All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
“ஏன்டா மகனே உண்மையை தான் சொல்றியா நீ தான் லவ் பண்றியா!”
தன் தாயை கடுப்பாக பார்த்துக் கொண்டிருந்த திவா “ ஏன் உங்களுக்கு தெரியாதா உங்க காதுக்கு இந்நேரம் வந்திருக்குமே உங்க பையன் லவ் பண்றான்னு ”
அவன் பார்வையை அசால்ட்டாக தட்டிவிட்டு “ அது எல்லாம் நல்லாத்தான் வந்துச்சு? ஆனா அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்டேன் நினைச்சு விட்டுட்டேன் மகனே ! என்றவரை....
அன்னை கூறியதைக் கேட்ட அதிர்ச்சியுடன் தன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு “என்னது .... நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் நினைச்சீங்க ? அதுவும் நீங்க எப்படி அப்படி சொல்லலாம் என்னை .....
“ பின்ன என்னடா உங்க அப்பாக்கு தப்பாமல் பிறந்திருக்க எப்பப்பாரு பிசினஸ் பிஸ்னஸ்னு ஊர் ஊரா பறந்துட்டிருக்கிறது வேற எங்கேயும் போகாமல் இங்கேயே இருந்தாலும் நடுராத்திரில போய் நடுராத்திரிலேயே வர வேண்டியது இதுல நீ லவ் பண்றேன்னு சொன்னா எப்படிடா நம்புறது ”
“ நான் உண்மையத்தான் சொல்றேன் நான் லவ் பண்றது அப்பாக்கு கூட தெரியும் அவருக்கே தெரியும் போது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் சும்மா கலாய்காம பையனோட அம்மாவா லட்சணமாக போயி பொண்ணு வீட்ல பேசுங்க ... ”
லவ் பண்றேன்னு சொன்ன இப்ப போய் பொண்ணு கேளுங்கன்னு சொல்ற! ஏன் பொண்ணு ஒத்துக்கலையா? ”
தன் தாய் பேசியதில் தன் பொறுமை எல்லாம் போய் “ ம்ம்ம்மாமாமா... ”என்று கத்தியவனை அசால்டாக பார்த்தவர்.
“ என்னடா அம்மா? லவ் பண்ற பொண்ண தூக்கிட்டு வர்ற தைரியமில்லை இதுல என்ன மிரட்ட வந்துட்டான் போடா ”என்றவரை தன் பொறுமை எல்லாம் காற்றில் பறக்க விட்டவன்.
“ நான் ஆல்ரெடி பொண்ணு வீட்ல பேசிட்டேன் அதே மாதிரி உங்க வருங்கால மருமகளும் ஒத்துக்கிட்டதுக்கு அப்புறம் தான் உங்களை போய் பொண்ணு கேட்க சொல்றேன் ” என்றவனை பெருமையாகப் பார்த்த அவன் தந்தை .
“ பாத்தியா என்னமோ பேசுறியே என் பையன் என்ன மாதிரி எவ்வளவு ஸ்பீடா இருக்கான் பாரு இதுல என்னையும் என் பையனையும் நக்கல் பண்றது உனக்கு வேலையா போச்சு ” என்றுவரைப் பார்த்து அதே நக்கல் சற்றும் குறையாமல் சிரித்தவரை (ஐயையோ இவளைப் பத்தி தெரிஞ்சும் தெரியாம வாய விட்டுடோமே)என்று மனதிற்குள் புலம்பியவரை அவர் மனதிற்குள் நினைத்தது உண்மை எனும் வகையில்.
“ அதைத்தான் நானும் சொன்னேன் உங்க பையன் உங்கள மாதிரியே ஸ்பீடுனு ”
தன் மனைவி தான் சொன்னதை ஆமோதிக்கும் வகையில் பேசியதைக் கேட்டு ( இவ அவ்வளவு நல்லவே இல்லையே )என்று குருபரனும்
அப்பாவை மட்டும் சொன்னாலே ஒத்துக்க மாட்டாங்க இதுல எண்ணையும் கூட்டு சேர்த்து அவர் பேசினதுக்கு இவங்க ஆமான்னு சொல்றாங்கன்னா (டேய் திவா அலர்ட்டா இருந்துக்கோ )என்று அவர் அவர் மனநிலைக்கேற்ப தங்கள் மனதில் சிந்தித்துக் கொண்டிருந்த திவாகரனும் இந்திரா என்ன கூற போகிறார் என்பது போல் பார்த்து இருக்க
“ என் மருமகளை ஒத்துக்க வைக்க மூணு வருஷம் ஆனதிலிருந்து தெரியல உங்க ஸ்பீடு ”என்றவரை
தன் மனைவிக்கு இவ்வளவு நக்கல் ஆகாது என்பது போல் வாய்திறந்து தானாக மாட்டிக்கொள்ள விரும்பாமல் அமைதியாக எப்பொழுதும் போல் மனதிற்குள் புலம்பிக்கொண்டு இருந்தவரை அது எப்படி அவ்வளவு சுலபமாக தங்களை விட்டு விடுவேன் என்பதுபோல்
“என்ன உங்க ஸ்வீடையும் எடுத்து சொல்லட்டா ”என்று மிரட்டியவரை
தலைக்கு மேல் இரு கை கூப்பி “அம்மா தாயே நான் வாயே திறக்கவில்லை நீயாச்சு உன் பையன் ஆச்சு என்னமோ பண்ணுங்க என்னை விட்ருங்க ”என்றவரை
“ பொழச்சு போங்க ” என்ற (எல்லாம் என் நேரம்) மனதில் புலம்பி விட்டு ஒரு அசட்டு சிரிப்பு ஒன்றை தன் மனைவியை பார்த்து சிரித்தார் குரு.
இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த திவாவிற்கு இதற்கு மேல் பொறுமையாக பேசினால் தன் தாயிடம் வேலைக்காகாது என்று ....
“சரி நீங்க என்னமோ பண்ணுங்க நான் கிளம்புறேன் ” என்று கூறிக்கொண்டு அங்கிருந்து செல்வதற்காக எழுவது போல் பாசாங்கு செய்தவனை பார்த்து ரொம்பத்தான் பண்ணி விட்டோமோ என்று நினைத்தாலும் அசால்டாக
“என்னடா பேசணும்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு எந்திரிச்சு போனா என்ன அர்த்தம் அதுவுமில்லாம எங்களுக்கு முன்னாடி பொண்ணு வீட்ல நீயே பேசிட்டானா அப்புறம் நாங்க எதுக்கு” என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு பேசிய கோதையை
“ பேச வந்தவனை பேச விடாமல் நீங்க பாட்டுக்கு பேசிட்டு என்னையே கேள்வி கேக்குறீங்களா அப்புறம் நான் பொண்ணு வீட்டுல பேசினது இப்ப இல்ல அது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி சப்போஸ் லவ் எல்லாம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா அதுக்குத்தான் அட்வான்ஸ் புக்கிங்கா அரேஞ்ச் மேரேஜ்க்கு பேசி வைத்திருந்தேன் சும்மா நக்கல் பண்ணாம பெத்த பையனுக்கு உருப்படியா பொண்ணு கேக்க போறீங்களா இல்லையா ” தான் கடுப்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டு பேசியவனை இதற்குமேல் கலாய்த்து அவன் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்று முன்னெச்சரிக்கையுடன் நக்கல் நையாண்டிகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒன்னும் தெரியாத பிள்ளை மாதிரி சமத்தாக
“ சரிப்பா நீ சொல்லு எப்ப போய் பொண்ணு கேட்கலாம் அப்புறம் பொண்ணு எப்படி என்ன ஏதுன்னு சொல்றது ” என்ற கோதையை பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு ....
“ சரி உங்களுக்கு உங்க மருமகளை பத்தி என்ன எல்லாம் தெரியும் ” என்றவனைப் பார்த்த இந்திரா குருவும் ...
“ நீ லவ் பண்றது தெரியும் அதுக்கு அந்தப் பொண்ணு சம்மதிக்கலனு மட்டும்தான் தெரியும் மத்தபடி எதுவும் தெரியாது நாங்க தெரிஞ்சுக்கவும் விருப்பப் பாடலை ”என்பவர்களை ..
“ ஏன்னா ? எங்களுக்கு எங்க பையனா தான் சொல்லணும் நாங்க ஆசைப்படுறோம் , அடுத்தவங்க சொல்லி எங்க பையன பத்தி தெரிஞ்சிக்கர அளவுக்கு நீ தப்பு பண்ண மாட்டேன்னும் எங்களுக்கு தெரியும், இது எல்லாத்தையும் விட நம்ம குடும்ப விஷயத்தை அடுத்தவங்க எல்லாம் பேசுவதைவிட நாம உக்காந்து பேசி முடிவெடுக்கிறததான் நாங்க விரும்பறோம்” என்று ஒருமனதாக கூறியவர்களைப் பார்த்து என்றும் போல் இன்றும் அவர்களின் குணத்தில் கவரப்பட்டவன்.
தன் தாய் தந்தையர்கள் இருவருக்குமிடையில் இருந்த இடத்தில் அமர்ந்து அவர்கள் இருவரையும் அணைத்தார் போல் பிடித்துக்கொண்டு “ஐ லவ் யூ மாம் டேட் ஐ ரியலி வெரி லக்கிபர்ஷன் உங்க ரெண்டு பேருக்கும் மகனா பிறந்தது நினைச்சு ரொம்ப பிரவுட் ஆஃ ஃபீல் பண்றேன் ” என்று கூறிய மகனைப் பார்த்து மகன் நெகிழ்ந்துருக்கும் அவன் மனநிலையை அறிந்து கொண்ட கோதை
மறுபடியும் தலைதூக்கிய குறும்புத் தனத்துடன் “ஆனாலும் எங்ககிட்ட உன் லவ்வ சொல்ல உனக்கு மூணு வருஷம் ஆயிருக்கு இதுல எங்களைப் பார்த்து பிரவுட் ஆம் லவ் யூவாம் யாருகிட்ட கதை விடுற ” என்று கலாய்த்தவரை ..
