All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திலகம் அருள்_யாரிடமும் தோன்றவில்லை இது போல்--கதை திரி

Status
Not open for further replies.

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“இங்கு இருக்கும் கல்யாணபசுபதீசுவரர் கோயில் அங்க நிறைய விசேஷங்கள் இருக்கு, காமதேனு சிவனை வழிபட்ட தலம், கருவூரார் சித்தர் தனி கோவில் இருக்கு, ரொம்ப சக்தி வாய்ந்த கோவில் கண்டிப்பா நாம ஒரு நாள் போகலாம். அந்த கோவிலுக்கு போகும் போதெல்லாம் எனக்கு தோன்றுவது என்ன தெரியுமா?? பிரம்மாவை வைத்து படைப்பு தொழிலை இந்த மண்ணில் துவக்கியது மாதிரி நம்மாழ்வாரை வைத்து விவசாயத்தை புதிதாய் துவக்கி இருக்கரோன்னு நினைப்பேன். அவர் சொல்லி கொடுத்தது எல்லாம் எளிமையான அதே நேரம் வீரியமான விஷயங்கள் இந்த மண்ணை நேசிக்கும் யாராலும் அப்படியே கடந்து போய் விட முடியாது. இங்க பக்கத்துல கடவூர்ன்னு ஒரு இடம் எல்லாரும் எதுவும் செய்ய முடியாதுன்னு ஒதுக்கின நிலம் அந்த இடத்தில் தன்னோட எளிமையான விஷயங்களை வைத்து பெரிய பண்ணையை உருவாக்கி இருக்கார். அங்க வானகம்னு ஒரு அமைப்பு வச்சு யாருக்கெல்லாம் இந்த இயற்கை முறை விவசாயத்தை தெரிஞ்சிக்கனுமோ அவங்களுக்கு வகுப்பும் நடக்குது. இந்த பண்ணையில் தினமும் கால் வைக்கும் போது அவரை மானசீகமா வணங்கிட்டு நுழைவேன்.”

“ரொம்ப சந்தோசம் ஆதி செய்யும் தொழிலில் இவ்ளோ டெடிகேஷன் லவ் இருந்தா கண்டிப்பா இதுல இன்னும் நிறைய நீ அச்சீவ் பண்ணுவ. வாழ்த்துக்கள்.”

நம்ம மக்களோட பலம் என்ன தெரியுமா ஆதி?? நம்மோட ஆளுமையும் கற்பனைத்திறனும் தான். ஆனா இப்போ எல்லாத்தையும் மத்தவங்களுக்காக செய்றோம்.

இவ்வளவு நேரம் பேசியதில் இருவருக்குள்ளும் ஒரு தோழமை வந்து இருந்தது.

அங்கிருந்து கிளம்பி நெற்பயிர் விளையும் நிலத்திற்கு கூட்டி சென்றான். “கெளதம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நம்ம நிலம் தான். நெல்லுதான் எப்பவும் போடுவோம்.”

“அது சரி என்ன நம்ம நிலம்னு சொல்லிட்ட உன்னோடது இது.”

“அம்மா எப்பவும் சொல்வாங்க அத்தை நம்ம வீட்டு பொண்ணு அவங்களுக்கும் சம பங்கு இருக்கு, அதனால இது எப்பவும் நம்ம நிலம்தான். உங்களோட பங்கு தனியா பாங்க்ல போட்டுகிட்டு வரோம்.”

“வாட்?? முழுதாய் அதிர்ந்தான் கெளதம். எங்களோட பங்களிப்பு எந்த விதத்திலும் இல்லாம எப்படி?? நோ கண்டிப்பா இது மொத்தமும் உங்களுக்குத்தான் இதுல நிச்சயமாய் நாங்க உரிமை கொண்டாட மாட்டோம்.”

“சரி விடு அதை பற்றி இப்போ என்ன நேரம் வரும் போது பார்த்துக்கலாம்.”
என்ன மனிதர்கள் இவர்கள், நேரில் இருக்கும் போதே ஏமாற்றும் இந்த காலத்தில் இப்படி எங்கோ இருக்கும் தங்கள் பங்கையும் எந்த கைமாறும் பார்க்காமல் பராமரிக்கும் இவர்கள் நிச்சயம் உயர்ந்தவர்கள், எதாவது விதத்தில் இவர்களுக்கு உதவ முடிந்தால் நிச்சயம் செய்ய வேண்டும் என்று மனதிற்க்குள் குறித்து கொண்டான் கெளதம்.

