All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திலகம் அருள்_யாரிடமும் தோன்றவில்லை இது போல்--கதை திரி

Status
Not open for further replies.

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரிண்ட்ஸ்

வெகு நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

என்னுடைய பழைய கதையின் ரீ ரன். உங்கள் ஆதரவு எப்போதும் போல கிடைக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களும் commentsum நிறைய எதிர்பார்க்கிறேன்.

உங்கள்
திலகம் அருள்.
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாரிடமும் தோன்றவில்லை இது போல்

பார்ட் 01
உலக அளவில் சுமார் 2.2 சதவீதம் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ADHD என்னும் நரம்பியல் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கபட்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. அதுவே 10 முதல் 44 வயது வரை பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் எண்ணிக்கை சுமார் 2.8 சதவீதம்




சிகாகோ நகரம்

சிகாகோ நகரம் முழுவதும் பனி போர்வையில் இருக்க எப்படிப்பட்ட நிலையிலும் எங்கள் கடமையை செய்வோம் என்று மக்கள் தங்கள் வேலையை பார்த்து கொண்டு இருந்தனர். அங்கு இருந்த யாருக்கும் இந்த பனியை ரசிக்கும் மனநிலை இல்லை. ஆனால் இந்த உறைந்த நகரை உணர்ச்சி பெருக்குடன் பார்த்து கொண்டு இருந்தார் சத்யா.

“மா மாம்”........கத்தி கூப்பாடு போட்டு கொண்டே தன் அன்னையின் அருகில் வந்த கெளதம் அன்னையின் மோன நிலையை கண்டு அமைதி ஆனான். ஜன்னலின் வழியே உறைந்து நின்ற பனியை பார்த்து கொண்டே நின்று இருந்தவர் இந்த உலகத்தில் இல்லை. தன் அன்னையின் மனநிலையை எளிதாக புரிந்து கொண்டவன் அவருக்கு வெகு அருகில் வந்து மென்மையாக அவரது தோளை தொட்டு அணைத்து கொண்டான்.

“மாம் என்ன பார்க்குறீங்க???”

“பனி எவ்ளோ அழகா எல்லாத்தையும் மறைத்து வச்சு இருக்கு பாரேன். ரொம்ப அழகா இருக்கு இல்லை.”

“மாம் நீங்க இங்க வந்து 28 வருஷம் ஆகுது. ஆனாலும் இந்த பனி மேல இருக்குற ஆசை போகலையா. இந்த ஊர்காரங்க எல்லாம் திட்டிக்கிட்டே வேலைக்கு கிளம்புறாங்க.”

“இயற்கை அதோட கடமையை அழகா செய்து பாரேன். எனக்கு நிஜமாவே இந்த பனி ரொம்ப பிடிச்சிருக்கு கெளதம்”, அவனிடம் பேசிக்கொண்டே திரும்பியவர் ஆறடி உயரத்தில் கம்பீரமாய் எதிரில் நின்ற மகனின் தோற்றத்தில் அகமகிழ்ந்தார். தன் வாழ்க்கைக்கு கிடைத்த விடிவிளக்கு என் குழந்தைகள் அவர்கள் மட்டும் வாழ்வில் இல்லாமல் இருந்து இருந்தால் அதற்கு மேல் யோசிக்க பிடிக்காமல் மெல்ல விழிகளை மூடினார்.

தாயின் மனநிலையை உணர்ந்தவன் திசை திருப்பும் பொருட்டு “மாம் ரொம்ப பசிக்குது டிபன் ரெடியா???” என்றான்.

“அடடா வா கண்ணா பனியை பார்த்ததுல அதை மறந்துட்டேன் வா உனக்கு பிடிச்ச மல்லிகை பூ இட்லி சாம்பார்” மகனிடம் பேசி கொண்டே அவனை சாப்பிட வைத்தார்.

“மாம் சூப்பர்.....நானும் நிறைய இடத்தில் ட்ரை பண்ணிட்டேன் எங்கயும் இது மாதிரி டேஸ்டே இல்லை அன்னையின் சமையலை சிலாகித்தவரே தன் பணிக்கு கிளம்பியவன் மாம் இன்னைக்கு ஹோட்டலுக்கு லீவ் விட்டுடுங்க சரியா??”

“ஏன்ப்பா இந்த பனில நம்ம ஹோட்டல் ஹாட் தோசைக்காக நிறைய பேர் வருவாங்க இன்னைக்கு ஏன் லீவ் விடனும்”
இனி அன்னையின் முடிவை மாற்ற முடியாது என்று உணர்ந்தவன் “மாம் ஷக்தி எங்க??”
“அவ ரூம்ல இருக்கப்பா, நைட் வேலை முடிச்சுட்டு வர லேட் அதான் இன்னும் தூங்குறா...”

“மாம் நீங்க அவளுக்கு ரொம்ப செல்லம் தரீங்க இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன். சீக்கிரம் எழுப்பி அவளுக்கு சாப்பிட கொடுங்க. ஈவனிங் ஹோட்டல அவளை துணைக்கு வச்சுக்கோங்க நான் வர நேரம் ஆகும்.” முதலில் திட்டினாலும் அக்கறையுடன் சொல்லி வேலைக்கு கிளம்பினான்.

கெளதம் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவன். படிப்பில் கெட்டி அங்கேயே மருத்துவ படிப்பை முடித்து புகழ்பெற்ற மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவனாக பணியில் இருப்பவன். தொழிலில் நல்ல பெயர் அவனது பொறுமையும் ஆளுமையும் எங்கு சென்றாலும் அவனை தனித்து காட்டும். வெளியில் பெரிய ஆளாக இருந்தாலும் வீட்டில் பொறுப்புமிக்க ஆண் மகன். அவனது தாயும் தங்கையும் அவனது இரு கண்கள். வீட்டில் நடந்த பல சம்பவங்களில் மற்ற இருவரையும் காப்பாற்றி கரை சேர்த்தவன்.

வேலை ஏதுமில்லாமல் கணினி முன் அமர்ந்து வழக்கமாக பார்க்கும் தளங்களை பார்வையிட்டு முடித்து விட்டு ஒரு நேரத்திற்கு மேல் எதிலும் மனம் ஒன்றாமல் கண் மூடி அமர்ந்தார். மனம் பல்வேறு நிலைகளில் தாக்க அந்த சுழலில் இருந்து தப்பிக்க நினைத்தவர் தன் மகளின் அறைக்குள் நுழைந்தார்.

ஷக்திம்மா.....பெயருக்கு வலிக்குமோ என்பது போல மென்மையாக அழைத்தவர் மென்மையாய் அவளை தொட்டு எழுப்பினார்.

“மா நைட் படுக்க ரொம்ப லேட் ஆகிடுச்சு...ப்ளீஸ் கொஞ்சம் நேரம் தூங்க விடுங்க”

“கொஞ்சம் சாப்பிட்டு படுத்துக்கடா..எவ்ளோ நேரம் சாப்பிடாம இருப்ப”...

இதற்கு மேல் அம்மாவை சமாளிக்க முடியாது என்று உணர்ந்தவள் மெல்ல கண் விழித்து “சரிம்மா எடுத்து வைங்க வரேன்.” எழுந்தவள் குளியலறை புகுந்தாள்.

