திரும்பி வருவேன் உன்னை தேடி 10
நந்தன் ரிஷி இருவரும் அடுத்து என்ன செய்வது என புரியாமல் அமர்ந்து இருந்தனர் அவர்களுக்கு ஏதேனும் சிறு வழி இருந்தால் கூட தாங்கள் இங்கு இருக்கும் விஷயத்தை தந்தைமார்களிடம் கூறி தப்பிபதற்கான வாய்ப்பினை பெறலாம் ஆனால் நடப்பதோ வேறு..
தினேஷ் மனதில் ஏதோ ஒரு சிந்தனை ஓடி கொண்டே இருந்தது இதனை கவனித்த திவ்யா அவனிடம்
" தினேஷ் என்ன ஏதோ யோசனையாவே இருக்கிங்க "
தினேஷ் " இல்ல திவி என் மனசு இத வினோத் பண்ணலனு சொல்லுது "
திவ்யா " என்ன சொல்றிங்க நீங்க தான வினோத் பாத்த சந்தேகமா இருக்குனு சொன்னிங்க "
தினேஷ் " சந்தேகமா இருக்குனு தான் சொன்னேன் பட் அவன் தான் கொல பண்ணாணு நான் சொல்லல "
திவ்யா " என்ன குழப்புறிங்க "
என சற்று கடுப்புடன் கேட்க
தினேஷ் " வினோத் பாத்தா சந்தேகமா தான் இருக்கு ஆனா என் உள் மனசு இதுல ஏதோ தப்பு இருக்குற மாதிரியே தோணுது "
திவ்யா அவனை புரியாமல் பார்க்க அவன் அப்போதும் அதே யோசனையிலே இருந்தான்...
ரிஷி " மச்சான் வீட்டுல இன்பார்ம் பண்ணலாமா "
நந்தன் " அதான் டா நானும் யோசிக்குறேன் வீட்டுல பேசலாம் பட் எப்படினு தெரியலையே மொபலையும் புடுங்கிட்டாங்க இப்போ எப்படி "
என யோசிக்கும் போதே அங்கு ஐம்பது வயது மிக்க அதிகாரி ஒருவர் வர இவர்களை கண்டு தனது கையில் உள்ள காஃபியை இருவர் முன்பும் வைத்தார்...
நந்தன் " இன்னும் எவ்வளவு நேரம் தான் நாங்க இங்கேயே இருக்குறது "
" இல்லபா எல்லாம் முடிஞ்சுட்டு அந்த பையன் கொல பண்ணத ஒத்துக்கிட்டான் உங்க வீட்டுல தகவல் சொல்லி இருக்கோம் வந்து கையெழுத்து போட்டு கூட்டிட்டு போகலாம் "
என வந்தவர் தனது கடமையை முடித்துக் வெளியேற
நந்தன் தனது காலை ஓங்கி தரையில் மிதித்து " நம்ப என்ன சின்ன பசங்களா கையெழுத்து போட்டு கூட்டிட்டு போக ச்ச "
என மறுபடியும் தரையில் ஓங்கி மிதித்தான்...
ரிஷி " மச்சான் நீ அவரு சொன்னத கவனிச்சியா "
என கேட்க நந்தன் கண்களை சுருக்கி அவனை பார்த்தான்..
ரிஷி " வினோத் கொல பண்ணத ஒத்துக்கிட்டானு அவரு சொல்லிட்டு போறாறு "
நந்தன் " ம்ம் அதான் டா எனக்கும் புரியல சுகன் டாடிக்கு நம்ப மேல என்ன கோபம்னு தெரியல அதான் அவரு இஷ்டத்துக்கு ஏதேதோ பேசிட்டு அவன உள்ள தள்ளி இருக்காரு வையிட் நாம வெளியே போய் இதபத்தி முடிவு எடுப்போம் "
ரிஷி அவனின் தோளினை தொட்டு தன் பக்கம் திருப்பி
" ஏன் மச்சான் இத வினோத் பண்ணி இருக்க கூடாது "
நந்தன் " என்னடா லூசு மாதிரி உளருற அவன் ஏன்டா அப்படி பண்ண போறான் "
எச்சில் விழுங்கிய ரிஷி அன்று சுகன் தன்னிடம் கூறியதை ஒன்று விடாமல் நந்தனிடம் கூறினான்..
