அத்தியாயம்-2:
"ஆதித்யா... இங்க நின்னு என்ன கனவு கண்டு கொண்டு இருக்கிறாயா? ஆபீஸிலிருந்து முக்கியமான மீட்டிங்கில் விட்டுவிட்டு இங்கே என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய்?"என்ற அர்ஜுனனின் கேள்வியில் தான் கனவிலிருந்து வெளிவந்தவன் சுற்றும்முற்றும் நோக்கினான்.
அங்கு, லட்சுமியை காண அவளோ அவன் என்ன கனவு கண்டிருப்பான் என்று புரிய நமுட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள்.
அவனை முறைத்தவாறு "இல்லப்பா... ரொம்ப தலை வலியாக இருந்தது அதுதான் வீட்டிற்கு புறப்பட்டு வந்து விட்டேன் மன்னித்து விடுங்கள்"என தந்தையிடம் மன்னிப்பு கோரினான்.
சரி சரி பரவாயில்லை விடு. இப்பொழுது தலைவலி எவ்வாறு உள்ளது? ஏதோ சில காலங்கள் தான் நீ பழையபடி மாறி இருக்கிறாய்... உன்னை மீண்டும் இழந்துவிட்டாள் அதைத் தாங்கும் சக்தி இங்கே யாருக்கும் இல்லை அப்பு...
(என்னது அப்புவா... என்று நீங்கள் ஆச்சரியப் படுவது புரிகிறது. அர்ஜுனன் நெய்தல் நிலவனுக்கும் செங்காந்தள் அரசிக்கும் வேங்கை மைந்தரின் பரம்பரையில் வந்த ஒரே ஆண் வாரிசு என்பதால், அனைவரும் அவனை செல்லமாக "அப்பு" என்றே கூப்பிடுவார்கள்)
தன்னால் தன் தந்தை எந்த அளவு கஷ்டத்தை அனுபவித்து உள்ளார் என்று அவர் வாயிலாக கூறும் போதே, ஆதித்தன் மனம் அவன் செய்த வேலைகளை எண்ணி மரத்து போனது.
"சரிப்பா பார்த்துக்கொள்... அம்மாடி லட்சுமி உன் அத்தானிடம் நான் கோபப்பட்டது தவறுதான்... என்னை என்னை மன்னித்துவிடம்மா"என்று மன்னிப்புக் கோரவும்,
அவ்வளவு நேரமும் செய்த தவறை எண்ணி மறுகி கொண்டிருந்தவன் தந்தை அவளிடம் மன்னிப்பு வேண்டவும், கோபத்தில் வாயை திறந்தான்.
"அப்பா..."கண்டவளிடம் எல்லாம் எதற்கு மன்னிப்பு கேட்கிறீர்கள்... நீங்கள் எவ்வளவு பெரிய ஆள்? போயும் போயும் இந்த வீட்டு வேலைக்காரியிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்... என்று கூறிய மகனை திரும்பிப் பார்த்தவர் "நீ எப்பொழுதும் மாறமாட்டாய் அப்பு"என்று பெருமூச்சு விட்டவாறே அங்கிருந்து நகர்ந்தார்.
அங்கிருந்து நகர்ந்த வரை"மாமா..."ஒரு நிமிடம் நில்லுங்கள்... என்ன மாமா இது?நீங்கள் வயதில் பெரியவர் என்னிடம் மன்னிப்பு கேட்கலாமா... நான் நீங்கள் பார்க்க வளர்ந்த பெண்... இப்படி எல்லாம் மன்னிப்பு கேட்டு என்னை சங்கடப் படுத்தாதீர்கள்... அத்தோடு என் கண்முன்னாலேயே ஆதி அத்தானை அடித்து விட்டீர்கள் என்ற கோபத்தில் பேசிவிட்டேன் மன்னித்து விடுங்கள்... என்று மன்னிப்பு வேண்டினாள்.