அவர்களது விவசாய நிலத்தை ஒட்டி இருந்த பண்ணை வீட்டிற்க்கு அழைத்து சென்றான். எனக்கு இங்கு வந்தால் பாரதியார் பாட்டு காணி நிலம் வேண்டும்தான் ஞாபகம் வரும்.
காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்தினிடையே – ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்கு
கேணியருகினிலே – தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர்போலே – நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே – அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் – எங்கள்
கூட்டுக் களியினிலே – கவிதைகள்
கொண்டுதர வேணும் – அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே – இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

“ரொம்ப அருமையான பாடல். எவ்ளோ ரசிச்சு பாடியிருக்காரு.”

அதற்குள் அந்த இடத்தை பராமரிக்கும் முத்து வந்தார்.

“வணக்கம் தாத்தா எப்படி இருக்கீங்க??”

“உங்க புண்ணியத்துல நல்லா இருக்கேன் தம்பி...”

“கெளதம் இது முத்து தாத்தா இந்த இடத்தை ரொம்ப காலமா பராமரிச்சுகிட்டு வர்றவர் ரொம்ப நல்ல மனசு, நம்ம குடும்பத்தின் மேல உண்மையான பாசம் இருக்குற மனுஷன்.”

“தாத்தா கெளதம் சத்யா அத்தை பையன், அமெரிக்காவில் இருந்து வந்து இருக்காங்க.”

“ஒஹ்....தம்பி ரொம்ப சந்தோஷமப்பா, எப்படியோ வினோ பாப்பாவுக்கு ராஜா மாதிரி மாப்பிள்ளை அமெரிக்காவில் இருந்து வந்தாச்சு...இனிமேல் எல்லாம் நல்ல காலம்தான்.”

“தம்பி எங்க வினோ பாப்பா ரொம்ப நல்ல பொண்ணு தங்கமான குணம், கொஞ்சமா பயப்படும் அவ்ளோதான் அதை கண் கலங்காம பார்த்துக்கோங்க” அவனின் கையை பிடித்து கொண்டு கூறியவரின் குரல் கலங்கி ஒலித்தது.

“தாத்தா என்னதிது இவங்க ஆச்சியை பார்க்க வந்திருக்காங்க, நீங்க உணர்ச்சி வசப்படாதீங்க”

“சாரி கெளதம் வா நாம பண்ணையை பார்க்கலாம்”

மனதிற்க்குள் அவரது யோசனை பிடித்தாலும் தங்கள் நிலையறிந்து அமைதியாய் சென்றான்.

அட கட்டிக்கிற முறைதானா நீ கலக்குடா கெளதம் ஆனா எப்படி அவளை மொதல்ல பார்க்குறது, பயந்து அழற புள்ளைய என்ன பண்றது??

அதன் பிறகு இருவரும் அவரவர் யோசனையில் மூழ்க அமைதியாய் வீடு திரும்பினர்.

தாயும் தங்கையும் குளித்து முடித்து ஆச்சியின் அருகில் அமர்ந்து கொண்டிருந்தனர்.

“ஹாய் என்ன இங்க இருக்கீங்க, சாப்டீங்களா??”

“நாங்க உனக்காக காத்துக்கிட்டு இருக்கோம்பா”

“சரிம்மா டூ மினிட்ஸ் குளிச்சிட்டு வந்துடுறேன்.”

உணவு மேஜையில் மூவரும் அமர, ஆதியும் வந்து அமர்ந்தான்.

“குட் மார்னிங் அத்தை”

இவனுக்கு அத்தை மட்டும் தான் கண்ணுக்கு தெரியும் போல..பெரிய மன்மதன்...பாவம் அவன் இயல்பே இது என தெரியாமல் மனதிற்க்குள் தாளித்து கொண்டு இருந்தாள்.

அம்மாவின் விருப்பமான சமையலாக இருக்க, “மாம் எல்லாம் உங்க பேவரிட் ஐடம்ஸ்” என்றனர் பிள்ளைகள்.

