All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கதை திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீழே உள்ள இணைப்பில் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜேஜேவின் கை அருகில் என் சொர்க்கம் 29 நேயர் விருப்பத்திற்க்காக ஒரு குட்டி டி இப்போ ..சரி

சரி...நீங்க முறைக்கறது தெரியுது...இந்த டைம் டி ஆன்னு ...இது டி குடிக்கற டைம் இல்லாதான் இப்போ... வேணா.. ஈவினிங் குடிங்க பாஸ் :smiley23::smiley23:



கை அருகில் என் சொர்க்கம் 29

"சம்யு செல்லம்.... ஒன்றை எப்போதும் நினைவில் வை ...நம்ம இப்போ போட்ட ரோலுக்கு இந்த முறைப்பும் வெறுப்பும் சூட் ஆகாது டார்லிங் ...எது தெரியுமா சூட் ஆகும் ?" என்றபடியே காரினை ஒரு ஓரத்தில் வளைத்து நிறுத்தியவன் கைகள் ...


காரின் உள் விளக்கினை ஒளிர விட்டபடி மின்னலென அவளை பிடித்திழுத்து அவள் முகத்தை பற்றியிருந்தது. அவன் கைகளின் அழுத்தம் அவளை விலகவிடாமல் செய்ய


வெறுப்பு சுமந்த அவள் கண்களை பார்த்தவன் பார்த்தபடியே அவள் இமைகளில் உதடுகளை ஒற்றி எடுக்க...வெறுப்பு சுமந்த கண்கள் இப்போது தடுமாறின...இறுகிய அவள் உடல் நெகிழ்வை சுமந்தது.இன்னொரு இமைகளிலும் அவன் உதடுகள் படிந்து மீள அவனது தகிக்கும் வெப்பம் சுமந்த மூச்சு காற்றின் வெம்மையை உணர்ந்த அவள் நாசி அவனது புறம் இன்னும் சரிந்தது.

.....

"இனி ஒரு முறை என்னை வெறுக்கிறேன் என்ற வார்த்தை உன்னிடம் இருந்து வந்தது...அதன் பிறகான விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல...பார்த்து நடந்துகொள் " இறுக்கமான குரலில் உரைத்தான்.


 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ் ,

ஜேஜே வின் கை அருகில் என் சொர்க்கம் 29 எபிசொட் போஸ்ட் பண்ணியாச்சு பிரெண்ட்ஸ் .

சாரி.... கொஞ்சம் பெர்சனல் வேலை என்பதால் அப்டேட் தர முடியவில்லை.நான் முன்பே அதுபற்றி சொல்லியிருந்தேன்.உங்களை காக்க வைப்பது என் நோக்கமல்ல.எப்போது எனக்கு திருப்தி அளிக்கும் வகையில் எழுதி முடிகிறேனோ, அப்போதே உடனே அது எந்த நேரமாக இருந்தாலும் கதையை பதிவிட்டு விடுவேன். சில நேரங்களில் நமது உணர்வுகள் கதையில் கொட்ட வேண்டிய உணர்வுகளுக்கு எதிர்பதமாக இருக்கும்.அப்போது சரியாக அந்த காரெக்டரின் உணர்வுகளை கொண்டுவரமுடியாது.அதனால் சில சமயம் காலதாமதமாகும்.மன்னியுங்கள்.

(நான் ஒன்றும் பெரிய ரைட்டர் இல்லைதான்.ஓவர் பில்ட் அப் உடம்புக்கு நல்லதில்லைனு நீங்க திட்டுவது கேட்கிறது.):p:p:p:p

நீங்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றி. லைக் கொடுத்தவர்களுக்கு கருத்துக்களை பகிர்ந்தவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. எப்போவும் லைவ்ல்லி ஆகவும், சிரிக்கும்படியும் கருத்துக்களை கொடுத்து என்டேர்டைன் பண்ணுவபர்களுக்கு என் கோடானு கோடி நன்றி.சைலன்ட் படிப்பாளிகளுக்கும் நன்றி. :smiley58::smiley58::smiley58:

குறைகளை நிறைகளை சுட்டி காண்பித்தால் நானும் சந்தோஷப்படுவேன் பிரெண்ட்ஸ்.:smiley56::smiley56::smiley56:

நன்றியுடன் உங்கள் ஜேஜே .
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீழே உள்ள இணைப்பில் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ் ,

ஜேஜே வின் கை அருகில் என் சொர்க்கம் 29 ( 2 ) எபிசொட் போஸ்ட் பண்ணியாச்சு பிரெண்ட்ஸ் .

