அதீவ் & கவி பத்தி சொல்லியே ஆகணும் .. அவ்வுளவு அழகு .. நம்ம ரைட்டர் போட்ட போட்டோ லூக்கா கேட்டா .. அது ஒரு பகுதி தான் .. ஆனா அவுங்க மோதல் அழகு ,அவன் அவளுக்கான அன்பை உணர்தாலும் மனசோடு பூட்டி வைத்திருப்பது ஒரு அழகு,அந்த படப்பிடிப்பில் வரும் முதல் முத்த காட்சியை விவரித்திருக்கும் அந்த கள்ளத்தனம் அழகு, மெது மெதுவா அவளுள் அவன் அன்பை உணரும் பகுதிகள் அழகு ,அவுங்க க்யூட்னஸ் அழகு, அவுங்க மனசை புரிச்சுக்க ஒரு டான்ஸ் அழகு , அவுங்க ப்ரியா விடையில் கை கோர்த்தது அழகு,பிரிவில் ஒரு தவிப்பு அழகு ,அந்த பிரிவை தாங்காமல் அணைத்திடத்துடிக்கும் காதலனும் காதலியும் அழகு ,முகம் கண்டிடமாட்டமா என தானாக சென்று மாட்டி கொள்ளும் அந்த cheeky காதலன் அழகு , புது வருட தொடக்க ஆரவாரத்தில் தன் காதலை ஊர் உரக்க சொன்ன அவன் அழகு. .எத்துனை சோதனைகள் வந்தாலும் அதை காதலுக்காக ,காதலிக்காக ..தாங்கும் அவன் உறுதி அழகு , காதல் தரும் வலி அழகு ,"அண்ணாந்து பார்க்க செய்வேனோ அல்லது முயற்சி தோல்வியுற்று அங்கிருந்து வீழ்ந்து மடிவேனோ !" உன் கவிதை வரிகள் அழகு , விழவேண்டும் என்று எண்ணியவரையே வீழவைத்து வீறுகொண்டு தன்னிலையை நிலைப்படுத்திய அவன் அழகு , எந்நிலையிலும் அவனோடு நின்று .. அவனை தாங்கிய அவள் அழகு .. மொத்தத்தில் எழுத்தாளரே உன் கற்பனை அழகு .. அதற்காக எடுத்த கொண்டு உன் effort அழகு ... அந்த காதல் கை கூடிடாதா .. என சில நேரங்கள் தவிக்க வைத்த உன் எழுத்து நடை அழகு ... அச்சோ எல்லாமே அழகு .. இதுக்கும் மேல யாருமா நீ என தெரிந்து கொள்ள காத்திருப்பதும் அழகே .. நன்றிகள் உனக்கு .. என்னை போல் பலரை சில நாட்களுக்கு .. உன் பாயாஸ்கோப்பில் .. குறும் படம் பார்க்க அனுமதித்திற்கு ... மீண்டும் சந்திப்போம் ...