குளியலறையில் இருந்து புத்தம் புது மலராய் வெளியே வந்தவளின் அழகில் மயங்கி நின்றார். சராசரியை விட சற்றே உயரம், பால் போன்ற மேனி, துருதுரு விழிகள், பிறை நெற்றி, லக்ஷனமான முகம். கல்லூரியில் மேலாண்மை படித்து கொண்டிருக்கிறாள். கல்லூரியில் அதிகமான விசிறிகள் அவளுக்கு ஏனோ எந்த ஆண்மகனும் அவளை ஈர்க்கவில்லை. தன் தாய் தந்தையின் வாழ்வை பார்த்தவளுக்கு கல்யாணத்தின் மீது பெரிய ஈடுபாடும் இல்லை. இந்த உலகத்தில் அவளுக்கு பிடித்த ஒரே ஆண் மகன் அவளது அன்பு சகோதரன்.

“மா பார்த்து முடிச்சுட்டீங்களா?? சாப்பிட எதாவது தரீங்களா?? வயிறு ரொம்ப கூப்பாடு போடுது...ப்ளீஸ்...”

“வாயாடி வா சாப்பிட”

“மா நாளைக்கு என்னோட ப்ராஜெக்ட் முடியுது போய் சப்மிட் பண்ணிட்டா வேலை முடிஞ்சது.”

“அப்படியா ரொம்ப சந்தோசம், மேல என்ன செய்ய போற??”

“வேலைக்கு போக போறேன்.”

“சரிடாம்மா..”

“என் பாசமலர் எங்க? ஆஸ்பிடல் கிளம்பிட்டனா??”

என்னதான் கிண்டல் செய்தாலும் அவளது பாசம் உணர்ந்தவர், “ம்ம்ம் கிளம்பியாச்சு”

“இன்னைக்கும் இட்லியா?? இதற்கு ஒரு பாராட்டு பத்திரம் வாசிச்சு இருப்பானே உன் மகன்”.

“ஆமாம்ம்மா எப்படி கண்டு புடிச்ச??”

“ஆமா இதை கண்டுபிடிக்க நாசால இருந்தா ஆள் வருவாங்க...நீ எதை செஞ்சாலும் புகழுரதுக்குன்னே பெத்து வச்சு இருக்கியே”

“ரொம்ப வாய் கொழுப்பு உனக்கு....”

“மாம் தயவு செஞ்சு அவன் புகழ்ரான்னு இப்படியே சமைக்காத, கொஞ்சம் இருக்குற எடத்துக்கு ஏத்த மாதிரி சமைங்கம்மா...உலகத்தில எவ்ளோ ரெசிபி இருக்கு அதையும் செய்யுங்க. இந்த பீட்சா, பர்கர் எல்லாமும் கண்ல காட்டுங்க..ப்ளீஸ்....”

“அதெல்லாம் உடம்புக்கு நல்லதில்லை, இட்லி தான் உலகத்துலேயே பெஸ்ட் உணவுன்னு யுநெஸ்கோ அறிவிச்சு இருக்கு தெரியுமா??

“ஆமா யுநெஸ்கோ அறிவிச்சாங்க, அங்க போய் பார்த்தீங்களா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்த பேக் நியூஸ்...மனுஷி கடுப்பை கிளப்பிகிட்டு... போங்கமா போய் ஒழுங்கா இந்த இட்லியை பர்கரா மாத்தி கொண்டு வாங்க...”

“ரௌடி இரு செஞ்சு கொண்டு வரேன்.”

சமையலறைக்குள் சென்றவர் மகளின் தேவைக்கு ஏற்ப உணவை மாற்றி கொண்டு வந்து உண்ண வைத்தார். இப்படி அடாவடி செய்யறியே மாமியார் வீட்ல போய் இப்படி கேளு ரெண்டு போடு போடுவாங்க அப்ப தெரியும்.
நொடி நேரத்தில் தன் இதம் தொலைத்தவள் “மா எதுக்கு தேவையில்லாத பேச்சு என் வாழ்கைல கல்யாணங்கறது கிடையாது” வேகமாக அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள்.

மகளின் செயலில் மன வருத்தம் கொண்டவர் மகனின் ப்ரேக் நேரம் போன் செய்து நடந்ததை புலம்பினார்.
“மாம் எதுக்கு கவலை படுறீங்க டோன்ட் வொர்ரி அவளுக்குன்னு பிறந்தவன் வரும்பொழுது எல்லாம் சரியாகிடும்.”
“அப்படியா சொல்ற அவனை சீக்கிரம் தேடி கண்டுபிடிக்கணும் பா”

“மாம் என்ன பிரச்சனை உங்களுக்கு இங்க தலைக்கு மேல வேலை இருக்கு அதையெல்லாம் விட்டுட்டு உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடணுமா...அதெல்லாம் கவலை படாதீங்க அவளே பார்த்து சொல்லுவா ஓகே வா”

“என்னடா இப்படி சொல்ற??? நம்ம குடும்ப கெளரவம் என்ன? பாரம்பரியம் என்ன?? உன் வாய்ல இருந்து இந்த மாதிரி வார்த்தை வரலாமா”

ஆமா பெரிய குடும்ப கெளரவம் அதெல்லாம் அப்பா பண்ண வேலையோட முடிஞ்சு போச்சு..மனதிற்க்குள் நினைத்து கொண்டவன், “சரிம்மா இப்போ வேலை இருக்கு அப்புறம் பேசலாம்.”

அவர்களது ஹோட்டல் வீட்டின் முன் பகுதியில் தடுத்து அமைக்கபட்டிருந்தது. அன்று ஹோட்டலில் கூட்டம் களை கட்ட அம்மாவும் பெண்ணும் வேலை முடித்து கிளீனிங் வேலையில் இருக்கும் போது கௌதமும் அவனுடன் வந்து உதவி செய்தான்.

“கண்ணா இப்போதான் வேலை முடிச்சுட்டு வந்திருக்க, நாங்க பார்த்துக்குறோம் நீ போ”

நோ மா, அது எப்படி நான் இவ்ளோ நேரம் கஷ்டபடுறேன் அவன் ஹெல்புக்கு வந்தா என்ன?? ஐ வோன்ட் அக்செப்ட்”
“ஏய் ரவுடி நான் வந்துட்டேன் சும்மா போர்க்கொடி தூக்காதே” அவனுக்கு தெரியும் அவனுடன் வம்பளக்கவே அவனை அழைக்கிறாள் என்று.

“பாசமலரே, எப்படி போச்சு இன்றைய நாள்....”

“ம்ம்ம் போச்சு....கொஞ்சம் ஹெக்டிக் வேலை தான்...ஆனா எனக்கு புடிச்சிருக்கு..”

“எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட் அண்ணா இந்த ஊசி மாத்திரை நோய் இது கூடவே இருக்கியே பயமா இல்லையா??”

“எதுக்கு பயம்??”

“எதுக்கா?? தெய்வமே...வரவங்க எல்லாரும் டல்லா வருவாங்க...அதை பார்த்து நீயும் டல்லா பீல் பண்ண மாட்டியா??”

“ஆரம்பத்துல அப்படி இருக்கும் அப்புறம் நம்ம ட்ரீட்மெண்ட்ல அவங்க குணமாகி போகும் போது சந்தொஷமாகிடும்.”

