All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரகா கிருஷின் 💖🖤🖤 கருத்த மச்சான் 🖤🖤💖.. கதை திரி

Status
Not open for further replies.

Sindhu Anushya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 13




நீ யாருக்காக வாழ்கிறாயோ

அவருக்காக அனைத்தையும்
விட்டுக்கொடு…
உனக்காக யார் வாழ்கிறாரோ
அவரை யாருக்காகவும்
விட்டுக்கொடுக்கதே…




ஆர்.வி ஹோட்டல்ஸ் முன்பு தன் காரை நிறுத்தினான்.. ரிஷி. மறுபக்கத்திலிருந்து பூந்தளிர் இறங்கினாள்..



உடனே ஒரு பணியாள் ஓடிவந்து.. காரின் சாவியை வாங்கினான்..



இருவரும் உள்ளே வந்ததும்… ஹோட்டல் பணியாளர்கள் அனைவரும்.. பதட்டத்துடனும்… பரபரப்புடனும்.. காணப்பட்டனர்.. ஹோட்டல் மேனேஜர்.. வேகமாக ரிஷியின் முன் வந்து நின்றார்..



“ நாங்க லஞ்ச் சாப்பிடறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க.. என்று சுருக்கமாக கூறினான்..



“ எஸ்.. சார் நீங்க உங்க கேபின்ல வெய்ட் பண்ணுங்க.. நான் டென் மினிட்ஸ் ரெடி பண்ணிடுறேன்.. என்றான்.



“ ஹ்ம்ம்ம்.. என்று மட்டும் தலையசைத்தவன்.. இரண்டாம் தளத்தில் உள்ள தன் அறைக்கு அழைத்துச்சென்றான்..



“ வா தளிர்.. “



“ இது உங்க ஹோட்டலா.. “



‘ஆமா.. ஏன் உனக்கு தெரியாத.. ‘



“ ம்ம்ம் என உதட்டை பிதுக்க்கினாள்.. “



கள்வனின் கண்கள் மாறியது.. சோபாவில் அமர்ந்து.. தளிரின் கைகளை பிடித்து இழுத்தவன்.. அவளை குழந்தை போல் மடியேந்தினான்… ஆரஞ்சு துண்டு போல் உள்ள அவள் இதழையும்.. அதன் சாறையும்.. தன் இதழ்க்குள் இடம் மாற்றினான்… பூந்தளிரும் அவனுக்கு சளைக்காமல்.. தன் இதழ்தேனை கொடுத்து.. எடுத்துக் கொண்டாள்..



“ மூச்சு காற்றுக்கு ஏங்கியவளை பார்த்து மனம் இறங்கி... தன் இணைக்கு விடுதலை அளித்தான்… “



“ம்ப்ச்.. விடுங்கப்பா இன்னைக்கு ஒரு நாளுலேயே என் லிப்ஸ் எப்படி வீங்கிடுச்சு பாருங்க… என்றாள்



ரிஷி குறும்புடன்.. “ ப்ப்பா ஆமா தளிர்குட்டி.. எப்படி வீங்கிடுச்சு.. பாரு.. பொறு நான் உனக்கு உத்தடம் கொடுக்குறேன்.. சரியாயிடும்.. “



“ எப்படி.. என்றாள் சந்தேகமாய்..”



“ இதோ இப்படி.. என்றவன்.. தன் நாவினால் அவள் உதடுகளை மயிலறகு வருடுவது போல்… வருடினான்.. “



“ பெண்ணவள்.. கிறங்கினாள்.. அடுத்து.. மிகவும் மென்மையாக அழுத்தமின்றி சிறு சிறு முத்தம் கொடுத்து.. அவளை பித்தாக்கிக் கொண்டிருந்தவன்.. அவள் செவியில் உத்தடம் எப்படி இருக்கு.. என்றான் கிசுகிசுப்பாக… “



அதில் தெளிந்து.. வெட்கினாள் அவனவள்.. “ ம்ப்ச்.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..