“ இது எல்லாத்துக்கும் காரணம் உங்க மருமக தான் ” என்ற திவாகரை பார்த்து “எதுக்குடா தேவையில்லாம என் மருமகளை பத்தி தப்பா பேசுற ”
“ நான் எப்போ உங்க மருமகளை தப்பா பேசினேன் அப்பா உங்க பொண்டாட்டி இப்பவே மாமியார் வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க ” என்ற மகனைப் பார்த்த குரு
“ எனக்கு எதுக்கு வம்பு உன் வருங்கால பொண்டாட்டிக்கு பேசப்போய் என் பொண்டாட்டி என்ன வச்சி செய்வதர்க்கா ” என்று சத்தமாக கூறியவர் மகனின் காதில் (“மகனே ஆனாலும் நீ உன் லவ்வ உன் அம்மாகிட்ட மூணு வருஷமா சொல்லலைன்னு கொஞ்சம் வருத்தமா தான் இருக்கா அதனால உனக்கு சப்போட்டா பேசி நான் எனக்கு ஆப்பு அடிச்சுக்க மாட்டேன் ”) என்று முன்னெச்சரிக்கையுடன் பேசிய தந்தையை பார்த்து சிரித்தவன் .
தன் தாயின் தோள்களில் சாய்ந்து கொண்டு தன் இடது கரத்தால் தாயின் ஒரு கரத்தைப் பற்றிக்கொண்டு தன் மறு கரத்தால் தன் தாயை அணைத்து பிடித்துக்கொண்டு
“அம்மா ... சாரிமா எனக்கு இவ்வளவு நாள் உங்ககிட்ட சொல்லாம மறைக்கணும்னுலாம் நினைக்கல ஆனா நான் என் காதலை உங்ககிட்ட சொல்லும்போது அவளும் என் காதலை ஏத்து கிட்டு அவளும் என் மேல வச்சிருக்க காதலை வெளிப்படுத்தியதற்கு அப்புறம் சொன்னாதான் அது என் காதலுக்கு கௌரவமா இருக்கும்னு நினைச்சேன் ,
அதேபோல நான் அவளைப் பத்தி உங்ககிட்ட பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை என் மருமகள் என் மருமகள்னு எவ்வளவு பெருமையாகவும் ஆசையாகவும் பேசினீங்க அதனாலதான் இவ்ளோ நாள் சொல்லாம இன்னைக்கு சொன்னேன் இதுவே நான் மட்டும் ஒன் சைடா அவள லவ் பண்ணும்போது சொல்லியிருந்தா என்னதான் எனக்கு புடிச்சருந்தாலும் ஆசைக்கு நீங்க குறுக்க நிக்காம இருந்தாலும் உங்க மருமகளோட மனசுல நான் இல்லைன்னு ஒரே காரணத்துக்காக அந்த பொண்ணுனு தான் பேசி இருப்பீங்களே தவிர என் மருமகள்னு பேசியிருக்க மாட்டீங்க ” என்ற மகனை பெருமை பொங்க பார்த்தவர்கள் தங்கள் வளர்ப்பு இன்றுவரை தப்பாகவில்லை என்று பெருமிதம் கொண்டார்கள்.
தன் மகனின் தலையை பாசத்துடன் தடவிக்கொடுத்த குருபரன் “ சரி சரி அம்மாவும் பையனும் கொஞ்சிகிட்டது எல்லாம் போதும் இன்னும் உன் அம்மா மருமகளை பார்த்ததே இல்லை நான் ஆபீஸ் கூட்டிக்கொண்டு போய் காட்டுகிறேன் என்று சொன்னதற்கும் என் பையனா காட்டுனா தான் பார்ப்பேன்னு சொல்லிட்டா அதனால இப்பவாவது உங்க அம்மாக்கு என் மருமகள் போட்டோவை காட்டு ” என்ற குருபரனை முறைத்த கோதை
“அது என்ன. என் மருமகளா ? அப்போ உங்க மருமக எனக்கு யாரு ” என்று அடுத்து சண்டைக்கு கிளம்பியவரை சமாதானப்படுத்தும் வகையில்
தன் செல்போனில் இருந்த தன் மனம் கவர்ந்தவளின் புகைப்படத்தை எடுத்து “அம்மா இவதான் உங்க மருமக எப்படி இருக்கா சொல்லுங்க ” என்ற திவாவிடம்
“ என் மருமக ரொம்ப அழகா இருக்கா பேர் என்னடா ” என்றவரை தன் மனம் கவர்ந்தவள் தன் தாய்க்கு மிகவும் பிடித்திருப்பதை அறிந்து சந்தோஷ பூரிப்பில் “ மலர் ” என்று மென்மையாக அவளின் பெயரை உரைத்தவனிடம் ..
“ என் மருமக அவ பேருக்கு பொருத்தமா அன்றலர்ந்த மலர் போலவே இருக்கா அவளுக்கு ஏற்ற பேரா தான் என் சம்பந்தி வச்சிருக்காங்க ” என்றவரை பார்த்து
“ இக்கும் நல்லா வச்சாங்க உங்க மருமகளுக்கு மலர்னு..... பேர் வச்சதுக்கு பதிலா முள்ளுனு உங்க மருமகளுக்கு பெயர் வைத்திருக்கலாம் அதுதான் பொருத்தமா இருந்திருக்கும் ” சலிப்புடன் கூறிய மகனைப் பார்த்து
“ என்னடா மகனே இப்பவே இவ்வளவு சலிப்பு ” என்ற தந்தையைப் பார்த்து
“ பின்ன என்னப்பா உங்க மருமகளை அவள் லவ் பண்றான்னு அவளை ஒத்துக்க வைக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும் ”என்று புலம்பிய மகனைப் பார்த்து சிரித்துக்கொண்டே
“ சும்மா பொய் சொல்லாதடா என் மருமகளை பார்த்தாலே தெரியுது எவ்ளோ சாஃப்ட்ன்னு ” என்ற இந்திராவை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர் தந்தையும் மகனும்.
இவர்கள் இருவரின் சிரிப்பில் கடுப்பானாவர் “ இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு ரெண்டு பேரும் இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறீங்க ” என்ற மனைவியை பார்த்த குரு
“ உன் மருமகள் சாஃப்ட்னு நீ மட்டும் தான் சொல்லணும் ஏன்னா ? உன் மருமக டெரர் உன் மகன் இல்லாதப்பவும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நம்ம கம்பெனியில எந்த ப்ராப்ளமும் இல்லாம அவ்வளவு ஸ்மூத்தா போகுதுனா அதுக்கு முழு காரணமும் உன் மருமக மலர்தான் காரணம்
பேருதான் மலர் ஆனா மலர நெருப்புன்னு தான் சொல்லுவாங்க வேலையும் ஒழுக்கத்தையும் உன் மருமகளை அடிச்சுக்க ஆளே இல்ல அதுலயும் யாராயிருந்தாலும் எப்பேர்பட்டவங்களா இருந்தாலும் அவங்க முகத்துக்கு நேராகவே தப்புன்னா தப்புன்னும் சரினா சரின்னு பேசிட்டு போயிட்டே இருப்பா அதிகாரத்திற்கும் பணத்துக்கும் தலைவணங்கமாட்டா மொத்தத்துல சொல்லனும்னா இந்த குருபரனுக்கு ஏத்த மருமகள்னா அது மலர் மட்டும்தான் ” என்று பெருமையாக கூறி தன் மீசையை முறுக்கிய தந்தையைப் பார்த்து
“ எஸ் டேட் ஆனாலும் உங்க மருமக என்ன மூணு வருஷம் சுத்தல்ல விட்டது கொஞ்சம் ஓவர் தான் ” என்று சிரித்தவனை
“திவா எனக்கு சீக்கிரமா என் மருமகளை பாக்கணும் போல இருக்கு, நீங்க ரெண்டு பேரு மட்டும் என் மருமகளை பத்தி பேசி வெறுப்பேத்தறிங்க எனக்கும் என் மருமக கிட்ட பேசணும் பழகணும் என்று ஆசை இருக்கு ” என்று மனத்தாங்களுடன் கூறியவரை
“ கவலையே படாதீங்க அம்மா நம்ம நயனி பேபி கல்யாணம் முடிஞ்சதும் அடுத்த நல்ல நாளா பார்த்து உங்க மருமகளை என் பொண்டாட்டியா இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு எவ்ளோ வேணா பழகுங்க ” என்று உல்லாசமாக கூறியவனிடம்
“ என்னது கல்யாணத்துக்கு அப்புறம் கூட்டிட்டு வரதா ? என் மருமகளை இப்ப பாக்கணும் பேசணும்னு இருக்குன்னு சொன்னா கல்யாணத்துக்கு அப்புறம்னு சொல்ற நீ ”என்ற அன்னையை
“ நான் என்ன பண்றது உங்க மருமக தான் யார் சொல்வதையும் கேட்க மாட்டாங்களே அவங்க லவ்வ ஒத்துகிட்டதும் மேடம கூட்டிட்டு வந்து நம்ம வீட்டுல பேசலாம்னு சொன்னேன் அதுக்கு உங்க மருமக கல்யாணத்துக்கு முன்னாடி உங்க வீட்டுக்கு எல்லாம் வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க ” என்ற மகனை ஆச்சர்யமாக பார்த்தவர்
தன் மகனா இப்படி கூறுவது தான் நினைத்ததை சாதித்தே பழக்கப்பட்டவன் என்னால் முடியலை என்று கூறவும் தன் கணவரின் மதிப்பிற்கும் மகனின் காதலுக்கு ஏற்றவளை பார்த்தே தீர வேண்டும் என்ற அவா உந்த மகனிடம்
“ ப்ளீஸ் டா மகனே அம்மா பாவம் இல்ல என் மருமகளை எப்படியாவது கூட்டிட்டு வந்து காட்டு ரொம்ப ஆசையா இருக்குப்பா” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு தன்னை பார்த்து கேட்கும் அன்னையை பார்த்து
“ எனக்கும் ஆசையாத்தான் இருக்கு ஆனா உங்க மருமக ஒத்துக்க மாட்டாளே ” என்று சலிப்புடன் கூறியவன் தாயின் முகம் வாடுவதை கண்டு பொறுத்துக் கொள்ளமுடியாமல் தன் கைபேசியில் மலருக்கு அழைப்பை விடுத்தான்
அந்தப் பக்கம் தன் அழைப்பு ஏற்கப்பட்டதும் “ டார்லிங் ஃப்ரீயா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ”
“ சொல்லுங்க கரன் இன்னைக்கு சண்டேதான அதனால கொஞ்சம் ஃப்ரீயா தான் இருக்கேன் இன்னைக்கு வீட்ல பேசப்போறேன்னு சொன்னிங்க பேசிடிங்க போல இல்லன்னா இப்ப எனக்கு போன் போட மாட்டீங்களே என்ன என் மாமியார் என்ன பாக்கணும் பேசணும் சொன்னாங்களா ” என்று தான் சொல்லாமலேயே அனைத்தையும் புரிந்து கொண்டு பேசும் தன் காதலியை நினைத்து சந்தோஷப்பட்டவன்
தன் கையில் அலைபேசியை வாங்கிய கோதை என்னதான் தன் மருமகளாக வரப்போகிறவள் என்றாலும் முன்பின் அறிந்திராத காரணத்தினால் சிறு தயக்கத்துடன் “ ஹலோ ” என்றவரைப் போல் சிறிதும் தயக்கமில்லாமல்
“ ஹலோ அத்தை ! எப்படி இருக்கீங்க பெரிய பாஸும் சின்ன பாஸும் உங்களை எங்க கண்ணில் காட்டவே மாட்டேங்கிறாங்க எப்போ உங்க தரிசனத்தை தர போறீங்க” என்ற மலரின் பேச்சில் கவரப்பட்டவர் தன் தயக்கங்களை எல்லாம் துறந்து
“இந்த அத்தைய பாக்கணும்னு சொல்லிட்டு வீட்டுக்கு வரமாட்டேன் சொன்னா இந்த அத்தை என்ன பண்ணுவேன் அதுலயும் இவங்க ரெண்டு பேரும் உன்னைய பத்தி பேசி பேசி என்ன வெறுப்பேத்தறாங்க சரி உன்ன பாக்கணும்னு ஆசையா கேட்டா நீ இங்க வரமாட்டேன்னு சொல்லிட்டனு சொல்றான் உன் சின்ன பாஸ் அதுக்கு உன் பெரிய பாஸும் ஒன்னும் சொல்லாம கம்முனு இருக்கார் உன்னை இப்பவே பாக்கணும் போல இருக்குடா வீட்டுக்கு வரியாடாம்மா ”பாசமாக கேட்டவரிடம் அவரின் கோரிக்கையை நிராகரிக்க முடியாமல் அதேசமயம் தன் முடிவிலும் எந்த மாற்றமுமின்றி யாருக்கும் சங்கடம் உண்டாகாத வகையில் ...