அவளது தலையை வருடி விட்டவர்,"கையில் கிடைக்கும் பொக்கிஷத்தின் அருமை அது கையில் இருக்கும்போது தெரியாது அப்பு... உன் கையில் வைத்திருக்கும் இந்த பொக்கிஷத்தை இழந்து விடாதே..."என்று கோரியவரிடம் நிமிடமும் தாமதியாது "நான் செய்ததற்கு வேண்டுமானால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால், என்மனைவி ஷிவானிக்கு என்னால் துரோகம் செய்ய இயலாது. நான் அவளை எந்த அளவு காதலித்தேன் என்று உங்களுக்கே தெரியும். இதற்குமேல் என்னை வற்புறுத்தாதீர்கள்... மாடியில் ஷிவானி எனக்காக காத்துக் கொண்டிருப்பாள். நீங்கள் பேசுவது எல்லாம் அவள் காதில் விழுந்தாள் மிகவும் வருத்தப்படுவாள். என் மனைவி கஷ்டப்படுவதை எக்காரணம் கொண்டும் என்னால் தாங்க இயலாது. ஆதலால் மீண்டும் நீங்கள் இதைப் பற்றி பேசாமல் இருப்பதே அனைவருக்கும் நல்லது" என்று கூறிய மகனை வெறித்து பார்த்தவர் எதுவும் கூறாமல், இதயத்தில் வழியும் குருதியுடன் அங்கிருந்து நகர்ந்தார்.
தந்தையிடம் எதிர்த்துப் பேசி விட்டோம் என்ற கோபத்தில் லட்சுமியை பார்த்தவன் இதற்கெல்லாம் காரணம் இவள் தானே என்ற கோபம் மொத்தமாக அவளிடம் திரும்பியது.
"ஏய்... லட்சுமி உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னைப் பார்த்தே சிரிப்பாய்... என் தந்தை உன்னிடம் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு நீ என்ன பெரிய ஆளா?? நீ என்று எங்கள் வாழ்வில் இருந்து தொலைந்து போறியோ... அன்று தான் எங்களுக்கு நிம்மதி. அப்போதாவது, எங்களைப் பிடித்த சனியன் ஒழிகிறதா... என்று பார்ப்போம்" என்று அவளை திட்டியவாறு அங்கிருந்து நகர்ந்தான்.
அவளோ... எப்போதும் போல் புன் சிரிப்பை உதிர்த்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.
மாடிக்குச் சென்றவன் அங்கிருந்த மனைவியிடம் சென்றவன்"மன்னித்துவிடு அம்மு... அப்பா பேசியது தவறுதான் அவர் பேசியது எல்லாம் கணக்கில் கொள்ளாதே..." என்று தனது மனைவியிடம் கூற அவளோ அவனை பார்த்து அழகாக புன்னகைத்தாள்.
மனைவியை பார்த்த பிறகுதான் மகளின் எண்ணம் வரவும்,"அச்சோ... இங்கு நடந்த கலவரத்தில் தியா குட்டி மறந்துட்டேனே... நான் போய் தியாவை தூக்கிட்டு வர்றேன் என மனைவியிடம் கூறியவாறே, கீழே வந்தவன் மகளை கைகளில் அள்ளிக் கொண்டான்.
"தியா..."என்று அழைத்த வாரே வந்த தந்தையைக் கண்டு கோபத்தில் கைகளைக் கட்டியபடி முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தது அந்த வாண்டு.
மகளின் கோபம் புரிந்தவன், காதை பிடித்தவாறு குழந்தையின் உயரத்துக்கு முழங்காலிட்டு அமர்ந்தவன் "பேபி அப்பா செய்தது தவறுதான்... மன்னிக்க மாட்டீர்களா..." என்று அழுவது போல் பாசாங்கு செய்யவும்,
தந்தையின் கோபத்தில் அரண்டு இருந்த குழந்தை சிறு குழந்தைகளுக்கு உரிய முறையில் நடந்த அனைத்தையும் மறந்து அப்பா அழுவது பொறுக்காமல்"நைனா... நோ... நீ ஏ பாப்பாதை துட்டுநி..(திட்டினாய்) நா கோவா இருக்கேன்... நீ அழாத, பாப்பா நெய்னா முத்தா தர்றே நீ சிதி"(பாப்பா உனக்கு நைனா நெற்றியில் முத்தம் தருகிறேன் நீ அழுகாதே)என்று மழலை மொழியில் கூறியவாறு, தந்தையின் கன்னத்தில், நெற்றியில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தது.