“ ஓகே ஓகே.. இந்த ஹோட்டல் அண்ட் கிளாத் பிளானட் ரெண்டுமே என்னோட சொந்த முயற்சி.. இதேமாதிரி.. இன்னும் நிறைய ஹோட்டல்ஸ் நம்மளுக்கு இறுக்கு… “



“ஒஹ்ஹ.. என்றவள் பெருமிதமாக தன்னவனை பார்த்தாள்…. “



“ சரி கார்ல வரும்போது.. என்ன சீரியஸா மெசேஜ் பண்ணிட்டே வந்த… “



“ அதுவா.. என்னோட அண்ணாக்கு மெசேஜ் பண்ணேன்.. அவரும் என்கூட சென்னை வந்துருக்காரு.. ஒரு மீட்டிங்ல இருக்காங்க.. அண்ணா என்ன லஞ்ச்க்கு கூட்டிட்டு போறதா சொன்னாரு… அதான் அவர்க்கு டெக்ஸ்ட் பண்ணேன்.. “



“ அண்ணாக்கு இன்னும் மீட்டிங் முடியலையாம்.. அவங்க கூட சாப்பிட போற மாதிரி இருக்கும்னு பீல் பண்ணாரு… நான் அவர அவங்க கூட போக சொன்னேன்..”



“ ஹ்ம்ம்ம்.. என்றான் “



“ போன் ஒலிக்க.. ரிஷி எடுத்தான்.. மேனேஜர் எல்லாம்.. ரெடி என்றவுடன்.. சரி என போனை வைத்தவன்.. “



“ பூந்தளிரிடம்.. இளவரசி பசியாற… செல்லலாமா… என்றான் கிண்டலாக.. “



போகலாம் சேவகனே.. என்றாள் அவளும் கிண்டலாய்..



அடிங்க.. நான் உன்ன இளவரசி சொன்ன.. நீ என்ன சேவகன் சொல்ற.. என்று சிரித்தவன்.. வா போகலாம்.. உனக்கு பசிக்குதோ இல்லையோ.. எனக்கு பசிக்குது இன்னைக்கு நீ வர.. எக்ஸைட்மென்ட்ல.. காலைல இருந்து ஒன்னுமே சாப்பிடல…



“ ப்ப்ச்.. என்ன நீங்க.. சரி சீக்கிரம் வாங்க… “



இருவரும் கீழே சென்றனர்.. அவன் ஒரு ஹாலுக்கு அழைத்துச் சென்றான்.. அங்கு ஒரு முப்பது பேர் சாப்பிடும் அளவுக்கு பெரிய டைனிங் டேபிள் இருந்தது… அதில் ஒன்றில் அவளை அமரவைத்தவன்.. அடுத்ததில் அவன் அமர்ந்தான்…



என்ன சாப்பிடுற..



நான் எப்பவுமே.. ஹோட்டல் வந்தா ப்ராபரா சாப்புடுவேன்… சோ first சூப் ஐட்டம்ஸ்.. நெக்ஸ்ட் சேஷுவான் ஷிரிம்ப் நூடுல்ஸ்.. மட்டன் கபாப்.. பார்பிக்யூ சிக்கன்.. லாஸ்ட் சிஸ்லிங் சாக்லேட் வால்நட் பிரௌனி.. வித் ப்ளூபெரி ஐஸ்கிரீம்.. என நீண்ட பட்டியல் வாசித்தாள்..



ரிஷி வாய் பிளக்காத குறையாய் அவளை பார்த்தான்.. பின் சற்று சுதாரித்து.. அவள் மெல்லிடையை மனதில் கொண்டு.. ‘ தளிர் இதெல்லாம் நாம ரெண்டு பேருக்குமா.. என்றான்..



நோ.. நோ.. எனக்கு மட்டும்தான்.. உங்களுக்கு வேண்டியதை நீங்க ஆர்டர் பண்ணிக்கோங்க ரிஷி.. என்றாலே பார்ப்போம்..



ரிஷியின் மனது.. இவ்வளவு சாப்பிட்டும்.. எப்படி இவ்ளோ ஒல்லியா இருக்கா.. என யோசித்தது… பிறகு ச்ச.. என் செல்லாக்குட்டி மேல நானே கண்ணு வைக்கலாமா.. என தன்னையே கடிந்துக் கொண்டு.. தன்னவள் சாப்பிடும் அழகை ரசித்துப் பார்த்தான்… தளிரோ சாப்பாடு ஒன்றே முக்கியம் என்பது போல் அதுலையே கண்ணாக இருந்தவள்.. தன் மேல் ஒருவன் கண் வைத்திருப்பதை மறந்தாள்….



