பே சென்றுவிட்டனர். அவர்களுடன் ஜானவியின் சித்தி பார்வதியும் சென்றார்.


ஜானவி இயற்கையில் நல்லவளே, ஆனால் தன் சித்தியின் தவறான போதனையால் அவர் திமிராகவும் ஆணவமாகவும் நடந்துக் கொள்வார். பெற்ற பிள்ளைகளைக் கூட தள்ளி வைத்தார் இவரின் பேச்சால். இப்போதும் தூபம் போட்டுக்கொண்டிருந்தார்.


“எப்படி நடக்க வேண்டிய கல்யாணம், இப்படி உன் மாமனார் பண்ணிட்டாரே... நம்ம ஆதித்யாவிற்கு நீ நானுன்னு போட்டிபோட்டுகிட்டு சம்மதம்ல வந்துச்சு... இப்படி ஒரு பட்டிகாட்டு பெண்ணை கல்யாணம் பண்ணி வெச்சிட்டாரே உன் வீட்டுக்காரர்...” என்று எரியும் தீயில் நெய்யை விட்டுக் கொண்டிருந்தார்.


முன்பே தன் பையனின் திருமணம் இப்படி நடந்துவிட்டதே என்றுக் கொதித்துக் கொண்டிருந்தவர் இவரின் பேச்சால் இன்னும் சினமுற்று.


“இப்போ என்னால எதுவும் பண்ண முடியாது.... எப்படி இருந்தாலும் இங்க இருந்து போனதுக்கு அப்பறம் என்னோட வீட்டுக்குத்தான் அந்த பொண்ணு வந்தாகணும்... அவளே இந்தக் கல்யாணம் எனக்கு சரிபடாதுனும் என் பையன வேணாம்னு சொல்ல வெச்சு அனுப்பிடறேன்....” என்றார்.


இவ்வாறு பேசிக்கொண்டிருந்தாலும் கைபாட்டுக்கு அவர்களை வரவேற்பதற்கான ஏற்பாட்டை செய்தது. தன் கணவனுக்கு பயந்து.


வந்தவர்களை வரவேற்று பால் பழம் கொடுத்தார். உள்ளே கோபமாகவும் வெளியே சிரித்தவாறும் இருந்தவரை ஆதித்யா கண்டுக்கொண்டான். அவனுக்குத்தான் தெரியுமே, அவருக்கு உறவுகளை விடவும் ஸ்டேடசும், பணமும் தானே பெரியது.


அவன் அங்கு ஓரமாக நின்றுக்கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் தங்கை ப்ரியாவை அழைத்து மதுமிதாவிடம் அறிமுகம் படுத்தினான்.


என்னதான் இத்திருமணத்தில் விருப்பம் இல்லையேனிலும் தன் தந்தைக்காகவும் அவளின் தங்கைக்காகவும் தான் அவன் ஒத்துக்கொண்டதே.


தன் தாயின் பாசம் கிடைக்க வேண்டிய காலத்தில் இவர்களை தவிர்த்துவிட்டு லேடீஸ் கிளப், பங்ஷன்ஸ் என்று சுத்திக் கொண்டிருந்ததால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாயினர். அதனால் அவனுக்கு உறவுகளில் தன் தங்கை மற்றும் தந்தையே முதல் இடத்தில் இருந்தனர். அவனுக்கான முதன்மையான உறவை அறிமுகபடுத்தினான் அவளிடம். அவனுக்கே தெரியவில்லை ஏன்? என....


அவளிடம் அறிமுகபடுத்திவிட்டு பேசுவதற்குள் அவன் தந்தை அவனை அழைத்தார். “ஆதி, இது விக்ரம்.. மதுவுடைய அண்ணன்..”


அவனும், “ஹாய்!!...”


“ஹலோ...!! நைஸ் மீட்டிங் மிஸ்டர். ஆதித்யா... எனக்கு மச்சான்னு கூப்பிட தோணல.. சோ இப் யு டோன்ட் மைன்ட்.. ஐ வில் கால் யு ஆதி...” என்றுக் கூறி சிரித்தான்.


அவனுக்கோ அப்பா, யாராவது இங்க பிரீன்ட்லியா பேசுவாங்கள என்று இருந்ததை பூர்த்தி செய்ததாக தோன்றியது. அவனும் நன்றாக பேச ஆரம்பித்தான்.


அப்பொழுது அவன் தந்தை, “ இன்னைக்கு அங்க நீ ஸ்டே பண்ணனும், அதுக்கு ஏத்த மாதிரி ட்ரெஸ் எடுத்து வெச்சுக்கோ.. என்றவர். விக்ரமிடம், “எப்போ நல்லா நேரம்னு சொன்னாங்க பா?”


“இன்னும் அரை மணி நேரத்துல கிளம்பணும் அங்கிள்...” என்றான். சரி!! என ஆதியை அனுப்பிவிட்டு தன் மருமகள் மற்றும் மகளிடம் வந்தார்.


அங்கே அவரது மகள் மிகவும் சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தனர். அதில் மிகவும் திருப்தியடைந்தார். எங்கே தனது மனைவிப் போல தனக்கு வரும் மருமகளும் இருந்து விடுவாளோ என்று பயந்திருந்தவருக்கு தனது தந்தையின் தேர்வு சரியே என்று தோன்றியது.


அவர்களின் அருகே வந்தவரைப் பார்த்து எழுந்தாள் மது. அதைப் பார்த்து, “ஏன்மா? இந்த பார்மால்டி எல்லாம் எனக்கு வேண்டாம்..” என்றவர்.


“பிரியா !! அண்ணா இன்னைக்கு அண்ணி வீட்ல ஸ்டே பண்ண போறான். நீ அண்ணனுக்கு பாக்கிங் ல ஹெல்ப் பண்ணுடா....?”


“அப்படியா பா...” என்றவளின் முகம் சோர்ந்து போயிருந்தது.


அதை உணர்ந்து மதுமிதா, “மாமா, நான் மதுவையும் என்னோட கூட்டிட்டு போறேன். அவளுக்கு புது ஊருன்றதால போர் அடிக்கும். அங்க வீட்ல நிறைய பேரு இருப்பாங்க.... அவளுக்கு நல்ல கம்பெனி கிடைக்கும்.. நான் கூட்டிட்டு போலாமா?” என்றாள்.


அவருக்கும் தயக்கமாக இருந்தாலும், தன் மனைவியின் தான்தோன்றித்தனமான நடத்தையும், மகளிடம் பாசமின்றி நடந்துக்கொள்ளும் போக்கும் அவருக்கு மதுவுடன் அனுப்புவதே சரி என்றே தோன்றியது.


மகளின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியைப் பார்த்தவர். “பிரியா!! நீயும் கிளம்ப ரெடியாகு டா... அண்ணாவையும் ஒரெட்டு பார்த்துட்டு, அவனையும் கூட்டிட்டு வாமா...”


மதுவிடம் திரும்பிய அவர், “பிரியாவா நல்லா பார்த்துக்கோமா....” என்றார். அவள் “சரி மாமா....!!” என்றார்.


அவர் சென்றவுடன் அங்குள்ள நாற்காலியில் அமர்ந்தவள். இங்கு வீட்டில் உள்ள அனைவரை உற்றுப் பார்த்ததில் அவளுக்குப் புரிந்தது.


தனது மாமனாரும் நாத்தனாருக்கும் இந்த திருமணத்தில் மிகவும் சந்தோசமே... ஆனால் மாமியார் அமைதியாக இருந்தாலும் அவரின் விருப்பமின்மை அவள் அறிந்திருந்தாள்.


ஆனால் பார்வதியை அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஏதோ உள்ளுக்குள் ஒன்றும் வெளியே ஒன்றும் வைத்து பேசுவதுபோல இருந்தது அவரின் நடவடிக்கையால், இருந்தாலும் அவரிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு அவளது மனம் அறிவுறுத்தியது.


இறுதியில் அவன் கணவனைப் பற்றி யோசித்தவள். அவரும் என்னை மாதிரிதான் திடிரென்று ஏற்பட்ட திருமணத்தால் அவருக்கும் கண்டிப்பா இதுல விருப்பம் இருக்காது. இதுக்குமேல் யோசித்து, அவள்மேலும் குழம்பாமல் இருக்க முடிவுசெய்து ஒதுக்கி வைக்க நினைத்தாள்.


அவர்கள் வருவதற்கு வெயிட் செய்ய முடிவெடுத்தாள். அங்கே அவள் கணவனிடம் அவளைப் பற்றி குறைசொல்லி அவளிடம் ஒதுங்கி இருக்குமாறு அவனின் அன்னையும் பாட்டியும் அவனுக்கு முளை சலவை செய்துக்கொண்டிருந்தனர்.


“இங்கப்பாரு ஆதி, அவ உனக்கு எந்த விதத்துலயும் ஏத்தவயில்லை.. அவ என்ன படிச்சிருக்க போற... மிஞ்சிப் போன ஒரு டிகிரி.... உனக்கும் அவளுக்கும் ஏணி வைத்தால் கூட செட் ஆகாது.. உங்க அப்பாகாக தான், நான் அமைதியா இருக்கேன்... அவ நம்ம வீட்டுக்கு வந்தப் பிறகு அவளே உன்ன விட்டுப்போற மாதிரி பண்ணிடறேன்.... அவகிட்ட விலகியே இரு..” என்றார்.


இவ்வாறு தன் தாய் கூறியதைக் கேட்டவனுக்கோ அருவெறுப்பாக இருந்தது. பெற்ற மகனிடம் பேசும் பேச்ச இது... இவருக்கு பதில் சொன்னால் மேலும் எதாவது பேசி அவரைப் போலவே தன்னையும் மாற்றிவிடுவார் என்பதால் அவன் தலையை மட்டும் ஆட்டினான்.


அவன் கெட்டவன் ஒன்றும் இல்லையே, குழப்பத்தால் ஏற்பட்ட இத்திருமணத்தை, அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் யோசித்து எந்த செயலையும் செய்வது மட்டுமே அவனால் இப்போது செய்ய முடியும்.


அவன் அமைதியைப் பார்த்த அவன் பாட்டி பார்வதி, “உங்க அம்மா எதை சொல்றன்னு உனக்கு புரியுதா!!... இந்த காலத்து புள்ளைங்களுக்கு சொல்லி தர தேவையில்லை...” என்று வெறுப்புடன் கூறினர்.


அவர் கூறியதில் அவனுக்கு கோவம் ஏற்பட்டாலும் எப்போதும் சமயோசிதமாக செயல்படும் அவன் கண்டுகொள்ளமல் விட்டான். ஜானவி இதைக் காணமல் இருந்தாலும், அவன் பாட்டியின் கண்களுக்கு தப்பவில்லை.


அவர் மேலே எதுவும் கூற விழைந்தபோது, அபத்பாந்தவளாக காப்பாற்ற வந்தாள் அவன் தங்கை பிரியா. அவள் வந்ததும் இருவரும் ஒன்றும் பேசாமல் அவனை அர்த்தப்பார்வை பார்த்துச் சென்றனர்.


அவள், “அண்ணா !! நானும் உங்களோடு வரேன். நான் பாக்கிங் பண்ணிட்டேன். உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா...”


“நல்ல வேலை நீ வந்த பிரியா, நம்ம வீட்டு சகுனிங்க இப்போதான் என்ன குழப்ப வந்தது மட்டும் இல்லாமா, என்னை பாக்கிங் பண்ணவும் விடலை.. ஹெல்ப் பண்ணுடா....”


“சரி அண்ணா !! அண்ணி சூப்பர்னா...” என்று மேலும் கூற வந்தவளை தடுத்தது அவனுக்கு வந்த அலைபேசி அழைப்பு.


அவனின் மனைவியை பற்றி எதுவும் கேட்காமல் அவன் நண்பனிடம் பேச போனவன் அறியவில்லை. அவன் கேட்காமல் போய் எவ்வளவு பெரிய தப்பு செய்தான் என. வருங்காலங்களில் காலம் அவனை மேலும் படுத்தப் போவதை தவிர்த்திருக்கலாமோ....!!


(இப்போது கொடுத்த அத்தியாயம் திருமணம் ஏற்பட்டதால் ஆதித்யாவின் வீட்டில் உள்ளவர்களின் மனநிலையை மட்டும் தெரிவித்திருக்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் மதுமிதாவின் குடும்பத்தினரையும் அவர்கள் இத்திருமணத்திற்கு சம்மதித்த நிகழ்வுகளையும் அறியலாம்.)


ரையும் அவர்கள் இத்திருமணத்திற்கு சம்மதித்த நிகழ்வுகளையும் அறியலாம்.)
 
Last edited:

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 03


ஆதித்யா தனக்கு வந்த போனை எடுக்கவும் படபடவென கேள்வியால் அவனை தொலைத்தான் அவனின் பால்ய நண்பன் ரிஷப். “என்ன ஆச்சு டா... திடிர்னு ஏன் இப்படி marriage? அதுவும் என்கிட்டே கூட சொல்லாமா? நான் உனக்கு அவளோ தூரம் ஆயிட்டேனா?”.... அவன் மேலும் தொடரும்முன் அவனை இடைமறித்தான் ஆதித்யா.


“ஜஸ்ட் ஸ்டாப் இட்.... எனக்கே என்ன நடக்குதுன்னு புரியல... நானே குழம்பி போயிருக்கேன்.. நீ என்னவோ வாயக் கூட மூடாம கேள்வியா கேட்டுத் தள்ளுற....” என்று சிடுசிடுத்தான் அவனிடம்.


அவன் கூறியதைப் புரிந்தவன் போல, “சரி !! எப்பவும் போல எதையும் உனக்குள்ளயே வெச்சிக்காம...என்ன நடந்ததுன்னு எல்லாமமே சொல்லு இப்பவே...”


“இப்போ முடியாது ரிஷப்... நான் இப்போ அந்த பொண்ணு வீட்டுக்கு போறேன்... அப்பாவுக்காக... நான் அங்க போய்ட்டு கூப்பிடரேன்....”


அவனும், “சரி!! மறக்காதடா... ஐ வில் வெயிட் பார் யுவர் கால்”. ஆதித்யா போனை வைக்கவும், பிரியா அவனிடம் வந்து “பாக்கிங் பண்ணிட்டேன் அண்ணா” என்றாள்.


“சரி!! வா !! கீழே போகலாம்” என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.


அங்கே அவன் தந்தையிடமும் மற்றவர்களிடமும் விடைப்பெற்று வந்தவர்களை, ரஞ்சிதா தடுத்து நிறுத்தி அவர்களுக்கு பெரிய தர்பூசணியில் சுற்றிப் போட்டு கிளம்ப சொன்னாள். இதை எல்லாம் பார்த்து பார்வதிகோ வெறுப்பாக இருந்தது. ஆனால் அது ஏனோ என்பதை அறிய முடியவில்லை.


இன்னோவா காரில் ஏறியவர்களுக்கு அப்பொழுதுதான் உரைத்தது. இப்பொழுது மேலும் ஒருவர் வந்துள்ளார் என்பதால் இடம் மாறி அமர்ந்தனர். முன்னிருக்கையில் டிரைவரும் ரஞ்சிதாவின் கணவரும் அமர, அதற்கு பின் உள்ள இருக்கையில், விக்ரமும் ரஞ்சிதாவும் பிரியாவும் அமர்ந்திருந்தனர். கடைசியில் உள்ள சீட்டில் தான் ஆதித்யாவும் மதுமிதாவும் அமர்ந்தனர்.


அவர்கள் இல்லத்திற்கு செல்ல 2௦ நிமிடம் ஆகும் என்பதால் அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். ஆனால் ஆதித்யாவிற்கும் மதுவிற்கும் மட்டுமே அவஸ்தையாக இருந்தது.


மூன்று பேர் அமரும் சீட்டாக இருந்தாலும், சில தாம்பூலத் தட்டுகளை வைத்திருந்தனர் அவர்கள் சீட்டில். அதனால் இருவரும் மிக நெருக்கமாக அமருமாறு உட்கார வேண்டியிருந்தது.


