கை அருகில் என் சொர்க்கம் 27 எபிசொட் டீசெர்
எல்லோரும் விடை பெற...இறுக்கமான முகத்துடன் இருந்த சைதன்யா வை பார்க்கவே...உள்ளே உள்ளே கிலியாக இருந்தது சம்யு வுக்கு. எப்படி கிடைத்தது போட்டோ எல்லாம் இவனிடம்...கேட்கலாமா..வேண்டாமா...மனதுள் ஏகப்பட்ட கேள்விகள்...அவனை பின் தொடர்ந்து போன மைக் மற்றும் பிலிப்பை பார்த்தபடி பின்னால் நடந்தாள் அவள்.
"எல்லாம் பக்கவா இருந்துது.... மைக்.... .நைஸ் அரேஞ்சமென்ட் இன் எ வெரி சோர்ட் டைம் அண்ட் வெரி நைஸ் ப்ரெசென்ட்டேஷன்" என்று சைதன்யா பாராட்ட ...
"தாங்யு சார்..." என்றபடி...நடக்க..
"போட்டோஸ் எல்லாம்.." என பிலிப்பிடம் கேட்க்க......
நீங்க சொன்ன மாதிரி எல்லாம் சம்யு மேடம் லாப்டாப்பில் இருந்து எடுத்து பண்ணோம் சார்....
"வாவ்... வெரி நைஸ் எடிட்டிங் மேன்...எஸ்ட்ரோடினரி...எல்லாம் அவ்வளவு ரியல் போல இருந்தது...." என சைதன்யா பாராட்டியவன் ...
எதோ சொல்ல வந்த பிலிப்பை தடுத்து ...
"அந்த நியூஸ் நாளைக்கு நான் சொன்ன மாதிரி வரணும்...அவன் இதோட எந்திரிக்கவே கூடாது...எல்லாம் பார்த்து செஞ்சிடு..."
சொல்லியபடியே அவனை அனுப்பி ..
பின்னால் திரும்பி சம்யுவை பார்த்தவன்..
."நீயும் நல்ல நடிச்ச...ஆனாலும் உன்ன பாராட்டுவது தப்பு தான்...நீ தான் பிறவி நடிகை ஆச்சே... உனக்கு நடிக்க சொல்லியா தரணும்...என்று குத்தியபடி...
தள்ளி நடந்தவளை அருகில் இழுத்து...அவன் அருகில் நிறுத்தியபடி... "இனிமேல் நீ என்கூட...என் பக்கத்தில தான் வரணும் ....யாருக்கும் எந்த சந்தேகமும் வர கூடாது...அது மாதிரி தான் நீ எப்பவும் நடந்துக்கணும்...புரிஞ்சுதா..? ஏன்னா இந்த உலகத்துக்கு பார்வையில நம்ம லவ் பண்றோம்....எனக்கு இந்த ப்ராஜெக்ட் அவ்வளவு முக்கியம் அண்டர்ஸ்டாண்ட் ..அதுக்கு எதிரா...நீ சுண்டுவிரலை.... உன் சுண்டுவிரலை அசைச்சா கூட...உன் அப்பா..." என்று நிறுத்தி கைகளை காற்றில் அசைத்து காலி என்பது போல் சைகை செய்தான் அவன்.
எல்லையில்லா வெறுப்புடன் அவனை பார்த்திருந்தாள் சம்யு.
ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி...
www.srikalatamilnovel.com