All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கதை திரி

Status
Not open for further replies.

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாகம் 22

சிறிது நேரத்தில் தன்னை சரி செய்து கொண்ட ராதா தனது கவனத்தை வேலையில் திருப்பினாள். கணினியில் தனக்கு வந்த மெயில்களை பார்வையிட்டு வந்தவள் வருண் அனுப்பிய திருமண ஆர்டர் மெயில் திறந்தாள். அதில் வாடிக்கையாளரின் தேவைகளை படிக்க தொடங்கினாள். ராதையும் கிருஷ்ணரும் ஒன்றாக இருப்பது போன்று டிசைன் வேண்டும் என்று அவர்கள் விரும்பி இருந்தனர்.

மனம் வேலையில் செல்வேனா என அடம் பிடித்தது, ஆனாலும் அதில் இருந்த ராதா கிருஷ்ணா டிசைன் சற்றே வேலை செய்ய கை தன்னால் வரைய ஆரம்பித்தது. அவள் முடித்தபோது அழகிய மயிலிறகிற்க்குள் ராதாவும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் சிருங்காரமாய் பார்த்து கொண்டு நின்றனர். அதற்கு அவள் சேர்த்திருந்த வண்ணங்களில் கிருஷ்ணா நீல நிறத்திலுள், ராதா பச்சை நிறத்திலும் இரு நிறமும் சேர்ந்து பின்புலம் மயிலிறகாய் பச்சையும் நீளமும் ஒன்றிணைந்து பார்ப்பவர் கண்களை மட்டுமல்லாமல் மனதையும் நிறைக்கும் விதமாக உயிரோட்டமாக இருந்தது.

ஓவியத்தை முடித்து பார்த்த பிறகு ராதாவின் மனம் சற்றே தெளிந்தது, அந்த ஓவியம் தன்னையும் தன் மாமாவையும் இணைத்து விட்டதை போன்று நினைத்து கொண்டாள். எப்பொழுதெல்லாம் அவளது மனம் அலைப்பாய்கிறதோ அப்போதெல்லாம் ராதாகிருஷ்ணா ஓவியத்தை வரைவது அவளது பொழுதுபோக்கு. எந்த நாளிலும் ராதையும் கிருஷ்ணாவும் பிரிக்க முடியாதவர்கள் என்று அவளுக்கு அவளே சொல்லி கொண்டாள்.

ராதையும் கிருஷ்ணாவும் பிரிக்க முடியாதவர்கள் என்றால் அவர்கள் ஏன் ஒன்று சேரவில்லை, அவர்களது வாழ்கை போல தான் தன்னுடையதும், தன்னவனை நினைத்து கொண்டு வாழ்ந்து விட வேண்டும். ஆனா மாமா என்னை மறந்துட்டு இருப்பாங்களா? நான் வேண்டாம்னு வந்துட்டா மறந்துடுவங்களா?? என்னை தேட மாட்டாங்களா?? இனிமே நான் அவங்களை பார்க்க முடியாதா?? நான் என்ன செய்வது எனக்கு அவங்களை பார்க்கணும் போல இருக்கே....என மனதின் ஒரு புறம் அவளுக்கு உண்மையை கூற, வேண்டாம் உன்னை மாதிரி ஒருத்தி அவங்களுக்கு வேண்டாம் நீ ஓர் அதிர்ஷ்டம் கெட்டவ என்று சிவகாமி சொன்ன அனைத்தையும் (ஏம்மா அது சஷ்டி கவசமா தினமும் நினைக்க) மறுபுறம் உரைக்க அவளுக்குள் போராடி வாதாடி ஓய்ந்தாள். தீவிரமாக போராடி முடித்தவளுக்கு தலைவலியும் தீவிரமாக வந்தது. வருணுக்கு லீவ் கேட்டு மெயில் அனுப்பியவள் உடனே வீட்டிற்க்கு கிளம்பியும் விட்டாள். தன் அறைக்கு சென்று ஒரு பாட்டம் அழுது தீர்த்தவள் கிருஷ்ணாவின் படத்தை அணைத்து கொண்டு உறங்கினாள்.

மாலை வேலை முடிந்த பிறகு சுஹாசினிக்கு தெரிந்தது அவள் முன்பே கிளம்பி விட்டாள் என்று. வேகமாக வீட்டிற்க்கு வந்தவள் அவளது அறைக்கதவை தட்ட அது உள்ளே தாளிடப்பட்டிருந்தது. இருவரும் ஒன்றாக இருந்தாலும் ராதா அவளது அறைக்குள் சுஹாவை அனுமதித்ததில்லை. தன் கிருஷ்ணாவை யாருக்கும் காட்டியதில்லை. சரி அவள் உள்ளே நிம்மதியாக உறங்கட்டும் என்று நிதானமாக தன் வேலைகளை பார்க்க தொடங்கினாள். வெகு நேரமாகியும் கதவு திறக்கத்ததால் சுஹா மீண்டும் கதவை தட்ட அழுது வீங்கிய முகத்துடன் வந்து கதவை திறந்தாள் ராதா.

“ஏய் என்னமா முகம் இப்படி வீங்கி இருக்கு, உடம்புக்கு ரொம்ப முடியலையா?”

“ஒண்ணுமில்லை சரியாகிடும்”

“என்ன விளையாடுறியா? ஒழுங்கா டாக்டர்கிட்ட கிளம்பு....”

“வேண்டாம்”

“அதெல்லாம் முடியாது வா என்கூட” பிடிவாதமாக அருகிலிருந்த டாக்டரிடம் அழைத்து சென்றாள் சுஹா

இவர்கள் வரிசையில் காத்திருக்க வருண் தன் பாட்டியுடன் டாக்டர் அறையிலிருந்து வெளியே வந்தான். இவர்களை பார்த்தவன் அருகில் வந்து “என்னாச்சு சுஹாசினி, ராதாவுக்கு என்ன உடம்புக்கு???”

“பீவர் சார்”

“ஒஹ்...ரொம்ப டல்லா இருக்காங்க...என்னோட பாட்டி எப்பவும் இந்த டாக்டர்கிட்ட வருவாங்க. பாட்டி இவங்க சுஹாசினி ராதா நம்ம ஆபிஸுல வேலை செய்யுறாங்க.”

“அப்படியாப்பா, உடம்பு சுகமானதும் வீட்டுக்கு வாங்கம்மா” அன்புடன் அழைத்தார் பாட்டி.