“அத்தை நான் ஒரு ஐடியா சொல்லவா அதுல உங்களுக்கும் என் கூட பார்த்து பழகுன மாதிரி இருக்கும் எனக்கு உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணின மாதிரி இருக்கும் அதேசமயம் கல்யாணத்துக்கு முன்னாடி அங்க நம்ம வீட்டுக்கு முறையா வரணும் இருக்கிற என் ஆசையும் நிறைவேறும் அதோட முக்கியமா நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல ரெண்டு பாஸும் இருக்க மாட்டாங்க டீலா நோ டீலா” என்ற மலரிடம்
“டீல் டீல் மருமகளே உன் ஐடியாவை சொல்லு ”என்ற இந்திராவிடம்
“ நான் சொல்றதை நல்லா கவனமா கேட்டுக்கோங்க மொதல்ல உங்க பையன் பக்கத்திலிருந்து எந்திரிச்சு நாம பேசறது கேட்காத தூரத்திற்கு வாங்க ”என்ற நிறுத்தியவள்
“வந்துட்டீங்களா”என்றவளிடம்
“ ஊம்ம்ம்ம் வந்துட்டேன்டா ”என்றவர் தன்னையே குறுகுறு என்று பார்த்து இருக்கும் தன் கணவரையும் மகனையும் பார்த்து சிரித்துக்கொண்டே தன் செல் நம்பரை கொடுத்துவிட்டு ஓகே ஓகே என்று தங்கள் உரையாடலை முடித்துக்கொண்டு தொலைபேசி அணைத்து மகனிடம் கொடுத்துவிட்டு
“நான் ரொம்ப பிசி ரெண்டு பேரும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க ” என்று கூறிக்கொண்டே தன் கணவரும் தன் மகனும் தன்னை என்ன பேசினீர்கள் என்று கேட்டு அறிய முற்படுவதற்கு முன் இருவருக்கும் பேச வாய்ப்பளிக்காமல் வெளியே சென்ற சென்று கோதையை பார்த்த இருவருக்கும் இந்த செயலுக்குப் பின் மலர் தான் இருப்பாள் என்று அறிந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்......
சென்னையில் அந்த பிரமாண்டமான திருமண மண்டபம் கலை கட்டியிருந்தது மண்டபத்தின் நுழைவாயிலில் இருந்து உணவு வரை எதிலும் ஒரு குறை கூற முடியாத அளவிற்கு பார்த்து பார்த்து செய்திருந்தார்கள் அதிலும் உறவினர்களும் நண்பர்களும் படைசூழ கோலாகலமாக ஒரு திருவிழா போலவே தோற்றமளித்தது ராணா நயனின் திருமணவிழா
இதில் எதிலும் பட்டும் படாமலும் இருந்தது ராணாவின் தந்தையும் பாட்டியும் மட்டுமே அதை யாரும் பெரிது படுத்தாதினால் எந்த சலசலப்பும் வலியின்றி அமைதியாக அனைத்தும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது
ஆனால் அதில் நயனின் பாட்டி செல்லத்தாய் மட்டும் ராணா திவா விமல் என்று பாரபட்சமின்றி கிடைக்கும் நேரமெல்லாம் அவர்களை ஒரண்டை இழுத்துக்கொண்டு இருப்பதையே வேலையாக செய்து கொண்டு திரிந்து கொண்டிருந்தார்
நயனிகா எந்த குறும்புத்தனமும் செய்யாமல் இருக்க அவளின் பொறுப்பை மலருக்கு ஒப்படைத்துருந்தான் திவா
முகூர்த்தத்திற்கு துணி மாற்ற சென்றிருந்த ராணாவை இன்னும் காணாததினால் அவனை அழைத்து வர சென்ற தீவாகும் விமலுக்கும் அங்கு செல்லத்தாயை பார்த்து ஐயோ இந்த கொசு தொல்லை தாங்கலையே என்று இருந்தது இருவருக்கும்
திவாவை பார்த்து முறைத்த ராணா “ டேய் உனக்கு நான் எத்தனை வாட்டி படிச்சு படிச்சு சொன்னேன் எங்கேயும் போகாம இங்கேயே இருனு இப்போ பாரு என் நிலைமையை ” என்று செல்லத்தாயை பார்த்து முறைத்துக் கொண்டே கூறியனான்
“ இப்போ என்னடா ஆச்சு ” என்று ராணாவை கேட்டுவிட்டு
“ இங்க உனக்கு என்ன வேலை எதுக்கு சும்மா சும்மா அவன வம்புக்கு இழுத்துக்கிட்டு இருக்க ” என்று செல்லத்தாயிடம் கேட்டான் திவா
“ இப்ப எதுக்கு என்கிட்ட கோவமா பேசுற நீ என்னதான் இருந்தாலும் நம்ம வீட்டு மாப்பிள்ளைனு பேச வந்தா ரொம்பத்தான் ” என்ற நொடித்து கொண்டார் செல்லத்தாய்
“ என்னது சும்மா பேச வந்தீங்களா பொய்யி பொய்யி வாயத் தொறந்தா பொய்யி டேய் திவா என்னைய பார்த்து என்ன கேள்வி கேட்டாங்கன்னு கேளுடா ” என்ற ராணாவை பார்த்த செல்லத்தாயி
அடப்பாவி இவன் கிட்ட போட்டு கொடுக்கறானே என்று நினைத்து தன்னை முறைத்துக் கொண்டிருந்த திவாவை பாவமாக பார்த்து நீயே சொல்லு திவா என் சினேகிதிங்கள் எல்லாம் என்கிட்ட கேட்டாங்க அதைத்தான் கேட்டேன் அது ஒரு குத்தமா என்றார் செல்லத்தாய்
இந்தப் பசப்புக்கு எல்லாம் நான் அசர மாட்டேன்னு கிழவியை முறைத்துக்கொண்டு இதுவே ஒரு வில்லங்கம்னா இதுகூட பிரண்ட்சா இருக்கிறதெல்லாம் ஏலுறு வில்லங்கங்களா இருக்கு என்று நினைத்துக்கொண்டு “ அப்படி அவங்க என்ன கேட்டாங்கனு அத வந்து நீ கேட்ட ”
“ அதுவா ஏண்டி உங்க வீட்டு மாப்பிள்ளை இருக்கமா இருக்காருன்னு கேட்டாங்க அதான் நான் மாப்பிள்ளை கிட்ட துணி எடுக்கும்போது வாங்க ன்னு சொன்னா வராம இப்ப பாருங்க உங்க சட்டை இருக்குமா இருக்கிறதால நீங்களும் இருக்குமா இருக்குறீங்களான்னு கேட்டேன் இது தப்பா ....... நீயே சொல்லு திவா ” என்றவரை உன்னை எல்லாம் என்ன பண்ணாதகும் என்று முறைத்தவனை
“ இப்ப எதுக்கு என்ன சும்மா சும்மா முறைச்சி பார்க்குற உன் சினேகிதன் அப்படி இருந்திருக்கு நான் என்ன பண்றது நான் போய் என் பேத்தியை பார்க்கிறேன் உம்ம் ” என்று திரும்பியவரை
“ அந்தப்பக்கம் கால் எடுத்து வச்ச என்ன ஆனாலும் பரவாயில்லைனு கால உடைச்சு உட்கார வச்சுருவேன் ” என்று மிரட்டி
“ விமல் நீ போய் இவங்கள தனியா உட்கார வைத்துவிட்டு என்ன பண்ணுதுன்னு பாக்குறது தான் உன் வேலை ” என்று கூறிய திவாவை பார்த்திருந்த விமல்
“ அய்யய்யோ நானா அதுவும் இவங்களையா உங்க ரெண்டு பேருரையே என்ன செய்தியினு கேக்குறாங்க உங்களையாவது அப்ப அப்ப தான் டார்ச்சர் பண்றாங்க என்னையெல்லாம் பாரபட்சம் இல்லாம கொடுமைப்படுத்துகிறாங்க ” என்று அழக் குறையாக கூறினான்
அப்பொழுது அங்கு வந்த இந்திரா “ ஐயர் நேரமாச்சு மாப்பிள்ளையை கூட்டிட்டு வாங்கன்னு சொன்னா இங்க நின்னு எல்லாரும் அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க”
“ அதைத்தான் இவ்ளோ நேரம் நானும் சொன்னேன் எங்க கேக்குறாங்க இப்போ இருக்கிற பசங்களுக்கு எல்லாம் பொறுப்பே இல்லை ” என்று கூறிவிட்டு சென்ற செல்லத்தை பார்த்து
நாங்களா லேட் பண்ணோம் எங்களுக்காக பொறுப்பு இல்ல என்று நினைத்துக்கொண்டு நின்று மூவரையும் பார்த்த இந்திரா
ராணாவின் அருகில் சென்று உன்னை இப்படி பாக்குறதுக்கு எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா என்று அவனுக்கு திருஷ்டி எடுத்து அழைத்து சென்று மணவறையில் அமர வைத்தார் பட்டு வேட்டியில் மணமேடையில் அமர்ந்து ஐயர் கூறும் மந்திரங்களை எந்தவித உணர்வும் இன்றி கூறிக் கொண்டிருந்தான் ராணா
அதற்கு நேர்மாறாக எந்தவித கவலையுமின்றி சந்தோஷமாக தன்னை அலங்கரித்துக் கொண்டு தன் தோழிகளுடன் வாய் அடித்துக்கொண்டிருந்த நயனியை மணமேடைக்கு அழைத்து செல்ல வந்த அவளின் தாய் தன் மகளைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டு