அதில் கண்களில் நீர் துளிர்க்க, அதை துடை தெரிந்தவன் "சரிடா செல்லகுட்டி"என்று குழந்தைக்கு முத்தமிட்டு அணைத்துக் கொண்டான்.
சரி வா நம்ம ரூமுக்கு போவோம்... என்று அழைக்கவும்,"நைனா... நான் வில்லா(விளையாட) போறேன் என்று கூறவும், சரி அடிபடாமல் சென்று பத்திரமாக விளையாடு... "என்று குழந்தையிடம் கூறியவன் "வசந்தி..."என்று வேலைக்காரியை அழைத்தான்.
எஜமானின் குரலுக்கு பதறியடித்துக் கொண்டு வந்தால் அந்த வீட்டில் பத்து வருடங்களாக வேலை பார்க்கும் வசந்தி. அவனிடம் பயந்தவாறு வந்தவள்"சொல்லுங்க ஐயா..."என்ற பயத்துடனேயே கேட்டாள்.
குழந்தை விளையாடுகிறாள் பார்த்துக்கொள் எங்கும் சென்று விடாதே... உன்னை அடித்தது தவறுதான் மன்னித்துக்கொள்... என்று மற்றவர்களைப் போன்று செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்காமல் தலைக்கனம் கொண்டு திரிபவன் அல்ல. மன்னிப்பு வேண்டிய முதலாளியை அதிசயமாக பார்த்தாள் வசந்தி.
ஆனால், அவன் லட்சுமியிடம் மட்டும் ஏன் அவ்வாறு நடந்து கொள்வதற்கும் மட்டும் என்ன காரணம் என்று இதுவரை அங்குள்ள யாருக்குமே தெரியாது...??
"சரிங்கய்யா..."என்றவாறு குழந்தையை விளையாடுவதற்காக வெளியில் தூக்கிச் சென்றாள்.
அங்கு சமையலறையில் லட்சுமி "அச்சோ.. அத்தான் பாவம். காலையில் வேறு சாப்பிடவில்லை. இப்போ வேற தலை வலிக்குதுன்னு சொல்றாங்க... இந்த டீயையாவது கொண்டுபோய்க் கொடுக்கிறேன். அப்போதாவது அத்தானுக்கு தலைவலி நிற்கிறதா என்று பார்ப்போம்..."என்று கூறியவாறு தயாரித்த தேநீரை வேறு ஒரு கப்பில் மாற்றியவள் அவனுக்கு மிகவும் பிடித்த பிடி கொழுக்கட்டை உடன் எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
"இப்போ நான் ரூமுக்கு போனா அத்தான் என்னை திட்டுவார்கள்... ஆனால், பாவம் இந்த டீயை கொடுக்காமல் எப்படி இருப்பது"என்று யோசித்துக் கொண்டே வெளியில் வந்தளுக்கு அந்த அவசியம் இல்லாது போனது.
ஏனெனில், அங்கு சோபாவில் அமர்ந்து தலையை வலியின் காரணமாக பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அவளது நிலையைப் பார்க்க லட்சுமிக்கு மனம் வலித்தது. அவனிடம் சென்றவள்"அத்தான் தலை வலிக்குது என்று சொன்னீர்களே இந்த டீயை எடுத்துக் கொள்ளுங்கள்"என்று தட்டை அவனிடம் நீட்டினாள்.
அன்று காலையில் இருந்து வரிசையாக நடந்ததை எண்ணி கடுப்பில் இருந்தவன் அவள் டீயை நீட்டவும், கொதிக்கும் தேனீரை அவள் முகத்திலேயே ஊற்றினான்.