பாட்டியின் அன்பான வார்த்தைகள் தனது பாட்டிகளை நினைவுபடுத்த மீண்டும் கண்ணீர் பெருகியது, அதை மறைக்க தலையை குனிந்து அமர்ந்து கொண்டாள். ராதாவின் முகத்தை திரும்ப பார்த்து கொண்டே வருண் சென்றான்.

டாக்டர் அவளை பரிசோதித்துவிட்டு ஜுரம் ரொம்ப அதிகம் இல்லை, ஆனா ஏதோ மன உளைச்சல் போல இருக்கு....என்னம்மா ஆபிஸ்ல மேனேஜர் ரொம்ப திட்டிட்டறா??

“இல்லை”

“சரி, பசிச்சு நல்லா சாப்பிடுறீங்களா??”

ம்ம்ம் என்று ராதா தலையாட்ட, “இல்லை டாக்டர், இவ நல்லா சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை”. என்றாள் சுஹா

“நீங்க யாரும்மா?? இவங்க பாமிலி ஆளுங்க எங்க??”

“நாங்க இங்க தனியா தங்கி வேலை செய்யுறோம். பாமிலி எல்லாம் ஊர்ல இருக்காங்க.”

“எல்லாத்துக்கும் நீங்க பதில் சொல்றீங்க இவங்க பேச மாட்டாங்களா??”

“அவளால பேச முடியாது, ஒரு விபத்துல பேச்சு போய்டதா சொன்னா???”

“சரி என்னதான் சாப்பிடுவாங்க???”

“வெறும் காய்கறி, பழம், சுண்டல் இதுதான். வேக வச்சது சாப்பிட்டு பார்த்ததில்லை.”

“குட் ரொம்ப நல்ல டயட்....சரி ராதா, இதுவரைக்கும் நீங்க எப்படி சாப்பிட்டு இருந்தாலும் பரவாயில்லை, ஜுரம் சரியாகிற வரைக்கும் கொஞ்சம் கஞ்சி, இட்லி, ப்ரெட் இது மாதிரி சாப்பிட்டு மெடிசின் எடுத்துகோங்க.....புரியுதா??”

ம்ம்ம்....தலையை பலமாய் ஆட்டிவிட்டு வெளியே வந்தாள்.

அவர் கூறியபடி மருந்துகளை கொடுத்து நன்றாக பார்த்து கொண்டாள் சுஹா.

இரண்டு நாட்கள் மருந்துகளுடன் ஓய்வெடுக்க அவளின் உடல் ஓரளவு தேறியது.

மூன்றாவது நாள் ஆபிசுக்கு கிளம்பினாள் ராதா. வேண்டாம் நாளைக்கு வா என்று சுஹாசினி எவ்வளவு கூறியும் கேட்காமல் கிளம்பி விட்டாள். ராதாவின் உடல் ஓய்வு கேட்க மனதுடன் போராட முடியாமல் அவள் வேலைக்கு கிளம்பினாள்.

முயன்று வேலையில் தன் கவனத்தை செலுத்தி கொண்டு அதில் வெற்றியும் பெற்றாள். வேலையை ஆரம்பித்த நேரம் தொலைபேசி அழைக்க, அதில் வருண் அவளை அவனது அறைக்கு வருமாறு அழைத்தான். இவருக்கு வேற வேலை இல்லை மனதிற்குள் திட்டி கொண்டே அவனது அறைக்கு சென்றாள்.

கதவை தட்டி உள்ளே நுழைந்தவள் அமைதியாக நின்றாள்.

“குட் மார்னிங் ராதா”

இவளுக்கு முதுகு காட்டியபடி ஒருவன் அவனுக்கு எதிரில் அமர்ந்திருக்க இவள் தயங்கியபடி கதவருகே நின்றாள்.

உள்ளே வாங்க ராதா, நம்ம கம்பெனியின் முக்கியமான பாட்னரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க உங்களை கூப்பிட்டேன்.

நமக்கு எதற்கு அறிமுகபடுத்தணும் யோசித்து கொண்டே நிற்க

“மீட் மிஸ்டர் கிருஷ்ணச்சந்திரன் எங்களுக்கு செல்லமா KC”

கோடி மின்னல் தன் மேல் விழுவதை போன்று உணர்ந்தவள் சட்டென்று புதியவன் பக்கம் திரும்ப

அவனோ இவள் யார் என்றே தெரியாதவன் போன்ற இறுக்கமான முகத்துடன் இவள் புறம் திரும்பினான்.

தன்னவனை கண்டதும் அது உண்மைதானா என்று புரியாமல் ஒரு குழந்தை போல திரு திருவென விழித்தவள், காலையில் சரியாக உண்ணாதது, இரண்டு நாள் உடல்நலக்குறைவு, மன உளைச்சல் அனைத்தும் சேர மாமா என முனகியபடி அப்படியே மயங்கி சரிந்தாள்.

தன்னவள் மீது அடுக்கடுக்கான கோபக்கோட்டையை கட்டி வைத்து கொண்டு அவளை இங்கு வந்து வச்சு செய்யனும் என்று நினைத்து கொண்டு வந்த கோபக்கார கிருஷ்ணா அவள் மயங்கியதும் செலக்டிவ் அம்னிஷியா நோயாளியாக மாறி அவனது பாப்புவின் மாமாவாக மாறி விட்டான்.

“பாப்புபுபுபு” ஓடி சென்று அவளை தாங்கி பிடித்தான்.

“என்னடா இவ்ளோ மெலிஞ்சு போய்ட்டா, இது என்ன சோதனை” வருண் சீக்கிரம் வண்டியை எடு ஹாஸ்பிடல் போகணும்.

உடனே கிளம்பி மருத்துவமனையில் அவளை சேர்த்தனர். கிருஷ்ணாவிற்கு அவளை முதலில் விபத்தின் போது ஹாஸ்பிடலில் சேர்த்தது அனைத்தும் ஞாபகம் வந்து அலைகழித்தது. அவனின் வருத்தமான முகத்தை பார்த்த வருண், “அவங்க நல்லாத்தான் இருந்தாங்கடா இப்போ ரெண்டு நாளா பீவர் வேற ஒண்ணுமில்லை பயப்படாதே”

“இல்லைடா எனக்கு ரொம்ப பயமா இருக்கு, அவ ரொம்ப மெலிஞ்சு போய் இருக்கா, எப்படிடா ஆறு மாசத்துல இவ்ளோ எடை குறைய முடியும், அவளுக்கு உடம்புக்கு என்னன்னு புரியல, டாக்டர்கிட்ட பேசினாத்தான் எனக்கு நிம்மதி.”

