All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணி பாஸ்கரனின் "என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,


கடந்த இரண்டு வருடங்களாக பல ஆசிரியர்களின் கதைகளை படித்த நான் நம்மளும் எழுதி பார்த்தால் என்ன என்ற மனதின் உந்துதலில் என்னுடைய முதல் கதையை "என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே" ஆரம்பித்துள்ளேன். படித்து விட்டு நிறை குறைகளை கூறுங்கள்.


ஆவலுடன்,


தாரணி பாஸ்கரன்



அத்தியாயம் 1


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்



"அம்மா.... இன்னும் பஸ் ல தான் இருக்கேன்..... காலேஜிற்கு போற பஸ்ல போய்ட்டிருக்கேன்" என்று தன் அன்னையிடம் மொபைலில் உரையாடி கொண்டிருந்தாள் வைதேகி.


அவள் பேச ஆரம்பித்தவுடன் பஸ்ஸில் இருந்த அனைவரும் அவளை திரும்பி பார்த்தனர். ஏனெனில் அவள் சத்தமாக போன் பேசிக்கொண்டிருந்தாள்.


சொல்லப்போனால் அவள் பேசுவது ஊரிலிருந்த அவள் அன்னைக்கே கேட்கும்படி கத்தி கொண்டிருந்தாள். அந்த செயல் பஸ்ஸில் இருந்த அனைவரின் முகத்தையும் சுழிக்க வைத்தது.


ஏனெனில் அவள் இருந்தது சென்னை மாநகரம். சத்யபாமா காலேஜ் போவதற்காக தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கோவளம் போகும் பஸ்சினை பிடித்திருந்தாள்.


காலை நேரமாதலால் பஸ்ஸில் கூட்டம் அலைமோதி கொண்டிருந்தது. அதில் வைதேகி போனில் கத்தி கொண்டிருந்தாள் யார் தான் முகம் சுழிக்க மாட்டார்கள்.


இதை எதுவும் அறியாமல் தன் அன்னையுடன் பேசுவதில் மும்முரமாக இருந்தாள் வைதேகி.


அவள் அன்னை ஜெயந்தி, "வைதேகி.....எந்த ஸ்டாப்னு கண்டக்டர் கிட்ட கேட்டியா.... நீ பாட்டுக்கு வேற எங்கயும் இறங்கிட போறமா.... புது இடம் வேற... இதுக்கு தான் தம்பியையும் கூட அழைச்சிட்டு போன்னு சொன்னேன்....என் பேச்ச கேட்டா தான" என்று அவர் பாட்டுக்கு புலம்ப ஆரம்பித்து விட்டார்.


தன் அன்னையை சமாதான படுத்தி வீட்டில் இருந்து கிளம்புவதற்கே போதும் போதும் என்றாகி விட்டது அவளுக்கு. இப்பொழுது திரும்பவும் ஜெயந்தி ஆரம்பிக்கவும், தன் அன்னையை சமாதான படுத்துவதே அவளுக்கு முதல் காரியமாக பட்டது. அதனால் அவள் தன்னை சுற்றி இருந்த எவரையும் கண்டு கொள்ளவில்லை.


"கேட்டேன்மா, ஸ்டாப் வந்ததும் கண்டக்டர் சொல்றேன்னு சொன்னாங்க". என்று அன்னையிடம் கூறிக்கொண்டிருந்த பொழுது.....


கண்டக்டர்," சத்யபாமா ஸ்டாப்பிங்....எறங்குறவங்களாம் முன்னாடி வாங்க" என்று கூறிக்கொண்டிருந்தார்.


வைதேகி, "அம்மா ஸ்டாப்பிங் வந்துருச்சு நான் உனக்கு அப்புறமா போன் பண்றேன்.... வச்சிடட்டுமா..."


"ஹ்ம்ம்... சரிம்மா" என்று கூறிவிட்டு மறுமுனையில் ஜெயந்தி போனை வைத்தவுடன், வைதேகி தன்னுடைய மொபைலையும் அனைத்து பையினில் (Bag) வைத்து பூட்டினாள்.


சத்யபாமா யூனிவர்சிட்டிக்கு நேர் எதிர் புறமாக பஸ் வந்து நின்றது.


வைதேகி தன்னுடைய பையினை எடுத்து கொண்டு பஸ்சினை விட்டு தன்னுடைய முதல் அடியிணை அந்த பெரிய பிரம்மாண்ட சென்னை மாநகரத்தில் வைத்தாள்.


பஸ்ஸில் இருந்து இறங்கிய வைதேகி, தான் நின்று கொண்டிருக்கும் இடத்தினை சுற்றி பார்த்தாள். ஏனென்று தெரியாத ஒரு பய உணர்வு வயிற்றில் இருந்து கிளம்பி நெஞ்சு கூட்டினை வந்து அடைந்தது.


அவளுடைய இதயம் படபட வென்று வேகமாக அடித்து கொள்ள ஆரம்பித்தது. அவளை கடந்து சென்று கொண்டிருந்த சிலர், வைதேகியை இரண்டு நிமிடம் பார்த்து வைத்தனர்.


வைதேகி பார்ப்பதற்கு மாநிறத்தில் இருந்தாள். நன்றாக எண்ணெய் வைத்து படிந்து வாரிய முடியுடனும், நெற்றியின் நடுவில் வட்டமாக சாந்து பொட்டும் (அதனுடைய அளவு நார்மல் சைஸ் விட கொஞ்சம் அதிகம்), தொழ தொழ வென்று சுடிதாரும், அதனுடன் ஷாலை வேறு ஸ்கூலிற்கு செல்வது போல் மடித்து வேற போட்டிருந்தாள், முகத்தில் எந்த வொரு மேக்கப்பும் இல்லை, அலைச்சலினால் முகம் வேறு சற்று வாடி இருந்தது.
அங்குள்ள சிலர் தன்னை வித்யாசமாக பார்ப்பது எதுவும் அவளுக்கு தோன்றவில்லை.



தன்னுடைய நான்கு வருடங்களையும் இனி இங்கு தான் கழிக்க போகிறோம் என்பதிலேயே அவளுடைய எண்ணங்கள் முழுவதும் இருந்தது.


அவளுடைய கண்கள் சத்யபாமா யூனிவர்சிட்டி என்ற பெயரினை பொருத்தி இருந்த கல்லூரியின் நுழைவு வாயிலை பார்த்தது. அங்கு செல்வதற்கு தான் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து இரண்டு சாலைகளை கடந்து செல்லவேண்டி இருந்தது.


அங்கே சிலர் சாலையினை கடந்து கொண்டிருப்பதை பார்த்தாள். அவர்களுடன் இணைந்து சாலைகளை கடந்து ஒரு வழியாக சத்யபாமா யூனிவர்சிட்டியின் நுழைவு வாயிலை சென்றடைந்தாள்.


வைதேகி தான் கொண்டு வந்திருந்த லெட்டரினை காலேஜ் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் காண்பித்தாள்.


"ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் (sports quota) அட்மிஸன்காக வந்துருக்கியாமா....kk.... உள்ள போங்க" என்று செக்கூரிட்டியிடம் அனுமதி பெற்று காலேஜினுள் நுழைந்தாள்.


காலேஜில் நுழைந்தவுடன் தன் அன்னைக்கு போன் செய்து, தான் வந்துவிட்ட செய்தியினையும் அதன்பிறகு மாலை மறுபிடியும் அவரை அழைப்பதாகவும் சொல்லி போனை வைத்துவிட்டு நடக்க தொடங்கினாள்.


காலேஜின் நுழைவாயிலிலிருந்து அலுவலகம் செல்வதற்கு சற்று தூரம் நடக்க வேண்டியிருந்தது. அவள் காலேஜ் வந்திருந்த நேரம் செமஸ்டர் லீவு ஆதலால் மாணவர்களின் நடமாட்டம் இல்லை.


ஏற்கனவே சென்னையை பார்த்து பயந்து போயிருந்த வைதேகிக்கு, ஆங்காங்கே பெரிய பெரிய கட்டிடங்களை கொண்டு அமைந்திருந்த யூனிவெர்சிட்டியை கண்டு இன்னும் அதிகம் பயம் ஏற்பட்டது.


"நாம இங்க வந்துருக்கவே கூடாதோ….. தப்பு பண்ணிட்டேன்.... இந்த கவிதாவோட பேச்ச கேட்ருக்கவே கூடாது”.


கவிதா....அவளுடைய பாஸ்கெட் பால் (basket ball) தோழி. வைதேகி தற்பொழுது சென்னைக்கு வந்திருப்பது பாஸ்கெட் பால் செலெக்ஷனிற்காக (selection) தான்.


வைதேகி அப்பொழுது 12 ஆம் வகுப்பிற்கான மார்க் மற்றும் TC செர்டிபிகட்டை வாங்குவதற்காக பள்ளிக்கு சென்றிருந்தாள். அங்கு தன்னுடைய வகுப்பு தோழிகளில் சிலர் தாங்கள் மேல படிக்கப்போவது பற்றி ஆசிரியர்களிடம் ஆலோசித்து கொண்டிருந்தனர். அவர்களை கண்டவளுக்கு அடுத்து தான் என்ன செய்யப்போகிறோம் என்று ஒன்றும் புரியவில்லை.


தன்னுடைய செர்டிபிகேட் அனைத்தும் வாங்கிவிட்டு தன்னுடைய விளையாட்டு ஆசிரியரை பார்க்க சென்றாள்.


அவள் சேலத்திலுள்ள கவெர்மென்ட் ஸ்கூலில் படித்தாள். அந்த பள்ளி கல்வியை காட்டிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளியாதலால் அங்கு சேரும் மாணவர்கள் அனைவரும் தங்களுக்கென்று ஒரு விளையாட்டினை தேர்வு செய்ய வேண்டும்.


வைதேகி தனக்கென்று பாஸ்கெட்பால் கேமினை தேர்வு செய்திருந்தாள். அதில் நேஸ்னல் ப்லேயராகவும் (player) இருந்தாள். அதற்கான ஆசிரியரையே பார்க்க சென்றிருந்தாள்.


"Hi mam ..."


"ஹே வா வா... வைதேகி... என்ன செர்டிபிகேட் வாங்க வந்தியா..."


"Yes mam செர்டிபிகேட்லாம் வாங்கிட்டேன் mam ... அதான் உங்கள பாத்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன்".


"kk .... அடுத்து என்ன பன்றதா இருக்க..."


"எதுவும் தெரில mam .... இனி தான் யோசிக்கணும்"


"என்னோட friend சத்யபாமால ஒர்க் பன்ராமா.... அங்க நெஸ்ட் மந்த் (month) ஸ்போர்ட்ஸ் கோட்டால ஸ்டுடென்ட்ஸ் எடுக்குறாங்களாம். நீ வேணா அங்க ட்ரை பண்ணி பாரேன்".


அப்பொழுது அவளுடைய தோழி கவிதாவும் அங்கு வந்தாள். ஆசிரியர் அவளையும் ட்ரை பண்ண கூறினார்.


கவிதா, "mam… நான் சேலத்திலேயே B.Sc கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாம்னு இருக்கேன். அப்ளிகேஷன் பாரம் (Application form) கூட வாங்கிட்டேன்".


“Oh kk மா”


கவிதா, "hey வைதேகி... நீ அங்க ட்ரை பண்ணி பாரேன் டி..... சூப்பர் காலேஜ்ன்னு கேள்வி பட்டேன்".


ஆசிரியர், "சரி வைதேகி .... நீ யோசிச்சிட்டு ஒன் வீக்குள்ள சொல்லு".


அவர்கள் இருவரும் ஆசிரியர்க்கு நன்றி சொல்லிவிட்டு, இருவரின் வீடும் ஒரே தெருவில் இருந்ததால் தங்களது வீட்டினை நோக்கி சேர்ந்தே புறப்பட்டனர்.


வைதேகி போகும் வழியாவும் ஆசிரியர் கூறியதையே யோசித்து கொண்டு வந்தாள்.


"என்னடி யோசனை ரொம்ப பழமா இருக்கு...”


"நீ வேற.... நானே என்ன பண்றதுனு தெரியாம முளிச்சிட்டு இருக்கேன்....போடி"


"அதான் டீச்சர் சத்யபாமால ட்ரை பண்ண சொல்றாங்கள்ல.....அப்புறம் என்ன..."


"என்னது சென்னையா...நான் போக மாட்டேன் பா.... அதுவும் தனியா வேற....முடியவே முடியாது." என்று கவிதாவுக்கு மட்டும் கூறாமல் தனக்கும் சேர்த்து சொல்லிக்கொண்டாள்.


"ஹே இங்க பாரு உன்னைய இப்போ போய் ஜாயின் பண்ண சொல்லல...செலக்க்ஷன் தான அட்டென்ட் பண்ண சொன்னாங்க....சும்மா ட்ரை பண்ணி பாரேன்". என்று வித விதமாக பேசி வைதேகியை சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தாள் கவிதா.


எங்கு அவளை விட்டால் சென்னைக்கு போகமாட்டாள் என்று மறுநாளே ஆசிரியரிடம் வைதேகியை அழைத்து வந்து லெட்டரினையும் வாங்கி கொடுத்திருந்தாள்.


அதையெல்லாம் நினைத்து கொண்டு தான் சத்யபாமா காலேஜினுள் நடந்து கொண்டிருந்தாள் வைதேகி.


ஒருவழியாக ஆபீஸ் ரூம் எங்கு இருக்கின்றது என்று கேட்டு அங்கு சென்றடைந்தாள்.


"ஹப்பா... ஒரு ஆபீஸ் ரூமை கண்டுபிடிக்கவே இவ்ளோ கஷ்டமா இருக்கே" என்று மனதினில் நினைத்துக்கொண்டே ரிசெப்டினிஸ்டை (receptionist) அணுகினாள்.


“Yes….how may I help you”


அந்த பெண் சரளமாக இங்கிலீஷில் பேசவும் ....வைதேகிக்கு தான் என்ன பேச வந்தோம் என்பதே மறந்து விட்டிருந்தது. அவள் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்தாள். அதனால் அவர்கள் வேகமாக பேசியவுடன் ஒன்றும் புரியவில்லை.


அவள் அமைதியாக நிற்பதை பார்த்து, “what do you want mam” என்று திரும்பவும் அந்த பெண் கேட்டாள். ஆனால் இந்த முறை கொஞ்சம் பொறுமையாக.


வைதேகிக்கு இந்த முறை அவர்கள் கேட்டது புரிந்தது. அவள் தன்னிடம் உள்ள லெட்டரினை கொடுத்தாள்.


அந்த பெண் அதனை பார்த்து விட்டு.... “நீங்க வசந்தி மேம போய் பாருங்க....” என்று பதில் சொல்லிவிட்டு அவர்கள் இருக்கும் இடத்திற்கு வழி கூறினாள்.


“K thank you mam”.


அவள் வசந்தி மேமின் ரூமை கண்டு பிடித்து லெட்டரினை அவரிடம் கொடுத்தாள்.


"வைதேகியா.... வாவா.... உங்க மேம் ஏற்கனவே என்கிட்டே சொன்னாங்க. பாஸ்கெட்பால் செலக்க்ஷன் இரண்டு மணிக்கு ஸ்டார்ட் ஆகும்... நீ போய் அதுக்குள்ள சாப்பிட்டு இங்கேயே வந்துரு. நான் பாஸ்கெட்பால் கோர்ட்டுக்கு கூட்டிட்டு போறேன்". என்று கூறினார்.


வைதேகிக்கு கேன்டீன் போகவெல்லாம் பயமாக இருந்தது. "இல்ல வேண்டாம் மேம் நான் வரும்போதே சாப்பிட்டு தான் வந்தேன்." என்று பொய் கூறினாள்.


“அப்போ சரிமா... வெளில சேர் (chair) இருக்கு உட்காரு நான் போகும்போது கூப்புடறேன்”.


“அவள் பயம் மற்றும் எதிர்பார்ப்பு கலந்த கலவையாக அங்கு உட்காந்திருந்தாள்”.




என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே



தொடரும்.......
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

மணி மதியம் 1.30 ..... வசந்தி தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தார்.


"வைதேகி.... இந்த ரோல லாஸ்ட்டா (last) லேடீஸ் டாய்லெட் இருக்கும். அங்க போய் டீசர்ட் ஷார்ட்ஸ் மாத்திக்கிட்டு கீழ வெயிட் பண்ணுமா. நான் வரேன்".


அவள் தலையை ஆட்டிவிட்டு டாய்லெட்டினை நோக்கி சென்றாள். ரெடியாகிவிட்டு கீழே சென்று காத்திருந்த சிறிது நேரத்திற்கெல்லாம் வசந்தி வந்துவிட்டார்.



அவர்கள் நேரே சென்ற இடம் பாஸ்கெட்பால் கோர்ட். அங்கு சுமார் முப்பது பேர்கிட்ட செலெக்ஷனிற்காக வந்திருந்தனர்.



"சரிமா... நீ போய் அவங்க கூட வெயிட் பண்ணு. ஷார்ப்பா 2 மணிக்கு கேம் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க… all the best…. for your game.” என்று கூறிவிட்டு அங்கிருந்த மற்ற ஆசிரியர்களுடன் இணைந்து கொண்டார்.



வைதேகி தன் முன்னால் இருந்த பாஸ்கெட்பால் கோர்ட்டினையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனதிற்குள் ஏனென்று தெரியாத மகிழ்ச்சி பிரவாகமாக ஊற்றெடுத்து கொண்டிருந்தது. இத்தனை நேரமும் அவளுள் இருந்த பய உணர்வு இருந்த இடம் காணாமல் சென்று விட்டிருந்தது.



அவளுக்கு பாஸ்கெட்பால் என்றால் உயிர். அவள் விளையாட ஆரம்பித்து விட்டால் சுற்றி நடப்பது எதுவும் அவளுடைய கவனத்தில் பதியாது. அத்தனை ஈடுபாட்டுடன் விளையாடுவாள். அதன் மேல் ஒரு வெறித்தனமான காதல் என்று கூட சொல்லலாம்.



"வைதேகி.... வைதேகி..." என்று மைக்கில் அவளுடைய பெயர் ஒளித்து கொண்டிருந்தது.



அப்பொழுதுதான் அவள் தன்னுணர்வு பெற்று சுற்றி பார்த்தாள்.



அங்கிருந்த ஆசிரியர்கள் செலெக்ஷனிற்காக வந்திருந்த மாணவிகளை தனி தனி குழுவாக பிரித்து கொண்டிருந்தனர்.



“mam, I’m வைதேகி".



“They are your team members….go and join them.... (நீ அந்த டீம்ல போய் ஜாயின் பண்ணிக்கோ)” என்று அங்கிருந்த ஆசிரியர்களில் ஒருவர் வைதேகியிடம் கூறினார்.



ஒவ்வொரு குழுவிலும் ஐந்து பேர் என்று வந்திருந்தவர்களை பிரித்திருந்தனர். அந்த ஐந்து பேரிலும் (1-ball controller, 2-followers, 2- zero players) என்று பிரித்திருந்தனர். வைதேகி பாஸ்கெட்பாலில் பால் கண்ட்ரோலராக இருந்தாள்.



பாஸ்கெட்பால் கேம் ஆரம்பம் ஆனது. ஒவ்வொரு கேமும் நான்கு குவாட்டர்சினை கொண்டிருந்தது. முதல் இரண்டு குவாட்டர்சில் எதிர் அணியினர் இருந்த கூடையில் பந்தினை போட வேண்டும். அடுத்த இரண்டு குவாட்டர்சில் தன்னுடைய அணியில் இருந்த கூடையில் பந்தினை போட வேண்டும். ஒவ்வொரு குவாட்டர்ஸிற்கு இடையிலும் பத்து அல்லது பதினைந்து நிமிட இடைவெளி கொடுத்தனர்.



வீட்டிற்கு செல்லாமல் ஹாஸ்டெலில் தங்கியிருந்த சில மாணவர்கள் மற்றும் மாணவிகளும் விளையாட்டினை பார்க்க வந்திருந்தனர்.



கேம் ஆரம்பித்த நிமிடத்திலிருந்து முடியும் வரையும் அங்கிருந்த மாணவர்களின் கைதட்டலும், விசில் சத்தமும் காதினை கிழித்து கொண்டிருந்தது.



பாஸ்கெட்பால் கோர்ட்டினில் விளையாடி கொண்டிருந்தவர்களும் ஒருத்தருக்கொருத்தர் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று தங்களுடைய திறமைகளை காட்டி கொண்டிருந்தனர்.



ஒருவழியாக கேமும் முடிவு பெற்றது. அடுத்து வந்த அரை மணி நேரமும் விளையாட்டு மைதானத்தில் குழுமியிருந்த ஆசிரியர்கள் தங்களுக்குள் ஆலோசித்து கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில், அங்கிருந்த ஆசிரியர்களில் ஒருவர்....மைக்கிற்கு அருகில் சென்றார்.



“Hello students…..totally 30 members are participated for basketball game selection. From that, we are selected 10 members. 2-ball controller, 4-followers and 4-zero players. The names are…..” என்று அந்த கேமில் செலக்ட்டான பெயர்களை படிக்க ஆரம்பித்தார்.



வைதேகிக்கு அவர் பேசியதில் பாதி புரியவில்லை. தன் பக்கத்திலிருந்த பெண்ணிடம் தான் கேட்டு கொண்டிருந்தாள்.



