அத்தியாயம் 21
நேத்ரனோ, ஹரிஷிடம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்மாறு சொல்லிவிட்டு, தன் அன்னை மற்றும் தங்கம்மாவுடன் நடக்க சூர்யாவும் நாற்காலியில் இருந்து எழ, என்னவென பார்த்த நேத்ரனிடம், வண்டி வரை வருவதாக சொல்லவும், அவன் மறுக்க நினைக்க. பிரேமாவோ, சரிவா என அழைக்க… ஜெய் பாதி சாப்பாட்டில் இருந்ததால், அவளையும் ஹரிஷையும் தவிர்த்து இவர்கள் நால்வர் மட்டும் கிளம்பினர்கள்.
ஏற்கனவே, வண்டி ஓட்டுனருக்கு அழைத்து சொல்லி இருந்தான் நேத்ரன். இவர்கள் உணவருந்திய இடத்திற்கு எதிரில் வண்டி நின்றிருக்க ஓட்டுநர்க்கு அழைத்து கேட்க, “புத்தாண்டு கொண்டாட்ட கேளிகைகளால் நெரிசல் ஏற்பட்டு உள்ளதாகவும், வண்டியினை திருப்ப முயன்றால் நெரிசலில் சிக்கிக்கொள்ள நேரும்” என கூற.
அவரை அங்கேயே இருக்க சொன்னவன், அச்சாலையை கடந்து பிரேமா, மற்றும் தங்கம்மாவை அழைத்து சென்று வண்டியில் ஏற்றிவிட்டு ( மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் வழியினை உபயோகித்து) ஹோட்டலை அடைந்ததும் தனக்கு அழைக்கும்மாறு சொல்லிவிட்டு அவர்களிடம் விடை பெற்று திரும்ப சாலையினை கடந்து வர.
அப்பொழுது பாதையில் கட்டுப்பாடு இல்லாமல் ஒரு கார் வர நேத்ரன், அதனை கவனிக்கவில்லை. ஏனெனில் அவன் நடைபாதையில் நடந்து வர, அப்பாதையில் வண்டி வரும் என அவன் எதிர்பார்க்கவில்லை. மேலும் வாகன நெரிசல், கேளிக்கை, கொண்டாட்டங்கள் காரணமாக ஒரே சத்தம், எனவே தன்னை நோக்கி வரும் ஆபத்தினை நேத்ரன் உணரவில்லை.
முதலில் அந்த வண்டியை கண்ட சூர்யா, யாரோ தவறாக வருகிறார்கள் என நினைக்க, அவ்வண்டி நடைபாதையில் பயணிக்க தன் உலகமே ஒரு நொடி ஸ்தம்பித்ததாக உணர்ந்தாள்.
தன்னவனுக்கு ஆபத்து என தெரிந்ததும் மற்ற எதை பற்றியும் சிந்திக்காது தன் உயிரை காப்பது ஒன்றே குறியாக அவனை நோக்கி ஓடினாள் சூர்யா.
“ த... தனு...தனுஊஊஊஊ...” என அவள் அவனை அழைத்த அழைப்புகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்போல் வீணாக,
அவ்வழைப்புகள் அவனை சென்றடையும் முன் அவ்வண்டி பெரும் சத்தத்துடன் நேத்ரனின் அருகில் உள்ள கம்பத்தில் மோதியதை கண்டாள்.
நேத்ரனுக்கும் அந்த கம்பத்திற்கும் உள்ள இடைவெளி ஒரு சில அடி தூரமே இருக்க, அந்த வாகனம், மோதியதினால் தனக்கு வெகு அருகில் கேட்ட சத்தத்தில் திரும்பிய நேத்ரன், ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனான். மறுநிமிடமே, தன்னை சுதாரித்து கொண்டவன், அந்நிலையிலும் தன்னவளின் மேல் கவலை கொண்டு அவள் என்ன செய்கிறாள் என காண திரும்பியவனின் மீது மலர் பந்தென விழுந்தாள் சூர்யா.
நேத்ரனுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என புத்தி உரைத்தாலும் மனம் நடுங்கவே செய்தது. நிகழ்ந்ததை நினைத்து.
ஓடிவந்த சூர்யா, அதே வேகத்தில் எக்கி அவனின் கழுத்தினில் தன் கைகளை மாலையாக்கி அவன் முகம் தன் மார்பில் புதையும் படி அணைத்திருந்தாள். அவ்வளவு இறுக்கமாக இருந்தது அவளின் அணைப்பு.
அவளைவனின் நலத்தினை அறியவும். எந்த வித இடரும் அவனை நெருங்காமல் காப்பது போல ... மேலும் தன்னுள் இறுக்கி கொண்டாள்.
அவனை விட்டு விலக வேண்டும் என எண்ணியவள் விரும்பியே அவனுள் சரண் புகுந்தாள்.
ஒருநிமிடம்... என்ன நடந்தது என புரியாமல் நின்றவனை நிகழ்விற்கு கொண்டுவந்தது.
சூர்யாவின் இறுகிய அணைப்பும்... அவள் உச்சரித்த பெயரும்... அவளின் முத்தமும் தான்.
சூர்யா, நேத்ரனை அணைத்த வேகத்தில் நின்ற இடத்தல் இருந்து ரெண்டடி பின்னால் சென்றவன், பின் சுதாரித்து நின்று, தன்னை அணைத்திருப்பவளை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அவள் உச்சரித்த பெயரும், தன்னவளின் கண்களில் கண்ணீருக்கு இணையாக பொங்கி வழிந்த காதலை கண்டு... இந்த அணைப்பும், தவிப்பும் தனக்கானது என கர்வம் கொண்டவன், தன்னுடைய இத்தனை வருட காத்திருப்பு வீண்போகவில்லை என்ற மகிழ்வில், “மை கியூட் டாலி...” என கூறி அவளை மேலும் தன்னோடு இறுக்கி கொண்டு... அவளின் அணைப்பில் திளைத்தான் அவளின் உயிருக்கு உயிரானவன்...