கடைசியில் அவள் கேட்டது போல் ஹாட் சிஸ்லிங் ப்ரௌனி வித் ப்ளூபெரி ஐஸ்கிரீம்.. கொண்டுவரப்பட்டது… அதை அவள் கண் மூடி ரசித்து உண்ண.. ரிஷியோ அவளை கண்களால் உண்டான்…



சாப்பிட்ட பிறகே ரிஷியை பார்த்தாள்.. ஹி.. ஹி.. நான் சாப்பிட உட்கார்ந்த வேற நினைப்பே என் மைண்ட்ல இருக்காதுங்க.. என்றாள் அசடு வழிய..


தெரியுது.. சரி போகலாமா.. என எழுந்தான்….. ஆனால் அவன் தட்டில் இன்னும் உணவு இருந்தது…



ரிஷி.. இன்னும் ரைஸ் இருக்கு.. சாப்பிடுங்க என்றாள்..



இல்லை போதும்..



ப்ப்ச்… அப்போ உங்களுக்கு போதும்ங்கற அளவுக்கு ஆர்டர் பண்ணிருக்கணும்.. இப்போ எவ்வளவு சாப்பாடு வேய்ஸ்ட் ஆகுது… எனக்கு இது பிடிக்காது… புள்ளா சாப்பிடுங்க.. என்றாள் கண்டிப்பாய்..



அவள் கோபம் உணர்ந்து அமைதியாய் சாப்பிட்டான்..



கடைசியாக ஸ்வீட் பீடா மற்றும் அவர்களே தயாரித்த பாக்கு தரப்பட்டது.. முதலில் ஒன்றை எடுத்து சாப்பிட்ட தளிர்.. அதில் மீதம் உள்ள இரண்டையும் எடுத்துக் கொண்டாள்.. அதைப் பார்த்து ரிஷி முறைக்க.. அவளோ அசடு வழிய சிரித்து… எனக்கு ஸ்வீட் பீடா ரொம்ப பிடிக்கும்ங்க.. அதுவும் இந்த பாக்கு சூப்பரா இருக்கு.. ப்ளீஸ் இன்னும் ரெண்டு தர சொல்றிங்களா அப்புறம் சாப்பிட்றதுக்கு.. என தலையை சாய்த்து கெஞ்சிக் கேட்டாள்..



அவள் கேட்ட அழகில் சொக்கியவனின் தலை தானாக தலையசைத்தது.. பேரரை பார்த்தான்.. அவன் அவர்கள் கண் முன்பே பீடா தயாரித்தான்..



பெரிய வெற்றிலையை எடுத்து.. இரண்டாக மடக்கி காம்பை வி வடிவில் வெட்டினான்.. பின் பக்கம் இலையை திருப்பி சுண்ணாம்பு, தேனை தடவினான்.. பிறகு குல்கந்த், ஸ்வீட் சோம்பு, பப்பாயா டூட்டி ப்ரூட்டி, பதப்படுத்தப்பட்ட தேங்காய், பாக்கு, ஏலக்காய் தூல். முதலியவற்றை வைத்து மடித்து ச்செரி கொண்டு டூத்பிக் குத்தி... ஒரு குட்டி பாக்குவகை பாக்சில் வைத்து கொடுத்தான்..



அவன் செய்வதையெல்லாம்.. வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள்.. அவன் கொடுத்ததும் வாங்கி தன் கைப்பையில் வைத்தாள்..மேலும் பத்து பாக்கெட்டுகளை அவளே கேட்டு வாங்கிக்கொண்டு.. ரிஷியை பார்த்து இளித்து வைத்தவள்.. “ ரிஷி இந்த பாக்கு சூப்பரா இருக்கு.. இத நீங்களே தயாரிச்சிங்களா.. என்றாள்



ஆமா.. ஒரு சிலருக்கு பீடா பிடிக்குறதில்ல.. அதுனால இதையும் சேர்த்துக்கிட்டோம்.. இதுல ஸ்வீட் சோம்பு, வெள்ளரி விதை, கற்கண்டு, சீரக மிட்டாய், கிராம்பு, ஏலக்காய்.. இதெல்லாம் இருக்கும்.. இதை தினமும் பிரெஷா தயாரிப்போம்.. என்றான்..



ஒஹ்ஹ.. என்று கண்களை விரித்தாள்…




ரிஷி அவள் செய்யும் சிறுபிள்ளைத்தனத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.. இப்பயாவது போகலாமா மேடம்.. என்றவன்.. வா ஹோட்டல சுற்றி பார்க்கலாம்..



ஹ்ம்ம்ம் என்றவள்.. அவனோடு கை கோர்த்து சென்றாள்.. சுற்றியுள்ளவரின் ஆச்சரிய பார்வையை இருவரும் கண்டுகொள்ளவில்லை..