ஆசிரியர் ஒவ்வொரு பேராக படிக்க ஆரம்பித்தார். அதில் பால் கண்ட்ரோலர்க்கு நேராக இவள் பெயரும் வந்தது.



ஆசிரியர் அனைத்து பெயர்களையும் படித்து முடித்தவுடன், செலக்ட் ஆகாதவர்கள் வருத்தமாகவும், செலக்ட் ஆனவர்கள் துள்ளி குதித்தும் அவரவர் மனநிலயை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர்.



வைதேகி அவர்களை போல் எதுவும் செய்யவில்லை. ஏனெனில் அவளுக்கு இங்கு வரும்போதே தெரியும் தான் செலக்ட் ஆகி விடுவோம் என்று. அது அவளுடைய உலகம்....அதில் எப்படி வெற்றிபெறாமல் இருப்பாள். அதனால் அவளுக்கு அதனை பற்றியெல்லாம் எதுவும் கவலை இருக்கவில்லை



அவளுடைய கவலையெல்லாம் இனி தான் சென்னையில் எப்படி இருக்க போகிறோம் என்பதிலேயே இருந்தது. அதுவும் அவளுடைய மனம்..... என்ன இங்க ஆவுன்னா இங்கிலீஷிலேயே பேசிக்குராங்களே....என்று திரும்பவும் அவளை விட்டு சென்ற பயம் பிடித்துகொண்டது.



அதன் பிறகு ஆசிரியர்கள், செலக்ட் ஆனவர்களை ஷேர்மனிடம் (chairman) கூட்டி சென்றனர்.



அதன்பிறகு வேலைகள் மளமள வென்று நடந்தது. அவர்கள் தங்குவதற்கு ஹாஸ்டல், எந்த டிபார்ட்மென்ட் சூஸ் பண்ணுகிறார்கள் முதற்கொண்டு அனைத்தும் முடிந்துவிட்டது.



ஆம் முடிந்தேவிட்டது....



வைதேகி தான் கொண்டு வந்திருந்த பாக்கினுடன்(Bag) ஹாஸ்டெல்லில் அவளுக்கென்று கொடுத்திருந்த ரூமில் இருந்தாள்.



வைதேகி B.E (EEE)…. ஆம்.... அவளுடைய 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணிற்கு ஏற்றவாறு EEE கொடுத்திருந்தனர். இன்னும் ஒரு வாரத்தில் காலேஜ் ஆரம்பிக்க போகின்றது என்றும் கூறி இருந்தனர்.



இவை அனைத்தையும் தன் மனதினில் மறுபடியும் ஓட்டி கொண்டிருந்தவள்...... தன்னால் இங்கு தங்க முடியாது என்று முடிவெடுத்து....தன் அன்னைக்கு போனில் அழைத்தாள்.



“அம்மா..... என்னால இங்க இருக்க முடியும்னு தோணலமா.... எனக்கு ரொம்ப பயமா இருக்கு ....நான் அங்க கிளம்பி வரேன்...” என்று அழ ஆரம்பித்து விட்டாள்.



மறுமுனையில் இருந்த ஜெயந்திக்கு, வைதேகி பேசுவது ஒன்றுமே புரியவில்லை....



அவரே ஒரு முடிவெடுத்து "வைதேகி... என்னமா.... ஏன் அழுவுற.... செலக்ட் ஆகலனா பரவால விடுமா.... நம்ம ஊர்ல இருக்குற காலேஜ்ல சேந்துக்கோ" என்று கூறியவரின் மனம் தன் மகள் அழுவதை கண்டு பதறி கொண்டிருந்தது.



வைதேகி அழுகையினுடே.." அது இல்லமா செலெக்ட்லான் ஆகிட்டேன். இங்க தனியா இருக்க போறத நெனச்சா ரொம்ப பயமா இருக்குமா.... அதான்.."



“இதுக்கு போயா அழகுற..... ஸ்கூல் படிக்கும் போது உன்னுடைய விளையாட்டுகாக வெளி ஊர்லாம் போயிருக்க மாதிரி நெனச்சிக்கோ….. அதுமட்டும் இல்லமா, நா… நீ போனதுக்கு அப்புறம் நம்ம ஊர்ல நெறைய பேர்கிட்ட விசாரிச்சேன். அந்த காலேஜ்ல கிடைக்கறதுலான் ரொம்ப கஷ்டம்னு சொன்னாங்க….. அதனால இத வேஸ்ட் பண்ணிடாதடா.... கடவுள் கொடுத்த வரமா ஏத்துக்கோ”



இதை அனைத்தையும் கேட்ட வைதேகியின் உள்ளம் கொஞ்சம் தெளிவுற்றிருந்தது. எனினும் அவளின் மனதின் ஓரம்.... காலையில் தன்னுடன் பேசிய அன்னையா இது.... என்று நினைத்து கொண்டது.



"சரிமா..... எனக்கு டிரஸ்லாம் வேணும்... என்ன பண்றது....அங்க வரட்டுமா"



வைதேகி அடுத்து பேசிய வார்த்தையிலிருந்தே.... அவள் அங்கு தங்க சம்மதித்து விட்டாள் என்று அறிந்த திருப்தியுடன், “வேணாம்மா நம்ம பக்கத்து வீட்டு வனஜா அக்கா... அவங்க பையன பாக்க சென்னைக்கு ரெண்டு நாள்ல போவாங்கலாம்... அவங்ககிட்ட கொடுத்து விடுறேன்” என்று கூறிவிட்டு... இன்னும் சற்று நேரம் அவளுடன் போன் பேசிவிட்டு வைத்தார்.



வைதேகி, கவிதாவிடமும் தான் சேர்ந்த விஷயத்தை கூறினாள். அவளுக்கு அதில் மிகுந்த மகிழ்ச்சி.



நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது... மாலையானால் பயிற்சியும் எடுத்து கொண்டிருந்தாள். தான் காலேஜ் போக வேண்டிய நாளும் வந்தது.



விடிந்தால் காலேஜ்......


அன்று காலேஜ் செல்லவேண்டிய முதல் நாள்.....



பூதம் வரப்போகிறது வரப்போகிறது என்று பயந்து கொண்டிருந்த பூதமும் வந்துவிட்டது.



ஆம் வைதேகியின் நிலைமையும் அந்த நிலையில் தான் இருந்தது. காலையில் எழுந்ததிலிருந்தே அவள் இப்பிடித்தான் இருக்கிறாள்.



அவள் முகம் முழுவதும் ஒரு விதமான பதட்டம் நிறைந்திருந்தது. தன்னுடைய அறை தோழிகள் கேட்டதற்கும் எதுவும் இல்லை என்று சமாளித்து விட்டாள்.



அறையில் இருந்த அனைவரும் ஒன்றாக காலேஜிற்கு செல்வதாக முதல் நாள் இரவே முடிவெடுத்திருந்தனர். வைதேகியும் அதற்கு ஒத்து கொண்டிருந்தாள்.



ஆனால் அப்பொழுது அறையில் தன்னுடைய கட்டிலில் அமர்ந்திருந்த வைதேகியின் தோற்றத்தை பார்த்தால்....அன்று கல்லூரிக்கு செல்லும் உத்தேசம் இல்லாதவளை போல் தான் தோன்றியது.



இதனை கண்டு தான் அவளுடைய அறை தோழிகள் கேள்வி கணைகளை தொடுத்து கொண்டிருந்தனர். ஆனால் அவள் தான் அவை அனைத்திற்கும் அசைந்து கொடுத்தால் இல்லை.



நேரமும் அதன் போக்கில் யாருக்கும் காத்திராமல் சென்று கொண்டிருந்தது. வைதேகியை அழைத்து பார்த்த அறை தோழிகள்..... அவளிடம் பதில் வராததால் தாங்கள் உணவுன்ன மெஸ்ஸிற்கு புறப்பட்டனர்.



அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் வைதேகிக்கு தன் அன்னையிடம் இருந்து அழைப்பு வந்தது.



அதனை அட்டென்ட் செய்து காதினில் வைத்தாள். "வைதேகி....என்னமா காலேஜ்க்கு ரெடி ஆகிட்டு இருக்கியா"



"இல்லமா.....அது.... அது வந்து...... எனக்கு ரொம்ப பயமா இருந்தது அதான்……" என்று தான் கூற வருவதை முழுவதும் சொல்லாமல் இழுத்து கொண்டிருந்தாள்.



ஜெயந்திக்கா அவள் கூற வருவது புரியாது..... அவளை பெற்றவள் ஆகிற்றே..... இருந்தும் புரியாததை போல்.... "அதனால்...." என்று அந்த வார்த்தையில் ஒரு அழுத்தத்தை கொடுத்து நிப்பாட்டினாள்.



இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசினாலும் தன் அன்னை கோபம் கொள்வாள் என்று அறிந்திருந்த வைதேகி, "இதோ கிளம்பிட்டேன் மா.... சாப்பிட்டு நேரா காலேஜ் தான் போறேன்."



ஜெயந்திக்கு ஒரு பழக்கம் இருந்தது... ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப கூற மாட்டார். ஒருமுறை கூறி முடித்துவிட்ட ஒன்றை…. மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தால் அவருக்கு கோபம் வந்துவிடும்.



அதனை நன்கு அறிந்து வைத்திருந்த வைதேகியும், ஜெயந்தியிடம் அதன் பிறகு எதுவும் கூறாமல் காலேஜ் போவதாக சொல்லிவிட்டு போனை வைத்தாள்.



அதன் பிறகு வைதேகி, வேக வேகமாக குளித்து, தன்னிடம் இருந்த உடைகளில் ஒன்றை அணிந்து கொண்டு கிளம்பி அறை தோழிகளை தேடி மெஸ்ஸிற்கு சென்றாள்.



அங்கு உண்டோம் என்ற பேருக்கு எதையோ கொரித்துவிட்டு, அவர்களுடன் இணைந்து காலேஜிற்கு புறப்பட்டாள்.



அன்று காலேஜே கோலாகலமாக காட்சி அளித்தது. தங்களுடைய வாழ்க்கையில் இன்றியமையாத பகுதியாய் அமைய போகின்ற கல்லூரி என்ற பகுதியில், முதல் வருடம் காலடி எடுத்துவைத்திருந்த மாணவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடி கொண்டிருந்தது.



அங்குள்ள மாணவர்களில் சிலர் ஒருத்தருக்கொருத்தர் தங்களை அறிமுக படுத்துவதிலும், அவர்களை பற்றி அறிந்து கொள்வதிலும் முனைந்திருந்தனர். சிலர் தங்களுடன் வந்த பெற்றோர்களிடம் பேசி கொண்டிருந்தனர். இன்னும் சில மாணவர்கள் அங்கிருந்த மாணவிகளை சைட் அடித்து கொண்டு இருந்தனர். அங்குள்ள சில பேரில் வைதேகியை போன்ற பயந்த சுபாவம் கொண்ட மாணவர்களும் அடங்கும்.



அன்று காலேஜில் புதிதாக தங்கள் குடும்பத்தில் நுழையவிருந்த மாணவர்களுக்காக இன்னாகுரேசன் பங்க்சன் (inauguration function) காலேஜ் மேனேஜ்மென்ட் ஆடிட்டோரியத்தில் கண்டக்ட் பண்ணிருந்தனர்.



மாணவர்கள் ஆடிட்டோரியத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். வைதேகியும் அவர்களுடன் இணைந்து தன்னுடைய அறை தோழிகளுடன் ஆடிட்டோரியத்திற்கு சென்றாள்.



ஆடிட்டோரியம் மிகவும் பிரமாண்டமாக, கண்ணை கவரும் வண்ணம் அலங்கரித்திருந்தது.



அங்குள்ள சேரில் அனைவரும் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் சேர்மன் அவருடைய ஸ்பீச்சினை கொடுத்தார். வைதேகிக்கு அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று எதுவும் புரியவில்லை.



அவள் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த கீதா என்ற தோழியினை அழைத்து கேட்டாள். கீதா தான் படித்தது அனைத்தும் ஸ்டேட்போர்டு (stateboard) இங்கிலீஷ் மீடியம் என்பதால்....அவர்கள் பேசுவது ஓரளவிற்கு அவளுக்கு புரிந்தது.



அவளும் வைதேகிக்காக மொழி பெயர்த்து கொண்டிருந்தாள்.



ஒரு பத்து நிமிடம் சென்றிருக்கும்.... அவர்கள் அருகில் ஒரு ஆசிரியர் நெருங்கி வந்து "silence please" என்று முறைத்து கொண்டே கூறினார்.



அந்த ஆசிரியர் கூறிய பிறகு அவர்கள் இருவரும் பேசியிருப்பார்களா என்ன??? தனக்கு புரியா விட்டாலும் பரவாயில்லை என்று வைதேகி ஆடிட்டோரியத்தில் இருந்து வெளியே வர வரைக்கும் ஒரு வார்த்தை பேசினால் இல்லை.



வைதேகியின் பக்கத்தில் அமர்ந்திருந்த கீதாவும்.... வைதேகியால் தான் திட்டு வாங்கினோம் என்று.... அவள் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை.



வைதேகிக்கு எப்படா அந்த பங்க்சன் முடியும் என்று இருந்தது. ஒரு வழியாக இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பங்க்சன் முடிவுற்றது.



ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வந்தவளுக்கு ஒரு பெரிய மலையையே புரட்டி போட்டது போல் இருந்தது.



வைதேகிக்கு இன்று இது போதும் என்று நினைக்க கூட முடியவில்லை. அடுத்து, ஆடிட்டோரியத்தில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் அனைவரையும் தங்களுக்கான டிபார்ட்மெண்டிற்கு போகுமாறு கூறினர்.



அவளுடன் வந்த தோழிகளில் EEE டிபார்ட்மெண்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லாததால்.... வைதேகி தனிமையில் விடப்பட்டாள்.



அவளுடைய மனநிலை திருவிழாவில் தொலைந்து போன குழந்தையை ஒத்திருந்தது.



வைதேகி தன்னை சுற்றி இருந்த இடத்தினை அண்ணாந்து பார்த்தாள். சத்யபாமா காலேஜ் முழுவதும் கட்டிடங்களாக நிறைந்திருந்தது. அதில் தன்னுடைய டிபார்ட்மெண்டை எப்படி கண்டு பிடிக்க போகிறோம் என்பதை நினைக்கவே மலைப்பாக இருந்தது.



ஒருவழியாக அறை மணி நேரம் தேடி அலைந்து தன்னுடைய டிபார்ட்மெண்டை சென்றடைந்தாள். அங்கு கிளாஸ்ரூமில் ஏற்கனவே சில மாணவர்கள் வந்து அமர்ந்திருந்தனர்.



இவளும் அங்கு சென்று ஒரு பெஞ்சில் அமர்ந்தாள். அன்று வகுப்புகள் எதுவும் நடக்கவில்லை. சிறிய அறிமுகப்படலம் மட்டும் நடந்தது…. “see you tomorrow students” என்று ஆசிரியர்கள் மாணவர்களிடம் கூறிவிட்டு விடை பெற்றனர் . அதன் பிறகு அனைவரும் மதிய உணவிற்காக கிளம்பினர்.



கிளாஸ்ரூமில் இருந்து வெளியில் வந்த வைதேகி, “அய்யயோ....நாம இப்ப எப்படி மெஸ்ஸுக்கு போறது” ஏனெனில் அவளுக்கு தான் வந்த பாதை மறந்து விட்டிருந்தது. அது மட்டுமில்லாமல் அவள் எங்கங்கோ சுற்றி சுற்றி வேறு தேடி அலைந்து டிபார்ட்மெண்டிற்கு வந்திருந்தாள். அதனால் அவளுக்கு எந்த வழியும் ஞாபகத்தில் இல்லை.



அப்பொழுது கிளாஸ்ரூமில் இருந்து ஒரு பெண் வெளியில் வந்தாள். அவள் வைதேகியை நோக்கி சென்று “Hi I’m swetha….your name?”



சுவேதா ஆந்திர பிரதேசத்திலிருந்த விசாகப்பட்டினத்தில் இருந்து வந்திருந்தாள். அவளுக்கு எந்தவொரு வெளிப்பூச்சும் இல்லாமல் இன்னசன்டாக இருந்த வைதேகியை மிகவும் பிடித்திருந்தது.



ஏற்கனவே மெஸ்ஸிற்கு எப்பிடி செல்வது என்று பயந்து போயிருந்தவள்..... சுவேதா தன்னிடம் வந்து பேசியவுடன், அவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.... புரிந்தவுடன் அவளை பார்த்து சிறிதாக சிரித்து வைத்தாள்.



சுவேதாவிற்கு வைதேகியின் அந்த சிரிப்பே அவளிடம் பேசுவதற்கு போதுமானதாக இருந்தது. அதனால் அவள் மறுபடியும் தன்னை வைதேகியிடம் அறிமுகப்படுத்தி கொண்டாள்.



“what’s your name?”



“வைதேகி”



“Nice name….Are you going to mess? If you don’t mind, I would like to join with you.”



சுவேதா வைதேகியிடம் இங்கிலீஷில் பேச ஆரம்பித்தவுடன் அவள் திரு திரு வென்று முழிக்க ஆரம்பித்து விட்டாள்.



சுவேதாவிற்கு வைதேகி ஏன் இப்படி முழிக்கிறாள் என்று புரியவில்லை, “Hey what happened?” என்று வேற கேட்டு வைத்தாள்.



அவ்வளவு தான் வைதேகிக்கு கண்ணீர் இதோ நான் வெளியில் வந்து விடவா என்று கண்களில் முட்டி கொண்டு நின்றது.



ஏற்கனவே அவள் வழியை மறந்து விட்டோம் என்று பயந்து போயிருந்தாள். இதில் சுவேதா வந்து இங்கிலீஷில் வேற பேசவும்.... அவளுக்கு அது வேறு எதுவும் புரியவில்லை.... இது எல்லாம் சேர்ந்து அவளுக்கு கண்ணீரை ஏற்படுத்தி கொண்டிருந்தது.



சுவேதா தனக்குளேயே எதுவும் வைதேகியை தவறாக பேசிவிட்டோமா என்று யோசித்து கொண்டிருந்தாள். அப்பொழுது தான் சுவேதாவிற்கு ஒரு விஷயம் ஸ்ட்ரைக் ஆனது “don’t you understand English” என்று நிறுத்தி நிதானமாக கேட்டாள்.



வைதேகி வேகமாக தலையாட்டவும் தான்....சுவேதாவிற்கு இது தானா என்றிருந்தது. சுவேதா, வைதேகியுடன் மெஸ்ஸுக்கு வர விரும்புவதை ஆங்கிலம் பாதியும் சைகை பாதியுமாக கூறினாள்.



வைதேகிக்கு தன்னை புரிந்து கொண்ட தோழி கிடைத்து விட்டதில் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவள் தனக்கு மெஸ் போகும் வழி தெரியாததை சுவேதாவிடம் பாதி தமிழிலும் மீதி சைகையிலும் கூறினாள்.



அவர்கள் இருவரும் அங்கிருந்தவர்களை கேட்டு கேட்டு மெஸ்சினை அடைந்தனர். ஒவ்வொரு இடத்திலும் மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கு சைகையினை பயன்படுத்தினர். ஒரு கட்டத்தில் இருவருக்குமே சிரிப்பு வந்து விட்டது.



மெஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இவர்களும் அவர்களுடன் இணைந்து சாப்பிட்டனர். அன்று முதல் வருட மாணவர்களுக்கு மட்டும் காலேஜ் இருந்தது. மற்ற வருட மாணவர்கள் அனைவருக்கும் மறுநாளில் இருந்து காலேஜ் தொடங்குகின்றது.



வைதேகியும், சுவேதாவும் ஒருத்தருக்கொருத்தர் மறுநாள் சந்திப்பதாக “Bye” கூறிவிட்டு தாங்கள் தங்கி இருக்கும் இடத்தை நோக்கி சென்றனர்.



அன்று இரவு வைதேகி தனக்கு புது தோழி கிடைத்து விட்ட நிம்மதியுடன் தன்னுடைய பயம் நீங்கி தூங்கினாள்.



மறுநாளும் அதே போல் இருக்குமா????







என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே


தொடரும்.....................
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்


அன்று காலையில் வைதேகி மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டாள்.


"என்னடி வைதேகி இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்குற மாதிரி தெரியுது..... என்ன விஷயம்..... எனிதிங் ஸ்பெஷல்" என்று அவளுடைய அறை தோழி நிலா கேட்டாள்.



அவள் கேட்டதற்கு வைதேகியிடம் இருந்து ஒரு சின்ன சிரிப்பே பதிலாக வந்தது.



“ஆமா.... ஆவுன்னா இப்படி ஒரு சிரிப்பு சிரிச்சிடு... என்னதான் இருந்தாலும் நீ சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கடி.... அதுவும் நீ சிரிக்கும் போது உன் கன்னத்துல விழுகுற குழி இருக்கே... சம்மயா இருக்கு போ .... எவன் இதை பார்த்து பிளாட் ஆகப்போறானோ..... “என்று வைதேகியை கிண்டலடித்து கொண்டிருந்தாள் நிலா.



"சீ போ டி..... இன்னிக்கு நான் தான் உனக்கு கிடைச்சேனா...." என்று அழகாக சிணுங்கினாள் வைதேகி....



