வணக்கம் சிவநயனி,
உங்கள் கதையின் ஒவ்வொரு சம்பவங்களும் என் கற்பனையில் படமாக விரிய, மிகவும் ரசித்துப் படித்தேன்..
நீங்கள் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த ‘செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ’ விற்குப் பிறகு நான் வாசித்த அதிரடிக் கதை இது.
உங்கள் மற்றைய கதைகளோடு ஒப்பிடுகையில் காதல் ரசம் சற்றுக் குறைவுதான். இறுதியிலேயே இருவரும் காதலைச் சொல்லிக்கொண்டதால் இருக்கலாம்..
சண்டைக் காட்சிகளில் எப்போதும் போலத் தெறிக்க விட்டுட்டீங்க. ஒவ்வொரு தடவையும் ஆளியுரவன், இதங்கனையைக் காப்பாற்றும் விதம், அவள் காயப்படாமல் காக்கும் விதம் அழகு.
நானறிந்தவரை உங்கள் பாணியில் கதை இன்னும் முடியவில்லையே.
திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையையும் சிறிது காட்டிவிட்டல்லவா முடிபீர்கள்.
ஒரு வேளை பாகம் 2 இருக்கிறதோ?
ஹூரே!!!!!
ஒவ்வொரு கதைகளிலும் நாயகன் நாயகிக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் தூய தமிழ்ப்பெயர்கள் அருமை.
உங்கள் எழுத்தாற்றல் மென்மேலும் வளர என் வாழ்த்துகள்.