“டேய் அண்ணா நீ நிஜமாவே கிரேட்”

“போதும் பேசினது போய் படு, குட் நைட்”

“கேட்டதையே கேட்டுக்கிட்டு இரு அவன்கிட்ட உருப்படியா பேச மாட்டியா?? ரெண்டு பேரும் பாலை குடிச்சுட்டு போய் படுங்க, நான் போய் படுக்குறேன் குட் நைட்”

அம்மா தன் அறைக்குள் சென்றவுடன், “ம்ம் சொல்லு என்ன சொல்லணும்”

“டேய் அண்ணா நீ நிஜமா கிரேட், இன்னைக்கு இந்தியால இருந்து போன் வந்தது அதுல இருந்து அம்மா சரியில்லை, ஏதோ யோசனையில இருக்காங்க”

அப்படியா சரி நான் பார்த்துக்குறேன்.

“டேய் அண்ணா உன் பிடிவாதத்தை விட்டுட்டு இந்தியா போக வேண்டி இருந்தா போகலாம் டா”

“ம்ம் சரி”

“தனது சிறு வயதில் நடந்த சம்பவம் கண் முன் வர இந்தியா போக வேண்டி இருந்தால் என்ன செய்வது??” யோசனையுடன் படுக்கையில் விழுந்தான்.
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரூர்

வெயில் உச்சி பிளக்க அம்மையப்பன் நகரில் பெரிய வீட்டின் வாசலில் காலை உறவினர் கூட்டம் கூடியிருக்க பெரிய கூடத்தின் ஒரு புறம் கயிற்றுகட்டிலில் ஒரு ஜீவன் யார் வரவிற்க்காகவோ தன் உயிரை இழுத்து வைத்து கொண்டு இருந்தது. ஒரு காலத்தில் இந்த ஊரையே நடுங்க வைத்த நல்லம்மை ஆச்சி இப்பொழுது காலத்தின் பிடியில் நடுங்கி கொண்டு இருக்கிறார்.

நல்லாருக்கும் போது கொஞ்சமாவா செஞ்சுது இந்த ஆச்சி, ஊரே நடுங்குமே, யார் பாவமோ இப்படி இழுத்துக்கிட்டு கெடக்கு தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டிருந்தவர்கள், ஷக்தி அந்த பக்கம் வந்தவுடன் பெருமுச்சுடன் “அம்மிணி அப்பத்தா இப்படியே இழுத்துகிட்டு கெடக்குராவ...என்னதான் மனகொறைன்னே தெரியலையே???”

“ஒரு வேளை ஊர்ல இருக்குற பேத்தி வரணும்னு இழுத்துகிட்டு கிடக்கோ??”

இந்த பேச்சுக்கள் தன் காதில் விழுந்தாலும் விழாத மாதிரி தன் ஆச்சிக்கு வேண்டிய பணிவிடையை முகம் கோணாமல் செய்து கொண்டிருந்தார் ஷக்தி.

ஆச்சிக்கு தெரியும் இந்த ஸ்பரிசம் ஷக்தியுடையது என்று, அந்த குற்ற குறுகுறுப்பும் சேர கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருந்தது. பல நாட்களாக நடப்பதுதான் ஆனாலும் உறவினர் பேச்சில் அவளது மனமும் சலன பட்டிருக்க யாரும் அறியாமல் தன் கண்ணில் வழியும் நீரையும் துடைத்து கொண்டாள்.

“ஷக்தி பேசாம ஊர்ல இருக்குற அந்த புள்ளைக்கு ஒரு கடுதாசி போடுங்களேன் ஒரு வேலை அதுக்காக தான் காத்திருக்கோ என்னவோ போற நேரம் நிம்மதியா போகட்டுமே”, நேரடியாக உறவினர் கேட்க அவள் அமைதியாய் தன் கணவன் மகாலிங்கம் புறம் திரும்ப அவர் முக குறிப்பில் இருந்து எதுவும் கண்டறிய முடியவில்லை.

“உன்ற மவன் தான் ஏதோ பெரிய படிப்பெல்லாம் படிச்சு போட்டு இருக்கானே பொறவு என்ன அவன்கிட்ட சொன்னா சொல்லிட மாட்டனா??”

அமைதியாய் சமையலறை பக்கம் சென்றவள் வந்திருப்பவர்களுக்கு ஏற்றவாறு சமைக்க கட்டளையிட்டு பின் பக்கம் சென்று எப்பொழுதும் அமரும் வேப்ப மர நிழலில் அமர்ந்தார். எத்தனை வெயிலிலும் தன்னை நம்பி வந்தவர்களை குளிர்விக்கும் மரத்தின் குணம் கூட ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு இல்லையே....எவ்வளவு நம்பிக்கை என்னையும் மீறி உன்னை நேசித்தேனே அதற்க்கான தண்டனையா எனக்கு??? இவ்வளவு நாள் அடி மனதில் புதைத்து வைத்த நிகழ்வுகள் மீறி வந்து ஆட்டம் போட கண்ணில் யாரும் கேட்காமல் அருவி கொட்ட துடைக்க கூட தோன்றாமல் அமர்ந்திருந்தார்.

தன் தாயை தேடி பின்பக்கம் வந்த ஆதி அவரது நிலையை கண்டு வேகமாக நெருங்கினான். அவனை பொறுத்தவரை அவனது தாய் ஒரு இரும்பு மனுஷி, எவ்வளவோ கஷ்டத்திலும் கலங்காதவர் இப்படி அமர்ந்திருக்க “அம்மா என்னாச்சும்மா” பதறியபடி அருகில் வந்தான் ஆதித்தன்.

எவ்வளவு தன் இரும்பு மனுஷியாக இருந்தாலும் பலவீனமான நேரத்தில் சாய தோள் கிடைக்காதா என சோர்ந்திருந்தவர் மகன் அருகில் வர அவனது கையை பிடித்து அழ ஆரம்பித்தார்.

“அம்மா ப்ளீஸ் அழாதீங்க என்னாச்சும்மா பாட்டிக்கு வயசாச்சு நூறை தொட போறாங்க அப்புறம் என்ன??” பல சமாதானம் சொல்லியும் தாயின் கண்ணீர் குறையாதது கண்டவன் அமைதியாய் அணைத்து கொண்டான்.

மகனின் பாசமான அணைப்பும் வேம்பின் நிழலும் சற்றே அவரது மன உளைச்சலை குறைக்க தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவர், “ஆதி கண்ணா எனக்கு ஒரு உதவி வேணும்”

“என்னம்மா வேணும் சொல்லுங்க எதுனாலும் செய்யறேன்.”

பெருமை பொங்க தன் மகனை பார்த்தவர் பாட்டி உடல்நிலை பத்தி வெளிநாட்டுக்கு ஒரு தகவல் கொடுக்கணும்.
சரிம்மா, அட்ரஸ் சொல்லுங்க.