அதனை கேட்ட நந்தன் கோபத்துடன் ரிஷி சட்டையை பற்றி
" ஏய் இடியட் இத ஏன்டா அப்பவே என்கிட்ட சொல்லல "
ரிஷி " இல்ல மச்சான் நான் மார்னிங் உன் கிட்ட சொல்லலானு தான் இருந்தேன் பட் அதுக்குள்ள தான் சுகன் இறந்து என்னவோ நடந்து போச்சு நானும் இத மறந்துட்டேன் டா " என கூற
அவனின் சட்டையை விட்டவன்...
நந்தன் " வினோத் அப்படி பண்ணுற ஆள் கிடையாது டா "
ரிஷி " கிடையாதுதா மச்சி நீயே யோசிச்சு பாரு அந்த பெண்ண அவன் ரொம்ப சின்சியரா லவ் பண்ணான் டா அதான் கோபத்துல இந்த மாதிரி செஞ்சுறுக்க வாய்ப்பு இருக்குல "
நந்தன் " இருந்தாலும் அவனும் நம்ப பிரெண்டு தான்டா அவன எப்படி விட முடியும் "
ரிஷி " சுகனும் நமக்கு பிரெண்டு தான் வினோதும் நமக்கு பிரெண்ட் தான் சோ இத அப்படியே விடு என்ன நடக்குதோ நடக்கட்டும் "
இதனை அனைத்தையும் வெளியே இருந்த அனைவரும் கேட்டனர்...
உண்மையில் வினோத் கொலை செய்ததை ஒத்து கொள்ளவில்லை...
மாறாக அவனது நண்பர்களும் இதில் பங்கு உண்டா என்பதை அறிய நினைத்த வேலன் ஒரு போலிஸ்காரரை அங்கு அனுப்பி வினோத் கொலை செய்ததை ஒத்து கொண்டதாக கூறி அவர்கள் அறியாத வண்ணம் அங்கு வாய்ஸ் ரெக்கார்டை வைத்து இவ்வளவு நேரம் இவர்கள் பேசி கொண்டு இருந்ததை கேட்டனர்....
வேலன் " இதுல இவனுக்களுக்கு தொடர்பு இல்லனு நினைக்குறேன் சரி நீங்க அவங்கள இங்க கூட்டிட்டு வாங்க "
என பேசி முடிக்க போலிஸ் அதிகாரி ஒருவர் சென்று நந்தனையும் ரிஷியையும் அழைத்து வந்தனர்...
இவர்களுடன் தினேஷ்ம் உள்ளே செல்ல வேலன் இவர்களை தவிர அனைவரையும் வெளியே போக சொல்லி பேச ஆரம்பித்தனர்...
நந்தன் " அங்கிள் பிளிஸ் அங்கிள் வினோத் அப்படிப்பட்ட பையன் இல்ல கொஞ்சம் பொறுமையா யோசிக்கலாம் "
வேலன் " என்ன நந்தன் விளையாடுறியா நீங்க பேசுனது எல்லாத்தையும் நானும் கேட்டேன் ஒத்துக்குறேன் சுகன் தப்பு பண்ணிட்டான் தான் அதுக்காக கோபத்துல கொலை பண்ணுவானா "
தினேஷ் " சார் வினோத் தா கொலை பண்ணானு எந்த ஆதாரமும் இல்லையே "
என இடையில் பேசிய தினேஷை கை நீட்டி தடுத்தவர்
வேலன் " தினேஷ் பிளிஸ் நீங்க உங்க டீம் தான் சுகன் கொலையில் நடந்தத கண்டு பிடிச்சு இருக்கிங்க அதுக்காக நீங்க இதுல தலையிடாதிங்க "
என்றவர் நந்தனிடம் திரும்பி
" அவன் கொலை பண்ணி இருக்கானு தெளிவா தெரியுது ஆனா அது ஒத்துக்க மாட்டுறான் அத மட்டும் அவனுக்கு சொல்லி புரியவை என்னால என் புள்ளைய கொன்னவன மன்னிக்க முடியாது புரியுதா "
அதற்குள் வினோத் இருந்த அறையினுள் சத்தம் கேட்க அனைவரும் பதறி அடித்து கொண்டு அங்கு ஓடினர்..