“ தனு...தனு... தனு…” என உதடுகள் அவன் பெயரை உச்சரித்து கொண்டிருக்க அவளின் விழிகள் கண்ணீர் சரம் தொடுக்க.
அவன் நலமாக உள்ளதை தன் மனத்திற்கு உணர்த்தும் பொருட்டு... அவனின் கேசம், நெற்றி, கன்னம், தோள்கள் என தன் நடுங்கும் கைகளால் தடவி கொடுத்து கொண்டிருந்தவள். அவன் கேசத்தை கோதி கொண்டிருந்த கைகளால், அவனின் தலையினை தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்து கொண்டாள். அவளின் செய்கை தொலைந்ததாக (இழந்து விட்டதாக) எண்ணிய பொம்மை திரும்பவும் கிடைக்க பெற்ற குழந்தை எப்படி அதனை தன்னோடு இறுக்கி கொள்ளுமோ… சூர்யாவும் அத்தகைய மனநிலையில் இருந்தாள்.
அந்நேரம், அவளுக்கு தன் வாழ்வில் நடந்த பிரச்சனைகள், விவேக் பற்றிய கவலை, தான் செய்து வைத்திருந்த தீர்மானம் என எதுவும் நினைவில் இல்லை. சூர்யாவின் ஒட்டு மொத்த நினைவு, உணர்வு, உயிர், உலகம் என அனைத்துமாக இந்நிமிடம் நிறைந்திருந்தது நேத்ரன் அதாவது அவளின் தனு… மட்டுமே.
தன்னவனின் நேசத்தினை மறுக்க நினைத்தவள், தன்னுடைய காதலை மறைக்க முடிவு செய்தவள், தற்பொழுது நடந்த நிகழ்வால்... எங்கே தன்னுயிரானவனை இழந்து விடுவோமோ என்ற பதட்டத்திலும், பயத்திலும் தான் என்ன செய்கின்றோம்… என்ன சொல்கிறோம் என அறியாமல். தன் மனத்தினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் சூர்யா. அவளவனின் கியூட் டாலி.
“ த... தனு… ஒ… ஒரு நி...நிமிஷம் எ… எனக்கு உ...உயிரே போ...போயிடுச்சு …. தெ...தெரியுமா..? உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சோன்னு ரொ... ரொம்ப ப... ப...பயந்துட்டேன். ஏன் என்னை தனியா விட்டுட்டு போனிங்க..?” என கூறிக் கொண்டே அவனின் பின்கேசத்தினை இறுக்கி பிடித்து, “ ப்ளீஸ் இனிமே இப்படி என்னை தனியா விட்டுட்டு போகாதீங்க…” என கூறிக் கொண்டே முன்னிலும் இறுக்கமாக அவன் முகத்தினை தன் மார்பில் புதைய செய்தவள், அவனின் உச்சியில் தன் முதல் முத்திரையை பதித்தாள். அவனின் உயிரானவள்...
அவளின் வாய்மொழியிலும்... இதழ் முத்தத்திலும் உயிர் மெய் என இரண்டும் சிலிர்த்த நேத்ரன், தன் அணைப்பை இன்னும் இன்னும் இறுக்கினான்.
முதலில் நேத்ரனின் அணைப்பில் நெகிழ்ந்தவள், அவனின் அணைப்பு இறுக இறுக… அதில் தன்னிலை அடைந்த சூர்யா, சுற்றுப்புறம் உரைக்க தான் இருக்கும் நிலை உணர்ந்து நாணம் மேலிட...
தன் அணைப்பில் இருந்து நேத்ரனை விலக்க முற்பட அவனோ, இத்தனை நேரம் தன்னவளின் மார்பு சூட்டின் கதகதப்பில் பூனை குட்டியாய் அவளின் அணைப்பில் சுகம் கண்டவன், அவ்வணைப்பின் சுகத்தினை இழக்க விரும்பாதவன் போல்… தன் முகத்தினை விலக்காமல் இடமும் வலமும் அசைத்து தன் விருப்பமின்மையை தெரிவித்து… மீண்டும் அவளின் பெண்மையின் மென்மையில் முகம் புதைக்க முயல.
நேத்ரனின் செய்கையில் கூச்சம் நெட்டி தள்ள இம்முறை அவனின் தோள்களில் கரம் வைத்து, தரையில் பாதம் பதிக்க முற்பட... அவளின் கால்கள் சமவெளியை அடையாமல் காற்று வெளியில் துழாவியது.
காரணம்… சூர்யா, நேத்ரனை நோக்கி ஓடிவந்து அவனின் உயரத்திற்கு எம்பி தோளில் தன் கைகளை மாலையாக்கி அணைத்ததால் சிறிது தடுமாறியவன், அவளை தன் உயரத்திற்கு தூக்கி தன்னோடு அணைத்த பிறகே சமாளித்து நிற்க முடிந்தது. அவள் அவனை நோக்கி வந்த வேகம் அப்படி...
அவளுடைய தேகம் மொத்தமும் அவளைவனின் உடலோடு உரசி கொண்டிருக்க இதுவரை அதனை உணராதவள், உணர்ந்த நொடி முதல் அவளை வெட்கமும், கூச்சமும் ஆட்கொள்ள… நேத்ரனின் செவியின் அருகில் தன் இதழ்களை கொண்டு சென்று, மிகவும் மென்மையான குரலில், “ ப்ளீஸ், கீழே இறக்கி விடுங்க…” என கூற.
சூர்யாவின் கெஞ்சலில் அவளின் முகத்தினை நிமிர்ந்து பார்க்க… தன் கரங்கள் மொத்தமாக அவள் மென்னுடலை தாங்கி நிற்பதினால் வெட்கம் கொண்டு தன் முகம் நோக்காமல் விழி தாழ்த்தி இதழ்கள் துடிக்க கன்னங்கள் சிவக்க தன்மீது சாய்ந்து இருந்தவளின் மலர்முகம்… அந்த கள்வனை இன்னும் இன்னும் பித்தம் கொள்ள செய்ய.
இத்தருணத்தினை விட்டால்… தன் காதலை சொல்ல மற்றொரு சிறந்த தருணம் வாய்க்காது என எண்ணிய நேத்ரன்.