“ஹே நீ வெட்கம்லாம் படுவியா…. வைதேகி வெட்க படுராடி....எல்லாரும் இங்க சீக்கிரம் ஓடிவாங்க....” என்று நிலா கத்த ஆரம்பித்து விட்டாள்.



இனியும் தான் அங்கு இருந்தோம் என்றால்..... தன்னை ஒரு வழி படுத்தாமல் நிலா விடமாட்டாள் என்று வைதேகி பாத்ரூமிற்குள் குளிப்பதற்காக புகுந்து கொண்டாள்.



"பாத்ரூமிற்குள் சென்ற வைதேகியின் மனதின் மூலையில் ஏன் எனக்கு வெட்கம் வரக்கூடாதா... ஸ்போர்ட்ஸ் பெர்சனா இருந்தா... தன்னுடைய உணர்வுகளை கொன்று விட வேண்டுமா என்ன...." என்று அவளுடைய மனம் கோவம் கொண்டது. அதன் பிறகு அவளே.... சும்மா விளையாட்டுக்கு சொல்லிருப்பாள் நாம் தான் எதை எதையோ யோசிக்கிறோம் என்று தன்னை தானே சமாதானமும் செய்து கொண்டாள்.



அதன் பிறகு அனைவரும் கிளம்பி, மெஸ்ஸிற்கு சென்று உணவு உண்டுவிட்டு காலேஜிற்கு புறப்பட்டனர்.



அன்றைய தினம் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரி ஆரம்பித்து இருந்ததால் கல்லூரியே நிரம்பி வழிந்தது. ஆங்காங்கே கல்லூரியின் பேருந்துகளில் இருந்து மாணவர்கள் கூட்டம் கூட்டமாக இறங்கி கொண்டிருந்தனர்.



அங்கிருந்த ஒரு பேருந்தில் இருந்து "அஸ்வந்த்" இறங்கினான். அஸ்வந்த், "டாடா கம்மின்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்று சென்னையில் இயங்கி கொண்டிருந்த கம்பெனியின் ஒரே வாரிசு. அதனுடைய கிளைகள் வெளிநாட்டிலும் பரவி இருந்தது.



அவன் பிறந்தது மட்டும் தான் சென்னை.... வளர்ந்தது, படித்தது எல்லாம் அமெரிக்காவில் தன்னுடைய அத்தை மாமாவுடன் தான்.



அவனுக்கு அப்பொழுது ஆறு வயது..... அவன் பள்ளி கூடம் சென்றிருந்தான். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. கோவிலுக்கு சென்றிருந்த அவனுடைய தாய் தந்தை இருவரும் வரும் வழியில் எதிர் பார்காத கார் விபத்தில் இறந்து விட்டனர் என்று கூறினர்.



அவனை அப்பொழுது சாவித்ரி தான் அரவணைத்து கொண்டார். சாவித்ரி, சண்முகத்தின் (அஸ்வந்த்தின் தந்தை) தங்கை. சாவித்ரியின் கணவன் கணேசன் அமெரிக்காவில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அவர்களுக்கு சொப்னா என்று ஒரே பெண். அஸ்வந்த்தின் பெற்றவர்கள் இறந்தவுடன் சாவித்ரி அவனை தன்னுடன் அமெரிக்கா அழைத்து சென்றுவிட்டார்.



சண்முகத்தின் தொழில்கள் அனைத்தையும் கணேசனும், சென்னையில் இருந்த சண்முகத்தின் தந்தை கிருஷ்ணமூர்த்தியும் பார்த்து கொண்டனர்.



பேரனை தாங்கள் பார்த்து கொள்வதாக கிருஷ்ணமூர்த்தியும் அவருடைய மனைவி சகுந்தலாவும் சாவித்ரியிடம் எத்தனையோ முறை கேட்டு பார்த்தனர். ஆனால் அவள் ஒத்துக்கொள்ளவில்லை. ஏன் என்று கேட்டதற்கும், அஸ்வந்த், பெற்றவர்கள் இல்லை என்ற குறை இல்லாமல் வளரவேண்டும். அதனுடன் தானும், தன் கணவனும் அவனுக்கு அன்னை தந்தையாக இருப்போம் என்று கூறி அவனை கையோடு அழைத்து சென்று விட்டாள்.



தன்னுடைய இரண்டாம் வருட மெக்கானிக்கல் என்ஜினீரியிங் படிப்பின் பொழுது கிருஷ்ணமூர்த்தியின் உடல் நிலை மிகவும் மோசமானது. அவர் தன்னுடைய இறுதி தருணத்தில் தன்னுடைய பேரனை காணவேண்டும் என்று அவருடைய மனம் துடிக்க ஆரம்பித்தது. அஸ்வந்த்தினை காணாமல் அவர் உயிர் போக போவதில்லை என்பதை போல் இழுத்து கொண்டிருந்தது என்று தான் கூற வேண்டும்.



இதனை கேள்வியுற்ற அஸ்வந்த் அடுத்த பிளைட்டினை பிடித்து சென்னைக்கு வந்து சேர்ந்தான். அவனை கண்ட கிருஷ்ணமூர்த்தி நிம்மதியுடன் தன் கண்களை மூடினார். அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த சகுந்தலா "என்னையும் உங்க கூட கூட்டிட்டு போகாம போய்ட்டிங்களே... இனி நீங்க இல்லாம நான் என்ன பண்ணுவேன்." என்று அழுது கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவருடைய அழுகை குறைந்து அங்கிருந்த வெட்ட வெளியினை வெறித்து பார்க்க ஆரம்பித்தார்.



சாவித்ரி அவருக்கு எவ்வளவோ சமாதானம் கூறிப்பார்த்தார். ஆனால் சகுந்தலாவிடம் ஒரு அசைவும் இல்லை. இது அங்கிருந்த அனைவருக்கும் பயத்தினை ஏற்படுத்தியது. அஸ்வந்த் டாக்டரினை உடனே சென்று அழைத்து வந்தான்.



டாக்டர், "அவங்க ரொம்ப டிப்ரெஸ்டா இருக்காங்க.... அவங்களுடைய மனம் முழுவதும் தனக்கென்று இந்த உலகத்தினில் யாரும் இல்லை என்று நினைத்து கொண்டிருக்கிறது…… அதனால் அவர்களுக்கு என்று நீங்கள் இருப்பதாக புரிய வையுங்கள்..... இல்லையென்றால் அவரை காப்பாற்றுவது மிகவும் கடினம்" என்று கூறிவிட்டு அடுத்த பேஷன்டினை பார்க்க சென்று விட்டார்”.



அடுத்து வந்த ஒரு வாரமும்.... ஒவ்வொருவரும் தங்களை சகுந்தலாவிற்கு புரிய வைப்பதற்கு முயற்சித்தனர். ஆனால் ஒரு முன்னேற்றமும் தென்படவில்லை. அஸ்வந்த் பேசினால் மட்டுமே அவரிடம் ஒரு அதிர்வலை தென்பட்டது.



அதற்கு மருத்துவர், "அஸ்வந்த் நீங்க அவங்களோட மனசுல ஆழமா புதைத்திருக்கிங்க ..... உங்களால மட்டும் தான் அவங்கள வெளியில் கொண்டு வர முடியும்” என்று கூறிவிட்டார்.



அஸ்வந்த் தன்னுடைய பாட்டியினுடனே சென்னையில் தங்கினான். மற்றவர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு பயணப்பட்டனர். மூன்று மாதத்திற்கு ஒருமுறை வந்து அவரை பார்த்து சென்றனர்.



ஒரு வருடத்தில் அவரும் பழைய நிலைமைக்கு திரும்பி விட்டார். மிகவும் போராட்டமாக சென்ற அந்த ஒரு வருடமும் அஸ்வந்த் தன்னுடைய பாட்டியையும், தன் தந்தையின் தொழில்களையும் பார்த்து கொண்டான்.



அஸ்வந்த்திற்கு சுத்தமாக தமிழ் பேச வரவில்லை. இந்த ஒரு வருடத்தில் அந்த வீட்டில் இருந்த வேலைக்காரர்களுக்கு தன்னுடைய தேவைகளை புரிய வைப்பதற்குள் அவன் இரண்டு முறை தண்ணீர் குடிக்க வேண்டி இருந்தது.



தன்னுடைய பாட்டி முழுமையாக குணம் அடைந்தவுடன் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. அவனுடைய பாட்டி அந்த காலத்திலேயே இரண்டு டிகிரி முடித்தவர். அவருக்கு ஆங்கிலம் தெரியும். ஆதலால்... அவன் தனக்கு என்ன வேண்டும் என்றாலும் தன்னுடைய பாட்டியிடம் தான் கேட்டான்.



கம்பெனி, வீடு என்று அஸ்வந்த்தின் வாழ்கை போய் கொண்டிருந்தது. ஒரு நாள் சகுந்தலா அஸ்வந்த்திடம் வந்து, “Aswanth…. I’m completely fine now. I can able to manage our companies… so you just continue the studies where you stopped in America. I already got seat for you in sathyabama university” என்று அவன் அமெரிக்காவில் விட்ட தன்னுடைய படிப்பை இங்கே தொடருமாறு கூறினார்.



“No grandma…. Still your health condition is not perfectly alright….. So I won’t allow you to handle the companies work” என்று அஸ்வந்த் சகுந்தலாவின் உடல்நிலையை கூறி மறுத்து கொண்டிருந்தான்.



“Aswanth….. Come to company in the evening time after your college is over” என்று கூறி அவனை சமாதான படுத்த முயன்றார்.



அஸ்வந்த் எவ்வளவோ மறுத்து கூறியும் சகுந்தலா தன் நிலையிலேயே உறுதியாக நின்றார்.



அஸ்வந்த் தான் விட்டு கொடுக்க வேண்டி இருந்தது. இறுதியாக அஸ்வந்த் அன்று தான் சத்யபாமா காலேஜிற்கு முதன் முறையாக வந்திருந்தான்.



அஸ்வந்த் பார்ப்பதற்கு ஆறடி உயரத்தில் சுண்டி விட்டால் ரத்தம் வரும் அளவிற்கு வெள்ளை நிறத்தில் பார்ப்பவரை அசரடிக்கும் அளவிற்கு அவனுடைய தோற்றம் இருந்தது.



பேருந்தில் இருந்து இறங்கியவனை பார்த்து சிரித்த சில பெண்களை ஒரு முக சுழிப்புடன் பார்த்து விட்டு அவர்களை கடந்து கல்லூரிக்குள் நுழைந்தான்.



அங்கு எதிர் திசையில் வைதேகி வந்து கொண்டிருந்தாள்.....


ஹாஸ்டெலில் இருந்து கல்லூரியில் நுழைந்திருந்த வைதேகி, தன்னுடைய வகுப்பிற்கு நேரமாகி விட்டது என்று வேகவேகமாக தலையை குனிந்து கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தாள்.



அதுவும் கல்லூரி ஆரம்பித்து இரண்டாம் நாளே லேட்டாக போனால் ஆசிரியர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று அவள் மனம் முழுவதும் இதே எண்ணங்கள் நிறைந்திருந்தது. அந்த எண்ணங்கள் அவளுக்கு இன்னும் தன் நடையின் வேகத்தை அதிகரித்து கொண்டிருந்தது.



அந்த எண்ணங்களின் விளைவில் அவளுக்கு வேறு எந்த ஒரு விஷயமும் தன் கவனத்தில் பதியவில்லை.



அவளின் எண்ணம் முழுவதும் தான் வகுப்பிற்கு சரியான நேரத்தில் சென்று விட வேண்டும் என்பதே பதிந்திருந்தது. அவள் மனம், மூளை இரண்டும் அவளுக்கு சொல்லியது ஒரே வார்த்தை தான்......வேகம் வேகம் வேகம்.



அஸ்வந்தின் நிலையோ வேறு மாதிரி இருந்தது. அவனை கடந்து சென்ற சில பெண்கள்.... அவனை ஒரு அதிசயத்தை பார்ப்பதை போல் பார்த்து கொண்டே சென்றனர்.



அந்த பார்வை அவனுக்கு அருவருப்பை ஏற்படுத்தியது. அதனால் அவன் எதையும் பார்க்கும் விருப்பம் இல்லாமல் தலையை குனிந்து கொண்டே எப்பொழுதடா வகுப்பு வரும் என்று நொந்து கொண்டே நடந்து கொண்டிருந்தான்.



அவரவர் நிலையில் மூழ்கியிருந்த இருவரும் எதிர் எதிர் திசையில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.



அவர்கள் இருவருக்கும் இடையில் பத்து அடி தூரமே இருந்தது. வைதேகி நிமிடத்திற்கு ஒருமுறை தன்னுடைய வேகத்தினை கூட்டி கொண்டிருந்தாள்.



அவர்கள் இருவருக்கும் இடையில் ஐந்தடி தூரம்.....



அப்பொழுது எங்கிருந்தோ ஓடி வந்த சுவேதா அவளை பிடித்து இடது புறமாக இழுத்தாள்.



ஆனால் அஸ்வந்த்திற்கு இவை எதுவுமே தெரியவில்லை. அவன் தன் நிலையை நொந்து கொண்டே நடந்து கொண்டிருந்தான்.



ஏனெனில் சுவேதா, வைதேகி அஸ்வந்த்தினை நெருங்குவதற்குள் தன் புறம் இழுத்திருந்தாள். அதனால் அவனுக்கு எதுவும் தெரியாமலே போயிற்று.



"ப்ச் என்னடி" என்று தன்னுடைய கையினை தேய்த்து கொண்டே வைதேகி கூறினாள். (அவளுடைய முகத்தினில் சிறிது எரிச்சல் கோடு வந்திருந்தது).



சுவேதா அதையெல்லாம் கவனிக்க வில்லை…"Just miss…. Suddenly I saw you… otherwise what will happen? என்று கோபமாக வைதேகியை பார்த்து திட்டி கொண்டிருந்தாள்.



வைதேகிக்கு அவள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறாள் என்று புரியவில்லை.



அவள் தன் கைவலி எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு “ஏன்டி கோவப்படற இன்னிக்கு கிளம்ப லேட் ஆகிடுச்சு அதான் கிளாஸ்க்கு லேட் ஆகிடும்னு பாஸ்ட்டா நடந்து வந்தேன்” என்று சுவேதாவின் கைகளை பிடித்து சமாதான படுத்தி கொண்டிருந்தாள்.



வைதேகி கூறியதிலிருந்து, அவளுக்கே தான் செய்யவிருந்த காரியம் தெரியாததினால் சுவேதாவின் கோபம் கொஞ்சம் குறைந்தது.



சுவேதா, வைதேகிக்கு தற்பொழுது நடக்கவிருந்த விபரீதத்தை கூறினாள்.



சுவேதா கூறிய அனைத்தையும் கேட்ட வைதேகி தன்னுடைய இரு கரங்களையும் கன்னத்தினில் அழுத்தி ஐயோ என்று அதிர்ச்சியினில் வாயை பிளந்தாள். அவளுடைய கண்கள் மிரண்டு விழித்தது.



வைதேகியின் ரியாக்ஷனை கண்ட சுவேதாவிற்கு, அத்தனை நேரம் அவளுள் இருந்த கோபம் போய்..... வைதேகியை கிண்டல் செய்ய தோன்றியது.



சுவேதா, “you know one thing…. He is looking very handsome…… I’m so sorry. Suddenly I came like a…… what you people call that word? Ya I got it….. “நந்தி”….yes, I came like நந்தி right, between you people…. If I didn’t came that time, what will happen vaithegi? என்று அழகாக தன்னுடைய ஒரு புருவத்தினை மட்டும் அவளை பார்த்து ஏற்றி இறக்கினாள்.



வைதேகி சுவேதா கூறியதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. வைதேகியின் கண்கள் தான் இடிக்க விருந்த நபர் யார் என்று தன்னை சுற்றி நடந்து சென்றவர்களை தேடி கொண்டிருந்தது.



அதனை கண்டு கொண்ட சுவேதா, “you are searching him only…. right. Look…. he is there” என்று மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட்டினுள் நுழைந்து கொண்டிருந்த அஸ்வந்த்தினை காட்டினாள்.



"அவள் காட்டிய திசையினை நோக்கி வேகமாக திரும்பிய வைதேகிக்கு அவன் முதுகு புறம் மட்டுமே தெரிந்தது.



“What… you missed him ah… It’s ok. We are in same college only na… you will definitely see him one day” என்று சுவேதா கூறிவிட்டு வகுப்பிற்கு நேரம் ஆகிவிட்டதால் வைதேகியை அழைத்து கொண்டு சென்றாள்.



ஆனால் அவனை பார்க்கும் சூழ்நிலை எந்த மாதிரி அமைய போகிறதோ??



அங்கு ஏற்கனவே வகுப்பு ஆரம்பித்து இருந்தது.



“Excuse me sir” என்று இருவரும் கோரஸ்ஸாக ஆசிரியரை அழைத்தனர்.



“Yes come in” என்று ஆசிரியரின் அனுமதியை பெற்றவுடன் இருவரும் வகுப்பிற்குள் நுழைந்து தங்களுக்கு என்று ஒரு இடத்தினை தேர்வு செய்து அதில் அமர்ந்தனர்.



“Introduce yourself” என்று ஆசிரியர் இருவரையும் பார்த்து கூறினார்.



"சுவேதா தன்னிடத்தில் இருந்து எழுந்து முதலில் தன்னை மற்றவர்களிடம் அறிமுகபடுத்தி கொண்டாள்". சுவேதா கூறியதை உன்னிப்பாக கேட்டு கொண்ட வைதேகி.... அவளை போலவே தானும் கூறி அமர்ந்து கொண்டாள்.



தன்னிடத்தில் அமர்ந்தவுடன் வைதேகியிடம் இருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது. அவளின் அருகில் அமர்ந்திருந்த சுவேதாவிற்கு அது நன்றாக கேட்டது.



அவள் வைதேகியின் புறம் திரும்பி "what happened?” என்றாள்.



வைதேகியின் மனம் "இப்ப தான் ஒன்ன முடிச்சோம், அதுக்குள்ள இன்னொன்னா. இந்த இங்கிலீஷு நம்மள எங்கபோனாலும் விடாது போலயே” என்று நினைத்தது. ஆனால் அவள் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டினாள்.



இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறது. இனி ஒவ்வொரு விஷயத்தையும் வைதேகி எப்படி பேஸ் பண்ண போகிறாள்…. பார்ப்போம்.....




என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே


தொடரும்...............
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்


அஸ்வந்த் மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட்டினுள் நுழைந்து இரண்டாம் வருட மாணவர்கள் அமர்ந்திருக்கும் வகுப்பிற்கு சென்றான்.


“Excuse me sir”


“Yes, what do you want?”


“I’m a newly joined student”


“Get in”


அவனை உள்ளே அனுமதித்த ஆசிரியர், மற்றவர்களிடம் தன்னை அறிமுக படுத்தி கொள்ளுமாறு கூறினார்.


“Hi friends, I’m Aswanth” என்று ஆரம்பித்து எந்த ஒரு பதட்டமும் இன்றி தன்னை பற்றி கூறி முடித்தான்.


ஆனால் அங்கே வைதேகியோ, திக்கி திணறி ஒவ்வொரு ஆசிரியருக்கும் பதிலளித்து கொண்டிருந்தாள்.


ஒரு வழியாக மதிய இடைவெளி நேரமும் வந்தது. வகுப்பினை விட்டு வெளியில் வந்த வைதேகி, "அப்பாடா...." என்று இரண்டு கைகளையும் தூக்கி நெட்டி முறித்தாள்.


அவளை தொடர்ந்து வந்து கொண்டிருந்த சுவேதா, “hey what happened? Are you feel tired? But no classes are started na?”


வைதேகி மனதினுள், "இவ ஒருத்தி எப்ப பாரு நம்மள கேள்வியா கேட்டு சாகடிக்குறா.... கேள்விக்கு பொறந்தவளா இருப்பா போல.... சும்மா கூட ஒரு விஷயத்தை செய்ய முடியல" என்று மனதினுள் நினைத்து கொண்டு சுவேதாவினை பார்த்து சிரித்து வைத்தாள்.


“Hey, why are you smiling now? Am I joking?”


திரும்பவும் அவளது மனசாட்சி.... "யப்பா இவ கேள்வி கேட்குறத இப்பதிக்கு நிறுத்த மாட்டா போல.....பயங்கரமா பசிக்குது வேற....." என்று நினைத்து கொண்டு வெளியில் சிரித்து கொண்டே, "பசிக்குது டி, முதல்ல சாப்பிட போலாம் அப்பறமா உன் கேள்வியலாம் கேளுடி" என்று அவளை மெஸ்ஸிற்கு அழைத்து சென்றாள்.


“Anyway I would like to tell you one thing….You got beautiful smile d….when you are smiling, your face is completely changing. Your face looks very beautiful that time. Might be, I’m going to your fan of smile”.


வைதேகிக்கு ஆச்சர்யமாக இருந்தது. நிறைய பேர் அவள் சிரித்தால் இப்படி தான் அழகாக இருக்கு என்று கூறுகின்றனர். அவளும் எத்தனையோ தடவை கண்ணாடியின் முன் நின்று அப்படியென்ன வித்யாசமாக தெரிகிறது என்று சிரித்தெல்லாம் பார்த்திருக்கிறாள். ஆனால் அவளுக்கு எதுவும் வித்யாசமாக தோன்றவில்லை. அவளும் "சரி போ" என்று விட்டுவிட்டாள்.


