டீஸர்:
"தி கிரேட் கோல்டன் யுனிவர்சிட்டி"என்ற கல்லூரி பெயர் சொன்னாலே ஞாபகம் வருவது அந்த கல்லூரியின் கதாநாயகன் தி கிரேட் பிசினஸ்மேன் அர்ஜுனன் மகன் ஆதித்யன் தான்.
அதே கல்லூரியில், படிப்பவர்கள் சிவன் யாவும் லட்சுமியும், அன்று கல்லூரி வந்த ஆதித்தியன் எப்போதும் போல் தனக்கு இருக்கும் மிடுக்கு புன்னகையுடன், தனது பைக்கில் இருந்து இறங்கி ஸ்டைலாக நடந்தபடி வர இறங்கி ஸ்டைலாக நடந்தபடி வர அதை எப்போதும் போல் மனதுக்குள் ரசித்த லட்சுமி ஐ லவ் யூ டா ஆதித்யா என் மனதிற்குள் நூறாவது முறையாக கூறிக்கொண்டள். அதை அப்போதே, அவனிடம் வாய்விட்டு கூறியிருந்தாள் பிரிவு நிகழ்ந்திருக்காதோ? விதி யாரை விட்டது.
**************************************
மங்கல இசை முழங்க, தான் உருகி உருகி காதலித்த சிவன்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தனது சரிபாதி ஆக்கிக் கொண்டான் ஆதித்தியன். லட்சுமியின் மனமோ சில்லு சில்லாக நொறுங்கி தான் போனது.
***************************************
ஏய், உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடி? உன்னை எத்தனை முறை திட்டுவது எனக்கு வாய் தான் வலிக்கிறது. இன்னொரு தடவை என் அறைக்குள் வந்தால், அசிங்கப்பட்டு போவடி, என திட்டவும் கூனிக்குறுகி போன லட்சுமி.
அவள் காதுபடவே,"இதெல்லாம் என்ன சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள். ஒரு பணக்காரனை பார்த்தா போதும் உடனே படுக்கைக்கு வந்துருங்க"என முனுமுனுக்கும் சத்தம் நன்றாகவே லட்சுமியின் காதில் விழ, அவனை திரும்பி பார்த்து புன்னகைத்து விட்டு சென்றாள். அவள் புன்னகையில் கதிரவன் அவன் தீயாய் தகிக்க ஆரம்பித்தான்.
தீயை அடக்கி ஆளப்போகும் அந்த கதிரவனுக்கு சொந்தமானவள் யார்?