“டாக்டர் பார்த்துட்டு நம்மளை கூப்பிடுவாங்க, கவலைப்படாதே...”

மிஸ்டர் வருண், பேஷன்ட் கூட வந்தது யாரு???

“இவர்தான் டாக்டர்”

“கொஞ்சம் உள்ள வாங்க”

ஆயிரத்தெட்டு தெய்வங்களை வேண்டி கொண்டு டாக்டர் அறைக்குள் நுழைந்தான் கிருஷ்ணா.

பாப்புக்கு இப்போ எப்படி இருக்கு???

“ஷி இஸ் பைன் (she is fine) உட்காருங்க, நீங்க பதட்டப்படாதீங்க, அவங்களுக்கு ஒன்னும் பயப்படுற மாதிரி இல்லை. பீவர் அதிகமா இருந்தது, சரியா சாப்பிடாம மருந்து சாப்பிட்டு இருப்பாங்க அதனால ஏற்பட்ட மயக்கம்...வேற ஒண்ணுமில்லை.

எல்லா டெஸ்டும் ஒரு தடவை செய்துடலாமா?? எனக்கு நிம்மதியா இருக்கும்.

“நீங்க விரும்பினா செய்துடலாம்”

“தேங்க்ஸ் டாக்டர்”

மருத்துவமனையில் இரண்டு மணி நேரம் கழித்து அவள் கண் விழிக்க, எதிரில் சுஹா மங்கலாக தெரிய, வேகமாக எழுந்தவள் முதலில் கேட்டது, “மாமா எங்கே??”

“மாமா யாரு???”

“ப்ச்....திரும்பியவள் கண்ணில் வருண் பட, மாமா எங்கே??

“யாரு?”

“சார் உங்க கூட ரூம்ல இருந்தாரே...”இழுத்து பிடித்த பொறுமையுடன் அவள் கூற,

“அவன் அப்போவே கிளம்பிட்டானே, என் கூட பேசிக்கிட்டு இருந்தான், நீங்க வந்தீங்க மயக்கம் போட்டீங்க, சரி உன் ஸ்டாப் நீ பாருன்னு அவன் கிளம்பிட்டான்.”

“பொய், மாமா இந்த நிலைமைல என்னை விட்டுட்டு போக மாட்டாங்க.”

“ஆமா... நீங்க பேசுறீங்க” ஆச்சர்யமாக கேட்டான் வருண்.

“இனிமே என் மாமா வர வரைக்கும் பேச மாட்டேன்”

இவர்கள் பேசியதை எல்லாம் வெளியில் இருந்து கேட்டு கொண்டு இருந்த கிருஷ்ணாவிற்கு கோபம் அதிகரித்தது. எல்லாம் இந்த மேடம் இஷ்டமா??? புருஷன் என்கிற மரியாதை இல்லை என்ன நினைச்சுகிட்டு இருக்கா மனசில, இருக்கு அவளுக்கு இந்த கிருஷ்ணகிட்ட, இந்தம்மாவா பேசுவாங்க, சிரிப்பாங்க, முடிவெடுப்பாங்க, கிளம்பி வந்துதுடுவாங்க, இப்போவும் நான் வர வரைக்கும் பேச மாட்டாளா?? இவளை என்ன செய்வது??? இவளை கிட்ட இருந்தே வச்சு செய்யனும் செய்யுறேன், தீர்க்கமான முடிவிற்கு பிறகு அறைக்குள் நுழைந்தான்.

தன் மாமா சென்று விட்டான் என்று சோகத்தில் மீண்டும் படுத்து கொண்டாள் ராதா.

கிருஷ்ணா உள்ளே வர ராதா, “மாமா வந்துட்டீங்களா, எப்படி இருக்கீங்க??? வீட்ல தாத்தா பாட்டி, அம்மா அப்பா, பலராம் மாமா கவுசி அக்கா, குட்டி பாப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க???” என்று எழ முயற்ச்சித்தவள் தோல்வியடைந்து பின்புறமாக சாய்ந்தாள்.

கிருஷ்ணா நிதானமாக அவள் அருகில் வந்தவன், நீங்க யாரு?? எதற்கு என்னை மாமான்னு கூப்பிடுறீங்க???

“மாமா”....என்றவளின் தொண்டையிலிருந்து காத்துதான் வந்தது.

“வருண் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் பாதி தூரம் போனதும் ஞாபகம் வந்தது அதுதான் திரும்பி வந்தேன். இங்க வேலை முடிஞ்சுதுன்னா வரியா ஆபீஸ் போகலாம்.” (நீ வருண் கிட்டதான் பேச வந்த நாங்க நம்பிட்டோம்)

“ம்ம் சரி நாம கிளம்பலாம். சுஹாசினி யூ ஜஸ்ட் டேக் கேர் ஆப் ஹர் (you just take care of her)...ஓகே ராதா நாங்க கிளம்பறோம் நீங்க உடம்பு சுகமானதும் ஆபிஸ் வந்தா போதும் அது வரைக்கும் ரெஸ்ட் எடுங்க”.
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாமா போகாதீங்க....இங்கயே இருங்க எனக்கு உங்க கூட இருக்கணும் போல இருக்கு ப்ளீஸ் என ஓவென கத்த வேண்டும் போல இருந்தது ராதாவிற்கு. ஆனாலும் அவளது இயல்பு அதில்லையே, மேலும் தன் தவறு புரிய கண்ணில் நீர் பொங்க படுத்து கொண்டாள். மாமா இங்குதான் இருக்காங்க என்பதே அவளுக்கு ஒரு மன அமைதியை தர கண்ணை மூடி கொண்டாள்.

வெளியில் வந்த வருண் கிருஷ்ணாவை காய்ச்ச தொடங்கினான். “நீ செய்யுறது கொஞ்சம் கூட சரி இல்லை கிருஷ்ணா, ராதா பாவம், இத்தனை நாள்ல அவங்க கண்ல இன்னைக்கு தான் ஒரு மலர்ச்சி தெரிஞ்சுது, அடையும் உடனே துடைத்து எடுத்துட்ட. உன்கிட்ட இதை எதிர்பார்க்கல டா very disappointing”

“போதும்டா நீங்க முதல்ல எனக்கு பிரெண்ட் என்னவோ அவளுக்கு வேண்டியவங்க மாதிரி பேசுறீங்க. அவ செய்தது மட்டும் தப்பில்லையா??”.....வார்த்தைகள் கோபமாக வந்தாலும் மனம் தன்னவளுக்களுக்காக தன் நண்பர்கள் துடிப்பது சந்தோஷமாக உணர்ந்தது.

