All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீதும் நன்றும் பிறர் தர வாரா! - கதைத் திரி

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..

அடுத்த கதை என்ன என்று கேட்பவர்களுக்கு சின்ன அறிமுகம்.. கொடுக்க வந்திருக்கிறேன். ஆனா கதை இப்போ இல்லை பிரெண்ட்ஸ்... ரீரன் செய்ய கூட நேரமில்லாம படு பிஸியா இருக்கேன்.

காதல் கதையா கொடுத்து கொஞ்சம் போரடிக்குது பிரெண்ட்ஸ்.

அதனால அடுத்தது துரோகம், பகை, வஞ்சம், இரத்தம்.. நிறையா காதலுடன் மூன்று ஹீரோக்கள் கொண்ட கதையை கொடுக்க இருக்கிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ் இந்த கதையை தான் ஜுன் மாதம் 15க்கு மேல் தர இருக்கிறேன். இந்த டீசரில் பார்க்க போகிறவன்.. முதல் ஹீரோ முக்கியமான ஹீரோவும் கூட.. ஆனா எத்தனுக்கும் எத்தன் இருப்பாங்க தானே! அடுத்த இரு ஹீரோக்களும் அப்படிப்பட்டவங்க.. அவங்களை கதையின் போக்கில் காணலாம். இதில் காதலும் உண்டு. வன்முறையும் உண்டு. அதன் எல்லையும் எனக்கு தெரியும். எனவே நம்பி படிக்கலாம்.


அனைவரையும் இக்கதையுடன் சந்திக்கிறேன்.



தீதும் நன்றும் பிறர் தரா வாரா!



டீசர் 1



கண்களை மூடி நின்றிருந்தவனின் நெற்றியில் யாரோ தொடுவது போன்று இருக்கவும், முறுவலித்தபடி இமையைத் திறந்தான் வீரா என்னும் வீரேந்திரன்!


அவனது முன் அவனது பாட்டி லீலா அவனது நெற்றியில் குங்குமத்தை வைத்தவாறு நின்றிருந்தார். அன்று வீராவிற்கு பிறந்தநாள்! அவனது குடும்பம் முழுவதும் அவனைச் சுற்றி நின்றிருந்தனர்.


பெண்கள் மூக்கில் வைரமூக்குத்தி மின்ன.. முக்காடிட்டு முன்பக்கம் முந்தானையை இழுத்து சொருகியிருக்க.. ஆண்கள் பைஜமா அணிந்திருந்தார்கள். வடநாட்டில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த குடும்பம் அவர்களுடையது. வீரா பதினைந்து வருடங்களுக்கு முன்பே பிழைப்பை தேடி வந்தவன், அவன் நினைத்ததை விடவும் அதிகம் சாதித்து விட கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பே.. மற்றவர்களையும் வரவழைத்திருந்தான்.


அன்று அவனது பிறந்தநாள் விழாவில்.. அவனது வீடே விழா கோலம் கொண்டது. விதவிதமாக சமைத்து ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாடினார்கள்.


மாலை மணி பத்தை நெருங்கையில்.. அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு.. அவனது மர்ஷடி காரில் ஏறிக் கிளம்பினான்.


மாமல்லபுரச்சாலையில் அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றான். அங்கு இறங்கியதும் கண்களைக் கூசும் பல்வேறு வண்ண விளங்கின் வெளிச்சமும், காதை செவிடாக்கும் இசையும்.. பல்வேறு மதுபானங்களின் வாசனையும், கறி பிரியாணியின் நறுமணமும் அவனை வரவேற்றது. அவன் வர நேரமாகும் என்று ஒன்பது மணிக்கே விருந்தை தொடங்க கூறியிருந்தான். அதன்படி அங்கு அவனது முப்பதிநான்காவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் உச்சத்தை தொட்டியிருந்தது.


வீரா காலை எடுத்து வைத்ததும் பட்டாசுகளின் சத்தம் விண்ணைத் தொட்டது. அங்கு விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்ளத்தில் வீரா நடந்து வரவும் இருமருங்கிலும் கையில் பீர் பாட்டிலை வைத்துக் கொண்டு ஓரடி தள்ளி நின்றிருந்தனர். வீரன் வந்ததும் நன்றாக குலுக்கி.. மூடியை திறக்கவும், அது பொங்கியது. அடுத்து அவன் முன் கையில் கத்தியுடன் இருபது பேர் வந்து குத்து பாடலுக்கு ஒன்று நடனமாடியவாறு.. கேக் வைக்கப்பட்டிருந்த மேடைக்கு அழைத்து சென்றார்கள்.


அவன் வருகைக்காக காத்திருந்த.. பல்வேறு பிரபலங்களை சிறிதும் கூடக் கண்டுக்கொள்ளாது மேடைக்கு சென்றான். அங்கு ஏழு அடுக்கு கொண்ட கேக் அவனுக்காக காத்திருந்தது. “பாஸ்” “பாஸ்” என்ற உற்சாகக் குரல் கொடுத்தவர்களை நோக்கி கையசைத்துவிட்டு.. அருகில் பார்த்தான். அவனது வலகரம் என்று அழைக்கப்படும் மகேஷ் அவனது கையில் நீண்ட கத்தியை கொடுத்தான்.


உடனே “பாஸ்! ஒரே வெட்டு..” என்றுக் கத்தினார்கள்.


அதை அவனுக்கு சொல்ல வேண்டியதில்லை. எனவே கைச்சட்டையை முறுவலுடன் மடக்கியவன், ஒரே வெட்டில் அந்த ஏழு அடுக்கு கேக்கை இரண்டாக பிளந்தது. உடனே சுற்றி நின்றிருந்த நான்கு பேர்.. வானை பார்த்து கைத்துப்பாக்கியால் சுட்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.


பின் அங்கிருந்த பிரபலங்களிடம் வந்தான். அவர்கள் தங்களது வாழ்த்தை நீ முந்தி நான் முந்தி என்று முந்திக் கொண்டு கூறி தங்களது இருப்பைத் தெரிவித்து அவனின் கவனத்தைக் கவர முயன்றார்கள். அனைவரிடமும் சிறு மதர்ப்புடன் தலையசைத்து வாழ்த்தை ஏற்றுக் கொண்டான்.


அங்கு நின்றிருந்த கமிஷனரை பார்த்து புன்னகைத்த வீரா பின் அழுத்தமான பார்வையுடன் கடந்து சென்றான். அந்த அழுத்தமான பார்வைக்கு.. இங்கு நடந்ததை அவர் வெளியே தெரிந்தாற் போன்று காட்டிக் கொள்ள கூடாது என்று அர்த்தம்!


பின் அங்கு மேலும் கொண்டாட்டம் அளவு கடந்து விடிய விடிய நடந்தது.


அடுத்த நாள் வீரா மகேஷிடம் “பங்ஷனை கலக்கிட்டே மகி!” என்றான்.


அதற்கு மகேஷ் “உங்களுக்கு பர்த்டே என்றதும் எல்லாரும் பணத்தை வாரி கொடுத்துட்டாங்க பாஸ்! ஆனா அந்த ஆக்டர் ஷ்யாம் தான்!” என்று இழுத்தான்.


அதற்கு வீரா “போன முறை வார்ன் செய்தும்.. அவன் கிட்ட இருந்து ஒண்ணும் வரலை தானே!” என்றுக் கேட்டான்.


அதற்கு மகேஷ் “ஆமா பாஸ்! சும்மா ரௌடி மிரட்டல் என்று நினைச்சுட்டான். இந்த வயசுலேயேயும்.. தொடர்ந்து நாலு ஹிட் கொடுத்த திமிர் அவனுக்கு! அவனுக்கு சரியான பாடம் கற்பிக்கணும் பாஸ்..” என்றான்.


வீராவின் முகத்தில் கோபப் புன்னகை மலர்ந்தது. அதற்கு அர்த்தம் அவனைச் சுற்றியிருப்பவர்களுக்கு தெரியும். எனவே அவர்கள் கண்கள் பளபளக்க வீராவின் கட்டளைக்காக காத்திருந்தார்கள்.


வீரா இரு கரங்களையும் கோர்த்தவாறு முன்னிருந்த மேசையில் கரங்களை ஊன்றி.. “அந்த ஆக்டருக்கு பதினெட்டு வயசுல ஒரு பையன் இருக்கான் தானே! அவனை போதை வழக்கில் மாட்ட வச்சுருங்க! எப்படி என்று நான் சொல்றேன். அப்பறம் அந்த ஷ்யாம்.. அவனோட பையனை விடுவிக்க நம்ம கிட்ட தான் வந்தாகணும். நாம் கேட்டதைத் தந்து தான் ஆகணும்.” என்று உதட்டை வளைத்து சிரித்தான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்.. எல்லாரும் எப்படியிருக்கீங்க..


அனைவருக்கும்.. "சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே!" கதை நினைவிருக்கா..


ஆரூவ்பிரசாத் மற்றும் ரதிமாலாவை மறந்திருக்க மாட்டிங்க என்று நினைக்கிறேன்.


தற்பொழுது இக்கதையை அமேசானில் பதிவேற்றம் செய்துள்ளேன். சப்ஸ்க்ரைப் செய்தவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து படிக்கலாம். தங்களது கருத்துக்களையும் மறக்காமல் தெரிவியுங்கள் நன்றி..



சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே! (Tamil Edition) சின்னஞ்சிறு இரகசியமே! சின்னஞ்சிறு அதிசயமே! (Tamil Edition) eBook : அன்பு, ராஜி: Amazon.in: Kindle Store



Check this out! Amazon.com


இந்த கதையில் இருந்து சில பகுதிகள்.. உங்களுக்காக..



கர்வம் கொண்ட நடிகனுக்கும்.. அவன் மேல் அதீத அன்பு கொண்ட இரசிகைக்கும் இடையேளான காதல் கதை!


---------------------

ஷவரில் நின்று வியர்வையை கழுவியவன், அடுத்து இருந்த நீச்சல் குளத்தில் அம்பென பாய்ந்தான். ரதியின் வாய் தானே ‘வாவ்’ என்றது. சிறிது நேரம் அதில் நீந்தியவன், நீர் சொட்ட சொட்ட மேலே வந்தான். பின் அங்கிருந்த டவலை எடுத்துத் தனது உடலில் உள்ள நீரை துடைத்துக் கொண்டான்.


அவனது செய்கைகளை வீடியோ எடுத்தவாறு இருந்த ரதியின் மனதில் எவ்வாறு இவற்றை தொகுத்து போட வேண்டும், என்ன பாடலைச் சேர்க்கலாம் போன்ற எண்ணங்கள் ஒடிக் கொண்டிருந்தது. அவளது வாயும் தானே ஒரு பாடலை முணுமுணுத்தன.


சினேகிதனே..! சினேகிதனே..!


இரகசிய சினேகிதனே..!


சின்ன சின்னதாய் கோரிக்கைகள்


செவி கொடு சினேகிதனே..!


இதே அழுத்தம் அழுத்தம்..


இதே அணைப்பு அணைப்பு..


வாழ்வின் எல்லை வரை..


வேண்டும் வேண்டுமே..


என்றுப் பாடிக் கொண்டிருந்தவளின் கோரிக்கைகள் அவனது செவிக்கு எட்டியதோ.. சரியாக அவள் இருந்த பக்கம் தலையைத் துவட்டியவாறுத் திரும்பிப் பார்த்தான்.


திடுக்கிட்ட ரதி சட்டென்று மறைந்துக் கொண்டாள். செல்பேசியை கையில் வைத்துக் கொண்டு மார்பில் வைத்தவாறு தடக் தடக் என்றுத் துடிக்கும் இதயத்துடன் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.


பின் மெல்ல எட்டிப் பார்த்தாள். இதற்கு மேலும் இங்கே இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்றுத் தோன்றவும், அங்கிருந்து மெதுவாக தவழ்ந்தவாறு கதவைத் திறந்துக் கொண்டுச் சென்றாள்.



--------------------


ஆரூவ் “அதே தான் ஷக்தி! சினிமாவில் நாங்க வாழ்வதும்.. பர்ஷனலா நாங்க இருப்பதும் ஒன்றில்லை. சினிமாவை அவங்க என்ன வேணுன்னா அனலைஸ் செய்யட்டும். புகழட்டும், இகழட்டும். சினிமாவை அவங்க கையில கொடுத்தாச்சு..! ஆனா என் பர்ஷனல் லைஃப்பை அவங்க கையில கொடுக்கல..! அதைத் தொட அவங்களுக்கு உரிமை கிடையாது. என்னோட பர்ஷனல் லைஃப்பை பற்றி அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சுருந்தா.. அப்பறம் எனக்குன்னு மிச்சம் இருப்பது என்ன ஷக்தி..” என்றுக் கேட்டவனின் குரலில் இருந்த துக்கம் ஷக்தியை வருத்தமுற செய்தது.


-------------

ஆசையாக நினைத்து ஏங்கியது.. இப்படி மனதை அழுத்தும் பாரமாக மாறுமா..? யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் இப்படி துரதிர்ஷ்டமாக மாறுமா..? இந்த வித்தை எவ்வாறு ஏற்பட்டது..? எனக்கு கிடைப்பது தண்டனையா? ஆராதனையா? என்றுத் தன்போக்கில் நினைத்தவாறு தனது கைவிரலை ஒவ்வொன்றாக சொடுக்கு எடுத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு வலிமையான கரம் வந்து அந்த வேலையைத் தனதாக்கிக் கொண்டன.


யார் என்றுத் தெரியும்.. இருந்தாலும் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். அவள் நிமிர்ந்துப் பார்ப்பது உணர்ந்தானோ.. தனது வேலையில் கவனமாக இருந்தவாறு “இப்படி இங்கே வந்து உட்கார்ந்துட்டா.. என் பர்ஷனலை எப்படித் தெரிந்துக் கொள்வதாம்?” என்றவனின் குரலில் ஏளனமும் நக்கலும் நன்றாக பரவியிருந்தது.


தொடர்ந்து “நான் என்ன பர்பிஃயும் யுஸ் செய்யறேன்னு தெரிஞ்சு அதை நீயும் யுஸ் செய்யறீயா..? உன்கிட்டவும் அதே ஸ்மேல் வருது..” என்றவன், பதில் வராது போகவும் நிமிர்ந்துப் பார்த்தான்.