திடீரென தன் மீது ஊற்றிய தேனீரில் "ஐயோ அம்மா எரியுதே"என்று துடித்து போனாள்.
அந்த மிருகம் அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாது "நீ இனிமே இங்கே இருந்தா யாருக்குமே சந்தோஷம் இல்லை"என்று கையை பிடித்து இழுத்துக்கொண்டு சிறிதும் ஈவிரக்கமில்லாமல் வெளியில் தள்ளினான்.
அவன் டீயை ஊற்றியதைக்கூட, பொருத்துக் கொண்டவள் கழுத்தை பிடித்து தள்ளவும், சமநிலை இன்றி கீழே விழுந்தவள் கண்களில் வழிந்த கண்ணீருடன் அந்த இடத்தை விட்டு சென்றாள்.
அவள் கத்தும்போது வீட்டில் உள்ள அனைவரும் வந்தனர். ஆனால், அவன் அப்படி செய்வதை தடுக்க முடியாது கண்களில் வழிந்த கண்ணீருடன் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டவள் அழுதபடியே அங்கிருந்து நகர்ந்தாள்.
"மகிழ் பதம் பலநாள் கழிப்பி, ஒரு நாள்...
'அவிழ்ப்பதம் கொள்க'என்று இரப்ப, முகிழித் தகை...
முரவை போகிய முரியா அரிசி...
விரல் என நிமிர்ந்த நிரல்அமை புழுக்கல்...
பரல்வறைக் கருணை, காடியின் மிதப்ப...
அயின்ற காலை, பயின்று இனிது இருந்து,...
கொல்லை உழு கொழு ஏய்ப்ப, பல்லே...
எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி,...
உயிர்ப்பிடம்பெறாது ஊன் முனிந்து...
என்று கூறுகிறது பொருநராற்றுப்படை. சங்க காலத்தில், கரிகால வளத்தான் தன்னைத் தேடி வந்த பொருநர் கெல்லாம், உணவு கொடுத்த ஓம்பிய முறையில் கூறுகிறது.
உண்ணுவதற்கு அறிய உணவை கொடுத்து, அவர்கள் அருகிலேயே அமர்ந்து 'தின்னுங்கள் திண்ணுங்கள்'என்று அவர்கள் வயிறு புடைக்க உணவு கொடுப்பானாம். அந்த உணவுகளை எல்லாம் நாக்கு வெந்து போகும் அளவிற்குத் தின்பார்களாம்... இது கரிகாலன் ஆட்சியில் சிறந்த உபசரிப்பும் முறையாம்"
அதே போலத்தான், குரு கூரில் உள்ள மனிதர்கள் யாவரும், தங்களிடம் வருவோரை அன்பு செய்வர்.
அப்படிப்பட்ட ஊரில் உள்ள ஒருவரிடம் தான், அவ் வீட்டில் வேலைக்காரியாக (அவளாக நினைத்துக் கொண்டு)வேலை செய்கிறாள் லட்சுமி.
அவன் வீட்டை விட்டு துரத்திய பிறகு, அழுதுகொண்டே வந்தவளை தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார் அந்த ஊரில் உள்ள கீதாரி. (ஊர் ஊராக தங்கி, கிடாய்போட்டு ஆடு மேய்ப்பவர்கள் கீதாரி என்று கூறுவர்)
கவலையுடன் தனது ஆதி அத்தனையும்,குழந்தையையும் குடும்பத்தையும் எல்லோரையும் நினைத்து அழுதுகொண்டிருந்தவளைக் கண்ட இறைவன், உனக்கு இன்னும் சோதனை முடியவில்லை என்பது போல்,
அவளுக்கு இன்னும் பல சோதனைகளை வைத்து காத்திருந்தான் இறைவன். அதன்படி அங்கு வந்து சேர்ந்தான், எதிரி குடும்பத்தைச் சார்ந்த சிவன்யாவின் அண்ணன் சந்திர பதி.
அவளை காப்பாற்ற போவது இனி யாரோ....
தொடரும்...
உங்களது கருத்தை பகிர்ந்து கொள்க