அந்த ஒரு காரணத்திற்காக உன்னை சும்மா விடுறேன். இல்லை நடக்குறதே வேற. நானும் இத்தனை நாளா அவங்களை பார்க்கிறேன், யார் கிட்டயும் பேசினதில்லை, ருசியா சாப்பிட்டதில்லை, வெளிய எங்கயும் போனதில்லை, வீடு ஆபிஸ் இதை விட்டா அவங்களுக்கு இந்த ஊர்ல வேற இடம் இருக்கான்னு தெரியுமான்னு கூட தெரியல.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே அங்கே வந்த சுஹா அவள் பங்கிற்கு அவனை ஒரு பிடி பிடித்தாள்.

கிருஷ்ணா சுஹா வருண் மூவரும் ஒன்றாக படித்த நண்பர்கள். இவர்கள் சேர்ந்து முதலீடு செய்து தொடங்கிய கார்மென்ட் கம்பெனி தான் KSV கார்மெண்ட்ஸ். வருண் திருப்பூரை சேர்ந்தவன் கல்லூரியில் படிக்கும் பொழுதே இந்த தொழிலில் ஆர்வம் உண்டு. சுஹா கோயம்புத்தூர்வாசி அவளும் வருணும் காதலாகி கசிந்துருகி அவனது ஆர்வத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு கம்பெனியின் கணக்கு வழக்கு துறையை தலைமை தாங்குபவள். பொன்னேரியில் வேலை அதிகம் இருப்பதால் இவர்கள் இருவரும் இந்த கார்மெண்ட்ஸ் நடத்தி வந்தனர்.

பெங்களூர் மும்பை நிறுவன முகவரியும் எடுத்து வைத்து இருந்தான். இதற்காகவே அவளுடன் படிப்பவர்களின் தொலைபேசி எண்ணும் வைத்து இருந்தான்.

எனினும் ராதாவை தன் திட்டப்படி புதிய நிறுவனம் என்று இங்கே சேர்த்து விட்டு சுஹாவை துணைக்கு வைத்து நிம்மதியாக இருந்தான்.

அன்று வரவேற்பு முடிந்து அடுத்த நாள் காலை எங்கு தேடியும் ராதா காணவில்லை என அனைவரும் பதற “அவ என்கிட்டே சொல்லிட்டு தான் வேலைக்கு போய் இருக்கா பயப்படாதீங்க” என்று அனைவரையும் சமாதனப்படுத்த முடிந்தவனால் தன்னை சமாதான படுத்திக்கொள்ள முடியவில்லை. தன் காதல் அவளுக்கு புரியவே இல்லையா?? பேச்சு வந்ததை தன்னிடம் மறைத்தது, சொல்லாமல் வேலைக்கு வந்ததும் அவனுள் பெரும் கோபத்தை கிளப்பியது. இப்பொழுதும் அவளது உடல்நிலை பற்றி நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டு அவளுக்காகவே இங்கே வந்து இருக்கிறான். இருப்பினும் மனதிற்குள் சொல்ல முடியாத கோபம்.

அவளது ரிப்போர்ட் பார்த்து டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொண்டு ஒன்றும் பயமில்லை என்று தெரிந்து கொண்ட பிறகே மனமில்லாமல் ஊரிலும் வேலை இருந்ததால் அடுத்த வாரம் வருவோம் என்ற முடிவுடன் கிளம்பினான்.

மருத்துவமனையில் இருந்த முதல் நாள் ட்ரிப்ஸ் மூலம் மருந்தும் உணவும் உள்ளே செல்ல அடுத்த நாளே உடல் நன்கு தேற டாக்டர்கள் அவளை வீட்டிற்க்கு அனுப்பினர். மறுநாள் ஆசையாக வேலைக்கு கிளம்பினாள். மாமா இன்னைக்கு வருவாங்களா தெரியலையே?? இங்க எங்க தங்கி இருக்காங்க தெரிஞ்சா நைசா போய் பார்க்கலாமே...என்றும் பலதும் எண்ணியவாறு தன் அலுவலகத்தை அடைந்தாள். பாவம் சுஹா அன்று அவள் பேசிய எதுவும் இவள் காதில் விழவில்லை.

என்றும் இல்லாத பரபரப்பாக மெயிலும் போனும் வருண் எதாவது அழைக்கிறானா என்று பார்த்து கொண்டே இருந்தாள். பதினோரு மணிக்கு மேல் பொறுக்க முடியாமல் தானே வருண் அறைக்கு சென்றாள்.

“மே ஐ கம் இன் சார்”

“யெஸ் கம் இன்”

“உள்ளே வந்தவள் சுற்றி நோட்டம் விட, வாங்க ராதா என்ன விஷயம்??”

“சார் நான் ஆபிஸ் ஜாயின் பண்ணத சொல்ல வந்தேன்.”

“ஒஹ் குட்...இப்போ உடம்பு பரவாயில்லையா??”

ம்ம்ம் ஓகே சார்...

“ஓகே நீங்க உங்க வேலைய கண்டினியூ பண்ணுங்க...தேவைப்பட்டா கூப்பிடுறேன்.”

சார், மாமா ஸ்ஸ் சாரி கிருஷ்ணா சார் எங்க??? தயங்கியபடி கேட்டவளை பாவமாக பார்த்த வருண், “அவர் அன்னைக்கே ஊருக்கு கிளம்பிட்டாரு.”

திரும்ப எப்போ வருவாரு???

“அந்த டிடைல்ஸ் உங்களுக்கு எதற்கு??? நீங்க இங்க டிசைனர் அவ்ளோதான் அதற்கு மேல மானேஜ்மென்ட்ல இருக்குறவங்க பத்தி நீங்க ஏன் தெரிஞ்சுக்கணும்.” நான் பேசினாலும் நீ பேச மாட்ட இன்னைக்கு நீயா பேசும் போது உன் கூட நல்லா பேச முடியலை மன்னிச்சுடு தங்கச்சி என மனதிற்குள் அவளிடம் மன்னிப்பு கேட்டு கொண்டிருந்தான் வருண்.