அவள் உதட்டைக் கடித்தவாறு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். புருவம் சுருக்கி அவளைப் பார்த்தவனுக்கு விடைத் தெரிந்த விடவும், “ஓ..” என்று கண்களை மறைத்தாற் போன்று கரத்தை வைத்து தலையை குனிந்து சிரித்தவன், பின் அவளைப் பார்த்து “புரிந்தது..” என்று கண்ணடித்தான்.


பின் சுற்றிலும் பார்த்தவன், “என்னாச்சு ரதி! வளவளன்னு பேசுவே..! இப்போ பேசவே மாட்டேன்கிறே..! முதல்ல என்னைப் பார்த்தால் இந்த புருவங்கள் மேலே ஏறும், இந்த கண்கள் மலரும், இந்த உதடுகள் பிரிந்து உள்ளே இருக்கிற வெண்பற்கள் தெரியும், உடல் சில்லிட்டு இருக்கும். ஆனா இப்போ இந்த புருவங்கள் குழப்பத்தால் சுருங்கியிருக்கே..” என்றவாறு புருவத்தை நீவி விட்டான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்... எல்லாரும் எப்படியிருக்கீங்க.. கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலே ஆச்சு டைப் செய்து.. இன்னைக்கு தான் ஆரம்பிச்சுருக்கேன்.

மறக்காம வியாழக்கிழமை அட்டனன்ஸ் போட்டுருங்க..

தீதும் நன்றும் பிறர் தர வாரா

இது வழக்கமான கதைக்களமாக இருக்காது.

ஆக்ஷன், இரத்தம், சட்டவிரோதமான செயல்கள் என்று சற்று வன்முறையுடன் தான் இருக்கும். காதலும் அப்படியே துரோகமும், வஞ்சமும், காதல் காட்சியுமாக தான் இருக்கும்.

உதாரணமாக சொல்லணும் என்றால் எனது "கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ!" மாதிரியான கதை

நிச்சயம் விறுவிறுப்பாக இருப்பதற்கு நான் கேரண்டி..

இம்மாதிரி கதைகளை படிக்க விருப்பம் இல்லாதவர்கள் தவிர்ப்பது நலம்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்.. தீதும் நன்றும் பிறர் தர வாரா! பின் முதல் யுடி தருகிறேன். இந்த முதல் யுடியில் அறிமுகம் மட்டுமே கொடுத்திருப்பேன். இந்த கதை எவ்வாறு பயணிக்க போகிறது என்ற க்ளுவும் இருக்கு... படித்தவர்கள்.. ஆரம்பம் எப்படியிருக்கு என்றுச் சொல்லுங்க...

இந்த கதையின் யுடி வியாழன் மற்றும் திங்கள் கிழமைகளில் வரும் நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா!



அத்தியாயம் 1




வடசென்னை! சென்னை மாநகரத்தின் முக்கியமான பகுதி! அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பகுதி! அங்கு சாமுண்டி காலனி என்று விசாரித்தாலே.. விசாரித்தவரிடம் ஏன் எதாவது சட்டத்திற்கு விரோதமான காரியம் நடக்க வேண்டுமா என்று வெளிப்படையாகவே கேட்பதும் உண்டு.


ஆம்! இந்த சென்னை மாநகரத்தின் நிழல் உலகத்தை ஆட்டிவிக்கும் வீரேந்திரன் என்னும் வீரா அங்கு தான் தனது குடும்பம் மற்றும் சகாக்களுடன் வசிக்கிறான். அங்கு தனக்கு என்று தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியிருக்கிறான். அந்த சாமுண்டி காலனி பார்ப்பதற்கு சாதாரண குடிசைப்பகுதி போன்று இருந்தாலும்.. அங்கு தினமும் கோடிக்கணக்கில் கருப்பு பணங்கள் புரளுகின்றன.


ட்ரவல் ஏஜென்ஸி என்ற பெயரில் ஆட்கடத்தல், நகர்வல ரோந்து போன்றவை நடைப்பெறும். அதுமட்டுமில்லாது பைனான்ஸ் என்ற பெயரில் கந்துவட்டியும் நடைப்பெறுவது உண்டு. கம்யுட்டர் சென்டரும் உண்டு. ஆனால் அங்கு சட்டவிரோதமாக அரசியல் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் முக்கியமான அழைப்புகள் வேவும் பார்க்கப்படுகிறது. பல முக்கியமான புள்ளிகளின் செல்பேசிகள் ஹெக்கும் அங்கு செய்யப்படுகின்றன. உடற்பயிற்சி நிலையம், ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற பெயரில் அங்கு ரௌடிகளுக்கு சண்டைப் பயிற்சி அளிக்கப்படும். அங்கு சில சமயம் ஒருவர் மீது பந்தயம் கட்டி.. சண்டையும் நடைப்பெறும்.


இவ்வாறு வெளியுலகிற்கு வேறு ஒன்றைக் காட்டி.. சட்டவிரோதமான காரியங்கள் நடைப்பெறுகின்றன. காவல்துறையே வீராவின் கைக்குள் இருந்தாலும் திடீரென முளைக்கு கண்ணியம் மிக்க காவல் அதிகாரி மோப்பம் பிடித்து.. அங்கு வந்தாலும்.. அங்கு சட்டவிரோதமான காரியங்கள் தான் நடைப்பெறுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் இருக்காது. ஏமாற்றத்துடன் திரும்பி சென்றவர்.. அடுத்த நாளே வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவார்.


அதே போல்.. தமிழ்நாடு மற்றும் மத்தியில் ஆட்சி செய்யும் அரசியல்கட்சிகளும் வீராவின் பிடியில் தான் இருக்கின்றன. போன முறை இருந்த ஆட்சியில் இருந்த கட்சி.. வீராவிற்கு பல கெடுபிடிகள் கொடுத்து.. அவன் சட்டவிரோதமாக காரியங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்றால்.. அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை ஒவ்வொரு முறையும் இலஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று நிர்பத்தித்தது.


அடக்கப்பட்ட கோபத்துடன் இருந்த வீரா சரியான நேரத்திற்காக காத்திருந்தான். நேரமும், சமயமும் கிடைக்கவும், எதிர் கட்சியினரை பணம் கொடுத்து வாங்கினான். ஆட்கட்சி ஆட்களையும் பணம் கொடுத்து தன் பக்கம் இழுத்தான். தன்னுடன் இணையாதவர்களின் இன்னொரு கருப்பு பக்கத்தை அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்து.. மக்களிடம் அம்பலமாக்கினான். ஆட்கட்சி அரசியல்வாதிகளின் சூறையாடலை பற்றி.. அமலாக்க துறையினருக்கு துப்பு கொடுத்து.. அவர்களின் குற்றத்தை வெட்ட வெளிச்சமாக்கினான். அதனால் ஆட்கட்சி தங்களது செல்வாக்கை மக்களிடம் சிறிது சிறிதாக இழந்தது. அவ்வேளையில் தேர்தல் வரவும்.. அங்கும் வீராவின் அதிகாரம் விளையாடியது. மக்களுக்கு பணம் கொடுத்து.. ஆட்கட்சிக்கு எதிராக வாக்களிக்க வைத்து.. ஆட்சியை கவிழ்த்தான். எதிர் கட்சி ஆளும் கட்சியாக பதவியேற்றது. வீராவின் உதவியின்றி அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது என்பதால்.. அவர்களது பிடி.. வீராவின் கையில் தான் இருந்தது. வீராவிற்கு மத்தியில் வரை ஆட்கள் இருந்தன. தற்பொழுது.. அவர்களது ஆட்சி நிலைத்து நிற்க வேண்டுமென்றால்.. வீராவிற்கு ஒரு தொகையை இலஞ்சமாக கொடுத்துக் கொண்டிருக்கிறது.


இவ்வாறு தற்போதைய சமூகத்தில் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்த வீராவிற்கு இந்த இடத்திற்கு வர.. எட்டு வருடங்கள் பிடித்தன.


நிழல் உலகின் டான் என்று நினைத்ததும்.. குக் வித் கோமாளியில் வரும் காளையினை போல் இருப்பான் என்று நீங்கள் நினைத்தால்.. மிக்க தவறு!


வீரேந்தர்.. பார்ப்பதற்கு பின்னிருபதுகளில் இருக்கும் இளைஞனை போல் இருக்கும் முப்பத்தி நான்கு வயது கொண்ட பிரம்மசாரி! பார்ப்பதற்கு பாலிவுட் நடிகன் போல் இருப்பான் என்றுக் கூறியதும் நீங்கள் முறைப்பதும் தவறு. ஏனெனில் வீரேந்தர் பிழைப்பிற்காக மும்பையில் இருந்து பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்த வட நாட்டை சேர்ந்தவன்!


சென்னை துறைமுகத்தில் வேலைக்கு வந்த போது தான் வீரேந்தருக்கு.. கடத்தல் தொழில் புரியும் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது. அங்கு சட்டவிரோதமாக கடத்தல் தொழில் நடப்பதைப் பார்த்தவன், அந்த ரௌடிகளின் மிரட்டலால்.. கண்டுக் கொள்ளாமல் இருந்தான். அந்த நேரத்தில் ஒருமுறை துறைமுகத்தில் நடைப்பெற்ற சோதனையின் போது.. கடத்தல் பொருளைப் பதுக்கி வைத்து, பணி காவலர்களிடம் இருந்து அந்த சரக்கை காப்பாற்றினான். பின் அந்த கடத்தல் கும்பலிடமே பேரம் பேசி.. அவற்றை அவர்களிடமே விற்றான். அன்றிரவே அவனைக் கொல்ல வந்த ரௌடிகளை அடித்து வீழ்த்தினான். அவனது தைரியத்தையும் வீரத்தையும் கண்டு வியந்த அந்த கடத்தில் கும்பலின் தலைவன்.. வீரேந்தரை வரவழைத்து தன்னுடன் வைத்துக் கொண்டான். இவ்வாறு அவர்களுடன் சேர்ந்துக் கொண்ட வீரா.. அதன் பின் வாழ்க்கை திரும்பிப் பார்க்கவில்லை. அரசாங்கத்தையும்.. காவல் துறையையும் பதட்டமடைய வைக்கும் இந்த நிழல் உலகின் மீது போதை ஏற்ப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து அவர்களைக் கூறுவதைச் செய்தான்.


நாட்போக்கில்.. தன்னைப் பார்த்தாலே பயப்படுவதைப் பார்த்தவனுக்கு அதிகார போதையும் சேர்ந்துக் கொள்ள.. அப்போதைக்கு அந்த கும்பலுக்கு தலைமை வகிக்கும்.. காளிக்கு எதிராக ஆட்களை சேர்த்தான். மற்றொரு கும்பலிடமும்.. முழு அதிகாரத்தையும் தருவதாக கூறி.. ஆட்கள் பலத்தைக் கூட்டினான். சரியான நேரத்திற்காக காத்திருந்தவன், காளியிடம் விருந்து என்று அவனுக்கு சொந்தமான தோப்பிற்கு அழைத்துச் சென்று.. எதிர் கும்பலின் உதவியுடன் அவனையும்.. அவனுடன் இருந்த நான்கு அடியாட்களையும் கொன்றான். காவல் துறையிடம் சென்று.. அவர்கள் வளைத்து பிடித்துக் கொன்றதைப் போல் காட்டிக் கொள்ள சொல்லி.. அப்போதிருந்த கமிஷனரின் அபிமானத்தை பெற்றான். அவரும்.. விருது மற்றும் பேருக்காக தாங்கள் வளைத்து பிடித்து.. கொன்றதாக செய்தி வெளியிட்டு பெருமையடித்துக் கொண்டார்கள். ஆனால் அந்த விசயத்தை வைத்தே.. கிடுக்குப் பிடி போட்டு அந்த கமிஷனரை தனது கைவளைக்குள் வைத்துக் கொண்டான். அதைக் கண்டு வியந்த எதிர் கடத்தல் கும்பல் வீரேந்தரின் வசம் வந்தது. அவனது வசம் வராத அடியாட்கள் கொண்ட கும்பல்கள்.. வீரேந்தரின் தாக்குதலுக்கு ஆளானார்கள். அந்த ரௌடிகளின் குடும்பத்திற்கு நெருக்கடி கொடுத்தான். அதைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த ரௌடிகள் முடிவில்.. அவனது கும்பலுடன் இணைந்தார்கள்.


இவ்வாறு சென்னையில் ஆங்காங்கு வீராவிற்கு ஆட்கள் உண்டு. இந்த எட்டு வருடங்களாக இந்த சென்னையின் நிழல் உலகை ஆட்டி வைத்தான். அவனது குடும்ப உறுப்பினர்களையும் சென்னைக்கு வரவழைத்தான்.


பல துரோகங்கள்.. கொலைகள்.. வஞ்சங்களை செய்து இந்த இடத்திற்கு வந்த வீராவிற்கு எந்நேரமும் அது தனக்கும் நடக்கும் என்றுத் தெரியும்.. எனவே மிகுந்த கவனத்துடன் இருந்தான். மிகவும் நம்பிக்கையானவர்களையே தன்னுடன் வைத்துக் கொண்டான். அவர்களும் அவனுக்கு துரோகம் செய்யாமல் இருக்க.. அவர்களின் பலவீனத்தை கிடுக்கு பிடியாக வைத்திருந்தான். மற்றவர்களை வேலை செய்ய மட்டும் பயன்படுத்திக் கொண்டான். அவனுக்கு துரோகம் செய்ய முயன்றவர்களை இரக்கமின்றி உயிரை எடுத்திருக்கிறான்.


தனக்கு கீழ் வேலை செய்யும் அனைவருக்கும் வேண்டியதைச் செய்துக் கொடுத்தான். அவர்களது பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்றுக் கொண்டான். சிலருக்கு ஆசைப்பட்ட பெண்களுடன் திருமணம் செய்து வைத்திருக்கிறான். ஏதேனும் மருத்துவ உதவி தேவைப்பட்டால்.. அதன் முழு செலவையும் ஏற்றுக் கொள்வான். இவ்வாறு பல உதவிகள் செய்து.. அவர்களுக்கு இன்னொரு கடவுள் போல் இருந்தான். அவர்களின் விசுவாசத்தை சம்பாதித்துக் கொள்ள இது ஒரு யுத்தி என்று வீராவிற்கு மட்டுமே தெரியும்.


இத்தனை குயுத்திகளை கொண்ட வீரா இதுவரை மது மற்றும் மாதுவை தொட்டதே இல்லை. அதனால் அவனால் எங்கும் சுயபுத்தியை இழக்காமல் சுயமாக முடிவு எடுக்க முடிகிறது. அவனை இவ்விசயத்திலும் வளைக்க முடியாது.. எதிரிகள் பலர் தோல்வியுற்றுக்கிறார்கள்.