அது அம்மாவுக்கு தெரியாது, கண்ணன் சித்தப்பா கிட்ட கேட்டு சொல்லிடு

“யாருன்னு கேட்கணும்”

“அமெரிக்காவில் இருக்குற சத்யான்னு சொல்லு”

“அவங்க நமக்கு என்ன உறவாகனும்”

“உன்னோட அத்தை”

அத்தை என்னும் உறவு எங்கோ நிழலாய் சில ஞாபகங்கள். ஏன் இத்தனை நாட்கள் யாரும் அவரை பற்றி பேசவில்லை, அவரும் வரவில்லை, தந்தையுடன் தொடர்பிலும் இல்லை. என்ன பிரச்சனையாய் இருக்கும், அப்பா ஏன் ஒதுக்கி வைத்து விட்டார். எதுவும் புரியவில்லை அவனுக்கு. சரி நமக்கென்ன முகவரி தொலைபேசி எண் வாங்கி விஷயத்தை தெரிய படுத்தினால் நம் கடமை முடிந்தது என்று கண்ணன் சித்தப்பாவை தேடி சென்றான்.

கண்களை துடைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்து தன் மகளின் அறைக்கு சென்றார். காலையில் எழுந்து குளித்து அழகாய் பொம்மை போல் அமர்ந்திருந்த மகளின் தோற்றம் மனதை பிசைந்தது. “வினும்மா சாப்பிடுறியா??”

“ம்ம்”...குனிந்த தலை நிமிராமல் தலை அசைக்க இதயத்தில் ரத்தம் வடிந்தாலும் அடுத்து முடிக்க வேண்டிய வேலைகள் கண் முன் வர அவளுக்கு உணவு எடுத்து வர சென்றார்.

“அம்மா அழைத்தபடியே தங்கையின் அறைக்குள் நுழைந்தவன் அவளை கண்டதும் தயங்கி நின்றான். தாய் அங்கு இல்லை என அறிந்ததும் தங்கையிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்றான்.

கிராமத்து வீட்டின் சகல லக்ஷணங்களும் பொருந்திய வீடு, ஏக்கர் கணக்கில் விவசாய நிலம், பஸ் பாடி பில்டிங் கம்பெனி என செல்வம் கொட்டி கொண்டிருந்தது. மகாலிங்கம் வீட்டின் தலைவர் ஆனால் வீட்டில் தாமரை இலை தண்ணீர் போல நடந்து கொள்வார். அவரது சொந்த அத்தை மகள் ஷக்தி தேவி அவரது மனைவி வீட்டின் முதுகெலும்பு, காலை கண் விழிப்பதில் இருந்து இரவு உறங்கும் வரை அவரின் உத்தரவின்றி ஒரு அணுவும் அசையாது.

இவர்களின் அருமை புத்திரன் ஆதித்யன் எம்பிஏ பட்டம் முடித்து இருக்கிறான். விவசாயத்தையும் கம்பெனி இரண்டையும் நிர்வகிக்கும் திறமைசாலி. நம் ஊர் பழக்கவழக்கங்களில் ஊறியவன். எப்பொழுதும் விறைப்பாய் இருப்பான், சிரிக்க காசு கேட்பான். தந்தையின் குணம் அறிந்து வெறுப்பவன் அதையும் வெளி காட்டி கொள்ள மாட்டான் அவரின் மீதான பாசத்தையும் சேர்த்து அன்னையிடம் காட்டுபவன். தங்கையின் மீது பாசம் இருந்தாலும் வெளி காட்டி கொள்ளாதவன். அவனது அன்னையே அவனது உலகம் அவர் சொல்லே வேதவாக்கு.

அந்த வீட்டின் கடைக்குட்டி வினோதினி, சிறு வயதிலிருந்தே எல்லா விஷயங்களும் தாமதமாகத்தான் வரும் அவளுக்கு. அங்கிருந்த டாக்டர் சில குழந்தைகள் அப்படிதானம்மா வளர வளர சரியாகிடும் கவலைபடாதீங்க சொல்லிவிட சக்தியும் சற்றே நிம்மதியனார். பள்ளியில் சேர்த்த பிறகு இன்னும் நிலைமை மோசமாக சென்னைக்கு வந்து காட்ட அப்பொழுதுதான் குழந்தைகள் நல மருத்துவர் அணைத்து சோதனைகளும் செய்து பார்த்து அவளுக்கு இருக்கும் பிரச்னையை சொல்ல ஆடித்தான் போனார் ஷக்தி.

“இதற்கு என்ன செய்ய வேண்டும் டாக்டர்??”

“உங்களோட முழு அன்பும் அக்கறையும் இருந்தால் சீக்கிரம் சரியாகிடுவாங்க, நான் சொல்ற சிகிச்சை முறைகளை பாலோ பண்ணுங்க”

வீட்டிற்க்கு வந்து கணவனிடம் மருத்துவர் சொன்னதை பகிர்ந்து கொள்ள அவர் கேட்ட கேள்வியில் உயிருடன் மறித்து போனார். அதன் பிறகு மகளின் விவரத்தை அவரிடம் எடுத்து செல்வதில்லை.

சிறிய வயதில் தன் தங்கைக்கு இருக்கும் பிரச்னையை புரிந்து கொள்ள முடியாமலும் பள்ளியில் மற்ற மாணவர்களின் கேலி கிண்டலால் அவள் மீது ஏற்பட்ட வெறுப்பும் ஆதியையும் அவளிடம் இருந்து விலக்கி வைத்தது. வளர்ந்த பிறகு அன்பு வந்தாலும் அதை வெளி காட்டி கொண்டவன் இல்லை. அன்னையின் அன்பு மட்டும் அவளை உயிருடன் வைத்திருந்தது மற்றபடி அந்த வீட்டில் வேறு எந்த விதத்திலும் அவள் தொடர்பில் இல்லை.

அன்னையிடம் அமெரிக்காவிற்கு போன் செய்த விஷயத்தை கூறினான்.

சரிப்பா என்பதுடன் அவரும் முடித்து கொண்டார்.

கம்பனிக்கு கிளம்ப வெளியே வந்தவன் எதிரில் தந்தை வர சற்றே ஒதுங்கினான். “அத்தை ஊருக்கு எப்போ வரன்னு சொன்னா?”

ஒரு நிமிடம் தன்னிடம் பேசினாரா என வியந்தவன், “நான் விஷயத்தை சொல்லிட்டேன் அவங்க வருவதை பத்தி சொல்லல”, வீட்டில் மனைவியிடம் பேச முடியல, ஊர்ல இருக்க தங்கச்சி பத்தி பிடிக்காத மகனாலும் நின்னு பேசுறாரு மனதில் நினைத்து கொண்டே தன் வேலை பார்க்க கிளம்பினான்.


தொடரும்......
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எஸ் பா தேங்க்ஸ் பா ஞாபகம் வச்சு இருக்குறதுக்கு........திலகா வெரி ஹாப்பி.....
 

Chitra Balaji

Bronze Winner
எஸ் பா தேங்க்ஸ் பா ஞாபகம் வச்சு இருக்குறதுக்கு........திலகா வெரி ஹாப்பி.....
எப்படி pa marakka முடியும்.... Ennaku romba பிடிச்சி irunthuthu story..... இந்த maari oru நோய் இருக்கும் Ennaku இந்த story padicha பிறகு தான் therinjithu.... Super story....
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2 பதிந்து விட்டேன் படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

பார்ட் 02


ADHD அறிகுறி 1
கவனமின்மை


அடுத்தவர் கூறும் விவரங்களை கவனிக்க தவறுதல்
ஒரு வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்துவதில் குறைப்பாடு
எளிதில் கவனம் சிதறுதல்.
அடுத்தவர் பேச்சில் கவனமின்மை.
தங்களது தினசரி செயல்பாடுகளில் மறதி
கவனமாக தொடர்ந்து செய்ய வேண்டிய வேலைகளை தவிர்த்தல்.
கவனமாக முடிக்க வேண்டிய வேலைக்கு தேவைப்படும் பொருட்களை தொலைப்பது

விளைவுகள்

சொல் பேச்சு கேட்பதில்லை என்று பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கோபத்திற்கு ஆளாவார்கள்.
மற்ற பிள்ளைகளின் கிண்டல் கேலியால் அவர்களுடன் அடிக்கடி தகராறு ஏற்பட வாய்ப்பு.