அன்னைக்கு நீதானே அறிமுகபடுத்த கூப்பிட்ட...வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கி கொண்டு தயங்கி நிற்க

“உங்களுக்கு எப்படி பேச வந்தது, இப்போ நல்லா பேசுறீங்க”

“இனிமே பேசல சார்” வருத்தமாக சென்றவளை அதை விட வருத்தமாக வருண் பார்த்து கொண்டு இருந்தான்.

உணவு இடைவேளையில் சுஹாசினி பேசி கொண்டே இருந்தாள்.

இவளால் கேட்பது போல நடிக்க கூட முடியவில்லை.

“ராதா ராதா”

சிறு குழந்தையாய் விழிக்க

“என்ன ராதா எப்பவும் கேட்குற மாதிரி பாவ்லா காண்பிப்ப இன்னைக்கு அந்த ரியாக்க்ஷன் இல்லை.”

“எனக்கு எதையும் செய்ய பிடிக்கல, வீடும் பிடிக்கல, ஆனா எங்க போறதுன்னு தெரியல.”

“ஏன்பா அப்படி சொல்ற??? உன் பிரச்சனை என்னன்னு சொல்லு...”

என்னவென்று தன் பிரச்னையை சொல்வது, தன்னை இவளால் புரிந்து கொள்ள முடியுமா??? ஆனால் இவள் அன்பும் நட்பும் மட்டுமே என்னை வாழ வைத்து கொண்டு இருக்கிறது. “சுஹா இப்போ வேண்டாம் வீட்ல பேசிக்கலாம்.”

மாலை வீட்டில் சுஹா அமைதியாய் தன் வேலையை செய்து கொண்டு இருக்க தன் மாமாவை பற்றி தெரிந்து கொள்ளாமல் தலை வெடித்து விடும் என்று அமைதியாய் அமர்ந்து இருந்தாள்.

சுஹா உனக்கு அவரை பற்றி எதாவது தெரியுமா???

எவரை??

“அன்னைக்கு ஹாஸ்பிடல வருண் சார் கூட இருந்தாரே”

ஆமா நானே கேட்கனும்னு இருந்தேன், அவர் யாரு நீ ரொம்ப தெரிஞ்சா மாதிரி மாமா மாமான்னு சொன்ன, நீ உடம்பு சரி இல்லாததால யாரோன்னு தப்பா நினைச்சுகிட்டு பேசிட்ட, சரியான திமிர் பிடிச்சவன் அதுக்கு அப்படி முகத்துல அடிச்சா மாதிரி பேசுறான், நான் அந்த எடத்துல இருந்திருந்தா அவ்ளோதான்....உன் மாமாவும் இந்த மாதிரி இருப்பாரோ???

“அவரை ஒன்னும் சொல்லாதே அவர்தான் என் மாமா”

“அப்போ ஏன் தெரியாத மாதிரி நடந்துகிட்டாரு?? அப்படி என்ன செய்த....சரி மாமான்னா அம்மாவோட தம்பியா??”

“என் புருஷன்”

“என்னது உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா....இன்னும் எத்தனை குண்டு போடுவ....”

“புருஷனை விட்டுட்டு வேலைக்கு வந்திருக்கியே உன்னை என்ன சொல்றது....அண்ணன் அந்த கோபத்துல இருக்காரா???”

“இல்லை...அவர்கிட்ட சொல்லாம வந்துட்டேன்...”

“சொல்லாமா வந்துட்டியா??? அப்போ அண்ணாவோட ரியாக்க்ஷன் கம்மி......நான் அந்த எடத்துல இருந்து இருந்தா உன் காது ஜவ்வு கிழிஞ்சு இருக்கும். அம்மாடி இந்த அமைதியானவங்களை நம்பவே முடியாது எவ்ளோ தைரியம் அவங்க கிட்ட சொல்லாம வந்துட்டு அவரே வந்து உன்னை செல்லம் கொஞ்சனுமோ???”

“கொஞ்ச வேண்டாம் திட்டவாவது என்கிட்டே பேசலாம்ல”....சொல்லும் போதே ராதாவின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.

“நீ இவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டு உடனே அவர் மன்னிக்கனும்னு நினைக்கறது சரி இல்லை ராதா...”

“நான் ஒன்னும் வேணும்னு அவரை விட்டு வரவில்லை. நான் கூட இருந்தா நல்லது இல்லைன்னு பெரியம்மா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. என்னோட துரதிஷ்டம் அவங்களை பிடிச்சுக்கும்னு சொன்னாங்க நான் என்ன செய்யறது??? எனக்கு மாமா நல்லா இருந்தா போதும்.” மெல்லிய அழுகையுடன் முடித்தாள்.

“ஏய் ராதா ஊர்ல சொன்னது, சொந்தகாரங்க சொன்னது எல்லாம் விடு. உன் மாமா உன்னை என்னைக்காவது அப்படி சொல்லி இருக்காரா??”

“இல்லை”

“அப்போ நீ செய்தது இமாலய தவறு.....குடும்பத்துல என்ன பிரச்சனை வந்தாலும் குடும்பத்தை விட்டு வெளிய வரவே கூடாது. உன் மாமாவே அப்படி சொன்னாகூட வெளிய வரகூடாது உள்ளே இருந்துதான் போராடனும் அதைத்தான் நம்ம சம்பிரதாயம் சாஸ்திரம் எல்லாம் சொல்லி கொடுக்குது.”

“நான் திரும்பி போனா யாருக்கும் கெட்டது வராதே.”

