ஹலோ மக்காஸ்/..... ஒரு குட்டி டீ..... எப்டின்னு சொல்லுங்கோ....
*********************************
“இங்க பாருங்க இது தான் இராவணன் வெட்டு… அதான் ராமாயன்… ராவன் கிட்னாப்ட் ராம்’ஸ் சீதா…. தட் ராவன்ஸ் வெட்டு… ஆ… ராவன்’ஸ் கட் (raavan’s cut).”
தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அவனுக்கு புரிய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
******
அவன் கடலையே பார்ப்பதைக் கண்டதும் அடுத்த ஐதீகத்தை அவிழ்த்து விட்டாள் மாதுமை.
“யூ நோ??? யூ திங்க் எனி ப்ரேயர் இன் யுவர் மைண்ட், அண்ட் இஃப் யூ த்ரோ அ ஸ்டோன் ஃப்ரொம் ஹியர், அண்ட் இஃப் தட் ஸ்டோன் வில் ஃபால் டிரக்ட்லி இன்டூ தெ சீ வித் அவுட் டச்சிங்க தெ டூ மௌண்டைன்ஸ் ஒன் போத் சைட்ஸ், தென் வட் யூ தோட் வில் ஹப்பன் ஃபர் ஷுவர்.”
(மனதில் ஏதாவது நினைத்துக் கொண்டு கல்லை எறிந்தால் அந்தக் கல் அந்த இராவணன் வெட்டின் ஊடாக இருபக்க மலைத்துண்டிலும் படாமல் நேராக சென்று இடையே உள்ள கடலினுள் விழுந்தால், அவர்கள் மனதில் நினைத்திருந்தது நடக்கும் என்பதும் ஐதீகம்.)
**********
அவள் பாட்டுக்கு அந்தத் தலத்தைப்பற்றிக் கூறியபடி அங்கு அமைக்கப்பட்டிருந்த 33 அடி பிரம்மாண்டமான கோணைநாதரின் சிலையை அடைந்தபின் தான் திரும்பிப் பார்த்தால் அவனைக் காணவில்லை.
‘ஐயோ எங்க போய்ட்டான்? என் வேலைக்கு உலை வைச்சிருவான் போலயே…’ எனப் புலம்பியபடி வந்தவழியே அவள் திரும்பி ஓடினால், அவனோ அந்த இராவணன் வெட்டின் அருகிலே தான் நின்று கொண்டு ஒரு கல்லை எறிய முயன்று கொண்டிருந்தான்.
அதுவும் எப்படி?
அவனது ஒருகை முன்னிருந்த தடுப்பைப் பற்றியிருக்க, மற்றொருகையை கஷ்டப்பட்டு வெகுமெதுவாக மேலே உயர்த்தியவன் அந்தக் கையால் ஒரு கல்லை எறிய முயற்சி செய்து கொண்டிருந்தான். அவன் நின்ற நிலையே கல்லை எறியும் போது அவனும் விழுந்து விடுவான் என்பதை தெளிவாகக் காட்ட,
‘ஐயோ என்ட கோணேசா…. எனக்கு வேலை போனாலும் பரவாயில்லை. இந்தாள் என்னை கொலை கேசுல புடிச்சு குடுக்காட்டி சரி… கடவுளே!!!’ என நினைத்தவளோ அவனைத் தடுப்பதற்காய் அவனை நோக்கி ஓடினாள்.
அவள் நினைத்ததே நடப்பதற்கு கோணசர் அருளியதை அறியாமல், “ஹலோ.. ஹலோ… சேர்… ஹலோ மிஸ்டர் பியூட்டிலோன்… நில்லுங்க… அப்படியெல்லாம் அங்க நின்டு எறியக்கூடாது….நில்லுங்க சேர்..” எனக் கத்தியபடி ஓடிச்சென்று சரியாக அவனது கையைப் பற்றியபோது அவனும் அந்தக் கல்லை எறிந்திருந்தான்.
அவனின் கையை இருகைகளாலும் பற்றிய படி மூச்சுவாங்கியவள், “ஹலோ.. என்ன காரியம் பண்ணுறீங்க…. வாங்க….” என அவனது கையைப் பற்றி இழுக்கவும், சட்டென அவளது கையை உதறியவன் தன் பாட்டிற்கு முன்னேறி நடந்தான்.
வந்தது முதல் ஒரு புதிராகவே இருப்பவனை இப்போதும் புதிராய்ப் பார்த்தவள், ‘கோணசா!! இதெல்லாம் எனக்கு தேவையா?? நான் பாட்டுக்கு சிவனேன்னு தானே என் வேலை பார்த்து கொண்டு கிடந்தன்…. டேய் மேனகா…. நீ மட்டும் இப்ப என் கையில கிடைச்ச…..’ என நூறாவது தடவையாக தன்னை இவனுடன் கோர்த்து விட்ட தன் நண்பனை வைதவள் அவனின் பின்னாலேயே ஓடினாள்.
**********************************************
Congrats for ur new story
Nan than first sis
Teaser super
Adamban kodi Na ena sis????
டீசர் சூப்பர் சகோ
பதிவு எப்போது சகோ