பனி கொட்டும் இரவில் ஐபாடில் தமிழ் பாடல்களை ஆத்மார்த்தமாய் ரசித்து கொண்டிருந்தான் கெளதம். கண் மூடி பாடலை கேட்டு கொண்டிருந்தவனின் மனதை என்னவோ செய்தது. இந்த உலகில் எங்கோ ஒரு ஜீவன் தனக்காக காத்திருப்பதாய் தோன்றியது அவனுக்கு. மனதை பிசைந்து உணர்வுகளை தட்டி எழுப்பி இதமாய் நிறைத்தது. இருபத்தியாறு வயது கம்பீரமான ஆண் மகன், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவன், இயல்பாக பெண்களுடன் பேசி பழக கூடியவன், உடன் படித்த சில பெண்களுடன் டேட்டிங் கூட சென்றிருக்கிறான். யாரிடமும் இவன் தேடும் ஏதோ ஒரு வஸ்து மிஸ்ஸிங்.

மேல்நாட்டு இசையை மட்டுமே விரும்பி கேட்பவன் ஒரு முறை எதேச்சையாக தன் தாய் கேட்டு கொண்டு இருந்ததை கேட்டு தமிழ்நாட்டு இசைக்கு அடிமையாகி விட்டான். அதன் பிறகு ராஜாவும் ரகுமானும் ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்.

இன்றும் தன் படுக்கையில் ஆத்மார்த்தமாய் பாடலுடன் ஒன்றி இருந்தவனை தொலைபேசி அழைத்து கொடுமை செய்தது.
பச்...தொலைபேசியை எடுத்தால் ஷக்தி அழைத்திருந்தாள். “என்ன ரவுடி ஒரே வீட்ல இருந்துகிட்டு போன் பண்ற”

“ஒரு நிமிஷம் அம்மா ரூம் போய் பார்த்துட்டு வா, நான் லைன்ல இருக்கேன்”

அமைதியாக அன்னையின் அறைக்குள் சென்றான். சத்யா தன் சிறு வயது போட்டோக்களை பார்த்து கண்ணீர் வடித்து கொண்டிருந்தார்.

அம்மா என்னும் அழைப்பை கேட்டதும் அதை சற்றென்று மறைத்தவர், கண்களை துடைத்து கொண்டு “என்னப்பா??” என்றார்.
ஏன்மா அழறீங்க?? எல்லாரும் உங்களை அழ வைக்குறாங்க, அதனாலதான் எனக்கு யாரையும் பிடிக்கல என்றவன் குரல் அவனையும் மீறி கரகரத்து ஒலித்தது.

“இல்லை கண்ணா...யாரும் என்னை அழ வைக்கல, நான்தான் எல்லாரையும் அழ வச்சு இருக்கேன்.”

“மாம் அப்படி சொல்லாதீங்க, நீங்க அப்படி கிடையாது.”

“இல்லை கண்ணா உன்கிட்ட என்னால சில விஷயங்கள் பகிர முடியல, ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோ”

“சரி மாம் எனக்கு புரிய வேண்டாம், ஆனா நீங்க அழாதீங்க...”

“எனக்காக ஒரு ஹெல்ப் பண்றியா??”

“என்ன மாம்”

“ஊர்ல ஆச்சி ரொம்ப முடியாம இருக்காங்கலாம், ஒரு முறை கூட்டிகிட்டு போறியா??”

“கூட்டிகிட்டு போறேன் ஆனா ஒரு கண்டிஷன், அங்க உங்களை யாராவது கஷ்டபடுத்தினா அடுத்த நிமிஷம் அங்க இருந்து கிளம்பிடனும்.”

“சரிப்பா”

“ஐ ஜாலி” இவ்வளவு நேரம் ஒளிந்து கொண்டிருந்த ஷக்தி வெளியே வந்து கத்த மற்ற இருவரும் சகஜமானார்கள்.

அடுத்த இரண்டு நாட்களில் பம்பரமாய் சுற்றி இந்தியா செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் முடித்தான் கெளதம். விமானத்தில் அமர்ந்திருந்த சத்யாவால் நம்ப முடியவில்லை. தன் ஊருக்கு செல்கிறோம் என்பதையும் மீறி தன் உயிர் தோழி ஷக்தியை பார்க்க போகிறோம் என்பதே பரம சந்தோஷத்தை அளித்தது.

இம்முறை அவள் திட்டினாலும் அவளிடம் பேசி விட வேண்டும் மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்று மனம் துடித்தது.
ஷக்தி விவரம் தெரிந்து இப்பொழுதான் வருகிறாள் என்பதால் அவளுக்கும் அவளது பூர்விக ஊரை பற்றியும் சொந்தங்களை பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது.

கெளதம் கடும் கடுப்பில் இருந்தாலும் வெளியில் காட்டி கொள்ளாமல் வெளியில் அமைதி காத்தான்.

சென்னை வந்ததும் ஆதியின் நம்பருக்கு அழைத்தவன், கோவை வரும் நேரத்தையும் அங்கிருந்து ஊருக்கு எப்படி வர வேண்டும் என வழி கேட்டான்.

நீங்க அங்கேயே இருங்க, நான் கார் கொடுத்து அனுப்புறேன், என்றான்.

இவர் பெரிய தொரை இவர் கார் கொண்டு வந்தா என்ன?? கேள்வி மனதில் தோன்றினாலும் இருக்கும் ஒரு வாரத்திற்கு எதற்கு தன்னால் பிரச்சனை என அமைதி காத்தான்.

கோவை மண்ணை மிதித்த பொழுது வந்த சந்தோசம் சத்யாவின் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

பேசி கொண்டே விமான நிலையத்தின் வெளி வாசல் வந்தனர் மூவரும் “டேய் அண்ணா அம்மா முகத்தை பாரேன் தௌசன் வோல்ட்ஸ் பல்பு போட்ட மாதிரி மின்னுது.”

ஷக்தி “பார்போம் பல்பு எவ்ளோ நேரம் எரியுதுன்னு??”

“கண்ணா இங்கிருந்து கரூர் போற பஸ்ல போகணும் பா”

“ஏன்மா உங்க சொந்தகாரங்க வந்து கூப்பிடமட்டாங்களா??”

“இல்லைப்பா அவங்களுக்கு எதுக்கு சிரமம்??”

ஒரு சிரமமும் இல்லை அத்தை, வாங்க போகலாம்.

சட்டென்று திரும்பியவர் ஷக்தியின் ஜாடையில் நெடுநெடுவென நின்ற அண்ணன் மகனை கண்டதும் கண் கலங்கினார்.