அங்கு வினோத் வாயில் நுரை தள்ள கண்கள் மேலே எழும்ப உயிர் போகும் நிலையில் இருந்தான்..
அனைவரும் பதறி அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் இறந்துவிட்டதாக கூற அதனை கேட்ட அனைவரும் அதிர்ந்தனர்..
உடனடியாக விஷயம் அனைவரும் தெரியபட மீடியா ஆட்கள் மருத்துவமனையை சூழ வேலனை பற்றி குறை கூறினர் மகன் இறந்த சோகத்தில் அப்பாவி மீது பழி போட்டு அவனை விசாரணை என்கிற பெயரில் அவனை கொன்றதாக கூறினர்..
அதற்குள் விஷயம் அவனது பெற்றோர் நண்பர்கள் என அனைவருக்கும் தெரியபட அவர்கள் அனைவரும் வேலனை சூழ்ந்தனர்..
அங்கிருந்த போலிஸ்காரர்கள் வேலனை அங்கிருந்து அழைத்து அவரை அனுப்பி வைத்தனர்...
தினேஷ் முற்றிலும் குழம்பி போய் இருந்தான் இத்துனை பேர் இங்கேயே இருக்க எப்படி அவன் இறந்தான் என்பது புரியாத புதிராகவே இருந்தது..
நந்தன் ரிஷி இருவரும் சொல்லவே வேண்டாம் அடுத்தடுத்து நண்பர்கள் இறந்த செய்தி இடியென இறங்க வேதனையில் ஆழ்ந்தனர்.....
வினோத் உடல் பிரேத பரிசோதனை செய்யபட்டு அவனது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட அங்கு செல்லவிருந்த நந்தன் ரிஷி இருவரையும் தந்தைமார்கள் தடுத்தனர்..
நந்தன் " டாட் என்ன பண்ணுறிங்க எங்கள ஏன் அங்க போக வேணாணு சொல்றிங்க "
ருத்ர " வேண்டா நந்தா நாம இப்ப அங்க போறது சரியா இருக்காது வினோத் பேரண்ட்ஸ் ரொம்ப கோபமா இருக்காங்க நீ வா வீட்டுக்கு போகலாம் ரிஷி நீயும் தான் வா "
என இருவரையும் அழைத்து தங்களது வீட்டிற்கு செல்ல...
நடப்பது அனைத்தும் வித்தியாசமாக பட்டது தினேஷ் திவ்யாவிற்கு
திவ்யா " இப்ப என்ன பண்ணுறது தினேஷ் "
தினேஷ் " தெரியல திவி ஏதோ பெரிய தப்பு நடந்துட்டு இருக்கு நாம தான் அத கண்டுபிடிக்கனும் அதுக்கு முதல வினோத் எப்படி இறந்தானு தெரியனும் வெயிட் பண்ணலாம் "
திவ்யா " இதுக்கு மேலையும் நாம இந்த கேஸ்ல இருக்கனுமா "
தினேஷ் " கண்டிப்பா இதுக்கு மேல தான் இந்த கேஸ நாம முழுசா கண்டுபிடிக்கனும் வா போகலாம் "
என இருவரும் வினோத் உடல் பிரேத பரிசோதனை செய்த மருத்துவமனைக்கு சென்றனர்....
தொடரும்...
வணக்கம் நட்புக்களே
கதை அடுத்த பகுதிகளில் விருவிருப்பாக செல்லும் பல திடிர் திருப்பங்களை அடுத்தடுத்து பகுதிகளில் பார்க்கலாம் தயவுசெய்து கதை எப்படி இருக்குறது என படிக்கும் நல்உள்ளங்கள் உங்களது கருத்துரைகள் கூறுங்கள்....
நன்றி....