நன்றியுடன் உங்கள் ஜேஜே .
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீழே உள்ள இணைப்பில் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கை அருகில் என் சொர்க்கம் 30 டீஸர்

எதோ பக்கம் இருப்பது போல தோன்றுகிறதே என்று கை நீட்டினால் இவனுக்கு என்ன வந்தது...ஐயா பெரிய ஹீரோ...அந்த பூவை பிடுங்கி தந்து என்னிடம் ஹீரோயிசம் காண்பிக்க வேண்டும் என்று யார் அழுதார்கள்....முதலில் என்னை பின் தொடர்ந்து எவனை யார் வர சொன்னார்கள்...எப்போதும் என்னை வேவு பார்த்துக்கொண்டே..இது ஒரு பழக்கம் இவனுக்கு ...செத்தெருமை செத்தெருமை... உள்ளேயே நொடித்துக்கொண்டாள்.இவனையெல்லாம் எதில் சேர்ப்பது...நன்றாக தத்தளிக்கட்டும்...


சேறு பூசி குளித்து சும்மா தகதகன்னு மின்னுவான் என்று உள்ளே போனானோ...இப்போதும் வாய் திறந்து என்னிடம் கேட்கிறானா உதவி செய் என்று...அத்தனை ஆண் என்ற மனோபாவம்...இவளால் என்ன செய்ய முடியும் என்ற நினைப்பு...கிடடா இன்னும் கொஞ்ச நேரம் உள்ளேயே...அப்போது தெரியும் இந்த சம்யு யார் என்று...இப்போது கூப்பிடேன் உனது அந்த சேவகர் படையை...இப்போது உதவுகிறதா உனது திமிர்த்தனம்...இப்போது உதவிக்கு வருகிறதா உன் பணம்...நான்தான் இப்போது உனக்கு உதவ வேண்டும்...உதவி கேட்க வாய் வருகிறதா பார்...கல்லுளி மங்கன்...வாயை திறந்தால் முத்து உதிர்ந்து விடுமோ...இப்போதும் பார்ப்பதை பார்...உறிஞ்சி எடுப்பது போலஒரு பார்வை...பார்க்கிறேன் நானும் எவ்வளவு நேரம் நீ தாக்கு பிடிப்பாய் என்று...இல்லை என்றால் அப்படியே கிடந்து தத்தளி ...கருவிக்கொண்டே அதை கண்களில் பிரதிபலித்தவாறு கரையோரம் கை கட்டி நின்று கொண்டிருந்தாள்.


அவனும் தளராது...வாய் திறந்து எதுவும் சொல்லாது... அவளையே பார்த்தபடி மறுபடியும் ஒருமுறை நீரில் மூழ்கி மேல் எழுந்தான்.
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ் ,

ஜேஜே வின் கை அருகில் என் சொர்க்கம் 30 எபிசொட் போஸ்ட் பண்ணியாச்சு பிரெண்ட்ஸ் . குட்டி எபிசொட் தான். மன்னிச்சு பிரெண்ட்ஸ்.

லைக் கொடுத்தவர்களுக்கு கருத்துக்களை பகிர்ந்தவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. எப்போவும் லைவ்ல்லி ஆகவும், சிரிக்கும்படியும் கருத்துக்களை கொடுத்து என்டேர்டைன் பண்ணுவபர்களுக்கு என் லவ்.சைலன்ட் படிப்பாளிகள் வெளியே வாங்க.

குறைகளை நிறைகளை சுட்டி காண்பியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றியுடன் உங்கள் ஜேஜே .
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கீழே உள்ள இணைப்பில் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 
Last edited:
Status
Not open for further replies.
Top