மதுவோ, அவனுக்கே பிடிக்காமல் உள்ள திருமணம் இது, இப்பொது அவனை சிறிது தொட்டாலும் அவன் நம்மை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவான். தன்னை பற்றி தவறாக கருதவும் வாய்ப்புள்ளது. ஆகையால், அவனிடம் இருந்து முடிந்தளவு தள்ளி ஜன்னல் அருகே அமர முயற்சி செய்தாள்.


அவனோ, அவள் அருகாமையால் தவித்துக்கொண்டிருந்தான். எங்கே அவளைச் சிறிது நெருங்கினாலும் அவளுக்கு தான் இந்த திருமணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டது போல் ஆகிவிடுமோ என்ற பயம் வேறு அவனுக்கு. அவளுக்கு பொய்யான நம்பிக்கையை தர அவன் விரும்பவில்லை.


எவ்வளவு நேரம்தான் தள்ளி அமர முயற்சி செய்யமுடியும் பாவம் அவர்களுக்கே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் ஸ்பீட் பிரேக்கர் வரவும் தடுமாறி அவள் தோளைப்பற்றினான். அவளோ போய் ஜன்னலில் முட்டிக்கொண்டாள்.


அவள், “ஆஆ !! “ என்று தலையை பிடிக்கவும், அவள் நிலையை அறிந்தவன். “ போறவரைக்கும் இப்படியே உட்கார்ந்திரு, அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணித்தான் ஆகணும்...” என்றான்.


அவளும் தலையை ஆட்டி அவனைப் பார்த்தாள். அவனும் அப்பொழுதுதான் அவளைப் பார்த்தான் முழுமையாக, பார்த்தவன் அதிர்ந்து விட்டான். இவ்வளவோ அழகான பெண்ணா என் மனைவி என்று.


ஐந்தரை அடி உயரம் இருப்பாள் அழகாக பிட்டாக உடலை வைத்திருந்தாள். வெண்ணிற அழகான களையான முகம், மைத்தீட்டிய காந்த விழிகள், கூரிய நாசி, லைட் பிங்க் நிற உதடுகள் மற்றும் அவள் கழுத்தில் தான் கட்டிய புது மஞ்சள் நிற பொன் தாலியில் தேவதையாக தெரிந்தாள்.


அடக்கடவுளே !! இவ்வளவு நேரம் எப்படி அவளைப் பார்க்காமல் விட்டோம் என்று பெருமுச்சு ஒன்றை விட்டான்.


அவளோ அவனை நிமிர்ந்துக்கூட பார்க்காமல் நெளிந்துக் கொன்டிருந்தாள். அவன் அருகாமையால் அவளுள் ஹார்மோன்கள் வேளை செய்யத் தொடங்கியது.


இருப்பினும் அவன் உரிமையாக அவன் தன் மீது கைவைத்து அமர்ந்திருந்தது பிடித்திருந்தது. அவன் அவளை யோசனையாக பார்த்துக்கொண்டே அவள் தோளில் அழுத்தத்தை கூட்டினான் அவனே உணராமல்.


அப்பொழுது அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவஸ்தையாக. அவனும் அவளைப் பார்த்தான். அவளோ அவனுக்கு தன் புருவத்தைத் தூக்கி, அவள் தோளில் உள்ள அவன் கையை காட்டினான். அப்பொழுது தான் அவன் கவனித்தான் அவன் அழுத்தத்தை.


அவன் கையை லேசாக விலக்கி அவள் கண்களைப் பார்த்து “சாரி !!” என்றான். அவளும் கண்களை அமர்த்தி சரி என்பது போல விழியை முடி சைகை செய்தாள்.


அதில் அவன் மனதில் கூறிக்கொண்டான்.. “என்ன கண்ணுடா இவளுக்கு... ஷப்பா!! செம ரியாக்சன் தரா... இன்னும் கொஞ்சம் நேரம் பார்த்தால் நாம அவளோதான் இப்பவே பிளாட் ஆயிடுவோம் போல இவக்கிட்ட... கண்ட்ரோல் யுவர்செல்ப் ஆதி” என்று தனக்குள் நினைத்துக்கொண்டு முகத்தை அவளிடமிருந்து திருப்பி வெளிய பார்க்கலானான்.


மதுவின் வீட்டிற்கு வந்த பிறகு, அவர்களும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அங்கு மதிய உணவிற்கு விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது ஒருபுறம். அவனை வீட்டில் உள்ள அனைவரும் எதாவது சாப்பிட சொல்லிக் கேட்டுக் கொண்டே இருந்தனர் ஒருவரை மாற்றி ஒருவர்.


பிரியாவுக்கோ ஆனந்தமாக இருந்தது இதையெல்லாம் பார்த்து. அவர்கள் இருவரும் சிட்டியில் வளர்ந்தவர்கள் என்பதால் எல்லாம் புதிதாகவும் சந்தோசமாகவும் தோன்றியது. ப்ரியாவிற்கு ஏற்ற மாதிரி அவளுக்கு புது நண்பர்களை அறிமுகப்படுத்தினாள் மது. அவளும் மகிழ்ச்சியாக அவர்களோடு கலந்துக் கொண்டு அவன் அண்ணனை விட்டுவிட்டு சென்றுவிட்டாள்.


அவனோ உட்கார முடியாமல் திணறிக் கொண்டிருந்தான். எப்படி அவனை உபசரிப்பவர்களிடம் இருந்து தப்பிப்பது என்று முழித்தான். அவனை பார்க்கவே அவனின் மனைவிற்கு பாவமாகவும், ஒருபுறம் இந்த நிலைமையிலும் அவன் அவர்களிடம் கோபமாக நடந்துக் கொள்ளவில்லை என்று நினைத்து மகிழ்ச்சியாகவும் தோன்றியது.


பின் அவளே, அவனிடம் குனிந்து, “நீங்க இப்படியே இருந்தா, நாள் முழுசும் இவங்க உங்கள கவனிச்சிட்டேதான் இருப்பாங்க... அதனால, டையர்டா இருக்கு ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி தப்பிச்சிடுங்க...” என்று அவனிடம் கூறிவிட்டு அங்கிருந்தவர்களிடம் சாதாரணமாக உரையாடிக் கொன்டிருந்தாள்.


அவள் தன்னிடம் இவ்வாறு பேசியதும் ஒரு நிமிடம் அதிர்ந்து அவள் சொன்னா யோசனையில் மகிழ்ந்து அங்கு பேசிக் கொண்டிருந்த ரஞ்சிதாவின் கணவர் மதனிடம் அவள் கூறியதைக் கூறினான்.


அவரும் மதுவின் அண்ணன் விக்ரமை அழைத்து, “மாப்பிள்ளைக்கு மதுவோட ரூமை காட்டு, அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார்.


விக்ரமும், “வா !! ஆதி...” என்று அழைத்து அவனை அளித்து சென்றான். “உனக்கு இந்த ஐடியா மது சொன்னாலா?” “ஆமாம்”... என்றான்.


அவன் சிரித்துக்கொண்டே, “நான் நினச்சேன் நீங்க இன்னைக்கு முழுசும் அவங்களோட தான் இருப்பிங்கன்னு.... அப்பறம் அவனே, ஏன் ஆதி உங்களுக்கு ப்ரீ யா இருக்கணும்னு தோணுச்சுனா நீங்களே சொல்லலாம் தான... ஏன் நேர்வசா இருக்கீங்க...?”


“உனக்கு தெரியுமா விக்ரம், எங்க வீட்ல எல்லாமும் இருந்தும் கூட இந்த மாதிரி யாரும் வந்து இப்படி உபசரிக்க மாட்டங்க... ஏன் என் அம்மா கூட இப்படி எனக்கு பார்த்து பார்த்து கேட்டதில்லை. சோ இப்போ இவங்க எல்லாம் எனக்கு attention தரவும் எப்படி அவங்ககிட்ட மறுக்கறதுனு தான் கஷ்டமா இருந்தது. அதனாலதான் என்னால சாப்பிட முடியலனாலும் நான் அமைதியாவே இருந்தேன். “ என்றான்.


அவனைப் புரிந்துக்கொண்டான் விக்ரம், ஏனெனில் நேற்று அவனின் தாத்தா அவர்களைப் பற்றியும் அவர்களின் குடும்ப நிலை பற்றியும் ஏன்? தன் தங்கையை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டது பற்றியும் விளக்கமாக கூறினார். அதனால்தான் மதுவும் சரி விக்ரமும் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டிருந்தனர்.


மதுவின் அறையும் வந்துவிடவும் அவன் அறையை காட்டிவிட்டு உள்ளே நுழைந்த அவனிடம், “சரி !! ஆதி, நீ ரெஸ்ட் எடு கொஞ்ச நேரம். யாரும் disturb பண்ண மாட்டங்க... மதுகிட்ட கேளு எதுவாக இருந்தாலும்னு...” சொல்லிவிட்டு சென்றான் அவனின் நிலை உணர்ந்தவனாய்...


விக்ரம் சென்றவுடன் அவன் அறையை பார்வையிட்டான். ஒரு குயின் சைஸ் பெட்டும், அதைச்சுற்றி வெண்ணிறத்தில் ஆன முடுதிரைகளும் அழகிய சாளரங்களும் வாட்ரோப்களும் ஏசி மற்றும் சோபாக்களும் நாற்காலிகளுமாக என்று பழங்காலமும் புதுமையும் கலந்தவாறு தோன்றும் அறையாக இருந்தது.


அவற்றை ஏதோ ஒரு பார்வைப் பார்த்தானே தவிர, அவர்களின் செல்வநிலையையும், மதுவின் ரசனை அவற்றை எல்லாம் யோசிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணமும் இல்லாமல் தலையில் கை வைத்தவாறு அமர்ந்தான்.


அவன் நிலையை நினைத்து அவனுக்கே சுயபச்சாதாபம் தோன்றியது. அவன் நிலையை கலைக்கவே ரிஷப் அழைத்தான். அப்போதுதான் இவனுக்கு அவன் நியாபகம் வந்தது.


ரிஷப் எடுத்தவுடன், “என்ன ஆச்சு டா? இப்போ ப்ரீதான... உனக்காக நான் வெயிட் பண்ணிட்டே இருந்தேன்... இதுக்குமேல முடியாமதான் நானே கூப்பிட்டேன்..” என்றான்.


“ஹ்ம்ம் !!! இப்போ ப்ரீதான்.. சொல்லுடா... எப்படி போது வொர்க் எல்லாம், manage பண்ண முடியாதுதான? இல்லை நான் வரட்டுமா?” என்றான்.


“டேய்!! ஓத வாங்க போறடா...!! நான் உன்ன நினச்சு வருத்தப்பட்ட... நீ வேலைய நினச்சு வருத்தபடற.... சொல்லு என்னாச்சு?”


“அப்பா வர சொன்னாருடா அவசரமா... நான் உயிரோட இருக்கணும்னு நினைச்சிங்கன எங்க இருந்தாலும் இந்த ஊருக்கு வாங்கனு... நாங்களும் என்னவோ ஏதோனு அடிச்சு புடிச்சு வந்தா ஒரு லெட்டர் கொடுத்து படிக்க சொன்னாரு... அதுலதான் என்னோட தலையெழுத்தே மாறானது”

“அப்படி என்ன இருந்தது அதுல ஆதி?...” ரிஷப்

அதுல, “அன்புடன் அமரனுக்கு பிரியத்துடன் உன் அப்பா எழுதும் கடிதம். நீ இந்தக் கடிதத்தப் படிக்கறனா... என்னோட ஆதிக்கு இருபத்தியாறு வயசு ஆயிடுச்சுன்னு அர்த்தம்.. இங்கப்பாரு அமரா, மனுசனுக்கு எது நல்லதா கிடைச்சாலும், மனைவின்னு ஒருத்தங்க சரியா அமையலான நீ இப்போ இருக்கிற நிலைமைதான் அமையும்.. ஏன்னா? என்னோட அனுபவத்தோட கணிப்பு அப்படி... உன் பொண்டாட்டிய நானும் உன் அம்மாவும் தேர்ந்தெடுத்தது எவ்வளவு பெரிய தப்புனு ரொம்ப நேரம் கழிச்சுதான் உணர்ந்தோம்... ஆனா அதுக்குள்ள எல்லாம் கைமீறி போயிடுச்சு.... நாங்க அவள எவ்வளவோ திருத்த முயற்சி பண்ணோம் ஆனா முடியல.. நம்ம ஆதியோட வாழ்க்கையும் அவ கண்டிப்பா கெடுத்துடுவா... அதனால நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் உன்னோட துரை மாமாவோட பேத்திய நம்ம ஆதிக்கு கல்யாணம் பண்ணி வை.. இதுதான் என்னோட கடைசி ஆசை.... இது நீ படிக்கும்போது துரையும் கேட்டுட்டு இருப்பான்.. அவனுக்கு நம்ம வீட்டோட நிலைமை நல்லா தெரியும்.. அவனும் அவன் குடும்பத்தினரும் ஒத்துகிட்டங்கனா.. உடனடியா கல்யாணத்தை பண்ணி வைச்சிடு... இதை நீயோ இல்ல உன்னோட மனைவியோ மீறினால், உன்னோட எல்லா சொத்தும் என்னோட நிலத்துலதான் ஆரம்பிச்சிருக்க.. .நான் உனக்கு எதையும் உன் பேர்ல எழுதித்தரல.. ஆதிக்கும் மதுவுக்கும் கல்யாணம் நடந்து, அவங்களுக்கு குழந்தைப் பிறந்த பிறகுதான், அதுவும் உன் கைக்கு வராது... ஆதி பேர்க்கு வர மாதிரி நான் எழுதி வச்சிருக்கேன்.. அவன் பார்த்து ப்ரியாக்கு எது செய்தாலும் அவன் விருப்பம்... எந்தக் காரணத்தக் கொண்டும் உன் பொண்டாட்டி பேருக்கு எதையும் எழுதி வைக்க முடியாதபடிதான் நான் எழுதியிருக்கேன். இப்போ இந்தக் கல்யாணம் நடந்த மட்டும்தான் இது எல்லாம் நீங்க அனுபவிக்க முடியும்... ஆதிக்கு 27 வயசுக்குள்ள கல்யாணம் நடக்கலனா... இது எல்லாம் ஆனாதை அஷ்ராமத்துக்கு போற மாதிரி எழுதிட்டேன்.... இப்போ நான் எடுத்தா முடிவு நல்லா யோசிச்சு எடுத்து இருக்கேன்... என்மேல உண்மையான பாசத்த நீயும் உன் பிள்ளைகளும் வெச்சிருந்தா இதுக்கு ஒதுக்கிட்டு நல்லபடியா வாழுங்க... அப்படி இல்லன்ற பட்சத்துல நான் உயில்லா எழுதியிருக்கறப்படித்தான் நடக்கும்.... இப்படிக்கு உங்கள் நலம் விரும்பும் அருணாச்சலம்.” அப்படின்னு இருந்தது.


அதைக்கெட்ட ரிஷப், “வாவ் !! உங்க தாத்தா ரொம்ப புத்திசாலிடா... உங்க அம்மாக்கு சரியா செக் வெச்சிருக்காரு....” என்று மகிழ்ந்தான்.


“எங்க அம்மாக்கு மட்டும் இல்லைடா... எனக்கும் என்ன கல்யாணம் பண்ணிகிட்ட பொண்ணுக்கும்... நான் அவருக்கு பேரனா போனதால ஒதுக்கிட்டேன்... பாவம் அந்த பொண்ணு என்ன பண்ணுச்சுடா?....”


“டேய்!! ரொம்ப நேரமா கேட்கனும்னு இருந்தேன்.. உன் WIFE பேரு என்னடா?....”

“மதுமிதா!! டா.... எனக்கே இத ஏத்துக்கறதுக்கு எவளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?... எனக்கு அவ பேர தவிர ஒன்னுமே தெரியாது... நான் இருக்கற கோவத்துல அவள எதாவது கஷ்ட படுத்திடுவேனோன்னு பயமா இருக்குடா..... நான் எப்படி கோவப்படுவேன்னு உனக்கே தெரியும்... நான் இங்கே எப்படி கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா?”