என்னேரமும் கவனத்துடன் இருக்கும் இந்த நிலை தேவையா என்று சில சமயம் அவனது அன்னை அலுத்துக் கொள்வார். அதற்கு வீரா சிறுச் சிரிப்புடன் சென்று விடுவான்.


அவனைப் பொறுத்தவரை.. இந்த பரபரப்பான வாழ்வு தான் அவனை என்னேரமும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது என்று நம்பினான். இந்த உலகிற்கு அவன் ராஜா.. அரியணையில் அமர்வது என்பது எளிதான விசயம் அல்ல! அதுதான் அவனுக்கு நடக்கிறது என்று நம்பினான்.


அவன் அசந்த நேரம் வீழ்த்த காத்திருக்கும் எதிரிகளும்.. எந்த புற்றில் பாம்பு இருக்கிறது என்றுத் தெரியாது அவனது உயிரை எடுக்க காத்திருக்கும்.. துரோகிகளும் சூழ்ந்த உலகில் அவன் ஆட்சி செய்கிறான். அவனிடம் விசுவாசிகளாக இருப்பவர்களை ஆட்டி வைப்பதை விட.. அவனது எதிரிகளையும் துரோகிகளையும் ஆட்டி வைக்க அவன் விரும்பினான். அவனைப் பொறுத்தவரை கேங்கஸ்டர் பரேடைஸ் இது!


ஆனால் எத்தனுக்கும் எத்தன் இருப்பான்!


அவனையும் வீழ்த்த எந்த ரூபத்தில் வேண்டுமென்றாலும் வரலாம்!


அன்று வீராவின் முப்பத்தி நான்காவது பிறந்தநாள்! அந்த சாமுண்டி காலனியே விழா கோலம் கொண்டது. கண்களை மூடி நின்றிருந்தவனின் நெற்றியில் யாரோ தொடுவது போன்று இருக்கவும், முறுவலித்தபடி இமையைத் திறந்தான் வீரா என்னும் வீரேந்திரன்!


அவனது முன் அவனது பாட்டி லீலா அவனது நெற்றியில் குங்குமத்தை வைத்தவாறு நின்றிருந்தார். அவனது குடும்பம் முழுவதும் அவனைச் சுற்றி நின்றிருந்தனர்.


பெண்கள் மூக்கில் வைரமூக்குத்தி மின்ன.. முக்காடிட்டு முன்பக்கம் முந்தானையை இழுத்து சொருகியிருக்க.. ஆண்கள் கழுத்தில் தங்க சங்கலி மின்ன.. குர்த்தா பைஜமா அணிந்திருந்தார்கள். சிறுவர் சிறுமிகள் கைத்தட்டி தங்களது வாழ்த்தை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.


அவனது நெற்றியில் குங்குமம் இட்டுவிட்டு பெருமூச்சு விட்ட லீலா ஹிந்தி கலந்த தமிழில் “பிச்சுலே சால் (போன வருடம்) இதே நாள்.. உனக்கு சாதி (திருமணம்) நடக்கணும். சிந்துர் (குங்குமம்) வைச்சேன்.” என்றார்.


வீரா சிரித்தவாறு “அப்படின்னா! இந்த வருஷமும் எனக்கு கல்யாணம் நடக்க போறதில்லையா..” என்கவும், அவனது பாட்டி முந்தானையை எடுத்து வாயில் வைத்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார். அது மட்டும் முழுவதும் ஹிந்தியில் வந்தது.


வழக்கம் போல்.. இந்த குடும்பத்திற்காக மட்டுமில்லாம அவன் கிட்ட வேலை செய்யும் அனைவரின் குடும்பமும் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைக்கும் வீரா மட்டும்.. தனக்கு என்று குடும்பம் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது அந்த ஆண்டவனுக்கே தாக்காது.. என்ற ரீதியில் ஒப்பாரி வைத்தார். வீரா தான் இந்த நல்ல நாளில்.. அழாமல் தன்னை வாழ்த்துமாறுக் கூறி.. அவரைக் கட்டுப்படுத்தினான். பின் வீரா அவரது காலில் விழுந்து எழுந்த வணங்கிய பொழுது அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் “பாட்டி உனக்கு நான் நல்லாயிருக்கணுமா? இல்லை… கல்யாணம் செய்யணுமா?” என்றுப் புருவத்தை உயர்த்தி கேட்டு கண்ணடித்துவிட்டு சென்றான். அதில் இருந்த அர்த்தம் புரியாது லீலா திகைத்து நின்றார்.


அதன்பின் அவனது பிறந்தநாள் விழாவில்.. அவனது வீடே விழா கோலம் கொண்டது. விதவிதமாக சமைத்து உண்டார்கள். பின் ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாடினார்கள். அன்று முழுவதும் வீரா எங்கும் செல்லாமல் அவனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவளித்தான்.


மணி பத்தை நெருங்கையில்.. அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டு.. அவனது மர்ஷடி காரில் ஏறிக் கிளம்பினான். அவனுடன் காரில் ஏறிய அவனது வலகரம் என்றழைக்கப்படும் மகேஷ் “பாஸ்! இத்த சொல்லாம இருக்க முடியலை. நீ தினமும் பர்த்டே கொண்டாடு பாஸ்! அவங்க கூட நாள் முழுக்க இருந்ததில உன் பேமலி ஆளுங்க முகத்துல அத்தினி சந்தோஷம்..” என்றான்.


அதற்கு வீரா “நான் பொறந்ததை அவங்க கொண்டாடணும். ஏன்னா எப்போ வரை நான் உயிருடன் இருப்பேன் எனக்கு தெரியாதில்ல..” என்றான்.


அதைக் கேட்ட மகேஷிற்கு கோபம் துளிர்த்தது.


“என்னா பாஸ்! இப்படிச் சொல்லிட்டிங்க! நாங்க இருக்கிற வரை.. எவனும் உங்க ம– கூட தொட முடியாது.” என்றான்.


அதைக் கேட்டு சிரித்தவாறு நேராக பார்த்த வீரா “நான் செய்யற தொழில் அப்படி வீரா! அதனால தான் இந்த எட்டு வருஷமா பொறந்த நாளை கொண்டாடிட்டு இருக்கேன்.” என்றான்.


பின் மாமல்லபுறச் சாலையில் அந்த மர்ஷடி கார் சீரா வேகத்துடன் சென்றது. அரை மணி நேரத்தில் அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றான். அங்கு இறங்கியதும் கண்களைக் கூசும் பல்வேறு வண்ண விளங்கின் வெளிச்சமும், காதை செவிடாக்கும் இசையும்.. பல்வேறு மதுபானங்களின் வாசனையும், கறி பிரியாணியின் நறுமணமும் அவனை வரவேற்றான். அவன் வர நேரமாகும் என்று ஒன்பது மணிக்கே விருந்தை தொடங்க கூறியிருந்தான். அதன்படி அங்கு அவனது முப்பதி நான்காவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் உச்சத்தை தொட்டியிருந்தன.


வீரா காலை எடுத்து வைத்ததும் பட்டாசுகளின் சத்தம் விண்ணைத் தொட்டன. அங்கு விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்ளத்தில் வீரா நடந்து வரவும் இருமருங்கிலும் கையில் பீர் பாட்டிலை வைத்துக் கொண்டு ஓரடி தள்ளி நின்றிருந்தனர். வீரன் வந்ததும் நன்றாக குலுக்கி.. மூடியை திறக்கவும், அது பொங்கியது. அடுத்து அவன் முன் கையில் கத்தியுடன் இருபது பேர் வந்து குத்து பாடலுக்கு ஒன்று நடனமாடியவாறு.. கேக் வைக்கப்பட்டிருந்த மேடைக்கு அழைத்து சென்றார்கள்.


அவன் வருகைக்காக காத்திருந்த.. பல்வேறு பிரபலங்களை சிறிதும் கூடக் கண்டுக்கொள்ளாது மேடைக்கு சென்றான். அங்கு ஏழு அடுக்கு கொண்ட கேக் அவனுக்காக காத்திருந்தது. “பாஸ்” “பாஸ்” என்ற உற்சாகக் குரல் கொடுத்தவர்களை நோக்கி கையசைத்துவிட்டு.. அருகில் பார்த்தான். மகேஷ் அவனது கையில் நீண்ட கத்தியை கொடுத்தான்.


உடனே “பாஸ்! ஒரே வெட்டு..” என்றுக் கத்தினார்கள்.


அதை அவனுக்கு சொல்ல வேண்டியதில்லை. எனவே கைச்சட்டையை முறுவலுடன் மடக்கியவன், மேலிருந்து கீழாக ஒரே வெட்டில் அந்த ஏழு அடுக்கு கேக்கை இரண்டாக பிளந்தது. உடனே சுற்றி நின்றிருந்த நான்கு பேர்.. வானை பார்த்து கைத்துப்பாக்கியால் சுட்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.


பின் அங்கிருந்த பிரபலங்களிடம் வந்தான். அவர்கள் தங்களது வாழ்த்தை நீ முந்தி நான் முந்தி என்று முந்திக் கொண்டு கூறி தங்களது இருப்பைத் தெரிவித்து அவனின் கவனத்தைக் கவர முயன்றார்கள். அனைவரிடமும் சிறு மதர்ப்புடன் தலையசைத்து வாழ்த்தை ஏற்றுக் கொண்டான்.


அங்கு நின்றிருந்த கமிஷனரை பார்த்து புன்னகைத்த வீரா பின் அழுத்தமான பார்வையுடன் கடந்து சென்றான். அந்த அழுத்தமான பார்வைக்கு.. இங்கு நடந்ததை அவர் வெளியே தெரிந்தாற் போன்று காட்டிக் கொள்ள கூடாது என்று அர்த்தம்!


பின் அங்கு மேலும் கொண்டாட்டம் அளவு கடந்து விடிய விடிய நடந்தது. நேரம் இரண்டை தொட்டுக் கொண்டிருக்கையில் வீராவின் மற்றொரு நம்பிக்கையுரியவன் ஆனா பிரபாகர் “பாஸ்! இன்னைக்கி நீ ரொம்ப சந்தோஷமா இருக்கணும் பாஸு! பொண்ணு இல்லாம ஒரு மனுஷனோட சந்தோஷம் முடியாது பாஸு! பிரஷ் பீஸ் உங்களுக்காக காத்திட்டு இருக்கு! வேண்டானு சொல்லாதீங்க பாஸு! நான் ரொம்ப நாளா கண்ணு வச்சுட்டு இருந்த ஆளு! ஆனா இன்னைக்கு உங்களுக்காக கூட்டிட்டு வந்திருக்கேன்.” முகம் முழுவதும் பல்லாக கூறினான்.


அவனது முகத்தில் கையை வைத்த வீரா “பீரு போ! போய் உன் வேலையைப் பாரு..” என்றுத் தள்ளிவிட்டான். அவனது பிரபாகர் என்ற பெயரை அப்படித்தான் சுருக்கி அழைப்பான்.


ஆனால் பிரபாகர் “என்னோட பர்த்டே பரிசை வேண்டானு சொல்றீயே பாஸு..” என்றுச் சிணுங்கியவன், முழு போதையில் இருந்தான்.


வீரா “நீ ஆசைப்பட்ட பொண்ணு தானே! என்னோட பர்த்டேக்கு நான் உனக்கு வைக்குற ட்ரீட்டா வச்சுக்கோ! போ.. என்சாய் செய்..” என்று அவனது முதுகில் கையை வைத்துத் தள்ளிவிட்டான்.


பிரபாகர் “இல்ல பாஸு! நீ வந்து தான் ஆகணும். முதல்ல முரண்டு செய்தா.. உன்கிட்ட தான் கூட்டிட்டு போறேனு பச்சா காட்டுறதுக்காக சொன்னேன். அப்பறம் கம்முன்னு குந்திக்கினு வந்திருச்சு. அந்த பொண்ணை இன்னைக்கு நீ ஒரு வழி செய்துட்டா.. நம்மளோட ஒரு பிரச்சினையையும் முடிச்சு வச்ச மாதிரி ஆகிரும்.” என்று இளித்தான்.


அவனை யோசனையுடன் பார்த்த மகேஷிடம் தலையசைத்துவிட்டு வீரா பிரபாகரிடம் “எங்கே அந்த பொண்ணு?” என்றுக் கேட்கவும் அவனை அழைத்துக் கொண்டு சென்றான்.


அங்கிருந்த விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சென்றவன், மாடியில் இருந்த அறையிடம் சென்று “குஜலாவா இருங்க பாஸு..” என்று சல்யுட் வைத்துவிட்டு சென்றான்.


கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்ற வீராவிற்கு யார் அந்த பெண் என்றுப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஏனெனில் அவனுக்கு ஒரு கணிப்பு உண்டு. அதை உறுதிப்படுத்திக் கொள்ள சென்றான். அவன் உள்ளே நுழைந்ததும்.. கதவிற்கு முதுகை காட்டியவாறு சன்னலில் எம்பி பார்த்தவாறு நின்றவள், கதவை திறக்கப்பட்டதை உணர்ந்ததும்.. நிதானமாக திரும்பிப் பார்த்தாள்.


அவளைப் பார்த்ததும் அவனது கணிப்பு சரி என்று ஆனது.


அவள்.. கடந்த ஒரு மாதமாக அவர்களைப் பற்றி செய்தி சேகரிக்க வந்திருக்கும்.. ஊடகத்தை சேர்ந்த காவ்யா! பிரபாகர் பழி வாங்குகிறேன் என்ற பெயரில் அவளை இந்த நேரத்தில் கடத்தி வந்து தவறு புரிந்து விட்டது தெரிந்தது. அவனின் கோபம் பிரபாகரின் மேல் திரும்பியது. அதற்கு முன் தன் முன் நின்றிருந்தவளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அவளை நோக்கி வேகமாக சென்றான்.


அவளோ “இன்னைக்கு உங்க பர்த்டேவாம்! விஷ் யு மேனி மோர் ஹெப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே! ஒரு கேங்ஸ்டர் கிட்ட இப்படியொரு வாழ்த்தை சொன்ன என்னைப் பாராட்டுலாமே..” என்றாள்.


ஆனால் அவளது முன் சென்று நின்ற வீரா அவளது முன் கை நீட்டி “நீ இப்போ ரெக்கார்ட் செய்ததை என்கிட்ட கொடுத்திரு..” என்றான்.