சூர்யாவை மொத்தமாக கீழ் இறக்கி விடாமல், தன் முகத்திற்கு அருகாமையில் அவளின் தாமரை வதனத்தை கொண்டு வந்து தன் ஒட்டு மொத்த காதலையும் கண்களில் தேக்கி உயிர் உருகும் குரலில், “ டாலி... கொஞ்ச நேர முன்ன உன்னோட உயிரே போயிடுச்சுன்னு சொன்ன இல்ல… அப்படி ஒரு விஷயம் என்னை மீறி எப்பவும் நடக்காது டாலி.
பிகாஸ் “யுவர் பிரீத் இஸ் பாண்டட் வித் மை ஹார்ட் பீட்... அண்ட் மைன் இஸ் இன் யூவர்ஸ்”.... (your breath is bonded with my heart beat and mine is in yours).... உன்னை பார்த்த நாள் முதல்... மை ஹார்ட் டெல்ஸ் தட் யூ ஆர் மை சோல் மேட்... ஐ… ஐ லவ் யூ டாலி... ஐ லவ் யூ டில் மை லாஸ்ட் பிரீத்...” என கமலநேத்ரன் தன் காதலை, அவளின் விழி பார்த்து உரைக்க.
தன்னவன் காதல் உரைத்த தருணத்தினை பொக்கிஷமாய் தன் மனத்தில் சேமித்து வைத்து கொண்டாள் சூர்யா.
அவன் கண்களில் தெரிந்த தன் மீதான காதலில் உயிர் கசிய உள்ளம் உருக நின்றாள் பாவை. அவனின் காதலில் கர்வமும், கலக்கமும் ஒருங்கே கொண்டாள் பேதை.
கர்வம்...! அவன் காதல் தன்னிடத்தில் என்பதால்.
கலக்கம்...! இத்தகைய காதலை இழந்து விடுவோமோ என்று.
இந்த அலைப்புறுதலுக்கு ஒரு முடிவு வேண்டும். இனியும் தன்னால் இந்த மன அழுத்தத்தினை தாங்க முடியாது என எண்ணி, தன் வாழ்வில் நடந்தவைகளை பற்றியும், அந்த விவேக் பற்றியும் கூற வருகையில்.
இவ்வளவு நேரமும் தன்னவளின், முகத்தில் வந்து போகும் உணர்வுகளை பார்த்து கொண்டிருந்தவன்.
தன் காதல் கேட்டு, சூர்யாவின் முகம் பூவாய் மலர்ந்ததும், சிறிது நேரத்தில் அவளின் மதி முகத்தில் கலக்கம் சூழவும், பின்பு தீவிர யோசனைக்கு பிறகு அவளின் அதரங்கள் அசைய முற்படும் பொழுது, சூர்யாவின் இதழ்களை உரசியும் உரசாமலும் தீண்டிய நேத்ரன், “இப்ப எதுவும் சொல்லாத டாலி, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு என்ன ஆச்சோன்னு நீ துடிச்ச துடிப்பும், தவிப்பும் உன்னோட காதலை எனக்கு சொல்லிடுச்சு. எனக்கு உன்னோட காதல் புரிஞ்ச மாதிரி உனக்கு எப்ப என்னோட காதல் புரியுதோ அப்ப உன்னோட பதிலை சொல்லு…” என கூறித் தனக்கு தானே ஆப்பினை வைத்து கொண்டான் நேத்ரன்.
(டேய், அவளே இப்பதான் ஒரு முடிவுக்கு வந்து அந்த விளங்காதவனை பத்தி சொல்ல வந்தா, அதையும் கெடுத்த உன்னோட காதலை சொன்னியே.... தெளிவா சொன்னியா பார்த்த நாள் முதல அப்படின்னா நீ அவளை பார்த்தது 5 வருஷத்துக்கு முந்தி அவளுக்கு தெரிஞ்சி இப்ப கொஞ்ச நாள் முந்தி)
“அதுக்குன்னு ரொம்ப நாள் எல்லாம் வெயிட் பண்ண வைக்காத டாலி... நியூ இயர் ஸ்டார்ட் ஆகுறதுக்குள்ள சொல்லிடு” என கூறி கண்சிமிட்டியவன், அவளின் மூக்கோடு மூக்குரசினான் அவளின் இதய கள்வன்.
அவன் கூறிய பாவனையில் சூர்யாவின் முகத்தில் மெல்லிய புன்னகை மிளிர... ஏற்கனவே அவன்பால் வீழ்ந்த மனதை மேலும் வீழ்த்தியது அவனின் மென் உரசல். அவன் முத்தமிட்டிருந்தால் கூட இத்தகைய உயர்அழுத்த மின்சாரம் தாக்கியிருக்காது... அவனுடைய உதடுகள் பட்டும் படாமலும் உரசியதால் ஏற்பட்ட மென்தீண்டல் அவளின் உயிர் வரை சென்றுச் சிலிர்க்க வைத்தது.
சூர்யாவின் விழிகளில்... காதல் கரைபுரண்டோட மெல்ல அவன் தலை நிமிர்த்தி தன் கரங்களினால் கன்னங்களை தாங்கி கண்ணோடு கண்ணோக்கி,
“ வாய் வார்த்தையாய் சொன்னா தான் உங்கள் மீதான என்னோட காதல் உங்களுக்கு தெரியுமா தனு…” என கேட்க.
ஏற்கனவே, சூர்யாவின் தன்மீதான நேசத்தினை, அவள் வாய்மொழியாக அறிந்தத்தினாலும் அவளின் விழிமொழியில் தெரிந்த அளவிடமுடியா காதலிலும்... நேத்ரனின் தலை மறுப்பாக இடம் வலம் என அசைக்க.
அதில் மென்னகை சிந்தியவள், “ அப்புறம் எதுக்கு என்னோட காதலை சொல்ல சொல்லி கேட்டு, எனக்கு டைம் கொடுத்தீங்க…?” என சூர்யா வினவ.