ஆனால் இப்பொழுது சுவேதாவும் அதையே கூறவும், அவள் யோசிக்க ஆரம்பித்து விட்டாள். அவளுடைய யோசனையை கலைத்தது சுவேதாவின் குரல், “hey come let’s go”, என்று இருவரும் கிளம்பி மெஸ்சினை அடைந்தனர்.


மெஸ்ஸிற்குள் நுழைந்த மறு நொடி சுவேதா, “hey…. handsome guy” என்று வைதேகியிடம் கூறினாள். இல்ல இல்ல கிட்டத்தட்ட கத்தினாள் என்று தான் சொல்ல வேண்டும்.


சுவேதா காட்டிய திசையினில் பார்த்த வைதேகிக்கு அவன் எங்கும் தென்படவில்லை.


"எங்க டி"


“He is there only” என்று தேடிய சுவேதாவிற்கும் அதன் பிறகு அவன் தென்படவில்லை.


மெஸ்ஸில் கூட்டம் அதிகம் இருந்ததால், அவர்களால் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை.


“Oh… again you missed him. Its k no problem. Come let’s eat.”


ஆனால் சாப்பிட்டு கொண்டிருந்த வைதேகியின் எண்ணம் முழுவதும் அஸ்வந்த்தே நிறைந்திருந்தான். "யாரது" என்றே நினைத்து கொண்டிருந்தது. அவளுக்கே தெரியாமல் அஸ்வந்த் அவளுடைய மனதினுள் மெது மெதுவாக பதிந்து கொண்டிருந்தான்.


இருவரும் உணவருந்தி விட்டு வகுப்பிற்கு சென்றனர். மதியம் நடந்த வகுப்புகளும் காலையில் இருந்ததை போல் தான் இருந்தது. எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.


அஸ்வந்த்திற்கு காலையில் வகுப்பிற்கு வந்த போது இருந்த எரிச்சல் மதியம் இல்லை.


அவனுடையது மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட் என்பதால் அந்த அளவுக்கு அங்கு பெண்கள் இல்லை. அவனுடைய வகுப்பில் முழுவதும் ஆண்களே நிறைந்திருந்தனர்.


வகுப்பில் நண்பர்களும் செட் ஆகி இருந்தனர் அவனுக்கு. என்ன ஒன்று அவனுடன் நட்பு கொண்டிருந்த நண்பர்களில் கூட தமிழ் மட்டும் பேசும் மாணவர்களை ஏற்று கொள்ளவில்லை.


ஏன் என்று கேட்டதற்கு “எனக்கு தமிழ் புரியாது. சோ உனக்கு இங்கிலிஷ் தெரிஞ்சா பேசு. இல்லனா உன் பிரண்ட்ஷிப் எனக்கு ஒன்னும் தேவையில்லை” என்று கூறிவிட்டான்.


அவன் கூறியதில் கோபம் கொண்ட சில பேர் அவனிடம் சென்று கோபத்துடன் பேசியதற்கு, “It’s my wish, If you want my friendship, learn ‘English’ and come” என்று அவனது குரல் அதிகாரத்துடன் ஒலித்தது.


அவனை பார்ப்பதற்கு பெரிய பணக்காரனை போல் தோன்றியதில், அவனை நெருங்குவதற்கு மற்றவர்களுக்கு துணிவில்லாமல் போனது.


கல்லூரி முடிந்தது. வைதேகியும், சுவேதாவும் ஒருவருக்கொருவர் பை சொல்லிவிட்டு கிளம்பினர்.


மாலை வகுப்பில் இருந்த வரைக்கும் அஸ்வந்த்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால் கல்லூரி பேருந்தில் ஏறுவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தவனுக்கு காலையில் ஏற்பட்ட அதே தொல்லை மறுபடியும் ஏற்பட்டது.


இந்த முறை அவனால் அமைதியாக செல்ல முடியவில்லை. அவனை காட்சி பொருளாக மற்றவர்கள் பார்ப்பது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவனுக்கு கோபம் கட்டு கடங்காமல் ஏறியது.


அவர்களை திட்டுவதற்காக ஒரு அடி எடுத்து வைத்தான். அப்பொழுது அவன் செல்லும் பேருந்திலிருந்து கிளம்புவதற்கான ஹாரன் சவுண்ட் கேட்டது.


அவனால் அவர்களை எதுவும் செய்ய இயலாமல் கோபத்துடனே பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்றான்.


அவனுடைய ஒரு சுபாவம், அவனுக்கு எந்த ஒரு உணர்வையும் மனதினில் பூட்டி வைக்க தெரியாது. தனக்கு தோன்றியதை அடுத்த நிமிடமே செய்து விடுவான்.


அவனால் முடியாவிட்டால், ஒன்று மற்றவர்கள் இருந்தால் அவர்கள் மீது காட்டுவான், இல்லையேல் தன்னையே தண்டித்து கொள்வான்.


அந்த குணத்தை மாற்ற சகுந்தலா எவ்வளவோ முயற்சித்து பார்த்து விட்டார். ஆனால் அவரால் முடியவில்லை. ஒருநாள் அவனே மாறிவிடுவான் என்று விட்டும் விட்டார்.


இதுவரை எத்தனையோ பேரை அவனுடைய கம்பெனியில் இருந்து நீக்கி இருக்கிறான். ஏன் அவர்களே ரெஸிகுணேசன் லெட்டர் வாங்கிக்கொண்டு சென்றவர்களும் உண்டு.


அவனை போல் மற்றவர்களை பாராட்டவும் இன்னொருவரால் முடியாது. நன்றாக வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்தையும் அள்ளி கொடுத்திருக்கிறான்.


மிகுந்த கோபத்துடன் வீட்டினுள் நுழைந்தவன், “Grandma” என்று கத்தினான்.


கம்பெனிக்கு சென்றிருந்த சகுந்தலா இன்னும் வீட்டிற்கு திரும்பியிருக்க வில்லை.


அஸ்வந்த் கல்லூரியில் இருந்து வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் கம்பெனியில் இருந்து வீட்டு தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. போனை சகுந்தலா தான் எடுத்தார்.


அதில், புதிதாக ஒருவர் டாடா கம்மின்சுடன் காண்ட்ராக்ட் சைன் பண்ண வந்திருக்கார் என்றும், அவர் முதலாளியை பார்த்த பின்பே சைன் பண்ண முடியும் என்று கூறினார் என்றும் கம்பெனியின் மேனேஜர் சகுந்தலாவிடம் கூறினார்.


அவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்ற கேள்விக்கு,”wipro” என்று பதில் வந்தது. விப்ரோவின் கான்ட்ராக்ட்டை மிஸ் பண்ண விரும்பாத சகுந்தலா ட்ரைவரை அழைத்து கொண்டு கம்பெனிக்கு புறப்பட்டார்.


அவர் திரும்பி வருவதற்குள்ளே அஸ்வந்த் வீட்டிற்கு வந்திருந்தான், அந்தோ பரிதாபம் அவன் கோபத்துடன் வந்தது தான்.


இன்று அவனுடைய பேச்சில் மாட்ட காத்திருந்தவர்கள் அவனுடைய வீட்டு வேலைக்காரர்கள்.


அவன் “Grandma” என்று கோபமாக கத்திக்கொண்டு வந்ததை பார்த்து வேலைக்காரர்களுக்கு சர்வமும் நடுங்கியது.


இந்த ஒரு வருடத்தில் அஸ்வந்த்தின் கோபத்தினை நன்கு புரிந்து வைத்திருந்தனர். ஒவ்வொரு முறையும் அவன் கோபத்தில் இருந்து அவர்களை காப்பாற்ற சகுந்தலா தான் வருவார். அவர் ஒருவருக்கு மட்டுமே அவன் கட்டுப்படுவான்.


இன்று சகுந்தலாவும் இல்லாததால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் பயத்தில் வேர்த்தது. ஒருவர் மற்றொருவர் முகத்தை பாத்து "நீ போ.... நீ போ..." என்று கூறினர்.


இறுதியாக வயதில் மூத்தவராக இருந்த ரத்தினத்தை அனுப்பினர். ரத்தினம் நடுங்கி கொண்டே வந்தார், அவருடைய பயம் வெளி பார்வைக்கும் தெளிவாகவே தெரிந்தது.


அவர் அஸ்வந்த்தினை நெருங்கி, "அம்மா ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி தான் தம்பி வெளில கிளம்பி போனாங்க".


கட்டுக்கடங்காத கோபத்தில் இருந்த அஸ்வந்த்திற்கு அவனுக்கு புரியாத அவருடைய தமிழ் அவனுடைய கோபத்துக்கு இன்னும் தூபம் வார்த்தது.


அவன் கோபத்தில் எதிரில் இருப்பவர் வயதில் மூத்தவர் என்பதையெல்லாம் மறந்து, திட்ட ஆரம்பித்தான். அவனுக்கு தேவை ஒரு வடிகால். பாவம் ரத்தினம் இன்று சிக்கி கொண்டார்.


அவன் திட்டியதில் இருந்த சாராம்சம் இது தான்….” இங்கிலிஷ் தெரியாதவர்களுக்கு இனிமேல் அந்த வீட்டில் வேலையில்லை”.


பாவம் அந்த பெரியவருக்கு அஸ்வந்த் என்ன திட்டுகிரான் என்று சுத்தமாக புரியவில்லை.


அவன் கடைசியாக,”today onwards, you have no job here….. So leave.”


அவன் கூறிய கடைசி வார்த்தையில் ரத்தினம் ஸ்தம்பித்து நின்றார். அவர் அந்த வேலையை விட்டு செல்வதற்கு ஒரு நிமிடம் ஆகாது, ஆனால் என்ன ஒன்று வெளியில் வேலை பார்த்து வாங்கும் சம்பளத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் சகுந்தலா அவர்களுக்கு வழங்கினார்.


அதனால் ரத்தினம் தயங்கி அதே இடத்தில் நின்றார். ஒரு இன்ச் கூட தான் நின்ற இடத்திலிருந்து நகரவில்லை.


அதனை கண்டு இன்னும் கோபமுற்ற அஸ்வந்த், “I say get out…. all of you who don’t know English” என்று கர்ஜித்தான்.

………………………………


அங்கே வைதேகியோ ஹாஸ்டெலில் இருந்து கிளம்பி பாஸ்கெட்பால் கோர்ட்டிற்கு சென்றாள். இன்று அவர்களுடைய டீம் ஏற்கனவே இருந்த சீனியர்ஸுடன் போட்டி போட இருந்தது.


அங்கு அவர்களுடைய சீனியர்ஸுடைய தோரணையே வித்யாசமாக இருந்தது. அவர்களுடைய தோரணை வைதேகிக்கு உணர்த்தியது இது தான், “நீயெல்லாம் என் கால் தூசிக்கு பெறமாட்டே, நீ என் கூட போட்டிபோட போறியா".


இதனை கண்டு ஆவேசமடைந்த வைதேகி பாஸ்கெட்பால் கோர்ட்டினுள் வெறிக்கொண்டவளை போல் விளையாடினாள். அவளை நெருங்கவே எதிர் அணியினர் பயந்தனர். இறுதியில் பத்திற்கு ஏழு என்ற பாய்ண்ட்ஸில் சீனியர்சை தோக்கடித்தனர்.


அதில் இந்து பாய்ண்ட்ஸினை வைதேகி மட்டும் தன் குழுவிற்காக ஸ்கோர் செய்திருந்தாள். தங்களது தோல்வியினை ஏற்றுக்கொள்ள முடியாத சில சீனியர்ஸ் வைதேகியை முறைத்து கொண்டே சென்றனர். அவளும் அவர்களை பதிலுக்கு திரும்ப முறைத்தாள்.


ஆனால் அவர்களில் இருந்து லாவண்யா என்ற சீனியர் மட்டும் வைதேகியை நெருங்கி வந்தாள். இவள் எதற்கு இங்கு வருகிறாள் என்று அவளை பார்த்தும் முறைத்து கொண்டிருந்த வைதேகியை நெருங்கி, “well play” என்று கை குலுக்கினாள்.


லாவண்யா கை குலுக்கியதும், வைதேகி அவளை பார்த்து ஸ்நேக புன்னகை வீசினாள்.


அதற்கு லாவண்யா "cute smile" என்று கூறிவிட்டு சென்றாள்.


அன்றைய பயிற்சி அத்துடன் முடிந்தது, அனைவரும் கிளம்பி தங்களது அறைக்கு சென்றனர்.


………………………


அங்கு அஸ்வந்த்தின் வீட்டில் ரத்தினம் மற்றும் அனைவரையும் அஸ்வந்த் வெளியில் போக சொல்லிக்கொண்டிருந்த போது, வீட்டின் வாசலில் கார் வந்து நின்றது.


காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் நுழைந்த சகுந்தலாவிற்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது.


அவர் அஸ்வந்த்தினை பார்த்து, "என்னடா கண்ணா" என்று கேட்டார்.


இதுவே மற்ற நேரமாக இருந்திருந்தால் அவன் அவரிடம் செல்லம் கொஞ்சி இருப்பான்.


ஏனெனில் அவனுக்கு சகுந்தலா அவ்வாறு கூப்பிட்டால் மிகவும் பிடிக்கும்.


ஆனால் அவன் அப்பொழுது இருந்த கோபத்தில், "Grandma… talk to me in english” என்று பல்லை கடித்தான்.


ஒரு நாள் இதே இங்கிலீஷால் அவன் படாத பாடு பட போகிறான் என்று தெரிந்திருந்தால், அவன் அன்றே இங்கிலிஷ் பேசுவதை விட்டிருப்பானோ?


ஹ்ம்ம் விதி யாரை விட்டது....
 
Last edited:

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சகுந்தலா வேலைக்காரர்களிடம் திரும்பி நீங்களும் போய் உங்க வேலைய பாருங்க என்று கூறிவிட்டு அஸ்வந்த்தின் புறம் திரும்பி "come with me aswanth" என்று கூறி தன்னுடைய ரூமை நோக்கி முன்னே நடந்தார்.


தான் வெளியே போக சொன்ன வேலைக்காரர்களை சகுந்தலா வீட்டுக்குள் போக சொல்லவும், அவரை எதிர்த்து பேச வந்த அஸ்வினை. "Come with me" என்ற சகுந்தலாவின் அதிகாரமான வார்த்தை, அஸ்வந்த்தின் வாயை மூடி அவரின் பின்னால் செல்ல வைத்தது.



அஸ்வந்த் ரூமினுள் நுழைந்தவுடன் கதவினை அடைத்த சகுந்தலா அவன் புறம் திரும்பி “what habit is this aswanth? I already told you to change this character… Why did you show your angry on others?...It’s not fair.” என்று அஸ்வந்த்திடம் அவன் அறையினுள் நுழைந்ததில் இருந்து சரமாரியாக கேள்விகளை அடுக்கி கொண்டிருந்தார்.



தன்னுடைய பொறுமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்த அஸ்வந்த், இரண்டு காதுகளையும் பொத்தி கொண்டு "Please stop it grandma” என்று கத்தினான்.



அவனுடைய கத்தலில் சகுந்தலா அமைதியானார்.



சகுந்தலாவின் அமைதியை தனக்கு சாதகமாக எடுத்து கொண்ட அஸ்வந்த், தன் பக்கத்து நியாயங்களை எடுத்து கூற ஆரம்பித்தான்.



காலேஜில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தவன், கடைசியில் “hereafter I’m not going to the college. It’s seriously irritating grandma. I’m going to stop” என்று கூறினான்.



அஸ்வந்த் இனி காலேஜ் போகவில்லை என்று கூறியது அவருக்கு மிகுந்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்த சகுந்தலா....



“It is not a correct decision aswanth. I won’t allow you to stop the college”



“No grandma, this is final. You please not to involve this matter”.



சகுந்தலா அவனிடம் எவ்வளவோ கூறி பார்த்தும் அஸ்வந்த் அவனுடைய முடிவிலிருந்து இறங்கி வருவதாக தெரியவில்லை.



அவனை எப்படியாவது காலேஜ் போக சம்மதிக்க வைக்க வேண்டும் என்று வித விதமாக பேசி சமாதான படுத்த முயற்சித்து கொண்டிருந்தவர்.... அஸ்வந்த் கூறிய வார்த்தையில் அதன் பிறகு ஒரு வார்த்தைகூட அவனிடம் பேசாமல் அறையை விட்டு வெளியேறினார். ஏன் அதன் பிறகு அவன் முகத்தினை கூட திரும்பி பார்க்கவில்லை.



அவன் கூறியது இதுதான், “This is my life. I know what to do” என்று அவனையும் மீறி அவன் வாயினில் இருந்து வார்த்தை வெளியில் வந்து விழுந்தது.



அவனிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தை வரும் என்று சுத்தமாக எதிர் பார்க்கவில்லை சகுந்தலா.



அவரால் அவன் கூறியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதற்கு மேல் அஸ்வந்த்திற்கு முன்னாள் நிற்பது நெருப்பிற்கு மேல் நிற்பதை போல் தகிக்க ஆரம்பித்தது.



அதனால் அவன் கூறிய அடுத்த நிமிடம் அறையினை விட்டு வெளியேறி விட்டார்.



அஸ்வந்த்திற்கு சகுந்தலா அறையை விட்டு போனவுடன் தான், கடைசியாக என்ன கூறினோம் என்பதே அவனுக்கு புலப்பட்டது.



அதனை அறிந்தவுடன் “shit” என்று தலையில் பலமாக அடித்து கொண்டு அவரை நோக்கி ஓடினான்.



அங்கு அவன் கண்ட காட்சி, அவனை நின்ற இடத்திலே உறைய வைத்தது.



அங்கு சகுந்தலா வெட்ட வெளியையே வெறித்து கொண்டிருந்தார், அவருடைய நிலை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னாள் இருந்ததை போல் இருந்தது.



சிறிது நேரத்தில் சுற்று புறம் உணர்ந்த அஸ்வந்த் சகுந்தலாவின் முன்னாள் வந்து நின்று, “sorry Grandma…. Please forgive me….that word is mistakenly came out” என்று தன் பாட்டிற்கு அவரிடம் கூறி கொண்டிருந்தான்.



ஆனால் என்ன புண்ணியம்… அவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் அவர் காதிற்கு சென்றால் தானே. அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராததால் அவரை லேசாக அசைத்து பார்த்தான். அப்பொழுதும் அவரிடம் இருந்து எந்த ஒரு அசைவும் இல்லாததால் அவனுக்கு பயம் பிடித்து கொண்டது.



ஒருவேளை முன்னைப்போல் எதுவும் ஆகிவிட்டதோ என்று பலவாறு எண்ணி அவன் மனம் பதற்றம் கொள்ள ஆரம்பித்தது.



அவன் அவரை அழைத்து கொண்டே பலமாக உலுக்கினான். பத்து நிமிடம் அஸ்வந்த்தினை தவிக்க விட்ட சகுந்தலா, “என்னடா கண்ணா” என்று ஆழ்ந்த உறக்கத்தினுள் இருந்து விழித்தவரை போல் அவனை கேட்டார். சகுந்தலாவின் குரலை கேட்டவுடன் தான் அவனுக்கு உயிரே வந்தது.



அஸ்வந்த் சகுந்தலாவை "Grandma" என்று இருக்க கட்டி கொண்டான்.



அவருக்கு ஏன் அஸ்வந்த் இப்படி பிஹேவ் பண்ணுகிறான் என்று புரியவில்லை. இருந்தாலும் அவர் அவனை தட்டிக்கொடுத்து கொண்டே தன்னிடம் இருந்து விளக்கினார்.



ஆனால் மிகுந்த பயத்தில் இருந்த அஸ்வந்த்திற்கு அவரை விட மனசில்லை. அவன் இன்னும் இறுக்கமாக அணைத்து கொண்டான், எங்கே அவரை விட்டால் தன்னை விட்டு சென்றுவிடுவாரோ என்பதை போல் இருந்தது அவனுடைய செயல்.



சகுந்தலா சிரித்து கொண்டே “Enough enough” என்று கூறி அவனை தன்னிடம் இருந்து பிரித்து, “I’m worried about your wife aswanth…. ஹப்பா….what a strong hug…who is going to be that lucky girl?” என்று சிரித்தார்.



“Oh grandma…. Don’t tease me” என்று சிரித்தான்.



சகுந்தலா மாலையிலிருந்து நடந்த அனைத்து விஷயங்களையும் மறந்திருந்தார்.



டாக்டர் அஸ்வந்த்திடம் கூறியதும் இதுதான், அவரால் ஏற்று கொள்ள முடியாத விஷயங்களை அவர் கேட்கவோ பார்க்கவோ நேர்ந்தால் அவர் விரக்திநிலையை அடைந்து அனைத்தையும் மறந்து விடுவார், சிலசமயம் அவர் கோமா ஸ்டேஜ் போகவும் வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருந்தார். அவர் மறந்து போனதை ஞாபக படுத்த முயற்சித்தால் உயிர் கூட போகலாம் என்றும் கூறியிருந்தார்...



அதனால் தான் அவன் அத்தனை பயந்தது. அவன் கிராண்ட்மா நன்றாக பேசவும் தான் அவனுக்கு உயிரே வந்தது.



அவனுடைய சிந்தனையை கலைத்தது சகுந்தலாவின் குரல், “what deep thinking is going on your mind? Come lets have our dinner” என்று அழைத்து சென்றார்.



