ஹாய் அம்மு..!
போட்ட யூடிகள் வரை படிச்சிட்டேன். நல்லா இருக்கு.. கதை தொடங்கிய விதம்.. இன்டர்ஸ்டிங்..!
அதன் பின் கதாபாத்திரங்களின் அறிமுகம் என்று காட்சிகள் கோர்வையா இருக்கு..! கன்டினியூட்டி மிஸ் ஆகலை..
நம்ம கொங்கு தமிழில் வசனங்கள் கதையோடு ஊன்ற செய்கிறது.
எல்லாருக்கும் தெரிந்த கதைக்களம் தான் என்றாலும்.. சலிப்பு தட்டாமல் தரணும்.. இதுவரை அது சரியா.வந்திருக்கு..
கதாபாத்திரங்களும் கதையோடு பொருந்தறாங்க.. ஆக மொத்தத்தில் இந்த கதை முடியும் பொழுது படித்தவர்களுக்கு திருப்தியை கொடுக்குன்னு நம்புகிறேன்.. ஆல் த பெஸ்ட் அம்மு..
இதே ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் கதை எழுது.. பல கதைகள் கொடுத்து பிடித்த ரைட்டர் என்று பெயர் பெற்றிட என் வாழ்த்துக்கள்...
(பிகு: திவி யுவா டையலாக்கை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன். பின்னே தான் ஞாபகம் வந்துச்சு.. நீ , வாணி, ஷாலு, யாஷூ, மேரி.. கமெண்ட் த்ரேட்டில் அடிச்சுக்கிற அரட்டை இப்படித்தான் இருக்கும்...
)
இப்போ குறைகள் சொல்ல போறேன்.
ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. இருக்கு.. 'ணு' 'னு' மாறி வந்திருக்கு.. அதே மாதிரி ற ர வும்.. இனி சரி செய்துக்கோ..
மற்றபடி டையலாக்.. அப்படித்தான் இருக்கணும்.. ஆனாலும்.. அந்த ஸ்லேங் மாறாமல்.. சரியான தமிழ் வார்த்தையும் யூஸ் செய்யலாம்.. ட்ரை செய்து பாரு அம்மு..
கதைக்கு கமெண்ட் போடச் சொன்னால் அலசி ஆராய்ந்திருக்கேன்.. மன்னிச்சு..