காவ்யா “என்னது ரிகார்ட்டிங் டிவைஸ்ஸா! என்னை இந்த ரூமிற்குள் விடும் முன்.. குண்டோதரி மாதிரி ஒரு பொம்பளை வந்து என்னை தரவ்வா செக் செய்துட்டு தான் போனா.. பின்னே எப்படி?” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கையில் அவளது கரத்தைப் பிடித்து இழுத்த வீரா அவளது முன் சட்டை பட்டன்களை பிய்த்தான். பட்டன்கள் இன்றி பிரிந்த சட்டையை இறுக பற்றிக் கொண்டு காவ்யா அமர்ந்து விட தனது கையில் இருந்த பட்டன்களை வீரா ஆராய்ந்தான்.


சிலவற்றை ஏறிந்துவிட்டு மீதியிருந்த இரு பட்டன்களை இரு விரல்களால் உருட்டியவாறு அவள் முன் குதிகாலிட்டு அமர்ந்தவன், “இதை வச்சு உன்னை வீடியோ எடுக்கவா.. கையை எடு..” என்கவும், காவ்யா “நோ!” என்றுக் கூனி குறுகி முகத்தை மறைத்துக் கொண்டு அமர்ந்தாள்.


சிறு முறுவலுடன் எழுந்த வீரா “நீ இவ்வளவு தூரம் வந்தது என் ஆளு பண்ண தப்பாலா! இவ்வளவு தூரம் வந்து கிடைத்த சான்ஸை மிஸ் செய்துட்டியே! உனக்கு தில்லும் பத்தல. புத்தியும் பத்தல.” என்றுவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.


வீரா உடனே வெளியே வந்துவிட்டதைக் கண்டு திகைப்புடன் வெளியே இருந்த ஷோபாவில் அமர்ந்திருந்தவர்கள் தடுமாறியவாறு எழுந்து நின்றார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு திரும்பிய வீரா அந்த கதவை இழுத்து தாளிட்டான். அதற்கு அர்த்தம் அவர்களுக்கு புரிந்தது. யாரும் அந்த அறைக்குள் நுழைய கூடாது. பின் கீழே இறங்கி சென்றான். அங்கு அமர்ந்திருந்த மகேஷ் மற்றும் பிரபாகரும் திகைப்புடன் எழுந்தார்கள்.


அவர்களைப் பார்க்காமல் நேராக தீ கணப்பிடம் சென்றவன், எரிந்துக் கொண்டிருந்த தணலில் கையில் இருந்த இரு பட்டன்கள் வடிவில் இருந்த ரெக்கார்ட்டிங் டிவைஸை எறிந்தான்.அதைப் பார்த்தவர்களின் விழிகள் நடந்த விசயத்தை கணித்து அதிர்ச்சியில் விரிந்தன.


பிரபாகர் பயத்துடன் வீராவை பார்த்தவாறு பின்னால் எட்டுக்களை வைத்தான். வீரா தலையைத் திருப்பி மகேஷை அழுத்தமாக பார்த்தான். அந்த பார்வைக்கு அர்த்தம் புரிந்த மகேஷ் அருகில் நின்றிருந்த பிரபாகரை ஓங்கி குத்துவிட்டான். அவன் சுருண்டு சென்று விழுந்தான். அதைத் திகைப்புடன் பார்த்தவாறு மாடியில் இருந்து மற்றவர்கள் கீழே இறங்கி வந்தார்கள்.


வீரா அவர்களிடம் பான்ட் பாக்கெட்டில் கையை விட்டவாறு “நீங்களும் ஜாயின்ட் அடிச்சுக்கலாம். ஆனா உங்களுக்கு ரெண்டு நிமிஷம் தான் டைம்! அப்பறம் பீரை என் கையில் ஒப்படைக்கணும்.” என்றுவிட்டு அங்கிருந்த மற்றொரு அறையிற்குள் நுழைந்தான்.


வீரா கட்டளையிட்ட மறுகணமே படியில் இருந்து கடகடவென இறங்கி வந்தவர்கள்.. மகேஷுடன் சேர்ந்து பிரபாகரை அடிக்க ஆரம்பித்தார்கள். பின் சரியாக இரண்டு நிமிடத்திற்கு பின் அடிப்பதை நிறுத்திவிட்டு அவனது சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டு.. வீரா இருந்த அறையை நோக்கி சென்றார்கள்.


உடனே அவர்களைப் பார்த்து கரத்தைக் குவித்த பிரபாகர் “டேய் நீங்களே என்ன அடித்து துவம்சம் செய்திருங்கடா! பாஸ் கிட்ட மட்டும் வேணா..” என்றுக் கெஞ்சினான்.


ஆனால் அவர்கள் அதை காதில் போட்டக் கொள்ளவில்லை. வீரா கூறியபடி அவன் முன் பிரபாகரை நிறுத்தினார்கள். வீராவை பார்த்ததுமே கரத்தை குவித்து அவன் மண்டியிட்டு அமர்ந்த பிரபாகர் கதறினான்.


“பாஸ்! மன்னிச்சுருங்க பாஸ்! இந்த பொண்ணை இரண்டு தரம் உளவு பார்க்க வந்து பிடிச்சு விட்டுருக்கோம். அதுக்கு பழிக்கு பழி வாங்கிறதா நினைச்சு கூட்டிட்டு வந்துட்டேன். அப்பவும் சென்பாவை வச்சு செக் செய்தோம்.” என்றான்.


ஆனால் வீரா “விஜய் எங்கே?” என்றுக் கேட்டான்.


பிரபாகர் “முதல்ல விஜயை தான் தேடினே.. அவன் பார்ட்டியில் இருந்து பன்னிரெண்டு மணிக்கே கிளம்பிட்டானு தெரிஞ்சுது. அதனால தான் சென்பாவை விட்டு சோதிக்க சொன்னே. அவ நல்லா செக் செய்தேன்னு தான் சொன்னா.. இப்படி எதிர்பார்க்கல. அவள் மேலே தான் தப்பு..” என்றுக் கதறினான்.


அடுத்த கணம் வீரா விட்ட உதையில் பிரபாகர் நான்கடி தள்ளி விழுந்தான். ஆனாலும் உடனே எழுந்தவன்.. மீண்டும் கரங்களைக் குவித்து “என்ன மன்னிச்சுரு பாஸ்! இனி இந்த தப்பு நடக்காது.” என்றுக் கதறினான்.


வீரா அவன் புறம் மெதுவாக குனிந்து “எதாவது செய்யறதா இருந்தா.. முழுசா செய்! அரைகுறையுமாக செய்யாதே..” என்றான்.


பிரபாகர் “இல்ல பாஸ்! இல்ல பாஸ்! இனி நானே எதையும் செய்ய மாட்டேன். எத செய்யறதா இருந்தாலும் உங்க கிட்ட கேட்டுக்கினு தான் செய்வேன்.” என்றான்.


மெல்ல நிமிர்ந்த வீரா “நாலு நாளுக்கு நீ என் கண்ணுல படக் கூடாது.” என்றுவிட்டு அந்த விருந்தினர் மாளிகையை விட்டு வெளியேறினான்.


தனது காரை நோக்கி சென்றவாறு வீரா மகேஷிடம் “அந்த பொண்ணுக்கு தங்கச்சி இருக்கிறதா போன முறை விசாரிச்ச போது சொன்னீங்க தானே! அந்த பொண்ணையும் கூட்டிட்டு வந்து இவளோட அடைச்சு வை!” என்றவாறு நடந்தவன், சட்டென்று நின்று “அவ தங்கச்சி கிடைக்கலைன்னா அவ அம்மாவையும் கூட்டி வந்து.. அந்த பொண்ணோட அடைச்சு வையுங்க. நாலு நாள் அடைச்சு வச்சுட்டு விட்டுருங்க..! அந்த நாலு நாளில்.. இனி இந்த மாதிரி செய்தா என்ன நடக்கும் என்கிற பயத்தை மட்டும் காட்டுங்க! கவனிங்க பயத்தை மட்டும் காட்டணும். பாடம் கத்துக் கொடுக்கிறேனு.. ஓவரா போன.. அவளோட கோபத்தைத் தான் கிளப்பி விடுவீங்க! அது நமக்கு தேவையில்லை.” என்றான்.


மகேஷ் “எஸ் பாஸ்!” என்று தலையை ஆட்டினான்.


அவனைத் திரும்பிப் பார்த்த வீரா முறுவலுடன் அவனது தோளில் கரத்தைப் போட்டு “பங்ஷனை கலக்கிட்டே மகி!” என்றான்.


அதற்கு மகேஷ் “உங்களுக்கு பர்த்டேன்னா சும்மாவா! எல்லாரும் பணத்தை வாரி கொடுத்துட்டாங்க பாஸ்! ஆனா அந்த ஆக்டர் ஷ்யாம் தான்!” என்று இழுத்தான்.


அதற்கு வீரா “போன முறை வார்ன் செய்தும்.. அவன் கிட்ட இருந்து ஒண்ணும் வரலை தானே!” என்றுக் கேட்டான்.


அதற்கு மகேஷ் “ஆமா பாஸ்! சும்மா ரௌடி மிரட்டல் என்று நினைச்சுட்டான். இந்த வயசுலேயேயும்.. தொடர்ந்து நாலு ஹிட் கொடுத்த திமிர் அவனுக்கு! அவனுக்கு சரியான பாடம் கத்துக் கொடுக்கணும் பாஸ்..” என்றான்.


வீராவின் முகத்தில் கோபப் புன்னகை மலர்ந்தது. அதற்கு அர்த்தம் அவனைச் சுற்றியிருப்பவர்களுக்கு தெரியும். எனவே அவர்கள் கண்கள் பளபளக்க வீராவின் கட்டளைக்காக காத்திருந்தார்கள்.


வீரா இரு கரங்களையும் பின்னால் கோர்த்தவாறு நடந்தபடி “அந்த ஆக்டருக்கு பதினெட்டு வயசுல ஒரு பையன் இருக்கான் தானே! அவனை போதை வழக்கில் மாட்ட வச்சுருங்க! எப்படி என்று நான் சொல்றேன். அப்பறம் அந்த ஷ்யாம்.. அவனோட பையனை விடுவிக்க நம்ம கிட்ட தான் வந்தாகணும். நாம் கேட்டதைத் தந்து தான் ஆகணும்.” என்று உதட்டை வளைத்து சிரித்தான். அதற்குள் அவனது கார் நின்ற இடத்திற்கு வந்திருக்கவும் ஏறியமர்ந்தான்.


பின் கண்ணாடியை ஏற்றிவிடும் முன் வீரா “நாளைக்கு விஜயை கூட்டிட்டு வந்து மறக்காம எல்லாத்தையும் செக் செய்திருங்க..” என்றுவிட்டு கார் கண்ணாடியை ஏற்றியதும் கார் சீறிச் சென்றது.

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஜய்!


விஜய் வீராவுடன் கடந்த நான்கு வருடங்களாக வேலை செய்கிறான். ஆனால் மற்ற அடியாட்கள் போல அல்ல! ஹைடெக் அடியாள் என்று வேண்டுமென்றால் கூறலாம். அந்த சாமுண்டி காலனியில் கம்யுட்டர் சென்டர் வைத்து நடத்துபவன் விஜய் தான்! வீராவிற்கு தொழிற்நுட்ப முறையில் உதவுபவன், தற்போதைய காலத்திற்கு வீராவிற்கு மிகவும் தேவையானவன்.


விஜய் தான்.. வீராவை பார்க்க வருபவர்கள்.. மறைத்து வைத்துக் கொண்டு வரும் கெமராக்கள் மற்றும் ரெக்கார்ட்டிங் டிவைஸ் போன்றவையை கண்டுப்பிடிப்பான். வீராவை வெளியே சந்திக்க என்று யாராவது அழைத்தால்.. அங்கு விஜய் முதலில் சென்று.. ஏதேனும் கெமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்க என்றுப் பரிசோதிப்பான். அதுபோல்.. முக்கிய கோப்புகள் கொண்ட அரசாங்கத்தின் கணிணி பாஸ்வேர்ட்டை கூட ஒரு தரம் கண்டுப்பிடித்தான். யாரோ பாஸ்வேர்ட் கண்டுப்பிடித்து விட்டார்கள் என்றுத் தெரிந்து.. அவசரமாக வேறு மாற்றினார்கள். சிலருடைய செல்பேசியை எளிதாக ஹெக்கும் செய்வான். இவ்வாறு நவீனம் பெருகி விட்ட இந்த காலத்தில் விஜய் பலவிதத்தில் வீராவிற்கு உதவியாக இருந்தான்.


ஏனெனில் நான்கு வருடங்களுக்கு முன்.. விஜயிற்கு வீரா செய்த உதவி அவ்வாறாகப்பட்டது.


நான்கு வருடங்களுக்கு முன்.. இரு ரௌடி கும்பலின் தாக்குதலில் நடுவில் சிக்கி விஜயின் தந்தை இறந்து விட.. அந்த ரௌடிகளை பழி வாங்க.. விஜய் நேராக வீராவின் உதவியை நாடினான்.


தன்னைப் பார்க்க வேண்டும் என்றுப் பிடிவாதமாக ஒரு இளைஞன் நிற்பதாக கேள்விப்பட்டு வீரா வெளியே வந்துப் பார்த்தான். அங்கு விஜய் வீராவை பார்த்ததும் எந்த வித பசப்பு பேச்சு இல்லாமல் நேரடியாக விசயத்திற்கு வந்தான்.


கண்கள் கோபத்தில் சிவக்க பெருமூச்சுகளை இழுத்து விட்டவாறு விஜய் “பத்து நாளுக்கு முன்னாடி வேளச்சேரியில் நடந்த கலவரத்தில்.. அங்கிருந்த காய்கறி கடைக்கு வந்த என் அப்பா கொல்லப்பட்டிருக்கிறார். இரண்டு ரௌடி கும்பல் அடிச்சு கிட்டுதுன்னா.. நடுவில் என்ன அப்பா என்ன செய்தார். அவர் ஏன் உயிரை இழக்கணும்? இப்போ அவர் எங்க கூட இல்லை. அவரை யாராலும் திரும்பி கொண்டு வர முடியாது. ஆனா இப்படி அநியாயமா என் அப்பா உயிர் போயிருக்கே அதுக்கு எங்க மனசு ஆறலை. அதுக்காக தான் உங்க கிட்ட வந்திருக்கேன்.” என்றான்.


விஜயை கூர்ப்பார்வையால் துளைத்த வீரா “நான் ஏன் உனக்காக பண்ணனும்?” என்றுக் கேட்டான்.


