Sindhu Anushya
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai chlakutties
எல்லாரும் புது டீஸர் போட்டு சின்ன பிள்ளைய உசுப்பேத்த விட்டுடிங்கப்பா... அதுனால நானும் ஒரு டீஸரோட வந்துட்டேன்... படிச்சுட்டு எப்படி இருக்குனு வந்து ஜொள்ளிட்டு போங்கோ..
கதை பெயர் : கருத்த மச்சான்
ஹீரோ : அருள்மொழி பாண்டியன்
ஹரோயின் : வானதி நாச்சியார்
டீஸர் 1
பல தலைமுறை கடந்தும்.... தன் பலம் குறையாமல் ஆஜாகுபான தோற்றத்துடன்.. ராட்ஷசன் போல் நெடு நெடுவென்று வளர்ந்து விரிந்து.. அவ்வூரின் மையத்தில் அமைந்துள்ள அந்த ஆலமரத்தின் அடியில் ஊர் மக்கள் அனைவரும் கூடியிருந்தனர்..
பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் அமர்ந்து தங்களுக்குள் சலசலத்துக் கொண்டிருந்தனர்..
" இவங்க குடும்ப சண்டையில நாமதான் அவதி படனும் போலிருக்கு..? என பெண்கள் வம்பு பேசிக் கொண்டிருந்தனர்..
ஆண்களோ " எல்லாம் நம்ம சின்னய்யா பார்த்துக்குவாறு.. அவரு முன்னாடி ஆம்பளையே நிக்க பயப்படுவாங்க.. இந்த பொம்பளை எம்மாத்திரம்...
அட .. ஆமங்குறேன்..
நாம எதுவும் பேசக்கூடாது.. ஐயாவை விட்டே பேசச்சொல்வோம் .. நம்மளுக்கு எதுக்கு பொல்லாப்பு..
ஆமா.. ஆமா.. பெரியவரு இதுக்கு சரிபடமாட்டாரு.. சின்னவருதான் நியாயமா முடிவெடுப்பார்... எனப்பலரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க..
அப்பொழுது ஹாரன் ஒலி சப்தமிட்டு அசுர வேகத்தில் கப்பல் போல் நான்கு கார்கள் அணிவகுத்து நின்றன.. அதை கண்டு மக்கள் அனைவரும் பயந்து ஒதுங்கினர்...
முதலாம் காரிலிருந்து கருப்பு உடை அணிந்த ஒருவன் வேகமாக இரண்டாம் காரின் பின்பக்கத்தை திறந்தான்.. அதிலிருந்து மஹாராணி தோரணையில் கம்பீரமாக இறங்கினாள் குந்தவை நாச்சியார்...
கண்களில் கூலர்ஸ் அணிந்து.. இடதுகையில் பிளாட்டினம் வாட்ச்.. வலதுகையில் டைமண்ட் பிரேஸ்லெட் உயர்ரக ஆப்பிள் ஐபோன் காலில் ஹீல்ஸ் சப்தமிக்க முதுகுவரை சுருண்டிருந்த கூந்தலை கோதி விட்டு வேட்டைக்கு செல்லும் பெண்சிங்கம் போல் வந்து கொண்டிருந்தாள்...
.............................................................................
அருள்மொழி " இப்ப முடிவா சொல்றிங்க..? சிங்கத்தின் கர்ஜனை போல் அவன் குரல் ஒலித்தது..
நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க Mr.அருள்மொழிபாண்டியன்.. அது என்னோட லேண்ட்.. அதுல நான் என்னவேனாலும் செய்வேன்... அதை கேட்க உங்களுக்கு எந்த ரைட்சும் கிடையாது.. என்றாள் நக்கல் கலந்த திமிருடன்..
" மாப்பிள... கேவலம் ஒரு பொட்டச்சி உங்க முன்னாடி கால் மேல் கால் போட்டு இப்படி தோரணைய பேசிட்டுருக்கா.. நீங்களும் கேட்டுட்ருக்கீங்க..
இங்க பாரு நாங்க சொல்றத செய்யாம இந்த இடத்தை விட்டு உங்களால எங்கயும் போக முடியாது என்றான்.. கேலியாக..
அருள் " மாமா நீங்க செத்த சும்மாருங்க.. என அவரை அடக்கியவன்.. அவள் புரம் திரும்பினான்..
போனை பார்த்துக் கொண்டிருந்தவள் அவரின் மிரட்டலில்.. சேரை விட்டு எழுந்து உதடுகள் வளைய அனைவரையும் ஓர் பார்வை பார்த்தாள்...
" என்ன சொன்ன இந்த இடத்தை விட்டு என்னால போக முடியாத.. இன்னும் பத்து நிமிஷத்துல கார் இல்லாம என்னால இங்க இருந்து போக முடியும்.. என்றாள் கர்வத்துடன்..
" எப்படி பறந்து போவிங்களோ..? என கூட்டத்திலிருந்து ஓர் குரல் நக்கலுடன் ஒலித்தது..
அப்பொழுது பெருசப்தத்துடன் ஹெலிகாப்ட்டர் ஒன்று தரையிறங்க .. ஊர் மக்கள் அனைவரும் அதை பார்த்து வாய் பிளந்தனர்..
உதடுகளில் பூத்த மென் முறுவலுடன் ஹெலிகாப்டரை நோக்கி சென்றவள்.. திரும்பி இடது கைவிரல்களால் சொடுக்கிட்டு " ஏய்.. இந்த குந்தவை நாச்சியார்க்கு எதிரியா இருக்க கூட ஒரு தகுதி வேணும்.. என அருள்மொழியை பார்த்து கூறியவள் ஹெலிகாப்டரில் ஏறி சென்றுவிட்டாள் ...
மேலே பறந்து செல்லும் ஹெலிகாப்டரையே அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அருள்மொழி..