“ அது... வந்து டாலி, நான் லவ் சொன்னதும் பஸ்ட் நீ ஹாப்பி ஆன உடனே முகத்தை ஒரு மாதிரி வச்சிக்கிட்டு யோசிச்சியா அதான் எங்க ஏதாவது நெகடிவ்வா, இல்ல மனசு சங்கடப்படுற மாதிரி எதையாவது சொல்லிடுவியோன்னு தான் இப்ப சொல்லாத அப்புறம் சொல்லுன்னு சொன்னேன்” என நேத்ரன் தன்னிலை விளக்கம் தர.
“ அது என்ன விஷயம் அப்படின்னு உங்களுக்கு தெரிஞ்சிக்க வேண்டாமா..?” என்றாள் சூர்யா.
அவள் முடிக்கும் முன்பே “வேண்டாம்…” என பட்டென்று கூறிய நேத்ரன், “ அந்த விஷயத்தை பத்தி யோசிக்கும் பொழுதே உன் முகம் வாடி போச்சு உன்னை சங்கடப்படுத்துற எந்த விஷயமும் நீ, எனக்கு சொல்லவேண்டாம். அதுவும் இப்ப நான் தெரிஞ்சிக்க விரும்பல. அதுவும் இல்லாமல் இன்னைக்கு உன்னோட மனசுல வேற எந்த விஷயத்திற்கும் இடம் இருக்க கூடாது. நான், என்னோட காதல் இது மட்டும் தான் உன் மனசு முழுக்க இருக்கணும்…” என நேத்ரன் கூறியவுடன். சூர்யாவின் விழிகளில் இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் சிந்த, அதற்கு எதிராக பெண்ணாளின் இதழ்களில் புன்னகை பூத்தது.
“ ம்ச்… இப்ப எதுக்கு இந்த கண்ணீர்” என கேட்டுக்கொண்டே, தன் கன்னங்களினால் அவளின் கன்னம் தொட்ட விழிநீரை துடைக்க சூர்யாவின் கன்னங்கள் இரண்டும் ரோஜாவாய் சிவந்தது.
நேத்ரனும், சூர்யாவும் சென்று வெகுநேரம் ஆகியும் திரும்பாமல் இருக்க அவர்கள் சென்ற பாதையில் ஏதோ விபத்து நடந்ததாக அறியவும். அந்த பாதுகாவலனின் தகவல் ஹரிஷை அடையவும் சரியாக இருக்க ஹரிஷும், ஜெயஸ்ரீயும் இவர்கள் இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
ஏற்கனவே நேத்ரன், சூர்யாவை தூக்கி கொண்டிருப்பதை அவ்வழியில் போவோரும் வருவோரும் ஒரு புன்னகையுடன், “கியூட் அண்ட் பியூட்டிபுல் கப்பில்ஸ்” என கடந்து செல்ல, புகைப்படம் எடுக்க முயன்றவர்களிடம், “ப்ளீஸ் நோ பிக் “என நேத்ரன் சொல்ல, பலர் சாரி சொல்லி சென்றுவிட ஒரு சிலர் புகைப்படம் எடுக்க, அங்கிருந்த நேத்ரனின் பாதுகாவலர்கள், சூர்யா அறியாமல் அவர்களை அப்புறபடுத்தினர்.
ஆம் நேத்ரனும் சூர்யாவும், பிரேமா மற்றும் தங்கம்மா இருவரையும் வழியனுப்ப வருகையிலே அவர்கள் நால்வரையும் பின் தொடர்ந்து வந்தவர்கள் இருவரில் ஒருவனை சூர்யாவிற்கு அரணாக நிற்க சொல்லிவிட்டு, மீதம் உள்ளவனை பிரேமா, தங்கம்மா இருவருக்கும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தான். தன் தாய் தந்தை இருவரும் விபத்துக்குள்ளாகி, உற்ற நேரத்தில் உதவி கிடைக்காமல், அதனால் தன் தந்தையினை இழந்ததில் இருந்து தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அவன் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய தவறுவதில்லை.
சூர்யாவை நோக்கி வந்து கொண்டிருந்தவன் மீது தான் கார் தன் கட்டுப்பாட்டை இழந்து மோத வந்தது.
அவள் உயிரானவன்...
அத்தியாயம் 22
நேத்ரனும், தனக்கு பின்னால் கார் வருவதை கவனிக்க வில்லை. ஏனெனில் நேத்ரனுக்கு முதுகு காட்டி சூர்யாவையும் அந்த உளவாளி மீது பார்வை பதித்திருந்தவன், சூர்யாவின் பதட்டம் கண்டே திரும்ப, அப்பொழுது தான் நேத்ரனை தொடரும் ஆபத்தினை அறிந்து தன்னுடைய தொலைபேசியில் இருந்து தொடர்பு கொள்ள,நேத்ரனும், வந்த அழைப்பை தன்னுடைய ப்ளூடூத் மூலமாக எடுக்க சொன்ன தகவலில் உடனே சுதாரித்து கடைசி வினாடியில் ஒதுங்க அந்த கார் அந்த கம்பத்தில் மோதியது.
இத்தகவலை ஹரிஷுக்கு தெரிவித்து விட்டு அந்த பாடிகார்ட், அவ்வாகனம் நோக்கி செல்ல அதன் உள்ளே ஒருவன் நன்றாக குடித்து விட்டு முழு போதையில் வண்டி ஓட்டியுள்ளான். அவனை அங்கிருந்த காவலர் வசம் ஒப்படைத்துவிட்டு தன் வேலையினை தொடர்ந்தான் அந்த பாதுகாவலன்.
தூரத்திலேயே ஹரிஷும், ஜெயஸ்ரீயும் வருவதை கண்டுவிட்ட சூர்யா. நேத்ரனிடம், மீண்டும், “அண்ணாவும், ஜெய்யும் வராங்க ப்ளீஸ் இறக்கி விடுங்க” என கூறிக் கொண்டே அவன் கைகளில் இருந்து இறங்க முயற்சி செய்ய அவளின் முயற்சி முயற்சியாக மட்டுமே இருக்க, அவனிடம் இருந்து அவளால் ஒரு இன்ச் கூட விலக முடியவில்லை என்பதைவிட அவன் விலக அனுமதிக்க வில்லை.