அதற்கு விஜய் “உங்களைப் பற்றிய விசயங்களை யாராவது லேப்டாப்பில் ஸ்டோர் செய்து வைத்திருந்தாங்கன்னா! அந்த லேப்டாப்பை தொடாமாலேயே அதை அழிக்க என்னால் முடியும்.” என்று நிமிர்ந்து நின்றுக் கூறினான்.


வீராவிடம் உதவி கேட்டு கெஞ்சவில்லை. எனக்கு ஒன்றை செய்துக் கொடுத்தால் நான் உனக்கு ஒன்று செய்துத் தருவேன் என்றுப் பேரம் பேசினான்.


வீராவிற்கு தன்னைப் பார்ப்பது போன்றே இருந்தது. எனவே இவன் சற்று ஆபாயக்காரமானவன் என்றும் புரிந்தது. நண்பர்களை விட ஆபாயக்காரமானவர்களே தனக்கு தேவை என்றுத் தெரிந்திருந்த.. வீரா விஜயின் வெறியை தீர்த்திட முடிவு செய்தான்.


விஜய் குறிப்பிட்ட நாளில்.. யாருக்கு சண்டை ஏற்பட்டது என்று ஆராயக் கூறினான். யார் யார் என்றுக் கூறியதும்.. அந்த ஆறு பேரின் உயிரை எடுக்காமல் விஜயின் கண்முன் அடித்து துவம்சம் செய்ய உத்தரவிட்டான். மகேஷோ திடுக்கிட்டு பார்த்தான். ஏனெனில் அதில் மூன்று பேர்.. அவர்களுக்கும் சில சமயம் வேலை செய்பவர்கள்!


மகேஷின் திடுக்கிட்ட பார்வையை பார்த்த வீரா முறுவலித்தவாறு “எனக்கு மூளைக்காரன் தேவைப்படறான்.” என்றான்.


அடுத்த நாளே அந்த ஆறு ரௌடிகளும் விஜயின் கண்முன் அடித்து குற்றுயிரும் குலையிருமாக ஆக்கப்பட்டார்கள். அதை கண்கள் பளபளக்க விஜய் பார்த்தான். விஜயின் பளபளக்கும் கண்கள் வீராவின் கண்களில் இருந்து தப்பவில்லை.


அதன்பின் விஜய் வாக்களித்தபடி.. வீராவிற்கு வேண்டியதைச் செய்துக் கொடுத்தான். தற்பொழுது வீரா அவனது திறமையிடம் பேரம் பேசினான். அவனது திறமையை ஐடி கம்பெனியில் அமர்ந்து வீணடிக்காமல்.. அவனுடன் வேலை செய்தால்.. அதற்கு உரிய சம்பளமும்.. பாதுகாப்பும் கிடைக்கும் என்றுக் கூறினான். அதை ஏற்றுக் கொண்ட விஜய்.. அந்த சாமுண்டி காலனியில் தனது அன்னை மற்றும் தம்பியுடன் குடிப்பெயர்ந்தான். தம்பியை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்துவிட்டு அவன் தொடர்ந்து வீராவிடம் வேலை செய்தான்.


காலை எட்டு மணி இருக்கையில் மகேஷ் விஜயின் வீட்டிற்கு சென்றான். விஜயின் அன்னையிடம் நலம் விசாரித்துவிட்டு விஜய் என்று அவனை அழைக்கும் முன்.. உள்ளறையில் இருந்து குரல் கேட்டது.


விஜய் “நம்ம வொர்க் தான் பார்த்துட்டு இருக்கேன். காலையில எழுந்து பல்லு கூட விளக்கலை. இதோ ரெண்டு லேப்டாப்பை திறந்து வச்சுட்டு.. நேற்று எடுத்த புட்டேஜ்ஜஸ் தான் பார்த்துட்டு இருக்கேன்.” என்றான்.


மகேஷ் உள்ளே சென்றுப் பார்த்தான். அங்கு விஜய் நேற்று பிறந்தநாள் விழாவில் பதிவான சிசிடிவி காட்சிகளை.. எக்ஸ்ரே செய்யும் சாஃப்ட்வேரில் போட்டு.. அவர்கள் கொண்டு வந்த பொருட்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தான். மகேஷும் அவனுடன் சேர்ந்து ஆராய்ந்தான்.


விஜய் “செல்ஃபோன் நாட் அலோவ்டுனு சொன்னீங்க அங்கே பாருங்க.. ரெண்டு பேர் கொண்டு வந்து.. ஃபோட்டோ எடுத்துட்டு இருக்காங்க..” என்றான்.


மகேஷ் “அட ஆமா! இவன் பேரு..” என்று யோசிக்கவும், விஜய் அவனது முகத்தை மட்டும் ஃபேஸ் ஐடின்டென்டிபை சாஃப்ட்வேரில் போட்டு பெயர் மட்டுமில்லாது.. அவனது மொத்த விபரத்தையும் கொடுத்தான். இவ்வாறு இரண்டு பேரைப் பற்றிய விபரங்களை மகேஷ் வெளியே நின்றிருந்தவனிடம் கூறினான். அவன் உடனே அந்த ஆதாரங்களை அழிக்க ஓடினான்.


பின் நெட்டி முறித்த விஜய் குளியலறைக்குள் விரையவும், மகேஷிற்கு விஜயின் அன்னை காபி கொண்டு வந்துக் கொடுத்தார். ருசித்து குடித்துக் கொண்டிருக்கும் போது.. முகத்தை துடைத்தவாறு வெளியே வந்த விஜய் “என் கண்ணில் இருந்து எதுவும் தப்ப முடியாது.” என்றான். பின் தொடர்ந்து “நேத்து எப்படி பார்ட்டி செமையா போச்சா.. நான் பன்னிரெண்டு மணி வரை தான் இருந்தேன். ஸார் எங்கே இன்னும் அங்கே தான் இருக்கிறாரா..” என்றுக் கேட்டான்.


அதற்கு மகேஷ் “உன் கண்ணில் இருந்து ஒண்ணு தப்பி.. பாஸ் கிட்டவே நெருங்க பார்த்துச்சு. பாஸ் யாரு! அவர் கிட்ட இந்த வேலை நடக்குமா..” என்றுச் சிரித்தான்.


விஜய் “நீ சொல்றது புரியலை.” என்கவும், மகேஷ் காவ்யா என்னும் பெண் மாட்டிக் கொண்டதைக் கூறினான். அதைக் கேட்டு திகைத்த விஜய் சற்று கோபத்துடன் “என்கிட்ட கூட்டிட்டு வந்துட்டு அப்பறம் அனுப்பியிருக்கலாம் இல்ல! அப்போ அந்த பொண்ணு கதி அவ்வளவுத்தானா..” என்றுக் கேட்டான்.


அதற்கு மகேஷ் “இல்ல அந்த பொண்ணை அடைச்சு வச்சுக்கோம்.” என்றான்.


விஜய் அவனைச் சந்தேகமாக பார்க்கவும், மகேஷ் சிரித்தவாறு “ஆமா! பாஸ் அத்தோட விடக் கூடிய ஆளா! அந்த பொண்ணுக்கு பயத்தைக் காட்டணுமில்ல. அவளோட தங்கச்சியை கடத்த சொல்லியிருக்கார். பசங்களை அனுப்பி வச்சுட்டு தான் வரேன்.” என்றான்.


அதற்கு விஜய் மெதுவாக தலையை ஆட்டியவாறு “அந்த பொண்ணை கொல்லறதை விட பவர்புல் தான்..” என்றவன், தொடர்ந்து “என்ன மாதிரி டிவைஸ்..” என்றுக் கேட்டான்.


அதற்கு மகேஷ் “அத பாஸ் தீயில வீசியிட்டாரு..” என்றான்.


விஜய் “நான் அந்த பொண்ணை பார்க்கலாமா..” என்றான்.


மகேஷ் ஏன் என்பது போல் பார்க்கவும், விஜய் “நீங்க அந்த பொண்ணை பிடிச்சதைப் பற்றிப் பெருமை பேசறீங்க..! ஆனா அது அந்த பொண்ணுக்கு எப்படிக் கிடைச்சுது.. யார் பார்த்துட்டு இருக்கா என்பதைத் தெரிஞ்சுக்க நினைக்கிறேன்.” என்றான்.


மகேஷ் “அத பாஸ் கெஸ் செய்துப்பாரு! வேற யாரு.. அவ வேலை செய்துட்டு இருக்கிற யுட்யுப் சேனல்காரன் தான்!” என்றான்.


விஜய் “அப்போ அவ லைப் ரெக்கார்ட்டிங் செய்யலை அப்படித்தானே..” என்றுக் கேட்கவும், மகேஷ் திருதிருவென விழித்தான்.


மகேஷ் “அத எப்படிக் கண்டுப்பிடிக்கிறது விஜய்! பாஸுற்கு தெரியறதுக்கு முன்னாடி என்ன விபரம் என்று எப்படித் தெரிஞ்சுக்கிறது? அந்த பொண்ணு கிட்ட கேட்டாலும் உண்மையை சொல்வாளா..” என்றுப் பதட்டத்துடன் கேட்டான்.


அதற்கு விஜய் “அதைக் கேட்கிற விதத்துல கேட்ட தானா விசயம் வெளி வரப் போகுது.” என்று அசலட்டாக கூறியபடி “அம்மா எனக்கும் காபி..” என்று குரல் கொடுத்தான்.


ஆனால் மகேஷ் “விஜய் இப்பவே கிளம்பு! பாஸ்.. அடுத்து அத பத்தி கேட்டா அதுக்குனா பதிலோட நிக்கணும். இல்லைன்னா நான் காலி..” என்று அவனைத் துரிதப்படுத்தினான்.


காபி என்று இழுத்தவனை உடை மாற்றி வரச் சொல்லி உடனே காரில் அள்ளிப் போட்டு நேற்று விருந்து நடந்த இடத்தில் இருந்த விருந்தினர் மாளிகையை நோக்கி விரைந்தார்கள். வீராவின் கட்டளையின் பெயரில் காவ்யாக இன்னும் அங்கு தான் அடைக்க வைக்கப்பட்டிருக்கிறாள்.


விஜயும் மகேஷும் உள்ளே நுழைந்ததும்.. அங்கு காவலுக்கு வைத்திருந்த ரௌடிகள் எழுந்து நின்றார்கள். வீரா சாத்தி வைக்கப்பட்ட கதவு அப்படியே இருந்தது. மகேஷ் கதவை திறந்ததும்.. காவ்யா கையில் கிடைத்த நாற்காலியை ஓங்கி அடிக்க வந்தாள். அவளது கரத்தை இலவகமாக பிடித்து தடுத்த விஜய்.. அவளது கையில் இருந்த நாற்காலியை தட்டிவிட்டு அவளது கையில் முறுக்கி பின்னால் வைத்து தள்ளிக் கொண்டு போய் சுவற்றில் சாய்த்தான். சுவற்றில் முகத்தை அழுத்தியவாறு நின்றிருந்த காவ்யாவால் சிறிது கூட அசைய முடியவில்லை.


மகேஷ் “என்ன எங்க கிட்டவே வேலையைக் காட்டறீயா..” என்று உறுமியவாறு வரவும், விஜய் “அண்ணா நான் பார்த்துக்கிறேன். நீங்க பேசாம இருங்க..” என்றுவிட்டு காவ்யாவிடம் திரும்பி “உன்னை யார் அனுப்பியது? அந்த டிவைஸ் யார் கொடுத்த.. கண்டிப்பா உன்னோட ஒன்றையணா யு ட்யுப் சேனலாக இருக்காது.” என்று விசாரித்தான்.


விஜய் அழுத்தியதில் சிறிது கூட நகர முடியாமல் இருந்த காவ்யா “என்னை யாரும் அனுப்பலை. இந்த மாதிரி நீயுஸ் கலெக்ட் செய்யணும் என்கிற ஆர்வத்தில் தான் வந்தேன். என்னை விட்டுருங்க..” என்று அழுது விடுபவள் போல் கூறினாள்.


விஜய் விசாரிப்பதையும் காவ்யாவின் அழுகையும் பார்த்த மகேஷ் ஏளனச் சிரிப்புடன் சிதறிக் கிடந்த அறையை ஆராய்ந்தவாறு நகர்ந்தான்.


மகேஷ் நகர்ந்ததும்.. காவ்யாவிற்கு பின்னால் நின்றிருந்த விஜய் சிறிது நெருங்கி மெல்லிய குரலில் “உன்னை விமன் சப்ளையராக தானே வரச் சொல்லி ஐடி கார்ட் செட் பண்ணி கொடுத்தேன். யார் உன்னை ஃகால்கேர்ளா வந்து இப்படி மாட்டிக்க சொன்னது?” என்றவனின் குரல் இறுகியிருந்தது.


காவ்யாவும் மெல்லிய குரலில் “நான் சப்ளை விமனாக தான் வந்தேன். ஆனா நான் விக் வைக்கிறதுக்குள்ள என்னை அடையாளம் கண்டுட்ட இன்னொருத்தன்.. இப்படிச் சொல்லி இழுத்துட்டு வந்தான். வீராவை நேரிலே தனியா பார்க்க போறேன்னு ஆர்வத்துல வந்துட்டேன். ப்ளீஸ் காப்பாத்து விஜய்..” என்றாள்.


விஜய் “முடியாது. நீதானே இந்த வழியைத் தேர்ந்தெடுத்தே.. இந்த வழியிலேயே போய்.. வீராவை வளை..” என்றவனின் குரலில் வஞ்சினம் மிகுந்திருந்தது.

Been spendin’ most their lives, livin’ in the gangsta’ paradise..

We keep spendin’ most our lives, livin’ in the gangsta’ paradise..


(sung by Coolio and Kylian Mash)





 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸாரி பிரெண்ட்ஸ் நேத்திருந்து நாலு நாளா பல் வலி.. அதனால தான் நேத்து யுடி தர முடியலை.

போன யுடியில்.. அறிமுகம் பார்த்தீங்க.. இந்த யுடியில் கதை எப்படி பயணிக்கும் என்பதை பார்ப்பீங்க..

இது கொஞ்சம் கஷ்டமான கதை எழுதுவதற்கு.. எனவே கதை எப்படி போகுது... என்ற கருத்துக்களை மறக்காமல் கூறுங்கள்..