இவர்கள் இருவரையும் பார்த்த வேலைக்காரர்களுக்கு, "அப்பாடா ஒருவழியா அம்மா …. அய்யாவை சரிபண்ணிட்டாங்க" என்று நிம்மதி மூச்சுவிட்டனர்.



ஆனால் அவர்களுக்கு தெரியாதே உள்ளே என்ன நடந்தது என்று?



அவர்கள் இருவரும் சிரித்து கொண்டே உணவை உண்டு முடித்தனர்.



மறுநாள் எப்பொழுதும் போலவே விடிந்தது.



காலையில் அஸ்வந்த் கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டிருந்தான். அவனுடைய மனதில் குற்றவுணர்ச்சி எழுந்திருந்தது, தன்னால் தான் கிராண்ட்மாவிற்கு இப்படி ஆகிவிட்டது என்று. அதனால் அவன் புடிக்காத கல்லூரிக்கும் செல்ல தயாராக இருந்தான் அவனுடைய கிராண்ட்மாவிற்காக.



அஸ்வந்த் பேருந்தில் இருந்து இறங்கினான். நேற்று அஸ்வந்த்தினை பார்த்த பெண்கள் இன்றும் அவனை காண்பதற்காக நேற்று நின்று கொண்டிருந்த அதே இடத்தில் நின்றிருந்தனர்.



அஸ்வந்த்திற்கு கோபத்தை கட்டு படுத்தவே முடியவில்லை. அதுவும் அவன் மனதில் இவர்களால் தான் நேற்று சகுந்தலாவிடம் அப்படி பேச நேர்ந்தது.



அதனால் அஸ்வந்த் நேற்றை போல் இன்று தலையை குனிந்து கொண்டு செல்ல வில்லை.



நேராக அவர்களிடம் சென்று "Don’t you see any guys before" என்று கேட்டான். அந்த வார்த்தையினை கேட்ட பிறகு அவர்கள் அங்கு நிற்பார்களா என்ன.... அவனை முறைத்து கொண்டே சென்றனர்.



காலேஜ் சேர்ந்து ஆறு மாதம் ஓடி விட்டது….



இந்த ஆறு மாதத்தில் சுவேதா, வைதேகியிடம் அஸ்வந்த்தினை காண்பிக்க எத்தனையோ முறை முயன்று விட்டாள். ஆனால் வைதேகியின் கண்ணில் தான் அஸ்வந்த் சிக்குவானா என்று விதியும் அவர்களின் சந்திப்பை தள்ளி போட்டு கொண்டே சென்றது.



சுவேதா அஸ்வந்த்தை, “handsome guy ல் இருந்து உன் ஆளு” என்று மாற்றி இருந்தாள். வைதேகியிடம் பேசி பேசி அவளும் கொஞ்சம் தமிழை கற்றிருந்தாள்.



அஸ்வந்த்தோ பெண்கள் மத்தியில் "திமிர் பிடித்தவன், தலைகனம் உள்ளவன், பணக்கார திமிர், தான் அழகென்ற திமிர்" என்ற வித விதமாக பெயர் வாங்கியிருந்தான்.



இந்த ஆறு மாதத்தில் எத்தனையோ பெண்கள் அவனிடம் லவ் லெட்டர் கொடுத்தனர். அவன் அதனை பிரித்து கூட பார்க்கவில்லை. அந்த லவ் லெட்டரை வாங்கின இடத்திலே சுக்கு நூறாக கிழித்து போட்டான்.



இப்படியே ஆறு மாதம் கடந்து விட்டது.



அன்று வைதேகிக்கு பிறந்தநாள். காலையில் எழுந்தவுடன் தன் அன்னை, தம்பியுடைய வாழ்த்துதலை பெற்று, ஒரு வாரத்திற்கு முன்பு சுவேதாவும், வைதேகியும் டீநகரில் அலைந்து திரிந்து வாங்கிய சல்வாரினை போட்டு கொண்டு காலேஜிற்கு கிளம்பினாள்.



லைட் ரோஸ் கலரில் இருந்த சல்வார் அவளுடைய நிறத்திற்கு மிகவும் பாந்தமாக இருந்தது. அவள் தன் முதுகுவரை நீண்டிருந்த அடர்த்தியான கூந்தலை மேலே கொஞ்சம் முடியெடுத்து தன் சல்வாரின் கலரிலேயே கிளிப் அணிந்திருந்தாள். மீதம் இருந்த முடியை விரித்து விட்டிருந்தாள். அந்த விரிந்த கூந்தலில் நேற்று மாலை சுவேதா வெளியில் சென்று வாங்கி கொடுத்திருந்த மல்லிகை பூ அலங்கரித்திருந்தது.



அவள் அழகு ஓவியமாக நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது சாலையின் ஓரமாக நட்டு வைத்திருந்த காகித பூ மரத்திலிருந்து காற்றடித்ததால் பூ மழையை போல் அவள் மேல் கொட்டியது.



வைதேகி நடந்து வருவதை பார்த்து கொண்டே அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த சுவேதா, வைதேகியின் மேல் பூ கொட்டவும் சிரித்து விட்டாள்.



அவளையே பார்த்து நடந்து வந்த வைதேகியும் சிரித்து விட்டாள்.



அப்பொழுது அங்கே பேருந்தில் இருந்து இறங்கி தன் நண்பர்களுடன் இணைந்து நடந்து வந்து கொண்டிருந்த அஸ்வந்த்தின் கண்களில், வைதேகியின் மேல் பூ விழுந்ததும், அதன் பிறகு அவள் சிரித்ததும் பட்டது.



அவன் தன்னை மறந்து அதே இடத்தில் நின்றுவிட்டான்....




என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே


தொடரும்…..
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்


வைதேகியை பார்த்த அஸ்வந்த், பிரம்மை பிடித்தவனை போல் அதே இடத்தில் நின்றான்.


எத்தனை நேரம் அப்படியே நின்றானோ... அவனுடைய நண்பர்களின் உலுக்கலில்..... சுயநினைவுக்கு வந்தவன் வைதேகியை சுற்றும் முற்றும் தேடினான்.....


அவளை காணாததால் தன்னுடைய கால்களை தரையில் "shit, I missed her" என்று ஓங்கி குத்தினான்.


அவனுடைய செய்கையை கண்ட அவன் நண்பர்கள், “hey what happened da?” என்று வினவினர்.
ஆனால் அஸ்வந்த் அவர்களுக்கு பதில் சொல்லாமல்..... தேடுவதிலேயே முனைப்பாய் இருக்க....



அதில் எரிச்சலடைந்த அவனுடைய நண்பர்களில் ஒருவனான அசோக், “hey aswanth look at me” என்று அஸ்வத்தின் முகத்தினை தன் முகம் நோக்கி திருப்பினான்.


அஷோக்கினை நோக்கி திரும்பிய அஸ்வந்த்தின் பார்வை அவனை கடந்து வெகு தூரத்தில் சென்று கொண்டிருந்த வைதேகியினை பார்த்தது.


அஸ்வந்த்தின் முகத்தினை பார்த்த அசோக்கிற்கு சத்தியமாக ஒன்றும் புரியவில்லை. அஸ்வந்த்தின் முகம் தெளசண்ட் வாட் பல்பினை போல் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது.


அசோக் மனதினுள், "இவ்ளோ நேரமா எதையோ தொலைச்சவன் போலல்ல இருந்தான்.... இப்ப என்ன நடந்ததுனு இவன் பேஸ் இவ்ளோ பிரைட்டாச்சு" என்று நினைத்து கொண்டே அஸ்வந்த்தின் கண்கள் சென்ற திசையினை நோக்கினான்.


அங்கே இரண்டு பெண்கள் EEE டிபார்ட்மென்ட்டினுள் நுழைந்து கொண்டிருந்தனர்.


அசோக்கிற்கு இன்னும் புரியவில்லை.... அவர்கள் போவதற்கும் இவன் முகம் பிரகாசம் ஆவதற்கும் என்ன காரணம்...... என்று யோசிக்க யோசிக்க அவன் மண்டையே வெடிப்பதை போல் இருந்தது.


இதற்கு மேல் தன்னால் யோசிக்க முடியாதுடா சாமி.... அவன் கிட்டயே கேட்ருவோம் என்று முடிவெடுத்த அசோக், “hey aswanth…… what happened da….. What’s going on here?” என்று அவனை உலுக்கினான்.


வைதேகி உள்ளே செல்வது வரை பார்த்து விட்டு பொறுமையாக அசோக்கின் புறம் திரும்பிய அஸ்வந்த், “Nothing da….. Come let’s go to our class…. It’s already late” என்று கூறிவிட்டு இதுவரை எதுவும் நடக்காததை போல் அவர்களுக்கு முன்னே நடந்தான்.


அவன் கூறிய பதிலில் எரிச்சலுற்ற அசோக், “டேய் நீங்கல்லாம் போங்கடா..... நான் அஸ்வந்த்கிட்ட கொஞ்சம் பேசவேண்டியது இருக்கு.... நீங்க போங்க. நாங்க ஒரு 15 மினிட்ஸ்ல கிளாஸ்ல ஜாயின் பண்ணிக்கிறோம்” என்று மற்றவர்களிடம் கூறிவிட்டு அஸ்வந்த்தினை முன்னே நடக்க விடாமல் அதே இடத்தில் பிடித்து நிறுத்தி வைத்தான்.


“What do you want da?”


“Tell me the truth aswanth”


“Hey nothing serious ashok…. Come let’s go”


“No I’m not going to move an inch. I just want to know…. Why your face is glowing suddenly. I didn’t see you like this before. So what’s the matter? I know you very well man. U can’t escape from me” என்று கூறி அவனை பார்த்து சிரித்து கொண்டே புருவத்தை உயர்த்தினான்.


அஸ்வந்த் காலேஜ் வந்ததிலிருந்து அசோக் தான் அவனது நெருங்கிய தோழன்.


அசோக்கின் சொந்த ஊர் சென்னை. அவன் படித்ததெல்லாம் CBSE. அவன் எந்த அளவு தமிழை சரளமாக பேசினானோ, அதே அளவு ஆங்கிலத்தையும் பேசினான்.


அசோக் பார்ப்பதற்கு ஆறடி உயரத்தில், உயரத்திற்கேற்ப உடல் வாகுடன் மாநிறத்தில் இருந்தான், அவன் நடையில் எப்பொழுதும் தான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயர் என்ற திமிர் தெரியும்.


அசோக்கின் அந்த திமிர் தான் அஸ்வந்த்திற்கு அவனை நண்பனாக ஏற்று கொள்ள தூண்டியது. அஸ்வந்த்தும், அசோக்கும் அந்த காலேஜின் சிங்கங்களாக சுற்றி வந்தனர்.


அசோக் அஸ்வந்த்திடம் தூண்டி துருவி கேட்டதற்கு அஸ்வந்த் கூறிய பதில் இது தான்,"surely one day I will tell you…now come”.


அசோக்கின் மனதில், "இவன் இனிமேல் எது கேட்டாலும் சொல்ல மாட்டான், என்னைக்கு இருந்தாலும் என்கிட்ட வந்து தான ஆகணும்..... அப்போ பார்த்துக்கிறேன்" என்று அத்துடன் அப்பேச்சை முடித்து விட்டான்.


ஆனால் அசோக்கிற்கு தெரியவில்லை இன்னும் மூன்றே நாட்களில் தன்னிடம் இதனை பற்றி அஸ்வந்த் சொல்வது மட்டும் அல்லாமல் புலம்ப போகிறான் என்று…


அதன் பிறகு அவர்கள் இருவரும் கிளாஸிற்கு சென்றனர்.


அஸ்வந்த்திற்கு கிளாசில் பாடத்தின் மேல் சுத்தமாக கவனம் பதியவில்லை. அவனுடைய மனம் முழுவதும் பூக்களுக்கு இடையே சிரித்து கொண்டிருந்த வைதேகியே தோன்றினாள்.
யார் இவள், பார்த்த முதல் நொடியே என் மனதை கவர்ந்து விட்டாளே... என்ன ஒரு வசீகரமான சிரிப்பு. அவளுடைய சிரிப்பினில் புதைந்து போக மனம் ஏங்கியது.
அவனுடைய மனம் திரும்பவும் அவளை பார்க்க போகும் தருணத்திற்காக ஏங்க ஆரம்பித்தது.



அஸ்வந்தால் கிளாசில் சுத்தமாக உட்காரவே முடியவில்லை. எப்படா கிளாஸ் முடியும் என்று காத்திருந்தவன்,


ஒருவழியாக கிளாஸ் முடியவும் தன்னுடைய பையை வேக வேகமாக எடுத்து கொண்டு "அசோக் எங்க போகிறாய் என்று கேப்பதற்குள்" கிளாசில் இருந்து வெளியேறி விட்டான்.


அவன் அங்கிருந்து கிளம்பி நேராக போய் நின்ற இடம் EEE டிபார்ட்மெண்ட். அங்கு டிபார்ட்மெண்டில் எதிரில் அமைந்திருந்த சிமெண்ட் பெஞ்சில் வெளியில் வருபவர்களை பார்ப்பதற்கு தோதுவாக அமர்ந்து கொண்டான்.


தன்னுடைய வகுப்பில் இருந்து வெளியில் வந்த வைதேகியின் அருகில் அன்று சுவேதா வரவில்லை. அவள் ரெகார்ட் நோட் சைன் வாங்குவதற்காக தன்னுடைய வகுப்பு ஆசிரியரை பார்க்க சென்றிருந்தாள்.


வைதேகி போன வாரமே அந்த ரெகார்ட் நோட்டினை சைன் வாங்கியிருந்தாள். சுவேதா அன்று விடுமுறை எடுத்திருந்ததால் இன்று வாங்க சென்றிருந்தாள்.


வைதேகி தனியாக தன்னுடைய டிபார்ட்மெண்டில் இருந்து வெளியில் வந்தாள். அவளை பார்த்து விட்ட அஸ்வந்த் அவளை நோக்கி முன்னேறினான்.


அவள் முன்னாள் சென்று நின்று “Hi” என்று கூறினான்.


வைதேகி அவனை கவனிக்கவில்லை.... அவனை கடந்து சென்றாள்.


அஸ்வந்த்திற்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. அஸ்வந்த் தனக்குள்ளே, I think she didn’t see me” என்று நினைத்து கொண்டான்.


“Hey” என்று கூறவந்தவன் எப்படி அழைப்பது என்று தெரியாமல் “smileee” என்று சத்தமாக கூப்பிட்டான்.


வைதேகி திரும்பி யார் இப்படி கத்துகிறார்கள் என்று திரும்பி பார்த்தாள்.


அஸ்வந்த் அவளை பார்த்து “hi” என்று கை அசைத்தான்.


வைதேகி, யாருக்கு இவன் கை அசைக்கிறான் என்று பின்னால் திரும்பி பார்த்தாள்.


அதனை பார்த்த அஸ்வந்த், சிரித்து கொண்டே “hey you only smileee why are you turning back? என்று பேசி கொண்டே அவள் கிட்டே நெருங்கி வந்தான்.


வைதேகிக்கு மனதில் திகில் பிடித்து கொண்டது ..... யார் இவன்?


வைதேகியின் மனதில் "யார் இவன்..... நம்ம இவன இதுக்கு முன்னாடி பாத்திருக்கோமா என்ன..... அப்படியும் தெரியலயே..." அவள் யோசித்து கொண்டே அதே இடத்தில் நின்றாள்.



அஸ்வந்த் அவளை ஒட்டி நெருங்கி வந்து நின்றான்.


அவன் தன் முகத்தில் சிறிய புன்முறுவலுடன் அவள் முன் தன்னுடைய கைகளை நீட்டி, “hi smilee…. I’m aswanth. Your sweet name pls? என்றான்.


அஸ்வந்த் தன் கிட்டே வந்து கை நீட்டவும் அவளுக்கு முதலில் தூக்கி வாரி போட்டது.


பின்னே தன்னை ஒருவாறு நிதான படுத்திக்கொண்டு... கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பித்தாள். என்னதான் நிதான படுத்தி கொண்டாலும் அவளுக்குள் ஒரு பதட்டம் இருக்கவே செய்தது.


"நீங்க யாரு.... ஏன் என்னோட பேர்லாம் கேட்குறீங்க... இதுக்கு முன்னாடி நம்ம எங்கயாவது பாத்திருக்கோமா என்ன" என்று கடகட வென்று தன் மனதில் தோன்றிய கேள்விகள் அனைத்தையும் கேட்க ஆரம்பித்தாள்.


வைதேகியின் பெயரை எதிர் பார்த்து காத்திருந்த அஸ்வந்த்நிற்கு, சரமாரியாக தமிழ் வார்த்தைகள் வைதேகியின் வாயிலிருந்து வேக வேகமாக வந்து விழுகவும், அவன் இரு காதுகளையும் பொத்தி கொண்டு வைதேகியை பார்த்து “stop stop” என்று கண்களை மூடிக்கொண்டு கத்தினான்.


அஸ்வந்த் திடிரென்று நடுவில் கத்தவும், பயந்து போன வைதேகி அவனையே அதிர்ந்த விழிகளால் நோக்கினாள்.


சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களை மட்டும் திறந்த அஸ்வந்த், வைதேகி பயந்த விழிகளுடன் தன்னை பார்த்து கொண்டிருப்பதை கண்டு வேகமாக தன் காதுகளில் இருந்து கையை எடுத்த அஸ்வந்த், “Sorry…. Sorry…..smilee, I can’t able to understand your Tamil. That’s why, sorry again. Whatever you told just now, could you please translate it to English.”


வைதேகி தன் மனதில், "ஐயோ இன்னிக்குனு பார்த்து சுவேதா நம்ம கூட வரலையே" என்று நினைத்து கொண்டே அவனை பார்த்தவள், அவன் தன் பதிலுக்காக தான் காத்திருக்கிறேன் என்பதை கண்டவள்,


"ஐயோ இவன் கிட்ட இருந்து எப்படியாவது எஸ்கேப் ஆகணுமே” என்று யோசித்தவள்.


“என் பிரண்டு என்ன கூப்பிடுறா என்று அவனுக்கு பின்னால் கை காட்டியவள், அஸ்வந்த் திரும்பி பார்த்தவுடன், வைதேகி தான் நின்ற இடத்திலிருந்து வேக வேகமாக பின் பக்கம் நோக்கி நடந்தாள்.


வைதேகி காட்டிய திசையில் யாரும் இல்லாததால், “hey nobody is there” என்று கூறி கொண்டே அவள் புறம் திரும்பியவன் வைதேகி அங்கு இல்லாததை கண்டு, "where did she went? Till now smilee is here only na" என்று சுற்றி முற்றி தேடியவன், தன் முன்னே வேகமாக இல்ல இல்ல கிட்டத்தட்ட ஓடி கொண்டிருந்தவளை கண்டவனின் மனதிற்குள் "காலையில இவளை பார்த்ததில் இருந்து இவளை திரும்ப எப்படா பார்ப்போன்னு தவிச்சிட்டு இருக்கேன்.. இவ என்னடான்னா ஒரு “hi” சொன்னதுக்கே ஓடிட்டாளே" என்று அவளிடம் பேச முடியாத கவலையில் மனதிற்குள்ளேயே அவளை அர்ச்சனை செய்து கொண்டிருந்தான்.


அஸ்வந்த்திடம் இருந்து ஓடிய வைதேகி நேராக போய் நின்றது தன் ரூமில் தான். அவள் தன் கட்டிலில் போய் "ஹப்பாடா ஒரு வழியா இங்க வந்துட்டோம்டா சாமி" என்று கட்டிலில் பொத்தென்று அமர்ந்தாள்.


"ஹே என்னடி ஆச்சு" என்று அவளது அறைத்தோழி நிலா கேட்டாள்.


"ஒன்னும் இல்லடி ஒருத்தன்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி ஓடி வரேன்"


"என்னது"


"அய்யயோ உலறிட்டோமே..." என்று தன்னையே திட்டி கொண்டு...


"அது ஒன்னும் இல்லடி நிலா.... சுவேதாவை அடிச்சிட்டேன்னு தொரத்திட்டே வந்தாளா அதான் அவ கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி ஓடி வரேன்னு சொன்னேன்".


"இல்லையே நீ வேற ஏதோல்ல சொன்ன மாதிரி இருந்துச்சு.... அதுவும் 'அவன்' னு கூட வந்துச்சே".


"ஹே இல்லடி நிலா.... நான் அவள் சொன்னது அவன்னு கேட்றுக்கும். வேற எதுவும் இல்ல.... வா டீ குடிக்க போலாம்".


"நான் இப்போ தான் குடிச்சேன். நீ போய் குடி" என்று அவளை ஒரு மார்க்கமாக பார்த்து கொண்டே தன் வேலையை பார்த்து கொண்டிருந்தாள்.


"இவ கிட்ட இருந்து எஸ்கேப் ஆனா போதும் டா சாமி" என்று தன் டம்ளரை எடுத்து கொண்டு டீ குடிக்க கிளம்பினாள்.


அங்கு தன் வீட்டினுள் நுழைந்த அஸ்வந்த், எதிரில் வந்த சகுந்தலாவை தூக்கி “grandma” என்று சுத்தினான்.


"டேய் டேய்” என்று அலறினார்.


