All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
பயணிக்கும் வழியிலேயே ஒரு கொலை நிகழ்கிறது. அதை செய்தது ஏகவாமன் ஆட்கள் என்றவுடன் துணிந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறாள். காவல் அதிகாரி வாமன் மீது புகார் என்றவுடன் அவளை இதில் தலையிட வேண்டாமென எச்சரித்து போக சொல்கிறார். இவள் அதற்கு செவிமடுக்கவில்லை என்றவுடன் அவளுடன் பேச்சு கொடுத்துக்கொண்டே தொலைபேசியையும் இயக்கி இவள் பேசுவதை அப்படியே எதிர்புறம் கேட்க வைத்துவிடுகிறார். இவள் அடுத்து என்ன என யோசிக்கும் முன்னே வாமனின் ஆட்கள் அழைத்து செல்ல வந்து விட்டார்கள். சிங்கத்தின் குகைக்குள் தனியாக நுழைய போகிறாள் இனி என்ன நடக்குமென ஆவலை தூண்டும்படியான பதிவு. பேருந்தில் பயணித்தவரும் , காவல் அதிகாரியும் ஏகவாமனை குறித்து செமையாக அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள். பின் நமக்கு என்ன அடுத்த பதிவில் நம் நாயகனை சந்திக்கும் ஆவல் தான்( கருத்து தெரிவிக்காதவர்களுக்கு உங்கள் பாணியில் மிரட்டல் விடுக்கும் விதம் அருமைபின் சிவா மா விடம் பதிவு எப்போது என்று அனுதினமும் கேட்டுவிட்டு கருத்து தெரிவிக்காமல் இருந்தால் அது நியாயம் இல்லையே, நீங்கள் மிரட்டாவிட்டாலும் அனைவரும் உங்களுக்கு கருத்தை பகிரவே செய்வார்கள், நம்புங்கள் )
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.