நன்றி...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2



விஜய் கூறியதைக் கேட்டு காவ்யா திடுக்கிட்ட வேளையில்.. மகேஷ் கோபத்துடன் அவர்களை நெருங்கினான். அதைக் கண்டு இருவரும் அதிர்ந்தார்கள். ‘ஏய்’ என்றவாறு அருகில் வந்தவன்.. காவ்யாவிடம் “உனக்கு தங்கச்சி இருக்கா இல்லையா! உன் வூடு எங்கே இருக்கு? உன் வூட்டு ஆளுங்க எங்கே இருக்காங்க.. அந்த அட்ரஸ்ல போன யாருமே இல்ல” என்றுக் கர்ஜீத்தான்.


அதைக் கேட்ட விஜய் காவ்யாவை பிடித்திருந்த பிடியைத் தளர்த்தியவனாய் திகைப்புடன் மகேஷிடம் திரும்பி “என்ன சொல்றே மகேஷ்ண்ணா! நான் கொடுத்த டிடெய்ல்ஸ் தப்பா! ஆனா சிஸ்டத்துல எப்படி அடிச்சாலும் அதுதான் காட்டுச்சு!” என்றான்.


விஜய் பிடியைத் தளர்த்தியதும்.. மெல்ல சரிந்து அமர்ந்தவளுக்கு விஜயின் சமார்த்தியத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல் வேலையாக.. அவளது பெற்றோர்களையும் தங்கையும் வேறு ஊருக்கு அனுப்பி வைத்த பின் தான் காவ்யாவை கொண்டு வேலையை ஆரம்பித்தான். அவர்களிடம் அவளது குடும்பத்தைப் பற்றிய தவறான விபரத்தையும் முகவரியையும் கொடுத்ததும் அவன்தான்! தற்பொழுது.. ஒன்றும் அறியாதவனை போல்.. மகேஷிடம் அதிர்ச்சியுடன் பேசுவதை காதில் வாங்கியவாறு அமைதியாக அமர்ந்தாள்.


மகேஷ் “ஆமா விஜய்! இவள பார்த்து அந்த டிவைஸ் எப்படிக் கிடைச்சுது. எதுக்கு பின்னாடியே வந்து ரோந்துக்கு வரானு.. விசாரிக்கணும் நீ சொன்ன போது கூட நா உன் மேலே டவுட் ஆனே! ஆனா இப்போ இது பெரிய விசயம் போல தெரியுது.” என்றவன், காவ்யாவை பார்த்து “ஏ! யார் நீ? யாரு உன்னை அனுப்பியது?” என்றுக் கேட்டான்.


காவ்யா “யாரும் என்னை அனுப்பலை. மத்தவங்களுக்காக நான் ஏன் ரிஸ்க் எடுக்கணும்.” என்றவளின் கண்களில் இருந்த கண்ணீர் வழிந்தது.


மகேஷ் இவளை என்ன செய்வது என்பது போல் பார்த்தான்.


விஜய் மகேஷிடம் “இவள என்கிட்ட விடு நான் பார்த்துக்கிறேன்.” என்றவன், தொடர்ந்து “உங்க கிட்ட இருக்கிற மாதிரி எக்ஸர்சைஸ் பாடி எல்லாம் என்கிட்ட இல்லன்னாலும்.. இந்த பொண்ணை என்னால பாத்துக்க முடியும்.” என்றான்.


பின் சற்று தள்ளி சென்று தனது செல்பேசியை எடுத்தவன் வீராவை தொடர்பு கொண்டான்.


விஜயின் எண்ணை பார்த்ததும் அழைப்பை ஏற்ற வீரா எடுத்த எடுப்பில் “சொல்லு விஜய்! அந்த பொண்ண என்ன செய்யலாம். நமத்து போன பட்டாசு என்று இத்தினி நாள் நெனைச்சுட்டு இருந்தேன். ஆனா பசங்க கிட்ட இருந்து வந்த நீயுஸ் பார்த்தா.. இது நேரம் பாத்து வெடிக்கிற பட்டாசு மாதிரி தான் இருக்கு..” என்றான்.


விஜய் “அதுதான் உட்காந்த இடத்திலேயே எல்லாம் சொல்றீங்களே! இந்த பொண்ண என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லிடுங்க..” என்றான்.


வீரா “ஃபோன்ல போட்டு பேமஸ் ஆகுறதுக்காக தான்.. இத்தினியும் செய்யறானு நீ நம்பறீயா..” என்று எதிர் கேள்வி கேட்டான்.


அதற்கு விஜய் “அப்படித்தான் போல ஸார்! இப்போ இருக்கிற யங்கர் ஜெனரெஷன்ஸ் பற்றி உங்களுக்கு நல்லாவே தெரியும். லைக்ஸ் அன்ட் கமெண்ட்ஸ்க்காக எந்த எக்ஸ்ட்ரீம்ஸ் வரையும் கூடப் போவாங்க..” என்றான்.


பின் தொடர்ந்து “அவளோட யு ட்யுப் சேனலில் பேய்கள் நடமாடுதுனு சொன்ன பங்களாவில்.. நாலு நாள் இருந்துட்டு வந்திருக்கிற வீடியோவை கூடப் போட்டிருப்பா.. இன்னொன்றுல ரோட்டுல நடந்த கோரமான ஆக்ஸிடென்ட்டை இரத்தம் ஒழுக.. சதைகள் பிய்ந்து தொங்கியது கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் போட்டிருப்பா.. அந்த மாதிரி தான் கேங்ஸ்டர் லைஃப் ஸ்டைல்ல காட்டுகிறேனு உங்க பின்னாடி சுற்றினா.. அதுனால தான் நீங்க ரெண்டு தரமும் அவளை விட்டுர சொன்னீங்க! கண்டிப்பா இவ பின்னாடி எந்த போலீஸும் வேற கேங்கும் இல்லன்னு எனக்கு தெரியும். அதுல ஸ்சுரா இருக்கேன். ஆனா அட்ரஸ் மட்டும் எப்படி மாறுச்சு தான் தெரியலை. இப்போ கேட்ட நான் அனாதை என்றுச் சொல்றா! அவ வச்சுருந்தது ஹைடெக் கெமரா என்று மகேஷ்ண்ணா சொன்னாங்க..! அதுனால நீங்க சொன்ன மாதிரி.. இனி இவள வெளியே விட்டா இன்னும் டேன்ஞ்சரா போகும். சோ..” என்று இழுத்தான்.


வீரா “சொல்லு விஜய்!” என்கவும், விஜய் “அந்த ரஞ்சனா மாதிரி.. இவளையும் ஏன் நம்ம ஆட்கள்ல ஒருவரா வச்சுக்க கூடாது. ஃபேமிற்காக இத்தனை செய்கிறவள், பணத்திற்காகவும் சில காரியங்கள் நமக்காக செய்வா தானே..” என்றான்.


விஜய் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வீரா முடிவில் சிரித்தான். பின் “அதுக்கு அவளைப் போட்டு தள்ளிட்டா.. எந்த கஷ்டமும் இல்லை. நாம அவளைப் பற்றி யோசிக்கவும் தேவையில்ல இல்ல! என்ன சொல்றே!” என்றுக் கேட்டான்.


அதைக் கேட்டு விஜயே ஸ்தம்பித்து நின்றான். மெல்ல சுவற்றோடு ஒட்டியிமர்ந்திருந்த காவ்யாவை பார்த்தான். பின் மெல்ல முறுவலித்தவாறு “நீங்க அப்படிச் செய்யறதா இருந்தா.. என்னை எப்பவோ போட்டுத் தள்ளியிருப்பீங்க! பிகாஸ் உங்களைப் பற்றிய விசயங்கள் ஆல்மோஸ்ட் எனக்கு தெரியும். ஆனா உங்களுக்கு தில்லும் ஜாஸ்தி அறிவும் ஜாஸ்தி! அதனால தான் என்னை உங்க கிட்டவே வச்சுருக்கீங்க! நானே சொல்றேன். எப்போ உங்களுக்கு என் மேலே நம்பிக்கை போகுதோ.. அப்போ தாரளமாக என் உயிரை எடுக்கலாம்.” என்றான்.


அதற்கு வீரா “என்கிட்டவே இதைச் சொல்ற பாத்தியா.. இந்த தில்லு தான் எனக்கு பிடிச்சுருக்கு! ஒகே விஜய்.. அந்த பொண்ண கூட்டிட்டு வா..” என்றான்.


விஜய் மகேஷை பார்க்கவும்.. மகேஷ் “எனக்கு ரிஸ்கா தான் தெரியுது. பாஸ் முதல்ல சொன்னதைச் செய்திருக்கலாம்.” என்றுவிட்டு கார் சாவியை அவனிடம் கொடுத்தவன், “நீயே கூட்டிட்டு போ! பாஸு அதுக்குள்ள இன்னொரு வேலைய கொடுத்திருக்காரு. நான் இங்கிருக்கிற பைக்கை எடுத்துட்டு அந்த வேலையை முடிச்சுட்டு வரேன்.” என்றவன், “ஜாக்கிரதை உன்கிட்ட இருந்து தப்பிக்க ட்ரை செய்யப் போறா..” என்கவும், விஜய் “இந்த நாலு வருஷத்துல நான் உங்களோட அடிதடியை கத்துக்கிட்டேன். ஆனா இந்த நாலு வருஷத்துல சிஸ்டத்தை எப்படி ஆன் செய்யறதுனு கூட நீங்க கத்துக்கல..” என்றுச் சிரித்தான். அதற்கு மகேஷ் சிரித்து மலுப்பினான்.


பின் முழங்காலை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த காவ்யாவின் முழங்கையைக்கு மேலாக பற்றி விஜய் எழுப்பவும், அங்கிருந்த துணியை கொண்டு மகேஷ் அவளது கரங்களை பின்னால் வைத்துக் கட்டினான். பின் அவளது கண்களையும் வாயையும் சேர்த்து மூக்கிற்கு மட்டும் இடைவெளி விட்டு கட்டிவிட்டவன், விஜயிடம் அவளைத் தள்ளி விடவும், காவ்யா தடுமாறியவாறு அவனின் மேல் வந்து விழுந்தாள்.


தன் மேல் விழுந்தவளை விஜய் கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு வெளியே வந்தவன். காரின் பின்னிருக்கையின் கதவை திறந்து அவளை .இருக்கையின் அடியில் தள்ளினான்.


பின் “நிமிர்ந்து பார்த்தா.. தலை உன் உடம்பில் இருக்காது.” என்று மிரட்டிவிட்டு டிரைவர் இருக்கையில் அமர்ந்தவன், மகேஷிடம் சல்யுட் ஒன்றை வைத்துவிட்டு காரை கிளப்பினான். அது சாமுண்டி காலனியை நோக்கி சென்றது.


கார் கிளம்பிய ஐந்து நிமிடத்தில் காவ்யா மெல்ல எழுந்து இருக்கையில் அமரவும், விஜய் கையை எட்டி.. அவளது வாய் மற்றும் கண்களில் கட்டியிருந்த துணியை கீழே இழுத்துவிட்டான். காவ்யா “கையையும் கழற்றி விடு! அப்படியே வேற டீசர்ட் ஒன்று வாங்கணும்.” என்றாள். வீரா அவளது பட்டன்களை பிய்ந்துவிட்டதால்.. சட்டையின் இரு பகுதிகளையும் மூன்று இடத்தில் முடியிட்டு இருந்தாள்.


தனது கைக்கட்டுக்களை கழற்றி விடுவான் என்று முதுகை திருப்பி காட்டினாள். ஆனால் விஜய் “அதைக் கழற்றி விட்டா.. கார் ஓட்டிட்டே மறுபடியும் கட்ட முடியாது.” என்றான்.


காவ்யா “வண்டியை நிறுத்திட்டு செய்!” என்றவள், அவன் கூறியது புலப்பட.. “என்னது மறுபடியும் கட்ட போறீயா!” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.


விஜய் சாலையை பார்த்தவாறு ஓட்டியபடி “இன்னேரம் நாம கிளம்பினது வீராவின் காதுக்கு போயிருக்கும். அவனுக்கு.. இந்த கெஸ்ட் ஹவுஸில் இருந்து.. காலனின்னு எவ்வளவு பெரிய டிராபிக்கில் மாட்டினாலும்.. எத்தனை மணி நேரத்தில் வந்திரலாம் என்று தெரியும். காரை நிறுத்தி.. டைம் வேஸ்ட் செய்து.. அவனுக்கு நாம் தனியா பேசிக்கிட்டோம் என்றுத் தெரிவிக்க விரும்பலை.” என்றான்.


அதைக் கேட்ட காவ்யா மேலும் அதிர்ந்தவளாய் “என்னை அங்கேயா கூட்டிட்டு போறே..” என்றாள்.


அதற்கு விஜயிடம் இருந்து பதிலில்லை.


காவ்யா மாறாத அதிர்ச்சியுடன் “விஜய்! முதல்ல என்றால் வேற மாதிரி.. இப்போ.. என் மேலே பயங்கரமா டவுட் வந்திருக்கு.. போதாக்குறைக்கு.. ஆமா ஒத்துக்கிறேன். நான் போனது முட்டாள்தனமான வழி தான்! அதனால் இப்போ என்னை ஃகால் கேர்ள் என்று நினைத்திருப்பாங்க! சோ இப்போ அங்கே நான் போறது ரொம்ப டேன்ஞ்சரஸ்..” என்றாள்.


விஜய் “டொன்ட் வெர்ரி! நம் முதல் பிளன்படி நீ அவங்கள்ல ஒரு ஆளா போற மாதிரி தான் பேசியிருக்கேன்.” என்றான்.


அதற்கு காவ்யா “நான் இரண்டாவதா சொன்னதைக் கவனிக்கலையா! எப்படி உன்னால என்னை மறுபடியும் அங்கே கொண்டு போய் விடத் தோணுது. நான் பாட்டிற்கு ஏதோ எனக்கு தோன்றியதைச் செய்து.. பணம் சம்பாதிச்சுட்டு இருந்தேன் தானே! உன் கண்ணுல நான் ஏன் படணும்? எனக்கு நீ யார்? நான் ஏன் நீ சொன்னதைச் செய்யணும்?” என்றுப் படபடவென பொரிந்தாள்.


விஜயின் பதில் நிதானமாக வந்தது.


“பிகாஸ் நீ உயிரோட இருக்கிறதுக்கு என் அப்பா தான் காரணம்! உன் சிஸ்டர் உயிரோட இருக்கிறதுக்கு நான் காரணம்..” என்றான்.


படபடவென பொரிந்துக் கொண்டு வந்தவள், அவன் கூறியதைக் கப்பென்று வாயடைந்தவளாய் அமர்ந்துவிட்டாள்.