 

Sindhu Anushya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரிஷி பூந்தளிரையே பார்த்திருந்தான்.. அவள் முகத்தில் ஆச்சரியம்.. ஆர்வம் போன்றவை தெரிகிறதா என பார்த்தான்.. அவளோ அனைத்தையும் சாதாரணமாக பார்த்து வைக்க இவன் ஏமாற்றமடைந்தான்..



ஏன்.. தளிர்குட்டி உனக்கு நம்ப ஹோட்டல் பிடிக்கலையா.. என்றான்



இல்லையே.. ஏன் அப்படி கேட்குறீங்க..



இல்ல.. சும்மா தான் கேட்டேன்.. என்றான் சமாளிப்பாய்..



இருந்தும்… அவன் முகத்தில் இருந்த ஏமாற்றத்தை அவள் கண்டுகொண்டாள்… அவனுடைய எதிர்பார்ப்பும் தளிர்க்கு புரிந்தது.. அதனால்.. இந்த ஹோட்டல்க்கு நான் முன்னாடியே வந்துருக்கேங்க.. முதல் தடவை வரும்போதே ரொம்ப இம்ப்ரெஸ் ஆயிட்டேன்… இத டிசைன் பண்ணவங்க ரொம்ப ரசனையானவங்கன்னு என் பிரெண்ட்ஸ்கிட்ட சொல்லிருக்கேன்.. “ரிஷி இந்த ஹோட்டல்ல டிசைன் பண்ணியது யாரு.. அவங்கள நான் பார்க்கணும்..



பூந்தளிர் பேச பேச இங்கு ரிஷியின் முகத்தில் பிரகாசம் கூடியது.. ஹ்ம்ம்ம் பார்த்தா மேடம் என்ன பண்ணுவீங்க.. என்றான் குறும்பாய்..



அவங்கள பாராட்டுவேன்.. அண்ட் என் அண்ணாக்கிட்ட இன்ட்ரோ பண்ணுவேன்.. நாங்க அடுத்து கட்ட போற ஹோட்டல டிசைன் பண்ற வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்ல.. என்றாள்



உங்களுக்கு ஹோட்டல்ஸ் இருக்கா.. என்றவன்.. ஹ்ம் எனக்கு உன் பேமிலி பத்தி ஒன்னுமே தெரியாதுல..



சரி.. என்னோட மாமியார் மாமனார்.. பத்தி சொல்லு..



மாமியார் மாமனார் மட்டும் போதுமா.. மச்சான் வேணாமா.. மலையேற போனாலும் மச்சான் உதவி தேவைப்படும்ன்னு பழமொழியே இருக்கு.. அவர் மட்டும் ஒத்துக்கலன்னா நம்ப கல்யாணம் நடக்குறது.. ரொம்ப கஷ்டம் சார்.. என சீண்டினாள்…



அப்போ.. உங்க அண்ணன் சம்மதிக்கலன்னா.. நீ என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டியா.. என்றான் ஒரு மாதிரியான குரலில்….



அச்சோ கோபமா.. நடக்குறது கஷ்டம் தான்னு சொன்னேனே தவிர.. நடக்காதுன்னு சொல்லல…



ஹ்ம்ம்ம் என்றான் சமாதானமாய்..



என்னோட அப்பா வில்லியம்ஸ்.. அம்மா பூந்தென்றல்.. மை ஸ்வீட் பிரதர் ரிச்சர்ட் வில்லியம்ஸ்.. V.A.R குரூப் ஆப் கம்பெனி கேள்வி பட்டுருக்கீங்களா.. அது எங்களோடதுதான்.. இங்க சென்னைல கூட எங்களுக்கு ஆறு பிரெஞ்சு ரெஸ்டாரெண்ட் இருக்கு.. என்றாள்..



ம்ம்ம்.. என்று புருவம் சுருக்கினான்.. ரிச்சர்ட்டை அவன் சில முறை பார்த்திருக்கிறான்.. ஆனால் நெருங்கி பழகியதில்லை.. இனி பழகவேண்டும் என முடிவெடுத்திருந்தான்..



ரிஷி டைம் ஆயிடுச்சு.. நான் வீட்டுக்கு போகட்டா.. என நயமாய் வினவினாள்..



“ ஏன்.. இவ்ளோ அவசரம்.. என்னை விட்டு போறதுல அவ்வளோ விருப்பமா.. என்று அதட்டினான்..



