Hanza
Bronze Winner
ஆதித்யா ஒரு அழுத்தமான அதே சமயம் ஆளுமை மிக்கவன். எதிராளியின் பேச்சின் போக்கை வைத்தே அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதுவரை கணிப்பவன். மீராவின் மனமும் ஆனந்த்தின் குரூர திட்டமும் அவனால் முன்கூட்டியே கணிக்கப்பட்டது ஒரு பெரிய சான்று. இவனது சிறுபராயம் படிக்கும் போது எம் கண்கள் பணிக்கின்றன. இறுதி அத்தியாயங்களில் இவனது அதிரடி தான் peak of climax
மீரா ஆதியின் காதலை பெறவும் பின் அவனது தந்தையின் சவாலில் ஜெயிக்கவும் எடுக்கும் முயற்சிகள் அருமை... மீரா இல்லாவிட்டால் ஆதியின் நிலமை அதோகதி தான். ஆதிக்கு பக்கபலமாக நின்று ஜெயிப்பது எல்லாம் மாஸ்..
கார்த்திக் நல்ல நண்பன் அதே சமயம் அவனிடம் அப்படியொரு திருப்பு முனையை எதிர் பார்க்கவில்லை.
ஆனந்த ஷங்கர்... இவரை என்ன சொல்வதென்றே/செய்வதென்றே தெரியவில்லை.. அவ்வளவு கோவம் வருகிறது. ஒரு தந்தையாக ஒரு மனிதனாக இருப்பதற்கே லாயக்கில்லாதவர்.
ஆரம்பத்தில் இருந்த அழுத்தமான ஆதியாகட்டும் பின்னுள்ள ஆதரவு தேடும் ஆதியாகட்டும் கதை முழுக்க அவனே எம்மை ஈர்க்கிறான்.
ஆதியின் கதாபாத்திரமும் சரி அதன் ஏற்ற இறக்கமும் சரி அவ்வளவு நேர்த்தியாக இருக்கின்றது.
திருப்பங்கள் நிறைந்த ஒரு அழகான அழுத்தமான கதையை தந்ததற்கு ஆசிரியருக்கு நன்றி...