All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆஹா எப்படி வில்லனோட வீடெல்லாம் இப்படி நந்தவனம் போல் அழகா இருக்கு என அவள் நினைப்பது அருமை ( ஆனா இவர் வில்லன் இல்லைம்மா ஹீரோ ) கெத்தாக சென்றவள் முதலில் வீட்டை பார்த்து மலைக்கிறாள், பின் களைப்பில் சோர்வடையும் நேரம் தான் ஏகவாமன் வருகிறான். அவனை பார்த்தவுடன் முதலில் அதிர்ச்சி தான் ஏற்படுகிறது, முக ஒற்றுமை கண்டு காருண்யன் தான் உயிர்பிழைத்து வந்துவிட்டானோ என எண்ணி மகிழ்ந்து அவனை நோக்கி அவள் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கும் இவனுக்குமான வேற்றுமைகளை உணர்கிறாள். அவன் முகத்திலும் இவளை கண்டவுடன் ஒரு உணர்வு பின் அவன் மேல் புகார் கொடுத்தவள் என்று அறிந்தவுடன் அவன் பார்வை அப்படியே மாறுகிறது.ஏகவாமனை அவள் பார்வையில் அறிமுகம் செய்த விதம் அருமை. அவனின் கூர்மையான பார்வையில் இவளுக்கு பேச்சே எழவில்லை. ஒருவாறு தைரியம் கொண்டு பேசியவுடன் வேலையாளின் செய்கையில் நடுங்கி விடுகிறாள். இப்போது ஒருவன் வாமனை தாக்க முற்படுகிறான், இனி என்ன அடுத்தது நமக்கு ஒரு அசத்தலான ஆக்ஷன் பதிவு தானே சிவா மா......... இதை தான் நான் எதிர்நோக்குகிறேன் ( நம் ஆக்ஷன் நாயகனுக்கு இப்படியொரு அறிமுகம் வேண்டுமல்லவா) வெயிட்டிங்...
ஹீரோயினுக்கே கூஜா தூக்கறீங்க நியாயமேயில்ல... அவள மட்டும் பக்க பக்கமா வர்ணிச்சீங்க...ஆனா வாமனுக்கு மட்டும் குட்டியூண்டா போச்சு... ஆனாலும் ஆளு பிக் அள்ளுது... செம டெர்ர் போல... காருண்யன் இவனும் இரட்டையர்களா இல்ல இவனே தா அவனா... எபி சிறுசா இருந்தாலும் கார சாரமா இருந்ததால் பொழச்சு போங்க
போலிஸ்ஸை பார்த்து வெளுத்து வாங்கிய அலரந்திரி வாமன்னை பார்த்து இப்படி மலைத்து பார்பதை பார்த்தால் இவள் அவனிடம் காருண்யனை பற்றி சொல்வாளா இல்லை மயங்கி விழுந்து விடுவாளா சகோ
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.