“ அச்சோ.. மறுபடியும் கோபமா.. லஞ்ச் முடிஞ்சுடுச்சு.. இன்னைக்கு ட்ரைனிங்கும் முடிஞ்சுடுச்சு அதான் கேட்டேன்.. “



அதெல்லாம் முடில.. இன்னும் கொஞ்சம் ஒர்க் இருக்கு.. உனக்கு பிட்டிங் பார்க்கணும்.. வா போகலாம்.. என்றான் காரமாய்..



தளிரும் பாவமாய் அவன் கூட சென்றாள்… ஆபிசில் அவளை தன் அறைக்கு அழைத்துச் சென்றவன்.. போனில் கதிரிடம்.. தளிர்க்கு பிட்டிங் பார்க்க ஏற்பாடு செய்த உடன் தகவல் தெரிவிக்க சொன்னான்…



வேறு எதுவும் பேசாமல் அமைதியாய்.. லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தான்..



அவன் கோபம் இன்னும் குறையவில்லை என்பது தளிர்க்கு புரிந்தது… சிறிது நேரம் அவனையே வெறித்தவள்.. பிறகு மெல்ல தன் வசியக்குரலில்



மனம் படைத்தேன் உன்னை

நினைப்பதற்கு..
நான் வடிவெடுத்தேன் உன்னை
மணப்பதற்கு..
மனம் படைத்தேன் உன்னை
நினைப்பதற்கு..
நான் வடிவெடுத்தேன் உன்னை
மணப்பதற்கு..
மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி
இசைக்க…
கைத்தலம் பற்ற நான் கனவு
கண்டேன்…
கனவு கண்டேன்…
கைத்தலம் நான் பற்ற கனவு
கண்டேன்…
அந்த கனவுகள் நனவாக உறவு
தந்தான்…
மனம் படைத்தேன் உன்னை
நினைப்பதற்கு..
நான் வடிவெடுத்தேன் உன்னை
மணப்பதற்கு..





என்று காதல்தேன் சொட்ட பாடினாள்…



அதுக்கு மேல ரிஷி சும்மா இருப்பான்.. என நினைக்கிறீங்க.. தன் இருக்கையிலிருந்து வேகமாக எழுந்து..அவளை அள்ளி அனைத்துக் கொண்டான்.. கொஞ்ச நேரம் கூட என்னால உன் மேல உள்ள கோபத்தை பிடிச்சுவைக்க முடியல… என்றவன் அவளின் கழுத்து பகுதியை செல்லமாக கடித்து வைத்தான்..



“ ஹ்ம்ம்ம் என கூசி சிலிர்த்தவள்.. ஏன் பிடிச்சு வைக்கணுமா… என்றாள் கொஞ்சலாக..



“ அது.. அது அப்பத்தான என்ன இப்படி கொஞ்சுவ. .. “ என்றான் மேலும் ஈஷிக்கொண்டு..



“ ராஸ்கல்..



“ ஓய் நான் ராஸ்கலாடி…..



“ ஆமா.. என்னோட ஸ்வீட் ராஸ்கல்.. “



“ அப்படியா.. ராஸ்கல் என்ன செய்வான் தெரியுமா.. என்றவன்.. அவள் இளமையின் செழுமைகளில் தன் முகத்தை பதித்து தேய்த்தான்..



தளிர்க்கு.. உச்சி முதல் பாதம் வரை சிலிர்த்தது.. வேக மூச்சுகள் விட்டு.. பேச முயற்சித்தாள்.. ஆனால் வார்த்தைகள் தொண்டையிலிருந்து வர மறுத்தன.. அவன் அழுத்தம் கொடுக்க கொடுக்க இவளுக்குள் சூடு பரவியது.. பெரும் முயற்சி செய்து.. ஹ்ம்ம்ம்.. என்ன பண்றிங்க விடுங்க.. என்றாள் அவளுக்கே கேட்க்காத குரலில்..



அவன்.. மாட்டேன் என்றா சொல்கிறான்.. அவளை பதற வைக்க அவன் எடுத்துக் கொண்ட வழி.. இப்பொழுது ஒரு புதைகுழி போல் அவனை உள்ளிழுக்கிறது.. மேலும் மேலும் முன்னேற….. அவன் உணர்வுகள் தூண்டுகிறது.. அவன் கைகள் அவளை உணர்த் துவங்கியது.. பூந்தளிரும் அவன் கரங்களின் சிறையில் இருந்து மீளாமல்.. அல்லது மீளவிரும்பாமல்.. அவன் கரங்களில் தவழ்ந்தாள்..