மலர் நீயாவது அவளுக்கு நல்ல புத்தியா சொல்லி பொண்ணா லட்சணமா இன்னிக்கு ஒரு நாளாவது அடக்க ஒடுக்கமா அவள இருக்க சொல்லக்கூடாதா என்றவரிடம்
“ சாரி ஆன்ட்டி இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தேன் இப்பதான் பெரிய பாஸ் ஒரு டவுட்காக கூப்பிட்டாங்க போயிட்டு வர்றதுக்குள்ள தான் மேடம் இப்படி ஆட்டம் போட்டுட்டா ”
தன் மகளின் புறம் திரும்பி “ உன்ன பாத்தா கல்யாண பொண்ணு மாதிரியா இருக்குது ஏதோ உன் பிரெண்டு கல்யாணத்துக்கு நீ போன மாதிரி இருக்கு ” என்று நொந்து கொண்ட தாயிடம்
“ அம்மா விடுங்கம்மா என் கல்யாணத்தை நான் என்ஜாய் பண்ண வேண்டாமா எல்லாரும் அடுத்தவன் கல்யாணத்துல தான் என்ஜாய் பண்ணுறாங்க அதுதான் ஒரு செஞ்சா இருக்கட்டுமேன்னு என் கல்யாணத்தில் நான் என்ஜாய் பண்றேன் அது ஒரு குத்தமாய்யா ”
“ எதுவும் குத்தமில்ல ஏற்கனவே நேரமாச்சுனு ஐயர் கூட்டிட்டு வரச் சொல்றாரு நீ வாய் அடிக்காம கிளம்பு ” என்று தாய்க்கு
ஓகே ஓகே என்று தன்னைக் கண்ணாடியில் ஒருமுறைக்கு இருமுறை சரி பார்த்துக் கொண்டே போலாம் என்று முன்னே சென்றவளை கை பிடித்து தடுத்து
“ ஏண்டி என் மானத்த வாங்குற நாங்கதான் உன்னை கூட்டிட்டு போகணும் நீயா எல்லாம் போய் ஒக்கார கூடாது தயவுசெஞ்சு அடக்க ஒடுக்கமா தல குனிஞ்சு மெதுவா எங்களோட நடந்து வா ” என்ற சலித்து கொண்டவரை
“ சரி சரி ரொம்ப சலிச்சீகாதீங்க நீங்க சொன்ன மாதிரியே வரன் ஆனா சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுக்கறீங்களா ரொம்ப பசிக்குது மா .....என்று கேட்டவளிடம்
ஏண்டி அதான் காலையிலேயே சொல்லிட்டேன்ல தாலி கட்டணத்துக்கு அப்புறம்தான் சாப்பிடணும்னு என்று கடுப்பாக சொன்னவர் அதற்குமேல் அவளை எதுவும் பேசவிடாமல் அவளை மணமேடைக்கு அழைத்து சென்றார்
அவர்களை பாதையில் எதிர்கொண்ட திவா “ கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை கொடுத்து ரொம்ப தாகமா இருக்குனு சொன்னலடா இந்தா இதை சீக்கிரமா குடி ” என்று நயனிடம் கண்ணடித்து கொடுக்கவும்
அதை வாங்கி ஒரே மூச்சில் கடகட என்று நயணி குடிக்கவும் கௌரி பேசிக்கிட்டே இருந்தா தாகம் எடுக்காம என்ன பண்ணும் என்றவரிடம் மலர்
“ இது பேசினதுனால வந்த தாகம் இல்ல ஆன்ட்டி பசிக்காக வந்த இளநீர் தாகம் சாப்பிட கூடாதுன்னு சொல்லவும் தங்கச்சி பசி தாங்க மாட்டான்னு இளநீர் கொடுக்கிறார் இவர் ” என்று குட்டு உடைக்கவும்
செல்லமாக திவாகரின் தலையில் ஒரு தட்டு தட்டிவிட்டு பிராடு வா போலாம் என்று நயனியை அழைத்துவந்து மணமேடையில் அமரவைத்தவர்க்கு இவ்வளவு நேரம் அவளை கண்டித்து கொண்டிருந்தவருக்கு தங்களின் மகள் சற்று நேரத்தில் வேறு ஒருத்தரின் உடைமை ஆகிவிடுவாள் என்று நினைத்தவருக்கு தன்னால் கண்ணீர் பெருக வாயிற்று
சுற்றமும் நட்பும் சூழ பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் மந்திரங்கள் முழங்க அனைவரும் அட்சதை தூவ மூன்று முடிச்சிட்டு நயனிகாவை தன்னில் சரிபாதி ஆக்கிக் கொண்டான் ராணா
அன்றே அனைத்து சடங்கு சம்பிரதாயங்களும் முடித்து மனைவியை அழைத்துக் கொண்டு மதுரை வந்தவனுக்கு ஒரு சில சொந்தங்கள் இவன் முதல் திருமணத்தை பற்றி பேசி கோண்டிருந்ததை கேட்டு மனதில் ஏற்பட்ட ஒரு வித வருத்ததுடன் இருந்தவனது மனனிலமை புரிந்துகொண்டு நயனிகா தன்னுடன் வந்திருந்த திவாவுடனும் விமலுடன் நேரத்தைக் கழித்தால்
அன்று இரவே அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்திருந்தார்கள்
அறைகள் எங்கும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊதுபத்தி மணம் கமழ அந்த அறையின் நடுநாயகமாக இடம்பெற்றிருந்த கட்டிலே தெரியாத வண்ணம் மல்லிகையாலும் ரோஜா மலர்களாலும் அலங்கரித்து இருந்தனர். அந்த அறைக்குள் செல்பவருக்கு கண்டிப்பாக அது அறையா இல்லை மலர்கள் பூந்தோட்டமா என்று எண்ணும் வகையில் அமைத்திருந்தார்கள்
ஆனால் அந்த அழகோ அந்த அறையின் சுகந்தமோ எதுவும் தன் கருத்தை கவராமல் என்றும் போல் இன்றும் தான் அவசரப்பட்டு விட்டோமோ என்ற தன் எண்ணத்தில் சுழன்று கொண்டு அறையில் இங்குமங்கும் நடைபயின்று கொண்டிருந்தான் ராணா.
அவனின் சிந்தனையை தடை செய்யும் விதமாக அவ்வறையின் கதவைத்திறந்து கொண்டு புது மணப்பெண்ணிற்குறிய அனைத்து அம்சங்களுடன் அன்று காலையில் தன்னில் சரிபாதியான ஏற்றுக்கொண்ட நயனிகா தங்கள் அறைக்குள் எந்தவித தயக்கமும் அனாவசியமான வெட்கமும் ஏதுமின்றி, ஒருவித மென்மையும் நட்பை பாராட்டும் விதமாக புன்னகையுடன் தன்னை நெருங்கிய தன்னவளை எதிர்கொள்ளும் துணிவின்றி, இதற்குமுன் பேசியிருந்தாலும் அவள் முகம் காண தயங்கி வேறுபுறம் திரும்பியவனிடம்
“ஏன் காலையிலிருந்து ரெஸ்ட்லெஸ்சாவும் என் முகம் பார்க்கவும் தயங்குறீங்க எதுவா இருந்தாலும் நாம் அதை பேஸ் பண்ணித்தான் ஆகணும். ஏன்னா இந்த முடிவ நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் எடுத்தோம், அப்படியிருக்கும்போது நீங்க மட்டும் ஏதோ தப்பு பண்ணமாதிரி குற்ற உணர்வில் தவிக்கிரீங்க முதலில் நிமிர்ந்து என் கண்ணை பாருங்க ” என்றவளை ஏறிட்டு அவள் கண்களை பார்த்தவன்
மனதிற்கு சற்று அமைதியாக உணர்ந்தவன் அவள் கூறிய வார்த்தைகள் கேட்டு மீண்டும் மன சஞ்சலத்திற்கு உள்ளானவன் மீண்டும் தன் மனதில் ஏறிய குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்தவள்,
“ எதுக்கு இப்போ நான் என்னமோ சொல்லக்கூடாது சொன்ன மாதிரி இப்படி பார்த்துட்டு இருக்கீங்க? என் கைய புடிக்க சொன்னது அவ்வளவு பெரிய கஷ்டமான வேலையா இது ” என்று இலகுவாக பேசிய நயனிகாவிடம்.
“அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்...., என் மனநிலை எப்படி இருக்குன்னு சொல்லித்தான் அதற்கு நீயும் புரிஞ்சுகிட்டு ஒத்துக்கிட்டனாலதான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன் என்று உனக்கு தெரியும். அப்படியிருக்கும்போது என்னால இப்போ இந்த விஷயத்தை உடனடியாக ஏத்துக்க முடியாது நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியுது தானே ” தன்னைப் பார்த்து கேள்வி கேட்ட தன் கணவனிடம்
“நீங்க என்ன சொல்ல வரீங்கனு நல்லா புரிஞ்சது, சரி என் கைய பிடிங்க அப்படி உட்கார்ந்து பேசலாம் ” என்றவளை தான் அவ்வளவு கூறியும் மறுபடியும் தன் கையை பிடிக்க கூறுகிறாளே என்று
“இங்க பாரு நயனிகா நம் வாழ்க்கை ஆரம்பிக்கும் போது என் மனசுல எந்த சஞ்சலமும் குற்ற உணர்வும் இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன் இல்ல கடமையே என்று நம் வாழ்க்கை கடமைக்காக ஆரம்பிக்கணும் என்று ஆசைப்பட ? ” என்று கணவனை ......