அவன் மேலும், “இங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்கடா.... அவங்கள கஷ்டப்படுத்த விரும்பல... அப்பறம் இந்தக் கல்யாணத்த ஏத்துக்கவும் முடியாம இருக்கேன்டா.... எனக்கு கண்டிப்பா டைம் வேணும் இந்தக் கல்யாணத்தையும், மதுமிதாவ மனைவியா எத்துக்கறதுக்கும்... நான் எப்படி அவக்கிட்ட புரியவைக்க புரியல.....”


“ஒன்னுமே இல்ல ஆதி!! நீ என்கிட்ட சொன்ன மாதிரி அவக்கிட்டையும் சொல்லு... அவளும் புரிஞ்சிப்பா... உன்ன மாதிரிதான அவளும்...” என்றான்.


“சரி !! ரிஷப்... நீ கம்பெனியா பார்த்துக்கோ... நான் இங்க ஹன்ட்ல் பண்ணறேன்... பாய் டேக் கேர்....” என்று வைத்தான். அப்படியே அங்கிருந்த படுக்கையில் விழுந்தான்..


அவன் பேசிதைக் கேட்டு ரிஷப்பும், அவனைக் காண வந்த மதுவும் விக்ரமும் கூட மகிழ்ந்தனர். ரிஷப் அவனுடைய தாத்தா எந்த தப்பையும் செய்யவில்லை அவனுக்கு நல்ல வாழ்க்கையைத்தான் தந்துள்ளார் என வலிமையாக கருதினான். மதுவும் என்னைப் போலவே அவனும் நினைத்துள்ளான் எனவும் விக்ரம் தன் தங்கை வாழ்வு வளப்படும் என்று நம்பினான்.


இவர்களுக்கு நம்பிக்கைத் தந்தவனோ, தன் தாத்தா தனக்கு தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமலும், மதுவுடன் அவன் வாழ முடியாமலும் தவிக்க போகிறான் என்பதை யாரும் அறியவில்லை. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்....
 
Last edited:

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 04


ஆதித்யா நேற்று முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சியாலும் இன்று நடைபெற்ற திருமணத்தாலும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தால் படுத்தவுடன் உறங்கியும் விட்டான்.


அப்பொழுது அறைக்கு வந்த மதுமிதா அவன் உறங்குவதைப் பார்த்து, அவளும் அமைதியாக அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தான் இத்திருமணத்திற்கு சம்மதித்த நினைவில் முழ்கினாள்.


அவளுக்கு வீட்டிலிருந்து போன் வரவும், “சொல்லுங்கப்பா, எதுக்கு கால் பண்ணிங்க, தாத்தா உடம்புக்கு ஏதும் பிரச்சன்னையில்லைதான?”..


அதுல எதுவும் இல்ல மது, நீ உடனடியாக புறப்பட்டு ஊருக்கு வா, அப்பறமா நான் எல்லா விவரமும் சொல்றேன்... என்றுக் கூறி அழைப்பை துண்டித்தார்.


என்னவாக இருக்கும் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவளது ஓட்டுனர் வந்து, “அம்மா!! ஐயா உங்கள கூட்டிட்டு ஊருக்கு வர சொன்னாங்க இப்பவே.. நீங்க தயாராமா? “ என்றார்.


அவளுக்கோ என்னடா இவ்வளவு சிக்கிரமா வர சொல்றாரே, என்னன்னு தெரியலயே? என்று தனக்குள் குழம்பியவள் “ஒரு 5 நிமிஷம் வெயிட் செய்யுங்க.. நானே வரேன்” என்றுக் கூறி அனுப்பியவள். தன்னறைக்கு சென்று ஒரு புடவையை அணிந்துக்கொண்டு கிளம்பினாள் அவசரமாக.


வரும்வழியில் எல்லாம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே வந்தாள். அவளுக்கு நன்கு தெரியும் தனது தாத்தா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அனைவரும் அங்கு ஊருக்கு சென்றுள்ளனர்.


அவரும் நன்றாக இருக்கும் பட்சத்தில் அப்படி என்ன முக்கியமான விஷயம் என தனக்குள் கேள்வி எழுப்பினாள். சரி, எதுவாக இருந்தாலும் அங்கு போய் தெரிந்து கொள்ளலாம் என முடிவெடுத்தவள். அங்குள்ள வயல்வெளிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சென்றாள்.


வீட்டை அடைந்தவளுக்கோ மிகுந்த ஆச்சரியம், ஏனெனில் வீட்டில் அனைத்து உறவினர்களும் குழுமி இருந்தனர்.


அங்கு இருந்த தன் தமையனிடம், “ஹேய் !! விக்ரம் !! என்னடா நடக்குது இங்க, எல்லா சொந்தக்காரங்களும் வந்து இருக்காங்க” என்றாள்.


“உள்ள வா மது சொல்றேன்” என்று கைப்பிடித்து அழைத்துச் சென்றான். அங்கு அவள் கெட்ட செய்தியில் அவள் தலையில் இடியை இறக்கியது போல உணர்ந்தாள்.


“முடியாது !! முடியாது !! என்னால எந்தக் காரணத்துக்காகவும் இந்தக் கல்யாணத்தை ஏத்துக்க மாட்டேன். என்னோட வாழ்க்கை தாத்தா இது. நான் உங்களோட ப்ரிண்டுக்காக இத ஏத்துக்க முடியாது. ப்ளீஸ் என்ன கட்டாய படுத்தாதிங்க” என்றாள்.


“எனக்கும் இதுல விருப்பம் இல்ல” என்றான் விக்ரம்.


அவர்களின் தாத்தா அவர்களை அருகில் அழைத்து, “எனக்கு புரியுது உங்களோட நிலைமை. ஆனால், நான் சொல்றதும் கண்டிப்பா நீங்க கேட்டுட்டு ஒரு முடிவு எடுங்க.” என்றார்.


இவர்களும் அதற்கு ஒத்துக்கொண்டு அவர் கூறுவதை கேட்க ஆரம்பித்தனர்.


“அண்ணாமலை, அவன் பையன் அமரனுக்கு ஒரு நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணனும்னு நினச்சு, ஒரு ஏழை பொண்ணான ஜானவிய கல்யாணம் பண்ணி வைச்சான். அவள கல்யாணம் பண்ணிக் கொடுத்த மூன்று மாசத்துல, அவளோட அப்பா இறந்துட்டாரு.


பார்வதி அவளோட சித்திதான். அவளோட அம்மா இறந்த கொஞ்சம் வருஷத்துல அவள கல்யாணம் பண்ணிகிட்டாறு அவளோட அப்பா. அவங்க ரெண்டு பேருக்கும் குழந்தை இல்லை. அதுனால பார்வதியும் அவள தன்னோட பொண்ணாவே பார்த்துக்கிட்டாங்க.


ஆனாலும் பார்வதி எதிர்பார்த்த மாதிரி வசதி வாய்ப்பு அங்க கிடைக்கலதான். அப்போ ஜானவிக்கு இவ்வளவு பெரிய வீட்ல கல்யாணம் நடக்கவும் அத பார்வதியால ஜீரணிக்க முடியல.


அவளோட வீட்டுக்கறாரும் இறந்ததால, அவங்கள ஜானவி தன்னோடவே வெச்சிக்க சொல்லி அவ அமரன்கிட்ட கேட்டா, அவனும் அவனோட அப்பா கிட்ட கேட்டான். அதுக்கு அண்ணாமலை வேண்டாம்டா, அப்போ அப்போ போய் பார்த்துகோங்க அப்படின்னு சொல்லிட்டான்.


ஜானவிக்கு வருத்தம் இருந்தாலும் அவ அப்போதைக்கு ஒத்துகிட்ட. ஆனா, பார்வதிக்கு அது பெரிய அவமானம போயிடுச்சு. அவ மனசுல வன்மத்த வெச்சுகிட்டு, ஜானவிகிட்ட நடிச்சு அழுது, அவளும் அமர வற்புறுத்தவும் ஒருக் கட்டத்துல முடியாம அவன் ஒத்துகிட்டான்.


அதுதான் அவன் பண்ண பெரிய தப்பு, அப்போ வீட்டுக்கு வந்த பார்வதி, ஜானவிய பெரிய இடத்து வீட்டு மருமகங்க எப்படி இருக்கணும் அப்படி இப்படின்னு சொல்லி அவள கெடுக்க ஆரம்பிச்சா. அவளுக்கு புரிஞ்சது இவள வெச்சியே இந்த குடும்பத்தைக் கலைச்சிடலாம்னு ஒரு முடிவெடுத்தா. ஆனா இது எல்லாம் அமரோட அப்பாவும் அம்மாவும் கண்டுபுடிக்கும்போது ரொம்ப நாள் ஆயிடுச்சு.


ஜானவி கர்ப்பம் ஆயிட்டா. எல்லாரும் சந்தோஷமா இருந்தாலும். பார்வதி தனக்கு கிடைக்காத பாக்கியம் இவளுக்கு கிடைச்சிடுச்சேன்னு இன்னும் ஜானவியா கெடுக்க ஆரம்பிச்சா. அது வந்து குழந்த பொறந்து 3 மாசம் மட்டுமே குழந்தைக்கு பால் கொடுத்தா, அதுக்கப்பறம் கொடுக்கமாட்டேனும், குழந்தையா யாராவது ஆயாகிட்ட கொடுத்து வளர்க்க ஆரம்பிக்கவும் பிரச்சனை புரிய ஆரம்பிச்சது அமரனுக்கு.


அவன் எல்லாரையும் என்ன? ஏதுனு? கேட்டு கண்டுபுடிச்சான். இதுக்கு எல்லாம் காரணம் பார்வதிதான். அதனால அவங்களுக்கு வீடு வாங்கி தந்து அவங்கள அனுப்பிடலாம்னு ஜானவிகிட்ட சொன்னான்.


ஆனா, எல்லாரும் ஆச்சரியபடர மாதிரி ஜானவி ஒன்னு பண்ணா, அதப் பார்வதி கூட எதிர்பார்கல. என்னோட சித்திய நீங்க வெளிய அனுப்பனிங்கனா நானும் அவங்களோட போறேன். உங்க குழந்தைய நீங்களே பார்த்துகோங்க. எனக்கு ஜீவனமாசம் தந்துடுங்கனு.


இதக்கேட்டு எல்லாரும் வருத்தபட்டாங்க. அமரனோ ரொம்ப மனசு உடஞ்சி போய்ட்டான். சேராதவங்களோட சேர்ந்து அவளும் மாற ஆரம்பிச்சுட்டானு மட்டும் தெரிஞ்சது. அப்பறம் பையன் வாழ்க்கைக் கெட்டு போக கூடாதுன்ற காரணத்தால, அண்ணாமலையும் பார்வதி நமக்கூடவே இருக்கட்டும்னு சொல்லிட்டான்.


அப்போ இருந்து ஆதித்யாவோட பொறுப்பு அண்ணாமலைக்கும் என்னோட தங்கச்சிக்கும் வந்துடுச்சு. ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு என் தங்கச்சி எல்லாரையும் விட்டுட்டு போயிட்டா. ஆதிக்கு எல்லாமே அண்ணாமலை தான் எப்பொழுதும். எல்லாத்துக்கும் அவன்தான் வேணும்.


அவனுக்கு எட்டு வயசாகும்போது, இங்க என்ன பார்க்க வந்தான். அப்போதான் எல்லாமே சொன்னான். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. அப்போ உங்க ரெண்டுபேரோட அம்மா எப்படி குடும்பத்தையும் வேலையையும் சமமா நடக்கறதப் பார்த்துட்டு இந்த மாதிரிதான் என்னோட ஆதிக்கும் பொண்டாட்டி வேணும்னு சொன்னான்.


அவனுக்கு சின்ன வயசுல இருந்து அம்மாவோட பாசத்த குடுக்காதா அவனோட அம்மா மாதிரி அவனோட மனைவி வந்துற கூடாதுனு சொன்னான். அப்பறம் போகும்போது அந்த பெட்டியைக் கொடுத்துட்டு போய்ட்டான். இப்போதான் அதுல என்ன இருந்ததுன்னு தெரியுது.


இங்க பாரு மது, ஆதித்யா அண்ணாமலை வளர்த்த பையன். அவன் அவனோட அம்மா மாதிரி இல்ல. நல்லா படிச்சிருக்கான் அவங்க தொழில எடுத்து நடத்துறான் நம்ம விக்ரம் மாதிரி.


அதனால நீ வேண்டாம்னு சொல்லாத. நீ அவனுக்கு ஒரு பொண்டாட்டியா மட்டும் போக போறதில்ல. ஆதித்யாவுக்கும் அவனோட தங்கச்சிக்கும் எல்லாமுமாக இருக்கப்போற.


உன்னால அந்த வீட்ல சந்தோஷமும் பாசமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில தான் அண்ணாமலை இப்படி ஒரு முடிவ எடுத்து இருக்கான். இது என்னோட விருப்பமும் கூட. என்னோட ஆசைய நிறைவேத்தறது உன் கையில இருக்கு” என்று சொல்லிவிட்டு கண்மூடி தூங்க முயன்றார்.


அங்கு அவரைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ், “அவருக்கு உடம்பு முடியாம இருக்கு, அவரு இவ்வளவு நேரம் பேசறதே பெருசு. இதுல நீங்க அவங்கள மேலும் கேள்விகேட்காம வெளிய போங்க.” என்று அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டார்.


தனது தாத்தாவும் அவரது பெற்றோரின் விருப்பமும் ஆதித்யாவின் தகுதியும் திறமையும் அறிந்துக்கொண்டவள். இந்த இக்கட்டான சூழலில் அவளால் ஒத்துக்கொள்வதைத் தவிர வேறொரு முடிவும் இல்லை என்பதால் ஆதித்யாவை திருமணம் செய்வதில் ஒப்புக்கொண்டாள்.


இவ்வாறாக பழைய நினைவில் இருந்தவள் எப்படி உறங்கினால் என தெரியவில்லை. இருவரையும் மதிய விருந்துக்கு அழைக்க வந்த விக்ரமும் அவர்கள் உறங்குவதைப் பார்த்துவிட்டு, சோபாவில் இக்கட்டாக தூங்கிக் கொண்டிருந்தவளை தூக்கி ஆதித்யா அருகில் படுக்க வைத்துவிட்டு அறையை சாற்றிவிட்டு சென்றான்.


அனைவரிடமும் யாரும் அவர்களை தொந்தரவு செய்யாதிர்கள் என்றுக் கூறியவன் அவர்கள் எழும் போது உணவுக் கொடுங்கள் எனக் கூறி வெளியே சென்றான்.


ஆதித்யா தான் முதலில் தன் உறக்கம் கலைந்தான். யாரையோ அணைத்துக் கொண்டு தூங்குவதுபோல் தோன்றியது அவனுக்கு. கண் விழித்த அவன், தன் அருகில் உறங்கிக் கொண்டிருந்த அவனின் மனைவியைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.


அதைவிட தான் அவளின் இடையை பற்றியவாறு படுத்திருப்பதைப் பார்த்து, நான் எப்படி? இவள் அருகில்? இவ்வாறு அவளை நெருங்கினேன்? என்ற யோசனையில் இருந்தான்.


அவன் அவளை விட்டு விலகுவதற்குமுன், அதற்குள் அவள் அவன்புறம் திரும்பி, அவள் தலையை அவன் மார்பில் பதித்தாள் தலையணை எனக் கருதி, அதில் அவன் விறுவிறுத்து போனான்.


அவன் ஒரு ஆண் அல்லவா, அவனுக்கு அவளிடம் தோன்றும் உணர்ச்சிகள் புதிதாக இருந்தது. அவன் மனது ஒருபுறம் விலக நினைத்தாலும், மறுபுறம் கணவன் என்ற உரிமையை எடுக்கவும் விழைந்தது.


அதுவும் ஒரு நிமிடம் மட்டுமே, பின்பு தனக்கு நடைபெற்றது ஒரு கட்டாயத் திருமணம் மட்டுமே என்ற நினைவு வந்து அவளை விலக்கினான். பின்பு எழுந்து ரெப்ரெஷ் செய்துக்கொண்டு வெளியே வந்தவனை மீண்டும் உபசரிக்க பிடித்துக் கொண்டனர்.


