ஹாய் பிரெண்ட்ஸ்.. எல்லாரும் எப்படியிருக்கீங்க..
அனைவருக்கும்.. "சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே!" கதை நினைவிருக்கா..
ஆரூவ்பிரசாத் மற்றும் ரதிமாலாவை மறந்திருக்க மாட்டிங்க என்று நினைக்கிறேன்.
தற்பொழுது இக்கதையை அமேசானில் பதிவேற்றம் செய்துள்ளேன். சப்ஸ்க்ரைப் செய்தவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து படிக்கலாம். தங்களது கருத்துக்களையும் மறக்காமல் தெரிவியுங்கள் நன்றி..
சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே! (Tamil Edition)
சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே! (Tamil Edition) eBook : அன்பு, ராஜி: Amazon.in: Kindle Store
Check this out!
Amazon.com
இந்த கதையில் இருந்து சில பகுதிகள்.. உங்களுக்காக..
கர்வம் கொண்ட நடிகனுக்கும்.. அவன் மேல் அதீத அன்பு கொண்ட இரசிகைக்கும் இடையேளான காதல் கதை!
---------------------
ஷவரில் நின்று வியர்வையை கழுவியவன், அடுத்து இருந்த நீச்சல் குளத்தில் அம்பென பாய்ந்தான். ரதியின் வாய் தானே ‘வாவ்’ என்றது. சிறிது நேரம் அதில் நீந்தியவன், நீர் சொட்ட சொட்ட மேலே வந்தான். பின் அங்கிருந்த டவலை எடுத்துத் தனது உடலில் உள்ள நீரை துடைத்துக் கொண்டான்.
அவனது செய்கைகளை வீடியோ எடுத்தவாறு இருந்த ரதியின் மனதில் எவ்வாறு இவற்றை தொகுத்து போட வேண்டும், என்ன பாடலைச் சேர்க்கலாம் போன்ற எண்ணங்கள் ஒடிக் கொண்டிருந்தது. அவளது வாயும் தானே ஒரு பாடலை முணுமுணுத்தன.
சினேகிதனே..! சினேகிதனே..!
இரகசிய சினேகிதனே..!
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்
செவி கொடு சினேகிதனே..!
இதே அழுத்தம் அழுத்தம்..
இதே அணைப்பு அணைப்பு..
வாழ்வின் எல்லை வரை..
வேண்டும் வேண்டுமே..
என்றுப் பாடிக் கொண்டிருந்தவளின் கோரிக்கைகள் அவனது செவிக்கு எட்டியதோ.. சரியாக அவள் இருந்த பக்கம் தலையைத் துவட்டியவாறுத் திரும்பிப் பார்த்தான்.
திடுக்கிட்ட ரதி சட்டென்று மறைந்துக் கொண்டாள். செல்பேசியை கையில் வைத்துக் கொண்டு மார்பில் வைத்தவாறு தடக் தடக் என்றுத் துடிக்கும் இதயத்துடன் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
பின் மெல்ல எட்டிப் பார்த்தாள். இதற்கு மேலும் இங்கே இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்றுத் தோன்றவும், அங்கிருந்து மெதுவாக தவழ்ந்தவாறு கதவைத் திறந்துக் கொண்டுச் சென்றாள்.
--------------------
ஆரூவ் “அதே தான் ஷக்தி! சினிமாவில் நாங்க வாழ்வதும்.. பர்ஷனலா நாங்க இருப்பதும் ஒன்றில்லை. சினிமாவை அவங்க என்ன வேணுன்னா அனலைஸ் செய்யட்டும். புகழட்டும், இகழட்டும். சினிமாவை அவங்க கையில கொடுத்தாச்சு..! ஆனா என் பர்ஷனல் லைஃப்பை அவங்க கையில கொடுக்கல..! அதைத் தொட அவங்களுக்கு உரிமை கிடையாது. என்னோட பர்ஷனல் லைஃப்பை பற்றி அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சுருந்தா.. அப்பறம் எனக்குன்னு மிச்சம் இருப்பது என்ன ஷக்தி..” என்றுக் கேட்டவனின் குரலில் இருந்த துக்கம் ஷக்தியை வருத்தமுற செய்தது.
-------------
ஆசையாக நினைத்து ஏங்கியது.. இப்படி மனதை அழுத்தும் பாரமாக மாறுமா..? யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் இப்படி துரதிர்ஷ்டமாக மாறுமா..? இந்த வித்தை எவ்வாறு ஏற்பட்டது..? எனக்கு கிடைப்பது தண்டனையா? ஆராதனையா? என்றுத் தன்போக்கில் நினைத்தவாறு தனது கைவிரலை ஒவ்வொன்றாக சொடுக்கு எடுத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு வலிமையான கரம் வந்து அந்த வேலையைத் தனதாக்கிக் கொண்டன.
யார் என்றுத் தெரியும்.. இருந்தாலும் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். அவள் நிமிர்ந்துப் பார்ப்பது உணர்ந்தானோ.. தனது வேலையில் கவனமாக இருந்தவாறு “இப்படி இங்கே வந்து உட்கார்ந்துட்டா.. என் பர்ஷனலை எப்படித் தெரிந்துக் கொள்வதாம்?” என்றவனின் குரலில் ஏளனமும் நக்கலும் நன்றாக பரவியிருந்தது.
தொடர்ந்து “நான் என்ன பர்பிஃயும் யுஸ் செய்யறேன்னு தெரிஞ்சு அதை நீயும் யுஸ் செய்யறீயா..? உன்கிட்டவும் அதே ஸ்மேல் வருது..” என்றவன், பதில் வராது போகவும் நிமிர்ந்துப் பார்த்தான்.
அவள் உதட்டைக் கடித்தவாறு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். புருவம் சுருக்கி அவளைப் பார்த்தவனுக்கு விடைத் தெரிந்த விடவும், “ஓ..” என்று கண்களை மறைத்தாற் போன்று கரத்தை வைத்து தலையை குனிந்து சிரித்தவன், பின் அவளைப் பார்த்து “புரிந்தது..” என்று கண்ணடித்தான்.
பின் சுற்றிலும் பார்த்தவன், “என்னாச்சு ரதி! வளவளன்னு பேசுவே..! இப்போ பேசவே மாட்டேன்கிறே..! முதல்ல என்னைப் பார்த்தால் இந்த புருவங்கள் மேலே ஏறும், இந்த கண்கள் மலரும், இந்த உதடுகள் பிரிந்து உள்ளே இருக்கிற வெண்பற்கள் தெரியும், உடல் சில்லிட்டு இருக்கும். ஆனா இப்போ இந்த புருவங்கள் குழப்பத்தால் சுருங்கியிருக்கே..” என்றவாறு புருவத்தை நீவி விட்டான்.