ராஜிமா,
கதைக்கு முழுவதும் விமர்சனம் கேட்ருக்கீங்க. சிம்பிளா சொல்லனும்னா லவுலி லவ் ஸ்டோரி.
தேனு கேரக்டர் சராசரி பெண்களின் கனவுகளுடன் வலம் வந்தவள். சினிமா, தொழில் என்று வலம் வரும் ஆண்களை கனவு நட்சத்திரங்களாக கொண்டு கனவு காண்பது, அவர்களை ஒரு தடவையாது சந்திக்க வேண்டும் என்று ஆசை படுவது. அப்படி ஒருவனை சந்திக்க நேர்ந்ததால் அவளையும் மீறி அவள் உணர்வுகள் பேசியது. உலகமே கொண்டாடும் ஒருவன் தன்னை கொண்டாடுவதில் அவள் வானத்தில் பறந்தாள். அதில் அவனின் உண்மை காதல் புரியாமல், திருமணத்திற்கு சம்மதித்தது. எல்லாம். அவனின் உண்மை வாழ்க்கை முறை பார்த்ததும் பயத்தில் அவனை பிரிய முடிவு எடுத்தது என்று எதுவும் அவள் உணர்ந்து பண்ணாமல் போனது தான் விபரீதம்.
பிறகு இங்கு வந்து அவள் வழக்கத்தோடு ஒன்றியபிறகு அவள் தொலைத்தது ஒரு பொக்கிஷம் என்று தெரிய அதை இழந்து விட்டோமே என்று ஒவ்வொரு முறையும் தவிப்பது, ஒரு முடிவோடு அதை சரி செய்ய நினைப்பது, ஆனால் இது எந்த ஒரு இடத்திலும் அவள் குழந்தை தனம் மாறாமல் இருப்பது என்று ரசிக்க வைக்கிறாள்.
கெளதம் ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே என்ட்ரி சாங் போட்டு அவனை காட்டி இருக்கணும் . ஓகே ஓகே நானே போட்டுகிறேன் ராஜிமா. உண்மை காதலை தேடி தோற்றுபோனவன், கடைசியில் அதை தேனுவிடம் கண்டு மயங்கி அவளை தனதாக்கி கொண்டாடுகிறான். இதில் எங்கே அவன் தோற்றுப்போனான் என்பது புதிர் தான். அவனின் இயல்பை அவளுக்காக மாற்றாமல் தனது உள்ளத்து காதலை மட்டும் கடைசி வரை அவளிடம் காட்டி வெற்றி பெறுகிறான்.
அவளை ரசிப்பது, அவளை வெறுக்க முடியாமல் தவிப்பது, அவளை பிரிவது இதில் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் அவளுக்காக எல்லா பழியையும் அவன் மேலே போட்டு கொள்வது என்று சும்மா அள்ளுறான்.
ஆனா கடைசியில் கம்பியில் முட்டிக்கொண்டானே அது தான் செம்ம.
அலமு க்கு இருந்த புரிதல் தேனுவுக்கு இருந்திருந்தால் அவள் தொலைத்து இருக்க மாட்டாள்.. ஆனால் அவள் தொலைக்கவில்லை என்றால் எங்களுக்கு ராஜிமா இப்படி ஒரு கதையை கொடுத்தும் இருக்க மாட்டார்கள்..
ராஜிமா ஆயிரம் முத்தங்கள் உங்களுக்கு.
என் சார்பாக அன்பு அண்ணனிடம் வாங்கி கொள்ளுங்கள். ஹா ஹா .. ஏதோ என்னக்கு புரிந்த வகையில் சொல்லி இருக்கிறேன். தவறாக கணித்திருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் ராஜிமா.