அப்பொழுது அங்குவந்த பிரியா அவளைபற்றி கேட்கவும், அவள் இன்னும் உறங்குகிறாள் என்று தெரிவித்தான்.


“என்ன அண்ணா !! அவங்களும் சாப்பிடல, இப்பவே 2.3௦ ஆச்சு, இரு நான் போய் அண்ணிய எழுப்பிக் கூப்பிட்டு வரேன், ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுங்க...” என்று மது அறைக்கு சென்றாள்.


அவளை எழுப்பியவள் சாப்பிட வருமாறு அழைத்தாள்.


“அண்ணி !! அண்ணா உங்களுக்காக வெயிட் செய்கிறார்கள் வாங்க சீக்கிரம்” என்றாள்.


“ஒரு 5 மினிட்ஸ் இரு பிரியா வந்துடறேன். நீ சாப்பிட்டியா?”


“ஆச்சு அண்ணி, எல்லாரும் சூப்பரா கவனிக்கராங்க.” என்றாள்.


அவள் அவ்வாறுக் கூறியதும் பிரியா அன்புக்காக ஏங்குகிறாள் என்பதை நன்கு அறிந்துக்கொண்டாள். தன் வீட்டில் உள்ளவர்களின் சிறிய கவனிப்பிற்கும் மகிழ்பவள் உண்மையான பாசத்தைக் காட்டினால் அவள் என்ன கூறுவாள் என்று. அப்பொழுது மது ஒரு முடிவு எடுத்தாள் தன் மனதில் அவளுக்கு தான் ஒரு அன்னையாக மாற வேண்டும் என்று.


ஆனால் அவள் மறந்து போனாள் ஒன்றை ப்ரியாவைவிட ஆதித்யாவிற்கு அன்பின் தேவை அதிகம் என்று. ஏனெனில் ப்ரியாவிற்கு அவர்களின் அன்னை குணம் அறிந்து அவளின் தந்தையும் அண்ணனும் அவளுக்கு பாசத்தை அள்ளி தந்தனர். ஆனால் ஆதித்யாவிற்கு அன்பிற்காக ஏங்கும் ஒரு வளர்ந்த குழந்தை என்பதை மறந்து போனாள்.


இவ்வாறு இவளும், எதிர்பாராத திருமணம் என்ற இவனும் ஒருவரை ஒருவர் விலகியிருந்தனர். இவர்களை இணைக்கும் பாலமாக ப்ரியாவே இருப்பாள் என்பது முன்பே முடிவெடுக்கபட்டிருந்தது என்பதை அறியவில்லை போலும்.
 
Last edited:

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 05


மதுவை அழைத்து சென்ற பிரியா அவனுக்கு அருகில் உணவு உண்ண அமர வைத்தாள். அங்கே இருந்தவர்கள் அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தனர்.


முதலில் தயங்கிய ஆதித்யா கூட உணவில் சுவையில் முழ்கி போனான். அப்பொழுது அங்கு ஸ்வீட்டுடன் வந்த பிரியா, அவர்களை ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விடுமாறு கூறினாள்.


முதலில் அதிர்ந்த இருவரும் மறுத்தனர். பின்பு அவள் முகம் வாடுவதைப் பார்த்த மதுமிதா. ஸ்வீட்டை அவன் பக்கம் ஊட்டுவதற்கு கையை கொண்டு போனாள்.


கேள்வியாக பார்த்தவனிடம், “பிரியா முகம் வாடுது, அதுக்குதான்.. அவ முன்னாடி நார்மலா இருக்க ட்ரை பண்ணலாம் இரண்டு பேரும்..”


அப்பொழுது ப்ரியாவைப் பார்த்த அவனும் அவள் பக்கம் திரும்பி இனிப்பை ஊட்டினான். அப்பொழுது அங்கு வந்த விக்ரம் அவர்கள் இருவரையும் தன் மொபைலில் புகைப்படம் எடுத்துக்கொண்டான்.


விக்ரமின் செயலைக் கவனித்த பிரியா, “ப்ளீஸ், என்னோட போன்லயும் ஒரு SNAP எடுத்துத்தரிங்கிளா...” என்றுக் கேட்டாள். குழந்தையாக தன்னிடம் கேட்டவளைப் பார்த்து அவளிடமிருந்த மொபைலிலும் எடுத்துக் கொடுத்தான்.


பின்பு அவளிடம், “என்ன படிக்கற பிரியா?” என்றான்.


“நான் காலேஜ் ப்ரஸ்ட் இயர், BBA படிக்கிறேன் அண்ணா... “ என்றாள்.


அப்பொழுது அங்கு வந்த ரஞ்சிதா, “அண்ணா இல்ல பிரியா மாமான்னு கூப்பிடணும்” என்றாள்.


“ஏய் !! ரஞ்சிதா... நீ இத்தனை வருஷமா இப்படியா என்னை கூப்பிட்டா? போய் வேலைய பாரு.. அவளுக்கு எப்படி என்ன கூப்பிடனுமுன்னு தோணுதோ அப்படியே கூப்பிடட்டும்... நானும் அவளுக்கு ஆதி மாதிரிதான்....”


ப்ரியாவிடம் திரும்பிய விக்ரம் அவளிடம் மொபைலை தந்துவிட்டு, “நீ என்னை அண்ணானே கூப்பிடு பிரியா...” என்றான்.


அவளும் தலையை ஆட்டிவிட்டு அவள் அண்ணன் மற்றும் அண்ணியிடம் வந்தாள். அவர்கள் அப்பொழுது சாப்பிட்டு முடிக்கவும் சரியாக இருந்தது.


அப்பொழுது “அண்ணா!!” என்று அவன் சட்டையை பிடித்து இழுத்தால், அவனுக்கு புரிந்து போனது.


“எக்ஸ்க்யூஸ் மீ...” என்று எழுந்து அவனுடன் சென்றான்.


பிரியா எப்பொழுதும் இப்படித்தான் ரொம்ப சந்தோஷமாக இருந்தாலும் சரி வருத்தமாக இருந்தாலும் சரி அவனின் சட்டையை பிடித்து இழுப்பாள் இந்த விஷயம் இவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.


இவர்கள் இருவரும் போவதை விக்ரமும் மதுவும் வினோதமாக பார்த்தனர்.


ப்ரியாவிடம், “என்னமா? எதாவது ப்ரோப்லமா?” என்றான்.


“அப்படி எதுவும் இல்லை அண்ணா!!” என்றவள் விக்ரமிடம் பேசிய பேச்சுவார்த்தையை கூறினாள்.


“அண்ணா !! நான் அவங்களையும் அண்ணான்னு கூப்பிடடுமா?” என்றாள்.


அவனுக்கு தெரியும் ஒருமுறை தன் வீட்டிற்கு வந்த நண்பன் ஒருவனை அறிமுகபடுத்தும்போது, அவனை ‘அண்ணா’ என்று அழைக்குமாறு அவளிடம் கூறும் போது, ‘முடியாது! நீ மட்டும்தான் என்னோட அண்ணா! மத்த யாரையும் அண்ணா!’ என்றழைக்க மாட்டேன் என்று தன்னிடம் வாக்குவாதம் செய்த தன்னுடைய தங்கை விக்ரமை அண்ணா என்று அழைப்பதாக கூறவும், அதற்கு தன்னிடமே அனுமதி வேண்டி நிற்கும் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.


பின்பு, “ஏன் ?” என்று அவன் கேட்கவும்.


விக்ரம் ரஞ்சிதாவிடம் பேசியதை அறிவித்தவள். “உங்களை மாதிரிதான் அவரும் எனக்கு ப்ரோப்லம்ல இருந்து காப்பதறாரு, அதனாலதான்” என்றாள்.


அவனுக்கும் விக்ரமை நினைத்து மகிழ்வாக இருந்தது. அவளிடம் “சரி பிரியா!! நீ அப்படியே கூப்பிடு, போய் உன்னோட புது பிரெண்ட்ஸ் கூட விளையாடு” என்று அவளை அனுப்பி வைத்தான்.


அவள் சென்றவுடன் அங்குவந்த மதுவின் தந்தை பாலு, “ஆதி” என்றார்.


அவரை பார்த்ததும், “சொல்லுங்க மாமா, எதாவது சொல்லனுமா என்கிட்டே?”


“உங்க வீட்ல இருக்கறவங்க நாளைக்கு எப்போ வருவாங்கன்னு எதாவது சொன்னாங்களா?” என்றார்.


“இல்லை மாமா, நான் வேணும்னா கேட்டு சொல்லட்டுமா?” என்றான்.


“வேணாம் பா!! நானே போய் கேட்டுக்கிறேன். உன்கிட்ட எதாவது சொன்னாங்களா னு கேட்க தான் வந்தேன்” என்றார்.


அவனிடம் விடைபெற்று தன் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு அவர்களை பார்க்க செல்ல தயாராக இருக்குமாறு கூறி சென்றார்.


“எதற்கு ?” என்ற கேட்ட விக்ரமிடம்.


“மதுக்கு கல்யாணம் ஆயிடுச்சு, இன்னைக்கும் நாளைக்கும் மட்டும் தான் இங்க இருப்பாங்க. அதுக்குள்ள அவளுக்கு தேவையான சீர்வரிசை அப்பறம் எப்போ அவங்க அவள அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறாங்க. இப்படி நிறைய சம்பிரதாயம்ல இருக்கு. அதுக்கு தான் நீ நான் அம்மா முணு பேரும் போய் கேட்டுட்டு வர போறோம்” என்றார்.


ஆனால் அவருக்கு தெரியவில்லை. அங்கே ஜானவியும் அவரின் அத்தையும் இவர்களை அசிங்கபடுத்த காத்திருக்கிறார்கள் என்று. எவ்வாறு இவர்கள் எதிர்கொள்ள போகிறார்கள்?...


மாலை இவர்கள் ஆதித்யாவின் வீட்டிற்கு செல்வதால், அதற்கு முன்பே இரவு நடக்க வேண்டிய சடங்குகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர் ரஞ்சிதாவும் மதுவின் அன்னையும்.


அப்பொழுது அங்குவந்த மது, “உங்களுக்கு எல்லாமே தெரியும், எப்படி எந்த சந்தர்ப்பத்துல இந்த கல்யாணம் நடந்துச்சுனு. அப்படி இருக்கும் போது நீங்க இந்த மாதிரி எதுவும் பண்ணாதிங்க. இது எங்களோட பர்சனல், எங்களுக்கு எப்போ லைப் ஸ்டார்ட் பண்ணனும்னு தோணுதோ அப்போ ஆரம்பிச்சிக்கிறோம். இந்த மாதிரி எதுவும் ப்ரேபர் பண்ணி மேலும் கஷ்டபடுத்தாதிங்க.. அப்பறம் என்னோட கோவம் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும்.. அதனால அமைதியா இருங்க..” என்று கூறி விட்டு சென்றாள்.


அவள் கோவத்துடன் போவதை பார்த்த ஆதித்யா மனதில், “என்னாச்சு? நல்லாதான உள்ள போனா இப்படி வரா” என்று நினைத்தான்.


ஆதித்யாவின் வீட்டிற்கு மதுவின் பெற்றோர் மற்றும் விக்ரமும் வந்தனர். அவர்களோடு பிரியாவும், அவளுடைய லேப்டாப்பை அவள் வீட்டிலேயே வைத்து விட்டதால் அதை எடுக்க வந்தாள்.


இவர்கள் முன்னே சென்றனர். பிரியா அங்கிருந்த உறவினர் ஒருவரிடம் பேச வெளியவே நின்றிருந்தாள். ஆதித்யாவின் தந்தை உறவினர் ஒருவரை வழியனுப்ப சென்றிருந்தார்.


இவர்கள் உள்ளே நுழைவதைப் பார்த்த பார்வதி, ஜானவியை அழைத்து வந்தார். சம்பிரதாயமாக வந்தவர்களை வரவேற்றனர். பின்பு அவர்களின் குத்தல் பேச்சு ஆரம்பமானது.


“எல்லாமே பிளான் பண்ணி இப்படி என்னோட பையனோட லைப் கெடுத்துட்டிங்களே, உங்களுக்கு நல்லா இருக்கா. அவனோட அழகுக்கும் அறிவுக்கும் எவ்வளவு நல்ல குடும்பத்து சம்பந்தம் எல்லாம் வந்தது. அதை எல்லாம் விட்டுட்டு உங்க பொண்ணுக்கு என் பையன கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு.. ஆனா, உங்களுக்கு அப்படி இல்லைதான அப்போ ஏன் ஒத்துகிட்டிங்க..?” என்றார் கோவமாக ஜானவி. தன் கணவன் வீட்டில் இல்லாத சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.


அவரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்ததால் அனைவரும் அமைதி காக்க நினைத்தனர். அவர்கள் அமைதியை பார்த்த பார்வதி இன்னமும் விஷத்தை கக்கினார். அதில் கோபமடைந்தான் விக்ரம்.


பார்வதி, “ இவங்களுக்கு என்ன தகுதி இருக்கு நம்மளோட சம்மந்தினு சொல்லிகறதுக்கு. அவங்க பொண்ண படிக்க வைச்சாங்களோ என்னவோ யாருக்கு தெரியும்..”


மதுவின் அன்னையை பார்த்த அவர், “உன்னோட தகுதி என்னன்னு நீ கட்டியிருக்கற புடவை சொல்லுது?” என்று கேவலப்படுத்தினார். அதை அமோதிப்பதாக ஜானவி தலையசைத்தாள்.


இதில் கோபம் அடைந்த அனைவரும் எழுந்திரிக்க, அப்பொழுது ஒரு கை ஜானவியின் கன்னத்தை பதம் பார்த்தது. அங்கே ருத்ரமுர்த்தியாக நின்றிருந்தார் அம்ரேந்தரன்.


“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா வீட்டுக்கு வந்தவங்களை அசிங்கபடுத்துவிங்க” என்று இருவரை பார்த்து உறுமினார். பார்வதி அரண்டு விட்டார். அவர் அடித்தது தனக்காகதான் என்பதை புரிந்துக்கொண்டார்.


இனிமேல் இங்கிருந்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்துக்கொண்டு நகர போனவரை தனது வார்த்தையால் தடுத்தார் அவர்.


“திரும்ப திரும்ப இதே தப்ப பண்ணிங்கனா, நேத்து நான் சொன்னது கண்டிப்பா நடக்கும்.. உங்களுக்கு நான் 3 வாய்ப்பை கொடுத்தேன். அதில் நீங்க ஒன்றை இழந்துட்டிங்க.. இன்னும் 2 தான் இருக்கு அப்பறம் நான் என்ன பண்ணுவேன்னு உங்களுக்கு நியாபகம் இருந்த சரி.”


அவரே மேலும், “ஒழுங்கா, எல்லார்கிட்டயும் மன்னிப்பை கேட்டுட்டு எங்க போறதா இருந்தாலும் போங்க..” என்றார்.


அவர் கூறியதை செய்யவில்லை எனில் தங்களை வீட்டை விட்டு அனுப்பக் கூட யோசிக்கமாட்டார் என்பதால் இருவரும் தலை குனிந்து மன்னிப்பை வேண்டி விட்டு சென்றனர்.


இதை எல்லாம் பார்த்துவிட்ட பிரியா தான் வந்ததை யாரும் அறியாதவாறு வெளியே சென்று தன்னுடைய அண்ணனுக்கு அனைத்து விவரங்களையும் போனில் அழைத்து கூறிவிட்டாள். அவள் இவ்வாறு கூறியதும் மிகவும் கோவத்திருக்குள்ளானான். விக்ரமின் பெற்றோர் வந்ததும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்து அவர்களுக்காக காத்திருந்தான்.


அவர்களிடம் திரும்பிய அமர் இரு கைக் கூப்பி மன்னிப்பை வேண்டினார். அதைப் பார்த்த அனைவரும் அவர் சைகையால் அதிர்ந்து உடனே விக்ரம் அவர் கையை விலக்கினான்.