சகுந்தலாவின் அலறலை கேட்டு நடு கூடத்தை எட்டி பார்த்த வேலைக்காரர்கள் அஸ்வந்த் சிரித்து கொண்டே மிகுந்த மகிழ்ச்சியுடன் சகுந்தலாவை சுற்றி கொண்டிருப்பதை கண்டு அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.


அவர்களின் சிரிப்பில் சகுந்தலாவை கீழே இறக்கிவிட்டான் அஸ்வந்த்.


“என்னடா கண்ணா” என்று சகுந்தலா அஸ்வத்தின் முடியினை கோதி விட்டு கொண்டே கேட்டார்.


அவரின் கையினை எடுத்து தன் கையினுள் வைத்து கொண்டவன். “Grandma… today I saw my smilee” என்று சந்தோசமாக கூறினான்.


அவன் smilee என்று கூறியபொழுது அவனுடைய எண்ணம் முழுவதும் பூவிற்கு நடுவில் சிரித்து கொண்டிருந்த வைதேகியே தோன்றினாள்.


தன்னுடைய பேரனின் முகம் பிரகாசமாக இருப்பதை கண்ட சகுந்தலா “who is that girl aswanth” என்று கேட்டார்.


“Oh my smilee…“என்று காலையிலிருந்து ஆரம்பித்து மாலை அவள் தன்னிடம் இருந்து ஓடியது வரை அனைத்தையும் சொல்லி முடித்தான்.


கடைசியாக அவள் தன்னிடம் இருந்து போனதை கூறும்போது அவனுடைய குரல் பிசிறடித்தது.


அவனுடைய குரலில் இருந்தே அவன் எவ்வளவு வருத்தமுற்று இருக்கிறான் என்று சகுந்தலாவிற்கு புரிந்தது.


“Don’t worry aswanth, she will come and speak to you tomorrow. I think… may be she has fear...”


“No grandma, Starting she spoke well. But I don’t know why she suddenly went…..” என்று வருத்த பட்டான்.


சகுந்தலாவிற்கு அவள் ஏன் சென்றிருப்பாள் என்ற காரணம் புரிந்தது “English…” இது அவருடைய யூகம் தான்.


ஆனால் இந்த காரணத்தை அஸ்வந்த்திடம் கூறினால் ஏற்று கொள்வானா என்று தான் தெரியவில்லை. சரி சொல்லித்தான் பார்ப்போம். என்னதான் சொல்கிறான் என்று பார்க்கலாம் என்று முடிவெடுத்தவர்.


“கண்ணா... may be she don’t know english” என்று கூறினார்.


அஸ்வந்த் தன் மனதினுள் "is it like that….....no no it won’t be " என்று மறுத்தவன்.


“No grandma…. I think she would get some fear because of my shouting. That is the reason” என்று கூறி சகுந்தலாவின் கூற்றை ஏற்க மறுத்தான்.


அவனால் அவளுக்கு இங்கிலிஷ் தெரியவில்லை என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.


அவன் மனம் முழுவதும் அவளுக்கு இங்கிலிஷ் பேச தெரிந்திருக்க வேண்டும் என்று உருப்போட்டு கொண்டிருந்தது.


சகுந்தலாவிற்கு தெரியும் எப்படியும் அவன் தன் பேச்சை ஏற்று கொள்ள மாட்டான் என்று, சரி என்ன தான் நடக்கும் என்று பார்ப்போம். அத்துடன் அந்த பேச்சினை முடித்து கொண்டவர்.... “k aswanth, go…wash your face and have your tea” என்று கூறினார்.


“k grandma” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவன் மனம் முழுவதும் “ஒரு வேல இங்கிலிஷ் தெரிலனா என்ன பண்றது என்று நினைத்தவனின், மறுமணம் இல்லல அப்படிலான் இருக்காது” என்று வாதிட்டது.


இரண்டு பக்கமும் திண்டாடி கொண்டிருந்தவன் வாய்விட்டு, “k let it be… I will confirm it tomorrow” என்று முடித்தான்.


அஸ்வந்த்திற்கு அன்று இரவு அவளை பார்த்த நிமிடங்களிலும், மறுநாள் என்ன நடக்குமோ என்ற யோசனையிலும் கடந்தது.


அங்கே ஹாஸ்டெலில் வைதேகியோ, "நாளைக்கு அவன் கண்ணில் மாட்டவே கூடாது" என்று முடிவெடுத்து தூங்கினாள்.




என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே



தொடரும்....
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 6


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்


மறுநாள் காலை அழகாக விடிந்தது....


அஸ்வந்த் அவளை பார்க்க போகும் சந்தோஷத்தில் வீட்டை இரண்டாக்கி விட்டு கல்லூரி பேருந்தில் கிளம்பினான்.



அங்கு ஹாஸ்டலில் வைதேகி, "இன்னிக்கு அவன் கண்ணுல மாட்டாம என்ன நீதான் கடவுளே காப்பாத்தணும்" என்று தன் இஷ்ட தெய்வம் அனைத்தையும் வேண்டிக்கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டாள்.



வைதேகி கல்லூரியில் நுழைந்ததில் இருந்து தன் கண்களை கூர்மையாய் ஆக்கி கொண்டு அவனை தேடினாள்.



பேருந்திலிருந்து உற்சாகமாக குதித்து இறங்கிய அஸ்வந்த் அவள் கண்ணிற்கு பட்டான்.



அய்யயோ இவன் போற வழிய பார்த்தா... நம்ம டிபார்ட்மென்டுக்கு போற வழி மாதிரி இருக்கே... வைதேகி ரூட்ட மாத்து என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு வேறு வழியாக சுற்றிக்கொண்டு தன்னுடைய டிபார்ட்மெண்டிற்கு சென்றாள்.



வைதேகியை வாசலிலேயே பிடித்து நிறுத்திய சுவேதா, “ஏன் டி உனக்காக இங்க ஒருத்தி டிபார்ட்மென்ட் முன்னாடி வெயிட் பண்ணிட்டு இருந்தா.... நீ என்னனா என்னைய கண்டுக்காம சுத்திகிட்டு வர.....” என்று முறைத்தாள்.



"சாரிடி சாரிடி... என் செல்லமில்ல வா உள்ள போய் பேசலாம்..." எங்கே தன்னை அவன் பார்த்து விடுவானோ என்று பயந்த வைதேகி சுவேதாவினை உள்ளே அழைத்தாள்.



ஆனால் சுவேதா, "No way நீ மொதல்ல சொல்லு அப்புறம் போலாம்... ஏன் நேரா வராம சுத்திகிட்டு வந்த?"



“இவ ஒருத்தி நேரங்காலம் தெரியாம” என்று நினைத்த வைதேகி, வாசலில் இருந்த சுவேதாவினை தள்ளிக்கொண்டு வகுப்பினில் நுழைந்தாள்.



தன்னுடைய இடத்தினில் உட்கார்ந்த வைதேகி "அப்பாடா மாட்டல" என்று நிம்மதி மூச்சு விட்டாள்.



அவள் கூறியதை வகுப்பிற்குள் வந்து கொண்டிருந்த சுவேதா கேட்டு விட்டாள்.



வைதேகியின் பக்கத்தில் சென்று, "யார்கிட்ட மாட்டல" என்று கேட்டாள்.



சுவேதா கேட்டவுடன் அதிர்ந்த வைதேகி அவளை பார்த்து திரு திருவென முழித்தாள்.



"உன்னுடைய முழியே சரியில்லையே... நேத்தி யார்கிட்டயாவது மாட்னியா" என்று அவளை சரியாக கணித்தாள்.



ஒரு நிமிடம் அவளிடம் சொல்லி விடலாமா என்று யோசித்த வைதேகி, இல்ல வேண்டாம் நம்மள ஓட்டுவா.... ஏதாவது சீரியஸா ஆச்சுன்னா சொல்லிக்கலாம்.



“ஹே ஒன்னும் இல்லடி... திரும்பவும் ஒருத்தங்கள இடிக்க போய்ட்டேன். அதான் அப்பாடா இடிக்கலன்னு சொன்னேன். வேற எதுவும் இல்ல.”



அவள் கூறியதை நம்பிய சுவேதா, “நீ இன்னும் திருந்தலையா... ஒழுங்கா பிரண்ட்ல பார்த்து நட” என்று திட்டிவிட்டு அவள் பக்கத்தில் அமர்ந்தாள்.



அம்மாடி இவனால எத்தனை பேர சமாளிக்க வேண்டியதா இருக்கு. அவன்கிட்ட மாட்றத்துக்கு இவங்களே பரவால்ல....



"அவன் வாய தொறந்தாலே இங்கிலீஷு... அவன் பேசுறது எனக்கு புரியல. நான் பேசுறது அவனுக்கு புரியல.... பத்து நிமிஷம் கூட இருக்காது அதுக்கே இந்த அக்கப்போரு...." என்று நினைத்து கொண்டே தலையை சிலுப்பினாள்.



"என்னடி ஏன் தலையை சிலுப்பிட்டு இருக்க"



"ஒன்னும் இல்ல சுவேதா லேசா தல வலிச்ச மாதிரி இருந்துச்சு அதான்... mam கிளாஸ்க்குள்ள வந்துட்டாங்க பாரு ஏந்திரி"



அனைவரும் எழுந்து “good morning mam”என்று கூறினர்.



“Yes sit down” என்று கூறிய ஆசிரியை அட்டெண்டன்ஸ் எடுக்க ஆரம்பித்தார்.



“அங்கே பேருந்திலிருந்து உற்சாகமாக இறங்கிய அஸ்வந்த், தன்னுடன் வந்த அஷோக்கினை பார்த்து, “hey ashok, I want to see one guy da… so I will join with you in class” என்று கூறி அங்கிருந்து நழுவ பார்த்தான்.



“Hey aswanth… I have no works in class and one more thing… first period is thermodynamics sir’s class da… it’s too boring. So I join with you. Come your friend is in which department?” என்று சொல்லிவிட்டு அவன் கூடவே நின்றான்.



“Oh no… now what to do? I don’t want to see her infront of ashok… god help me please...” என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டு அதே இடத்தில் நின்றான்.



அஸ்வந்த் நகராததை கண்ட அசோக், “hey aswanth... Let’s go. Why are you standing here? You want to meet your friend right. Come” என்று அவனை அழைத்து கொண்டு முன்னே நடந்தான்.



அசோக் போகும் வழியில், “your friend is in which department?” என்று கேட்டதற்கு அஸ்வந்த்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை.



அஸ்வந்த் நடக்கும் வழியிலே சென்று கொண்டிருந்த அசோக், தன் முன் தெரிந்த EEE டிபார்ட்மெண்ட்டினை பார்த்து, “are we going to EEE department? என்று கேட்டான்.



அவன் கேட்ட பிறகு தான் அஸ்வந்த், தன் கால்கள் EEE டிபார்ட்மெண்டை நோக்கி சென்று கொண்டிருந்ததை கண்டான்.



“What am I doing now…” என்று தன்னையே திட்டி கொண்டு, “I was mistakenly come to this route. No problem ashok. Come let’s go to our class. I will meet him one more day” என்று அவனை அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்தான்.



அஸ்வந்த்திற்கு வைதேகியை இப்பொழுது அசோக்கிற்கு அறிமுக படுத்துவதில் அவனுக்கு விருப்பம் இல்லை. அவன் மனதில் இருந்ததெல்லாம், அவளுடன் தான் முதலில் சகஜமாக பேச வேண்டும், அதன் பிறகு அசோக்கிடம் சொல்லலாம் என்றிருந்தான்.



“Hey, what’s up man?” அசோக்கிற்கு அஸ்வந்த் தன்னிடம் இருந்து எதையோ மறைக்கிறான் என்றே தோன்றியது.



“Nothing urgent da. Come” என்று அஸ்வந்த், அவனை கிட்டத்தட்ட இழுத்து கொண்டு தன் வகுப்பிற்கு சென்றான்.



அவனுடைய மனம் வைதேகியை காலையில் பார்க்க முடியாததால் சோர்வுற்றது. அவன் தனக்குள்ளேயே “ஈவினிங் எப்படியாவது அவ கிட்ட பேசிடனும்” என்று நினைத்து கொண்டே வகுப்பிற்குள் சென்றான்.



அசோக்கின் மனதிலோ, இவன் ஏதோ சரியில்லை. இவனோட பிஹேவியரே வித்யாசமா இருக்கே. அவனுடைய மனதில் ஒரு பழமொழி தோன்றியது, “கத்திரிக்கா முத்தினா கடைக்கு தான வந்தாகணும்”அப்போ பார்த்துக்கலாம்.



ஒவ்வொருத்தரும் தங்களது நினைவுகளில் மூழ்கி இருந்தனர்.



மதியத்திற்கான உணவு இடைவேளையும் வந்தது.



வைதேகியும், சுவேதாவும் மெஸ்ஸிற்கு சென்றனர். கை கழுவிவிட்டு வந்த சுவேதா வைதேகியிடம், “ஹே அங்க பாருடி உன் ஆளு நிக்கிறான்” என்று காட்டினாள்.



வைதேகிக்கு காலையில் இருந்த மனநிலையெல்லாம் மாறி “எங்க டி எங்க இருக்கான்” என்று ஆண்களுக்கான உணவு உண்ணும் பகுதியில் தேடினாள்.



“அங்க தான் இருக்கான் பாரு”.



அவள் காட்டிய திசையில் தேடி கொண்டே வந்த வைதேகியின் கண்களில் அஸ்வந்த் பட்டான்.



“ஐயோ இவனா, இவன் கண்ணுல மாட்டக்கூடாதே… சீக்கிரமா இங்க இருந்து போய்டணும்” என்று நினைத்து கொண்டிருந்தவள் சுவேதாவின் கைகளை பற்றி அழைப்பதற்குள்….



அங்கு அசோக்குடன் பேசிக்கொண்டே உணவு உண்டு கொண்டிருந்தவன் ஏதோ உள்ளுணர்வு உணர்த்த நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில்…. தன்னையே பார்த்து கொண்டிருந்த வைதேகி பட்டாள்.



காலையில் அவளை பார்க்க முடியாமல் வருத்த பட்டவனின் எதிரில் தன்னையே பார்த்து கொண்டிருந்த வைதேகியை கண்டவனின் மனதில் சாரலடித்தது. முகத்தில் புன்னகை மலர்ந்தது.



அவன் தன்னை பார்த்து சிரிப்பதை கண்ட வைதேகி, ஐயோ மாட்டிக்கிட்டோமே என்ற பதட்டத்தில் அப்படியே நின்றுவிட்டாள்.



சுவேதா வைதேகியிடம், “என்னடி பார்த்தியா” என்று கேட்டு கொண்டிருந்தாள்.



இன்னும் தன் மீதிருந்த பார்வையை எடுக்காத வைதேகியை கண்ட அஸ்வந்த், அவளை பார்த்து விரிந்த புன்னகையுடன் கண் சிமிட்டினான்.



அவனுடைய கண் சிமிட்டலில் தெளிந்தவள்… விறுவிறுவென்று சுவேதாவை அழைத்து கொண்டு பெண்களுக்கான உணவு பகுதியின் கடைசிக்கு போய் அமர்ந்து கொண்டாள்.



அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தவளுக்கு இதயம் பட பட வென்று வேக வேகமாக அடித்து கொண்டது.



அவளின் பதட்டத்தை எதுவும் அறியாத சுவேதா இயல்பாக அவளிடம் “என்னடி இன்னிக்கு உன் ஆள ஒரு வழியா பார்த்துட்டியா” என்றாள்.



எங்கே… அவளுக்கு அஸ்வந்த்தை பார்த்ததிலிருந்து இவன் கிட்ட மாட்டிகிட்டோமே என்ற எண்ணத்தில் இருந்தவள் சுற்றியிருந்த யாரையுமே அவள் பார்க்கவில்லை.



அதனால் சுவேதாவிடம் “இல்ல டி” என்று கூறினாள்.



“என்னது அப்போ நீ உன்னோட ஆள பார்க்கலயா… அப்போ வேற யாரை அவ்ளோ நேரமா பார்த்துட்டு இருந்த…” என்று வைதேகியிடம் கேட்டாள்.



வைதேகி தன் மனதினுள் “மத்தவங்க நம்மள நோட் பண்ற அளவுக்கா அவன பார்த்துட்டு இருந்தோம்...ஐயோ அவன் என்ன பத்தி என்ன நினைச்சானோ” என்று நினைத்து கொண்டவள், சுவேதாவிடம், “இல்லடி நீ என்கிட்ட காட்டினவன தான் தேடிட்டு இருந்தேன்”.



“அப்படியா… அப்போ தேடிட்டு இருந்தவ எதுக்கு என்னைய வேகமா இழுத்துட்டு வந்த…. நீ பார்த்துட்டு தான் கூட்டிட்டு வந்தேன்ல நினைச்சேன்..” என்று தன் அடுத்த கேள்வியினை கேட்டாள்.



வைதேகி அவளை கேள்விக்கு பொறந்தவள் என்று சொல்வதில் தப்பே இல்லை.



இவளுக்கு இப்போ என்ன பதில் சொல்வது என்று நினைத்தவள், “சீக்கிரமா சாப்பிடு டி… லேப்ல வேற 15 மினிட்ஸ் முன்னாடியே வந்துருங்கன்னு சொன்னாங்கள்ல”.என்று பேச்சை மாத்தினாள்.



“நீ காலையில இருந்தே சரியில்ல டி” என்று கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.



இருவரும் சாப்பிட்டு முடித்து மெஸ்ஸில் இருந்து கிளம்பி லேபிற்கு செல்லும் வழியில் நடந்தனர்.



மெஸ்ஸிற்கு வெளியிலேயே அவளுக்காக காத்து கொண்டிருந்த அஸ்வந்த், அவர்கள் இருவரும் வெளியில் வந்தவுடன் அவர்களை பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தான்.



மெஸ்ஸின் வெளியிலேயே அவனை பார்த்து விட்ட வைதேகி, "அய்யயோ" என்று மனதிற்குள் அலறினாள்.



“இன்னிக்கு நம்மள ஒரு வழிபன்னாம விடமாட்டான் போலயே... ஏன் என்ன பாலோ பண்றான்னு கேட்டாலும் இங்கிலீஷிலே தஸ்ஸு புஸ்ஸுன்னு ஏதோ உலறுவான்... நமக்கு இது தேவையா” என்று அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே முன்னே நடந்தாள்.



வைதேகி திரும்பி திரும்பி பார்த்து கொண்டே வருவதை பார்த்த சுவேதா, "யார பார்க்குறா இவ" என்று திரும்பி பார்த்தாள்.



அஸ்வந்த்தினை பார்த்த சுவேதா, "இவன் ‘handsome guy’ இல்ல" என்று அதே இடத்தில் நின்றுவிட்டாள்.



வைதேகியை பார்த்து கூற வந்தவள்,



அஸ்வந்த்தையே பார்த்து கொண்டு வந்த வைதேகி சுவேதா நின்றதை கவனிக்காமல் அவள் மீதே மோதினாள்.



கொஞ்ச தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த அஸ்வந்த்திற்கு வைதேகி இன்னொரு பெண் மீது மோதவும்... அவனை மீறி சிரித்து விட்டான்.



அவன் சிரித்ததில் கோபம் கொண்ட வைதேகி, “ஏன் டி சொல்லாம கொள்ளாம சடனா இப்படி நின்ன”என்று அஸ்வத்தின் மேலுள்ள கோபத்தில் சுவேதாவை பார்த்து திட்ட போனாள்.



வைதேகி திட்டுவதற்குள்ளே முந்தி கொண்ட சுவேதா, “ஏன் டி monkey… நான் காமிக்கிறத்துக்கு முன்னாடி நீயே கண்டு பிடிச்சிட்டியா… அப்புறம் ஏன் டி மதியம் தெரியாதுன்னு சொன்ன”என்று அவளை பொரிந்து தள்ளினாள்.



நாம இவளை திட்ட வந்தா, இவ நம்மள திற்றாளே என்று நினைத்து கொண்ட வைதேகி... “ஹே என்னடி சொல்ற… கொஞ்சம் புரியற மாதிரி சொல்லேன்”



“உன் ஆள பத்தி தான் டி சொல்றேன்”



“அவனா எங்க இருக்கான்” என்று சுற்றி முற்றி தேடினாள். "எங்கடி யாரையுமே காணும்" என்று வேறு கேட்டு வைத்தாள்.



"இவ என்ன தெரிந்தும் தெரியாததை போல் நடிக்கிறாளா" என்று கோபமுற்ற சுவேதா, “ஏன் டி உன் கண்ணுமுன்னாடி தான இருக்கான். நீ எங்க தேடற” என்று பல்லை கடித்தாள்.



“ஹே என்ன டி சொல்ற சத்தியமா அவன இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்ல…”



"என்னது இவன் தான் அவன் என்று தெரியாமலே பார்த்து கொண்டு வருகிறாளா" என்று நினைத்த சுவேதா…



“ஹே இப்ப நீ ஒருத்தன திரும்பி திரும்பி பார்த்துட்டே வந்தியே அவன் தான் ‘handsome guy’ நீ கூட இடிக்க பார்த்தியே அவன் தான் இது" என்று வைதேகிக்கு சுவேதா தெளிவாக விளக்கினாள்.



என்னது இவனா அது...என்று வாயை பிளந்தாள்.



அவளால் சுத்தமாக சுவேதா சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை.