“அதென்ன அப்படி சொல்லிட்டீங்க, உங்களுக்கு பிடிச்சது என்னன்னு சொல்லுங்க நாளைக்கு செஞ்சுறலாம்” என்றார் அங்கே வெகு நாட்களாய் வேலை செய்யும் மருதாயி. “உங்க அம்மா ரொம்ப நாள் கழித்து பிறந்த வீட்டுக்கு சீராட வந்துருக்காக அதான் ஷக்திம்மா அவங்களுக்கு பிடிச்சது எல்லாம் சொன்னாக.”

“ஆமாம் உங்களுக்கு பிடிச்சது சொல்லுங்க செய்ய சொல்றேன்” என்றார் பரிமாறிகொண்டிருந்த ஷக்தியும். ஏனோ அவருக்கு தங்கள் பிரச்னையை பற்றி சிறியவர்கள் தெரிந்து கொள்வதில் விருப்பம் இல்லை எனவே அவர்கள் எதிரில் ஒரு மாதிரியாய் சமாளித்தார்.

“நிஜமாவா மாமி எங்களுக்கு பிடிச்சதும் செய்வீங்களா?? எங்ககிட்ட இது மாதிரி யாரும் கேட்டதில்லை” என்றாள் ஷக்தி.
தனக்காக செய்யும் தோழியை நினைத்தும், தன் நிலையால் குழந்தைகள் சொந்தங்கள் இன்றி வளர்ந்தது கண் முன் வர கண் கலங்கினார் சத்யா.

“என்னடாம்மா இப்படி சொல்லிட்ட உனக்கு என்ன வேணும்னு சொல்லு இந்த மாமி முடிஞ்சதை செஞ்சு தரேன்.”

அப்பொழுதுதான் அவளை கவனித்தான் ஆதி அழகிய டாப்சும் பெரிய பாவாடையுடன் சிறிய பெண்ணாய் அமர்ந்திருந்தாள். துறுதுறு விழிகளின் பின்னேயும் ஏதோ சோகம் இருக்குமோ??? என்று யோசிக்க ஆரம்பித்தான்.

கெளதம் காலையில் பார்த்த பெண் எங்கே அவள் ஏன் உணவருந்த வரவில்லை யாரிடம் கேட்பது என்னும் யோசனையில் இருந்தான்.

இரு ஆண்களும் தங்கள் மனங்கவர்ந்த நாயகிகளின் எண்ணங்களில் மூழ்கினர்.

அனைவரும் உண்டு முடிக்க, ஒரு தட்டில் அனைத்து உணவு வகைகளையும் கொண்டு வந்த மருதாயி, “அம்மா வினு பாப்பாவுக்கு” இந்தாங்க என்றார்.

“யாருக்கு மாமி தனியா டிபன்??” என்றாள் ஷக்தி.

“என் பொண்ணு வினுக்கும்மா”

ஏன் அவங்க வெளிய வர மாட்டாங்களா?

“இல்லைம்மா அவ கொஞ்சம் பயந்த சுபாவம், அதான்”

“அப்படியா நான் உங்க கூட வரலாமா அவங்களை பார்க்க”

சிறிது தயங்கியவர் எவ்வளவு நாள் இப்படியே இருப்பது அவளும் மற்றவர்களுடன் பழக வேண்டாமா?? என்று யோசித்தவர் “வாம்மா” என்றார்.

நானும் வரேன் சத்யாவும் சேர்ந்து கொள்ள மூவரும் வினுவின் அறைக்குள் சென்றனர்.

இவர்கள் இருவருடன் சேர்த்து கும்மி அடிக்க முடியாத சோகத்தில் அமர்ந்திருந்தான் கெளதம்

உண்டு முடித்து வந்த ஆதி “கெளதம் வரியா நம்ம பஸ் பாடி பில்டிங் கம்பனிக்கு போகலாம்.”

பேசாம கிளம்பிடலாம் இங்க இருந்தா அவ ஞாபகத்துல மூச்சு முட்டும். வந்து நம்ம ரவுடிகிட்ட விஷயத்தை வாங்கிடலாம் மனதில் கணக்கிட்டவாறே கிளம்பினான்.

கௌதமின் கணக்கு சரி வருமா??

தொடரும்......
 
Status
Not open for further replies.
Top