“உங்க மேல எந்த தப்பும் இல்ல அங்கிள்.. அவங்க பண்ணது தப்புதான். இன்னொரு விஷயம் அங்கிள் இவங்களுக்கு எங்கள பத்தின எந்த டிடைல்சும் தெரியாதா?” என்றான்.


“இல்லைப்பா, இவங்களுக்கு சொன்னா.. அதுக்கு ஏத்த மாதிரி பீஹேவ் பண்ணுவாங்க, நடிப்பாங்க. அதனால் எதுவும் சொல்லலை. உங்களுக்கும் இவங்கள பத்தி தெரிஞ்சுக்க முடியுமன்னுதான்” என்றார்.


பின்பு அவர்கள் வந்த காரணத்தை அறிந்துக்கொண்டபின் அதற்கான பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. அதை திருப்தியாக உணர்ந்த மதுவின் வீட்டினர் அவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு கிளம்பினர்.


அப்போதுதான் அங்கு வந்த மாதிரி காட்டிக்கொண்ட பிரியா, “அப்பா !! நான் என்னோட லேப்டாப் எடுத்துட்டு வர வந்தேன்” என்றுக் கூறி அதை எடுத்துக்கொண்டு அவர்களோடு சென்றாள்.


அவர்கள் வீட்டிற்கு வந்த நேரம் சாப்பிடும் சமயம் என்பதால் அதுவரை வெயிட் செய்த ஆதித்யா உணவு உண்டப்பின் மதுவின் அன்னையிடம் வந்து, “எங்க வீட்டில் உங்கள கஷ்டபடுத்தினதுக்கு என்னை மன்னிச்சிடுங்க” என்று கூறினான்.


அதை ஆச்சரியமாக பார்த்தனர் அங்கு நடந்ததை அறிந்தவர்கள். மதுமிதாவை தவிர அனைவருக்கும் புரிந்தது. புரியாமல் பார்த்த மது தன் அண்ணனிடம் “என்ன?” என்றுக் கேட்க.


“உன்கிட்ட சொல்ல முடியாது போடி.. நீயே கண்டுபுடிச்சுகோ?” என்று சண்டையிட்டு அவளை திசை திருப்பினான்.


“போடா!! நானே கண்டுபுடிச்சிக்கிறேன்” என்று கோவமாக கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள். இது இவர்கள் இருவருக்கும் எப்பவும் நடப்பது என்று அனைவரும் நினைக்க, பிரியா சுவாரசியமாகவும் ஆதித்யா ஆச்சரியமாகவும் போகும் தன் மனைவியை பார்த்தான்.


மதுவின் தந்தை பாலுதான், “எங்களுக்கு உங்க பாமிலி பத்தி எல்லாமே தெரியும் ஆதி, அதனால எந்த பிரச்சனையும் இல்லை. போய் நீ தூங்கு பா.. நாங்க எல்லாம் பார்த்துக்கிறோம்” என்று அனுப்பி வைத்தார்.


அவனும் அரைமனதாகவே மதுவின் அறைக்கு சென்றான் ஆனால் வழியிலேயே அவனுக்கு அவனின் தந்தை அழைத்தார். பின் ஆதித்யாவிடம், “மது, ரொம்ப நல்ல பொண்ணு, அதனால் அந்த பொண்ணுகிட்ட ரொம்ப கோபமா நடந்துக்காத!!... என்று கூறி உடனே வைத்தார்.


இவனுக்கோ தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. தன் அறைக்கு செல்ல இருந்த ரஞ்சிதாவின் கணவர் அவனைப் பார்த்து “ஆல் தி பெஸ்ட்..” என்றார்.


“எதற்கு?...” என்று கேட்டவனை விநோதமாக பார்த்தவர். “என்ன ஆதி!!.. மறந்துட்டிங்களா... இன்னைக்கு உங்களுக்கு ப்ரஸ்ட் நைட்...” என்று கூறி விட்டு அவன் தோளை தட்டிவிட்டு சென்றார்.


அப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது அவன் தந்தை கூறியது. தான் இவ்வளவு தத்தியாக உள்ளோம் என்று அவன் தலையில் அடித்துக்கொண்டு எவ்வாறு மதுவை எதிர்கொள்வது என்ற யோசனையிலேயே அவன் மாடிக்கு சென்றான்.


அங்கு சென்றவன் மாடியில் நின்றுக்கொண்டு ஆசுவாசபடுத்திக்கொண்டு இருந்தான். அங்கே பக்கத்தில் அரவம் கேட்கவும் திரும்பியவன் விக்ரமை பார்த்து சிரித்தவன். பின் ஏதோ நினைத்தவனாக தலைகுனிந்துக் கொண்டான்.


அவன் மனநிலையை புரிந்ததுப்போல அவனின் கைப்பற்றி எனக்கு உங்க மனநிலைப் பற்றி நல்லாவே தெரியும் அதனால் நீங்க வருத்தப்படவேண்டியதில்லை.


நீங்க நினைக்கிற மாதிரிதான் மதுவும் பீல் பண்றா. அதனாலதான் எந்தவிதமான சடங்கும் வேணாமுன்னு சொல்லிட்டு கோவிச்சிட்டு போயிட்டா ஈவனிங்.


கேள்வியாக பார்த்தவனிடம் மது அவர்களிடம் கூறிய அனைத்தும் கூறினான். அவனுக்கு புரிந்து போனது அவள் எதனால் கோவமாக சென்றால் என.


பின் விக்ரமிடம் விடைப்பெற்றுக் கொண்டு சென்றான் மதுவின் அறைக்கு. அங்கு மதுவோ அவனிடம் பேச காத்துக் கொண்டிருந்தவள் அவன் வர தாமதம் ஆகவும் உட்கார்ந்த வாக்கிலேயே உறங்கி விட்டாள்.


அறைக்குள் நுழைந்த ஆதித்யா அவள் தூங்குவதை பார்த்துவிட்டு சிறிது ஏமாற்றமும் அவளுக்கு தன்னிடம் இப்பொழுது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்பதால் மகிழ்ச்சியும் ஒரு சேர நினைத்தான்.


அவளை நன்றாக படுக்க வைத்துவிட்டு, அவனும் அவள் அருகில் உறங்கி போனான்.


ஆதித்யாவின் தந்தை நாளை இருவரையும் தங்களது கோயம்பத்தூர் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தார் மதுவின் வீட்டினரிடம்.



ஆனால், இருவரும் தங்களது வாழ்கையை தொடங்குவதற்கான நேரம் இதுவல்ல என்பதை காலம் கணித்தது.
 
Last edited:

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 06


காலையில் முதலில் எழுந்த மதுமிதா ஏழ முயன்றும் முடியாமல் போக ஏதோ தன் மீது கனமாக உள்ளதாக உணர்ந்தாள். நன்கு கண் விழித்து கண்டவள் ஆச்சரியமும் பயமும் ஒருங்கே சேர்ந்த ஒரு உணர்வை அவளுக்கு தோற்றுவித்தது.


ஆதித்யா தன் இடையினை பற்றிக் கொண்டு நன்கு உறங்கி கொண்டிருந்தான். அவளால் விடுபட முடியாமல் திணறிக் கொன்டிருந்தாள். முயன்றும் தோற்றாள் அவனின் வலிமையின் முன்.


பதினைந்து நிமிடம் பொறுமையாக இருந்தவள் இதற்குமேல் நேரமாகும் என்று நினைத்து அவன் கையை கிள்ளினாள். சிறிது தளர்த்தியவன் அவள் வெளியே வரும்முன் அணைத்திருந்தான் முன்பைவிட அழுத்தமாக.


“அய்யோ !!” என்று இருந்தது இவளுக்கு. பின்பு தைரியம் வந்தவளாக அவன் தோளைப் பற்றி “ஆதி !! ப்ளீஸ் எழுந்திரிங்க? டைம் ஆகுது” என்று எழுப்பினாள்.


யாரோ தன்னை எழுப்புவதாக நினைத்தவன் தன் வீட்டில் இருக்கும் நினைவில் “பிரியா !! ப்ளீஸ் டா... நல்லா தூக்கமா வருது.. ஒரு 3௦ மினிட்ஸ் டா...” என்று கூறி கொண்டு மீண்டும் தூக்கத்தை தொடர்ந்தான். இதில் கலவரம் அடைந்தவள் அவனை வேகமாக உலுக்கவும் ஆதித்யா அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தான்.


எழுந்தவன் கண்ணில் முதலில் பட்டது மதுமிதாவின் நெகிழ்ந்த தோற்றமே. தலை முடி கலைந்து உடை கசங்கி மாராப்பு லேசாக விலகியும் மேலும் அவளது இடையில் அவன் கை இருந்ததை அவன் பார்த்தான்.


அவளது அழகில் மயங்கியவன் சில நொடிகளிலேயே அவன் நிலை மறந்து அவளை தன்னை நோக்கி இழுத்தான். அவன் நினைவில் இருந்தது ஒன்று மட்டுமே அது அவள் மனைவி என்றும் அவளிடம் தனக்கான உரிமை உள்ளது என்று மட்டுமே அவன் நினைத்தான்.


தன் மேல் விழுந்தவளின் கழுத்தில் முத்தம் ஒன்றை வைத்து அவளை அதிர்ச்சிக்கி உள்ளாக்கினான் அவள் கணவன்.


மேலும் தாமதிக்காமல் அவள் கன்னத்தை பற்றி அவள் இதழில் தன்னுடைய முதல் முத்திரையை பதித்தான் அதுவும் மென்மையாகவும் ஆழமாகவும், முதலில் அதிர்ந்த அவளும் அவன் கைகள் அவள் உடலில் செய்யும் மாயாஜாலத்தில் அவனுக்கு வளைந்துக் கொடுத்தாள்.


விலகுவான் என்று அவள் நினைக்கும் சமயத்தில் மீண்டும் மீண்டும் அவளது இதழை நாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது ஏற்பட்ட கதவு தட்டும் சமயத்தில் இருவரும் விலகினர்.


ரஞ்சிதாதான் அழைத்தாள், “மது, சீக்கிரம் ரெடியாயிட்டு வாடா!! நீ இன்னைக்கு உங்க மாமனார் வீட்டுக்கு போகணும்” என்று கூறி சென்றாள்.


அவள் சென்றவுடன் தங்கள் நிலையை இருவரும் பார்த்தனர். அவளுக்கு வெட்கம் ஒருபுறமும் குழப்பமும் ஏற்பட்டு அவள் அவன் முகம் பார்க்காமல் திரும்பி உட்கார்ந்து தன்னை சரி செய்துக் கொண்டிருந்தாள்.


அவனுக்கோ தான் நடந்துக் கொண்டவிதத்தால் அவனுக்கே ஒருபுறம் அதிர்ச்சியாகவும் மறுபுறம் மனைவிதானே அதனால்தான் இவ்வாறு கணவனாக நடந்துக்கொண்டேன் என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை அவனிடம். அவன் விரும்பாத திருமணமும் கூட அப்படி இருக்கையில் அவன் நடந்துக்கொண்டது அவனுக்கே அதிர்ச்சிதான்.


இருந்தும் அவள் விருப்பம் கூட அறியாமல் தான் அவ்வாறு நடந்துக் கொண்டதை அவள் எப்படி எடுத்துக் கொண்டாள் என்பதை அவன் அறிய விரும்பினான்.


அதனால் அவளிடமே கேட்க முடிவெடுத்தான். அவன் எப்பொழுதும் அப்படியே, எதுவாக இருந்தாலும் காலம் தாழ்த்தாமல் எதையும் கேட்கும் பழக்கம் உடையவன் என்பதால் அதனை செய்ய முனைந்தான்.


“மது !!” என்றழைத்தான்.


அவன் அழைத்ததும் “என்ன?” என்பது போல பார்த்ததும் பின் அவனைப் பார்த்து வெட்கத்தில் தலைகுனிந்தாள். அதனை எவ்வாறு உணர்ந்தான் என்று அவனால் விவரிக்க முடியவில்லை.


பின் அவனே தொடர்ந்தான். “ஐயம் சாரி மது !!..... எனக்கு என்ன சொல்றதன்னே தெரியல... நான் எப்படி உன்கிட்ட இப்படி நடந்துகிட்டேனே தெரியல... உன்னோட விருப்பத்த கூட கேட்கல... உனக்கு அருவெறுப்ப கூட இருந்து இருக்கலாம்... என்னை மன்னிச்சிடு... உன்னோட விருப்பம் இல்லாம இனிமேல் உன்ன தொடக்கூட மாட்டேன். இட்ஸ் அ ப்ராமிஸ்... நாம ரெண்டுபேரும் முதல புரிஞ்சிப்போம் ஒருத்தர்க்கு ஒருத்தர்... அதுக்கு அப்பறம் நம்ம லைப் பை ஆரம்பிக்கலாம். அதுவரைக்கும் உன்னை எந்தக் காரணத்துக்காகவும் தொந்தரவு பண்ண மாட்டேன்.. வெளி உலகத்துக்கு நாம ரெண்டுபேரும் நார்மல் ஹஸ்பன்ட் அண்ட் வைப்.. முக்கியமா பிரியா முன்னாடி நடந்துக்கணும்.. நான் சொல்றத நீ புரிஞ்சிப்பான்னு நினைக்கிறேன்.” என்று கூறி விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டு கதவை சாற்றினான். அதன் மேலே சாய்ந்துக் கொண்டு தன்னை ஆசுவாசபடுத்திக்கொண்டான்.


அவளுக்கோ அவன் கூறியதைக் கேட்டு முதலில் அதிர்ச்சியும் பின்பு கோவமும் மகிழ்ச்சியும் அனைத்தும் சேர்ந்து அவள் இதழில் புன்முறுவல் பூத்தது.


அவன் தன்னிடம் உரிமையாக நடந்துக் கொண்ட விதத்தை எண்ணி அவள் முகம் செவ்வானம் ஆனது. பின் ஒரு முடிவெடுத்தவளாக அவளுடைய உடையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள கெஸ்ட் ரூமிற்கு சென்றாள்.


அவன் குளித்து முடித்து வெளியே வரும்போது அவளும் தயாராகி கொள்ள அவள் அறைக்கு வந்திருந்தாள். அவன் அவளைப் பார்த்து மயங்கி இருந்தான்.


அப்பறம் ஏனோ அவளிடம் சொன்ன டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் தேவை இல்லாமல் நியாபகம் வந்து அவனை வாட்டி எடுத்தது.


மனதில் நினைத்துக் கொண்டான், “டேய் ஆதி !! உனக்கு இது எல்லாம் தேவையாட, சும்மா இல்லாமா நல்லவனாட்டம் அவக்கிட்ட சொல்லிட்டு இப்போ திணறறியே...!! என்றது மனசாட்சி.


“அட ச்சி போ !!... உன்கிட்ட கோயம்புத்தூர்ல இருக்கற அத்தனை இண்டஸ்ட்ரியலிஸ்ட்டும் பயப்படறாங்க... ஆனா நீ ... கொஞ்சம் கூட வெயிட் பண்ணாம அலையறியே டா...” என்று தனக்குதானே பேசி கடிவாளம் இட்டுக் கொண்டான்.


பின் இருவரும் தயாராகி ஒன்றாக வந்தனர். அவர்களை அழைத்து செல்ல அவன் வீட்டில் உள்ள அனைவரையும் அதட்டி உருட்டி அழைத்து வந்திருந்தார்.


அவர்கள் அனைவரையும் வரவேற்ற மதுவின் வீட்டினர் விக்ரமைத் தவிர. பின் அனைவரும் ஒன்றாக உணவருந்த அமர்ந்திருந்தனர். ஆதித்யாவும் மதுவும் பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்ந்தனர்.


அதைக் கண்டு பார்வதியும் ஜானவியும் முகம் சுளித்தனர். ஆதித்யாவை அவர்கள் பார்க்க அவனோ நேற்று அவர்கள் செய்த காரியத்தால் கோபம்கொண்டு அவர்களை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை.


இவனுக்குமேல் ஒரு படி மேலே சென்று பிரியா அவர்கள் பேச முயன்றும் முகம் திருப்பிவிட்டாள்.