சூர்யா, அவனை என்னவென பார்க்க அவனும் அவளை பதில் பார்வை பார்த்து, “என் பெயர் சொல்லி சொல்லு ரியா டாலி…” என தன் நெற்றி கொண்டு அவள் நெற்றியோடு முட்டி கூற.
ஷ்... என தன் நெற்றியை தேய்த்துக் கொண்டே கண்கள் சுருக்கி இதழ் குவித்து அவனின் தாடை தாங்கி, “ப்ளீஸ்…நேத்ரன்” என சொல்ல.
“ யாரு டாலி, நேத்ரன்… எனக்கு அந்த பேர் பிடிக்கலை. கொஞ்சம் முன்ன செல்லமா, கிக்கா ஒரு பேர் சொல்லி கூப்பிட்ட இல்ல. அந்த பேர் சொல்லி கூப்பிடு நான், உன்னை இறக்கி விடுறேன்” என பேரம் பேசினான் அந்த தொழிலதிபன்.
சூர்யாவோ, இவன் செய்யும் சேட்டையில் வெட்கி, மாட்டேன் எனும் விதமாக மறுப்பாய் தலை ஆட்ட.
“ அப்ப, நானும் இறக்கி விட மாட்டேன். அவங்க வர வரைக்கும் ஏன் வெயிட் பண்ணிக்கிட்டு…? நாமே அவங்க கிட்ட போகலாம் வா” என கூறி நடக்க அரம்பித்தவனின் செயலில் பதறி போனவளாக சூர்யா, அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி, கால்களை உதறி என அவளின் மறுப்பை தெரிவிக்க.
அவன் எதையும் கண்டுகொள்ளவில்லை என அறிந்து கடைசியில், அவனின் சட்டை காலர்களை இறுக பற்றி கொண்டு, “ தனு... இறக்கி விடுங்க அவங்க பார்த்துட போறாங்க” என்ற சூர்யாவின் குரல் சிணுங்கலாய் ஒலிக்க. மனமே இல்லாமல் அவளை மெது மெதுவாய் கீழ் இறக்கி விட்டான் அவளின் அன்புக்குரியவன்.
நேத்ரன், சூர்யாவினை இறக்கிவிடவும் ஹரிஷும் ஜெயஸ்ரீயும் இவர்களை நெருங்கவும் சரியாக இருக்க.
நேத்ரனின் அருகில் வந்த ஹரிஷ், “ ஏன்டா, உனக்கு எதுவும் ஆகலையே” என அணைத்து கொள்ள.
“ டேய், எனக்கு ஒண்ணும் இல்ல இப்ப தான் உன் தங்கச்சி ஸ்டாப் பண்ணா நீ எதையாவது செஞ்சி அவளை மறுபடியும் ஸ்டார்ட் பண்ண வைக்காதே” என ஹரிஷை அணைத்தவாறே கூறியவன்.
தன் கைகளை தலைக்கு மேல் தூக்கி சோம்பல் நெட்டி முறித்தான். அவனின் செயலை பார்த்த ஹரிஷ் “ என்னடா, ஹெர்குலஸ் மாதிரி உலகத்தையே தூக்கி சுமந்துகிட்டு இருந்த மாதிரி பலமா நெட்டி முறிக்குற” என.
நேத்ரனோ, உதடுகளிள் புன்னகை அரும்ப, “ஆமாம் டா, நானும் இவ்வளவு நேரமும் என் உலகத்தை தூக்கி சுமந்து கிட்டு தான் இருந்தேன். அந்த ஹெர்குலஸ் முதுகுக்கு பின்னாடி தோளில் சுமப்பான். ஆனா நானோ முன்னாடி என் நெஞ்சில் சுமந்தேன்…” என கூறி சூர்யாவினை பார்த்து கண்சிமிட்ட.
சூர்யாவோ, ‘ ஐய்யோ..! இவருக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்ல அண்ணாவும், ஜெய்யும் இருக்கும் பொழுது என்ன பேச்சு பேசறார். அதுவும் பத்தாதுன்னு கண்ணை வேற அடிக்குறார்…’ என நேத்ரனை மனத்திற்குள் திட்டி கொண்டிருந்தாலும் தன்னவனின் கூற்றில் மனம் மகிழ தான் செய்தது.
ஜெயஸ்ரீயோ, ‘இவ முகம் அழுத மாதிரி இருந்தாலும் பிரைட்டா இருக்கு. இந்த அண்ணன் வேற சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுறாங்க. ஒண்ணும் புரியலை இந்த குண்டுஸ், தனியா சிக்கட்டும் என்னன்னு ஒரு என்குயரி பண்ணிக்கலாம்’ என தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.
கிட்டத்தட்ட ஹரிஷும் இவ்வாறே எண்ணினான்.( இது தான் மேட் போர் ஈச் அதர் அப்டிங்கிறதோ)
ஹரிஷ், நேத்ரனிடம், “சுத்தி பார்க்கலாமா..? இல்ல ஹோட்டலுக்கு திரும்பலாமா..?” என கேட்க அவனோ, சூர்யாவினை பார்க்க, சூர்யாவோ ஜெய்யிடம் கேட்க.
அவளோ, “ஹோட்டலுக்கே போகலாம் “ என கூற.
அனைவரும் அவர்களின் வண்டி நோக்கி சென்றனர்.
விவேக், ஏற்பாடு செய்த உளவாளியோ, அவர்களை ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியாமல் திண்டாடினான்.
அந்நேரம் அவனுக்கு அழைத்த விவேக், “ வாட் ஹாப்பன்? இன்னும் ஏன் எனக்கு ஒரு பிக் கூட சென்ட் பண்ணலை” என அவனிடம் காய்ந்து கொண்டிருந்தான். எங்கே அவன் அவர்களை புகைப்படம் எடுக்க தொடங்கும் போது சொல்லி வைத்தது போல் தடங்கல்களும், பிரச்சனைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வர அவன் மட்டும் என்ன செய்வான். இதில் சற்றுமுன் சூர்யாவும், நேத்ரனும் இருந்த நிலையினை இவனிடம் சொன்னால் மேலும் காய்வான் அதனால் உண்மையை மறைத்து, “ இங்க கூட்டம் ஜாஸ்தி சார், அதனால என்னால பிக் எடுக்க முடியலை… அவங்களும் கிளம்பிட்டாங்க” என கூற.