காவ்யா அமைதியாக வரவும் விஜய் தொடர்ந்து பேசினான்.


"அன்னைக்கு நீ நடுவில் வராம இருந்திருந்த என் அப்பா தப்பிச்சுருப்பார். உன்னை காப்பாற்ற போய் தான் அவர் எங்களுக்கு இல்லாம போயிட்டார்" என்றவனின் கண்கள் கலங்கியது.


காவ்யா மெல்லிய குரலில் "அந்த நன்றி இருக்கிறதால் தான்.. உனக்கு ஹெல்ப் செய்யறேன். ஆனா உன் அப்பா காப்பாத்தின உயிரை நீ எடுத்திருவே போல.. " என்று கோபத்துடன் கூறினாள்.


இன்னும் அவளது கரங்கள் பின்னால் கட்டப்பட்டு.. அமர்ந்திருந்த நிலை அவளுக்கு எரிச்சலை கிளப்பியது.


விஜய் "எனக்கு உன் உயிர் எல்லாம் வேண்டாம். நான் சொல்வதைச் செய்தால் போதும். உனக்கும் ஒன்றும் ஆகாது." என்றான்.


காவ்யா "அப்போ கெஸ்ட் ஹவுஸில் சொன்ன மாதிரி அவன் கிட்ட பிஹேவ் செய்ய சொல்றீயா.." என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.


விஜய் "எஸ்.." என்று சாதாரணமாக கூறினான்.


காவ்யா அதிர்ச்சி‌ மாறாமல் கோபத்துடன் அவனைப் பார்த்தாள்.


திரும்பி பார்க்காமலேயே அவளது கோபத்தையும் அதிர்ச்சியை அவனால் உணர முடிந்தது.


எனவே மெல்லிய முறுவலுடன் விஜய் "டொன்ட் வெர்ரி! அங்கே ரஞ்சனா என்று‌ ஒருத்தி இருக்கா.. அவ உன்னை வீரா கிட்ட நெருங்க விட மாட்டா.. அவளுக்கு வீரா மேலே பைத்தியம். அவளைத் தாண்டி.. வீராவை உன் பக்கம் இழுக்க ட்ரை செய்! அங்கே நான் உன் கூடத் தான் இருப்பேன். அது மட்டுமில்லாம இன்னும் நம்ம ஆளுங்க ரெண்டு பேர் இருப்பாங்க.. சோ உனக்கு எந்த பயமும் வேண்டாம். வேற வழியா உன்னை உள்ளே கொண்டு போகலாம்னு நினைச்சேன். ஆனா நீதான் இப்படி மாட்டிட்டு.." என்று அவளைத் திருப்பிப் பார்த்தவனின் பார்வை அவள் முடிச்சிட்டு இருந்த சண்டையிடும் சென்றது. அது கண்டு காவ்யா முறைக்கவும் விஜய் சிரித்தவாறு திரும்பினான்.


காவ்யா “என்னால் முடியாது.” என்றாள்.


அதற்கு விஜய் “மறுப்பா சொல்றீயா! முடியுமா என்கிற டவுட்டில் கேட்கறீயா..” என்றுக் கேட்டான்.


காவ்யா “நான் மறுக்க முடியாத சிட்டிவேஷனில் இருக்கேன். டவுட்டா தான் கேட்கிறேன்.” என்றவளின் குரல் சோர்ந்து ஒலித்தது.


மெலிதாக முறுவலித்த விஜய் சாலையில் இருந்து பார்வை எடுக்காமலேயே “உன்னால் முடியும். பிகாஸ் நீ அழகா இருக்கே! நீ மட்டும் என் அப்பா இறந்ததிற்கு காரணமா இல்லாமல் இருந்திருந்தா.. நான் உன்னை லவ் செய்திருக்கலாம்.” என்றுச் சிரித்தான். விஜய் தன்னை கேலி செய்வது போன்று காவ்யாவிற்கு தோன்றியது.


காவ்யா சலிப்புடன் “நான் உன் அப்பா இறப்பைப் பற்றிய உண்மை சொல்லலைன்னா உனக்கு தெரிந்திருக்காது விஜய்! போன வருஷம் உன் அப்பாவோட நினைவு நாளில்.. உன் மீட் செய்தப்போ.. கில்டி ஃபீலில் நான் இதைச் சொல்லிட்டேன். அதை வச்சு நீ இப்படி என்னை யுஸ் செய்ய நினைப்பேன்னு நான் நினைச்சு பார்க்கலை.” என்றாள்.


சிறிது நேரம் விஜயிடம் இருந்து பதிலளில்லை.


அவனது யோசனை இங்கு இல்லை என்பது அவனது முகத்தைப் பார்த்தாலே தெரியவும், காவ்யா சிறு எரிச்சலுடன் முகத்தைத் திருப்பினாள். அப்பொழுது விஜய் பேசினான்.


“ஆமா காவ்யா! நீ சொல்லைன்னா எனக்கு இது தெரிந்திருக்காது. வீராவிற்கு எதிரா சாட்சி கூற ட்ரை செய்தார் என்பதற்காக என் அப்பாவை திட்டமிட்டு கொன்றவனிடமே போய்.. என் அப்பாவின் சாவிற்கு பழிக்கு பழி வாங்க முட்டாள்தனமா ஹெல்ப் கேட்டிருக்கேன். அவனும் எல்லாம் தெரிஞ்சும்.. என்னமோ எனக்கு ஹெல்ப் செய்யற மாதிரி செய்து.. என்னை கைக்குள் போட்டுட்டு இத்தனை நாட்களா அவனோட காரியத்தை சாதிச்சுருக்கான். எனக்கு உதவி செய்தவன் என்று நெனைச்சு.. அவனுக்கு எத்தனை சட்டவிரோதமான காரியங்கள் செய்துக் கொடுத்திருக்கேன் தெரியுமா! என்னை கிரிமினலா மாத்தின அவனை சும்மா விட மாட்டேன்.” என்றவனின் குரல் இறுகியது.


காவ்யா மெல்ல “அவனைக் கொல்ல பிளன் போடறீயா..” என்றுக் கேட்டாள்.


அதற்கு விஜய் “அவனை அழிக்க நினைக்கிறேன். அவனோட சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமா.. அழியறதை அவன் பார்க்கணும். அவன் அவனோட வாழ்விற்காக ஓடி ஒளியணும். என்னேரமும் எதையாவது கணக்கு போடும் அவனது மூளை எதைப் பற்றியும் யோசிக்க முடியாம திணறணும். அவனைச் சுற்றியிருக்கிற.. நம்பிக்கையான ஆட்களை அகற்றி.. நம்பிக்கை துரோகிகளை நிறுத்தி.. அவனைத் தனிமைப்படுத்தணும். அதிகாரமும்.. எதிரியை வீழ்த்துவதும்.. அவனோட இரத்தத்தில் ஊறிப் போயிருக்கு. அந்த இரத்தம் சொட்ட சொட்ட அவன் வாழ ஆசைப்படணும். ஆனா அவன் ஆசைப்படற நொடி அவனோட வாழ்வின் கடைசி நொடியாக இருக்கணும். அந்த நொடியில் அவன் பார்க்கிற கடைசி ஆள் நானாக இருக்கணும். அவன் உயிர் என் கையில் தான் போகணும்.” என்று குரல் இறுக கூறினான்.


விஜய் கூறியதைக் கேட்டு காவ்யா வாயைப் பிளந்துக் கொண்டு பார்த்தாள்.


பின் காவ்யா “அவனை போலீஸில் பிடித்துக் கொடுக்க.. இத்தனையும் செய்யலையா..” என்றுக் கேட்டாள்.


அதைக் கேட்டு சத்தமாக சிரித்த விஜய் “என்னது போலீஸில் பிடிச்சு கொடுக்கிறதா.. அவன் அங்கே கெஸ்ட் மாதிரி போயிட்டு வருவான். அவங்களும்.. அவனுக்கு இராஜமரியாதை கொடுத்து பார்த்துட்டு நாலு நாளில் அனுப்பிருவாங்க! என் பிளனே வேற.. அவனுக்கு எதிரா ஆட்களை திருப்பினா கண்டுப்பிடிச்சுருவான். என் ஆட்களை அவனோட க்ரூப்பில் சேர்த்தி.. அவனை நெருக்க பார்க்கிறேன்.” என்று கண்கள் பளபளக்க கூறினான்.


அதைப் பார்த்த காவ்யா “இப்போ உன்னைப் பார்க்க தான் பயமா இருக்கு விஜய்!” என்றாள்.


அதற்கு விஜய் “நீயா பயப்படற ஆள்?” என்று உதட்டை வளைத்து சிரித்தான்.


காவ்யா பெருமூச்சுடன் இருக்கையில் சாய்ந்தவாறு “என் பயத்தைப் பற்றி மட்டுமில்ல.. என் மறுப்பைக் கூட நீ மதிக்க மாட்டேனு எனக்கு தெரியும். உங்க அப்பாக்கு மட்டுமில்ல.. உனக்கும் நான் நன்றி கடன் பட்டிருக்கேன். என் தங்கச்சிக்கு நீ செய்யறது சாதாரண ஹெல்ப் இல்ல!” என்றவளுக்கு அவளது தங்கையை நினைத்து மனம் கலங்கியது.


விஜய் “அதை வச்சு பிளாக்மெயில் செய்ய கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு! ஆனா எனக்கு வேற வழி தெரியலை. பத்து நாட்களுக்கு முன்னே தான்.. பிளட் டோனர் செய்தேன். இனி ரெண்டு மாசம் கழிச்சு தானே..” என்றான்.


அதற்கு காவ்யா ஆம் என்றுத் தலையை மட்டும் ஆட்டினான். அவளது தங்கைக்கு அரிய வியாதி உள்ளது. அவளது இரத்தஅணுக்களின் எண்ணிக்கை தினமும் குறைந்து கொண்டே வரும். அதற்கு எத்தனையோ வைத்தியம் பார்த்தாகிவிட்டது. சொத்தை விற்று.. ஆண்டியாகி! கடன் கேட்பார்களோ என்று.. சொந்தங்கள் ஒதுங்கியது தான் மிச்சம்! பணம் இருந்தாலும் காவ்யாவின் தங்கை பிந்தியாவின் இரத்தவகை அரிய வகையான ஏபி நெகட்டிவ்.. எனவே இரத்தம் கிடைப்பதும்.. அரிதாக இருந்தது. இந்நிலையில் விஜயின் அறிமுகம் கிடைக்க அவளது தங்கையின் நிலை அறிந்தவன்.. அவனது இரத்தம் ஏபி நெகட்டிவ் தான் என்றுக் கூறி.. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை.. இரத்தம் தர ஒத்துக் கொண்டான். அப்பொழுது காவ்யாவை அவன் கிணற்றில் விழு என்றுச் சொன்னால் கூட விழ தயாரா இருந்தாள்.


அந்நிலையில்.. வீராவை பற்றி கூறி.. அவனை வீழ்த்த.. அவர்களது கூட்டத்தில் ஒருவராக சேர வேண்டும் என்றுக் கூறிய பொழுது உடனே ஒத்துக் கொண்டாள். அப்பொழுது.. வீரா என்று நிழல் உலக தாதாவை காவல் துறையிடமும் அடையாளம் காட்ட என்று எண்ணினாள். ஆனால் தற்பொழுது.. விஜய் கூறுவதைக் கேட்டு திகைத்தாள். அவனைத் திட்டினாள். அவனிடம் கோபம் கொண்டாள். ஆனால் மறுத்து மட்டும் பேசவில்லை. அவளது தங்கை உயிர் வாழ விஜய் வேண்டும்.


காவ்யா அமைதியாக வரவும், விஜய் “ஏன் அமைதியாகிட்ட காவ்யா?” என்றுக் கேட்டான்.


பெருமூச்சை இழுத்துவிட்ட காவ்யா “ஒகே விஜய்! உன் அப்பாவோட சாவிற்காக பழிக்கு பழி வாங்க.. இந்த எக்ஸ்ட்ரீம் வரைக்கும் போக ரெடியாக இருக்கும் போது.. என் சிஸ்டர் உயிரோட வாழ.. நானும் எந்த எக்ஸ்ட்ரீம் வரைக்கும் போக ரெடி! என் சிஸ்டருக்காக நீ நல்லா வாழணும். அதற்கு நான் என்ன வேண்டுமென்றாலும் செய்ய ரெடி..” என்றாள்.


அதைக் கேட்டு காரை ஓட்டியவாறு திரும்பிப் பார்த்த விஜய் “எஸ்! நான் பார்த்து வியந்த காவ்யா இதுதான்!” என்றுவிட்டு நேராக அமர்ந்தவன், “இப்போ சொல்லு! நேத்து வீரா என்ன சொன்னான். யார்? என்ன என்று எதாவது விசாரிச்சானா..” என்றுக் கேட்டான்.


அதற்கு காவ்யா “அவனா! என்னைப் பார்த்ததும்.. நான் அவன் கூட நைட் ஸ்பென்ட் செய்ய வரலைனு கண்டுப்பிடிச்சுட்டான். ஆனா என் பட்டனில் வச்சுருந்த.. ரெக்கார்ட்டிங் டிவைஸை எப்படிக் கண்டுப்பிடிச்சான் என்றுத் தான் தெரியலை.” என்றவள், “இப்போ தெரிஞ்சுருச்சு! நான் ஒரு முட்டாள்..” என்றாள்.


விஜய் என்ன என்பது போல் பார்க்கவும், காவ்யா “அவன் வரும் போது.. நான் ஜன்னல் கிட்ட நின்று பட்டனை கெட்டியா பிடிச்சு வெளியே தெரிந்த பார்ட்டியை படம் புடிச்சுட்டு இருந்தேன். விமன் சப்ளைரா போகும் போது.. அதுதானே செய்ய சொன்னே.. அப்பறம் அதைக் காட்டி மிரட்டர மாதிரி தானே முதல்ல பிளன் போட்டோம். சரி இப்போ நேரா வீராவையே படம் பிடிச்சு.. அதை வச்சு மிரட்டலாம் என்று நெனைச்சேன். நான் பட்டனை பிடிச்சுட்டு நின்றதைப் பார்த்ததும் கண்டுப்பிடிச்சுட்டான் போல..” என்றாள்.


பின் வீரா அவளிடம் கூறியதைச் சொன்னாள். அதைக் கேட்டு சிரித்த விஜய் “வாவ்! வீராவோட வாழ்க்கையில முதல் முறையா தப்பா கணக்கு போட்டிருக்கான். உனக்கு தில்லும் புத்தியும் இல்லையா! அப்போ வீராவிற்கு நான் வைக்கிற முதல் செக் நீதான்!” என்றுச் சிரித்தவனின் கண்கள் பளபளத்தது.