“ நம்ம ரெண்டு பேரும் கணவன் மனைவி தானே அப்படியிருக்கும்போது ஒரு சராசரி தொடுகையை ஏன் தப்பாகக் நினைக்கிறீர்கள் ” என்றவளை புரிந்தும் புரியாமல் நோக்கினாலும் அவள் கூறியது போல் அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு அவளுடன் படுக்கையில் அமர்ந்தவன் அப்புறம் என்ன என்பது போல் தன் மனைவியை கேள்வியாக நோக்கியவனிடம்
“ இப்போ என்னை தொட்டுகிட்டு என் பக்கத்துல உட்கார்ந்து இருக்கீங்களே , உங்களுக்கு ஏதாவது என்கிட்ட வேற மாதிரி நடந்துகொள்ளனும்னு தோணுதா ”
அவளின் இந்த கேள்விக்கு “ இல்லை”என்று பதிலுரைதவனிடம் ..
கணவனின் தலையாட்டலை பார்த்த நயனியின் மனதில் நிம்மதி ஏற்பட்டது.புன்னகையுடனேயே அவனிடம் பேச ஆரம்பித்தாள் “அப்புறம் எதற்கு இந்த தயக்கம்? இங்க பாருங்க இதுக்கு மேல எதை மாத்த நினைச்சாலும் எதையும் மாற்ற முடியாது. நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி. அதனால் ஒருவருக்கொருவர் தொடுவதற்கோ இல்லை சாதாரணமாக பேசுவதற்கோ இப்படி தயங்கினாள் மத்தவங்க பார்க்கும் போது அது அவங்க பார்வையை கண்டிப்பா உருத்தும், எதுக்கு நாம எல்லாருக்கும் விளக்கம் சொல்லிகிட்டு. நம் வாழ்க்கையை எதற்கு மற்றவர்களுக்கு காட்சிப்பொருளாக காட்டணும்? அதற்கு பதிலாக நம்ம ரெண்டு பேரும் முதல்ல நல்ல நண்பர்களாக பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறதுக்கு முதலடியை எடுத்து வைக்கலாமே என்ன சொல்றீங்க ” என்றாள் தன்னையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ராணாவிடம்
.
எப்படி என்று புரியாமல் பார்த்தவனின் பார்வையை கண்டுகொண்ட நயனி “ என் அண்ணனுக்கும் மட்டும்தான் ஃபிரண்டா இருப்பீங்களா என் கூட பிரண்டா இருக்க மாட்டீங்களா, என்றவள் அவனது முன் தன் கைகளை நீட்டி ஃபிரண்ட்ஸ்” என்றாள்.
மனதில் ஏற்பட்ட தெளிவு முகத்திலும் தெரிய அழகிய புன்னகையை இதழில் தவழவிட்டவன் “பிரண்ட்ஸ்” என்றான்.
கணவனின் புன்னகையில் மயங்கிய மனதை அடக்கியவள் புன்னகையோடே பேச்சை தொடர்ந்தாள். இப்போது இந்த கல்யாணம் நடந்தாலும் என்னை முழு மனசா உங்க மனைவியா ஏத்துக்க முடியாது என்று ஏற்கனவே சொல்லிடிங்க, அப்படியிருக்கும்போது இப்போ நம்ம வாழ்க்கையை தொடங்குவது பற்றி நானும் யோசிக்கவே இல்லை ”என்றாள்.
“ நம்ம வாழ்க்கை தொடங்குவது பற்றி யோசிக்கவே இல்லன்னா! அதுக்கு என்ன அர்த்தம்? புரியலையே ”என்றான் ராணா.
“ சரி சரி இதுக்கு மேல உன் பேச்சில் நான் குறுக்கிட மாட்டேன் நீ சொல்ல வந்ததை சொல்லிமுடி ”
என்றான் சமாதானமாக.
புன்னகையுடன் கணவனை பார்த்து சரியெனும் விதமாக தலையசைத்தவள் “ இங்க பாருங்க என்னதான் எல்லாத்துக்கும் ஒத்துகிட்டு கல்யாணம் நடந்திருந்தாலும் ” என்று இழுத்து எப்படி சொல்வது என்ற சங்கடத்துடன் அவனை பார்த்தாள்.
அவன் மேலே கூறு என்று ஊக்கப்படுத்தவும்.
சிறிய தயக்கத்திற்குப் பின் “ உண்மையான தாம்பத்தியம் என்பது இரண்டு உடல் மட்டும் சேர்வது இல்லை. இரண்டு மனம் சேர்வதுதான் உண்மையான தாம்பத்தியம். அப்படியிருக்கும்போது இப்போது நீங்கள் இருக்கும் மனநிலையில் நம்ம இருவராலும் மனதளவில் ஒன்னு சேர முடியாது, உடலால் மட்டுமே சேர முடியும். நம் வாழ்க்கைக்கு நாம் எடுத்து வைக்கும் முதல் தோல்விக்கான அடியாக இது மாறக்கூடிய வாய்ப்பு அதிகம். சோ எப்போ நாம இரண்டுபேரும் மனதால் இணைகிறோமோ அப்போது நம் வாழ்க்கையை தொடங்கலாம். அதுதான் ஒரு பொண்ணா, ஒரு மனைவியா எனக்கு கவுரவமாக இருக்கும்” என்று கூறி நிறுத்தி இருந்தாள்....
நயனியின் புரிதலான பேச்சில் நிம்மதி கொண்டவன் " என்னைப் புரிஞ்சிகிட்டதற்கு தேங்க்ஸ் " என்றான். தேங்க்ஸ் என்றவனை போலியாக முறைத்த நயனி. என்ன என்பதை போல் தன் புருவத்தை தூக்கியவனை பார்த்தவளுக்கு மனம் மயங்கிதான் போனது. இருந்தாலும் தன்னை சமாளித்து கொண்டவள் அவனை பார்த்து.
" இப்ப நாம பிரெண்ட்ஸ் தேங்க்ஸ் சொல்ல கூடாது ஓகேவா இப்ப நிம்மதியா தூங்கலாமா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு " என்றாள்.
" ஓகே மா படுத்து தூங்கு " என்று கூறி படுத்தவன் அவள் படுக்காமல் கையை பிசைந்து கொண்டு இருக்கவும் " ஏன் படுக்கலையா ? " என்றான்.
ராணாவையே சங்கடமாக பார்த்தவள் " இல்ல எனக்கு புடவையில தூங்கி பழக்கமில்லை அதனால நான் எப்போதும் போல நைட்ரஸ் போட்டுக்கொள்ளவா புடவையில படுத்தாள் தூக்கத்தில் கழண்டு விடுமோ என்ற பயத்தில் தூக்கமே வராது " என்றாள்.
" சரி உனக்கு எது கன்படபுளா இருக்கோ அதுவே போட்டுக்கோ யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க " என்றான். ராணா சொன்னதும் உடைமாற்றி வந்தவள் அப்பொழுதும் படுக்காமல் கட்டிலை அளவு எடுப்பது போல் பார்த்துக்கொண்டு இருந்தாள். என்னவென்று புரியாமல் கேட்டவனிடம்
கட்டிலின் விளிம்பில் படுத்திருந்தவனை பார்த்தவள் நீங்க கொஞ்சம் தள்ளி படிக்கிறீங்களா எனக்கு கட்டிப்பிடிச்சு தூங்கி தான் பழக்கம் " என்றாள்.
" கட்டிப்பிடிச்சா ..... " என்று அதிர்ச்சியானவனிடம்
" பயப்படாதீங்க பயப்படாதீங்க நான் உங்கள சொல்லல எனக்கு இரண்டு தலகாணி தான் வேணும் " என்று சொன்னதும்தான் அவனுக்கு அப்பாடா என்றிருந்தது. அவள் கேட்ட தலையணைகளை தந்தும் அவள் படுக்காமல் இருக்க இப்போது என்ன என்பதுபோல் பார்த்தவனிடம்
அவள் ஒருமாதிரி சிரித்துக்கொண்டே " இல்ல எனக்கு என் பாய் ஃப்ரெண்ட்ஸ் கூட தான் தூங்கி பழக்கம் அவங்களை இங்க படுக்க வச்சுக்கிட்டா " என்றாள்.
" எனது பாய்பிரெண்ட்சா ! அதுவும் இங்கே படுக்க வச்சுகரியா ...." என்று நெஞ்சை பிடித்து கொண்டான்.
" அச்சச்சோ நீங்க நினைக்கிற மாதிரி இல்ல ஒரு நிமிஷம் " என்று சொன்னவள் அவள் பாக்கில் இருந்து தான் எடுத்து வந்திருந்த ஆளுயர டெடி இரண்டை எடுத்து வந்தாள்.
" இவங்கதான் என் பாய் பிரண்ட்ஸ் ஒருத்தன் ஜெஸ்டின் இன்னொருத்தன் பிரேம் " அவள் கூறியதும்
ஓஹ் அவளுக்கு பிடிச்சவங்கள தான் இப்படி பொம்மைக்கு பேரா வச்சிருக்காளா என்று நினைத்தவனுக்கு தெரியவில்லை பின்வரும் காலத்தில் அதில் ஒரு பொம்மை மேல் கொலை வெறி ஆவான் என்று.
ராணாவை படுக்கையின் விளிம்பிற்கே தள்ளியவள் அவள் டெட்டி தலையணை அதற்கப்புறம் ராணா என்று இருக்க கடுப்பானான்.
நயனியை அதே கடுப்புடன் பார்த்தவன் " அதுதான் உன்னைவிட உன் பொம்மை பெருசா இருக்கே அப்புறம் எதுக்கு தலகாணி " என்று கேட்டான்.
" இல்ல தூக்கத்துல கை போட்டீங்கன்னா அதுக்குதான் முன்னெச்சரிக்கையாக " என்றாள் அப்பாவியாக.
" இந்த பொம்மையை தாண்டி உன் மேல கையை போட்டுட்டாலும் படாது படாது நானும் போட மாட்டேன் " என்று கூறினான்.
அவனின் பேச்சில் வந்த சிரிப்பை அடக்கியவள் ஒன்றும் தெரியாத பச்சை பிள்ளை போல் முகத்தை வைத்தவள் " அதைத்தான் நானும் சொல்றேன் நீங்க பாட்டுக்கு என் ஜெஸ்டின் மேல கை போட்டுட்டா அவனுக்கு வலிக்கும்ல தப்பா எடுத்துக்காதீங்க நீங்க வேற ஹைட்டா வெயிட்டா இருக்கீங்களா அதான் " என்று கூறி படுத்தவள் நிம்மதியாக உறங்கிவிட்டாள்.