அங்கே விவேக்கோ, “ஷிட் அவ கிளம்பிட்டா அப்படின்னு சொல்ல தான் நான் உனக்கு இவ்வளவு செலவு செய்றேனா போ… ஹோட்டலுக்கு போய் அவங்க நெருக்கமா இருக்க மாதிரி உள்ள புகைப்படம் எடுத்து அனுப்பு. எனக்கு வேணும் “ என அவனை ஒருவழி ஆக்கி கொண்டிருந்தான் விவேக்.( ஐய்யோ..! விவேக் நீ என்னதான் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் அப்படி ஒரு போட்டோ உன்னோட உளவாளியால எடுக்க முடியாது ).
அந்த உளவாளியோ தயங்கி தயங்கி, “சார், அவங்க ஹோட்டல்குள்ள எல்லாம் போக முடியாது. ஏன்னா இன்னைக்கு நியூ இயர் இவ் செலேப்ரஷன் சோ, அங்க தங்கியுள்ள கெஸ்ட் மற்றும் இன்வைட் பண்ணவங்களுக்கு மட்டும் தான் என்ட்ரி அல்லோவெட்...” என திக்கி திணறி சொல்லி முடிக்க.
அந்த பக்கம் கேட்டுக் கொண்டிருந்தவனோ கோபம் கண்ணை மறைக்க பேசிக் கொண்டிருந்த அலைபேசியை தூக்கி அடித்திருந்தான். அது சுவற்றில் மோதி உயிர் விட்டிருந்தது.
இங்கே விவேக்கோ, அடிபட்ட புலியாய், சீற்றம் கண்டு உறும அங்கே சூர்யாவும், நேத்ரனும் தங்களுக்கான புது உலகத்தில் மகிழ்ந்து கொண்டிருந்தனர்.
சூர்யா, நேத்ரன், ஹரிஷ், ஜெயஸ்ரீ என அனைவரும் ஹோட்டல் வந்த பின்பு பெண்கள் இருவரும் அறைக்கு செல்ல முற்பட, நேத்ரனோ, “வாங்க எல்லாரும் நியூ இயர் பார்ட்டில கலந்துகிட்டு கொஞ்ச நேரம் இருந்திட்டு போகலாம்” என கூற( அவனிற்கு இன்னும் சிறிது நேரம் சூர்யாவோடு நேரம் செலவிட விருப்பம் கொண்டு எதை பற்றியும் யோசியாமல் அவ்வாறு சொல்ல).
ஹரிஷ் அதிர்ச்சியுடன் நேத்ரனை காண அவனோ இவ்வுலகத்திலேயே இல்லாமல் இருக்க, ‘இவன் என்ன நினைச்சி சூர்யாவையும், இந்த குச்சி சிப்ஸையும் பார்ட்டி ஹால்குள்ள அழைச்சிக்கிட்டு போறான்னு தெரியலையே பார்ட்டி ஸ்டார்ட் பண்ணலைன்னா தப்பிச்சோம். ஸ்டார்ட் ஆகி இருந்தது அவ்வளவுதான்’ என தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.
ஜெயஸ்ரீயோ, ‘அவன் அவன் தண்ணி போட்டு பண்ற சேட்டையெல்லாம் பார்க்கணுமா கடவுளே’ என மானசீகமாக தலையில் அடித்து கொள்ள.
சூர்யாவோ, இது போன்ற பார்ட்டிகளில் கலந்து கொள்ளாததினாலும் இங்குள்ள கலாசாரத்தினை வாய்மொழியாகவே கேள்வி பட்டதினால் எந்தவித பயமும் இல்லாமல் சென்றாள்.
பார்ட்டி ஹால் நெருங்க நெருங்க நேத்ரன், சூர்யாவின் கரம் பற்ற, ஹரிஷோ ஜெயஸ்ரீயை ஒட்டி நடந்து வந்தான்.
அவர்கள் அனைவரையும் ஹாலின் வாசலுக்கே வந்து வரவேற்றார் ஹோட்டலின் மேலாளர்.
“ தங்களுக்கு எந்த வித சிறப்பு கவனிப்பும் தேவையில்லை” என மறுத்த நேத்ரன், அவரை அவரின் வேலையினை பார்க்க சொல்லி அனுப்பிவிட்டான்.
ஹரிஷோ, மனம் கேளாமல் நேத்ரனை நெருங்கி, “கமல் கண்டிப்பா நாம பார்ட்டி அட்டெண்ட் பண்ணனுமா” என கேட்க.
அவன் கேட்கும் பாவத்தினை புரிந்து கொள்ளாமல், “ வாடா, கொஞ்ச நேரம் இருந்திட்டு கிளம்பி போகலாம்” என கூறி முன்னேற, (ரைட் கட்டதுரைக்கு இன்னைக்கு கட்டம் சரி இல்லை அம்மா, பார்ட்டி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அட்டெண்டென்ஸ் போட்டுட்டு போக சொன்னாங்க. இப்ப உள்ள என்ன நிலமையோ..? கடவுளே நீ தான் காப்பத்தணும் என கூறி நேத்ரனை பின் தொடர்ந்தான்).
அங்கே உள்ளே சென்றதும் ஒன்றும் புரியாமல் பார்க்க அங்கு விரிந்த காட்சிகளை கண்டு நேத்ரன், தன்னை தானே நொந்து கொண்டான். காரணம் பார்ட்டி ஆரம்பித்து மதுபானம் அனைவர் கரங்களையும் அலங்கரித்து அவர்கள் ஹோட்டலின் நியூ இயர் கொண்டாடத்திற்காக பார்ட்டி அந்த ஹாலில் நடைபெற்று கொண்டிருந்தது.