"அவனை நான் இடிக்க போனது ஒரு பக்கம் இருக்கட்டும், அப்பகூட சுவேதா அவனுக்கு தான் இடிக்க வந்தது தெரியாதுன்ல சொன்னா. ஆனால் இவன் ஏன் நேற்றிலிருந்து என் பின்னாடியே சுத்துறான்" என்று வாய்விட்டே புலம்பினாள்.



"ஆலுவேர பார்க்கறதுக்கு ஆறடி உயரத்திற்கு சிவந்த நிறத்துல பணக்கார தோரணையோட நல்லா ஜம்முனு வேற இருக்கான். நம்ம அப்படி ஒன்னும் பார்குற மாதிரி சூப்பராலான் இல்லையே" அப்பறம் எதுக்கு வரான்.



வைதேகி தன்னை அதிர்ந்து பார்த்ததும் குழப்ப முற்ற அஸ்வந்த்..., அதன் பிறகு அவளுடைய பார்வை தன்னையே அளவெடுப்பதை கண்டு அவன் மனதில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.



தன்னவள் தன்னை கவனிக்கிறாள்.



என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே



தொடரும்...
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,

திங்கள் அன்று தர முடியாததற்க்காக அதற்கும் சேர்த்து இன்று தந்திருக்கிறேன். படித்துவிட்டு கருத்துக்களை சொல்லுங்கள்.

:)



அத்தியாயம் 7


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

வைதேகி தன்னை மறந்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவளுடைய மனம் முழுவதும் ஏன் இவன் நம்ம பின்னாடி வரான் என்று ஓடி கொண்டிருந்தது.


“ஹே என்னதான் டி நடக்குது இங்க, அவன் என்னனா உன்னையே பார்த்துட்டு இருக்கான்... நீயும் அவனையே பார்த்துட்டு இருக்க” என்று சுவேதா கேட்டதற்கு வைதேகியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.


அவள் ஒரு மோனநிலையில் இருந்ததை போல் அவனையே பார்த்து கொண்டு நின்றிருந்தாள்.


இதுவரை எந்த ஒரு பெண் தன்னை பார்த்தாலும் எரிச்சல் படும் அஸ்வந்த், வைதேகியின் பார்வையில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான்.


நேற்று மாலை அவன் பேசியபோது ஓடிய வைதேகியை கண்டு அவன் மனம் சற்று சோர்ந்திருந்தது.


ஆனால் இன்று தன்னவள் சுற்றுப்புறம் மறந்து தன்னையே கவனிப்பது, அவனுக்கு கால்கள் தரையில் படாமல் பறப்பதை போன்ற உணர்வினை கொடுத்து கொண்டிருப்பதாக உணர்ந்தான்.


அவனுடைய மனம் அப்பொழுதே அவளிடம் பேச வேண்டும் என்று பரபரத்தது.
அவன் அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.



தங்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த அஸ்வந்த்தினை கண்ட சுவேதா, "வைதேகி... அவன் நம்மகிட்ட தான் வரான் பாரு..." என்று சொல்லிக்கொண்டே அவளை பிடித்து உலுக்கினாள்.


"என்னடி"


“போச்சு போ... நீ இங்க தான் இருக்கியா... இல்ல வேற எங்கயாவது போய்ட்டியா. நீ அவனை பார்த்து விட்ட ரொமான்ஸ்லுக்குல அவன் உன்ன தேடி நடந்து வரான் பாரு. நீ என்னடான்னா எதுவும் பண்ணாததை போல கூலா என்னடின்னு கேட்குற”.


"அய்யயோ" என்று தன் வாயை பொத்தி கொண்டு சுவேதாவை பார்த்து கத்தினாள்.
"என்னடி அய்யயோ... இவ்ளோ நேரம் நீ பண்ணதுக்கு ஏதாவது பேசுவான் பதில் சொல்லிட்டு வா நான் லேபுக்கு போறேன்”.



"என்னடி இப்படி என்னைய மட்டும் தனியா மாட்டிவிட்டுட்டு போற".


“இவ்ளோ நேரம் இங்க ஒருத்தி நின்னதயே தெரியாம அவனை சைட் அடிச்சிட்டு இருந்தல்ல, நீயே பாத்துக்கோ... நான் போறேன்" என்று உதட்டை சுளித்தாள்.


“ஐயோ கடவுளே… நான் அவனை சைட்லான் அடிக்கல... நான் உன்கிட்ட லேப் போனதும் எல்லாத்தையும் சொல்றேன். தயவு செஞ்சு காப்பாத்து டி".


“ஹ்ம்ம் இது நல்ல பிள்ளைக்கு அழகு. சரி வா நம்ம லேபுக்கு போலாம். ஏதாவது பேசினான்னா பார்த்துக்கலாம் என்று வைதேகியை அழைத்து கொண்டு சுவேதா கிளம்பினாள்.


இவள் ஏனென்று புரியாத படபடப்புடன் சுவேதாவை தொடர்ந்தாள்.


அவர்கள் நடக்க ஆரம்பித்தவுடன் தன் நடையின் வேகத்தினை கூட்டினான் அஸ்வந்த்... அப்பொழுது எங்கிருந்தோ வந்த அசோக், அஸ்வந்த்தின் கையை பிடித்து தன்னுடன் அழைத்து சென்றான்.


“Hey hey what are you doing ashok… leave my hand man. I want to go that way” என்று அசோக்கின் கையில் இருந்து தன் கையை உறுவிக் கொண்டிருந்தான்.


அஸ்வத்தின் கையை இருக்க பற்றியவன், “please be silence for few minutes man...one important person came to see you”.


அஸ்வந்த் திரும்பி அவள் சென்ற திசையினை பார்த்தான்... அவள் லேபிற்குள் நுழைந்திருந்தாள்.


நுழைவதற்கு முன் அவன் தன்னை தொடர்ந்து வருகிறானா என்று பார்த்துவிட்டு இல்லை என்றதும் நிம்மதியுடன் நுழைந்தாள்.


வைதேகி தன்னை பார்த்ததை கண்டு விட்ட அஸ்வத்தின் மனதில், “இவளை விடவா அசோக் சொல்றவங்க நமக்கு முக்கியமா இருக்க போறாங்க” என்று நினைத்து தன் நிலையை எண்ணி சிரித்தான்.


“Why are you smiling man...? I’m not joking”


அப்படி இவன் யாரைத்தான் காட்ட போறான்னு நானும் பார்க்கிறேன் என்று எண்ணிக்கொண்டு அவனுடன் சென்றான்.


உண்மையிலேயே அவனுக்கு ஒரு பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது.


“Hey bubbly (sopna)… what a surprise? When did you come from America? Why you didn’t inform me? Is aunty and uncle also come with you?” என்று அவள் வந்த சந்தோஷத்தில் அஸ்வந்த், சொப்னாவை பேசவிடாமல் தானே பேசி கொண்டு போனான்.


“Hey asu, slow slow... first take some breathe da” என்று சொப்னா அவனை தன் கைகளால் அஸ்வந்த்தின் தோள்களில் அடித்து சிரித்தாள்.


அவனும் அவளுடன் சேர்ந்து சிரித்து விட்டு,”wait here sopna, let me take my bag first. We will go home” என்று சொப்னா விடம் கூறிவிட்டு, அசோக்கின் புறம் திரும்பி, “come let’s go”.


அவர்கள் இருவரும் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த வழியில், அஸ்வந்த் அவனிடம், “thanks and sorry da”


“’thanks’ is fine but ‘sorry’ for what”


“Simply”


“Oh ho… “அசோக்கிற்கு அஸ்வந்த் தன்னை எதற்காகவோ திட்டி இருக்கிறான், அதான் சாரி சொல்றான் என்று நினைத்துக்கொண்டு வெளியில் “its k” என்று மட்டும் சொன்னான்.
அஸ்வந்த் தன் பாகினை எடுத்து கொண்டு சொப்னாவிடம் சென்று, “are you come with our driver? Where did you park the car? என்று கேட்டான்.



“No asu, I drive by myself”


“What… who allowed you to take car?” என்று கோபமாக கேட்டான்.


ஏனெனில் சொப்னா சென்னைக்கு புதிது... அதுவும் இல்லாமல் அமெரிக்காவில் டிரைவ் செய்பவள், சென்னை ட்ராபிக்கை எப்படி சமாளித்தாள் என்ற கோபம் அவனுக்கு.


“Why should I want to take anyone’s permission? I know to drive. So I got the key from driver and came here to see you…that’s it” என்று தோள்களை குலுக்கினாள்.


அவள் பதிலில் கோபம் கொண்ட அஸ்வந்த், “hereafter don’t take the car without my permission”


“Hey what is this asu, this is not fair… I know driving na, then what’s the problem?”


“No sopna, Chennai traffic is different from America… so no more words”.


சொப்னா முகத்தை தூக்கி வைத்து கொண்டு அஸ்வந்துடன் காரை நிறுத்தி வைத்த இடத்திற்கு சென்றாள்.


“Give me the key”


“Hey what asu… let me drive?”


அஸ்வந்த் அவளை பார்த்து முறைத்த முறைப்பில் அவன் கைகளில் கீயை கொடுத்து விட்டாள்.


காரில் அமர்ந்த இருவரும் அமைதியாகவே வீட்டை அடைந்தனர்.


அஸ்வந்த்தின் வீட்டின் நடு ஹாலில் இருந்த சோபாவில் கணேசன், சாவித்திரி மற்றும் சகுந்தலாவும் பேசி கொண்டிருந்தனர்.


"உடம்பு எப்படிமா இருக்கு"


"ஹ்ம்ம் நல்லா இருக்கு சாவித்ரி, என் பேரன் என்கூட இருக்கும் போது எனக்கு என்ன ஆக போகுது, “I’m completely fine”.


“என்னமா திடிர்னு வந்துருக்கீங்க, என்ன விஷயம்...”


அது இவரோட பிரெண்ட் சுதாகர் வீட்ல சொப்னாவ கல்யாணம் பண்ணிக்க விருப்பம்னு கேட்டார்களாம். நான் அவ படிச்சிட்டு இருக்கா படிப்பு முடிஞ்சதும் பேசிக்கலாம்னு சொன்னேன், அவங்க என்னடான்னா கல்யாணம் பண்ணிட்டு படிக்கட்டும்னு சொல்ராங்க. இவர் வேற நல்ல குடும்பம் ஏன் யோசிச்சிகிட்டுனு சொல்லறாரு”.


"எனக்கு என்னனா அஸ்வந்த்துக்கு நம்ம சொப்னாவ கல்யாணம் பண்ணலான்னு ஒரு எண்ணம்".


“சொப்னாக்கும் ஒன் மந்த் லீவு விட்டிருந்தாங்க, அதான் அப்படியே இங்க தங்கிட்டு இதை பத்தி பேசலாம்னு வந்தோம்”.


“சொப்னாக்கு இது தெரியுமா”


“தெரியாதுமா”


“k அஸ்வந்த்கிட்ட இதை பத்தி பேசலாம் அப்புறம் என்ன பண்றதுனு decide பண்ணிக்கலாம்”.


ஆனால் சகுந்தலாவின் மனதில் நேற்று அஸ்வந்த் ஒரு பெண்ணை பற்றி பேசியது ஓடிக்கொண்டிருந்தது.


“சரி பார்ப்போம்” என்று நினைத்து கொண்டு அவர்களுடன் பேசி கொண்டிருந்தார்.


அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. அதில் இருந்து இறங்கிய சொப்னா கார் கதவை அறைந்து சாத்திவிட்டு வீட்டிற்குள் கோபமாக நுழைந்தாள்.


போகும்போது நல்லாதான இருந்தா, அதுக்குள்ள என்ன ஆச்சு இவளுக்கு என்று அனைவரும் அவளையே பார்த்தனர்.


அவளுக்கு பின்னே சிரித்து கொண்டே வந்த அஸ்வந்த், “hi aunty and uncle… how r u?” என்று நலம் விசாரித்து கொண்டே அவர்களின் அருகில் அமர்ந்தான்.


சொப்னாவோ அவனுக்கு எதிரில் இருந்த சோபாவில் ‘தொப்’ என்று அமர்ந்தாள்.


சாவித்ரி அவனது கன்னத்தை வருடி கொண்டே, “fine da aswa, you?”


கணேசனும் சொப்னாவை பார்த்து சிரித்து கொண்டே “we all are fine aswanth. What about you? How is your college life?” என்று கேட்டார்.


அவர் தன்னுடைய கல்லூரியை பற்றி கேட்டதும் அவன் மனம் முழுவதும் வைதேகியே தோன்றினாள். அவன் குரலில் மிகுந்த புத்துணர்ச்சியுடன், fine uncle and my college life is too too good.”


சொப்னா தொண்டையை "ம்க்கும்" என்று செருமினாள். தான் அங்கு இருப்பதற்கு அடையாளமாக.


அஸ்வந்த் அவளை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே, “uncle, let’s all go to beach today” என்று கூறினான்.


‘பீச்’ என்ற வார்த்தையை கேட்ட சொப்னா தன்னுடைய சோபாவில் இருந்து எழுந்து வந்து அவனுடைய சோபாவில் அஸ்வந்த்தின் மிக அருகில் உட்கார்ந்து கொண்டு அவன் முகத்தை தன் கைகளால் தூக்கி, “is it…. we are going beach now?” என்று கேட்டாள்.


உன்னோட கோபத்தை பத்தி எனக்கா தெரியாது என்று நினைத்து கொண்ட அஸ்வந்த், “hmm” என்று மேலும் கீழும் தலையை ஆட்டிக்கொண்டே அவளை பார்த்து சிரித்தான்.


“Oh that’s good... I get ready” என்று துள்ளி குதித்து கொண்டு மாடி படிகளில் ஏறினாள்.


அவள் போவதை பார்த்து சிரித்து கொண்டே சகுந்தலா, “we are not coming aswanth, u people just go and enjoy”


அஸ்வந்த் தலையை ஆட்டி விட்டு தன்னுடைய அறைக்கு பிரஷப் (freshup) ஆக சென்றான்.


சொப்னா டீசர்ட் ஜீன்ஸ் அணிந்து கொண்டு கீழே இறங்கி வந்தாள். அவளுடைய முகம் எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமலே அழகாக இருந்தது.


“Why you people are not get ready…. Go quick” என்று அவர்களை விரட்டினாள்.


“We will go one more day…. You go with aswanth and take care” என்று சகுந்தலா கூறினார்.


சொப்னா தன்னுடைய பேரண்ட்ஸை (parents) பார்த்தாள். அவர்களும் தலையை ஆட்டி அவர் கூறியதை ஆமோதித்தனர்.


அஸ்வந்த் அப்பொழுது கீழே இறங்கி வந்தான். அவன் கைகளை பிடித்து கொண்டு, “k bye” என்று சொல்லிவிட்டு காரினை நோக்கி சென்றாள்.


இருவரும் காரில் ஏறி மெரினா பீச்சில் இறங்கினர்.


கடலை பார்க்கும் வரை அமைதியாக அஸ்வந்துடன் நடந்து வந்து கொண்டிருந்த சொப்னா, கடல் கண்ணில் பட்டவுடன், அஸ்வந்த்தினை இழுத்து கொண்டு ஓடினாள்.


“Hey slow slow” என்று அவன் கூறினாலும் அவள் இழுத்த இழுப்பிற்கு ஏற்றவாறு சிரித்து கொண்டே அவளுடன் ஓடினான்.


அவள் கடல் நீரில் கால்களை நனைத்தவுடன் தான் அவனை பற்றியிருந்த கைகளை விட்டாள்.


“Hey asu… water is so chill da” என்று கூறி அவன் மீது தண்ணீரை இறைத்து விளையாடினாள்.


“Hey stop it sopna” என்று கூறிய அவனும் அவளை விட அதிக நீரை எடுத்து அவள் மீது தெளித்தான்.


இருவரும் ஒரு வழியாக தண்ணீரில் கூத்தடித்து விட்டு வெளியில் வந்தனர்.


“Hey asu… fish da. Come let’s eat”


அவன் அவளை மீன் விற்கும் கடைக்கு அழைத்து சென்றான்.


“Which fish type you want”


அவள் அங்கிருந்த ஒரு மீனை கை காட்டினாள். அதனை இருவரும் உண்டு விட்டு வீட்டிற்கு புறப்பட்டனர்.


வீட்டிற்குள் நுழைந்தவுடன், “Today I’m very happy da asu. Thanks” என்று அவனை ஹக் பண்ணினாள்.


“Hey what is this bubbly? I’m your asu da... Go change your dress first. Let’s have our dinner”.


சொப்னா சிறிது பூசினார் போன்ற உடல் வாகினை கொண்டிருந்ததால் அவன் சிறு வயதிலிருந்தே அவளை “bubbly” என்று தான் அழைப்பான்.


அனைவரும் உணவு உண்டுவிட்டு அவரவர் அறைக்கு உறங்க சென்றனர்.


தன்னுடைய அறையில் படுத்த அஸ்வந்த்திற்கு சுத்தமாக தூக்கம் வரவில்லை, கண்ணை மூடினாள் வைதேகியே வந்து நின்றாள்.


அவளை பார்த்ததில் இருந்து இன்று நடந்தது வரை மனதினில் ஒட்டி கொண்டிருந்தவன், தன்னை மறந்து உறங்கினான்.


மறுநாள் காலை... அஸ்வந்த் கல்லூரிக்கு ரெடி ஆகி உணவுண்ண டைனிங் ஹாலிற்கு வந்தான். அங்கு ஏற்கனவே சொப்னா அமர்ந்து காபி குடித்து கொண்டிருந்தாள்.


அஸ்வந்த் காலேஜிற்கு தயாராகி வருவதை பார்த்த சொப்னா எழுந்து,”hey asu, are you going to college? என்று ஆச்சர்யமாக கேட்டாள்.


“Yes ofcourse, why are you having this doubt?


“No da… Today is Friday na. Saturday and Sunday are already holidays for you. So take leave today, we will go for shopping...” என்று கூலாக கூறினாள்.


என்னது லீவா... இன்னைக்கு விட்டா ஸ்மைலிய திரும்ப மண்டே தான் பார்க்க முடியும்னு தவிச்சிட்டு இருக்கேன். இவ என்னடான்னா கூலா இரண்டு நாள் லீவோட சேர்த்து இன்னைக்கும் லீவ எடுங்கறா., நேத்தியே ஸ்மைலீட்ட பேசலாமுன்னு ட்ரை பண்ணேன், இவ வந்துருக்கான்னு தான் அவளக்கூட பார்க்காம வந்துட்டேன். இன்னைக்கும் லீவா சான்சே இல்ல, என்று மனதினுள் அவளை அற்சித்தவன் வெளியில், “bubbly... Today I have one important class da. I can’t able to avoid it. So we will go at evening time…. k”.


“Oh what asu, don’t go. I will get bored in home”.


உனக்கு போர் அடிக்காம இருக்க நான் வேணுமா என்று நினைத்தவன், “please bubbly, I must go today. I will be back at sharp 5 o clock”.


“What 5 o clock? No way?”


“Try to understand me bubbly. Coming Sunday, I will spend my whole day with you… k”.


“No no” என்று அவன் கூறுவதற்கெல்லாம் மறுத்து கொண்டே வந்தாள்.


அவனுடைய பொறுமை எல்லையை கடந்து கொண்டு இருந்தது. பஸ்ஸிற்கு வேறு லேட்டாகி கொண்டிருந்தது.


அவள் எதற்கும் ஒத்து வருவதாய் தெரியவில்லை.


“Hey stop it shopna. I’m not going to take leave today. That’s it” என்று சொல்லிவிட்டு பாதி சாப்பாட்டில் கை கழுவிவிட்டு பாக்கை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான்.


அவன் சொன்னதில் கோபமுற்ற சொப்னா குடித்து கொண்டிருந்த காபியை அப்படியே வைத்து விட்டு தன் ரூமிற்கு சென்று விட்டாள்.


பஸ்ஸில் போய் கொண்டிருந்த அஸ்வந்த்திற்கு, "ஏன்தான் இவ இப்படி சின்ன புள்ள மாதிரி அடம் புடிக்கிறாளோ.... ச்ச கடைசியா கோபமா வேற பேசிட்டேன். என்ன பன்றாளோ தெரியல” என்று அவன் பாட்டிற்கு யோசித்துக்கொண்டே வந்தான். அவனுக்கு காலையிலிருந்த உற்சாகம் சுத்தமாக வடிந்திருந்தது. .


ஒரு மாதிரியான மூட் அப்செட்டோடே பேருந்தில் இருந்து இறங்கி நடந்தான்.


அன்று கிளம்புவதற்கு லேட்டாகி விட்டதால், அய்யயோ லேட்டாச்சே இந்த மேம் வேற அஞ்சு நிமிஷம் லேட்டா போனாலும் வெளிய நிறுத்திடுமே என்று வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் வைதேகி.


சிந்தனையோடு நடந்து வந்து கொண்டிருந்த அஸ்வந்த் கண்ணில் வைதேகி பட்டாள்.


“Hey smilee na… Today I’m not going to miss her” அவளை நோக்கி நடந்தான்.


வைதேகி எதிரில் வருபவர்கள் யாரையும் கவனிக்காமல் நடந்து வந்து கொண்டிருந்தாள்.


“Today I have to speak” என்று அவனும் அவளுக்கு நேர் எதிராக நடந்து வந்தான்.