உனக்கு ஒரு கதை சொல்றேன் கேளு, ஒரு ஊர்ல பயங்கர வெள்ளம் புயல் வந்து ஊர்ல இருக்க முடியாத நிலைமை. எல்லா பெரியவர்களும் சேர்ந்து ஒரு முடிவு அடுத்த ஊருக்கு போய்டலாம்னு முடிவு எடுத்தாங்க. முடிவுப்படி அனைவரும் கிளம்ப தனியா இருந்த ஒரு பெண்ணும் இவங்க கூட கிளம்பினா..ஐயோ இவ ராசி இல்லாதவ இவ பிறந்ததும் இவங்க அம்மா அப்பா இறந்துட்டாங்க, இவ கால் பட்டா அந்த இடம் உருப்படாது. இவளை விட்டுட்டு கிளம்பலாம்ன்னு சொன்னாங்க. ஊர் பெரியவங்க அதற்கு ஒத்துக்கல அதெப்படி ஒரு பெண்ணை மட்டும் தனியா விடுவதுன்னு கூப்பிட்டுகிட்டு கிளம்பிட்டாங்க. வழியில் புயலால் நிறைய பிரச்சனை இவங்க பஸுக்கு பக்கத்தில ஒரு மரம் விழுந்தது, இது மாதிரி கரணம் தப்பினா மரணம் என்கிற மாதிரி இருந்தது அவங்க பயணம். மறுபடியும் பஸுல ஒரு சலசலப்பு எல்லாம் இந்த அதிர்ஷ்டம் இல்லாதவ கூட இருப்பதனால் தான் உடனே இவளை இறக்கி விட்டுடலாம்ன்னு கொஞ்சம் பேர் யோசனை சொன்னாங்க. ஊர் பெரியவர் இதற்கு ஒரு முடிவு சொன்னாரு. வண்டியை நிறுத்திட்டு அங்கிருந்து பத்தடி தொலைவில் இருக்குற மரத்தை தொட்டுட்டு வரணும், தொட்டுவிட்டு பத்திரமா திரும்பி வரவங்க கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவங்க, துரதிர்ஷ்டம் பிடிச்சவங்கன்னா அவங்களால மரத்தை தொட்டுவிட்டு திரும்ப வர முடியாது. அவர் சொன்னபடி இடி மின்னலோட மழை கொட்ட ஒவ்வொருத்தரா போய் அந்த மரத்தை தொட்டுவிட்டு வந்தாங்க. திரும்ப வந்தவங்களுக்கு ஒரே சந்தோஷம். கடைசியா அந்த பொண்ணு போனா...என்ன நடந்து இருக்கும்னு சொல்லு ராதா

அந்த பொண்ணு மேல இடி விழுந்ததா???

இல்லை அந்த பொண்ணு மரத்துகிட்ட கிட்ட வந்த நேரம் சரியா இடி அந்த வண்டியை தாக்கி எல்லாரும் காலி. இவ்ளோ நேரம் அவளோட நல்ல நேரம்தான் எல்லாரையும் காப்பாற்றி வந்து இருக்கு அது புரியாம அவங்களே அவங்களுக்கு ஆப்பு வச்சுகிட்டாங்க.

நிஜமா இப்படி நடந்ததா???



நிஜமா நடந்ததான்னு தெரியாது ராதா அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் நல்லது கெட்டதுன்னு எதை சொல்ற, இன்னைக்கு கெட்டதா தெரியுறது நாளைக்கு நல்லதா மாறும் நல்லது கெட்டதா மாறும், இது ஒரு இயற்க்கை சுழற்சி. அதை பற்றி நாம கவலைப்படக்கூடாது, ஆனா அந்த சூழ்நிலைகளை நாம எப்படி கையாள்கிறோம் என்பதை பொறுத்துதான் எல்லாம் மாறும் புரிஞ்சுதா???

“ம்ம்ம், சுஹா உன் மடியில படுதுக்கவா???”

சுஹாவின் பேச்சை கேட்டு அவளின் உள்ளத்தில் ஒரு தெளிவு வந்து இருந்தது. “வா, அன்பாக படுக்க வைத்து தலைக்கோத அப்படியே உறங்கினாள்.”



அவள் நன்கு உறங்கியதும் வெளியே வந்து போன் செய்தாள். போனை மறுபுறம் எடுத்ததும் “அறிவிருக்கா உனக்கு, அந்த பெண்ணை இன்னும் எவ்ளோ பாடுபடுத்துவ, அவ கிடைக்க நீ ரொம்ப கொடுத்து வச்சு இருக்கணும் சந்துரு, இந்த ஆறு மாசமா அவ படுற வேதனையை பக்கத்துல இருந்து பார்த்திருக்கேன், போதும் விட்டுடுடா”

முடிச்சுட்டியா???

இல்லை என்று அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் அவனை அர்ச்சித்து முடித்தாள்.

எதுல ஒற்றுமையா இருக்கீங்களோ இல்லையோ இதுல இருக்கீங்க...

யாரு???

நீயும் வருணும்....இப்போதான் நீ சொன்ன மாதிரியே திட்டி முடிச்சான் நீயும் அச்சு மாறாம அதே வார்த்தைகளால் திட்டுற....

போதும்டா பேச்சை மாத்தாதே, நாளைக்கு அவ கண்ணு முன்னாடி வந்துடு இல்லை உன்னை கொன்னுடுவேன்.

ஏய் என்ன மிரட்டுற??

அதெல்லாம் அப்படித்தான், ஒழுங்கா நாளைக்கு ஊருக்கு வந்துடு இல்லை வருணுக்கு இப்போ கான்பிரன்ஸ் கால் போடுவேன்.

வேண்டாம் வந்துடுறேன். கிட்டத்தட்ட அலறினான் கிருஷ்ணா.

நாளைக்கு யாரை யார் அலற வைக்க போகிறார்கள் பார்போம்....



தொடரும்...
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,

உங்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி.....இந்த கதை இன்னும் ஒன்னு இல்லை ரெண்டு UD ல முடிஞ்சுடும்.....அப்பாடா தப்பிச்சோம் பிழைத்தோம்னு நீங்க புலம்புறது புரியுது...

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி பிரிண்ட்ஸ்......உங்களோட கமெண்ட்ஸ் இல்லாம எதுவும் நடந்து இருக்காது. இது நல்லா எழுதி இருக்கேனான்னு தெரியாது, ஆனா நல்லா இருக்குன்னு யாராவது சொன்னா அது நிச்சயம் உங்களால் தான்....
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாகம் 23

பூமி பெண்ணின் முகத்தை பார்க்க கதிரவன் ஆர்வமாக வர பெண்ணவள் நாண சிவப்பில் குளிக்க கதிரவன் சற்றே தன்னை மஞ்சளாய் மாற்றிக்கொண்டு உலகையே அழகாக்கி கொண்டு இருந்தான்.

வழக்கம் போல ராதா அன்று காலை கடமைகளை செய்து முடித்து விட்டு ஹாலில் வந்து அமர்ந்தாள்.

ராதா ஆபிஸ் கிளம்பலையா??? ஹாயா உட்கார்ந்துட்ட....

இல்லை போகனுமான்னு யோசிக்கிறேன். இன்னைக்கும் ரெஸ்ட் எடுத்துக்கவா??

உடம்புக்கு எதாவது செய்யுதா??

இல்லை மனசு சொல்ற பேச்சை கேட்க மாட்டேங்குது.

என்னவாம் அதுக்கு??