ஆனால் மதுவின் அம்மா, நேற்று அவரிடம் மிகவும் மோசமாக நடைபெற்றும் அவர் இன்முகமாக அவர்களை கவனித்துக் கொண்டிருந்தாள்.


அதனை கண்டு ஜானவிக்கு கூட நான் அவரிடம் தவறாக நடந்துக் கொண்டேனோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.


அனைவரும் உணவருந்திவிட்டு எழும் வேளையில் துரைசாமி ஐயா வை கவனித்துக் கொண்டிருக்கும் நர்ஸ் வேகமாக டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தார்.


அவரை சீக்கிரம் வர சொல்லி அதனைப் பார்த்த அனைவரும், அவரிடத்தில் என்னவென்று கேட்கவும் தாத்தாக்கு பிரீதிங் ப்ரோப்லேம் திரும்ப வந்துடுச்சு சார். திரும்ப எமோஷனல் ஆயிட்டாருன்னு நினைக்கிறேன்.


டாக்டரை வர சொல்லி இருக்கேன் என்று கூறி விட்டு அவரை கவனிக்க ஓடினாள்.


பின்பு அவரும் வரவும் இருவரும் அவரை கவனித்துக் கொண்டிருந்தனர். அவர் உடல்நிலை சீரடைய மாலை ஆகிவிட்டது.


அவர் நலம் பற்றி அறிந்தவுடன் இவர்களை அழைத்து செல்ல விரும்பினார் அமரேந்தரன். அதற்குக் மதுவின் அம்மா தடுத்து விட்டார்.


“அண்ணா !! தப்பா எடுத்துக்காதிங்க.. நேரம் ஆயிடுச்சு.. நல்ல நேரம் எல்லாம் முடுஞ்சிடுச்சு.. ஜோசியரை வர சொல்லியிருக்கேன்.. அவர் வந்ததும் எப்போ அனுப்பலாமன்னு கேட்டுட்டு அனுப்பறோம்... “ என்றார்.


அவர் மனநிலை புரிந்தவராக அவரும் சரி என்றார். ஆனால் ஜோசியரோ இவர்களை ஏமாற்றிவிட்டார் நல்ல நாளை கணக்கில் கொண்டு.


“பாலு, எனக்கு முன்னவே தெரியும் இன்னைக்கு மட்டும்தான் நல்ல நாளுன்னு அதுக்குதான் இன்னைக்கே உங்கள அனுப்ப சொன்னேன். இப்போ பாருங்க 1௦ நாள் கழிச்சுதான் அனுப்ப முடியும். அதனால நீங்க பாப்பாவ உங்களோடைய வெச்சிகோங்க.. பத்து நாள் கழிச்சு மாப்பிளைய வர சொல்லி அனுப்பி வைச்சிடுங்க.” என்றார்.


பாலுவே, “அப்போ!! பாப்பாவை நம்ம கோயம்பத்தூர் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறோம். அதுக்கு அப்பறம் அவங்கள அங்கயே வர சொல்லி கூட்டிட்டு போக சொல்லிடலாம்.” என்று கூறினார்.


அதுக்கு ஜோசியரும் “சரிங்க! உங்களுக்கு எப்படி வசதி படுதோ அப்படி பண்ணிக்கலாம்” என்று கூறி அனைவரிடமும் விடைபெற்றார். அவர் சென்றவுடன் ஆதித்யாவின் அப்பாவிடம் கேட்கவும் அவரும் அதனை ஒத்துக்கொண்டார்.


பின் ஒருமனதாக ஆதித்யா மட்டும் அவர்களுடன் செல்வதாக முடிவெடுக்கப்பட்டது.


மதுவிடம் வந்தவன் ஒரு கணவனாக, “1௦ டேஸ்ல நான் வந்து கூட்டிட்டு போறேன். பார்த்துக்கோ, இதுல என்னோட காண்டக்ட் நம்பர் இருக்கு” என தன்னுடைய பர்சனல் நம்பர் அடங்கிய கார்டை வழங்கினான்.


இந்த நம்பர் அவரின் தந்தை மற்றும் தங்கைக்கு மட்டுமே தெரியும். இவளும் அவனுக்கு நெருக்கமானவலாக ஆகிவிட்டால் போலும். இதனை அவன் அறியவில்லை. அவளுக்கும் ஏதும் தெரியவில்லை.


அவர்கள் விடைபெற்று போனப்பிறகு அவளும் தன் தாத்தாவின் உடல்நிலை சரியான இரண்டு நாளைக்கு பிறகு அவளும் தன் குடும்பத்தினருடன் கோயம்புத்தூர் சென்று விட்டாள்.


இந்த பத்து நாள்களில் இருவருக்கும் அடிக்கடி நியாபகம் வந்துள்ளது எனினும் அது எதற்கு என்று இருவரும் யோசிக்கவில்லை. நாளை போயி அழைத்து வர வேண்டும் என்று அவன் தந்தையும் பிரியாவும் சொல்லி சென்றனர்.


அவனும் சரி அவளும் சரி நாளை சாதாரணமாக நடந்து கொள்ளலாம் எனவும் இருவருமே கருதினர். ஆனால் அப்பொழுது கூட மதுவின் குடும்பத்தை பற்றி அவனின் தந்தை எதுவும் யாரிடமும் தெரியவில்லை. அவனும் தெரிந்து வைத்திருக்க முயலவில்லை. அதனால் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.



(என்ன நடந்தது? என்ன அதிர்ச்சி இவர்களுக்கு காத்திருக்கிறது? என்பதை வரும் அத்தியாத்தில காண்போம்.)
 
Last edited:

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்- 07


unnv-PixTeller-261386 (1).jpg


யாருக்கும் காத்திருக்காமல் அடுத்த நாள் பொழுது விடிந்தது. அனைவரும் தயாராகி காத்துக்கொண்டிருந்தனர் ஆதித்யாவின் வருகைக்காக அவர்களது வீட்டின் வரவேற்பறையில்.


அப்பொழுது கூட வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் பார்வதி, “எந்த நேரத்துல இந்த கல்யாணம் நடந்ததுன்னு தெரியல? கல்யாணம் ஆயிட்டு கூட என் பேரன் தனியா இருக்கான் பத்து நாளா? அந்த பொண்ணு ராசி எதுவும் சரி இல்லையோ? ஜானவி அவங்க வீட்டு ஆளுங்க கிட்ட கேட்டு அந்த பொண்ணோட ஜாதகம் வாங்கிடு. நாம நம்ம ஜோசியர்கிட்ட காட்டலாம்.” என்றார்.



அதைக் கேட்ட அமரேந்தரன் நக்கலாக, “ஏன் என்னோட கல்யாணம் கூடதான் எல்லாம் நேரம் காலம் பாத்து பண்ணாங்க. நான் மட்டும் தினமும் சந்தோஷமாவ இருக்கேன். நீங்களும்தான பார்க்கறிங்க. இதுக்குமேல நீங்க ரெண்டுபேரும் எதாவது வாய திறந்திங்க... நான் மனுசனாவே இருக்கமாட்டேன்.. அங்க போய் கூட எதாவது வம்பு பண்றது தெரிஞ்சது. அடுத்த நிமிஷம் வீட்ட விட்டு வெளியே அனுப்பிடுவேன் ஜாக்கிரதை.. ஜானவி உன் சித்திகிட்ட எடுத்து சொல்லு...” என்று கூறினார்.



அவர் கூறியதை கேட்டு இருவருமே பயந்தனர். அப்போது அங்கு ஆதித்யா வந்து கொண்டிருந்ததை பார்த்த பார்வதி, “ஏதோ பெரிய வீட்டு சம்மந்தம் கெடச்ச மாதிரி பண்ணறிங்க... அந்த பொண்ண பார்த்த பட்டிக்காடு மாதிரிதான் இருக்கு.. இதுல எங்கபோய் முடியுமோ?” என்று ஆதித்யாவின் மீது பரிதாபபார்வை வீசினார்.



அதைப் பார்த்து சிரித்த அமரேந்தரன், “அதை எல்லாம் அங்கபோய் பார்த்துட்டு பேசுங்க... !!” என்று உள்குத்தாக கூறினார்.



அதை உணர்ந்ததுபோல் ஆதித்யாவும் ப்ரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் என்ன என்று புரியாமல். அவர் ஏதோ மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு பேசுவதாக உணர்ந்தனர்.



எல்லோரும் கிளம்பினர் ஒருவழியாக. ஆதித்யாவோ, தான் என்ன நினைக்கிறோம் என்று புரியாமல் இருந்தான். அவனின் குழப்பம் என்னவென்றால் பத்து நாளாகியும் இன்றுவரை தன் மனைவி தன்னை அழைக்காமல் இருக்கிறாள்.




அதுவும் தான் தன்னுடைய பர்சனல் நம்பர் அளித்தும்கூட அவள் அழைக்கவில்லையே என்ற வருத்தம்.
அவள் ஏதோ கோவித்துக்கொண்டாளோ அன்று அவளிடம் தான் நடந்துக்கொண்டவிதத்தால், இல்லை அவளுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லையோ என்று யோசித்தான்.



அவளிடம் அவளுடைய மொபைல் நம்பரை தான் வாங்காமல் வந்துவிட்டோமே என்று தன்னையே கடிந்துக்கொண்டான்.



இவ்வாறு அவன் யோசித்துக் கொண்டிருக்கையில் அவர்களது வண்டி ஒரு பெரிய மாளிகையின் முன்பு நின்றது. அவர்கள் யோசிக்கும்முன் அம்ரேந்தரன் அங்கிருக்கும் செக்யூரிட்டியிடம் தன் பேரை சொல்லவும் அவன் உடனடியாக கதவை திறந்தான்.



“சாரி சார்... உங்களுக்காக தான் இவ்வளோ நேரம் முதலாளி ஐயா வெயிட் பண்ணாரு... இப்போதான் உள்ளே போனாங்க... நீங்க வந்தா உடனடியா அனுப்ப சொல்லி ஆர்டர்....” என்று அவர்களின் காரை உள்ளே அனுமதித்தான்.



அவர்கள் அந்த வீட்டின் முன் இறங்கியதும் அங்குள்ள தோட்டத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தார்கள் அனைவரும்.



அனைத்து வகையான பூச்செடிகளும் அழகு சேர்க்கும் மரங்களும் சரியாக பராமரிக்கப்பட்ட தோட்டமும் புல்தரைகளுமாக அழகாக காட்சி அளித்தது. அதில் சிறந்த ஒன்றாக நடுவில் அமைபட்டிருந்த நீருற்று பார்ப்பவர் கண்ணை பறித்தது.



அதைவிடுத்து அங்கிருந்த போர்டிகோவில் ஐந்து உயர்ரக கார்களும் இரண்டு ஸ்போர்ட்ஸ் பைக்களும் இருந்தது.



இதைப் பார்த்த பார்வதி ஜானவியிடம், “இது யார் வீடு ஜானவி... உன்னோட மருமக வீட்டுக்குதான கூப்பிட்டு போறதா உன் வீட்டுகாரர் சொன்னாரு... என்னன்னு கேளு...” என்றார்.



அதைக் கேட்ட ஆதித்யாவின் தந்தை, “உள்ள வாங்க எல்லாம் தெரியும் !!...” என்று உள்ளே நுழைந்தார் அனைவருடன் சேர்ந்து. உள்ளே நுழைந்த அவர்கள், அங்கு மாட்டபட்டிருந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியத்தில் வாயை பிளந்தனர்.


MADHU-PixTeller-261389.jpg


ஆம்!! இது மதுவின் வீடே.... அங்கு மாட்டபட்டிருந்த புகைப்படங்கள் அவர்களின் குடும்ப படங்களும்... மது மற்றும் விக்ரமின் ஆளுயர மாடர்ன் அவதாரத்தில் மேல்தட்டு மக்கள் உபயோகப்படுத்தும் ஆடைகளில் அவர்கள் காட்சி அளித்தனர்.



அலுவல் தொடர்பான படங்களும் இருந்தன. அதைப் பார்த்த பார்வதியோ நெஞ்சில் கைவைத்து அமர்ந்தே விட்டார்.



அவர்தான் மது வீட்டாரை பற்றிய தப்பான கருத்தை எல்லார் மனதிலும் பதித்தவர். அதனால், இப்போ அவர் பார்த்த உண்மையை அவரால் இவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்முடியுமா என்பதுக் கூட சந்தேகமே.



ஜானவிக்கோ, அன்று மதுவின் அன்னை மகேஸ்வரியிடம் தான் நடந்துக் கொண்டது நியாபகம் வந்து தலைகுனிந்தே விட்டார்.



அப்பொழுது பிரியா, “அண்ணா !! அண்ணி இந்த காஸ்ட்யும்ல சூப்பரா இருக்காங்கதான?” என்றாள்.



அவனோ புரியாமல் ஒரு பார்வை பார்த்தாள். பின் அவளிடமே, “ஏன் பிரியா !! உனக்கு ஷாக் ஆகலையா... இதையெல்லாம் பார்த்து...” என்றான்.



“அண்ணா !! எனக்கு கூட பாட்டி அப்படியெல்லாம் பேசனதால இதுல பார்த்து கொஞ்சம் ஷாக் ஆனேன். ஆனா, அண்ணி என்கிட்ட அவங்க எங்க படிச்சாங்கன்னு சொன்னாங்க... சோ இப்போதான் புரியுது அவங்க ஸ்டேட்ஸ். அண்ணி IIT கான்பூர் – ல BE பண்ணியிருக்காங்க... IIM – ல MBA பண்ணியிருக்காங்கன்னு மட்டும் அன்னைக்கு சொன்னாங்க...” என்றாள்.



அதைக் கேட்ட ஆதித்யா புன்முறுவல் பூத்தான்.



அதற்குள் அவர்களை வரவேற்க பாலு – மகேஸ்வரி தம்பதியினர் வந்துவிட்டனர். அவர்களை அமர வைத்து அவர்களுக்கு காபி மற்றும் பலகாரத்தை வேலையாள் கொண்டுவந்துதந்ததை மகேஸ்வரி தன் கையால் பரிமாறினார்.



“எல்லாம் நல்லா இருக்குமா !!... “ என்றார் அதித்யாவின் தந்தை.



“அண்ணா !! நான் கிட்சன் பக்கம் போறதே இல்லை அண்ணா... நம்ம ஊருக்கு போனாதான் நான் செய்வேன்... இங்க செய்யறதுஇல்லை.. எனக்கு இங்க இருக்கற டெக்ஸ்டைல் பிசினஸ் பார்த்துக்கவே சரியா இருக்கு” என்றார் புன்னகை முகமாக.



“ஆண்டி !! நீங்க வொர்க் பண்றிங்களா? “ என்றாள் ஆச்சரியமாக.



அதற்கு பாலு பதில் அளித்தார், “அம்மா பிரியா !!.. உங்க அத்தை அப்பவே டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படிச்சிருக்கா.... அவங்க அப்பா உங்க அத்தைக்காக ஒரு கம்பெனியே ஓபன் பண்ணி தந்திருக்காரு... அதை இப்பவரைக்கும் இவதான் ரன் பண்ணிட்டு இருக்கா....”.



மதுவின் அன்னை “எனக்கு கூட ரிடையர் ஆகணும்னு ஆசைதான்.. என்ன பண்ண உன் அண்ணி இது பக்கமே வர மாட்டன்றடா... அவ அவளோட கம்பெனியே போதும்னு அதையே ராத்திரி பகலா பார்க்கற... அவளுக்கு இப்பவரைக்குமே என்ன ட்ரெஸ் போடறதுன்னு தெரியாது... நான் எடுத்து இத போடுன்னு சொன்னதான் போடுவா... அவ்வளவு வீக் இந்த டெக்ஸ்டைல் DEPARTMENT-ல...” என்று சொல்லி சிரித்தார்.



“அப்போ!! யாருமா இது பார்த்துப்பாங்க FUTURE-ல?... விக்ரமா? ...” என்றார் அமர்.



