Karuram
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு இந்த மாதிரி முட்டாள் யாருமில்லை மனஅழுத்ததில் இப்படி தான் தற்கொலை முடிவு எடுக்க தோன்றும் என்ன பொண்ணு நீ அந்த டைமில் அபி வந்துட்டான் அவளின் அம்மாவின் குரலை கேட்க வைத்து அவளை தூக்கு மாட்டி தொங்கும் ஐடியாவில் இருந்து வெளியே வந்தாச்சு அப்புறமும் சும்மா இருந்தாளா கத்தியை எடுத்துக்கொண்டு லூசுதனமாய் என்ன என்ன வேலை பார்க்கிறாள் அப்புறம் அப்படியே ஸ்ட்ரெஸ்ஸில்இருக்கிறதால மயக்கம் வேறு போட்டுவிட்டாள் உன்னை பொறுத்தவரை அபி ஒரு அரக்கன் அவன் ரொம்ப ரொம்ப நல்லவன் மா அவன் உன் மேல் எவ்ளோ அன்பு வைத்திருக்கான் அதை புரிந்துகொள்ளும் போது காலம் கடந்திருக்கும் அப்போ நீ கத்தி கதறினாலும் ஒன்றும் செய்ய இயலாது
இந்த மருதுபாண்டி ரொம்பவே ஓவரா போறான் அந்தஸ்தில் குறைத்தவர்களை கல்யாணம் பண்ணிக்கக்கூடாதா ரொம்பவே திமிர் தெனாவட்டு இதெல்லாம் அதிகமாய் இருக்கு அபி அதையெல்லாம் ஒன்றும் இல்லாமல் ஆக்கப்போறான் தங்கச்சிகிட்ட எல்லாம் போட்டு வாங்கியாச்சு அதோடு யுகனின் அப்பாகிட்டயும் ரொம்ப துள்ளுற அவருக்கு எப்படியாவது மகன் மதியை விட்டு வெளியில் வரணும் அதற்கு அபியின் குழந்தைக்கு தாயானால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் என்று புலம்பிவிட்டு போக இந்த மருது கிழவன் என்ன பிளான் போட்டு வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை ஆனால் நிச்சயமா அபி இதை முறியடித்துவிடுவான்
வெற்றி ஒருவனுக்கு மட்டுமே அபி அடங்குவதை பார்த்த மதி மனதில் வேறு ஏதோ பலமான திட்டம் உருவாகிடுச்சு அபி என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்கிற முடிவுக்கே வந்துவிட்டாள் அவளின் அம்மா குரலை கேட்டதும் ரொம்ப ஆவலாய் பேசபோய் அபியை பற்றி போட்டுக்கொடுக்க பிளான் போடுறாள் அபி விட்டுவிடுவானா வெற்றி திட்டிய திட்டில் தான் அமைதியா இருக்கான் அவனுக்கு மதியை விட்டுக்கொடுக்கும் எண்ணமில்லை அது அவளுக்கு தெரியவில்லையே தெரியும்போது மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி இருப்ப உன்னோட முட்டாள்தனமான செயலால் தான் வெற்றி அவளுக்கு கவுன்சிலிங் கொடுக்க சொல்ல அபியும் ஒத்துக்கொண்டு அவளை ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து வெளியில் கொண்டுவந்தாச்சு ஆனால் மனதில் கேவலமான திட்டம் இல்ல உதயம் ஆகி இருக்கு போய் மாட்டு அப்போ தான் புத்தி வரும் இல்லையென்றால் நீ அடங்கமாட்ட
அபி என்ன சொன்னாலும் கேட்கவே கூடாது என்கிற முடிவில் இருக்கிற இவள்கிட்ட என்ன சொல்லி புரியவைக்கிறது பட்டு தான் திருந்துவேன் என்றால் அப்படியே திருந்து ஆனால் அபி உனக்கு ஏதாவது ஆபத்து என்றால் காப்பாற்றிவிடுவான் அவனையும் மீறி நீ ஏதாவது தில்லுமுல்லு செய்து தான் அவன்கிட்ட இருந்து விலகப்போற அபி பாவம் மதி அவனை கஷ்டப்படுத்தாதே
அருமையான review டியர்... எப்போதும் போல் நுன்னுகமாக கவனித்து போட்டிருக்கிறீர்கள்.... மிக்க நன்றி டியர்.... அவ என்ன செய்ய போறாளோ நெக்ஸ்ட் udல தெரிந்து விடும் டியர்