சிறு குழந்தை போல் டெடியை கட்டி கொண்டு தூங்கியவளை பார்த்துக்கொண்டிருந்த ராணாவுக்கு தான் இவள் என்ன மாதிரியான பொண்ணுடா.ஒரு நேரம் அவ்வளவு மெச்சூர்டா பேசுறா இன்னொரு நேரம் சின்னப்புள்ளத்தனமா பண்றா என்று எண்ணி கொண்டு இருந்தவன் இன்று தனக்கு முதலிரவு என்பதையும் மறந்து நேரத்தையும் பாராமல் திவாகருக்கு போன் போட்டான்.
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த திவா இந்த நேரத்தில் யார் என்று போனை பார்த்தான் அதில் தன் நண்பனின் எண்ணை காட்டவும் என்னவோ ஏதோ என்று பதறி போனை அட்டென் செய்து காதில் வைத்தான்.
" ஏண்டா உண்மையா உன் தங்கச்சி எம்பிஏ முடிச்சு ப்ராஜக்ட் ஹெட்டாவா இருந்தா என்று சந்தேகம் கேட்டான்.
ராணாவின் கேள்வியில் கடுப்பான திவா தூக்கம் கலைந்த எரிச்சலில் அவனிடம் கத்த ஆரம்பித்தான் " ஏன்டா உனக்கு சந்தேகம் கேட்க நேரம் காலமே இல்லையா அடச்சை போனை வச்சுட்டு போய் தூங்கு. " என்று திட்டி விட்டு போனை வைத்து விட்டான்.
ராணாவோ இப்ப நான் என்ன கேட்டேன் எதுக்கு இப்புடி கத்துறான். அண்ணன் ஒரு டிசைன்னா தங்கச்சி ஒரு டிசைன்னா இருக்கா என்று திரும்பியவன் உறங்கும் மனைவியை பார்த்து இவளை எதில் சேர்ப்பது என்று புரியாமல் குழப்பத்துடனேயே தூங்கிபோனான்
காலையில் எழுந்ததும் தன்னருகே இருந்த தலையணைகளை பார்த்த ராணாவிற்கு இரவு நயனிகா தூங்குவதற்கு செய்த ஏற்பாடுகளை நினைத்து சிரிப்புதான் வந்தது.
மனைவி என்ன செய்கிறாள் என்று திரும்பி பார்த்தான் பொம்மைகளின் நடுவே ஒரு குழந்தையைப்போல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.எழுப்ப முற்பட்ட ராணா நயனியின் அமைதியான முகத்தையே ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தான்.அவனுள் பல யோசனைகள் பின் அதை ஒதுக்கி அவளை எழுப்ப முயற்சிக்க பலன் என்னவோ பூஜ்யம்தான். ராணாவோ மனதிற்குள் கும்பகர்ணனுக்கு தங்கச்சியாச்சே எப்படி இருப்பா அவன மாதிரிதான் இருப்பா என்று தன் நண்பன் இரவு தன்னை திட்டியதற்கு இப்போது அவனை திட்டி கொண்டு இருந்தவன் இவளை இப்போதைக்கு எழுப்ப முடியாது முதலில் நாமே ரெடி ஆகி வருவோம் என்ற முடிவுக்கு வந்தவன் எழுந்து குளியலறை நோக்கி சென்றான். அவன் குளித்து ரெடியாகி வரும் வரையிலும் கூட நயனியின் தூக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.
ராணா கீழே செல்வதற்கு முன் அவளை மீண்டும் எழுப்ப முயற்சித்து வெற்றிகரமாக தோல்வியை தழுவியவனுக்கு மலைப்பாக இருந்தது. எப்படி இவளை எழுப்புவது என்ற யோசனையில் மூழ்கியவன் நேரத்தை பார்க்க அது ஏழு என்றது. இதற்கு மேலும் தாமதமாக வெளியே செல்வது நன்றாக இருக்காது என்று முடிவெடுத்தவன் தான் மட்டுமாவது செல்வோம் என்று வெளியேறியவன் மறக்காமல் தன் அறையின் கதவை சாத்திவிட்டே சென்றான். மாடியில் இருக்கும் ஹாலில் இருகையில் அமர்ந்து தனக்காக காத்திருக்கும் திவாகரனை பார்த்தவன்.அவனின் அருகே சென்று காலை வணக்கம் தெரிவித்துவிட்டு “ என்னடா மச்சி காலையிலேயே எனக்காக தான் காத்திருக்கின்றாய் போல அதுவும் காபிக்கு பதிலாக கையில் சூப் எல்லாம் வைத்திருக்கிறாய் எனக்கா ” என்று சூப்பை வாங்க முயன்றான்.
சூப்பை வாங்க முயன்ற நண்பனிடம் இருந்து லாவகமாக சூப் இருந்த கப்பை காப்பாற்றி கொண்ட திவா “ இது உனக்கான சூப் தான் ஆனா இப்போது உனக்கு இல்லை ” என்று கூறிவிட்டு தான் குடிக்க ஆரம்பித்தான். நண்பனின் பேச்சை புரியாமல் பார்த்த ராணா அவன் சூப்பை ரசித்து குடிப்பதை பார்த்து காண்டானான்.
டேய் அது என்னது டா என்று கடுப்பாக கூற திவா காதில் வாங்கவே இல்லை.இவனிடம் இப்படி பேசினால் பதில் வராது என்று புரிந்து கொண்டவன் பாவமாக நண்பனை பார்த்து "ஏன் மச்சி " என்று அப்பாவியாக கேட்டான்.
ராணாவின் கெஞ்சலான குரலில் அவனை திரும்பி பார்த்த திவா உன் பாட்டி
“ தன் பேரன் முதலிரவு கொண்டாடியதை முன்னிட்டு பார்த்து பார்த்து சூப்பு வைத்தார்கள். நீ இந்த நேரத்திற்கு வந்துவிடுவாய் என்று ரெடியாக இருந்தார்கள். நீ வெளியே வரவும் உன்னிடம் கொடுக்க வந்தவர்களிடம் நானே கொடுத்துவிடுவதாக வாங்கி வந்துட்டேன் என்று நீண்ட விளக்கத்தை நண்பனிடம் கூறியவன் மேலும் ராணாவை வெறுப்பேற்றும் பொருட்டு சும்மா சொல்ல கூடாது மச்சி உன் பாட்டி கை பக்குவமே தனிதான் ” என்று கூறி ரசித்து குடித்து கொண்டிருந்தவனை பார்த்த ராணா டேய் அது எப்புடிடா குடும்பமே ஒரு மார்க்கமா இருக்கீங்க.பல நேரம் சின்ன புள்ளத்தனமா இருக்கறது சில நேரம் ரொம்ப மெச்சுர்டா இருக்கறது உங்களோட முடிலடா என்னால என்று மனதில் நினைத்தவன் நண்பனை பார்க்க அவன் இந்த பிறவி எடுத்ததே இந்த சூப் குடிக்கத்தான் என்பது போல் சூப்பில் மூழ்கி இருந்தான்.
திவாவின் செயலில் ராணாவிற்கு சிரிப்புதான் வந்தது.இருந்தாலும் நண்பன் தனக்காக சூப் எடுத்து வந்தேன் என்று சொன்னது மனதை உறுத்த
“ எனக்கு போய் நீ எடுத்துட்டு வரதா நானே வந்திருப்பேன்ல ” என்றான் பாசமாக.
ராணாவின் பேச்சில் அவனை பார்த்த திவா அவ்ளோ நல்லவனாடா நீ என்று கேட்டு நக்கலாக சிரித்துவிட்டு
“ நீ ரொம்ப பீல் ஆகாத நீ குடிக்காம யாருக்கும் குடுக்க மாட்டேன் என்று உன் பாட்டி சொல்லிட்டாங்க அதான் உன் பேரை சொல்லி நான் வாங்கி குடிச்சிட்டு இருக்கேன்” ராணாவோ அவனின் கிண்டலை கண்டுகொள்ளாமல்
“ அப்போதும் நான் கீழே வந்த உடன் இரண்டு பேரும் சேர்ந்தே குடித்து இருக்கலாமே ” என்று நண்பன் மேல் இருந்த அக்கறையில் கேட்க அவனை ஒரு தினுசாக பார்த்தான் திவா.
நண்பனின் பார்வைக்கான அர்த்தம் புரியாமல் குழப்பத்துடன் திவாவை பார்த்து என்னடா என்று கேட்டான்.
திவாவோ நண்பனை கிண்டலாக பார்த்துக்கொண்டே “ ஆமாம் உனக்கு எதற்க்கு சூப் நாங்களாவது உன் திருமண வேலையை தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டு, அலைந்து, திரிந்து செய்ததில் களைப்பாக இருக்கும் அதனால் சூப் குடிப்பதில் ஒரு நியாயம் இருக்கு ஆனா நீதான் வெட்டிய ஒன்னும் பண்ணாம சும்மா தூங்கிட்டுதான எழுந்து வந்த” என்றான்.
திவா பேசியதில் கான்டானவன் “ டேய் டேய் ஓவரா பேசாத எதுவும் நடக்கலனு உனக்கு தெரியுமா ...... நண்பனாக இருந்தாலும், நயனியின் அண்ணா நீ அதனால் உன்னிடம் எல்லாம்.... என்று அழுத்தி சொன்னவன் சொல்லமுடியுமா? என்று கூறியவன். நான் ஒன்றும் சொல்லவில்லை என்பதற்காக என்னை நீ கலாய்பியா ” என்று பொங்கிவிட்டான் ராணா.
நண்பன் பேசியது அனைத்தையும் சூப் குடித்து கொண்டே கேட்ட திவா “டேய் அடங்கு டா நீ யாருன்னும் எனக்கு தெரியும், என் தங்கச்சி யாருன்னும் எனக்கு தெரியும் இது எல்லாத்துக்கும் மேல அர்த்த ராத்திரில போன் பண்ணி தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி கேட்ட பாரு ஒரு டவுட் அப்பவே தெரிஞ்சிருச்சு என்ன நடந்ததுன்னு ” என்று கூறி சிரித்தவனை கொண்டிருந்த பார்த்து அசடு வழிந்தான்.
“ சரி சரி வா கீழ போக லாம் ” என்ற ராணாவிடம்
“ என்னது கீழே போவதா அதற்கு முன் என் தங்கச்சியை எழுப்பனும் அதுதான் என் முதல் வேலை வா வா வா ” என்று கூறி அவசர அவசரமாக ராணாவின் அறைக்கு சென்றான்.