நெருங்கி நடுங்கும் விரலால் அவனது கன்னத்தை தடவியவர் “எப்படிப்பா இருக்க?? ஷக்தி எப்படி இருக்கா?? அண்ணன் எப்படி இருக்காங்க??”

“எல்லாரும் நல்லா இருக்கோம் ஆச்சிக்கு தான் முடியல, வாங்க அத்தை நம்ம வண்டி அங்க நிக்குது போகலாம்”

மூவரும் வண்டியை நோக்கி நடக்க தன் அத்தையை தவிர தங்களை கண்டு கொள்ளவில்லை என்னும் கொலைவெறியில் இருந்தனர் அண்ணனும் தங்கையும்.

இதை அறியாமல் கிரீன் சாண்டாக வண்டிக்கு சென்றான் ஆதி.

ஊரில் இருந்த ஒவ்வொருவரையும் விசாரிக்க ஆதி பொறுமையாய் பதில் சொல்லி கொண்டே வந்தான்.

அத்தை நம்ம ஊருக்கு போக ரெண்டு மணி நேரம் ஆகும், எதாவது சூடா சாப்பிடுறீங்களா??

அவர் தன் பிள்ளைகளை பார்த்து, “ம்ம் சரிப்பா” என்றார்.

கணபதி மெஸ்ஸில் சூடான மசால் தோசையும் பில்டர் காபியும் தேவாமிர்தமாய் வயிறை நிறைத்தது.

வண்டியில் ஏறிய பிறகு மறுபடியும் அத்தையும் மருமகனும் தங்கள் சம்பாஷணையை துவங்க, இவர்களின் கூட்டணியில் காண்டான அண்ணனும் தங்கையும் அவர்களுக்குள் பேசி கொண்டே வந்தார்கள்.

“டேய் அண்ணா என்னடா வெயில் இந்த காட்டு காட்டுது, நேத்து வரைக்கும் மைனஸ் நாலு டிகிரில இருந்துட்டு இன்னைக்கு நாற்பது டிகிரி சுடு உடம்பு தாங்கலடா, இந்த அம்மாவுக்கு நாம கூட வந்துருக்கோம்ன்னு ஞாபகமாவது இருக்கா, அண்ணன் மகனை பார்த்ததும் நம்மை கழட்டி விட்டுட்டாங்களே இது சரியா??” வாயடித்து கொண்டே வந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தூங்கி விட்டனர்.

வீடு நெருங்க நெருங்க சத்யாவின் வயற்றில் புளி கரைத்தது. வீட்டில் எப்படி நடந்து கொள்வார்களோ?? எண்ணம் வர அமைதியனார்.

திக் திக் நிமிடங்களாய் சத்யாவிற்கு இருக்க வீட்டை அடைந்தனர். படபடக்கும் இதயத்துடன் வண்டியிலிருந்து இறங்க, இவர்களை வரவேற்க உறவுக்கார கூட்டம் மொத்தம் வெளியே வந்தது.

"ஹே சத்யா" என்னும் இரைச்சலுடன் அனைவரும் கத்த அந்த இடமே சந்தை கடை போன்று ஆனது.

திடீரென்று வந்த சத்தத்தில் கண்விழித்த பாசமலர்கள் திறுதிறுவென விழித்தவர்கள் மெதுவாக வண்டியை விட்டு இறங்கினர்.

அனைவரும் சத்யாவை சூழ்ந்து கொண்டு நலம் விசாரிக்க ஷக்தி பயத்தில் கோழி குஞ்சு போல அண்ணனிடம் ஒன்றி நின்றாள்.

டேய் அண்ணா நமக்கு இவ்ளோ சொந்தமாடா??

அருகில் நின்றிருந்த ஆதி, “அம்மணி இது உள்ளூர் மனுஷங்க, சுத்தி எட்டு பட்டில இருக்குரவக வந்தா என்ன சொல்வீங்க??”
ஆஹ் எட்டு பட்டியா?? அப்படின்னா என்ன அண்ணா?? என்றாள் கண்ணில் மிரட்சியுடன்.
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீடு பெரிய மாளிகை போன்று இருந்தது. இவ்வளவு பேர் இருந்தும் நிறைய இடம் இருந்தது.

ஷக்தியின் கண்களில் மிரட்சியை பார்த்தவன், “ஏனுங்க அம்மணி இம்புட்டு பயம், யாரும் உங்களை கடிச்சு போட மாட்டாங்க”

இவன் என்ன வித்யாசமாய் பேசுறான்??

சொந்தங்கள் தற்போது சத்யாவிடம் நலம் விசாரித்து முடித்து விட்டு இவர்கள் புறம் திரும்பியது.

“சத்யா பசங்க நல்லா வளர்ந்துட்டாங்க. உன் பொண்ணு தேவதை மாதிரி இருக்கா. மகன் ராசா மாதிரி இருக்கான்.”

“எங்க இவங்க அப்பாரு கூட வரலையா??”

“அவருக்கு லீவ் கிடைக்கல, அப்புறம் வருவாக...”

தந்தையை பற்றிய உண்மையை வெளியில் கூற மனம் வரவில்லை.
ஒரு வழியாக வீட்டிற்க்குள் நுழைய ஆதி மகாலிங்கம் ஷக்தி மூவரும் நிற்க,“வாம்மா வாங்க எல்லாரும்” என்றார் மகாலிங்கம்

ஷக்தி வருமாறு தலை அசைக்க, சத்யா ஓடி சென்று அவரை கட்டி கொண்டார்.

இருவர் மனதிலும் எண்ணங்கள் எரிமலையாய் பொங்கினாலும் அதையும் மீறிய நட்பு அவர்களை உயிர்பித்தது. அந்த நேரம் தங்கள் வாழ்வில் நடந்த அனைத்தும் மறந்தனர் தங்கள் நட்பு மட்டுமே மனதில் நிற்க ஷக்தி என்று சத்யாவும், சத்யா என்று சக்தியும் வேறு வார்த்தை மறந்த குழந்தைகளாய் கட்டி பிடித்து கண்ணீர் வடித்தனர்.

ஒரு திகில் படம் பார்ப்பதை போன்று அனைவரும் பார்த்திருக்க, “ம்ம் சும்மாவா அத்தை மக மாமன் மகளாவ இருந்தீங்க, ஒட்டி பொறந்த பொறப்பால்ல ஒன்னும் மண்ணா திரிஞ்சீங்க நேரம் பிரிச்சி போட்டுடுச்சு இனிமே வாச்சும் இப்படியே இருங்க” என்று சொந்தத்தில் யாரோ பேசி கொண்டிருந்தார்.

சத்யா என்னதிது குழந்தை மாதிரி, உன் பசங்களை எனக்கு காட்ட மாட்டியா? என்றார் மகாலிங்கம்.

அண்ணா அப்படியெல்லாம் இல்லை நான் உங்களை பார்த்ததுல மெய் மறந்துட்டேன்.

இது கெளதம் உங்க மருமகன் அங்க டாக்டரா இருக்கான்.

இது ஷக்திப்ரியா உங்க மருமகள் இப்போதான் பட்ட படிப்ப முடிச்சிருக்கா.