அங்கே ஆண் பெண் பேதம் இல்லாது அனைவரும் கேளிக்கையில் திளைத்திருக்க ஒருசிலர் இடை மற்றும் தோள் அணைத்தும் பலர் இதழ் அணைத்தும் தங்களின் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டிருந்தனர்.
மற்றைய சமயமாக இருந்தால் சூர்யா, இந்த நிகழ்வுகளை எளிதாக கடந்து சென்றிருப்பாள். ஆனால் இப்பொழுதோ காலையில் தொடங்கி சற்று நேரத்திற்கு முன் வரை நிகழ்ந்தவைகளாலும் அதுவும் நேத்ரன் அவளின் இடையினை அணைத்து கொண்டிருக்கையில் சூர்யாவோ அவ்வரங்கத்தில் இயல்பாக இருக்க முடியாமல் தவிக்க.
அவளின் உடல் மொழியினை புரிந்து கொண்டவன், அவளின் காதில் தன் உதடுகள் உரச, “ சாரி பார்ட்டி ஆரம்பிச்சு இருக்கும்ன்னு நினைக்கலை டாலி வெளிய போகலாமா...?” என கேட்க.
ஏற்கனவே உணர்வுகளின் தாக்கத்தில் அவள் தவிக்க அதற்கு இன்னும் தூபம் போடுவது போல் நேத்ரனின் உதடுகளின் உரசலும், அவனின் வெப்ப மூச்சுகளும் என அவள் கன்னங்கள் சூடேற பால் வண்ண கன்னங்கள் சிவக்க இதற்கு மேல் இங்கிருந்தால் தன் வசம் இழந்துவிடுவோம் என பயந்து நேத்ரனின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவ்விடம் விட்டு சென்றாள்.
நேத்ரனும் அவளை பின்தொடர, அவளோ தோட்டத்தில் உள்ள நீச்சல்குளம் அருகில் நின்றிருந்தாள், அவன் அவளை நெருங்கும் வேளையில், புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு வானவெடிகள் வெடிக்க அச்சத்தத்தில் பயந்து அவள் பின்னால் செல்ல, நேத்ரன் அவளை தன் பக்கமாக இழுக்க, மொத்தமாக அவன் மார்பின் மீது வந்து விழுந்தாள் சூர்யா.
ஏனெனில், இன்னும் ஒரு அடி அவள் எடுத்து வைத்திருந்தால் சூர்யா, நீச்சல் குளத்தில் வீழ்ந்திருப்பாள்.
அந்த பயத்தில் அவளின் உடல் நடுங்க நேத்ரனோ, தான் இழுத்ததினால்தான் பயத்தில் நடுங்குகிறாள் என எண்ணி கொண்டு, “ ரியா, ஈசி நான் தான், ஒண்ணும் இல்லை” என கூறி அவளின் முதுகை தடவி கொடுக்க சற்று ஆசுவாசம் ஆனதும். அவனின் முகம் பார்க்க, அந்நேரம் அவனும் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
அங்கே பல வண்ண விளக்குகளால் அந்த தோட்டம் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருக்க, அதில் இருந்து வரும் பலவண்ண ஒளி, சூர்யாவின் முகத்தில் மோதி வர்ணஜாலம் புரிந்தது.
மொத்தமாக தன் கைக்குள் அடங்கி இருக்கும் பெண்ணவளை காண காண நேத்ரனின் உள்ளம் தன்வசம் இழக்க தயாரானது.
அவனின் கரங்களில் ஒன்று அவள் இடை அணைத்திருக்க... முதுகை நீவிய கரம், அவள் மதிமுகத்தில் படர்ந்திருக்கும் கூந்தலை ஒதுக்கி காதில் சொருக, அச்சிறு தீண்டலும் தாங்காது விழி மூடி இதழ்கள் துடிக்க நின்றாள் சூர்யா.
சற்றுநேரத்திற்கு முன்பு அவளிட்ட முத்தம் நினைவிற்கு வர அதற்கு பதில் தர நேத்ரன் பேரவா கொண்டு அவளின் முகம் நோக்கி குனிந்து.
சூர்யாவின், காது மடலில் மென்முத்தம் பதித்தவன் மீசை ரோமங்கள் உரச, “ஐ நீட் யுவர் பிரீத் போர் மை ஹார்ட் ( என் இதயத்திற்கு உன் சுவாசம் உயிர் மூச்சு வேண்டும்) ப்ளீஸ் டாலி…” என பட்டினும் மென்மையான குரலில் கேட்க.
விழிமூடி இருந்தவள், அவனின் குரலில் வசீகரிக்க பட்டு விழி திறந்து அவனை பார்க்க, அவள் விழிகளில் தனக்கான காதலும், தாபமும் வழிய... இதற்குமேல் வாய்வார்த்தைகள் தேவை இல்லை என அவன் உதடுகள், பெண்ணவளின் இதழ்களில் தங்களுடைய காதல் காவியத்தினை எழுத துவங்கியது.
இவர்கள் நிலை இப்படி இருக்க ஹரிஷும் ஜெயஸ்ரீயின் நிலைமையோ...
அங்கே கூட்டத்தில் ஒருவன் ஜெய்யிடம், “ ஹாய் பியூட்டி, கம்ஆன் லெட்ஸ் டான்ஸ் வித் மீ” என கேட்க... இங்குள்ள பழக்க வழக்கங்கள் அறிந்தமையால் புன்னகை முகத்துடன், “ நோ, ஐ அம் நாட் இன்டெர்டெஸ்டேட்” எனக் கூறி விலக முழு போதையில் இருந்தவனோ... ஜெய்யின் கை பற்றி இழுக்க, அதில் வெகுண்ட ஹரிஷ், அந்த வெளிநாட்டவன் பற்றிய அவள் கையின் முழங்கையை பற்றி, “ஹேய்… லீவ் ஹேர்... ஷி இஸ் மைன்” என கூறி அவனின் கையினை உதறிவிட்டு விட்டு ஜெயஸ்ரீயை பிடித்த பிடி விடாமல் ஹாலை விட்டு அழைத்து இல்லை இழுத்து கொண்டு வந்தான்.