வேகமாக தன் அறைக்கு செல்லும் நண்பனை தடுத்த ராணா “ பாவம் மச்சி நான் எழுப்பினேன் எழுந்து கொள்ளவில்லை சரியாக தூங்கவில்லை போல அதான் தூங்கட்டும் என்று விட்டுவிட்டேன் நீ டிஸ்டர்ப் பண்ணாம வா” என்றான்.
ராணாவின் பேச்சில் அவனை இப்போது திவா கடுப்பாக பார்த்து “டிஸ்டர்ப் பண்ணாம போறதா அடேய் அப்படியே விட்டா அவ மதியானமோ இல்லை சாயங்காலமோதான் எந்திரிப்பா” என்று கூறிக்கொண்டே அவர்களின் அறைக்குள் நுழைந்தான். நயனியோ இவர்களின் எந்த வாக்குவாதத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்னும் விதமாக பொம்மையை கட்டிப்பிடித்து தூங்கிக் கொண்டிருந்தாள். தங்கை கட்டி பிடித்து தூங்கும் பொம்மையை பார்த்து கடுப்பாகி அதை அவளிடமிருந்து பிடுங்கி அதிலேயே நாலு சாத்து சாத்தி எழுப்பினான்
திவா அடித்ததில் அடித்துப் பிடித்து எழுந்த நயனிக்கு முதலில் ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்தாள் பின்பு திவாவையும் அவனின் கையில் இருந்த தன் டெட்டியையும் பார்த்தவளுக்கு அடி வாங்கியதில் எரிச்சலே அதிகமாகியது.
அண்ணனை பார்த்து முறைத்த நயனி “அங்கதான் இப்படி எழுப்புரன்னு பார்த்தா இங்கயும் ஆரம்பிச்சு வைக்கிறியா” என்று கத்தினாள்.
அடுத்து ராணாவின் புறம் திரும்பியவள் “என்ன தான் இருந்தாலும் உங்க பொண்டாட்டிய ஒருத்தன் அடிக்க எப்படி அலோவ் பண்ணலாம். உங்களை நான் ஹீரோவா இருப்பீங்கன்னு நம்பி கல்யாணம் பண்ணினேனே அய்யோ இப்படி சிக்ஸ்பேக்க பார்த்து ஏமாந்துட்டியே நயா பேபி என அவள் பேசிக்கொண்டே இருக்க, ராணாவோ முதலில் அவள் வைத்த குற்றச்சாட்டை கேட்டு சிறிது சுணங்கியவன் அவளின் கடைசி வாக்கியத்தில் சிரித்துவிட்டான்.தன் தூக்கத்தை கெடுத்துவிட்டார்கள் என்ற கோபத்தில் இருந்தவள் கணவன் சிரிக்கவும் சிறு பிள்ளை போல் முறைத்தாள்.
மனைவியின் முறைப்பில் சிரிப்பை அடக்கியவன் "சரிமா சரிமா இனி யாரும் உன்னை அடிக்காம பார்த்து கொள்கிறேன் இப்போது ரொம்ப நேரமாகிவிட்டது நீ போய் முதலில் கிளம்பி வா மா " என்றான். தன்னை கிளம்ப சொன்ன கணவனை ஏற இறங்க பார்த்தவள் "ஆமாம் நான் என்ன உங்களைவிட பெரியவளா அம்மானு சொல்றீங்க " என்றாள்.
நயனியின் கேள்வியில் அவளை புரியாமல் பார்த்தவன் வேறு எப்படி அழைப்பது என்பது போல் பார்வையாலே கேள்வி கேட்டவனை கண்டு அடக்கடவுளே என்பதுபோல் தலையில் அடித்துக்கொண்டாள் நயனி.
"திவா அண்ணாதான் இப்படி பார்த்து பார்த்து வாயை கிளரும்னு பார்த்தா நீங்களும் இப்படியா ... இதோ பாருங்க அண்ணாவுக்கு சொன்னதுதான் உங்களுக்கும் எதுவாயிருந்தாலும் வாய்விட்டு கேட்கணும் அத விட்டுட்டு பார்வையாலே கேட்கிறது பார்த்துகிட்டே இருக்கிறதுனு இருந்தா நல்லா பாருங்கன்னு நான் சும்மா தான் இருப்பேன் சரியா " என்று கேட்டு அவனை பார்க்க ....
சம்மதம் என்று தலை ஆட்டியவனை பார்த்து இது வேலைக்காகாது நிறைய பட்டி டிங்கரிங் வேலை இருக்கு நமக்கு என்று நினைத்துக் கொண்டே பாத்ரூமிற்குள் போகும் முன் திரும்பி ராணாவை பார்த்து
"அம்மான்னு சொல்லாதீங்க கேட்கவே நல்லா இல்லை அதற்கு பதிலாக என்னை போல நயானு கூப்பிடுங்க நயானா புதுசுன்னு அர்த்தம் நானும் உங்களுக்கு புது பொண்டாட்டி தானே கரெக்டா இருக்கும் ஓகேவா " ( வாய்மொழியாக கூறியே ஆகணும் ) என்ற பிடிவாதம் அவளின் பேச்சில் தெரிய, அவளின் ஒவ்வொரு செயலும் பேச்சும் குழந்தைத்தனமாக தெரிந்தது ராணாவுக்கு அதுவே ஒருவிதத்தில் அவளிடம் அவனுக்கு இலகுவாக பழக உதவியது.
நயனி கிளம்பி வரட்டும் நாம் செல்லலாம் என்று வெளியில் செல்ல திரும்பிய ராணா திவா இருந்த நிலை கண்டு வாய்விட்டு சிரித்தான்.
திவாவின் பார்வையை பார்த்து "என்ன மச்சி உன் ஆளை சைட் அடிக்க வந்த வில்லனை பார்ப்பது போல் பாசமாக பார்க்கிறாய் " என்று நையாண்டி பண்ணியவனை பார்த்து நீயும் கொஞ்ச நாள் கழித்து இப்படிதான் பார்ப்பாய் அப்போது பார்த்து கொள்கிறேன் என்று நினைத்த திவா
" அது ஒன்னும் இல்ல மச்சான் இது நானாக எனக்கு வைத்து கொண்ட ஆப்பு நான் தான் இதை தேடி கண்டுபிடித்து உன் பொண்டாட்டிக்கு வாங்கி கொடுத்தேன் அதுவும் இதை வாங்கி கொடுன்னு உன் பொண்டாட்டி அன்புக்கட்டளை வேறு " என்று கூறியவன் கூற்றில் கடுப்பே மேலோங்கி இருந்ததை உணர்ந்தான் ராணா.
" ஏன் மச்சி நீ தானே பாசமாக வாங்கி கொடுத்திருக்கிறாய் பிறகு ஏன்டா கோவப்படுகிறாய்.இன்னும் சொல்லப் போனால் நான்தான் கோவப்படனும் ஆனால் நானே சும்மாதான் இருக்கிறேன் உனக்கு எதற்கு கோபம். ஆனாலும் உனக்கு என் மேல எவ்வளவு பாசம் மச்சி என் குடும்பத்துக்கிட்ட தான் எனக்காக சண்டை போட்டாய் என்று நினைத்தாள் இப்போது உன் தங்கச்சியிடமும் கோவப்படுகிறாய் பார் அங்கு நிக்கிறடா நீநீநீநீ நண்பேன்டா " என்று உணர்ச்சிவசப்பட்டு வசனம் பேசிய ராணாவை கடுப்பாக பார்த்த திவா
"அடங்கு அந்த சீன் இங்கில்ல " என்று நிறுத்தி வா நாம வெளியில் போய் பேசலாம் இல்லை நயா வந்து நம்மை ஓட்டியே ஒருவழி ஆக்கிடுவாள் என்று கூறி வெளியே நண்பனை இழுத்து சென்றான்.
வெளியில் வந்தும் அமைதியாக இருந்த திவாகரிடம் "மச்சி ஏன்டா இவ்வளவு கோவப்படுற அதுவும் போயும் போயும் ஒரு பொம்மைகாக " என்ற நண்பனை பார்த்து
"ம்ச் அதை ஏண்டா கேக்குற இவ காலேஜ் படிக்கும்போது ஒரு பரதேசி லவ் பண்ணினான் இவள் எங்கே போனாலும் பின்னாடியே சுத்துவான் அதனால் அவனை நாலு தட்டு தட்டி விரட்டினேன் மச்சான் ஆனா அந்த வீணாப்போன நாயி போகும்போது இவ கிட்ட போட்டு கொடுத்துட்டு ஓடிடுச்சு அதுக்கு இவ என்ன பண்ணா தெரியுமா " என்று அப்பாவி குரலில் பாவமாக ராணாவை பார்த்தான் திவா.
ராணாவோ நண்பனின் குரல் மாற்றத்தை அறியாமல் அதி முக்கிய சந்தேகம் தோன்ற அதை கேட்க ஆரம்பித்தான் "தப்பாக எடுத்துக்கொள்ளாதே மச்சி நயா அவன லவ் பண்ணாலா"என்று கேட்டான்.
என்ன இருந்தாலும் தன் மனைவி என்ற நிலையில் அக்கேள்வியை கேட்க பிடிக்கவில்லைதான் இருந்தாலும் தன் மனைவியைப் பற்றி முழுதாக தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் ஒருவித பதட்டத்துடன் கேட்டான்.
ராணாவின் கேள்வியில் அவனின் பதட்டத்தை உணர்ந்த திவா அவனை நார்மல் ஆக்கும் பொருட்டு விளையாட்டாகவே பேச்சை தொடர்ந்தான். "அப்படி இவள் லவ் பண்ணி இருந்தாள் கூட பரவாயில்லையே ...." என்று சொன்ன திவாவை ராணா முடிந்த மட்டும் முறைத்தான்.
நண்பனின் முறைப்பை ஓரமாக ஒதுக்கி வைத்த திவா "முறைக்காத நான் சொல்வதை முழுதாக கேட்டுவிட்டு பிறகு கோவப்படு" என்று சமாதான படுத்தி கூற ஆரம்பித்தான்.