காவ்யா “உன்னால் அவனை அழிக்க முடியும் என்று நினைக்கறீயா..” என்றுக் கேட்டவள், தொடர்ந்து “ஏன் கேட்கிறேன் என்றால்.. என்னோட வொர்க் வோர்த்தா ஆகணுமே! வீணா போகக் கூடாது.” என்றாள். காவ்யாவின் பழைய திமிர் திரும்பி வந்துவிட்டதைக் கண்டான்.


பின் விஜய் “என்னோட திறமை மேலே டவுட்டா இருக்கா.. இன்னும் எனக்கு ரெண்டு இடத்தில் இருந்து ஹெல்ப் கிடைக்கணும். அது கிடைச்சா போதும். ஒண்ணு பெரிய இடம்.. இன்னொன்னு போலீஸ் டிப்பார்ட்மென்ட்டில் கவுர்மென்ட்டிற்கு தெரியாம ஹெல்ப் செய்ய ஒரு ஆள்! இந்த ரெண்டு ஹெல்ப் கிடைச்சுட்டா.. நான் நெனைச்சதை சாதிக்கும் நேரம் வந்தாச்சுனு அர்த்தம்! அதுவரை.. அவனை கொஞ்சம் கொஞ்சமா அவனுக்கே தெரியாம செயலிழக்க வைக்கிற வேலையை பார்க்கணும்.” என்றான்.


காவ்யா “இப்படிப்பட்டவனுக்கு.. எதிரிகள் நிறையா இருப்பான் தானே.. அவங்க கிட்ட போக வேண்டியது தானே..” என்கவும், விஜய் சத்தமாக சிரித்தான்.


விஜய் “வீரா நண்பர்களை விட.. எதிரிகளை தான் பக்கத்தில் வச்சுருப்பான். இன்னும் என்னை அவன் பக்கத்தில் வைச்சுருப்பே அதற்கு சாட்சி..” என்றான்.


காவ்யா “அப்போ இந்த ஒரு வருஷமா உன் மேலே டவுட் வராதபடி நடிச்சுட்டு இருக்கியா! உன்னளவிற்கு என்னால் நடிக்க முடியலைன்னா..” என்றுக் கேட்டாள்.


விஜயிடம் இருந்து சிரிப்பு தான் பதிலாக கிடைத்தது.


பின் வண்டியை ஓட்டியவாறு விஜய் “இன்னும் அஞ்சு நிமிஷத்துல காலனிக்குள்ள போயிருவோம் காவ்யா! எங்க கூட சேர்ந்து.. நான் நெனைச்சதை முடிக்க ஹெல்ப் செய்வே தானே..” என்றுக் கேட்டான்.


காவ்யா “என்னால் முடிந்த வரை.. ட்ரை செய்வேன் விஜய்! என்னால் முடியலைன்னா..” என்று முடிப்பதற்குள்.. விஜய் “அப்படி உன்னால் ரொம்பவும்.. முடியாத போது.. உன்னை இந்த ஆட்டத்தில் இருந்து விட்டுருவேன்.” என்றான்.


அதைக் கேட்ட காவ்யா “என்னையும் ரொம்ப நம்பறீயே விஜய்..” என்றாள்.


அதற்கு விஜய் “பிகாஸ் உன் தங்கையின் வாழ்வு என் கையில்..! இப்படி கண்களைக் கட்டித் தான் உன்னை அனுப்ப போறேன். எதிரே இருப்பதை நீயே தான் கணிச்சு.. சரியான பாதையில் நடக்கணும். அந்த மாதிரி தான்.. அங்கிருப்பவர்களைப் பற்றி கணிச்சு சரியாக நடந்துக்கணும். எப்பவும் முதல் வார்த்தை நீ விட்டுராதே! அவங்க என்ன பேசறாங்க.. என்றுக் கேட்டுட்டு அதற்கு தகுந்த மாதிரி பேசு! அவனோட இடத்தில் இருக்க போறே. நீயும் கவனமா இரு! வீராவின் கவனம் உன்கிட்ட இருக்கிற மாதிரியும் பார்த்துக்கோ..! அவனுக்கு எதிராக எதாவது விட்னஸ்.. ஐ மீன்.. அவன் யார்கிட்ட ஆவது கான்ரெக்ட் செய்த டிடெய்ல்ஸ் கிடைச்சா எடுத்து வை. நான் அப்பப்போ வந்து நான் சில ஹின்ட்ஸ் தருவேன். நம்ம ஆட்களையும் கைக் காட்டுவேன். வேற யாரையும் நம்பிராதே! வீராவிற்கு எதிரி மாதிரி வந்து பேசி.. உன் வாயில் இருந்து வார்த்தை பிடுங்க பார்ப்பாங்க.. ஜாக்கிரதையா இருந்துக்கோ.. எனக்கும் அந்த டெஸ்ட் வச்சுருக்காங்க! என் அட்டேன்ஷனும் உன் மேலே இருக்கும் சோ கவலைப்படாதே!” என்றான்.


காவ்யா சிரித்தவாறு “என்னை பார்த்துக்குவியா! சில நேரங்களில் எப்படி உன்னால் என்னைக் காப்பாத்த முடியும்? அவன் என்னைக் கண்டுப்பிடிச்சு கொன்னுட்டா என்ன செய்வே! என்ன தான் அவன் பொண்ணுகளைத் தொடாதவனா இருந்தாலும்.. அந்த ரஞ்சனா தடையா இருந்தாலும்.. இதையெல்லாம் மீறி.. அவனால் எனக்கு எதாவது ஆச்சு என்றால் என்ன செய்வே?” என்றுக் கேட்டாள்.


விஜய் “நீ மாட்டிக்கிட்ட நானும் மாட்டிக்குவேனு உனக்கு தெரிந்தால் போதும்.. நீ கவனமாக இருப்பே! அடுத்தது.. என்னைப் பொறுத்தவரை.. ஒரு பெண்ணோட அனுமதியில்லாமல் நடப்பது ஆக்ஸிடென்ட்! ஒருத்தன் எந்த எண்ணத்தோட உன்னைத் தொட்டாலும்.. அது உன்னைப் பாதிக்கலைன்னா.. அதுல அர்த்தமே இல்லை.” என்றுத் தோள்களைக் குலுக்கியவன், காரை ஓட்டியவாறு திரும்பி கழுத்து வரை இழுத்துவிட்டிருந்த துணியைக் கொண்டு.. அவளது கண்கள் மற்றும் வாயை இறுக கட்டியபின் “இத்தனை கஷ்டங்களை தாண்டி.. நான் நினைச்சதை சாதிக்க உதவியவளை விட்டுவிட நான் என்ன முட்டாளா..” என்று மெல்லியதாக புன்னகைத்தான்.


பின் “ஆல் த பெஸ்ட்..” என்றுவிட்டு சாமுண்டி என்று பழுப்பேறிய பலகை மாட்டப்பட்ட காலனிக்குள் புகுந்தான்.


வீரா கூறிய வேலையை முடித்துவிட்டு.. மகேஷ் வீராவிற்கு ஃபோன் போட்டான்.


“பாஸ்! நமக்கு உளவுப் பார்க்கிறவன்.. சரிதான் சொல்லியிருக்கான். நாளைக்கு நைட்.. கெலக்ஸி ரிசர்ட்டில் ஏதோ பார்ட்டி நடக்குது. ஷ்யாம் ஆக்டரோட பையனோட பிரெண்ட் பர்த்டேவாம்! அங்கே வேலை செய்யற ஆள் கிட்ட இன்னொரு ஆள் விட்டு பேரம் பேசிட்டேன். இன்னைக்கு சாயந்திரம் சரக்கை கொடுத்துட்டா.. அவன் அவங்க குடிக்கிற ட்ரிங்ஸில் கலந்துறேனு சொல்லிட்டான். அவன் கலக்கிறானனு பார்க்கிறதுக்கும் ஆள் போட்டுட்டேன். அவனையும் இன்னொரு ஆள் வச்சு தான் பேசினேன். எதுலயும் நான் நேரா பேசலை.” என்றான்.


வீரா “ரைட்டு! நீ கிளம்பி வா! சாயந்திரம் சரக்கு கொடுக்க.. நம்ம கதிரை அனுப்பு! அவன்தான் பார்க்க ஆள் டிப்டாப்பா இருப்பான். டவுட்டு வராது.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.


விஜய் காரை ஒட்டி வரவும், அவனைப் பார்த்தவர்கள் சல்யுட் வைத்தார்கள். சிலர் காரை மறித்து.. காரை விட்டு இறங்கி வரச் சொல்லி விளையாடி வம்பிழுத்தார்கள்.


விஜய் வீராவை பார்க்க வந்திருப்பதாக கூறவும், பம்பியவாறு வழி விட்டார்கள்.


வீரா எங்கு இருக்கிறான் என்றுக் கேட்டு.. சென்றான். காரில் இருந்து இறங்கியவன், மீண்டும் இருக்கைக்கு அடியில் படுத்திருந்த.. காவ்யாவை பற்றி வெளியே இழுத்தவன், கண்களில் இருந்த துணியை மட்டும் அகற்றிவிட்டு.. ஒரு கட்டிடத்திற்குள் இழுத்து சென்றான். விஜய் நுழைந்ததும்.. அவனுக்காக இருவர் காத்திருந்தார்கள்.


“அண்ணாத்தா! நீ ஒரு பொண்ண இட்டான்டு வருவீங்க சொன்னாரு! அவளை இங்கே தள்ளிட்டு.. உங்களை மாடிக்கு வரச் சொன்னாரு..” என்று காவ்யாவை தன்புறம் இழுத்தான். காவ்யாவிற்கு திக்கென்று இருந்தது. எனவே இயல்பாக தோன்றிய பயத்துடனும் சற்று திமிறியவாறு சென்றாள். ஒரு அறைக்கு முன்.. சென்றவர்கள்.. அறையைத் திறந்து.. அவளை உள்ளே தள்ளிவிட்டு.. கதவைச் சாத்திக் கொண்டு சென்றார்கள்.


உள்ளே தள்ளப்பட்ட காவ்யா சற்று மிரட்சியுடன் சுற்றிலும் பார்த்தாள். யாரும் அங்கு இல்லாதிருப்பது கண்டு சற்று நிம்மதியுற்றவள், வாய் கட்டையும் கை கட்டையும் அவிழ்க்க முயன்றாள். சுவற்றில் முகத்தை வைத்து தேய்த்து வாய் கட்டை அவிழ்த்தவளால் கைக்கட்டை அவிழ்க்க முடியவில்லை. எனவே தனது முழு பலத்தையும் உபயோகித்து.. கதவில் முட்டினாள். மீண்டும் மீண்டும் மோதி கதவைத் தட்டவும், வெளியே இருந்து குரல் கேட்டது.


“ஏ புள்ள கம்முனு கிட! இல்லாட்டி நான் புகுந்து விளையாடிருவேன்.” என்றுவிட்டு கர்ண கொடூரமாக சிரிக்கவும், அவனோடு மற்ற குரல்கள் சேர்ந்து கொண்டது.


அதைக் கேட்ட காவ்யா “இத வீரா கிட்ட சொல்லிப் பாரு! அப்பறம் தெரியும் உன் நிலைமை..” என்றுக் கத்தினாள்.


சிறிது நேரம் அந்த பக்கம் இருந்து சத்தம் வரவில்லை.


பின் “ஏ! என்ன டபாய்கிறீயா..” என்று ஒரு ரௌடி கத்தினான். காவ்யா அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் கதவில் மோதிக் கொண்டிருந்தாள்.


மோதி மோதி ஓய்ந்தவளுக்கு. இனி முடியாது என்றுத் தோன்றியது. ஆனால் அவள் நிறுத்த விரும்பவில்லை. அவள் அமைதியாக அடைப்பட்டு கிடந்தால்..வீராவை சந்திக்காமல் போக நேரிடும். வீராவின் தனிப்பட்ட கவனம் அவள் மீது.. திரும்பாது, மற்ற ஆட்களில் ஒருவராக அவளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு.. அவனது ஆட்களில் ஒருத்தியாக தான் மாற நேரிடும். ஆனால்.. அவளுக்கும் விஜயிக்கும் வேண்டுவது அதில்லை. வீராவின் சிந்தையை சிதறடிக்க வேண்டும். அவளின் மீது அவனது கவனம் மோகமாக தான் என்றில்லை. கோபம், வியப்பு, பாராட்டு என்றாவது ஒரு வகையில் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க வேண்டும் என்றால்.. அவள் தற்பொழுதே காரியத்தை தொடங்க வேண்டும். எனவே உடல் ஓய்ந்த போதும்.. நிற்காது மோதிக் கொண்டிருந்தாள்.


அப்பொழுது கதவு திறக்கும் சத்தம் கேட்கவும், வெளியே நின்றிருந்த அடியாட்களில் ஒருவன் திறக்கிறான் என்றுத் தெரியவும், தனது முழுபலத்தையும் திரட்டி அவனின் மோத தயாரானாள்.


கதவு திறக்கப்படவும், வேகமாக மோத வந்தவளை இலவகமாக பிடித்து.. தோளைப் பற்றி அழுத்தவும், தற்பொழுது வீராவின் காவ்யா மண்டியிட்டு அமரந்திருந்தாள்.


எப்படி என்றுத் தெரியாது. தான் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைக் கண்டு திகைப்புடன் நிமிர்ந்துப் பார்த்தவள், அங்கு வீரா இடுப்பில் கரத்தை வைத்தப்படி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.


காவ்யா அவனது முகத்தில் இருந்து பார்வை எடுக்காது.. “ஏன் வீரா லேட்?” என்றுக் கேட்டாள்.


ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்..

நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்..

இவள் தானே எரிமலையை அள்ளி மருதாணியை போல் பூசியவள்..


(பாடல் இடம் பெற்ற படம் சாம்ராட்)






 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..

பயங்கர பல் வலி.. எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.. பல் டாக்டர் கிட்ட போனா.. இருபதாயிரம் மொய் வச்சால்.. பத்து நாள் ட்ரீட்மென்ட் இழுத்துட்டு தான் விடுவங்க..

அதனால் ஜுலை முதல் வாரம் வரேன் பிரெண்ட்ஸ்..

ரொம்ப ஸாரி..
 
Status
Not open for further replies.
Top