அப்பா இவ்வளவு பேசுவாரா...என்பது போல மனைவியும் மகனும் பார்த்து நிற்க, “என்ன அங்கேயே நிக்குறீங்க வாங்க இங்க” என்று மனைவியையும் மகனையும் அழைத்தவர், “இது என்ற மனைவி ஷக்திதேவி, இது என்ற மகன் ஆதித்யன்”

பல வருடங்களுக்கு பிறகு கணவன் பேசியதில் நெகிழ்ந்தவர் அவரை பார்க்க, என்ன ஷக்தி என் தங்கச்சி பார்த்தியா உன் பேரையே அவ பொண்ணுக்கு வச்சிருக்கா எவ்ளோ பாசம் பாரு...அவரிடம் நேரிடையாக பேச மயக்கம் வராத குறைதான்.

கண்ணா ரெண்டு பேரும் போங்க போய் மாமா மாமிகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க என்றார் சத்யா.

எல்லா செல்வமும் பெற்று வளமாக வாழனும் என் குழைந்தங்க என்று வாழ்த்தினர் இருவரும்.

ஆதி தன்னிச்சையாக அத்தையின் கால்களில் விழ அந்த இடமே உணர்ச்சி பெருக்கில் மிதந்தது.

ஷக்தி ஷக்தி என்று கண்ணில் நீருடன் அத்தை தூக்கத்தில் புலம்புவதை கேட்டவன் ஓரமாய் வண்டியை நிறுத்தி அத்தை அத்தை என்று குரல் கொடுக்க விழித்தவள் அதனையும் கனவா என்று விழித்தார்.

அவர்கள் வீட்டிற்க்கு வரும் நேரம் பொழுது சாய்ந்து விட்டது. ஆச்சியுடன் இருந்தவர்கள் சென்று விட வீட்டில் வேலையாட்கள் மட்டும் இருந்தனர்.

கார் சப்தத்தை கேட்டு மகாலிங்கம் வந்து வாம்மா என்றார்.

சத்யாவிற்கு அதுவே போதுமானதாக இருக்க, எப்படின்னா இருக்கீங்க??

“ம்ம் இருக்கோம் வாங்க” பொதுவாய் வரவேற்று விட்டு உள்ளே சென்றார்.

ஷக்தி உணர்ச்சி பெருக்கில் சமையலறையில் இருக்க, அம்மா குரல் கொடுத்தவாறே ஆதி அங்கே சென்றான்.

மகன் முன் எதையும் காட்ட விரும்பாதவர் மூவருக்கும் தண்ணீர் எடுத்து கொண்டு வெளியே வந்து கசங்கிய முகத்துடன் வாங்க என்றார். ஆதியிடம் திரும்பி “தம்பி அவங்க ரூம் காமிச்சி கொடு, குளிச்சிட்டு வரட்டும் நான் சாப்பிட எடுத்து வைக்கிறேன்” பெரிதாய் எதையும் வெளியில் காண்பித்து கொள்ளாமல் உள்ளே சென்றார்.

ஷக்தி தன்னை ஒரு முறை கூட ஏறெடுத்து பார்க்கவில்லை என்பதை அறிந்த சத்யா மனதிற்க்குள் கலங்கினாலும் அவரும் குழந்தைகள் எதிரில் எதையும் காண்பித்து கொள்ள விரும்பவில்லை.

பெரியவர்கள் சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், குழந்தைகள் அதி புத்திசாலிகளாய் அனைத்தையும் கவனித்தனர். பிரச்சனை இரண்டு அம்மாக்களுக்கு நடுவில் என்றாலும், தவறு யாருடையதாகினும் தங்கள் அம்மாவின் பக்கம் நிற்பது என மனதில் முடிவெடுத்தனர்.

சத்யா தன் தோழி தன்னை பார்க்கவில்லை என்று கலங்கி நிற்க, மாம் வாங்க ரூமுக்கு போய்டு பிரெஷ் ஆகிட்டு ஆச்சியை பார்க்கலாம் வாங்க வாஞ்சையுடன் மகன் பேச மற்றதை மறந்து அவனுடன் சென்றார்.


“மாம் ரெடியா வாங்க ஆச்சியை பார்க்கலாம்” என்று அனைவரும் சென்றனர்.

சத்யா மெதுவாக அவரின் கைகளை பிடிக்க அதில் ஒரு சின்ன அதிர்வு ஓடியது.

“பாரு ஆச்சிக்கு நீ வந்தது தெரிஞ்சு இருக்கு பேசத்தான் முடியல”

கெளதம் ஒரு மருத்துவனாக அவரது உடல் நிலையை பார்க்க நம் கையில் எதுவும் இல்லை என்னும் முடிவுக்கு வந்தான்.
அங்கேயே அவரது அருகில் அமர்ந்து பேசி கொண்டே இருந்தனர்.

சரி வாங்க இவ்ளோ தூரம் பிரயாணத்துல களைப்பு இருக்கும், சாப்பிட்டு ரூமுக்கு போய் கொஞ்ச நேரம் ஓய்வா இருங்க, அவர்கள் மூவரையும் அழைத்து சென்றார் ஷக்தி பேசினாலும் முகம் இறுகியே இருந்தது.

நல்ல சாப்பாடு பெரிய கற்றோற்றமான அறை பெரிய கட்டில் இரண்டு இருக்க கெளதம் ஒன்றிலும் மற்றொன்றில் தாயும் மகளும் படுத்து கொண்டனர்.

தாய் உறங்கிவிட்டதை உறுதி படுத்தி கொண்டு அண்ணனும் தங்கையும் அமைதியாய் பேசி கொண்டனர்.

“டேய் அண்ணா உனக்கு இங்க பிடிச்சிருக்கா??”

“இருக்க போற ஒரு வாரத்துக்கு பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்ன??”

“எனக்கு பிடிக்கலடா, இவ்ளோ பெரிய வீட்ல சிரிப்போ சந்தோஷமோ இல்லை. இங்க இருக்குற அமைதி எனக்கு பிடிக்கல..”

“சரி விடு சீக்கிரம் கிளம்பிடலாம்.”

கௌதமின் எண்ணம் நிறைவேறுமா?? அவன் நினைத்தது போல சீக்கிரம் கிளம்பிடுவானா???


தொடரும்......
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பார்ட் 03

ADHD அறிகுறி 2
அதீத இயக்க/உணர்ச்சி வேக அறிகுறிகள்
கை மற்றும் கால்களை பொறுமையின்றி அசைப்பது.
அதிகமான பேச்சு
பேசும்போதோ/விளையாட்டின்போதோ நாகரிகமின்றி குறுக்கிடுதல்
பொறுமையின்மை



அடுத்த நாள் அதிகாலை கெளதம் விழித்து கொள்ள தாயும் தங்கையும் நன்கு உறங்க தன் தொலைபேசியுடன் அறையை விட்டு வெளியில் வந்தான்.

வீடு இப்பொழுதும் அமைதியாய் இருக்க, அந்த அமைதியை கெடுக்க விரும்பாமல் மெதுவாக வெளியில் வந்தான். வீட்டை சுற்றி பெரிய தோட்டம் நேற்று அவர்கள் வரும் நேரம் இருட்டி விட்டதால் சுற்றுபுறத்தை கவனிக்கவில்லை தற்பொழுது பார்த்தால் எவ்வளவு பெரிய இடம். ரசித்தபடியே வீட்டின் வெளிப்புரத்தை சுற்றி வந்தான். “வாவ் அஹ்சம்” மனதிற்குள் ரசித்தவன், ஒரு சுற்று முடித்து மீண்டும் வாயிலுக்கு வர காலையில் குளித்து முடித்து அழகாய் பாவாடை தாவணி உடுத்திய ஒருத்தி கோலமிட்டு கொண்டிருந்தாள்.