மாமாவை பார்க்கணும் போல இருக்கு...

இது சரி வராது, நீ முதல்ல வேலைக்கு கிளம்பு வேலைல மனசு போனா உற்சாகம் தானா வரும் புரிஞ்சுதா கிளம்பு...

ம்ம்ம்ம்....முனகியவாறே கிளம்பினாள்.

இரு இன்னைக்கு நான் உனக்கு ட்ரெஸ் எடுத்து தரேன். அழகிய ஊதா நிற சில்க் காட்டன் சேலையும் அதற்கேற்ப தைக்கப்பட்ட டிசைனர் பிளவுஸ் பொருத்தமான பியர்ல் செட் நகை எடுத்து கொடுத்தாள்.

எதற்கு இப்படி ட்ரெஸ் சுஹா, வேற மாத்திக்கவா, ஏதோ பங்ஷன் போற மாதிரி இருக்கு..ஆபிஸுக்கு இது ரொம்ப அதிகம்.

உனக்கு என்னை பிடிக்கும்னா இந்த டிரஸ் போட்டுக்கிட்டு வா...இல்லேன்னா இனிமே நீ யாரோ நான் யாரோ...

ஏய் எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற..நீ கொடுத்த டிரஸ் போட்டுக்கிட்டு வரேன் என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதா, ஏன்னா என் கிட்ட பேசுற ஒரே ஆளு நீ தான் நீயும் பேசலன்னா என்னால தாங்க முடியாது நான் மறுபடியும் ஊமையா மாறிடுவேன்.

ராதா நீ நான் சொன்னத செஞ்சுட்ட அதுனால பனிஷ்மென்ட் கட். குட் பேபி சீக்கிரம் ரெடியாகு கிளம்பலாம்.

ஆபிசில் அமைதியாக யாருடைய கவனத்தையும் கவராமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள் ராதா, அதே நேரம் அவளது டிசைன்கள் அவளுக்காக பேசும். தைப்பவர்களே மிகவும் ரசித்து தைக்கும்படி இருக்கும். இத்தனை நாள் தன் வேலை மூலம் பேசி கொண்டு இருந்தவள் இன்று அவளே பேசு பொருளாய் மாறினாள்.

அவளது உடை அனைவரையும் கவர்ந்தது மட்டுமின்றி அவளை கவனிக்க வைத்தது.

ராதா மேடம் டிரஸ் சூப்பர்....என்று பார்த்தவர் புகழ, தேங்க்ஸ் என்று வெட்கத்துடன் ஏற்று கொண்டாள்.

சரி ராதா நான் என் ரூமுக்கு போறேன் நீ உன் வேலையை பார்.

ம்ம்ம் வழக்கம் போல தலையாட்ட

வாயை திறந்து பேசு..

சரி சுஹா

தட்ஸ் குட் பேபி, பாய் என இருவரும் அடுத்தவர் வேலையை கெடுத்து விட்டு தங்கள் வேலையை கவனிக்க சென்றனர். இவர்கள் சென்றதும் தையல் பிரிவு பெண்கள் இவர்களை பற்றி பேசி கொண்டனர்:

“இன்னைக்கு ராதா மேடம் புடவை சூப்பர் பா”

“புடவை மட்டுமா அவங்களும் ரொம்ப அழகா இருக்காங்க”

“வரும்போது கொஞ்சம் குண்டா இருந்தாங்க இல்லை அவங்களா, நான் ரொம்ப நாளா பார்க்கலை.”

“அதெல்லாம் அப்போ....இப்போ பாரு அசந்துடுவ, நல்லா அழகா வடிவா மாறிட்டாங்க...”

“எப்படி”

“ஏதோ யோகவாமே தினமும் போவாங்கன்னு ஸ்டோர்கீப்பர் சொன்னான்.”

“தினமும் செஞ்சா வடிவா மாறிடலாமா??”

“அது மட்டும் இல்லை அவங்க அரிசி சாதமே சாப்பிட மாட்டங்களாம்.”

“யாரு சொன்னா??”

“கான்டீன்ல வேலை செய்யுற பையன் சொன்னான்.”

அதற்குள் வருணும் கிருஷ்ணாவும் நுழைய தங்கள் வேளைகளில் கவனமாகினர்.

ராதா வந்து தன் வேலைகளை ஆரம்பிக்க, வருணிடமிருந்து அழைப்பு

அப்பா இவருக்கு எப்படி தான் நான் வருவது தெரியுமோ???

“எஸ் சார்”

“கொஞ்சம் வாங்க”

“இதோ வரேன் சார்”

இன்னைக்கு மாமாவை பற்றி கேட்டா சொல்வாரா??? என்னும் யோசனையுடன் கதவை திறந்தவள் கிருஷ்ணாவை பார்த்து சந்தோஷத்தில் கண் கலங்கி நின்றாள்.

“மாமா எப்படி இருக்கீங்க?? எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க?? ரொம்ப டயர்டா தெரியுறீங்க?? வேலை அதிகமா?? பக்கத்தில் இருந்த வருணை மறந்துவிட்டு அவனிடம் பேசி கொண்டே சென்றாள்.

அறைக்குள் நுழைந்த பிறகு cctv கேமராவில் இவளை பார்த்து உறைந்து விட்டான் கிருஷ்ணா. பாப்பு என்ன இப்படி அசத்துறா? உள்ளுக்குள் அவளை பார்த்ததும் பொங்கிய ஆசைகளை வெளியில் கோபமாக, இப்படி மோகினி மாதிரி டிரஸ் பண்ணிக்கிட்டு ஆபிஸ் வரளா தினமும்???

யாரை கேட்குற?? ஒன்றும் தெரியாதது போல வருண் கேட்க

எல்லாம் அந்த மோகினி தான்

நம்ம ஆபிஸ்ல மோகினின்னு யாரும் வேலை செய்யலையே??

டேய்...பல்லை கடித்தவன், கூப்பிடுடா அவளை

வருணும் அசராமல் யாரை??

டேய் வேண்டாம்டா என்னை கொலைக்காரன் ஆக்காதே கூப்பிடு ராதாவை, அதன் பிறகுதான் வருண் அவளை அழைத்தான்.