“அவனா!!... அவன் அவங்க அப்பா பிசினஸ் பார்த்துக்கிறான் அண்ணா!!... அதனால இவர் ப்ரீ ஆயிட்டாரு... நான்தான் என்ன பண்றதுன்னு தெரியல... !! அமைதியா விக்ரமக்கு வர பொண்டாட்டிய பார்த்துக்க சொல்லலாம்னு இருக்கேன் அண்ணா !!... என்ன நடக்குதோன்னு தெரியல...” என்றார்.



அப்போது தன்னுடைய உடற்பயிற்சி அறையில் இருந்து வெளியே வந்த விக்ரம், “நான் அதுக்குன்னு எல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் மா....!!” என்றான்.



பின் அனைவரையும் வரவேற்ற விக்ரம் அமைதியாக இருந்த ஆதியிடம், “ஹாய் !! அதி !!.... என்ன உன் வொய்ப்ப தேடறியா?” என்றான்.



ஆதி விக்ரமுக்கு பதில் கூறும்முன் பிரியா, “ஆமா அண்ணா!! அண்ணி எங்க... பார்த்து பத்து நாள் ஆச்சு...!!” என்றாள் சோகமாக.



“மது இந்நேரத்திற்கு வீடியோ கான்பரன்ஸ் முடிச்சு வந்து இருக்கணும்தானப்பா... ஏன் இவளோ லேட் ஆயிடுச்சுன்னு தெரியலயே?...” என்றான்.



அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மதுவின் அஸிஸ்டண்ட் நிவி வந்தாள். அவர்களிடம், “சார், கான்பரன்ஸ் முடிய இன்னும் 15 மினிட்ஸ் லேட் ஆகுமுன்னு நினைக்கிறேன்... சோ மேடம் உங்க கிட்ட இன்பார்ம் பண்ண சொல்லி அனுப்பனாங்க.....” என்றாள்.



“ஹ்ம்ம் ஒகே... யு கேன் கோ...” என்று அனுப்பி வைத்தவன்.



“சாரி அங்கிள்....!! தப்பா எடுத்துக்காதிங்க.... இது ரொம்ப URGENT மீட்டிங்... அதனால தவிர்க்க முடியல....” என்றான்.



“விக்ரம் !!.... மதுவோட வொர்க், உங்க பாமிலி பத்தி எனக்கு நல்லவே தெரியும்... ஏன் நாங்களே அப்படித்தான் எப்பவாது பாமிலி கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாமுன்னு நினச்சா... இந்த மாதிரி மீட்டிங்ல மாட்டிப்போம்... சோ டோன்ட் வொரி இதுக்கு எல்லாம் வருத்தபடாதிங்க நீங்க...” என்று அனைவரையும் பார்த்து கூறினார்.



அவர்களும் அதை புரிந்தது போல சரி என்றனர். பிறகு விக்ரம் ப்ரியாவிடம், “நீ !! வீட்ட போய் சுத்தி பாருடா...” என்று கூறினான்.



பின் ஆதித்யாவிடம், “வாங்க ஆதி!! நாம அப்படியே ஒரு வாக் போலாம்” என்று கூறினான். அவனும் உடனடியாக எழுந்து விக்ரமுடன் இணைந்துக் கொண்டான்.



பின் விக்ரம் தன் அறை மற்றும் வீட்டை சுத்திக் காண்பித்தான். அப்போது ஒரு அறையில் வாசலில் மதுவின் அசிஸ்டண்ட் நின்றிருந்தாள். அதைக் கடந்து செல்லும்போது தன் மனைவியை பார்த்தவன் அவள் அழகில் மெய்மறந்தான்.



அவள் அறையில் அலுவல் ரீதியாக பேசிகொண்டிருந்தாள். அவள் உடை நடை பாவனைகள் அனைத்தும் மாறியிருந்தது. லாங் டாப் ஒன்றும் அதன் கீழே PARALLEL பேண்ட் அணிந்து தலை முடியை ஒன்றாக சேர்த்து ஒரு ரப்பரில் அடக்கி தோளின் முன்புறம் இருக்குமாறு வீட்டிருந்தாள்.



அந்த அறையை கடந்த 1 நிமிடத்தில் தன் மனைவியை இப்படி ஸ்கேன் செய்துவிட்டு சென்றான். நீண்டநாள் பார்க்காததால் அவளை ஆசையை கண்களில் நிரப்பினான். அதுக்கூட முழுமையாக இல்லை.



விக்ரம் ஆதித்யாவிடம் பேசிக்கொண்டே வீட்டை முழுவதும் கட்டிவிட்டான். பின்பு ஒரு அறையை காட்டி இது உங்க ரூம் என்று மதுவின் அறையை காட்டினான்.



“ஆதி!!.... நீ கொஞ்ச நேரம் இங்க ரெஸ்ட் எடு... மது வந்துடுவா.... நான் குளிச்சிட்டு வந்துடறேன்...” என்று அவனை விட்டு விட்டு சென்றான்.



மதுவின் அறைக்கு வந்தவன் அப்படியே அங்குள்ள அனைத்தையும் பார்வையிட்டான். அந்த அறை தன்னுடைய அறை போல சகல வசதிகளும் உடைய அறையாக தோன்றியது. அங்குள்ள பால்கனியில் வண்ண மலர்களான சிறு தோட்டமும் ஊஞ்சலும் இருந்தது.



அங்கிருந்து பார்த்தால், அவர்களது தோட்டமும் நீருற்றும் பிரமாதமாக தெரிந்தது. அதை கண்டு மகிழ்ந்தவன். அதை ரசித்துப் பார்க்க துவங்கினான். எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தானோ? அவனுக்கே தெரியவில்லை. தன்பின் ஏதோ அரவம் கேட்கவும் திரும்பியவன் மதுவை பார்த்தான்.



அவளை பார்த்தவன் பத்து நாள் பார்க்காததை ஒரே நாளில் பார்ப்பவன் போல் வைத்தகண் வாங்காமல் பார்த்துகொண்டிருந்தான். அவன் பார்வை உணர்ந்தவள் போல நிலம் நோக்கினாள் அவள்.



அவள் செய்கையை உணர்ந்தவன். “எப்படி போச்சு மீட்டிங்?” என்றான்.



“ஹ்ம்ம்... மீட்டிங் சக்சஸ்புல்... நீங்க எப்படி இருக்கீங்க?...” என்றாள்.



“நல்லா இருக்கேன்.... இந்த பத்து நாளுல ஒருடைம் கூட கால் பண்ணனும்னு தோணலயா?”



“அப்படி எதுவும் இல்லை.... எல்லாரும் ஊர்ல இருந்ததால நானே எல்லாம் பார்க்கற மாதிரி ஆயிடுச்சு... அதுதான் டைம் இல்ல... அப்பறம் உங்க ப்ரீ டைம் தெரியாது... பிரியா நம்பர் தெரியாததால அவகிட்ட கேட்கவும் முடியல.....” என்றாள்.



“பரவலா !! அப்பா ப்ரியாவ பார்த்தியா?” என்றான்



“இல்லை !! ஆபீசியால் ட்ரெஸ் ல இருக்கேன்... சாரி கட்டிட்டு போலாமுன்னு வந்தேன்..” என்றாள் தயக்கமாக.



அவள் தயக்கத்தை உணர்ந்து அவள் அருகே வந்தவன் அவள் நாடியில் கைவைத்து, “நீ நம்ம வீட்டுக்கு வந்த பிறகு கூட வேலைக்கு போகதான் போற.. அதுக்கு எதுக்கு இவளோ பார்மாலிட்டிஸ்... இப்படியே வா...” என்று அவள் கைபற்றி அழைத்து சென்றான்.



அவனுக்கே ஆச்சரியம் ஒரு கம்பனியை வழிநடத்தும் அவள் தன்னிடம் ஒரு மனைவியாக மட்டும் நடந்துகொள்வது, இதைபற்றி அவளிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.



இருவரும் ஒருவர் கைப்பற்றி ஒருவர் படிகளில் நடந்து வருவதைப் பார்த்த அனைவரும் மகிழ்ந்தனர். அப்படி இருந்தது அவர்களின் ஜோடிபொருத்தம்.



ஜானவிக்கு கூட தோன்றியது அவ்வாறே. பார்வதியோ தன் நினைப்புக்கு அனைத்தும் எதிர்பதமாக நடைபெற்று கொண்டிருப்பதால் அவளால் அங்கிருக்க முடியாமல் திணறினார். அவர்களின் சந்தோஷத்தை ஏற்க அவர் தயாராகவில்லை. அவர்கள் மகிழ்வதையே வெறுத்தார்.



பின் வந்தவர்களை வரவேற்றவள். அனைவரிடமும் பேசிக் கொன்டிருந்தாள். பிரியாவும் அவளுடன் கலந்துக்கொண்டாள். பின் மதுவை அவள் தாய் தயாராகசொல்லி அனுப்பினார். தன் மகளை அவள் கணவனுடன் அனுப்ப தயாராக இருந்தார்.



மது - ஆதித்யா தம்பதியினரிடம் உறவு இருந்தது காதல் இல்லை. உரிமை இருந்தது இருவரது மனமும் வேறு வேறே என்ற நிலையில் இருந்தனர். மனம் மகிழ்ந்து இருவரது பெற்றோரும் இத்திருமணத்தை நடத்தினர். ஆனால், அதை வெற்றி பெற வைப்பது இவர்களது கையிலே உள்ளது.



{ பார்வதி இவர்களை என்ன செய்ய காத்திருக்கிறார்? ஜானவி அவருக்கு உதவுவாரா? என்பதையும், இவர்களது வாழ்க்கை முறைகளும் இவர்களது திருமண வாழ்க்கையையும் வரும் அத்தியாயங்களில் காண்போம்.....}



 
Last edited:

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரிண்ட்ஸ்,

நான் மித்ரா.. "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" மற்றும் "சுயம்புமானவள்" என்று இரு கதைகளையும் இத்தளத்தில் நான் எழுதுகிறேன்.

வாசகர்கள் சில பேர் நெக்ஸ்ட் யுடி எப்போ தரீங்க? என்று கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். நான் பணி புரிவதால் வாரம் ஒருமுறை உங்களுக்கு அப்டேட் கொடுக்க விரும்புகிறேன். என் வேலை பளு குறையும் சமயத்தில் இரண்டு அப்டேட் தருகிறேன்.

நீங்கள் என்னுடைய நிலையை புரிந்துக் கொள்வீர்கள் என்று கருதுகிறேன். மேலும் நீங்கள் உங்களுடைய கருத்துகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.
எழுத்தாளர்களுக்கு ஊக்குவிப்பது உங்களுடைய கருத்துகளே !!!...... அதை நானும் என்போல் உள்ள எழுத்தாளர்களும் எதிர்பார்க்கின்றனர்...
மேலும் உங்களின் கருத்துகளை எதிர்பார்க்கும் உங்களின் தோழி....
மித்ரா..!!

http://srikalatamilnovel.com/…/mithras-stories-and-poems.50/
 

mithravindalavender

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம்- 08

original.jpg


மதுமிதா அழகிய பட்டுபுடவையில் அதற்கேற்ற நகைகளுடன் தயாராகி கீழே வந்தாள். அவளைப் பார்த்த அனைவரும் அவள் அழகில் வியந்தனர்.



ஆதித்யாவிற்கோ சொல்லவே வேண்டாம், அவள் தன் மனைவி என்ற எண்ணமே அவனை பெருமை கொள்ள வைத்தது.



பின் இருவரையும் அழைத்த மதுவின் அம்மா, “ரெண்டு பேரும் சாமி கும்பிடுங்க... அப்பறம் கிளம்பலாம்... !!” என்று அவர்களை பூஜையறைக்கு அனுப்பி வைத்தார்.



இருவரும் சாமியறையில் இருந்து வெளியே வந்தபிறகு அவளை தன்னருகே இருத்தியவன் அவளுடைய பெற்றோரை அழைத்து அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.



பாலு – மகேஸ்வரி தம்பதியினர் தங்கள் செல்ல மகளின் திருமணத்திற்கு பல கனவுகள் கண்டிருந்தாலும் தங்கள் வீட்டு பெரியவரின் மனமறிந்து இந்த திருமணத்தை நடத்தியிருந்தனர். ஆனாலும், தொழில் முறையிலும் சரி அவர்களின் நட்பு வட்டாரத்திலும் அதிகார பூர்வமாக தெரிவிக்க விரும்பினர்.



அதனால் அம்ரேந்தரன் மற்றும் ஆதித்யாவிடம் ரிஷப்ஷன் வைப்பது பற்றி கேட்டனர். அவர்களுக்கும் அதுவே சரி என்று தோன்ற ஜோசியரிடம் கேட்டு ஒரு நாள் முடிவு செய்து அன்று வைத்துக்கொள்ளலாம் என்று கூறினர்.



மதுவை ஆதித்யாவுடன் அனைத்து வகையான சீர் வரிசைகளுடன் அனுப்பினர் அவள் பெற்றோர். அவர்களும் தங்களது குடும்பத்துடன் மதுவின் புகுந்த வீட்டில் விட வந்தனர்.
அவர்கள் வெளியே வரவும், மதுவின் அசிஸ்டன்ட் நிவி மதுவின் காரை எடுத்துக்கொண்டு வந்தாள். சாவியை விக்ரமிடம் தந்து விட்டு சென்றாள்.



கேள்வியாக பார்த்த ஆதித்யாவை, “இது மதுவோட ஆபீசியால் கார் அவளுக்கு இது தேவப்படும் சோ நாம இதுல போகலாம். அப்பா அம்மா அவங்க கார்ல வந்துடுவாங்க.” என்றான்.



பிரியா தனது தந்தையுடன் செல்வதைப் பார்த்த மது, “பிரியா!! இங்க வா!!... எங்களோடவே போலாம் வீட்டுக்கு...” என்று அவள் கையைப் பற்றி அழைத்து வந்தவள். விக்ரம் டிரைவர் சீட்டில் இருக்க அவனுக்கு அருகில் அமர வைத்தாள்.



விக்ரம் மது ஆதித்யாவுடன் அமரவும், “என்ன மேடம்!!... எல்லாரையும் கார்ல உட்கார வச்சிட்டியா... ஆமா!!.. இந்த பொண்ணுங்க எல்லாம் அம்மா வீட்ட விட்டுட்டு போன அழுவாங்களே...!! உனக்கு அப்படி எந்த பீலிங்கும் வரலையா?...” என்று வம்பிழுத்தான்.



“டேய் அண்ணா !!... உனக்கு நான் அழுவறதா பார்க்க ரொம்ப ஆசையா இருக்குப் போல.... உனக்கே ஓவரா இல்ல... இங்க இருந்து அரை மணி நேரத்துல நம்ம வீட்டுக்கு வந்துடுவேன்... எப்போ வேணுமனாலும் நீயும் நானும் வந்து பார்த்துக்க போறோம்... இதுக்கு ஏன்டா நீ அழுகற?” என்று அவனையே திரும்ப கேட்டாள்.



கடுப்பான விக்ரம் “ உன்ன போய் நான் கேட்டேன் பாரு... என்ன உதைக்கணும்...” என்று தலையில் அடித்துக் கொண்டான்.



அதைப் பார்த்த ஆதித்யாவும் பிரியாவும் சிரித்தனர். அதனைப் பார்த்த விக்ரம் இன்னும் கோவம் ஆனான்.
அதைக் கண்ட ஆதித்யா, “ பீல் ப்ரீ விக்ரம்.. ஜஸ்ட் போர் fun...” என்று அவனை சமாதான படுத்தினான்.



விக்ரம், “ஆதி !! உனக்கு இவளைப் பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது... எப்படி ஓட்டற பாரு... உன்ன நினச்சு தான் எனக்கு பயமா இருக்கு...” என்றான் பரிதாபமாக.



மதுவோ, “விக்ரம் !! நீ பார்த்து பேசு.... உன்னோட விக்னஸ் எனக்கு தெரியும் டா... அப்போ வந்து என்கிட்டே ஹெல்ப் கேட்டா நான் எதுவும் செய்ய மாட்டேன்...” என்றாள்.