அவளின் பின்புறம் இருந்து பார்த்தவன், இவள் யாராக இருக்கும், இது புது விதமான உடையாக இருக்கிறதே என்று யோசித்தபடியே அருகில் வர மெல்லிய பாடலுடன் கோலம் போட்டு கொண்டிருந்தாள். என்ன பாடல் அது என்று கேட்பதற்காக அவன் இன்னும் நெருங்கி வரவும் அவள் கோலம் முடித்து எழவும் அந்நேரம் சரியாக அவனின் தொலைபேசி ஒலிக்கவும் சரியாக இருக்க, திடுமென்று தூக்கி வாரி போட்டது போன்று நின்றவள் திரும்பி இவனை பார்த்து பயந்தவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கோலமாவை தவற விட்டு அப்படியே மடிந்து அமர்ந்து அழ தொடங்கினாள்.

பார்த்த அந்த நானோ செகண்டில் அச்சில் வார்த்தது போல இருந்த அந்த முகம் அவன் உள்ளத்தில் பதிய கெளதம் குணா கமல் எபெக்ட் கொடுக்க அவனுக்கு மட்டும் பேக்கிரௌண்டில் இந்த பாடல் ஒலித்தது.
“பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊன் உருக, உயிர் உருக, தேன் தரும் தடாகமே
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே”

யார் இவள்?? ஏன் இப்படி இருக்கிறாள்?? யாரிடம் கேட்பது?? டாலிம்மா யாருடா நீ?? ஏன்டா என்னை பார்த்து பயப்படுறா??
டேய் நீ அவளை பார்த்து ரெண்டு நிமிஷம் கூட ஆகல, அதுக்குள்ள செல்ல பேர் எல்லாம் வச்சுட்ட...மனசாட்சி குரல் கொடுக்க

“ஏய் அவ தான் இனிமே எனக்கு எல்லாம்.”

எல்லாமா?? என்னடா சொல்ற....இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு நீ கிளம்பனும். எந்த தேவையில்லாத உறவையும் இங்க இருந்து சேர்த்துக்காத மனசாட்சி பொறுமையாய் எடுத்துரைக்க.

“வினும்மா” மகள் வெளியில் கோலமிட்டாலும் அவளின் மீது ஒரு கண் வைத்திருந்த ஷக்தி குரல் கேட்டு ஓடி வந்தார்.

“நா….ன் ஒன்னும் செய்யல வாக்கிங் போயிட்டு இங்க வரும்போது போன் அடிச்சது அவ்ளோதான்” என்றான் குழப்பத்துடன்.

“எனக்கு தெரியும் பா. சரி நான் பார்த்துக்குறேன் நீ வாக்கிங் போப்பா, வினும்மா ஒன்னுமில்லடா அது யாரு தெரியுமா நம்ம சத்யா அத்தை இருக்கா இல்லை அவங்க பையன் ஊர்ல இருந்து வந்திருக்காங்க.” நேற்று இறுகிய முகத்துடன் இருந்தவரா இவர் மொத்த அன்பையும் குரலில் தேக்கி மகளை சமாதான படுத்துபவரை பார்த்து எது இவரது நிஜ முகம் என்று வியந்தான்.

“அம்மா ரொம்ப பயமா இருக்கு” மெல்லிய குரலில் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்ல

“சரிடா பயம் வேண்டாம் அம்மா கூடவே இருக்கேன், கோலம் போடுறியா??”

“இல்லை வேண்டாம் ரூமுக்கு போகணும். பயமா இருக்கு” அதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்க, ஷக்தி பொறுமையாக அனைத்தையும் மீண்டும் விளக்கி அவளை அறைக்குள் அழைத்து சென்றார்.

அழகாய் அவள் போட்டிருந்த கோலம் அவன் கண்ணை பறிக்க, அவளை எப்படி அடுத்து சந்திப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

வீட்டு வாசலில் யோசித்தபடி நின்று கொண்டிருந்த கௌதமை பார்த்தபடி வந்தான் ஆதி. “ஹாய் குட் மார்னிங்”

“குட் மார்னிங்”

“என்ன காலைல வெளியில தூங்கலையா??”

“தூக்கம் வரல்ல, நீங்க எங்க போறீங்க?”

“ஏன் மரியாதை எல்லாம் சும்மா பேர் சொல்லியே கூப்பிடு கெளதம் நானும் உன்னை அப்படி கூப்பிடலாம் இல்லையா??”

“ம்ம்ம் கண்டிப்பா எனக்கு எந்த பிரச்னையும் இல்லை ஆதி.” இந்த வீட்டில் தன்னுடன் பேசும் ஒரே ஆளை பகைத்து கொள்ள அவன் தயாராக இல்லை. அதுவும் வினும்மா அவனது டாலிம்மாவை பற்றி வேறு தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது.

“இப்போ எங்க போற??”

“நம்ம விவசாய நிலத்தை எல்லாம் காலைல ஒரு பார்வை பார்த்துட்டு வருவேன். வர்றியா?”

“ஷ்யூர் வரேன் வா” அவனுடன் காரில் ஏறி கிளம்பினான்.

அவர்களது பண்ணை மிகவும் வித்தியாசமாக இருந்தது. என்ன பயிர் போட்டு இருக்கீங்க?

இது மொத்தம் அஞ்சு ஏக்கர் நிலம் கெளதம், இது முழக்க நான் தனியா விரும்பி செய்யுறது. நம்மாழ்வார் அய்யாவோட தற்சார்பு வேளாண் கொள்கைகள் இதுல அப்பிளை செய்து இருக்கேன், இந்த இடம் சுத்தி உயிர் வேலி போட்டு இருக்கோம். தென்னை மரங்கள், சிறுதானிய பயிர்கள், எண்ணை விதைகள், மூலிகை செடிகள் எல்லாம் இருக்கு.

“அதென்ன உயிர்வேலி?”

“பண்ணையின் வேலியோரமா நாம வைக்குற மரங்க காத்தோட வேகத்தை தடுத்து நிலத்தில் இருக்கும் நீரை தக்க வைக்கும், இவைகளை மழைகாலத்தில் வச்சால் நல்லா வேர் பிடிச்சுக்கும்”.

“அது மாதிரி வைக்க தனியா மரங்கள் இருக்கா??”

“நொச்சி மரம், பனை மரம், வாத நாராயணா, கிளரிசிடியா, அகத்தி போன்ற பயிர்களை வச்சு உயிர்வேலி அமைச்சுகிட்டா நம்மால் இந்த சுற்று சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது. பயிர்களும் பாதுகாப்பா இருக்கும்.”

“க்வைட் இன்டரஸ்டிங்”

“கெளதம் உனக்கு நம்ம ஊரோட வரலாறு தெரியுமா??”

வரும்போது விக்கிபீடியால பார்த்துகிட்டு வந்தேன். நிறைய விஷயம் போட்டு இருந்தது. இந்த உலகத்தை பிரம்மா படைப்பு தொழிலை இங்கதான் தொடங்கினாராம் அப்படியா??”
 
Status
Not open for further replies.
Top