அறைக்குள் நுழைந்தவனை பார்த்தவன், “வஞ்சகி கிராதகி இவ்ளோ அழகா இருக்காளே, அசத்தலா டிரஸ்ல ஆளை அசரடிக்கிறாளே இவளை அப்படியே இறுக்க கட்டிப்புடிச்சு”...........தனக்கு துரோகம் இழைக்கும் மனசாட்சிக்கும் ராதாவிற்கும் மனதிற்க்குள் மண்டகப்படி நடத்தி கொண்டிருக்கும் (கண்ணா இதுதான் நீ வச்சு செய்யுறதா??) போதுதான் ராதா அவனது முகமாற்றம் எதையும் கண்டுக்கொள்ளாது குசலம் விசாரித்தது.

கிருஷ்ணா சட்டென்று கோபமாக இங்க பாருங்க மிஸ்..........வருண் இவங்க பேர் என்னடா??

உலக மகா நடிகன்டா நீ, உனக்கு இவங்க பேர் தெரியாதா...இந்த அப்பாவி பொண்ணுங்கிறதால நீ விட்ட ஜொள்ள கண்டுபிடிக்கலை இந்த இடத்தில சுஹா இருந்து இருக்கணும் நான் தொலைஞ்சு இருப்பேன்....மனதிற்க்குள் திட்டி தீர்த்தவன் வெளியில் சிரித்து கொண்டே “ராதா” என்றான்.

“அஹ்...மிஸ் ராதா”

“நான் மிஸ் இல்லை மிஸஸ்..ராதாலஷ்மி கிருஷ்ணச்சந்திரன்.”

“அது எனக்கு தேவையில்லை எனக்கு வேலை ஒழுங்கா நடக்கணும் புரியுதா?? நீங்க இது மாதிரி அப்பப்போ உடம்பு முடியலைன்னு லீவ் போட்டா எப்படி? ஆபிஸ் வந்து இது மாதிரி எத்தனை தடவை லீவ் எடுத்து இருக்கீங்க??”

“இதுதான் முதல் தடவை.”

“சரி உங்க டிசைன்ஸ் எல்லாம் கொண்டு வாங்க...”

“இதோ வரேன் சார்”, என அவள் பைல் எடுக்க ஓட, கிருஷ்ணாவின் நிலையை பார்த்த வருணால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

:எருமை ஏன்டா சிரிக்கிற??”

“இங்க கிருஷ்ணான்னு ஒரு மனஸ்தன் இருந்தான்...”

“தேடாதே கிடைக்க மாட்டான்.”

வேகமாக பைல் எடுத்து வந்து கிருஷ்ணாவின் அருகில் நின்றாள் ராதா.

“ஓகே கிருஷ்ணா நீ டிசைன்ஸ் எல்லாம் செக் பண்ணு நான் போய் அக்கவுன்ட்ஸ்ல ஒரு டவுட் பார்த்துட்டு வரேன்”. இங்கிருந்தால் சிரித்து கிருஷ்ணாவை மாட்டி வைத்து விடுவோம் என்னும் பயம் அவனுக்கு

கிருஷ்ணாவிடம் பைலை கொடுத்துவிட்டு கர்மசிரத்தையாக அவனருகே குனிந்து ஒவ்வொரு டிசைனாக விளக்கம் கொடுத்து கொண்டு இருந்தாள் தன் மாமாவின் மனம் புரியாத மாங்காய் மடைச்சி ராதா.

“மாமா இது பாருங்க ரங்கோலியும் மெஹெந்தியும் சேர்த்து நான் செய்த புயூஷன் மாதிரி செய்தது”. அவளது அருகாமையும் வாசமும் அவனை மயக்கி கொண்டு இருக்க சரியாக இண்டர்காம் ஒலித்தது.

“ஹலோ யார் வேணும்??”

“என்ன தம்பி நீ விடுற ஜொள்ளுல KSV கார்மெண்ட்ஸ் முழ்க போகுதான்” சுஹா

“யார் சொன்னா??”

“BBC ல”

“ஒ...அப்படியா அப்போ அதையே பாலோ பண்ணுங்க”

“ஹாஹா என் ஒரே கவலை உன்னை நேர்ல கலாய்க்க முடியாததுதான்”

“அதனால ஒன்னும் பிரச்சனையில்லை”

“முடியலைடா உன்கூட ஒழுங்கு மரியாதையா அவகிட்ட நல்லபடியா பேசிடு”

“இந்த டீலிங் சரியில்லை.”

சரி நான் இன்னொரு டீலிங் சொல்றேன் அது சரியா இருக்கான்னு பாரு, “நீ தங்கி இருக்க இடம் எனக்கு தெரியும் அவளுக்கு இன்னும் சூப்பரா டிரஸ் பண்ணி அங்க கூட்டிக்கிட்டு வரட்டுமா??”

“அப்படியெல்லாம் செய்யாதீங்க”...அதிர்ச்சியாக ஒலித்தது அவன் குரல்.

“என்ன மாமா யார் பேசுறாங்க...நான் போய் வருண் சார் கூட்டிக்கிட்டு வரேன். ரெண்டு பேரும் சேர்ந்து இருந்த ஈஸியா இருக்கும்” என்று வெள்ளந்தியாக செல்லும் ராதாவை ஆசையாய் பார்த்திருந்தான் கிருஷ்ணா.



தொடரும்
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது சின்ன UD மக்களே.....அடுத்த UD இறுதி அத்தியாயம் என்பதால் சற்றே நேரம் எடுத்து அடுத்த வாரம் தருகிறேன்....உங்கள் கருத்துக்களுக்கும் லைக்ஸ்க்கும் நன்றி நன்றி நன்றி....பிரிண்ட்ஸ்.
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டியர் பிரிண்ட்ஸ்

தவிர்க்க முடியாத வேலைகளில் மாட்டி கொண்டதால் இறுதி அத்தியாயம் செவ்வாய்கிழமை பதிவிடுகிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.... சாரி அண்ட் தேங்க்ஸ் பிரிண்ட்ஸ்....
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய தோழமைகளே



உங்கள் அனைவரது துணை கொண்டு எனது முதல் கதையை முடித்து இருக்கிறேன். இதற்கு நன்றி என்னும் ஒரு வார்த்தை போதுமா என்று தெரியவில்லை. தவறாது கருத்துக்களும் விருப்பங்களும் தெரிவித்த அனைத்து தோழமைகளுக்கும் எனது கோடானுகோடி நன்றிகள். அமைதியாக படித்து சென்றவர்களுக்கும் எனது நன்றிகள்....அடுத்த கதையை தொடங்கவில்லை...தொடங்கியதும் அறிவிப்புடன் சந்திக்கிறேன்....
 
Status
Not open for further replies.
Top