“போடி !! நீ செய்யலனா என்ன? ஆதித்யா எனக்கு ஹெல்ப் செய்வாரு...” என்றான் விக்ரம்.
ஆனால் விக்ரமிற்கு தெரியவில்லை ஆதித்யாவும் அவனோடு சேர்ந்து அவளிடம் உதவி கேட்க போகிறான் என்று.



ஆதித்யாவிற்கு, மது அவளின் அண்ணனுடனான பேச்சுவார்த்தை அவ்வளவு இயல்பாக இருப்பது அவனுக்கு பிடித்திருந்தது. அதில் அண்ணன் என்ற உறவும் ஒரு நட்பும் இழையோடு இருப்பதை உணர்ந்தான்.



அவனுக்கும் ப்ரியாவிற்கும் ஆன பேச்சுவார்த்தை எப்பொழுதும் ஒரு பாசமான தந்தை மற்றும் தாயிடம் எதிர்பார்க்கும் ஒரு அன்பாக மட்டுமே இருக்கும். அதுவும் அவனே ப்ரியாவிற்கு பெற்றோராக இருந்தான் என்றால் மிகையாகாது. அவனுக்கு தேவைப்படும் பாசம் நட்பு அன்பு இது எதுவும் அவனுக்கு கிடைக்க வில்லை என்பது உண்மையே!!....



பிரியா, விக்ரம் மற்றும் தன் அண்ணியின் பேச்சில் ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள். ஆதித்யா, மதுவும் தன்னுடன் இவ்வாறு நடக்க வேண்டும் என்று விரும்பினான்.



இவ்வாறு கலகலப்பான பயணம் ஆதித்யாவின் வீட்டிற்கு வரும்வரை தொடர்ந்தது. மற்றறொரு புறம் ஜானவி இவர்களின் செல்வநிலை அறிந்தவுடன் உடனடியாக எல்லா தயாரிகளையும் மேற்கொள்ளுமாறு தங்களது வீட்டில் வேலை செய்பவர்களுக்கு உத்தரவிட்டார்.



ஜானவிக்கு மதுவின் மீது இப்போதும் எந்த அபிப்ராயமும் இல்லை என்பது உண்மைதான். அவர்களின் செல்வநிலையும் அவர்களின் சமுதாய மதிப்பின் மேல் மட்டுமே விருப்பம். அவளுக்கு தங்களது லேடீஸ் கிளப்பில் அவருடைய மருமகளைப் பற்றி பெருமை பேசிக்கொள்ள ஒரு வாயிப்பு வந்ததாகவே நினைத்து அனைத்தையும் செய்தார்.




இதை எல்லாம் கேட்டுகொண்டு வந்த அம்ரேந்தரன் ஜானவியை நினைத்து வருத்தப்பட்டார். “எப்படி இருந்தவ, இப்படி ஆயிட்டாளே? ..” இதற்கு எல்லாம காரணமான பார்வதியை நினைத்து அவரின் உள்ளம் கொதித்தது.




மதுவை எப்படி இவர்களிடம் இருந்து பார்த்துக் கொள்வது என்று யோசனயானார். இது எல்லாம் மதுவிற்கு ஒரு விஷயமே இல்லை என்பது போல மதுவின் நடவடிக்கை அமைந்து அவரை ஆச்சரியத்திற்குள் தள்ளியது அவள் வந்த ஒரு வாரத்திற்குள்.




பார்வதியோ, இதை எல்லாம் அவர் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. அவரை மீறி நடக்கும் செயல்களை ஒரு கையாலகாத தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் வன்மம் அதிகரிக்க காரணம் ஆனது மதுவின் அதிரடி நடவடிக்கை.



மதுவை ஆதித்யாவுடன் அனைத்துவிதமான வழிமுறைகளுடன் உள்ளே அழைத்து வரவேற்றார் ஜானவி. அவரது மாற்றம் எதனால் என்றறிந்த ஆதித்யாவும் பிரியாவும் முகத்தை சுளித்தனர்.



இதையெல்லாம் பார்த்தும் பார்க்காமல் உள்ளே நுழைந்தால் மதுமிதா ஆதித்யாவின் மனைவியாக.
புதுமணத் தம்பதியருக்கு பால் பழம் கொடுத்து அமர வைத்தனர். இருவரிடமும் வழவழத்துக் கொன்டிருந்தாள் பிரியா.



மதுவின் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தவர்கள் பின்பு அவர்களுக்கு மதிய விருந்தை பரிமாறினர் ஆதித்யாவின் குடும்பத்தினர். பார்வதி மட்டும் யாரிடமும் ஒட்டாமல் எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.



மதுவின் பெற்றோர் அனைவரிடமும் விடைபெற வரவும் அவர்களோடு மதுவும் சிரித்த முகமாக அனுப்பி வைக்க வெளியே வந்தாள்.



அவளின் தந்தை, “தாத்தா சொன்னதா எப்பவும் நியாபகம் வெச்சிக்கோ மது... உன்னோட எந்த முடிவும் அதை அடிப்படையில் தான் இருக்கணும். நீ புத்திசாலி ஒரு கம்பனியா நிர்வாகம் பண்ற... அதனால பார்த்து நடந்துக்கோடா...!!!” என்று மதுவின் தலையில் கை வைத்து பேசினார். பின் அவளது அன்னையும் அண்ணனும் அவளிடம் பேசிவிட்டு கிளம்பினர்.




ஆதித்யாவும் மதுவுடன் இருந்ததால் அவர்கள் பேசியது எல்லாம் கேட்டான். ஆனால், அவர்களது தாத்தா என்ன கூறி இருப்பார் என்பதை அவனால் கணிக்க முடியவில்லை.



பிறகு மதுவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தவன் மதுவிடம், “ மது வா !! வீட்டுக்குள்ள போகலாம்... உனக்கு வீட்ட சுத்திக் காட்டறேன் ” என்றான்.



அவர்கள் ஹாலில் நுழையவும் ஆதித்யாவின் போன் ஒலித்தது. அதை எடுத்தவன் முகம் யோசனையில் தோன்றி மதுவிடம் நின்றது. பேசி முடித்தவன், “ஐ வில் கால் யு பாக்... !!” என்று கூறி வைத்தான்.




“என்னாச்சு? ”, என்றாள்.




“திடிர்னு ஒரு வொர்க் வந்துடுச்சு... இப்ப போகணும் urgent.. அதுதான் புரியல... இன்னைக்கு தான் நீ வந்து இருக்க.. உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணணுமன்னு இருந்தேன்... சாரி மது...” என்றான்.




அவள் ஏதும் பதில் சொல்லுமுன் ஆதித்யா பேசுவதைக் கேட்ட அமர். “நீ போக வேண்டாம் ஆதி... நான் ஆபீஸ் தான் போறேன் நான் manage பண்ணிக்கறேன். நீ மதுவோட இரு...” என்றார்.




மதுவோ, “பரவாயில்லை மாமா!!... அவர் கிளம்பட்டும் பிரியா இருக்கா... நான் பார்த்துக்கிறேன்..” என்றாள்.



அவளைப் பார்த்து சிரித்த அமர், அவளருகே வந்து அவள் தலையை வருடி, “எனக்கு ரியாலவே ஆபீஸ் வொர்க் இருக்கு மது... அதனாலதான் சொன்னேன்.” என்று கூறியவர் அவர்களிடம் விடைபெற்று அலுவலகம் சென்றார்.




“அப்பா !! எப்பவும் இப்படித்தான் மது... அவர வீட்ல பார்க்கவே முடியாது.. அப்படி இருந்தாலும் நிம்மதியா இருக்க மாட்டாரு... எல்லாம் என்னோட அம்மாவால...” என்று பெருமுச்சு ஒன்றை விட்டான்.



அதிலிருந்த விரக்தியை உணர்ந்த மது அவனின் மனதை மாற்ற முயன்றாள். “ஆதி !! என்ன இங்கயே நிக்க வைச்சிட்டே பேச போறிங்களா? வீடு சுத்தி காட்ட இஷ்டம் இருக்கா இல்லையா?” என்று அவள் தன் புருவம் உயர்த்தி கேட்டாள்.




அதில் தெளிந்தவன் அவள் புருவம் உயர்த்தி செய்த சைகையில் அவன் அவளிடம் விழுந்துவிட்டான் என்பதை உணர்ந்தான். முதன்முதலில் தன் வாழ்வில் ஒரு பெண்ணை வேறொரு கோணத்தில் பார்த்தான் என்றான் மிகை இல்லை.




ஆதித்யா அவளை தன்னுடன் அழைத்து சென்று எல்லா இடமும் சுற்றி காட்டினான். அவளின் வீட்டை விட சில மடங்கு வசதியில் உயர்ந்துள்ளது என்பதை உணர்ந்தாள்.




பூஜையறை முதல் சமையலறை தோட்டம் ஸ்விம்மிங் பூல் வரை அனைத்தும் காட்டியவன். வீட்டில் உள்ள மற்ற தளங்களுக்கு அழைத்து சென்றான். முதல் தளத்தில் 5 அறைகள் இருந்தன.
அதில் மூன்று அறைகள் அமர் ஜானவி ஒரு அறையிலும் பார்வதி ஒரு அறையிலும் பிரியா ஒரு அறையிலும் இருந்தனர். ஒரு அறை அமரின் அலுவலக அறையாகவும் மற்றொரு அறை கெஸ்ட் ரூம் ஆகவும் இருந்தது.




இரண்டாம் தளம் முழுவதும் ஆதித்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவனின் அலுவலக அறையும் உடற்பயிற்சி அறையும் சிறிய ஹாலும் சமையலறையும் மற்றும் பால்கனியும் சிறிய மாடி தோட்டமும் ஒரு புறமும் இருந்தது. மற்றொரு பகுதியில் அவனின் பெரிய பிரமாண்டமான படுக்கை அறையும் இருந்தது.




ஒரு CONSTRUCTION கம்பெனி நடத்துபவன். அது அவனின் குடும்ப தொழிலும் கூட. அவன் ஒரு ARCHITECT உம். அதனால் அவன் தன் அறையையும் தன் தளத்தையும் பார்த்து பார்த்து வடிவமைத்தான்.



மது ஆச்சரியத்தில் முழ்கி இருந்தாள். அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது. அவளின் முகபாவத்தில் தெரிந்துக் கொண்டான் ஆதி. பின் தங்களின் அறைக்கு அழைத்து சென்றவன்.



ஆதித்யா, “வெல்கம் மது, டு அவர் ரூம்...” என்று வரவேற்றான். மது சந்தோசம் அடைந்தாள். அறையை பார்த்ததும் அவள் அறையை போலவே இருந்தது. ஆனால், சிறிது பெரியதாகவும் விசாலமாகவும் இருந்தது.



அவள் சிரித்துக்கொண்டே அந்த அறையை பார்வையிட்டாள். பின் ஆதித்யாவின்புறம் திரும்பி, “ரொம்ப நல்லா இருக்கு ரூம்... நைஸ் architech வொர்க்... கலர் combination நல்லா இருக்கு... இந்த ப்ளோர் முழுசும் அல்டர்னேட்டிவ் கலர் யூஸ் பண்ணிருக்கிங்க....” என்று ஒவ்வொன்றையும் பாராட்டினாள்.



“தேங்க்ஸ் போர் யுவர் காம்ப்ளிமண்ட்... யாரும் இந்த அளவுக்கு 5 மினிட்ஸ்ல ஒப்செர்வ் பண்ணியிருக்க மாட்டங்க....” என்று அவளிடம் கூறினான்.



பின் அவனே, “உன்னோட திங்க்ஸ் எல்லாம் வந்துடும்.. கொஞ்ச நேரத்துல.. இதுல எல்லாம் உன்னோட திங்க்ஸ் வெச்சிக்கோ.. இதுல ஒரு லாக்கர் இருக்கு.. அதுல உன்னோட பர்சனல் திங்க்ஸ் வெச்சிக்கோ.. இன்னும் அதுக்கு பாஸ்வோர்ட் போடல.. நீயே போட்டுட்டு அது லாக் பண்ணிடு.... எனக்கு ஒரு சின்ன வொர்க் இருக்கு அது முடிச்சிட்டு வரேன் 15 மின்ட்ஸ்ல. நீ ARRANGE பண்ணிட்டு ரெஸ்ட் எடு” என்று அவளை தன் அறையில் விட்டுவிட்டு சென்றான்.




அவன் கூறி சென்றவாறே அவளின் பொருட்கள் வந்து இறங்கியது. உதவியாளின் உதவியோடு அனைத்து பொருட்களையும் பதினைந்து நிமிடங்களில் அடுக்கி வைத்துவிட்டாள்.




பின்பு இவ்வளவு நேரம் பட்டுபுடவையில் இருந்ததால் ஒரே கசகசப்பாக உணர்ந்தாள். ஒரு குளியல் அவசியம் என்று உணர்ந்து மாற்று உடையுடன் குளியலறைக்குள் சென்று விட்டாள்.



அவள் சென்ற சிறிது நேரத்தில் வந்த ஆதித்யா அவள் குளியலறைக்குள் இருப்பதை உணர்ந்து வேறொரு உடையுடன் அவனின் அலுவலக அறைக்குள் சென்று விட்டான்.



அவள் குளித்துமுடித்துவிட்டு உடை மாற்ற வரவும், அவன் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது. அவளை அந்த கோலத்தில் அவன் எதிர்பார்க்கவில்லை. அவளும் தன் அறையில் நியாபகத்தில் புடவையை கட்டாமல் வெளியே வந்து கட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் வந்துவிட்டாள். அவளும் அதிர்ந்து நின்றவள் புடவையை கீழே விட்டுவிட்டு பதட்டத்தில் எதிர்புறம் திரும்பிகொண்டாள்.



முதலில் சுதாரித்த ஆதித்யா, “சாரி மது..!! நீ ட்ரெஸ் மாத்திட்டு கூப்பிடு.. நான் வெளியே வெயிட் பண்றான்..” என்று கூறி சென்றான்.



அவன் சென்றும் அவள் அதே கோலத்தில் 2 நிமிடம் அப்படியே நின்றாள். பின் தெளிந்து அவசரமாக உடை மாற்றிக் கொண்டு அவனை உள்ளே அழைத்தாள். அவன் உள்ளே நுழைந்ததும் அவள் மறுபடியும் சாரி கூறினாள்.



ஆதித்யா, “இட்ஸ் ஒகே மது...” என்று கூறினான். மேலும் “இன்னிக்கி மட்டும்தான் நாம ப்ரீயா இருப்போம்.. சோ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாம். இந்த மாதிரி மதியம் தூங்கற சந்தர்ப்பம் கிடைக்காது. சோ டேக் அ ரெஸ்ட்...” என்று கூறி படுக்கையில் படுத்துவிட்டான். அவளும் தலையாட்டிவிட்டு மறுபக்கம் படுத்தாள்.



இருவரும் சிறிது நேரம் முன்பு நடந்ததை நினைத்து உறங்க முடியாமல் ஒருவிதமான மனநிலையில் புரண்டு படுத்தனர். ஒரு தடவை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த மாதிரி படுக்கவும் இருவரும் மற்றவர் கண்களில் தொலைந்து ஒருவிதமான மயக்கத்தில் இருந்தனர்.




ஆதித்யா அவளை தன் அருகே அவளின் கைப்பிடித்து இழுத்தவன் அவளை அணைத்தவாறு உறங்க முயன்றான். அவளும் மறுக்கவில்லை. அவனிடம் அடங்கினால் அவனின் கைகளுக்குள்.



இருவரும் அந்த நிமிடத்தை மிகவும் ரசித்து அனுபவித்தனர். வார்த்தைகளில் கூறாமல் சைகையில் உணர்ந்தனர் அவர்களின் விருப்பத்தை. ஆனால், மனதில் உள்ளதை கூறியிருந்தால் பின்னாளில் வரும் குழப்பத்தில் இருந்து தப்பித்து இருக்கலாம்.




ஆனால், அவர்களுக்கு கஷ்டபட வேண்டும் என்றே வாழ்க்கை தீர்மானித்திருந்தது.




வாழ்வு தொடரும்...........
 
Last edited:
Status
Not open for further replies.
Top