வைதேகி வேகமாக நடந்து வருவது, அஸ்வந்த்திற்கு சிறிது நேரம் கழித்து தான் புரிந்தது.


அந்த குறுகிய நேரத்திற்குள் அவனால் நகர முடியவில்லை, தன்னை மோத வந்தவளை இரு கைகளாலும் அவளது தோள்களை பிடித்து நிறுத்தினான்.


தன்னை ஒருவர் பிடித்து நிறுத்தவும், “sorry sorry” என்று பதட்டத்துடன் யாரது என்று நிமிர்ந்து பார்த்தவள், "நீங்களா" என்று அதிர்ந்து இரண்டடி அவனை விட்டு பின்னே நகர்ந்தாள்.


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே


தொடரும்................
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்


அவள் அதிர்ந்து பின்னே நகர்வதை கண்ட அஸ்வந்த்,” hey it’s k da… nothing happened na… “


வைதேகி தனக்குள்ளே "சுவேதா எத்தனை தடவ சொன்னா...நேரா பார்த்து நடடினு... என் மூளையில ஏறினா தான..." என்று தன்னையே திட்டி கொண்டு அவனிடம் “சாரிங்க கிளாஸ்க்கு சீக்கிரமா போகணும்ன்ற அவசரத்துல உங்கள பார்க்கல..சாரி" என்று அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.



அஸ்வந்த்திற்கு வைதேகி கூறியதில் இருந்து ‘class and sorry” என்ற இரண்டு வார்த்தைய தவிர வேற ஒன்னும் புரிய வில்லை.



அந்த இரண்டு வார்த்தைகளை வைத்து அவனே ஒரு காரணத்தை புரிந்து கொண்டு,”hey smilee, no problem da… it’s me only na. But next time… you have to be careful”.



இவன் ஏன் என்ன பார்த்து ‘ஸ்மைலீனு’ கூப்பிடுறான், அன்னைக்கு கூட இதே பேர் சொல்லித்தானே கூப்பிட்டான் என்று அவன் கூறியதில் இருந்து தனக்கு புரிந்தவற்றை மட்டும் எடுத்து அவனையே புரியாத பார்வை பார்த்தாள்.



“What happened da… don’t you remember be” அவனுக்கு இந்த வார்த்தைகளை அவளிடம் கேட்கும் பொழுது சொல்ல முடியாத ஒரு வழி அவன் மனதில் ஏற்பட்டது.



வைதேகி தலையை ஆட்டி கொண்டே “தெரியும்” என்று கூறினாள். ஏனோ அவளுக்கு அவனை தெரியாது என்று கூற விருப்பம் இல்லை.



அவனுக்கு அவள் சொன்னது புரியவில்லை.



அவன் அவளை இறைஞ்சும் பார்வை பார்த்து கொண்டே, “English please” என்று கேட்டான்.



அவள் அதற்கு எனக்கு அவ்வளவா இங்கிலிஷ் பேசவராது என்று கூறினாள்.



அவனுக்கு இதுவும் சுத்தமாக புரியவில்லை,



அவனே ஒரு யுகத்துடன் “don’t you know english” என்று பொறுமையாக கேட்டான்.



அவளுக்கு தெரியாது என்று சொன்னால் என்ன செய்வது என்று அவனுடைய இதயம் வேகமாக அடித்து கொண்டது. அவனுடைய மனம் கொஞ்சமாவது தெரிஞ்சா கூட போதுமே என்று கடவுளிடம் வேண்டியது.



“Hmm” என்று கூறினாள்.



அவனுடைய மனம் ஊமையாக அழுதது, இருந்தும் ஒரு சின்ன நப்பாசையுடன், “Atleast little” என்று கேட்டான்.



அதற்கும் அவள் “hmm” என்றே கூறினாள். அவளுக்கு தான் ஏன் இவனிடம் இதையெல்லாம் விளக்க வேண்டும் என்று தோன்றியது. அவளிடம் பேச தவிக்கும் அவனுடைய பார்வை அவளை அந்த இடத்தை விட்டு நகராமல் கட்டிபோட்டதாக அவள் உணர்ந்தாள்.



ஐயோ இவ என்னடா எல்லாத்துக்கும் ஒரே பதிலே சொல்றா என்று புலம்பியவன், “what smilee ‘know or don’t know’ “என்று பாவமாக கேட்டான். அவன் கேட்டவிதத்தில் அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அவள் முகத்தில் மெலிதான ஒரு புன்னகை கீற்று விழுந்தது.



அவளையே பார்த்து கொண்டிருந்தவன், அவளுடைய சிரிப்பில் புருவத்தை உயர்த்தினான்.



அவள் ஒன்றுமில்லை என்பதாக தலையை ஆட்டி விட்டு, "கிளாஸ்க்கு போகணும் லேட்டா ஆகிடுச்சு” என்று கூறினாள்.



அவன் தனக்கு புரிந்ததை வைத்து அவளிடம், “do you want to go to class” என்று நிறுத்தி நிதானமாக கேட்டான்.



“hmm” என்று தலையை ஆட்டினாள்.



அவன் அவளை பார்த்து சிரித்து கொண்டே, “before that… only one question please” அவனுக்கு அவளுடன் பேச மற்றும் கேட்க எவ்வளவோ விஷயம் இருந்தது. ஆனால் தான் பேசினாலும் அவளுக்கு புரியுமா என்று தான் சந்தேகமாக இருந்தது. ஆனால் இதை மட்டும் அவன் மனம் கேக்க விரும்பியது.



“Do you remember me right?” என்று ஒரு எதிர் பார்ப்புடன் அவளை பார்த்து கேட்டான்.



அவளுடைய மனம் “உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு” என்று அவளிடம் கூறியது. அவள் மனம் போகும் போக்கு அவளுக்கே சுத்தமாக புரியவில்லை.



நாம என்ன நினைக்கிறோம் என்று அதிர்ந்தவள், அவன் தன் பதிலை எதிர் பார்த்து காத்திருப்பதை கண்டு, “yes”என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.



ஒரு நிமிடம் ஆனாலும் அவள் பார்வை மாறியதை கண்ட அஸ்வந்த்தின் மனதில் சாரலடித்தது.



அவனுடைய மனம் “my smilee” என்று கூறிக்கொண்டது.



நேராக வகுப்பிற்கு சென்ற அஸ்வந்த், அசோக்கிடம் சென்று...”help me da” என்று மொட்டையாக கூறினான்.



“Dei what help… tell me clearly” என்று கூறிக்கொண்டே அவன் புறம் நன்றாக திரும்பி உட்கார்ந்தான்.



அசோக்கிடம் அனைத்தையும் விளங்கியவன், கடைசியாக, “it’s really hard for me to understand her tamil. I’m not able to understand a single word……….“என்று கூறிக்கொண்டே வந்தவன் அசோக் “haha…ha..ha..” என்று சிரிக்க ஆரம்பிக்கவும் தன் பேச்சை நிறுத்திவிட்டு அவனை “what” என்று கேட்டான்.



அசோக் இவனை கண்டு கொண்டால் தானே, அவனால் சுத்தமாக சிரிப்பை கண்ட்ரோல் பண்ணவே முடியவில்லை. அவன் தான் அமர்ந்திருந்த பெஞ்சில் உருண்டு பிரண்டு வயிற்றை பிடித்து கொண்டு சிரித்து கொண்டிருந்தான்.



அந்த பீரியடிற்கான ஸ்டாப் லீவாதலால் யாரும் வரவில்லை.



அசோக் சிரிப்பதை பார்த்து, அவன் வகுப்பில் இருந்த மற்ற நண்பர்கள் அவனிடம் என்ன என்று கேட்டதற்கு, அவன் தன் வயிற்றை பிடித்து கொண்டே இரு இரு என்று கையால் சைகை செய்தான்.



அசோக் செய்யும் அட்டகாசத்தை தாங்க முடியாத அஸ்வந்த் அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்தான்.



“hey why da” என்று முதுகை தேய்த்து கொண்டே கேட்டான். அவனால் அப்பொழுதும் சிரிப்பை அடக்க முடியவில்லை.



அவன் அஸ்வத்தின் முகத்தை பார்த்தவுடன் திரும்பவும் சிரிக்க ஆரம்பித்தான்.



“Tell me first then you laugh” என்று அவனை பார்த்து பற்களை நறநற வென்று கடித்தான்.



அசோக் சிரித்து கொண்டே, “till now you are avoiding the peoples who are not speaking English. But the girl you love, she don’t know English na. So I can’t able to control myself. Sorry da. Now tell me. What you are going to do? What’s the plan?”



“I also don’t know. What to do?”



“Hey one simple way is there da”



“What way?”



“Learn tamil. Problem solved”



என்னது தமிழ் கத்துக்கணுமா என்று நினைத்தவனின் முகம் இஞ்சி தின்ன குரங்கை போல் ஆனது.



அவனுடைய முகம் போன போக்கை பார்த்து கொண்டிருந்த அசோக், முன்பை விட பலமாக சிரிக்க ஆரம்பித்தான்.



“Hey stop laughing ashok. Am I look like a joker? You have to be in my situation… then only you come to know...How sad I am?”



அவன் எவ்வளவு கவலை படுகிறான் என்பதை புரிந்து கொண்ட அசோக், “hey I’m very sorry da. I’m seriously talking… learn tamil da aswanth…. Then every problem will be solved… you can understand what she is talking and can communicate also”.



“No way da… oh god… learning tamil is such a typical task for me. It’s not possible… so I’m not going to try this stupid idea”.



“Instead of learning tamil, I will teach her english”.



“You forgot one thing aswanth…. Atleast she knows little english, but your side…you are completely zero in tamil”.



“So atleast, you have to learn some basics in tamil. That’s it. If you want, you can learn. It’s your wish” இதற்கு மேல் நீதான் முடிவெடுக்கணும் என்று கூறிவிட்டு தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல் அசோக் திரும்பி மற்றவர்களிடம் பேச ஆரம்பித்து விட்டான்.



அவன் இதற்கு முன்னாடி தமிழ் படிக்க ட்ரை பண்ணியதே இல்லை என்றெல்லாம் கூற முடியாது.



சகுந்தலாவின் வற்புறுத்தலால் அவன் ஒருமுறை தமிழ் படிக்க முயற்சி செய்தான். அவன் கைகளில் இருந்த ‘learn tamil through english’ என்ற புக்கினை ஐந்து நிமிடம் கூட திருப்பி பார்த்திருக்க மாட்டான், “grandma” என்று அழைத்தவன்,”this book is really tough. I’m not getting anything… is it really needed to learn or what? You know english and company people also knows. Then why I want to learn” என்று அந்த புக்கினை ஒரு மூலையில் தூக்கி போட்டு விட்டான். அதன் பிறகு அவன் தமிழ் படிக்க சுத்தமாக முயற்சி பண்ணவே இல்லை.



இப்பொழுது அந்த புக்கினை எடுத்து திரும்பவும் படிக்கணுமா என்று நினைக்கவே அவனுக்கு மலைப்பாக இருந்தது.



அவன் மனதிற்குள்ளே பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்தவன், கடைசியாக,”No aswanth... You can’t. So teach her english. This is best” என்று முடிவெடுத்தவனாய் அதன் பிறகு வந்த வகுப்பில் கவனம் செலுத்தினான்.



அங்கே அஸ்வந்த்திடம் பேசிவிட்டு வகுப்பிற்கு சென்ற வைதேகியோ பத்து நிமிடம் லேட்டாக வகுப்பிற்கு வந்திருந்தாள்.



“Sorry mam sorry mam” என்று வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டிவிட்டு “this is the last warning” என்ற வார்த்தைகளுடன் உள்ளே நுழைந்தாள்.



தன்னிடத்தில் அமர்ந்த வைதேகியால் பாடத்தை ஒழுங்காக கவனிக்க முடியவில்லை. அவளையே கவனித்து கொண்டிருந்த சுவேதா என்ன ஆச்சு இவளுக்கு என்று நினைத்து கொண்டு, ஓகே இண்டெர்வல்ல விசாரிச்சுக்குவோம் என்று விட்டுவிட்டாள்.



இண்டெர்வலுக்கான நேரமும் வந்தது, ஆனால் வைதேகி தன்னுடைய யோசனையிலிருந்து கலைவதாய் இல்லை. இவன் ஏன் நம்ம கிட்ட பேச இவ்ளோ தவிக்கிறான். அவளுடைய எண்ணம் முழுவதும் அஸ்வந்த்தே நிறைந்திருந்தான்.



இவளுக்கு என்னதான் ஆச்சு என்ற நினைத்த சுவேதா, "ஹே வைதேகி வா கொஞ்சம் வெளில போயிட்டு வரலாம்”



“நான் வரலடி நீ போய்ட்டுவா”



இவள இப்படியே விட்டா சரிப்பட்டு வராது என்று அவளது கையை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.



வெளியே அவளை இழுத்து சென்று நிறுத்தியவள், “அன்னிக்கு லேப்லயே சொல்றேன்னு சொல்லிட்டு எதுவுமே சொல்லல. நீ இந்த டூ டேஸ்சா ஏதோ சரியில்லடி. எதையோ மனசுல போட்டு குழப்பிட்டு இருக்கன்னு தெரியுது”.



“I think he is the reason. Am I right?”



அவள் கேட்டதில் அதிர்ச்சியுற்ற வைதேகி, "அப்படியெல்லாம் இல்ல... கொஞ்சம் உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கு. அதான் டல்லா இருக்க மாதிரி உனக்கு தெரியுறேன்".



“Stop lying vaithegi. Tell me everything from the beginning”.



‘இவகிட்ட சொல்லாம விடமாட்டா போலயே’ என்று நினைத்து கொண்டு ஆரம்பத்தில் இருந்து காலை நடந்தது வரை அனைத்தையும் கூறி முடித்தாள். தன் மனதில் தோன்றிய “உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு” என்ற எண்ணங்களை மட்டும் கூறாமல் மறைத்து விட்டாள்.



ஏனெனில் அவளுக்கே தன் மனதில் இப்படி ஒரு எண்ணம் ஏன் வந்தது என்று புரியவில்லை. அதனால் அவளிடம் சொல்லி ஏன் அவளையும் குழப்ப வேண்டும் என்று மறைத்து விட்டாள்.



வைதேகி சொல்லிய அனைத்தையும் உள்வாங்கிய சுவேதா, “ஒரு வேல அவன் இவள லவ் பன்றானோ” என்ற சந்தேகம் அவளுள் எழுந்தது.



எதையும் கன்பார்ம் பண்ணாம நம்ம பாட்டுக்கு அவகிட்ட உளறி வைக்கக்கூடாது என்று நினைத்தவள் வைதேகியை பார்த்து, “இனிமேல் நீ எங்க போனாலும் என்னையும் கூட கூட்டிட்டு போ” என்று கூறிவிட்டு "வா கேன்டீன்ல போய் ஒரு காபீ சாப்டுட்டு வருவோம்” என்று அழைத்தாள்.



“Hmm சரி” என்று அவளுடன் புறப்பட்ட வைதேகிக்கு, சுவேதாவிடம் அனைத்தையும் கூறியவுடன் மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள்.



எல்லாம் அஸ்வந்த்தை பார்க்கும் வரை தான், மாலையில் டிபார்ட்மென்ட் முன்னாடி மறுபடியும் அவனை பார்த்தவளின் மனதில் ஏனென்று புரியாத ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவனை கடந்து செல்லும் வரைக்கும் தன்னையே அறியாமல் அவனை பார்த்து கொண்டே சென்றாள்.



வைதேகியுடன் வந்த சுவேதா டிபார்ட்மென்டின் எதிரில் நின்ற அஸ்வந்த்தை கண்டு விட்டாள். அவன் பார்வை முழுவதும் வைதேகியிடமே இருப்பதை கண்டவள். அவன் கண்களில் ஒரு தவிப்பு தெரிவதை கண்டாள். இவனுக்கு அப்படி என்ன தவிப்பு என்று யோசித்து கொண்டே அவளும் வைதேகியுடன் நடந்தாள். இருவரும் அவரவர் மனநிலைக்கு ஏற்ப ஒருவர் மற்றவருடன் பேசாமல் தங்களது உலகத்தில் சஞ்சரித்தவர்களாக நடந்து கொண்டிருந்தனர்.



அங்கு நின்று கொண்டிருந்த அஸ்வந்த்திற்கோ வைதேகி தன்னையே பார்த்துக்கொண்டு செல்வதை கண்டு அவனால் சுத்தமாக அங்கே நிற்கமுடிய வில்லை. தன் மனதில் தோன்றிய உணர்வுகளை அவளிடம் கொட்டி தீர்க்கவேண்டும் என்று தவித்தான். அவனுடைய மனமோ “நீ என்ன சொன்னாலும் அவளுக்கு புரிய போறதில்ல” என்று அவனை அங்கிருந்து நகரவிடாமல் தடுத்தது.



இதுக்கு மேல முடியாது என்று நினைத்தவன்,”I’m going to learn tamil. Yes. This is only for you smilee…” என்று தன்னை நினைத்தே சிரித்து கொண்டு தான் ஏறவேண்டிய பேருந்தை நோக்கி கிளம்பினான்.



அங்கே வைதேகியோ எனக்கு என்ன ஆச்சு நான் ஏன் அவனை பற்றியே யோசிச்சிட்டு இருக்கேன் என்று குழம்பி கொண்டிருந்தவள் சிரிது நேரத்தில் விடை தெரியாததால் தனக்கு தானே "ச்ச வைதேகி நீ நீயாவே இல்ல டி... இனிமேல் நீ அவனை பற்றி நினைக்க கூடாது. அவன் யாரோ நீ யாரோ... வா டீ குடிச்சிட்டு விளையாட கிளம்புவோம்” என்று அவனை மட்டும் சிந்திக்கும் தன் மனதை வலுக்கட்டாயமாக திருப்பினாள்.



கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கிய அஸ்வந்த் வீட்டினுள் நுழையும்போதே “grandma…grandma…” என்று கத்திக்கொண்டு போனான்.



அங்கு ஹாலில் அமர்ந்திருந்த கணேசனோ, “what happened aswanth… any problem” என்று கேட்டார். அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த சொப்னாவோ அவனை பார்த்து முகத்தை திருப்பினாள்.



அவளுடைய முக திருப்பல்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காத அஸ்வந்த், “nothing uncle. Where is grandma?”



அவன் அவரிடம் கேட்டு கொண்டிருக்கும் போதே தன்னுடைய அறையில் இருந்து “என்னடா கண்ணா” என்று கேட்டு கொண்டே சகுந்தலா வெளியே வந்தார்.



“Grandma…. Where is that book?”



இவன் எந்த புக்க கேட்கிறான் என்று நினைத்தவர், “which book aswanth?” என்று கேட்டார்.



“That book grandma… hmm… learn tamil through english book”.



அவன் கூறிய புக்கின் பெயரை கேட்டவருக்கு ஒருநிமிடம் தன் காதில் எதுவும் தவறாக விழுந்து விட்டதோ என்று சந்தேகம் வந்து விட்டது. அதனால் அவர் அஸ்வந்த்திடம் “repeat again” என்று அவன் கூறியதை திரும்ப கேட்டார்.



‘ப்ச்’ என்று சலித்தவன்…”learn tamil through english book” என்று மறுபடியும் கூறினான்.



“நம்ம ஒழுங்கா தான் கேட்டிருக்கோமா ஆனா நம்ம படிக்க சொன்ன போதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு இப்ப என்ன திடிர்னு என்று தோன்றியதை” அவனிடமே கேட்டார்.



“Why suddenly aswanth”



“Simply” வேறு எதுவும் அவன் கூறவில்லை.



ஆனால் சகுந்தலாவிற்கு ஏதோ புரிவதை போல் தோன்றியது... ஒருவேளை அன்று ஒரு பெண்ணை பற்றி பேசி கொண்டிருந்தானே அவளால் இருக்குமோ என்று நினைத்து கொண்டவர்க்கு அஸ்வந்த் தமிழ் கற்று கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சிதான்.



ஏனெனில் அவருக்கு தமிழ்நாட்டில் பிறந்தவனுக்கு தமிழ் பிடிக்கவில்லை என்று கூறியது அவருக்கு வருத்தமாக இருந்தது. அதனால் முகம் தெரியாத அந்த பெண்ணிற்கு மனதார நன்றி கூறினார்.



அவர்கள் பேச்சில் இடையிட்ட சொப்னா,”hey asu... what da..are you going to learn tamil?”



“Hmm” என்று மட்டும் அவளிடம் கூறியவன் சகுந்தலாவிடம் மறுபடியும் “where is that book?” என்று கேட்டான்.



“It’s in your room only aswanth… in that book loft”



“Thanks grandma” என்று சொல்லிவிட்டு தன் ரூமிற்கு ஓடினான்.



அவனின் செயல்களை புரிந்து கொள்ள முடியாத சொப்னா, “what’s going on here” என்று சகுந்தலாவை பார்த்து கேட்டாள்.



“Nothing da sopna. Have some tea” என்று வேலைக்காரி கொண்டு வந்த டீயினை எடுத்து அவளுக்கு கொடுத்தார்.



மேலே தன் அறைக்கு சென்ற அஸ்வந்த் அந்த புக்கினை தேடி எடுத்து கடவுளே புரியனுமே என்று வேண்டிக்கொண்டே திகிலுடன் அதனை திறந்தான்.


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே


தொடரும்............
 
Status
Not open for further replies.
Top