இவர்களின் மோகநிலையை டெலிபோன் ஒலி அசைத்தது… அதில் பூந்தளிர் திடுக்கிட்டு விலகினாள்.. இல்லை முயற்சி செய்தாள்.. அவனோ கடைசியாய் ஒரு முறை இறுக்கமாய் அணைத்து விடுவித்தான்..



நடந்த செயல்களின் தாக்கத்தால் அவள் முகம் செவ்வானம் கொண்டிருக்க.. அதை அவன் ஆசையாய் ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தான்..



மௌனமாய்.. அங்கு நிலவிய அமைதியை இருவரும் ரசித்தனர்.. அப்பொழுது மறுபடியும் போன் ஒலிக்க.. தளிர்.. அங்க பாத்ரூம் இருக்கு.. போய் கொஞ்சம் ப்ரெஷ் ஆகிட்டு வா..



அவளும் அமைதியாய் சென்றாள்… அவள் வந்ததும் தேர்ட் பிளோர்.. அழைத்து சென்றான்.. அங்கு பேஷன் ஷோ ட்ரெஸ்சஸ்.. மாடல் பிட்டிங் சரிபார்க்கும் ஒர்க் என அந்த இடமே நிறைந்து வழிந்தது..



ஒரு பெரிய அறைக்கு அழைத்துச் சென்றான்.. அங்கு விஷ்ணு… கதிர் மற்றும் இன்னும் இரண்டு பெண்கள் இருந்தனர்..



ரிஷி “ விஷ்ணு இவங்கதான் நம்ம ஷோ ஸ்டாப்பர்… இவங்க அளவு எடுங்க.. நம்ம ட்ரெஸ்ஸ அதுக்கு தகுந்தமாதிரி பிட்டிங் பண்ணிருங்க.. நாளைக்கு ரெடியா இருக்கனும்.. என்று அடுத்தடுத்த கட்டளைகளை பிறப்பித்தான்..



விஷ்ணு பூந்தளிரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. சொல்லப்போனால் அவளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தான்… அவனுக்கு பேச்சே எழவில்லை.. பிரமிப்பும் ஆர்வமும் அவன் கண்களில் ஒளிர்ந்தது…



அதை உணர்ந்த ரிஷிக்கு கடுப்பு வந்தது.. ம்ம்க்கும் என இருமி.. விஷ்ணுவை உக்கிரமாய் முறைத்தான்…



பார்த்த விஷ்ணுக்கு குளிர்ஜுரம் வராத குறைதான்… அதற்க்கு அப்புறம் அவன் பார்வை மறந்தும் பூந்தளிர் பக்கம் திரும்பவில்லை..



“ ஏஞ்சலினா.. இவங்களுக்கு அளவு எடுங்க என்றான்..



“ மேம்.. ப்ளீஸ் என்று பூந்தளிரை அழைத்தாள்..



“ தளிர் ரிஷியை பார்க்க அவன் தலையசைத்ததும்.. சென்றாள்..



“ ஏஞ்சலினா தளிர்க்கு அளவு எடுத்துக் கொண்டிருக்க.. அப்பொழுது.. ரிஷியின் போன் ஒலித்தது.. அதை பார்த்தவன்.. எடுத்து “ சொல்லுங்க பாட்டி… என்றான்..



“ சரி நான் வைஷு ஐஷுவ பிக்கப் பண்ணிக்கிறேன்… ஹ்ம்ம்ம் சாப்பிட்டுட்டேன்….. bye.. “



ரிஷி “ முடிஞ்சுடுச்சா.. என்றான்.. விஷ்ணுவிடம்..



“ எஸ் பாஸ்.. “



“ ஹ்ம்ம்ம்.. தளிர்.. லெட்ஸ் கோ.. “



“ அவனின் பாட்டி என்றழைப்பில் சாம்பல் நிற விழிகள் ரிஷியை ஒரு பார்த்து திரும்பியது… அடுத்து அவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனிக்கவும் செய்தது.. அதை ரிஷி அறியவில்லை… ஏஞ்சலினா ரிஷியை தன் சாம்பல் நிற விழிகளால் தொடர்ந்தாள்.. அவள் விழிகள் யோசனையுடன்.. ரிஷியின் மேல் படர்ந்தது.. பிறகு ஒரு முடிவுடன் அடுத்த திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தாள்..



வஞ்சம் கொண்டு வருவாள்..
 
Status
Not open for further replies.
Top