ராணாவும் நண்பன் சொல்வதை கவனிக்க ஆரம்பித்தான் "அவனை அடித்து தூரத்தியதற்கு பிறகு நயா பேபிக்கு பர்த்டே வந்தது என்கிட்ட பாசமா பிறந்தநாள் பரிசா பெரிய டெட்டி வேணும்னு கேட்டா நானும் உள்ளூர்ல எல்லாம் இல்லாம பாரின்ல இருந்து வர வச்சு கொடுத்தேன்டா மச்சான் பாசமா .... ஆனா உன் பொண்டாட்டி அதை கையில வாங்கினதும் சொன்னா பாரு ஒரு வார்த்தை அதைதான் டா மச்சான் என்னால் தாங்க முடியல " என்று சிவாஜி ஸ்டைலில் சொல்லி வருத்தப்பட்டவனை பார்த்த ராணாவிற்கு கடுப்புதான் வந்தது.
டேய் ஓவர் எமோஷன் உடம்புக்கு ஆகாது அப்படி என்னதான் சொன்னா சீக்கிரம் சொல்லுடா என்று பல்லை கடித்தான்.
நண்பனின் பொறுமையை சோதிக்க விரும்பாத திவாவும் "அத தானே சொல்லிட்டு இருக்கேன் நடுவில் நீ பேசினால் நான் எப்படி சொல்வது. ஒரு மனுஷன் அசிங்கப்பட்டதை கேட்க அவ்வளவு ஆனந்தம். இருடா கேட்டதுக்கு அப்புறம் உன் நிலைமையை பாக்கத்தானே போகிறேன் " என்றான்.
" சரி சரி வளவளன்னு பேசாம என்னன்னு சொல்லுடா" என்று கத்திய ராணாவை பார்த்து எல்லாம் என் நேரம் என்று நினைத்து சொல்ல ஆரம்பித்தான்.
" அந்த டெட்டியை வாங்கியதும் அதை கட்டி பிடித்து பிரேம்குமார் என்று பெயர் வைத்துவிட்டாள் டா " என்று நொந்து போய் சொன்னான். பிரேம்குமார் ஒன்றும் அவ்வளவு மோசமான பெயர் இல்லையே அதுக்கு ஏனடா கோபப்படுகிறாய் " என்று புரியாமல் சந்தேகம் கேட்டான் நயனியின் கணவன்.
" இன்னொரு முறை நான் பேசும்போது நடுவில் பேசினாய் அதற்கு மேல் சொல்ல மாட்டேன் " என்று எச்சரித்துவிட்டு மீண்டும் தான் அசிங்கப்பட்ட கதையை சொல்ல ஆரம்பித்தான்". நான் ஒருவனை அவள் பின்னாடி சுத்தியதற்கு அடித்து துரத்தினேன் இல்லையா அவன் பேரு தான் மச்சான் பிரேம்குமாருருருரு " என்று அவன் சொன்னதுதான் தாமதம்
" என்னது......... என்று அதிர்ந்து போனான் ராணா. நண்பனின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்த திவாவும் பாவமாக அவனை பார்த்து ஆம் என்று தலையாட்ட சிறிது நேரத்தில் தன் அதிர்வில் இருந்து வெளிவந்தவன் அவன் பெயரா ஏன் இதுக்கு வச்சா.லவ் பண்ணலைன்னு சொல்ற அப்புறம் எதுக்கு அவன் பெயரை வைக்கணும் " என்று படபடத்தான்.
" இப்போ தான சொன்னன் குறுக்கே பேசாதனு " என்ற நண்பனை
அடக்கினான் திவா.
ம்க்கும்...... இந்த வெட்டி மிரட்டல் எல்லாம் என்கிட்டதான சும்மாவா சொன்னாங்க நாட்டுக்கே ராஜவானாலும் வீட்டுக்கு தொடப்பக்கட்டைதான் என்று.ஏதோ நண்பன்னு நான் பேசாம இருக்கேன் என்று மனதுக்குள் புலம்பி வெளியே திவாவை பார்த்து "ஆமாடா அவள் செய்து வைத்த வேலையையும் நீ சொல்வதையும் கேட்டாள் மனுஷன் எப்படிடா அமைதியாக இருக்க முடியும் இதற்கு மேல் நான் பேசவில்லை நீயே சொல்லி முடி " என்றான் ராணா கடுப்பாக.
நண்பன் கடுப்பாவதை கண்டு குதூகலமான திவா மனதிற்குள் அப்பாடா நம்ம கூட சேர்வதற்கு ஒரு ஆள் கிடைத்துவிட்டது என்று நினைத்து கொண்டு நயனி கூறியதை சொல்ல ஆரம்பித்தான். அந்த பிரேம் செம பிகராம் யார் பின்னாடியும் சுத்த மாட்டானாம் அப்படிப்பட்டவன் இவ பின்னாடி சுத்தவும் கெத்தா இருந்துச்சாம் உன்னை யாரு பெரிய ஹீரோ மாதிரி அவனை அடிச்சு துரத்த சொன்னது உன்னால தான் அவன் ஊரைவிட்டே போய்விட்டான். எங்க காலேஜ்ஜே களையிழந்து போய்டுச்சு இதில் என்னுடைய ஃபிரண்ட்ஸ் வேற இதுக்கு எல்லாம் நான்தான் காரணம் என்று கோவமாக இருக்கிறார்கள்.இனி நீ யாரையாவது இப்படி துரத்தினாய், இது போல் பொம்மையை வாங்கி அதுக்கு அவர்கள் பெயர் வைத்து இப்படித்தான் உன்னை கொடுமைப் படுத்துவேன்னு சொல்லிட்டா மச்சான் இப்போ சொல்லு நான் அதை பார்த்து முறைத்தது தப்பா டா .... "என்று தான் அசிங்கப்பட்ட கதையை சொல்லி முடித்தான் திவா.
சொல்லுங்கள் கோபால் சொல்லுங்கள் என்ற பார்வையை திவா நண்பனை பார்த்து வீச அவனோ த லையிலடித்துக் கொண்டு" என்ன மானங்கெட்ட பிளாஷ்பேக் டா இது த்து " என்று தூப்பவும் நயனிகா வரவும் சரியாக இருந்தது.
மூவரும் ஒன்றாக கீழே வருவதை பார்த்த விமல் தன் அருகில் இருந்த ராணி அம்மாளிடம் “பாட்டி இப்போ இருக்கற பொண்ணுங்களுக்கெல்லாம் பொறுப்பே இல்லை நீங்களாம் இப்போதும் சீக்கிரம் எழுந்து எத்தனை வேலை பார்க்கிறீர்கள் ஆனால் இந்த சிட்டி பொண்ணுங்களை பாருங்க எல்லாம் சுத்த வேஸ்ட் " என்று விமல் பாட்டியை புகழ்வது போல் நயனியை போட்டு கொடுத்தான்.
விமல் தன்னை பார்த்த பார்வையிலேயே ஏதோ கோத்துவிட போகிறான் என்று நினைத்துக்கொண்டு வந்த நயனியின் காதில் விமலின் பேச்சு விழுந்தது.ஆகா பத்த வச்சிட்டியே பரட்ட என்று நினைத்த நயனி திவாவிடம் காப்பாத்து டா அண்ணா... என அவனை பார்க்க, விமலை பார்த்து சிரித்த திவா கோர்த்தா விடுற உனக்கு இவகிட்ட இருக்கு என்று நினைத்து கொண்டு, நயனியை முறைத்து கொண்டிருந்த பாட்டியை கண்டுக்கொள்ளாமல்
ராணாவின் தாய் அருகில் சொன்றவன் "இங்கு உள்ள பழக்க வழக்கங்களை எல்லாம் பழகிவிட்டு விடுவீங்க தானே இந்திரா மா " என்று கேட்டான்.
மகனின் வாழ்வு இப்படியே பட்டு போய்விடுமோ என்று பயந்த தாயின் மனதை குளிர வைத்த மற்றொரு மகனின் கோரிக்கையை மனமார ஏற்றுக்கொண்டார் அந்த தாய்."அதை நீ சொல்லவும் வேணுமா திவா இத்தனை நாள் நீ எனக்கு எப்படியோ அப்படித்தான் எனக்கு நயனியும் என் பொண்ணு மாதிரி நான் எல்லாம் சொல்லி கொடுத்து பார்த்துப்பேன்.யாரும் பிறக்கும்போதே அனைத்தையும் தெரிந்து கொண்டு வருவது இல்லை. நீ கவலைப்படாதே நான் பார்த்து கொள்கிறேன். இவ்வளவு பேசுகிறானே இவன் என்ன ஒழுங்கா அவன் பேச்சை போய் ஒரு பேச்சா எடுத்துக்கொண்டு" வருந்தாதே என்று கூறி திவாவிற்கு தைரியம் அளித்தார்.
ராணாவிடமும் நயனியிடமும் திரும்பியவர் " நீங்கள் இருவரும் சென்று விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு வாருங்கள் சாப்பிடலாம்.அதன் பிறகு குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள் " என்று கூறி அவர்களை அனுப்பினார்.
அவர்கள் சென்றதும் விமலின் காதை திருகி " சேட்டையை ஆரம்பித்துவிட்டாயா அண்ணியிடம்.ரொம்ப வம்பு பண்ணாம இருக்கணும் " என்று அவர் சொல்லி சென்றதும் கடுப்பான விமல் நயனி விளக்கேற்றி வந்தவுடன் ராணாவையும் திவாவையும் முன் செல்ல விட்டு நயனியிடம் " என்னையவேவா மிரட்டுற இனிமே பார்த்துட்டே இரு இந்த விமல் யாருன்னு உனக்கு காட்டுறேன் " என்றான்.
" இங்க பாரு வீணாக என்னை பாகைத்து கொள்ளதே பின்னாடி ரொம்ப பீல் பண்ணுவாய். அதற்கு பேசாமல் என் கூட்டணியில் சேர்ந்துகொள் போனால் போகிறது என்று சேர்த்து கொள்கிறேன். என்ன டீலா நோ டீலா " என்று கேட்டாள்.
விமலோ நயனியை முறைத்து பார்த்துக்கொண்டே "முடியாது என்ன இருந்தாலும் நீ என் எனிமி தான் மற்றவர்களுக்கு மட்டும்தான் நீ அண்ணி ஞாபகம் இருக்கட்டும். அப்புறம் என்ன சொன்னாய்.உன்னுடன் கூட்டு சேர வேண்டுமா நெவர் எவர் சிங்கம் எப்பவும் சிங்கிளாத்தான் வரும் கூட்டமா பன்னிங்க தான் வரும் " என்றான்.பின் வரும் விளைவுகளைபற்றி அறியாமல்.
விமலை மேலும் கீழும் நக்கலாக ஒரு பார்வை பார்த்து"விதி வலியது வெயிட் அண்ட் வாட்ச் ” என்று கூறி தன் கணவனுடன் இணைந்து நடக்க ஆரம்பித்தாள் நயனிகா.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.