ஹரிஷ் நடந்து கொண்டது கொஞ்சம் அதிகப்படியானது என்றாலும் ஏனோ ஜெயஸ்ரீயின் மனத்திற்கு அவனின் வார்த்தைகளும் அவனின் செய்கையும் சற்று இதமாகவே இருந்தது.
தாய், தந்தை இழந்து எல்லா முடிவுகளையும், பிரச்சனைகளையும் சுயம்புவாய் நின்று சமாளித்தவளுக்கு, தனக்கு ஆதரவாகவும் தன்மீது அக்கறையுமாக ஹரிஷ் நடந்து கொண்டதில் மகிழ்ந்தாள் பாவை.
அதனால் தன் கரம் பற்றி ஹரிஷ் இழுக்க அங்கே அவ்விடத்தில் மறுப்போ எதிர்ப்போ தெரிவித்தால் முறையாகாது என அவனின் செயலுக்கு உடன்பட்டு தானும் அந்த அரங்கத்தில் இருந்து வெளியேற, ஹரிஷோ, கோபத்தின் உச்சியில் இருந்தான்.
காலையில் ஒருத்தன், லவ் ப்ரொபோஸ் பண்றேன்னு இவ பின்னாடியே வந்தான், இப்ப என்னடானா இன்னொருத்தன்,“ ஹாய் பேபி... கம் டான்ஸ் வித் மீ” அப்படின்னு சொல்லி கையை பிடிக்குறான். இந்த லூஸும் சிரிச்சிகிட்டே ஐ அம் நாட் இன்டெர்டெஸ்டேட்னு சொல்லுது. ஏன் இன்டெர்டெஸ்டேட்ஆ இருந்தா அவன் கூட போய் டான்ஸ் ஆடுவாளோ…?( டேய், அவ ஆடுறா இல்ல அது அவ இஷ்டம் உனக்கு என்ன மேன் கஷ்டம் இதுல). எதனால் இந்த கோவம், ஆத்திரம் என புரியாமல் ஹரிஷ், தன் மனதோடு போராட.
ஹரிஷ் பற்றிய கரம் வலியெடுக்க அவனின் கோபம் தெரியாமல் புரியாமல் ஜெயஸ்ரீயோ,
“விடுங்க ஹரிஷ்,கை வலிக்குது” என கூற.
உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த ஆத்திரம் பற்றி எரிய ஜெய்ஸ்ரீயின் வார்த்தைகள் போதுமாயிருக்க. அந்த வெளிநாட்டவனிடம் காண்பிக்க முடியாத கோபம் எல்லாம் இவள் புறம் திரும்ப.
“ ஏன் அவன் பிடிச்சுக்கிட்டு இருக்கும் பொழுது வலிக்கலை. நான் பிடிச்சா வலிக்குதா..?” என வார்த்தைகளை கடித்து துப்ப, அவன் என்ன கூறினான் என புரிய ஜெயஸ்ரீக்கு சில நொடிகள் தேவைப்பட்டது.
புரிந்ததும் அவள் கண்களில் கனல் தெறிக்க ஒருவித நிமிர்வுடன் அவனை பார்த்தவள், பதில் பேசாது ஹரிஷ் கரத்தில் இருந்து தன் கையினை விடுவிக்க முயற்சிக்க.
ஜெயஸ்ரீயின் இச்செய்கை... ஹரிஷின் கோப அக்னிக்கு இன்னும் நெய் வார்ப்பது போல் ஆக,
“ என்னடி, திமிரா கேட்டா பதில் சொல்ல மாட்டியோ..?” என சீற, ( ஆடு, வான்டெட்ஆ வந்து பிரியாணி போட சொல்லுது).
ஹரிஷை நேருக்கு நேராக பார்த்து, “ஆமா பிடிச்சிருந்தது” (அவன் கை பிடிக்கிறப்போ நீங்க என்மேல காட்டுன அக்கறை, உங்களோட கோபம் இதெல்லாம் பிடிச்சுது). முன்னதை சத்தமாகவும் பின்னதை மனத்திற்குள் சொன்னாள்.
“நீங்க என் கை புடிச்சிக்கிட்டு இப்படி கேக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கலை அது மட்டும் இல்ல அருவெறுப்பாவும் இருக்கு” ( உங்களோட போய் அந்த குடிகாரனை கம்பேர் பண்ணி இப்படி கேள்வி கேட்குறீங்களே ஹரிஷ் என நினைத்தவளின் முகம் பிடித்தமின்மையினை காட்ட).
அவளின் முகத்தினையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவளின் பேச்சிலும், அவளின் முகபாவத்திலும் தன்னிலை இழந்தவனாக, “என்னடி சொன்ன…? அருவெறுப்பா இருக்கா இருக்கும் டி... இருக்கும்” என கூறிக் கொண்டே ஜெயஸ்ரீயின் தோள்களை பற்றி ஆவேசம் வந்தவன் போல் உலுக்க.
“ நான், கை பிடிச்ச அசிங்கமா அருவெறுப்பா இருக்குன்னு சொன்னல்ல” என கூறி கொண்டே அவளை இன்னும் நெருங்கி அவளின் முகம் பற்றி கண், மூக்கு, கன்னம் என எந்தவித பாகுபாடு இன்றி முகம் முழுக்க முத்தம் பதித்தான்.
ஹரிஷின் இந்த செய்கையினை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஜெயஸ்ரீ, முதலில் அதிர்ந்தாலும், பின் அவனை தன்னிடம் இருந்து பிரிக்க செய்த முயற்சிகள் யாவும் வெற்றிகரமாக தோல்வியை தழுவ.
முதலில் கோபத்திலும், ஆத்திரத்திலும் அவளை முரட்டுத்தனமாக முத்தமிட்டு கொண்டிருந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக வன்மையினை கைவிட்டு மென்மைக்கு வந்து அவளின் உதட்டில் இளைப்பாற, அவனின் கைகளோ அவளை மேலும் மேலும் தன்னில் இறுக்கிக்கொண்டது.
அவன் உயிரானவள்…