ராஜிமா ,
கதையின் தலைப்பை படித்தபோது இருந்த ஆர்வமும் உற்சாகமும் கதையை படித்து முடித்த பின்பு கதையின் போக்கைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் பன்மடங்காகியுள்ளது..
கதையின் ஆரம்பத்தில் ஆதித்யாவின் மீது அவன் மதிக்கத்தெரியாதவன், திமிர்பிடித்தவன், மீராவிடம் கடுஞ்சொற்கள் பேசி அவள் மனதினை புண்படுத்துபவன் என்ற எண்ண ஓட்டங்களே இருந்தன.அவனது செயலுக்கான விளக்கங்களை அவனளிக்கும் போது அப்படியே முன்னிருந்த ஓட்டங்கள் விடைப்பெற்று அவனின் மீது ஒரு மதிப்பு பெருகியது..அவனது செயலுக்கான விளக்கங்களை நீங்கள் வெளிப்படித்திய விதம் அருமை..
கார்த்திக் மீரா சற்று நிதானித்திருக்கலாம்.. இருந்தாலும் கதையின் ஓட்டத்தில் இவர்களின் தவறும் இயல்பே..
ஆதியின் முகத்தை பார்த்து மனதினை அறியும் திறமை முதலில் பெரும் வியப்பைத் தந்தது,பிறகு அவனுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை அவனுக்கு இந்தத் திறமையை பரிசாக அளித்திருப்பது புரிந்தது..
ஆதியின் அப்பா ஆதாயங்களுக்கான காரியங்களை நடத்தச்செய்வதில் வல்லவர்..அவரின் செயல்களே ஆதியின் வாழ்க்கையில் நிறைந்துள்ள பல விடையறியா கேள்விகளின் பதில்..
மகிழன் என்ன மாதிரியான மருத்துவர்..தான் குணப்படுத்திய நபருக்கே அவர் செய்யும் கெடுதல்கள் சுயநலத்தின் உச்சம்..
ஆதியின் வாழ்க்கையின் இருள் பக்கங்களை காதல் மூலம் மாற்றியமைப்பாள் மீரா...
மீரா ஆதியின் இருவருக்கும் இவர்களின் காதல் மீது இருக்கும் நம்பிக்கை அளப்பரியது..இவர்களின் காதலை எதிர்வரும் அத்தியாயங்களில் படிக்க மிக ஆவலுடன் உள்ளேன்!!..
( Hihihiiii late aagituuu )